Saturday, December 31, 2011

கமலாவும் கத்தரிக்காய் கூட்டும்!

Posted by பால கணேஷ் Saturday, December 31, 2011
ழுத்தாளர் அகஸ்தியன் என்கிற கடுகு அவர்களின் இந்தக் கதை எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் என் நண்பர், நலம் விரும்பி என்பதுடன், நகைச்சுவை(என்று நம்பி)யாக நான் எழுதும் விஷயங்களுக்கு எனக்கான உந்துசக்தியும் அவரே. http://kadugu-agasthian.blogspot.com என்ற தளத்திற்குச் சென்றீர்களானால் அவரது எழுத்துக் குழந்தைகளை ரசித்து மகிழலாம். அவரது அனுமதியுடன் இக்கதையை உங்களுக்கு வழங்குகிறேன். (புது வருஷத்துல புது மேட்டர்களோட சந்திக்கிறேன்.) உங்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த...
2012 - புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

         கமலாவும் கத்தரிக்காய் கூட்டும்!
                          -   கடுகு -

ன் அருமை மனைவி கமலாவுக்கு உள்ள எத்தனையோ நல்ல வழக்கங்களில் ஒன்று, தினமும் என்னைக் கேட்டு, எனக்கு இஷ்டமான சமையலைச் செய்வது. அதே சமயம் அவளுக்கு இஷ்டமான சமையலாகவும் அது அமைந்து விடும். எப்படி?

நேற்றுக் காலை நடந்த சம்பாஷணையை அப்படியே தருகிறேன். கமலாவின் நோஹௌவை யாவரும் தெரிந்து கொள்ளட்டும்!
  ‘‘ஏன்னா, உங்களைத்தானே, இன்னிக்கு என்ன சமையல் செய்யட்டும்? வீட்டில் கத்தரிக்காய்தான் இருக்குது. கூட்டு செய்யட்டுமா?’’ என்று கேட்டாள்.
   ‘‘கூட்டா கமலா... வேண்டாம். எண்ணெய்க் கத்தரிக்காய் குழம்பு செய்யேன்’’ என்றேன்.
   ‘‘எண்ணெய்க் கத்தரிக்காய் குழம்புதானே, செய்துடறேன். ஆனால் ஓண்ணு, அப்புறம் எங்கம்மா செய்யறமாதிரி இல்லைஅப்படி இப்படின்னு ஆடக் கூடாது’’

‘‘வாயைத் திறக்காமல் சாப்பிடறேன்!’’

‘‘இல்லே, இப்படித்தான் சொல்வீங்க, அப்புறம் ஆயிரம் நங்கு நடிப்பீங்க... எண்ணெய்க் குழம்பு சமாசாரமே வேண்டாம்.’’

‘‘அப்படியானால் கத்திரிக்காயைச் சுட்டுப் புளி மசியல் செய்யேன்.’’

‘‘ஐயோ மசக்கையே! கேஸ் அடுப்புலே கத்தரிக்காயைச் சுட முடியுமா? அதற்குக் கரி அடுப்பு வேணும். வருஷத்திலே ஒரு நாள் கத்தரிக்காயைச் சுடுவதற்கு நான் கரி அடுப்பையும் ஒரு மூட்டைக் கரியையும் கட்டிக் காப்பாத்த வேண்டுமா?... உங்க அக்கா சரோஜாதான் இன்னும் கரி அடுப்பை வெச்சுண்டு இருக்கா... ஆயிரம் சம்பாதிச்சாலும் கேஸ் அடுப்பு வாங்க அவளுக்கு மனசு வராது... அக்காகிட்டே சீராடப் போகும் போது தினமும் சுட்டு மசியல் பண்ணிச் சாப்பிட்டு விட்டு வாங்க...’’

‘‘போகட்டும் கமலா, பொடி போட்டுக் கறி பண்ணிடு. அட்டகாசமாய் இருக்கும்.’’

‘‘வீட்டைத் தலைகீழாத் திருப்பினால் கூட ஒரு பிடி தனியா கிடையாது. நானும் நாலு நாளாகத் தனியா வாங்கிண்டு வாங்கோன்னு கத்திண்டு இருக்கேன். தனியா, சேர்ந்தான்னு பேத்தல் சிலேடை ஜோக் அடிச்சுண்டு மசமசன்னு உட்கார்ந்துண்டு இருந்தால் எப்படி பொடி போட்டுக் கறி பண்றது?’’

‘‘இப்போ என்னைக் கடைக்குத் தொரத்தாதே, கமலா... அப்போ, கத்தரிக்காயை வெறுமனே வதக்கி வச்சுடு.’’

‘‘வெறும் வதக்கல்தானே, ஆகா, பண்ணிடறேன். ஆனால் உங்கள் பொண்ணு இருக்காளே, ராங்கிக்காரி! வாயிலே வெக்க மாட்டாள். நறுக்கா இலையிலேருந்து ஒதுக்கிடுவா... இந்தப் பிடிவாதமெல்லாம் அப்படியே உங்கம்மா தான். கல்யாணம் ஆன புதுசுலே இப்படித்-தான் வதக்கலை உங்க அம்மா இலையிலே போட்டுட்-டேன். அப்படியே விஷம் மாதிரி அதை ஒதுக்கி வெச்-சுட்டதும் இல்லாம ஒரு பாட்டுவேற பாடினாளே... எத்தனை வருஷமானாலும் மறக்குமா? அப்போ உங்கம்மா பாடினாள்... இப்போ உங்க பொண்ணு பாடுவா... தாராளமா வதக்கல் பண்றேன். பாட்டைக் கேட்கணும்னு என் தலையிலே எழுதியிருந்தால் அதை எந்த ரப்பராலும் அழிக்க முடியாது.’’

‘‘இதுக்காக ஏன் கண்ணைக் கசக்கறே, கமலா... கத்தரிக்காய் போட்டு மோர்க் குழம்பு பண்ணிவிடு.’’

‘‘ஐயோ... இந்த மனுஷருக்கு வர்ற யோசனையைப் போய் யாரிடம் சொல்வேன்! நேத்துச் சாயங்காலம் உங்க ஆபீஸ் பிரண்ட்ஸை இழுத்துண்டு வந்து காப்பி போடச் சொன் னீங்க... அதனால் நேத்து பால் ஷார்ட்... தயிர் தோய்க்கவே இல்லை. சாப்பிடறதுக்கே மோர், ஒன்ஸ்மோர் தான்! இந்த அழகில் மோர்க் குழம்பு, தயிர்ப் பச்சடி என்று சொல்றீங்க...!’’

‘‘விடு கமலா ரஸவாங்கி பண்ணிடேன்.’’

‘‘கோலி குண்டு சைஸ்லே கத்தரிக்காய் வாங்கிண்டு வந்திருக்கீங்க. நீள கத்தரிக்காயில்தான் பண்ண முடியும். குண்டு கத்தரிக்காயில் பண்ணால் வாயில் வைக்க வழங்-காது. எனக்கென்ன பண்ணிடறேன்...’’

‘‘ரஸவாங்கி வேண்டாம் கமலா. கத்தரிக்காய்க் கூட்டு பண்ணிடு’’

‘‘கத்தரிக்காய் கூட்டா... ஊம், உங்க இஷ்டப்படியே கத்தரிக்காய் கூட்டு பண்றேன். உங்களுக்குப் பிடிச்சதைப் பண்றதை விட எனக்கு வேறு என்ன வேலை?’’

இப்படியாக நேற்று காலை என்’ (அதாவது கமலாவின்) இஷ்டப்படியே கத்தரிக்காய் கூட்டு செய்தாள் கமலா!

Thursday, December 29, 2011

கொஞ்சம் ‘ஹி... ஹி...ங்க...!’

Posted by பால கணேஷ் Thursday, December 29, 2011
ணக்கமுங்க. அடுத்த பதிவை வெளியிடும் போது புது வருஷம் பிறந்திருக்கும். இந்த ஆண்டோட கடைசிப் பதிவு இதுஙகறதால மேட்டர் எதுவும் எழுதி போரடிக்க விரும்பலை. அதனால லைட்டான மேட்டரைப் பாத்துட்டு, ‘ஹிஹி’ங்க... (ஏண்டா... ஏண்டா... புத்தகக் கண்காட்சிக்கு வரவேண்டிய சில புத்தகங்களை அவசரமா டைப் பண்ணிட்டிருக்கறதால மேட்டர் எழுத நேரமில்ல, அதனால ரெண்டு பதிவை இப்படி ஒப்பேத்தப் போறேன்னு உண்மையச் சொல்லிட்டுப் போயேண்டான்னு நாகேஷ் குரல்ல மைண்ட் வாய்ஸ் கத்துது. தே, கம்னு கெட!)

“க்யூவுல யாராச்சும் முந்த நினைச்சீங்களோ...”








“குட்மார்னிங் சார்..!”
“முட்டாளே... நான் ‘ஸிட்’டுன்னு தான் சொன்னேன்... என்ன பண்ணி வெச்சிருக்க..?”
“சூப்பர் ஃபிகரு டோய்...!”
“நாங்களும் ‘ப்ளாக்’ எழுதுவோம்ல..!”
“நீங்கதான் சிக்கன் சாப்பிடுவீங்களா? நாங்க இன்னிக்கு ‘ஹ்யூமன்’ சாப்பிடப் போறோம்...”
“என் செல்லமே...!”

Monday, December 26, 2011

ரத்தத்தில் பூத்த நட்பு!

Posted by பால கணேஷ் Monday, December 26, 2011
ல்லவர்களைத்தான் ஆண்டவன் சோதிப்பான்!’ -இது எவ்வளவு சத்தியமான வார்த்தை! ரொம்ப நல்லவர் நீங்க (ஐஸ்லாம் இல்லீங்க, நிஜமாத்தான் சொல்றேன்!). பிறக்கப்போகிற புதுவருஷம் உங்க எல்லாருக்கும் வளத்தையும் நலத்தையும் குடுக்கணும்னு வாழ்த்தி, ஆண்டவனை வேண்டேறேன். ஆனாலும் பாருங்க... புது வருஷத்துல உங்களுக்கு ஒரு சோதனையைக் குடுக்கறதுன்னு அந்த ஆண்டவன் முடிவு பண்ணிட்டான் போலருக்கு... எதுக்கு இந்த பில்டப்புன்னு யோசிக்கறீங்க தானே..? இந்தப் பதிவோட கடைசியில உங்களுக்கே புரிஞ்சுடும். இப்ப நான் சொல்ல வந்த விஷயத்துக்கு வர்றேன்.

வன்’ 10ம் வகுப்பு, +2 படிச்சது தேவகோட்டையில இருக்கற தே பிரித்தோ மேல்நிலைப் பள்ளியில. கிறிஸ்தவப் பள்ளியான அதில் படிப்புக்குத் தர்ற அதே முக்கியத்துவத்தை ஒழுக்கத்துக்கும் கொடுப்பாங்க. படிக்கிற காலத்துல இவன் அநியாயத்துக்கு அப்பாவியா, சாதுப் பையனாயிருந்தான். (இப்பக் கொஞ்சம் ரெளத்திரம் பழகியிருக்கான்). யாராவது திட்டினாக் கூட பதிலுக்குத் திட்ட வராது. அழுதுடுவான். அவ்வளவு ஸாஃப்ட்! அப்படிப்பட்ட இவன்தான் சக மாணவனை ரத்தம்வரத் தாக்கினான் ஒருமுறை.

பொதுவா உடற்பயிற்சி வகுப்புல வாத்தியார் விளையாடச் சொல்லிட்டார்னா பசங்க கிரிக்கெட்டை செலக்ட் பண்ணினா இவன் ட்வெல்த் மேனாப் போட்டாலே போதும்னுடுவான். ஆனா ஃபுட்பால் விளையாடலாம்னு பாலைக் கையில எடுத்துட்டாங்கன்னா... முதல் ஆளா ஓடிப் போய் நிப்பான். அந்த விளையாட்டு மேல அவ்வளவு ஆசை இவனுக்கு.

ஒரு நாள் பி.டி. மாஸ்டர் லீவு போட்டதால சயன்ஸ் மாஸ்டர் சந்தியாகு அந்த அவருக்கு சார்ஜ் எடுத்துக்கிட்டாரு. அவரு ஃபுட்பால் விளையடச் சொன்னதுல இவனுக்கு படுகுஷிபசங்க ரெண்டு டீமாப் பிரிஞ்சு ஃபுட்பால் விளையாடிக்கிட்டிருந்தோம். ஒரு கட்டத்துல எதிர் அணில இருந்த ராமநாதன் பந்தை வேகமா கடத்திக்கிட்டு வர்றான். எங்க அணிப் பசங்கல்லாம் பின்தங்கிட்டாங்க. அவனை யாரும் சேஸ் பண்ணவே இல்லை. இவன் மூச்சைப் பிடிச்சுக்கிட்டு (எங்க போயிருந்துச்சு அது... புடிககிறதுக்கு?) வேகமா ஓடி, ராமநாதனுக்கு சைடிலருந்து ஏறக்குறைய கீழே படுத்து பந்தை எட்டி உதைச்சான். பந்து பறந்து எங்க டீம் பையன் பக்கம் போயிடுச்சு. ஆனா... பந்தை உதைச்ச இவனுக்கு உடனே சுறுசுறுப்பா காலை பின்னால எடுக்கணும்னு தெரியாததால... பாவம் ராமநாதன்! கால் தடுக்கி குட்டிக்கரணம் அடிச்சான்.

இவன் பதறிப் போய், அவனை கை தூக்கி வி்ட்டான். இவன் பேச ஆரம்பிக்கறதுக்குள்ள... கீழ விழுந்ததுல ராமநாதனுக்கு கண்மண் தெரியாம கோபம வந்துடுச்சு போல... இவன் கையப் புடிச்சு அழுத்தமா கடிச்சுட்டான். சாதாரணக் கடி இல்ல.... வெறிநாய்க் கடி! இவன் கைல பல் பதிஞ்‌சது மட்‌டுமில்லாம, ரத்தம் வர ஆரம்பிச்சுடுச்சு... அப்படி ஒரு அசுரக்கடிவலியில இவன் சுபாவத்தை மீறி அப்ப இவனுக்கு எங்கருந்தோ ஒரு வெறி வந்துட்டுது. அப்ப இவன் கைல நீளமா நகம் வளர்த்திட்டிருந்தான். அப்படியே ராமநாதன் முகத்துல கைய வெச்சு அழுத்தமா ஒரு கீறல் போட்டான். ராமர் அணில் முதுகுல கோடு போட்டதா சொல்லுவாங்களே... அந்த மாதிரி மூணு நகங்கள் அழுத்தமாப் பதிச்ச கோடுகள் ராமநாதன் கன்னத்துல! அவன் முகததுலருந்தும் ரத்தம் வர ஆரம்பிச்சுது.

இதுக்குள்ள நடந்ததை தூரத்துலருந்து பாத்துட்ட சயன்ஸ் மாஸ்டர் சந்தியாகு ஓடி வந்தார். ரெண்டு பேரையும் முதுகுல சாத்தி, டாக்டர்ட்ட கூட்டிட்டுப் போய் .டி.எஸ். இன்ஜெக்ஷன்லாம் போட்டு முதலுதவி செய்ய வெச்சாரு அந்த நல்லவர். அதோட விடாம இதை ஹெட் மாஸ்டர்கிட்ட ரிப்போர்ட் பண்ணணும்னு ரெண்டு பேரையும் இழுத்துட்டுப் போனாரு அவர். அன்னிக்குன்னு பாத்து ஹெச்.எம். லீவ்ல இருந்ததால அசிஸ்டென்ட் ஹெச்.எம். ரூமுககு கூட்டிட்டு்ப் போனாரு. அவ்வளவுதான்... இவனுக்கு கை, காலெல்லாம் ஆட ஆரம்பிச்சுடுச்சு.

ஏன்னா... அப்ப ஹெச்.எம்.மா இருந்த ஃபாதர் டி.எம்.மத்தாய் ரொம்பவே அன்பானவரு. இவன் உட்பட எல்லாப் பசங்களும் அவர்மேல உயிரையே வெச்சிருந்தோம். (அவர் நல்லவரு... ரிடையராகிப் போறப்ப உயிரை திருப்பிக் கொடுத்துட்டாரு.). அசிஸ்டென்ட் ஹெச்.எம். ஃபாதர் இருதயராஜ் ரொம்ப கோபக்காரர். கன்னாபின்னான்னு திட்டுவார், அடிக்கவும் செய்வார். அவர் சில பசங்களை தண்டிக்கிறத இவனே கண்ணால பாத்துருக்கான். (ஆமா... மத்தவங்கல்லாம் மூக்காலயா பாப்பாங்க? எழுதறான் பாருய்யா இவன்!)

அப்படிப்பட்டவர் முன்னால இவன் போய் நிக்கும்போது, ‘பில்டிங் ஸ்ட்ராங்; பேஸ்மெண்ட் வீக்ன்னு வடிவேலு பிரகாஷ்ராஜ்கிட்ட டயலாக் பேசும்போது அவர் கால் நடுங்கும் பாருங்க... அந்த மாதிரி கால் உதற புதுவகை டான்ஸ் ஆடிட்டே போய் நின்னான். ஹார்ட் பீட் உச்சத்துல அடிச்சிட்டிருந்தது. ஆனா பாருங்க...  அன்னிக்கு அதிசயம் நடந்துச்சு! சந்தியாகு மாஸ்டர் சொன்னதையெல்லாம் கேட்டுட்டு ஃபாதர் இருதயராஜ் அடிக்கலை, திட்டலை! ரெண்டு பேருக்கும் சிரிச்சுட்டே அட்வைஸ் பண்ணி அனுப்பிட்டாரு.

பின்னால ஒரு நாள்ல தைரியத்தை வரவழைச்சுக்கிட்டு அதைப்பத்தி அவர்கிட்ட இவன் கேட்டப்ப, ‘‘நீ ரொம்ப நல்ல பையன்னு தெரியும். லீவ் போடறதுன்னாக் கூட அம்மா, அண்ணன்ட்ட லெட்டர் வாங்கிட்டு வராம, நீயே இங்கிலீஷ்ல சொந்தமா எழுதி என்கிட்ட கையெழுத்து வாங்குவ. அதனாலதான் உன்னை கண்டிச்சு மட்டும் விட்டேன்’’ என்றார்.ஹய்யோ... ஹய்யோ... அம்மாவுக்கு ஆங்கிலம் எழுத வராது, அண்ணனைப் பிடிக்கவே முடியாத அளவு பிஸிங்கற சூழ்நிலையிலதான் இவன் தானே சுயமா எழுதினான்னு.. பாவம், அவருக்குத் தெரியல!

அன்னிலருந்து மூணு நாள் ராமநாதன் வலப்பக்கம் போனா, இவன் இடப்பக்கம் போவான். நாலாம் நாள் மனசு பொறுக்காம இவனே ராமநாதன்கிட்டப் போயி, ‘‘என்ன இருந்தாலும் நான் நடந்துக்கிட்டது ரொம்பத் தப்புடா. ஸாரி...’’ன்னு சொன்னான். மன்னிப்புக் கேக்கறதோட மகத்துவத்தை அன்னிக்கு இவன் புரிஞ்சுக்கிட்டான். ராமநாதன் இவன் தோள்ல கை போட்டு, ‘‘என் மேலயும்தான் தப்பிருக்கு. விடுடா... உனக்குக்கூட கோபம் வரும்னு நான் எதிர்பாக்கவே இல்லடா...’’ன்னுட்டு சிரிச்சான். அப்பலருந்து ஸ்கூலை விட்டுப் பிரியற வரைக்கும் மத்த பசங்க பொறமைப்படற அளவுக்கு இவனுக்கு நெருங்கிய நண்பனாக இருந்தான் ராமநாதன்.

உங்களுக்கு இவன் சொல்ல விரும்புவதும் இதுதான். உங்கள் பக்கம் தவறிருக்கும் பட்சத்தில் கொஞ்சமும் தயங்காமல் மனம் விட்டு மன்னிப்புக் கேளுங்கள். அதனால் உங்களுக்கு ஒன்றும் குறைவு ஏற்பட்டு விடாது. மாறாக, உங்கள் மதிப்பு உயரத்தான் செய்யும்!

இனி... உங்களுக்கு வரவிருக்கும் சோதனை :


  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube