என் இனிய வலை மக்களே... உங்கள் பாசத்திற்குரிய பாலகணேஷின் வணக்கம். முன்பொரு முறை ‘சரித்திரக்கதை எழுதுவது எப்படி?'ன்னு விளக்கமா எழுதி உங்களுக்கு உதவினேன். ஆனால் அதைப் பின்பற்றி யாரும் சரிததிரக் கதை எழுவதாகத் தெரியவில்லை. ஆகவே கவிதை எழுதுவதன் வழிமுறைகளை விளக்கி பல கவிஞர்களை உண்டுபண்ணும் அடங்காத இலக்கிய தாகத்துடன்(!) இப்போது உங்கள் முன் வந்திருக்கிறேன்.
வளமான தமிழில் வாசகர் வியக்கும் வண்ணம் கவிதைகள் எழுத வேண்டும் என்ற ஆவல் நிறைய இருந்தும் எப்படி என்பது புரியாமல் இருக்கிறீர்களா நீங்கள்? எனில், நீங்களும் என் நண்பரே! வாருஙகள் இப்படி அருகில்... உங்களுக்காகத்தான் இந்தப் பகிர்வு! முத்துத் தமிழில் அழகுக் கவிதைகள் படைக்கும் விதத்தை இப்போது யான் விண்டுரைக்கப் போகிறேன் உங்களிடம்! கவிதைகளில் மரபுக் கவிதை, புதுக் கவிதை, ஹைக்கூ ஆகிய பல வடிவங்கள் உண்டு. இவை ஒவ்வொன்றையும் நீங்கள் அறிய வேண்டியது அவசியம். (உண்மையில் எதையும் அறியாமலேதான் கவிதை(?) எழுதப் போகிறீர்கள் என்பது நமக்குள் இருக்கட்டும்...)
வளமான தமிழில் வாசகர் வியக்கும் வண்ணம் கவிதைகள் எழுத வேண்டும் என்ற ஆவல் நிறைய இருந்தும் எப்படி என்பது புரியாமல் இருக்கிறீர்களா நீங்கள்? எனில், நீங்களும் என் நண்பரே! வாருஙகள் இப்படி அருகில்... உங்களுக்காகத்தான் இந்தப் பகிர்வு! முத்துத் தமிழில் அழகுக் கவிதைகள் படைக்கும் விதத்தை இப்போது யான் விண்டுரைக்கப் போகிறேன் உங்களிடம்! கவிதைகளில் மரபுக் கவிதை, புதுக் கவிதை, ஹைக்கூ ஆகிய பல வடிவங்கள் உண்டு. இவை ஒவ்வொன்றையும் நீங்கள் அறிய வேண்டியது அவசியம். (உண்மையில் எதையும் அறியாமலேதான் கவிதை(?) எழுதப் போகிறீர்கள் என்பது நமக்குள் இருக்கட்டும்...)
மரபுக் கவிதை படைப்பதற்கு தமிழ் இலக்கணம் பயின்றிருக்க வேண்டும். அசை, தொடை, தளை என்று பல கட்டுப்பாடுகளையும் கடைப்பிடித்து, தமிழின் அழகு குலையா வண்ணம் கவிதைகள் படைத்தல் அவசியம். ‘இலக்கணமாவது, ஒண்ணாவது... நான் என்னத்தக் கண்டேன், இனிமே போய்ப் படிச்சுட்டு வர்றதெல்லாம் ஆகாது’ என்று நீங்கள் உரைப்பது என் செவியில் விழுகிறது. அஞ்சற்க... இலக்கணம் அறியாமலேயே மரபுக் கவிதை(!) எழுத சுலப வழியொன்று உள்ளது. நீங்கள் தமிழ்ப் படங்கள் நிறையப் பார்த்திருப்பீர்கள்தானே... படம் பார்க்கும் பழக்கம் இல்லாத என் தங்கையைப் போன்றவர்கள் நிறைய சினிமாப் பாடல்களை நிச்சயம் கேட்டிருப்பீர்கள்தானே...
‘எத்தனையோ நினைக்கிறது நெஞ்சம்
உன்னிடத்தில் சொன்னதெல்லாம் கொஞ்சம்
என் மனமோ உன்னிடத்தில் தஞ்சம்
உன் மனம்தான் நான் துயிலும் மஞ்சம்'
இப்படில்லாம் எழுதியிருப்பாங்க. இப்படி கடைசிப் பகுதியில ராணி, கோணி, தேனீ, வாநீ அப்படின்னு ஒரே உச்சரிப்புல வார்த்தைகளைப் போட்டு நாலஞ்சு பாரா எழுதி அதுக்கு பொருத்தமா ஒரு தலைப்பு வெச்சுட்டீங்கன்னா.... மரபுக் கவிதை ரெடி. இன்னொரு டைப்பாகவும் இதை நீங்க எழுதலாம்.
செந்நெல் ஆடிய வயல்களினூடே
என் பார்வை பட்டநேரம்...
மின்னல்போல கண்ணில் தோன்றி
மினுக்கி நடந்திட்டாள் அப்பாவை
கன்னல் மொழியதனைப் பேசி
என் மனதைத் திருடிவிட்டாள்!
இதுல கவனிச்சீங்கன்னா முதல் வரியில வர்ற அதே வார்த்தை ஸ்டைலை மூணாவது வரியில கொண்டு வரணும். ரெண்டாவது வரியை முதல் வரியோட கோவிச்சுக்கிட்டுப் போற மாதிரி கொஞ்சம் நகர்த்திப் போடணும். ரைட்டா.... இப்படி கவிதை(?) இயற்றி, அதை பப்ளிஷ் பண்ணிட்டீங்கன்னா நீங்களும் இப்போ மரபுக் கவிஞரே...! (எதுக்கும் பப்ளிஷ் பண்ணினப்புறம் ஒரு ஹெல்மெட்டை தலையில மாட்டிக்கிட்டு உக்காந்திருக்கறது பெட்டர். இல்லாட்டி புலவர் ராமானுசம் ஐயா மாதிரி ஆசாமிங்க படிச்சுட்டு குட்டறப்ப தாங்கறது கஷ்டம்! ஹி... ஹி...!)
‘எத்தனையோ நினைக்கிறது நெஞ்சம்
உன்னிடத்தில் சொன்னதெல்லாம் கொஞ்சம்
என் மனமோ உன்னிடத்தில் தஞ்சம்
உன் மனம்தான் நான் துயிலும் மஞ்சம்'
இப்படில்லாம் எழுதியிருப்பாங்க. இப்படி கடைசிப் பகுதியில ராணி, கோணி, தேனீ, வாநீ அப்படின்னு ஒரே உச்சரிப்புல வார்த்தைகளைப் போட்டு நாலஞ்சு பாரா எழுதி அதுக்கு பொருத்தமா ஒரு தலைப்பு வெச்சுட்டீங்கன்னா.... மரபுக் கவிதை ரெடி. இன்னொரு டைப்பாகவும் இதை நீங்க எழுதலாம்.
செந்நெல் ஆடிய வயல்களினூடே
என் பார்வை பட்டநேரம்...
மின்னல்போல கண்ணில் தோன்றி
மினுக்கி நடந்திட்டாள் அப்பாவை
கன்னல் மொழியதனைப் பேசி
என் மனதைத் திருடிவிட்டாள்!
இதுல கவனிச்சீங்கன்னா முதல் வரியில வர்ற அதே வார்த்தை ஸ்டைலை மூணாவது வரியில கொண்டு வரணும். ரெண்டாவது வரியை முதல் வரியோட கோவிச்சுக்கிட்டுப் போற மாதிரி கொஞ்சம் நகர்த்திப் போடணும். ரைட்டா.... இப்படி கவிதை(?) இயற்றி, அதை பப்ளிஷ் பண்ணிட்டீங்கன்னா நீங்களும் இப்போ மரபுக் கவிஞரே...! (எதுக்கும் பப்ளிஷ் பண்ணினப்புறம் ஒரு ஹெல்மெட்டை தலையில மாட்டிக்கிட்டு உக்காந்திருக்கறது பெட்டர். இல்லாட்டி புலவர் ராமானுசம் ஐயா மாதிரி ஆசாமிங்க படிச்சுட்டு குட்டறப்ப தாங்கறது கஷ்டம்! ஹி... ஹி...!)

கடவுள் ஒருவர் இருந்தால்
கஷ்டம் இத்தனை தருவானா
திருடன், அயோக்கியனெல்லாம்
மகிழ்வாய்த்தான் திரிவானா?
நலலவனாய் இருப்பவனோ நாளும்
துன்பந்தான் படுகின்றான்!
அப்படின்னு மடக்கி எழுதிட்டீங்க்ன்னா... புதுக்கவிதை ரெடி! இப்படிச் சில பல கவிதைகளை இயற்றிப் பாராட்டு (அ) கல்லடி வாங்கிட்டீங்கன்னா நீங்களும் கவிஞரே! கவிதை மூலமா யாரையாவது வம்புக்கிழுத்து சர்ச்சையில ஈடுபட்டா இன்னும் சிறப்பு. சீக்கிரமா பிரபலமடைஞ்சுடலாம். அத விடுங்க... ரெண்டு டைப்பான கவிதை வகைகளைப் பார்த்துட்ட நீங்க, ஹைக்கூங்கற வடிவத்தை மட்டும் ஏங்க விட்டு வெக்கணும்? அதையும் தெரிஞ்சுக்கங்க. ‘ஹைக்கூ என்பது படித்ததும் உங்கள் மனதில் ஒரு காட்சியை நிறுத்த வேண்டும் அல்லது ஏதாவது ஒரு உணர்வை தோற்றுவிக்க வேண்டும்' அப்படின்னு சொன்னாரு எழுத்தாளர் சுஜாதா.
அவர் கெடக்கார் அப்பாவி மனுஷன்! நமக்கு வேண்டியதெல்லாம் என்ன... ஹைக்கூங்கறது மூணு வரியில வரணும். அவ்வளவு தாங்க வேண்டியது. முன்னல்லாம் ‘ஜுனூன் தமிழ்'ன்னு ஒரு பேட்டர்னை சொல்வாங்க கேட்டிருக்கீங்களா? வரணும் நீ இப்ப.... சொல்ற என்ன நீ? அப்படின்னுல்லாம் வினோதமா சிரசாசனம் செய்யற வாக்கியங்களா வரும். கிட்டத்தட்ட அதே பேட்டர்னை அப்ளை பண்ணினீங்கன்னா ஹைக்கூ ரெடிங்க. உதாரணமா... ‘தண்ணீரில் காதலியின் முகத்தைப் பார்த்தேன். நிலவு போல் தெரிந்தது' அப்படின்னு புதுக்கவிதை எழுதி வெச்சிருக்கீங்கன்னு வெச்சுக்கங்க... அதை அப்படியே ரிவர்ஸ்ல மூணு வரியில எழுதிப் பாருங்க...
நிலவு தெரிந்தது
தண்ணீரில் என்
காதலி முகம்!
...இவ்ளவ் தாங்க ஹைக்கூ! இதை மாதிரி நாலஞ்சு எழுதி நீங்க பிரசுரிச்சுட்டாப் போதும். ஹைக்கூவும் உங்களுக்கு கை வந்திடுச்சு(கைக்கூ?)ன்னு அர்த்தம். இதுல்லாம் ஹைக்கூவே இல்ல பொய்க்கூன்னு யாராச்சும் நாலு பேரு கூவத்தான் செய்வாங்க. விட்டுத் தள்ளுங்க... அப்படிக் கூவக்கூவ உங்க பாப்புலாரிட்டி கூடுதுன்னுதானுங்க அர்த்தம்! அதனால... வெரைட்டி வாரியா கவிதைங்களை எழுதி, கவிஞர் அவதாரமெடுத்து கவிதையுலகைக் கலக்குங்க... அப்புறம்... மறந்துராம அதையெல்லாம் தொகுத்து அடுத்த புத்தகக் கண்காட்சி வர்றதுக்குள்ள புத்தகமா வெளியிட்டுருங்க. பிறகென்ன... நீங்க பு.க.வுக்கு வர்றீங்கன்ற தகவல் கெடைச்சதுமே கெடைக்கற மரியாதையே தனி தான். ஹி... ஹி... ஹி...!
‘ஊசி' குறிப்பு 1 : நல்ல கவிதை எழுதும் என் நண்பர்கள் அனைவரும் இதை ஒரு பகடியாக மட்டுமே எடுத்துக் கொணடு (முடிந்தால்) நகைக்க வேண்டுகிறேன்.
‘ஊசி' குறிப்பு 2 : இவ்வளவு விளக்கமா வழிமுறைல்லாம் சொல்ற... நீ ஏன்யா கவிதை எழுதலைன்னு யாராச்சும கேட்டீங்களோ.... பிச்சுப்புடுவேன் பிச்சு! பேக்கரில இருக்கறவன் ஸ்வீட் தின்ன மாட்டான், சமையல்காரன் தானே சமைச்சதை சாப்பிட மாட்டான். அது மாதிரிதான்... நானும்... ஹெஹ்ஹெஹ்ஹே..!
|
|
Tweet | ||
அருமை ஐயா
ReplyDeleteத.ம.2
முதல் நபராய் வந்து ரசித்த உங்களுக்கு மனம் நிறைய நன்றி நண்பரே!
Deleteஹஹஹஹா.. இவ்வளவு நாள் இதெல்லாம் எங்களுக்கு சொல்லிக் கொடுக்காம எங்க சார் ஒளிச்சு வச்சிருந்தீங்க?
ReplyDeleteஇன்னும் பல திறமை(!)கள் மறைஞ்சிருக்குது ஆவி! ஒவ்வொண்ணா இனி வெளிவரும்... அதனால (சீக்கிரம் ஓடிருங்க& மை.வா.) ஆவலா காத்திருங்க! மிக்க நன்றி!
Deletelolzz haha
Deleteசூப்பருபா... இன்னாமா சொல்லிக்கின போ... சொம்மா "நச்சுன்னு நாய்க்குட்டி" மாறி கீதுபா...
ReplyDelete"நச்சுன்னு நாய்க்குட்டி" - கைக்கூ மாறி இத்து "நைய்க்கூ" வாத்யாரே...
ஆமா... இன்னாபா... நம்ப கடையாண்ட வந்து ரெம்ப நாளாச்சு...?
அல்லாம் போட்டாச்சு... போட்டாச்சு...
ஹைக்கூ எழுதச் சொன்னா நைக்கூன்னு புது அவதாரமே எடுக்கறியே நைனா... நீ உஸ்தாத்! என்னாது... உன் கடையாண்ட வரலையா? பேருக்கேத்த மாதிரி இப்படியா கேக்கறது? போய் நல்லாப் பாரு நைனா! கிள(ழ)வர் நைனா பகிர்வுல என் கருத்துப் பதிஞ்சு ரெண்டு நாளாச்சு! (சொந்த தளத்தை அடிக்கடி திரும்பிப் பாக்கற வழக்கமில்லையா என்ன?) படா டாங்ஸுப்பா!
Deleteகவிதை எழுத அருமையான ஐடியால்லாம் கொடுத்திருக்கார்.. படித்து விட்டு நிஜக் கவிதை எழுதலாம்னு வந்த என்னை ஏமாந்திட்டீங்களே சார். இருந்தாலும் நகைச்சுவைக் காலாய்த்தலுக்கு குறைவில்லை. நன்றி.
ReplyDeleteகலாய்த்தலை ரசித்த தோழி எழிலுக்கு மகிழ்வுடன் என் நன்றி!
Deleteஹாஹா அண்ணா செம அப்படியே உங்க கவிதைகளும் வாவ்... :P
ReplyDeleteஉன்னை மாதிரி நல்ல கவிதைகள் படைக்கிறவங்கல்லாம் கோவிச்சுக்காம இருக்கணுமேன்னு (கொஞ்சம்) பயந்துட்டேதான் இந்த நையாண்டிப் பகிர்வை வெளியிட்டேன். சிஸ். ரசிச்சுச் சிரிச்சதுல ஐ ஹேப்பி. என் இதயம் நிறை நன்றிம்மா!
Deleteஎன்னால் சிரிக்காமல் இதை வாசிக்க முடியவில்லை. ஹாஹாஹாஹா. சூப்பர்ங்க நீங்க
ReplyDeleteரசித்துச் சிரித்தீர்கள் என்ற விஷயமே எனக்கு மனநிறைவையும் மகிழ்ச்சியையும் தருகிறது. மிகமிக சந்தோஷத்தோட என் நன்றிம்மா விஜயலக்ஷ்மி!
Deleteஹா... ஹா... இதோ நானும் கிளம்பிட்டேன் - யார் யார் நீங்கள் சொல்வது போல் எழுதுகிறார்கள் என்று...! ஹிஹி...
ReplyDeleteஅசத்துங்க வாத்தியாரே...!
யார் யார் எழுதுகிறார்கள் என்பதைத் துப்பறிந்து வாருங்கள் டி.டி. அசத்த வாழ்த்திய உங்களுக்கு மகிழ்வுடன் என் நன்றி!
Deleteமிக நகைச்சுவையோடு மட்டுமல்லாமல் மிக அருமையாகவும் பகிரிந்த பதிவு..பாராட்டுக்கள்.
ReplyDeleteபாராட்டிய உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!
Deleteஎன்ன உங்க சகோ சசியையும் காணோம் உங்களையும் காணோம் என்று நினைத்து இருந்தேன் இப்ப தெரியுது நீங்க ஸ்பெஷல் க்ளாஸுக்கு போயிட்டு வந்து இருக்கிங்க....
ReplyDeleteஹி... ஹி... எல்லா பிஸியும் முடிஞ்சுருச்சு நண்பா... தோ சசியும் வந்தாச்சு என்கூடவே!
Deleteநீங்க சொன்ன முறைப்படி நானும் ஒரு கவிதை எழுதி இருக்கேன். படித்து எப்படி இருக்கு என்று சொல்லவும்
ReplyDeleteஐயோ கடவுளே,
நீ இருந்தா
இப்படி தொடர்ந்து
கஷ்டத்தைக் குடுப்பியா?
திருட்டுப் பய,
மொள்ளமாரிப் பயல்லாம்
நல்லா இருக்கான்.
நேர்மையா இருக்கற எனக்கேன்
இப்படி கஷ்டம்?'
கவிதை எழுத சாம்பிள் தந்தா, சாம்பிளையே கவிதையாக்கி அசத்திட்டீங்களே... பிரமாதமான(ண)வர்தான் நீங்க!
Delete
ReplyDelete///நல்ல கவிதை எழுதும் என் நண்பர்கள் அனைவரும் இதை ஒரு பகடியாக மட்டுமே எடுத்துக் கொணடு (முடிந்தால்) நகைக்க வேண்டுகிறேன்.///
முடியாவிட்டால் என்ன செய்யவேண்டும் என்று சொல்லவில்லையே
சொல்லணுமா என்ன...? கமெண்ட் பாக்ஸ்ல சொல்லியிருக்கற மாதிரி தலையில குட்டிட்டு ‘எஸ்’ஸாயிர வேண்டியதுதான்! (சரித்திரக் கதையை எள்ளல் நடைல எழுதினப்ப, சரித்திரக்கதை வாசகியான என் சித்திக்கு ரசிக்கலை... திட்டினாங்க. அதான் அந்த பின்குறிப்பை வெச்சேன்)
Deleteகவிதை எழுதுறது இம்புட்டு ஈசியா!?
ReplyDeleteஇதெல்லாம் என் மாதிரி ‘எல்’ போர்டு ஆசாமிகளுக்குத் தானேம்மா... நீ ஏற்கனவே நல்லா கவிதை எழுதறவளாச்சுதே...!
Deleteஇரசித்தேன்! சிரித்தேன் ! சுவைத்தேன் ! உரைத்தேன்!
ReplyDeleteநிறையத் ‘தேனை’ எனக்கு வழங்கிய உங்களுக்கு மகிழ்வுடன் என நன்றி ஐயா!
Deleteஹா..ஹா..இவ்ளோ சிம்பிளா கவிதை எழுதறது!
ReplyDeleteமனசு வெச்சா எல்லாமே சிம்பிள்தான்! ஹி... ஹி...!
Deleteமுன்னாடி நான் எடுத்த டியூசன்...!
ReplyDeleteகாதல் கவிதை முதல் கண்றாவிக் கவிதை வரை..எழுதுவது எப்படி..(கண்டிப்பாக 18+)
http://sengovi.blogspot.com/2011/04/18.html
நீங்க எடுத்த ட்யூஷனைப் பத்தித் தெரியாமயே நானும் டியூஷன் எடுத்துட்டனா? நீங்களும் நல்லாத்தேங் கிளாஸ் எடுத்திருக்கீங்க தலைவா... என் எழுத்தை ரசிச்சதோட உங்கள் பகிர்வையும் பகிர்ந்தமைக்கு மகிழ்வுடன் என் நன்றி!
Delete//பேக்கரில இருக்கறவன் ஸ்வீட் தின்ன மாட்டான், சமையல்காரன் தானே சமைச்சதை சாப்பிட மாட்டான். அது மாதிரிதான்... நானும்... ஹெஹ்ஹெஹ்ஹே..!// எனக்கு தெரியும் நீங்க மிகபெரிய கவின்னு.. ஆனா இம்புட்டு பெரிய கவின்னு தெரியாம போச்சு !!!
ReplyDelete‘கவி’ன்னு சொல்றதுல எதும் உள்குத்து இல்லையே... ஹி... ஹி...!
Deleteகவி க்கு இன்னொரு அர்த்தம் குரங்குன்னு சிஷ்யனுக்கு தெரியும் போல இருக்கு
Deleteவணக்கம்
ReplyDeleteஐயா.
கவிதை படைக்கு ஒவ்வொரு கவிஞனும் பயன்பெறும் வகையில் மிக அழகாக சொல்லியுள்ளிர்கள் வாழ்த்துக்கள் ஐயா
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
ஆஹா... கலாய்த்தலாக நான் சொல்லியதையும் சீரியஸாக எடுத்துக் கொண்டு வாழ்த்திய உங்களுக்கு என் உளம்கனிந்த நன்றி!
DeleteBe Careful!!!!! My fingers indicated to my chest and said this.
ReplyDeleteஹா... ஹா... ஹா... அவசியம் நீங்க உஷாரா இருக்க வேண்டியதுதான் மோகன்! நிறையக் கவிஞர்கள் இனி படையெடுப்பாங்க பாருங்கோ...!
Deleteபடா ஷோக்காயீக்குதுங்க!இவ்ளோ தான் மேட்ரா?கலக்கிப்புடுவோம்!!ஹி!ஹி!!ஹீ!!!
ReplyDeleteரசித்துப் படித்து, கலக்கத் தயாராகியிருக்கும் உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!
Deleteஇவ்ளோ சொல்லிட்டு கவிதை எழுத தெரியாதா.? உங்களுக்கு...
Deleteஇவ்ளோ சொல்லிட்டு கவிதை எழுத தெரியாதா.? உங்களுக்கு...
Deleteஇவ்ளோ சொல்லிட்டு கவிதை எழுத தெரியாதா.? உங்களுக்கு...
Deleteஅன்பின் பால கணேஷர்,
ReplyDeleteஇதுக்கு தான் புத்தகக்கண்காட்சிக்கு போனமா,நல்ல புக்கா நாலு வாங்கினமானு இருக்கணும், ஏதோ ஒர் இண்ஸ்டன்ட் கவிஞரோட புத்தகத்தை ஓசில கொடுத்தாரேனு வாங்கிப்படிச்சுட்டிங்க போல ,இந்த பாடு படுத்துறிங்க அவ்வ்!
எதுக்கும் ஜிப்பா போட்டாவங்கள பார்த்தால் ஒரு நாலு அடி தள்ளியே நில்லுங்க இல்லைனா கவித சொரம் அடிச்சாலும் அடிக்கும் அவ்வ்!
இப்படி சமகால நவீனக்கவிஞர்களீன் தொழில் ரகசியத்தை எல்லாம் வெட்ட வெளிச்சம் ஆக்கிட்டிங்களே,இத வச்சு தொழில் பழகிட்டு இன்னும் எத்தனப்பேரு கவித புத்தகம் போட கெளம்புவாங்களோ ,நெனச்சாலே கொல நடுங்குதுங்க்ணா அவ்வ்!
விடுங்க வவ்வால்... ஏற்கனவே நெறையப் பேரு கவிதை(ன்னு) எழுதி தமிழை கொலையாக் கொண்டுக்கிட்டு இருக்காங்க. இனிம புதுசா என்ன நடந்துறப் போகுது? எல்லாரும் பதிவின் நகைச்சுவையையும் கருத்தையும்(?) ரசிச்சா, நீங்க மட்டும்தான் மூலத்தைப் புடிச்சுட்டீங்க.... எனக்கேற்பட்ட பாதிப்புதான் காரணம்னு! அப்புறம்... காதைக் கிட்ட கொண்டு வாங்க... (அட, கடிச்சுர மாட்டேன்யா) கடைசில நீங்க சொன்ன மாதிரி ஒரு திகில் பயம் எனக்குள்ளயும் லேசா இருக்கத்தான் செய்யிது!
Deleteஹஹஹஹஹா......எப்படி சார் இப்படிலாம்... கவிதை எழுத கற்றுதரீங்கலா இல்லை கலாய்க்க கற்று தரிங்கலான்னு தான் டவுட்!!!!
ReplyDeleteசசி அக்காவ ஏதும் கிண்டல் பண்ணலியே!
சேச்சே... சசியைல்லாம் நான் கலாய்ப்பேனாம்மா... அதில்லை... நிஜமாவே இப்படித்தான் சில பேர் கவிதை எழுதறாங்களோன்னுட்டு ஒரு டவுட்டு. அதத்தான் பகிர்வா கொஞ்சம் மசாலா சேர்த்துப் போட்ருக்கேன். அம்புட்டுதேங்! தொடர்ந்து என்னை ஊக்கப்படுத்தும் உனக்கு மகிழ்வுடன் என் நன்றி!
Deleteகடைசியில் வைத்தீர்களே வெச்சீர்களே பன்ச்! ஸ்வீட் ஸ்டால் நடத்துறவன் ஸ்வீட் தின்னமாட்டான்னு! சூப்பர்! அருமையாக கலாய்த்துள்ளீர்கள்! நன்றி!
ReplyDeleteகலாய்த்தலை ரசித்து என்னை உற்சாகப்படுத்திய பிரதருக்கு என் மனம் நிறைந்த நன்றி!
Deleteஅருமையான பதிவு.வாழ்த்துக்கள். ஜனார்தனம்
ReplyDeleteஅருமையான பகிர்வென்று சொல்லி உற்சாகம் தந்த உங்களுக்கு என் உளம்கனிந்த நன்றி!
Deleteவலையுலக ஆம் ஆத்மி ஆச்சே நீங்கள் ,எளிமையாக விளக்கி விட்டீர்கள் !
ReplyDelete+1
ரசித்த உங்களுக்கு மகிழ்வுடன் என் நன்றி!
Deleteஉள்ளத்துல வச்சி, தூங்கிக்கிட்டிருக்கிற கவிஞர்களையெல்லாம் உசுப்பேத்தி விட்டுட்டீங்களே, இப்படி...
ReplyDelete'அது நம்மள நோக்கித்தான் வருது. எல்லோரும் ஓடுங்க...'
ஆமாங்க... கைல சிக்கிராதீங்க... ஓடிருங்க... ஹா... ஹா... ஹா... மிக்க நன்றி நண்பா!
Deleteஹா... ஹா... அண்ணா.
ReplyDeleteசும்மா போற போக்குல சொல்லிட்டுப் பொயிட்டிங்க போங்க...
இம்புட்டு ஈசியின்னா நாமளும் எழுதிப் பாக்கலாமோ...
எழுதிப் பாருங்க குமார்... தமிழுக்கு உஙகளால முடிஞ்ச சேவை(?) பண்ணுங்க... ஹா... ஹா...! ரசிச்சதுக்கு மிக்க நன்றி!
Deleteஹா ஹா ஹா அழுவதா சிரிப்பதா....! என்னே ஒரு விளக்கம் நகைசுவையோடு பாலர்பாடம் போல அழகாய் சொல்லி இருக்கீங்க
ReplyDeleteவாழ்த்துக்கள்
பயங்கொண் டெழுதினும் பண்புதவ றாமை
சயங்கொள் கவிக்கது சான்று !
அருமையாய் கவிக்கொரு விளக்கம் தந்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!
Deleteஅருமையான விளக்கம் இனி குரு நீங்கள்தான் அண்ணாச்சி!ஹீ
ReplyDeleteரசித்ததுக்கு மகிழ்வுடன் என் நன்றி நேசன்!
Deleteஐயா சாமி இந்தப் பக்கமா திரும்புங்க வேற ஒன்றுமே இல்லை
ReplyDeleteஉங்கள் காலைத் தொட்டுக் கும்புடணும் அவ்வளவு தான் ஹா ....ஹா ...ஹா .....
அருமையா கலாயிச்சிருக்கீங்க :)))))))) வாழ்த்துக்கள் ல்.
நீங்கள மிக ரசித்ததை உங்களின் வரிகள் உணர்த்துகின்றன. நான் மிகமிக மகிழ்வுடன் என் நன்றியை உங்களுக்கு சமர்ப்பிக்கிறேன்!
Deleteகவிதையும் ஜுனூன் தமிழையும் இணைத்தது சூப்பர்.
ReplyDeleteகவிதை எழுத நான் ரெடி.
எள்ளல் போல் இல்லை
ReplyDeleteநல்ல வழிகாட்டிப் பதிவாகத்தான் உள்ளது
பகிர்வுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
tha.ma 13
ReplyDeleteநான் சொல்வது கேட்டுநட.,சொல்வதைச் செய். செய்வதைப் படிக்காதே.
ReplyDeleteஆஹா... என்னமா க்ளாஸ் எடுக்கறீங்க வாத்யாரே.....
ReplyDeleteபல கவிஞர்கள் உருவாகப் போறாங்க! ம்ம்ம்ம்ம்...
புதுக்கவிதை, ஹைக்கு மட்டுமல்லாமல் மரபுக்கவிதையையும் எவ்வளவு எளிதாக எழுதக் கற்றுக்கொடுத்திட்டீங்க. வாசித்து ரசித்தேன் கணேஷ். இருந்தாலும் எங்களையெல்லாம் இப்படி கலாய்க்கக் கூடாது. :)
ReplyDelete(சிலர் கவிதை எழுதுவதைக்கூட பொறுத்துக்கொள்ளலாம். தமிழைக் கொல்வதைத்தான் பொறுக்கவே இயலாது.)
நல்ல பதிவு கணேஷ்...
ReplyDeletewww.writerkarthikeyan.blogspot.in
ஹாஹஹா! பார்த்தோம், வாசித்தோம்! ரசித்தோம்! சிரித்தோம்! ஓட்டும் போட்டோம்! என்ன?! தாமதமான ஓட்டு!
ReplyDeleteஐயகோ! என்று தலையில் அடித்துக் கொள்ள நினைக்கும் சீரியல் வசனங்கள் கூட கவிதையானது, கவிதையாக்கியது! அப்படியும் ஆக்க பூர்வமாக்கலாம் என்று கவிதை எழுதப் படிப்பித்தது மிக அருமை!
ரசனையான பதிவு! எத்தனை கவிஞர்கள் முளைத்தார்களோ!
இனி சீரியல் வசனங்கள் எல்லாம் கவிதையாகி விடும் என்று சொல்லுங்கள்!! சீரியல் பார்க்கும் பெண்கள், பதிவர்கள் எல்லாம் இனி நோட்டும் பேனாவும் கையுமாக உட்கார்ந்து விடுவார்கள்!! நல்லதொரு மாற்றம்! அழுகாச்சிக்கு பதிலாக மூளைக்கு வேலையும்!!!!!!
ReplyDeleteஎனக்கு தெரிந்து கவிதை உள்ளத்தில் பொங்கும் உணர்வுகளின் சங்கமம் என்றுதான் நினைத்து எழுதிகொண்டிருக்கிறேன் இப்படி ஒரு புது மாதிரியான இலக்கணம் இருப்பதை இப்பொழுதான் தெரிந்துகொண்டேன் ஆனாலும் என்னளவில் இதை பின்பற்றுவது சிரமம்தான் பாலா சார் ........
ReplyDeleteநகைப்பூட்டும் பதிவு என்று சொல்லியிருகிறீர்கள் சிரிக்க முயற்சி செய்கிறேன்
வணக்கம் சகோதரா !
ReplyDeleteஅடடா இதை எல்லாம் இவ்வளவு காலமும் மிஸ் பண்ணிட்டேனே.
சொலித் தந்து விட்டீர்கள் அல்லவா நீங்கள் எழுதவேண்டாம் வேடிக்கை மட்டும் பாருங்கள் நாங்கள் மிகுதியை பார்த்துக் கொள்கிறோம் சரிதானா.
அதற்காக நீங்கள் கெல்மெட் போடவேண்டாம்.
நன்றி வாழ்த்துக்கள்...!
தெளிவு பிறந்திடல் வேண்டி தெளியும்
ReplyDeleteமனவள வேள்வி நிலவும் அருகியது
வானில் உலவும் திசையென தாகி
துளிரும் உருகொணர் வேந்தே ...
ஹை நானும் எழுதறேன்... ஓட்டத்துக்கு வேண்டிய ஊட்டச்சத்து கொடுத்தீர்கள் நன்றி
ஆர்வமாக படித்த எனக்கு ஆப்பு வசிடிங்களே தலைவர
ReplyDeleteஜூனூன் தமிழ்.. கேள்விப்பட்டதேயில்லை.
ReplyDeleteஹிஹி.. உங்க அறிவுரையை பயன்படுத்தி ஒரு கவிதை எழுதிட்டு வரேன். ஹெல்மெட்டு மட்டும் உங்க தயவுல அனுப்பிருங்க.
\\\\ஆஹா... கலாய்த்தலாக நான் சொல்லியதையும் சீரியஸாக எடுத்துக் கொண்டு வாழ்த்திய உங்களுக்கு என் உளம்கனிந்த நன்றி!!////
ReplyDeleteஅப்போ இவ்வளவு நேரமும் பகிடியாகத்தான் எழுதினீர்களா? நானும் நிஜம் என்று அல்லவா நினைத்தேன் ஹா ஹா ... நலம் தானே சகோ வெகு நாட்களின் பின் வருகை மன்னிக்கவும் தொடர்கிறேன்....மிகவும் ரசித்தேன் வாழ்த்துக்கள் ...!
ஹா ஹா ஹா! ரசித்துச் சிரித்தேன். நல்ல நகைச்சுவை!
ReplyDeletereally super
ReplyDeleteSuper Sir .......Sirikka Sinthikka
ReplyDeleteகவித எழுதினது போதும், ஹைக்கூ வேனும், புதுக்கவி வேனும் தொல்ல பண்ணுறாங்கெ!😀
ReplyDeleteகவியை மடக்கி எழுதனும், சுறுக்கி எழுதனும் நகைச்சுவையுடன்😀 பகிர்ந்ததற்கு நன்றியைய்யா!
யானும் கவிதை எழுதுவது உண்மைதான் ஆனால் இப்படித்தான் எழுத வேண்டுமென்ற ஒரு அடிப்படை அல்லது ஒரு அத்திவாரத்தை இட்டுத்தந்த உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்
ReplyDeleteஎன் மனதில் தோன்றும் வரிகள் அனைத்தும் வேறு ஒருவர் எழுதி அதை படித்து மீண்டும் அவை என் நினைவில் வந்து அவற்றையே நான் எழுதுகிறேன் என்ற சந்தோகம் எனக்குள் தோன்றுகிறது...!!!
ReplyDeleteதல நான் எழுதியதை தயு கூர்ந்து படியுங்கள் . கவி என்னால் எழுத முடியுமா?
ReplyDeleteஅப்பாதுரை சொல்லி இங்கே வந்தேன்! :) ஹிஹிஹி, அப்போ நாம எழுதறது எல்லாமே கவிதைனு சொல்லுங்க! :)
ReplyDeleteUncle Super .....
ReplyDeleteபின்னிட்டிங்க உங்களின் facebook id ???
அங்க்கிளா...? ஹா.. ஹா.. ஹா... என் முகநூல் பெயர் கணேஷ் பாலா. https://www.facebook.com/ganesh.bala.714 என்பது.
Deleteஅங்க ரெக்கொஸ்ட் குடுத்தா இன்பாக்ஸ்ல ப்ளாக் படிச்ச விஷயத்தை சொல்லிடூங்க. உடன் அக்செப்ட்டட்.
அற்புத விளக்கம். நன்றி
ReplyDeleteநகையால் அளங்கரித்த
ReplyDeleteஅற்புத விளக்கம்
தங்களின் கவிவிளக்கம்
மகிழ்ந்தேன் ஐயா..
நல்லாதான் சொல்லிக்குடுக்குறீக கவிதை எழுத! இப்படி கலாய்ச்சு கவிதை எழுதிடுவேன் பிறகு நா.நீங்களே என்னை பாராட்டிப் பேச வரலாம் ! யாரு கண்டா?
ReplyDeleteஅப்டியே இந்த ஜூன் தமிழ்க் கவிதை சொல்லுங்க சார்!கேட்டு ரொம்ப நாளாச்சு!
நல்லாதான் சொல்லிக்குடுக்குறீக கவிதை எழுத! இப்படி கலாய்ச்சு கவிதை எழுதிடுவேன் பிறகு நா.நீங்களே என்னை பாராட்டிப் பேச வரலாம் ! யாரு கண்டா?
ReplyDeleteஅப்டியே இந்த ஜூன் தமிழ்க் கவிதை சொல்லுங்க சார்!கேட்டு ரொம்ப நாளாச்சு!
உங்கள் வார்த்தைகளுக்கு மிகவும் நன்றி தோழா... 👍
ReplyDelete