அமைதியாக, இனிமை நிரம்பிய முகத்தினனாக வாழ வேண்டும் என்று மனம் விரும்பினாலும், நடைமுறை வாழ்க்கையில் நாம் சந்திக்கும் மனிதர்களால் ஆன இச்சமுதாயம் நம்மை அப்படி இருக்க விடுவதில்லை. பல சந்தர்ப்பங்களில் என் மனம் சினங்கொண்டு ஆர்ப்பரிக்கத்தான் செய்கிறது. இப்படி பொதுப்படையாகச் சொன்னால் எதுவும் புரியவில்லை அல்லவா? சற்றே உதாரணங்களுடன் விளம்பிட விழைகின்றேன் யான்.
சென்ட்ரல் தொடர்வண்டி நிலையம். கோயமுத்தூருக்குப் பயணச் சீட்டு பெறுவதற்காக அடுத்தடுத்து அனுமனின் வால் போல நீண்டிருக்கும் நான்கு வரிசைகளில் ஒன்றில் நின்றிருக்கிறேன் நான். எனக்கு முன்னால் எத்தனை பேர் என்று எண்ணிப் பார்த்து, ‘இருபத்தைந்து பேர் கடந்து சென்றபின்தான் நாம் பயணச் சீட்டு பெற இயலுமா?’ என்று பெருமூச்சினை வெளியேற்றிக் கொண்டிருந்த வேளையில் விறுவிறுவென்று வந்த, ஆடம்பரமாக உடையணிந்த ஒருவர் வரிசையில் தனக்குத் தெரிந்த நபர் ஒருவர் முன்னால் நின்றிருப்பதைக் கண்டதும், அவர் பெயர் சொல்லிக் கையாட்டியபடி அவர் பின் சென்று நின்று கொண்டார். வரிசையிலுள்ளவர்கள் ஆட்சேபிக்க, ‘‘இவர் என்னுடன் இருந்தவர்தான். ‘அல்பசங்கை’க்காக போயிருந்தார்’’ என்று முன்னால் நின்றிருந்த அந்தத் தடியர் விளக்கம் கூறி கேட்டோர் வாயை அடைத்து விட்டார். அதன்பின் வந்த மற்றொரு இளைஞன், முன்னால் நின்றிருந்த ஓரிருவரிடம் சென்று தனக்கும் சேர்த்து ஒரு ஈரோட்டுக்கு ஒரு பயணச்சீட்டு எடுத்துத் தரும்படி மன்றாடிக் கொண்டிருந்தான்.

அண்ணா அறிவாலயத்திலிருந்து உடனடி வளைவு எடுத்து வாணிமகால் நோக்கிச் செல்லும் சாலையில் என் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கிறேன். எதிரில் சிவப்பு விளக்கு பளிச்சட, வாகனத்தை நிறுத்துகிறேன். ஒரு நிமிடக் கரைசலில் எதிரே சென்று கொண்டிருந்த வாகனங்கள் குறைந்துவிட, ஒன்றிரண்டு வாகனங்களே தூரத்தில் வருவதைக் கண்ணுற்று என் பின்னால் நின்றிருந்த ஒன்றிரண்டு இருசக்கர வாகன ஓட்டிகள் சிவப்பு விளக்கை அலட்சியம் செய்து தங்கள் வாகனத்தை விரட்டுகின்றனர். எனக்குப் பின்னே நின்றிருக்கும் மகிழ்வுந்தில் அமர்ந்திருக்கும் ஒருவர் ஒலி எழுப்புகிறார். திரும்பிப் பார்த்தால் என்னை முன்னேறச் சொல்லி சைகை காட்டுகிறார். எதிரில் பார்த்தாலோ சிவப்பு விளக்கு இன்னும் பச்சையாக மாறியிருக்கவில்லை. அதன்பின் 35 விநாடிகள் காத்திருந்து பச்சை மாறிய பின்பே நகர்த்துகிறேன். என்னைக் கடந்து செல்லும் மகிழ்வுந்துக்காரர், வேகம் குறைத்து, ‘‘வேலைவெட்டி எதுவும் இல்லியாய்யா உனக்கு? அனாவசியமா என்னையும் லேட் பண்ணிட்டியே...! .... .......’’ என்று (கோடிட்ட இடங்களில் பிரசுரிக்கத் தகாத சொற்கள்) என்னை வழுத்திவிட்டு விரைகிறார்.
இவ்விரண்டு சந்தர்ப்பங்களிலும் எனக்குள் எழுந்த சினவெறிக்கு அளவேயில்லை. இப்படி முறைதவறி வரிசையைப் புறக்கணித்து பயணச்சீட்டைப் பெறுபவர் மனதில் ‘தான் புத்திசாலி’ என்றும் ‘காரியம் சாதிக்கும் திறமையாளன்’ என்றும் பெருமை இருக்க வாய்ப்புண்டு. அது நிஜமா? நான்கைந்து வரிசையை ஒழுங்குபடுத்த ஒரு காவலரே உளர் என்கிற நிலையில் அவர் எத்தனைதான் கவனித்துத் திருத்த முடியும்? அங்கே சுயஒழுக்கமுடன் நடந்து கொள்ள வேண்டியது பொதுமக்களின் பொறுப்பல்லவா? வரைமுறை மீறி, ஒருவன் விரைந்து பயணச் சீட்டு பெறுவதன் மூலம் விதிகளை மதித்து ஒழுங்காக நிற்கும் அனைவரையும் முட்டாளாக்குகிறான் என்பதல்லவா பிரத்யட்சம்! இதுபோன்ற சந்தர்ப்பங்களில் எதிர்ப்புக் குரல் கொடுத்து, சண்டையிட்ட அனுபவம் எனக்கு உண்டெனினும் அன்றைய தினம் என் அவசரம் கருதி பொறுமையாய் இருந்ததன் மூலம் நானும் ஒரு குற்றவாளியானேன்.
விதிகளைப் புறக்கணித்து வாகனத்தை விரைவுபடுத்திச் சென்ற அந்த மகிழ்வுந்து வாணிமஹால் அருகில் சிவப்பு விளக்குக்கு கட்டுப்பட்டு நின்றிருந்தது. விதிகளை மதித்து நிதான வேகத்தில் சென்ற நானும் அந்த மகிழ்வுந்தின் பின்னாலேயே என் வாகனத்தை நிறுத்தினேன். எனில், அந்த (தேவையற்ற) விரைவு காரணமாக அவர் சாதித்ததுதான் என்ன? அவரின் விரைவினால், பதட்டத்தினால் ஏதேனும் விபத்து நிகழ்ந்திருந்தால் அதனால் வேதனையும், காலதாமதமும் தானே மிச்சம்? வேறென்ன பயன் விளைந்துவிடப் போகிறது? ஏதோ தீப்பற்றிக் கொண்ட இடத்திற்கு விரைவது போல ஏன் இப்படி அனைவரும் கன்னாபின்னாவென்று வேகத்தில் விரைகிறார்கள்? மேல்நாடுகளில் இருப்பது போன்று இங்கு வெவ்வேறு வாகனங்களுக்கு தனித்தனி பாதைகளா ஒதுக்கப்பட்டிருக்கிறது?
இந்த இரண்டு விஷயங்களும் என்னுள் எழுப்பிய கேள்வியொன்றை உங்கள் முன் வைத்திட விழைகின்றேன். யாரேனும் அருகிலிருந்து வலியுறுத்தினால், தண்டித்தால்/கண்டித்தால் மட்டுமே விதிகள் பின்பற்றப்பட வேண்டியவை. இல்லாவிட்டால் விதிகளை மீறி நடந்தாலும் குற்றம் ஒன்றுமில்லை என்கிற மனப்பாங்கை எவர் விதைத்தது இந்த மனிதர்களுக்கு? ஏதோ ஓரிருவர் இப்படி இருக்கிறார்கள் என்று நினைத்தது போக, அவர்களைக் கண்டு பலரும் விதிகளைக் கடைப்பிடித்து என்ன ஆகப் போகிறது, நாம் ஏமாளியாவதுதான் மிச்சம் என்று தாங்களும் மாறிவிட வாய்ப்பு அதிகம் உள்ளதே! கல்விச் சாலைகளில் ஒழுக்கமும் நன்னடத்தையும் போதிக்கப்பட்டது எல்லாம் வீண்தானா?
கோலெடுத்தால் ஆட்டம் போடும் குரங்கினமா இந்த ம(ஆ)க்கள்? எனில், கடும் தண்டனைகளுக்கு மட்டும்தான் நம் மக்கள் கட்டுப்படுவார்களா? என்னதான் வழி இதுபோன்றவற்றைக் (தீர்வு காண்பதற்கல்ல) கண்ணுறும்போது பொங்கிக் கொந்தளித்த சினமடையும் மனதைக் கட்டுப்படுத்துவதற்கு? இதுபோன்ற பல வினாக்கள் என்னுள்ளே விடையற்றுத் தொங்கிக் கொண்டிருக்கின்றன. என்னரும் தோழர்களே... எவர் விண்டுரைப்பீர் இதற்கான விளக்கத்தினை...!