Friday, March 2, 2012

நடை வண்டிகள் - 6

Posted by பால கணேஷ் Friday, March 02, 2012
சுபாவும் நானும் - 3
 
சுபாவைத் தேடி ஒரு இக்கட்டான சூழ்நிலையில் சென்றதாகச் சொல்லியிருந்தேனல்லவா... அது...

சென்னையில் ரங்கநாதன் தெருவில் உள்ள பி.வி.டவர்ஸில் என் நண்பன் டெலிபோன் பூத் ஒன்று வைத்து டெலிபோன் சர்வீசும் செய்து கொண்டிருந்தான். அங்கேயே நானும் ஒரு டேபிள் போட்டு கம்ப்யூட்டருடன் அமர்ந்து கொண்டேன். தினம் காம்ப்ளக்ஸ்க்கு 500 பேர் வந்தால் அதில் 50 பேராவது வராமலா போய்விடுவார்கள் என்று எண்ணம் எனக்குள். ஆனால் வந்தது 5 பேர்கூட இல்லை. அங்கே தங்கியிருந்த ஆந்திரவாடுகள் வந்து தங்கள் சர்டிபிகேட்டில் மார்க்கை மாற்றித்தர வேண்டுமென்று கேட்டார்கள். நான் மறுத்து விட்டேன். 

என் நண்பன், ‘பிழைக்க வந்துட்டு அது இதுன்னு பாத்தா எப்படிடா? கேக்கறத செஞ்சுட்டு காசு வாங்கிட்டு போ. ரெட்டி டீஸன்ட் ஃபெல்லோ!’’ என்றான். ‘‘போடாங்... போலீஸ் அரெஸ்ட் பண்ணினா டீஸன்ட் பர்சன்னுட்டு கோட், டையெல்லாம் போட்டு விருந்து தர மாட்டாங்க. அன்டர்வேரோட போட்டோ எடுத்து தந்தில போடுவாங்க. என் படம் அப்படி வர்றதை நான் விரும்பலை’’ என்றேன் நான். வாக்குவாதம், சற்றே மனக்கசப்பு... அங்கிருந்து என் பொருட்களுடன் வெளியேறும்படி நேர்ந்தது.

அதன் பின்னரும்கூட பல நாட்கள் நான் தங்கியிருந்த மேன்ஷனுக்கு வந்து அந்த நபர்கள் தொந்தரவு செய்தார்கள். பின்னர் மேன்ஷன் ரூம்மேட் மூலம் அவன் வேலை பார்த்த ஐ.டி. கம்பெனி ஒன்றுக்கு கலர் ப்ரவுச்சர் ஒன்று டிசைன் செய்துதர, அந்த கம்பெனியின் பிரிண்டிங் ஒர்க்கை கவனிக்கும் ஆப்ரஹாம் லிங்கன் என்பவர் அறிமுகமானார். விரைவிலேயே நல்ல நண்பரானார். அவர் அடையார் பஸ் ஸ்டாண்ட் எதிரில் தன் அலுவலகத்தை வைத்திருக்கிறார். அங்கே என்னையும் வந்துவிடும்படி அழைத்தார். அவருடன் சென்று சிலகாலம் இருந்தேன்.

அவர் ஒருமுறை பிரிண்டில் வேலைக்காக திரு.ஜி.அசோகனைச் சந்தித்தபோது, அவர் பத்திரிகை லே அவுட் தெரிந்த ஆள் ‌தேவையிருப்பதாகச் சொல்ல, ஆப்ரஹாம் என்னிடம் அதைச் சொல்லி ஜி.ஏ.வைப் பார்க்கச் சொன்னார். ‘என்னுடைய வேலைகளுக்கு தேவைப்படும் போது .உங்களை அழைத்துக் கொள்கிறேன்’ என்றார்.

நான் தினமலரில் இருந்‌தவன் என்ற ஒரு விஷயத்திலேயே மகிழ்ந்த ஜீயே அங்கே பணிபுரியச் சொன்னார். அங்கே கொஞ்ச நாள் பிழைப்பு ஓடியது. ஜீயே மிகவும் (அடிக்கடி கோபம் வரும் சுபாவமாக இருந்தாலும்) அன்பாகப் பழகினார். புத்தகங்கள் படிப்பதில் எனக்கு இருந்த ஆர்வத்தைப் பார்த்து பிரமித்து, ‘‘சாப்பாட்டு ராமனுக்கு ஹோட்டல்ல வேலை கொடுத்த மாதிரி ஆச்சேப்பா உனக்கு வேலை கொடுத்தது...’’ என்று கேலிகூடச் செய்வார் அவர். 

அச்சமய்த்தில் ஒரு மாதம் என்ன காரணத்தினாலோ சம்பளம் தரப்பட மிகவும் தாமதமாகியது. அங்கிருந்த ஊழியர்கள் அவரிடம் நினைவுபடுத்தப் பயந்திருப்பார்கள் போலும்... கையில் பணமில்லாத நிலையில், ஆப்ரஹாமுக்கு போன் செய்து பணம் கேட்டேன். அவர் எங்களுக்குத் தெரிந்த ரகசிய இடத்தில் வைத்துவிட்டுச் செல்வதாகவும் வந்து எடுத்துக் கொள்ளும்படியும் சொன்னார். (ஆபீஸ் சாவி இருவரிடமும் உண்டு.)

அலுவலகம் முடிந்து மாலை வந்து பார்த்தால், அங்கே பணம் எதுவும் இல்லை. மறந்து விட்டுப் போயிருக்கிறார். அப்போது என்னிடம் மொபைல் போனும் கிடையாது. வெளியில் வந்து அவரின் நம்பருக்கு டயல் செய்தால் ‘நாட் ரீச்சபிள்’ என்றே வந்தது. ‘ஙே’ என்று விழித்தபடி கொஞ்ச நேரம் செய்வதறியாது நின்றேன். அப்புறம்தான் சுபாவின் நினைவு வந்தது. அங்கிருந்து சுபாவின் வீட்டுக்கு மெல்ல நடந்து சென்றேன். அவர்கள் வீட்டில் இல்லாவிட்டால் என்ன செய்வது என்று மனதிற்குள் கேள்விகள் அலையடித்தபடி இருந்தன.

நான் ‘ஆத்மா ஹவுஸ்’க்குள் நுழைந்த நேரம், பாலா ஸார் வெளியே கிளம்பத் தயாராய் பைக்கின் அருகில் வந்து கொண்டிருந்தார். என்னைப் பார்த்ததும் வியப்புடன் வரவேற்றார். அவரது நேரத்தை வீணடிக்க விருப்பமில்லாமல், சுருக்கமாக, கூச்சத்துடன் தயங்கியபடி என் நிலையை விளக்கி உதவி கேட்டேன். ‘வீட்டுக்கு வாங்க’ என்று மாடிக்கு அவர் வீட்டுக்கு அழைத்துச் சென்று பணம் எடுத்துக் கொடு்த்தார்.

‘‘ஸார்... அடுத்த மாசம் நான் இதை...’’ என்று சொல்ல ஆரம்பித்த என்னை முடிக்க விடாமல் கையமர்த்தினார் பாலா ஸார். ‘‘கணேஷ்! இதை நீங்க திரும்பித் தர வேண்டாம். சுபாவோட சில வேலைகளை நீங்க செய்ய வேண்டியிருக்குது. அதுக்கு அட்வான்ஸா வெச்சுக்கங்க. தேவைப்படற சமயத்துல நாங்க உங்களை கான்டாக்ட் பண்‌ணுவோம்’’ என்றார். மிக்க மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்து விட்டு விடைபெற்றேன்.
‘கோ’ ஷூட்டிங் ஸ்பாட்டில் சுபா!

ஆப்ரஹாமை மறுநாள் நான் போன் செய்து திட்டிய போதுதான் பணம் வைக்க மறந்து விட்டுப் போனதை உணர்ந்து மன்னிப்புக் கோரினார். அடுத்து வந்த மாதத்தில் ‘இரண்டாம் கை’யாக ஒரு செல்போன் வாங்கித் தந்து சமாதானம் செய்தார் என்னை. தலையில் ‌கொம்பு முளைத்த சாம்சங் போன் அது. அப்போதைய நிலையில் எனக்கு அதுவே பெரிதுதானே! சுபா வீட்டுக்குப் போனபோது சுரேஷ் ஸார் இருந்தார். அவருடன் பேசிவிட்டு, என் மொபைல் எண்ணைக் கொடுத்து விட்டு வந்தேன். சுபாவின் வேலைகள் என்று பாலா ஸார் சொன்னாரே... என்ன அது என்று தெரிந்து கொள்ளும் ஆவல் என்னுள் இருந்தது.

அடுத்து வந்த மாதங்களில் வேலைப் பளுவில் அதை ஏறக்குறைய மறந்து விட்டேன் என்றுதான் சொல்ல வேண்டும். மேற்கு சைதாப்பேட்டையில் ஒரு சின்ன வீடு பார்த்து (small house என்று பொருள் கொள்க) மனைவியையும் சென்னைக்கு அழைத்து வந்திருந்தேன். அந்த சந்திப்பின் பின்னர் மூன்று மாதங்கள் கழிந்தபின் ஒருநாள் மாலை சுரேஷ் ஸார் போன் செய்தார். 

‘‘கணேஷ்... சுபாவின் நாவல் எப்படி உருவாகிறது என்பதைக் கூட இருந்து பார்க்க விருப்பமா உங்களுக்கு?’’ என்று கேட்டார். ‘‘என்ன ஸார் இப்படிக் கேட்டுட்டீங்க? என்னைவிட அதுல ஆர்வமா யார் இருக்க முடியும்? நான் என்ன செய்யணும், சொல்லுங்க...’’ என்றேன். ‘‘நாளைக்கு காலையில ஆபீஸ் போறதுக்கு முன்னாடி என்னை வந்து பாத்துட்டுப் போங்க. விரிவாச் சொல்றேன். குட்நைட்’’ என்று போனை வைத்து விட்டார். நானும் நிறைய எதிர்பார்ப்புகளோடு அவரைச் சந்திக்க மறுநாள் சென்றேன்.
-தொடர்வேன்.

71 comments:

  1. //என் நண்பன், ‘பிழைக்க வந்துட்டு அது இதுன்னு பாத்தா எப்படிடா? கேக்கறத செஞ்சுட்டு காசு வாங்கிட்டு போ. ரெட்டி டீஸன்ட் ஃபெல்லோ!’’ என்றான். ‘‘போடாங்////

    உங்களின் நேர்மை எனக்கு ரொம்ப பிடிச்சுருக்கு....கணேஷ் சார்

    ReplyDelete
  2. உங்களின் எழுத்து நடையும் ரொம்ப பிடிச்சுருக்கு.... சார்

    ReplyDelete
    Replies
    1. என் நேர்மை மற்றும் எழுத்து நடையைப் பாராட்டிய எங்க ஊர்த் தமிழனுக்கு என் மனமார்ந்த நன்றி!

      Delete
  3. நல்ல நினைவு புரட்டல்.இது மாதிரியான பகிர்தல்கள் நினைவுகள் பால்வற்றை விதைது விட்டும் கிளறிவிட்டுமாய் செல்கிறது.நன்றி வணக்கம்.

    ReplyDelete
    Replies
    1. நினைவலைகளை ரசித்துப் பாராட்டிய தங்களுக்கு என் இதய நன்றி!

      Delete
  4. சுவாரஸ்யமாகச் சொல்லியிருக்கின்றீர்கள்! தொடருங்கள்.

    ReplyDelete
    Replies
    1. நிச்சயம் உடன் தொடர்கிறேன். மிக்க நன்றி ஸார்!

      Delete
  5. கணேஷ் சார்....அருமை...நீங்க கோவை ஊர் காரரா....?

    ReplyDelete
    Replies
    1. நான் மதுரையில் பிறந்தவன். நெடுநாட்கள் கோவையில் வசித்தவன். அருமை எனப் பாராட்டிய தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!

      Delete
  6. // நானும் நிறைய எதிர்பார்ப்புகளோடு அவரைச் சந்திக்க மறுநாள் சென்றேன்.


    -தொடர்வேன்.//

    நானும்......!

    ReplyDelete
    Replies
    1. ஆரம்பத்திலிருந்தே என்னுடன் தொடர்ந்து வருபவராச்சே நீங்கள்! உங்களுக்கு என் இதயம் கனிந்த நன்றி ஸார்!

      Delete
  7. நினைவலைகள் என்பது ஓயாத அலைகள். அதை புரட்டிப்பார்பதில் தனி சுகமே.......

    ReplyDelete
    Replies
    1. ஒரு சமயம் கஷ்டங்களை அனுபவித்திருந்தாலும்கூட பின்னாளில் நினைத்துப் பார்க்கும்போது இனிமையாகி விடுகிற விந்தையை கவனித்ததுண்டா எஸ்தர்? அது தனி சுகமேதான்! ரசித்து்ப் பாராட்டிய தங்களுக்கு என் இதய நன்றி!

      Delete
  8. சுகமான நினைவுகள்....

    காசு கொடுத்த்தால் எதையும் செய்யும் மனிதர்களுக்கிடையில் மார்க் ஷீட் மாற்ற மாட்டேன் எனச் சொன்ன உங்கள் நேர்மை எனக்குப் பிடித்தது நண்பரே...


    தொடருங்கள்....

    [இன்று தில்லியில் நடக்கும் உலகப் புத்தகக் கண்காட்சி பற்றிய பகிர்வு... அடுத்த பதிவு - நீங்கள் அழைத்துக் கொண்டதன் பேரில் எனது பள்ளி நினைவுகள்.... தாமதத்திற்கு மன்னிக்கவும்... :)]

    ReplyDelete
    Replies
    1. என் நேர்மையைப் பாராட்டியதில் மனமகிழ்வு எனக்கு. மன்னிப்பெல்லாம் எதற்கு நண்பா? சமயம் கிடைக்கும் போது பதிவிடுங்கள். உங்கள பள்ளிப் பருவத்தை தெரிந்து கொள்ளும் ஆவலுடன் அவசியம் வருகிறேன். மிக்க நன்றி.

      Delete
  9. ரொம்ப எளிமையா சுவாரஸ்யமா சொல்றீங்க.

    ப்ளாக் டெம்ப்ளேட் மாத்திடீங்க போல. நல்லாருக்கு

    ReplyDelete
    Replies
    1. ரசித்துப் பாராட்டியதற்கு என் மனமார்ந்த நன்றி நண்பா...

      Delete
  10. வெரி இண்ட்ரெஸ்ட்டிங்க். உங்க அனுபவம் ஒன்னொன்னும் ரசிக்கும் படி சொல்ரீங்க. நல்லா இருக்கு.

    ReplyDelete
    Replies
    1. தொடர்ந்து ரசித்துப் பாராட்டும் உங்களுக்கு என் இதய நன்றிம்மா...

      Delete
  11. உங்கள் நினைவுக் கதம்பம் சுவையாக உள்ளது தொடருகிறேன் நன்றி. வாழ்த்தகள்.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
    Replies
    1. தொடரும் உங்கள் அன்பிற்கு மனமகிழ்வுடன் நன்றி நவில்கிறேன் தோழி.

      Delete
  12. அருமையான,சுவாரசியமான பகிர்வு.அடுத்த நாள் என்ன ஆச்சு என்று தெரிந்து கொள்ள ஆவலோடு காத்திருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. தொடர்ந்து நடந்தவை எல்லாமே நல்ல விஷயங்கள் தான். சீக்கிரமே தொடர்கிறேன் மேடம். தங்களுக்கு என் இதய நன்றி.

      Delete
  13. நினைவலைகள் சுவாரஸ்யமாக உள்ளது ஆரம்பகாலத்தில் எத்தனை கஷ்டப்பட்டிருக்கிறீர்கள் கணேஷ்..நெகிழ்ச்சியாக இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. இன்றும் போராடியபடி தான் வாழ்க்கை. ஆனால் அன்று போல உணவிற்கே கஷ்டப்பட்ட நிலை இன்றில்லை என்பது ஆறுதல். என் தன்னம்பிக்கையின் சதவீதம் அப்போதை விட இப்போது 200 சதம் கூடுதல்க்கா...

      Delete
  14. ரொம்ப ஆவலா இருக்கேன் அடுத்த பதிவைப்படிக்க.அருமைப்பதிவு வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. படித்து ரசித்து பாராட்டிய உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

      Delete
  15. சுவரஸ்யமாக இருக்கிறது கணேஷ்...தொடர்ந்து வாசிக்க காத்திருக்கிறேன்...

    ReplyDelete
    Replies
    1. எத்தனையோ பணிகளுக்கிடையில் நீங்கள் என் எழுத்தையும் படிக்கிறீர்கள் என்பதில் மிகமிக மகிழ்கிறேன். தங்களுககு என் இதய நன்றி நண்பரே..

      Delete
  16. என்ன என்று தெரிந்து கொள்ளும் ஆர்வத்துடன் தொடர்கிறோம்

    ReplyDelete
    Replies
    1. நிச்சயமா... நான் தொடர்ந்து செல்வதற்கும் உந்துசக்தி உங்களைப் போன்றவர்கள் தொடர்வதுதானே... மனமகிழ்வுடன் என் நன்றி.

      Delete
  17. சில நேரங்களில் நம்ம துவண்டு விழச் செய்த
    நிகழ்சிகள் எல்லாம் பின்னாளில் திரும்பி பார்க்கையில்
    நிறைய பாடங்களை கற்றிக்கொண்டுத்திருக்கும்..
    உங்களிடம் இருந்து கற்றுக்கொள்ள ஆயிரம் இருக்கிறது நண்பரே..

    நடைவண்டியின் நாற்புறமும் சிதரவிடாது..
    அச்சுக்கோர்வையாய் அற்புதமாய் நகர்த்திச் செல்கிறீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. அச்சுக் கோர்வையாய் நகர்த்திச் செல்கிறேன் என்ற வரிகள் எனக்குத் தருகிறது அசுரபலம். மிகமிக நன்றி நண்பா...

      Delete
  18. சுபாவின் வீட்டுக்கு மெல்ல நடந்து சென்றேன். அவர்கள் வீட்டில் இல்லாவிட்டால் என்ன செய்வது என்று மனதிற்குள் கேள்விகள் அலையடித்தபடி இருந்தன.
    உண்மையை மறைக்காமல் பகிரும் விதம் அருமை .

    ReplyDelete
    Replies
    1. உண்மைக்கு என்றுமே மரியாதை உண்டு தென்றல். மறைத்துத்தான் என்ன ஆகிவிடப் போகிறது? தொடரும் தங்கள் ஆதரவிற்கு என் இதய நன்றி.

      Delete
  19. //‘சாப்பாட்டு ராமனுக்கு ஹோட்டல்ல வேலை கொடுத்த மாதிரி ஆச்சேப்பா உனக்கு வேலை கொடுத்தது..//

    அதானே! இதுக்கெல்லாம் கழிச்சிக்கிட்டு தானே சம்பளம் குடுத்திருக்கனும்!

    ReplyDelete
    Replies
    1. நல்லவேளைப்பா... அப்ப ஜீயே சாருக்கு இந்தமாதிரி தோணலை. தப்பிச்சேன்... இப்டில்லாம் போட்டுக் குடுக்கக் கூடாது தம்பி. உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

      Delete
  20. சுவாரஸ்யமான நினைவலைகள். சிரமப்படும் நிலையிலும் நேர்மையாயிருந்த நீங்க உண்மையிலேயே சிறந்த மனிதர்தான்..

    ReplyDelete
    Replies
    1. வளர்ப்பைப் பொறுத்துத் தானே நாம் நேர்மையாய் இருப்பது அமைகிறது சாரல் மேடம்... என் அம்மாவிற்குத்தான் நான் நன்றி சொல்லணும். இப்ப,என்னைப் பாராட்டின உங்களுக்கு மனமகிழ்வோட நனறி சொல்லிக்கறேன்.

      Delete
  21. என் நண்பன், ‘பிழைக்க வந்துட்டு அது இதுன்னு பாத்தா எப்படிடா? கேக்கறத செஞ்சுட்டு காசு வாங்கிட்டு போ. ரெட்டி டீஸன்ட் ஃபெல்லோ!’’ என்றான்
    >>>
    எல்லா குற்றவாளிகளும் இது போன்ற எதோ ஒரு அட்வைசுலதான் உருவாகுறாங்க. உங்க ம்னோதிடத்தால அதுல இருந்து தப்பி வந்துட்டீங்க. அந்த மனோதிடத்துக்கு எனது வணக்கங்கள் அண்ணா.

    ReplyDelete
    Replies
    1. கரெக்ட்ம்மா... பின்னாடி யோசிச்சுப் பார்த்தப்ப அப்ப நான் சபலப் பட்டிருந்தா என்ன நடந்திருக்கும்னு 12பி படம் மாதிரி தனியா மனசுக்குள்ள ஒரு ட்ராக் ஓடிச்சு. மிரண்டுட்டேன்மா.

      Delete
  22. உங்கள் ஒவ்வொரு அனுபவமும், அதை நீங்கள் உண்மை நிலையுடன் விவரிப்பதும் அருமையாக உள்ளது சார். தொடர்ந்து வருகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. உங்களின் தொடர்ந்த ஆதரவின் மூலம் என் எழுத்துக்களுக்கு வலுச் சேர்க்கிறீர்கள். என் இதய நன்றி.

      Delete
  23. ‘‘சாப்பாட்டு ராமனுக்கு ஹோட்டல்ல வேலை கொடுத்த மாதிரி ஆச்சேப்பா உனக்கு வேலை கொடுத்தது...’’

    “சின்ன வீடு பார்த்து (small house என்று பொருள் கொள்க.”

    என்று அங்கங்கே இழையோடுகின்ற நகைச்சுவையையும், வாழ்வில் உன்னத நிலை அடைய எப்படியெல்லாம் பாடுபடவேண்டி இருக்கிறது என்பதையும், கஷ்டப்பட்டாலும் தவறான செயல்கள் செய்வோருக்கு உடந்தையாய் இருக்கக்கூடாது என்கிற உங்கள் நேர்மையையும், படிக்கப் படிக்க சந்தோஷமாய் இருக்கிறது. அடுத்த பதிவைப் படிக்க 'நிறைய எதிர்பார்ப்பு'களோடு நான் காத்திருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. எதிர்பார்ப்புகளோடு காத்திருக்கிறேன் என்ற வார்த்தையின் மூலம் ஊக்கம் தந்த உங்களுக்கு என் மனமார்‌ந்த நன்றி.

      Delete
  24. உண்மைக் கதை! பட்ட துன்பங்களையும் பாங்குற சொல்லும் நேர்த்தி
    உங்களுக்கே உரியது! அடுத்தது உடன் தருக!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
    Replies
    1. நிச்சயம் உடன் தொடர்கிறேன் ஐயா. தங்களுக்கு என் இதய நன்றி!

      Delete
  25. தலையில் ‌கொம்பு முளைத்த சாம்சங் போன் அது. //
    இன்னும் வைச்சிருக்கீங்களா சார்?

    ReplyDelete
    Replies
    1. இல்லை கோகுல்! அதைப் பத்தின நினைவுகள் மட்டும்தான் இப்ப என்கிட்ட இருக்கு. மிக்க நன்றி!

      Delete
  26. அருமையோ அருமை ! தொடருங்கள் சார் !

    ReplyDelete
    Replies
    1. மகிழ்வுடன் பாராட்டிய தங்களுக்கு என் இதய நன்றி!

      Delete
  27. கொம்பு முளைச்ச சாம்சங் போன்....அட அட .இப்பவும் வச்சிருப்பீங்களே ஃப்ரெண்ட் !

    ReplyDelete
    Replies
    1. இல்லை ஃப்ரெண்ட்! அடையார்லருந்து பீச் போற பஸ்ல ஒருத்தன் அதை திருடிக்கிட்டு ஓடற பஸ்லருந்து குதிச்சுட்டான். அப்புறம் போலீஸ் ஸ்டேஷனுக்கும், இன்ஷுரன்ஸ் ஆபீஸ்க்கும் நடையா நடந்தும் ரீ இம்பர்ஸ் பண்ண முடியல. சில நாள் கழிச்சு புதுசுதான் வாங்க வேண்டியிருந்தது. ஸோ, அதோட நினைவுகள் மட்டும்தான் இப்ப என்கிட்ட இருக்கு...

      Delete
  28. சுவையாக இனிய நினைவுகள் ஊடாக அனுபவத்தை சொல்லும் திறமையான் எழுத்து நடை. தொடருங்கள் பின் தொடர்கின்றேன்

    ReplyDelete
    Replies
    1. என் எழுத்து நடையைப் பாராட்டிய உங்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள். தொடரும் ஆதரவிற்கு மனம் நிறைந்த நன்றி!

      Delete
  29. இனிமையான எழுத்து நடை

    ReplyDelete
  30. விரைவாக அடுத்த பகுதியும் கான ஆவல்

    ReplyDelete
  31. சுபாவின் வேலைகள், நாவல் உருவாகும் விதம் என்று ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளை கொடுத்து ஏங்க வைத்து விட்டீர்கள் அடுத்த பதிவுக்கு. செம இன்டெரஸ்டிங் சார். உங்க நடை அழகு.

    ReplyDelete
    Replies
    1. நாம இன்னும் சந்திக்கவே இல்லை. என் நடை அழகுன்றிங்களே... ஓ! எழுத்தோட நடையச் சொன்னீங்களோ..! என் இதயம் கனிந்த நன்றி துரை!

      Delete
  32. நினைவலைகள் தொடர்ந்து அடிக்கட்டும் கணேஷ் சார்...

    ReplyDelete
    Replies
    1. ‘போர்’ அடிக்குதுன்னு நீங்க தலையில குட்டாத வரை நினைவலைகள் அடிக்கும் நண்பரே. ஹி... ஹி... தங்களின் தொடர் ஆதரவுக்கு என் இதய நன்றி!

      Delete
  33. small houseக்கும் அதே அர்த்தம் தான் அண்ணே. அதான் குட்டி வீடு... i mean சின்ன வீடு.. அதாவது வசதியா தனி வீடு.. ஆள விடுங்கப்பா.

    ReplyDelete
    Replies
    1. ‘சின்னதான வீடு’ என்றும் ‘சின்ன வீடு’ என்றும் நான் மனதில் நினைத்துத்தான் அப்படி எழுதினேன். இப்பத்தான் புரியுது ரெண்டும் ஒண்ணுன்னு... அனுபவஸ்தர் சொன்னா சரிதேங்! நன்றிங்கோவ்!

      Delete
  34. ‘போடாங்... போலீஸ் அரெஸ்ட் பண்ணினா டீஸன்ட் பர்சன்னுட்டு கோட், டையெல்லாம் போட்டு விருந்து தர மாட்டாங்க. அன்டர்வேரோட போட்டோ எடுத்து தந்தில போடுவாங்க. என் படம் அப்படி வர்றதை நான் விரும்பலை’’ ///

    அடேங்கப்பா....!


    ‘‘சாப்பாட்டு ராமனுக்கு ஹோட்டல்ல வேலை கொடுத்த மாதிரி ஆச்சேப்பா உனக்கு வேலை கொடுத்தது...’’ என்று கேலிகூடச் செய்வார் அவர்.
    ///

    நல்ல உதாரணம்.

    மொத்தத்தில் நினைவலைகள் அருமையோ அருமை.

    ReplyDelete
    Replies
    1. நினைவலைகளை ரசித்துப் பாராட்டிய தங்கைக்கு மனம் நிறைந்த நனறி!

      Delete
  35. வணக்கம்! பிரபலமான எழுத்தாளர். சுபா’ என்பது ஒரு பெண்ணல்ல, அது ‘சுரேஷ்’, ‘பாலகிருஷ்ணன் இருவர் பெயரின் முதலெழுத்தையும் எடுத்து ‘சுபா’ என்று வைத்துக் கொண்ட பெயர், இருவரது கூட்டு முயற்சி என்று ( நடை வண்டிகள் -.4 )
    குறிப்பிட்டு இருந்தீர்கள். இரண்டு பேர் ( ஒரு உறையில் இரண்டு வாள் ) எப்படி ஒரு நாவலை உருவாக்கினார்கள் என்பதனை தெரிந்து கொள்ள, தங்களின் அடுத்த பதிவினை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. ஒரு உறை, இரண்டு வாள் என்பதெல்லாம் நமக்குத்தான் இளங்கோ. எழுத்தைப் பொறுத்தவரை சுபா ஒரே வாள்தான். அதனால்தான் கூடிய வரை சுரேஷ் என்றோ பாலா என்றோ சொல்லாமல் சுபா என்றே குறிப்பிடுகிறேன். அடுத்த பகுதியைப் படிக்கையில் விரிவாக உங்களுக்கு விளங்கி விடும். தொடரும் வருகை + கருத்துக்கு என் மனமார்ந்த நன்றி!

      Delete
  36. தமிழ்மணம் மகுடத்தில் ஏறியதற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் சார்! இன்னும் பல சாதனைகள் படைத்து பதிவுலக ஜாம்பவானாய் மாற இறைவன் அருள் கிடைக்க பிரார்த்திக்கிறேன். வாழ்க நலமுடன்!

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொன்னதும்தான் கவனித்தேன் துரை. மகுடத்தில் ஏறியது இது இரண்டாவது முறை என்பதில் மகிழ்வு. உங்களின் அன்புக்கு நெகிழ்வுடன் என் நன்றிகள்!

      Delete
  37. // சின்ன வீடு பார்த்து (small house என்று பொருள் கொள்க) // இங்கையுமா !

    நானும் நிறைய எதிர்பார்ப்புகளோடு அடுத்த பதிவைப் படிக்கச் செல்கிறேன்

    ReplyDelete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube