விடுமுறை நாட்கள் என்றால் பெரும்பாலான இல்லத்தரசர்கள் சோம்பலாக இருப்பார்கள்; இல்லத்தரசிகள் சுறுசுறுப்பாக இருப்பார்கள்- கணவர்களை வேலை வாங்குவதில்!
‘காலைல பத்து மணி வரைக்கும் குளிக்காம அப்படி என்னதான் டி.வி. பார்த்தாகறதோ?’ ‘இப்படி ஒரு எழுத்து விடாம பேப்பர் படிக்கற நேரத்துல உருப்படியா வீட்டுக்கு ஒட்டடை அடிச்சாத்தான் என்னவாம்?’ -இப்படியெல்லாம் கேள்விப் பந்துகள் பவுன்ஸாகி கணவர்கள் முகத்தில் வந்து மோதும். இவையெல்லாம் சராசரி மனைவிகளுக்கான லட்சணங்கள் என்றால் சரிதா அதற்கும் ஒருபடி மேலாச்சே.. அவள் பற்றாதென்று தீபாவளி சமயத்தில் மகளைப் பார்க்க வந்த அவள் அம்மாவும் சேர்ந்து கொண்டதில்... நான் ‘ஙே’ ஆனேன்.
‘‘என்னங்க.. இந்த முறை தீபாவளிக்கு ஸ்வீட்டும் காரமும் எங்கம்மாவே பண்ணிடறேங்கறாங்க. உடனே போய் அவங்க எழுதற லிஸ்ட் படி மளிகை சாமான்லாம் வாங்கிட்டு வந்துடுங்க...’’ என்று அருகில் வந்து ஐஸ் குரலில் சொன்னாள் சரிதா. கணினியில் கதை ஒன்றை டைப் செய்து கொண்டிருந்த நான் ‘திடுக்’ வாங்கி நிமிர்ந்தேன்.
‘‘ஹய்யய்யோ... சமைக்கற விஷயத்துல நீயே நல்லாப் பண்ணுவ. உங்கம்மா பண்ணினா டேஞ்சராச்சே! தலைதீபாவளி சமயத்துலயே உங்க வீட்டுக்குப் போனப்ப உங்கம்மா பண்ணின ஹல்வாவை வாயில போட்டதுல நாக்கே மேலண்ணத்துல ஒட்டிக்கிட்டு ‘ழே ழே’ன்னுல்ல உளற வேண்டியதாய்டுச்சு. நல்லவேளையா... காராபூந்தில ஆந்திரா ஸ்டைலயும் தாண்டி ஆங்காரமா காரம் போட்டிருந்ததால‘ ‘ஹா ஹா’ன்னு அலறி எட்டு டம்ளர் தண்ணி குடிச்சதுல நாக்கு சரியாச்சு. அதனால பிழைச்சேன். இப்ப இந்த ரிஸ்க் தேவைதானா சரி?’’ என்று மெல்லிய குரலில் கேட்டேன்.
‘‘பேசாதீங்க! அம்மா எவ்வளவு ஆசையா மாப்ளைக்கும் உனக்கும் நான் பண்ணித் தர்றேன்னு சொல்றாங்க. உங்களுக்கு எப்பவுமே எங்கம்மான்னா தொக்குதான். உங்க தங்கை வீட்லருந்து வந்த ஸ்வீட், காரத்தோட லட்சணத்தை நான் தனியாச் சொல்லணுமா என்ன...? அந்த மைசூர் பாக்குல...’’
‘‘சரி சரி... நான் கடைக்கு உடனே போறேன் சரி, லிஸ்ட்டைக் குடு...’’ என்று நான் எழுந்த நேரம் பார்த்துத்தானா கரண்ட் கட்டாக வேண்டும்? கும்மிருட்டு. தடுமாறியபடி என் செல்போனைத் தேடி நான் நடந்த நேரம், சரிதாவும் மெழுகுவர்த்தியைத் தேடி கைகளை நீட்டியபடி நடந்திருக்கிறாள் போலிருக்கிறது...அவளின் விரல் என் கண்ணில் பட்டு விட்டது. (நல்லவேளை... நகம் வளர்க்கும் பழக்கம் அவளுக்கில்லை).
‘‘ஆ...! என் கண்ணு! என் கண்ணு!’’ என்று புலம்பியபடி நான் கண்ணைப் பிடித்துக் கொள்ள... ‘‘போங்க மாப்ளை! நான் இருக்கும் போதே இப்படி என் மகளைக் கொஞ்சறீங்களே, எனக்கு வெக்கமா இருக்கு...’’ என்று குரல் கொடுத்தார் என் மாமியார் சமையல்கட்டிலிருந்து.
‘‘ஐயோ... ஐயோ...’’ என்று தலையிலடித்துக் கொண்டு குத்துமதிப்பாக ஹால் அலமாரியை அடைந்து துழாவினேன். செல் அகப்பட்டது. டார்ச்சைப் போட்டேன்.
ஃப்ரிட்ஜின் கதவைத் திறந்து அலமாரிக் கதவு என்று நினைத்து உள்ளே துழாவிக் கொண்டிருந்த சரிதா ‘ஙே’ என்று விழித்தாள் அவசரமாக அதன் கதவை மூடிவிட்டு வந்து அலமாரியிலிருந்து மெழுகுவர்த்திகளை எடுத்து ஏற்றினாள்.
காய்கறிகள் வாங்குவதைப் போலவே வீட்டுக்கு மளிகை சாமான்கள் சரியாக வாங்கி வருவதும் ஒரு கலைதான். எனக்கு அதில் சாமர்த்தியம் போறாது என்பது சரிதாவின் கணிப்பு. (எதில்தான் இருக்கிறதென்று ஒப்புக் கொண்டிருக்கிறாள்?) அவள் சொன்னபடி நான் வாங்கி வந்த மளிகை சாமான்களின் பேக்கிங்குகளைப் பிரித்தபடி கமெண்ட் அம்புகளை வீசிக் கொண்டிருந்தாள்.
‘‘நான் என்ன வாங்கறேன், என்ன பண்றேன்னு ஒரு தடவையாவது சமையல்கட்டுப் பக்கம் வந்திருந்தா தெரிஞ்சிருக்கும்... மிளகாய்ன்னு எழுதினா நீள மிளகாய் வாங்காம இப்படி குண்டு மிளகா வாங்கிட்டு வந்துட்டீங்களே.... இதை வெச்சு எப்படிச் சமைக்கிறதாம்? ’’
‘‘சரி, அடுத்த தடவை மிளகாய் வாங்கணும்னா உன்னைப் போல இருக்கக் கூடாதுன்றதை மனசுல வெச்சுக்கறேன்....’’ என்று சொல்லிவிட்டு உடனே குனிந்தேன். என் தலைக்கு மேல் பறந்த டம்ளர் சுவரில் மோதி விழுந்தது. ஹ! எந்த வார்த்தைக்கு என்ன ரியாக்ஷன் வரும்னு நமக்குல்லாம் அத்துப்படில்ல!
“என்னங்க இது...?” என்று கையில் எடுத்துக் காட்டினாள். “அதுவா...? குளியல் சோப்பு. அதுக்கென்ன..?” என்றேன்.
”நான் தேய்ச்சுக் குளிக்கற சோப் பிராண்ட் ------ தானே? இதை ஏன வாங்கினீங்க?” என்றாள் கோபமாக,
“அதுவா..? அதுல லெமன் ப்ளேவர் இல்லன்னான். அதான் சாதா வாங்கிட்டேன். ஒரே கம்பெனி தானே. விடு...” என்றேன்.
“என்னங்க இது.... இவ்வளவு அஸால்ட்டா சொல்றீங்க? நான் அந்த சோப்பைத்தான் ரெண்டு வருஷமா தேய்ச்சுக் குளிச்சுட்டிருக்கேன, தெரியுமா?” என்றாள் கோபமாக,
“எனக்குல்லாம் ஒரு சோப்பு ஒரு மாசம்தான்டி வருது. நீ எப்படி அதே சோப்பை ரெண்டு வருஷமா தேய்ச்சுக் குளிச்ச?” என்று அப்பாவியாக (முகத்தை வைத்துக் கொண்டு) கேட்டேன்.
உக்ரமானாள் சரிதா. “மாத்தி வாங்கறதையும் வாங்கிட்டு நக்கலா உங்களுக்கு? முதல்ல போய் இந்த ரெண்டு ஐட்டத்தையும் மாத்திட்டு வாங்க....” என்று அவள் கத்த. (வேறு வழியின்றி) மீண்டும் கடைக்குக் கிளம்பினேன் நான்.
மீண்டும் நான் வீடு திரும்பியபோது சரிதா வாசலிலேயே நின்று ஆர்வமாக என்னை எதிர்கொண்டாள். ‘‘என்னங்க... என் தம்பி போன் பண்ணினான். தீபாவளி முடிஞ்ச கையோட அவன் வைஃப் வீட்ல காசி டூர் போகப் போறாங்களாம். அம்மாவையும் கூட்டிட்டுப் போறேன்னு உடனே அனுப்பி வெக்கச் சொன்னான்’’ என்றாள்.
‘ஹையா... மாமியாரின் பலகாரத் தொல்லையிலருந்து தப்பிச்சுட்டோம்’ என்று நிம்மதி முகத்தில் படர, ‘‘இன்னிக்கு கெளம்பறதுக்கு பஸ், டிரெய்ன் எல்லாம் ஃபுல்லாயிருக்குமே சரிதா. ட்ரை பண்ணிப் பாக்கறேன்...’’ என்றேன். ‘‘வேண்டாங்க. நீங்க அம்மாவுக்கு ப்ளைட் டிக்கெட் புக் பண்ணிடுங்க...’’ என்றாள். பகீரென்றது எனக்கு. ‘‘அடியேய்... சென்னைலருந்து மதுரைக்கு ப்ளைட் டிக்கெட் என்ன செலவாகும் தெரியுமா? தீபாவளி போனஸ்ல கிரைண்டர் வாங்கணும்னு சொல்லிட்டிருந்தியே... அது பணால்தான்!’’ என்றேன்.

‘‘அதான் இல்ல... கிரைண்டர் கம்பெனில அதோட விலை அளவுக்கு ஏர் டிக்கெட்ல தள்ளுபடி தர்றாங்க. நமக்கு அந்தப் பொருள் இலவசமா கிடைச்ச மாதிரி ஆச்சு, ப்ளைட் டிக்கெட்டுக்கும் பாதி செலவுதானே ஆகும்னு எங்கம்மாதான் ஐடியா கொடுத்தாங்க...’’ என்றாள். ‘‘நாசமாப் போச்சு. பிஸினஸ் ட்ரிக் புரியாம பேசறியே... நான் இப்ப கிரைண்டருக்கும் செலவு பண்ணி, ப்ளைட் டிக்கெட்டுக்கும் செலவு பண்ணியாகணும்...’’ என்றேன் கோபமாக.
என் மாமியார், ‘‘சரி விடுடி சரிதா. நான் குடுத்து வெச்சது அவ்வளவுதான். ஒவ்வொருத்தர் மனைவியைச் சேர்ந்தவங்கன்னா எப்படித் தாங்கறாங்க தெரியுமா? நம்ம மூணாவது வீட்டு முரளி இருக்கானே....’’ என்று எடுத்துக் கொடுக்க, ‘‘ஆமாம்மா. இவருக்கு இவங்கம்மாவுக்குச் செய்யறதுன்னா மலை போனாலும் தெரியாது. நமக்குன்னா இலை போறதும் தெரிஞ்சிடும்...’’ என்று ஆலாபனை செய்து பெண்களின் மிகச் சக்தி வாய்ந்த ஆயுதத்தை (கண்ணீர்) என்மீது பிரயோகித்தாள்.
‘இந்த ஆஃபர் குடுக்கற கம்பெனிக்காரன் மட்டும் கைல கிடைச்சான்...’ என்று மனதினுள் சபித்தபடி, வழக்கம் போல் பின்வாங்கி, ‘‘சரி... சரி... உடனே அரேன்ஜ் பண்ணிடறேன் சரி...’’ என்றேன். மாமியார் சமையலறையினுள் போய்விட, சரிதா அருகில் வந்து, ‘‘டோண்ட் வொர்ரி. இந்த முறை டபிள் ஸ்வீட் பண்ணி அசத்திடறேன்...’’ என்று வெற்றிக் களிப்பில் சிரித்தாள்.
‘அதெப்படித்தான் ஒரே நிமிடத்தில் சிரிக்கவும் அடுத்த நிமிடத்தில் அழவும் இவர்களால் முடிகிறதோ?’ என்று எப்போதும் தோன்றும் வியப்போடு அவளிடம் சொன்னேன். ‘‘சரி... என் பக்கத்துல வந்து நின்னுட்டு, நான் சொல்றதைத் திருப்பிச் சொல்லு...’’ என்றேன்.
‘‘என்னங்க?’’ என்று அருகில் வந்து நின்றாள். ‘‘வாசிக்கும் அனைவருக்கும்...’’ என்று நான் சொல்ல... ‘‘புரிஞ்சு போச். நான் திருப்பிச் சொல்ல வேணாம். உங்களோட சேர்ந்து ஒரே குரல் சொல்லிடறேன்...’’ என்று விட்டு உற்சாகமாக ‘‘ஒன் டூ த்ரீ’’ என்று எடுத்துக் கொடுத்தாள்.
‘‘வாசிக்கும் அனைவருக்கும் நேசமுடன் எங்களின்
இதயம் கனிந்த தீபஒளித் திருநாள் நல்வாழ்த்துகள்!’’