Saturday, November 10, 2012

சுவை மிக்க சுட்ட பழங்கள்!

Posted by பால கணேஷ் Saturday, November 10, 2012

ரு பெண்மணி மிகப்பெரிய அலுவலகத்தில் பொறுப்பான பணியில் இருந்தார். சிறியதும் பெரியதுமாக அவ்வப்போது தவறுகள் செய்து மேலதிகாரியிடம் திட்டு வாங்குவார். ஒவ்வொரு முறையும் திட்டு வாங்கிக் கொண்டு கலங்கிய கண்களுடன் வந்து தன் இருக்கையில் அமரும் போது தன் கைப்பையைத் திறந்து ஒரு படத்தை எடுத்துப் பார்ப்பார். அவர் முகத்தில் புன்னகை ததும்பும். சுறுசுறுபபாக வேலை பார்க்க ஆரம்பித்து விடுவார்..

இதை நெடுநாட்களாக கவனித்து வந்த பக்கத்து இருக்கைப் பெண்மணி ஒருநாள் மானேஜரிடம் திட்டு வாங்கிக் கொண்டு அந்தப் பெண்மனி புகைப்படத்தை எடுக்கும்போது எழுந்து வந்து விட்டார், “இப்படி கஷ்டமான நேரங்களில் எல்லாம் உங்களை உற்சாகப்படுத்தும் படம் எந்தக் கடவுளுடையது என்று தெரிந்து கொள்ளலாமா?” என்று கேட்டபடி அவர் கையிலிருந்த படத்தைக் குனிந்து பார்த்தார். வியந்து போனார், அது அந்தப் பெண்மணியின் கணவரின் படம்,

“அட. கடவுளின் படத்தைப் பார்த்து ஆறுதலடைவதைவிட கணவரின் படத்தைப் பார்த்து ஆறுதலடைகிறீர்களா? கடவுளைவிடக் கணவர்தான் பெரிது போலிருக்கிறது” என்று உருகிச் சொல்ல. திட்டு வாங்கிய பெண் இடைமறித்துச் சொன்னாள், “அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை, அவர் என்னைத் திட்டும் வசவு வார்த்தைகளுடன் ஒப்பிடும் போது இங்கு வாங்கும் திட்டெல்லாம் சர்வ சாதாரணம். ஒவ்வொரு முறை திட்டு வாங்கி மனம் சஞ்சலப்படும் போதும் அவர் படத்தை எடுத்துப் பார்ப்பேன், அப்போது இதெல்லாம் ஒன்றுமேயில்லை என்று மனம் சமாதானமாகி விடும்.” என்றாள். இந்தப் பெண் ‘ஙே!’

============================================

“ஏம்ப்பா ஆபரேஷன் தியேட்டர்லருந்து தலைதெறிக்க இப்படி ஓடி வர்ற?”

”நர்ஸ் ஆறுதல் சொன்னாங்க - சின்ன ஆபரேஷன் தானே... பயப்படாதீங்க. சுலபமாப் பண்ணிடலாம் - அப்படின்னு...”

“நல்லதைத்தானே சொல்லியிருக்காங்க?  அதுக்கு ஏன்டா இப்படி ஓடி வர்ற?”

“அட்,. நீங்க வேற... அவங்க ஆறுதல் சொன்னது எனக்கில்லைங்க. டாக்டருக்கு. அவருக்கு இது முதல் ஆபரேஷனாம்...”

============================================

மெரிக்காவில் நாய்களுக்கான உணவு தயாரிக்கும பெரிய நிறுவனம் ஒன்றின் விற்பனை சரியாக இல்லை. எனவே விற்பனைப் பிரதிநிதிகளுக்கு உத்வேகமூட்டுவதற்காக ஒரு சுயமுன்றேற்றப் பயிற்சியாளர் அழைக்கப்பட்டார். அவர் விற்பனைப் பிரதிநிதிகளின் மனதில் நிறுவனம் பற்றிய பெருமித உணர்வைத் தூண்டிவிட வேண்டும் என்று திட்டமிட்டு கேள்வி கேட்டார்.

“அமெரிக்காவில் நாய் உணவு தயாரிப்பில் மிகப் பெரிய நிறுவனம் எது?” பதில் வந்தது - “நாம்தான்”

”நாய் உணவுத் தயாரிப்புக்கு அதிகமான அளவில் விளம்பரம் செய்பவர்கள் யார்?” பதில் வந்தது - ”நாம்தான்”

“நாய் உணவில் வசீகரமான சலுகைகளைத் தருபவர்கள் யார்?” பதில வந்தது - “நாம்தான்”

பயிற்சியாளர் கேட்டார்  “அப்படியானால் நாம் ஏன் நம் தயாரிப்பை இன்னும் நன்றாக விற்பனை செய்யவில்லை?” பலத்த அமைதிக்குப் பின் ஒரு குரல் எழுந்தது. “ஐயா. இந்தப் புள்ளிவிவரங்கள் எல்லாம் நமக்குத தெரியும், நாய்களுக்குத தெரியாது, அவற்றுக்கு நம் தயாரிப்புகள் பிடிக்காததால் முகர்ந்து பார்த்துவிட்டு நகர்ந்து விடுகின்றன”, பயிற்சியாளர் ‘ஙே’ என்று விழித்தார். தரத்தில் கவனம் செலுத்தாத தயாரிப்புகளுக்கு எத்தனை விளம்பரங்கள் செய்தாலும் எடுபடுமா என்ன?

============================================

திருவாரூரில் கிருபானந்த வாரியார் பாரதக் கதை சொல்லிக் கொண்டிருந்தார், சகாதேவன் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தார், “சகாதேவன் கடைசிப் பிள்ளை, அவன் சிறந்த ஞானி. பொதுவாகவே கடைக் குட்டிகள் சிறந்த ஞானியாக இருப்பார்கள், காரணம் அப்பனுக்கு ஞானம் வந்த பிறகு பிறக்கிறவன் கடைக்குட்டிப் பிள்ளை, அல்லது இவன் பிறந்த பிறகு அப்பன் ஞானியாகி விடுவான், என்ன ஞானம்? இனிமேல் குழந்தை பெறவே கூடாது என்ற ஞானம்,”

இப்படி விளக்கிய வாரியார். “இங்கே யாராவது கடைக்குட்டிப் பிள்ளைகள் இருக்கிறீர்களா?” என்று கேட்டார், பத்துப் பதினைந்து சிறுவர் சிறுமிகள் கை தூக்கினார்கள். வாரியார் வாயைப் பொத்திக் கொண்டு சிரித்துவிட்டு. “உக்காருங்க... யார் எந்த விஷயத்துல முடிவு செய்யறதுன்னு விவஸ்தையே கிடையாதா? அப்பா அம்மா என்ன முடிவுல இருக்காங்களோ? வீட்டுக்குப் போய் உதை வாங்காதீங்கப்பா...” என்றார், கூட்டடத்தினர் அனைவரும் வாய்விட்டுச் சிரித்தார்கள்.

============================================

சிரியர் : “நான் வரும் வழியில் ஒரு வண்ணான் தன் கழுதையைப் போட்டு அடிச்சுக்கிட்டு இருந்தார். நான் கஷ்டப்பட்டு அவரைத் தடுத்து நிறுத்தினேன். என் கிட்ட இருந்த பண்புக்கு என்ன பெயர் என்று சொல்லுங்கள் பார்க்கலாம்,

மாணவர் : சகோதர பாசம் அல்லது இனப்பற்று சார்!

============================================

மேலே நீங்கள் படித்த அனைத்தும் “சொன்னார்கள... சொன்னார்கள்... சொன்னார்கள்..!” என்ற புத்தகத்திலிருந்து சுடப்பட்டவை. எழுதியவர் : சுகி சிவம்,

============================================

62 comments:

 1. அனைத்தும் ஹா... ஹா...

  முக்கியமாக டாக்டர் ஜோக்ஸ், வாரியார் அவர்களின் பதில்...

  சுட்டுக் கொடுத்ததற்கு நன்றி...
  tm2

  ReplyDelete
  Replies
  1. ரசித்துப் படித்த உங்களுக்கு மகிழ்வுடன் என் நன்றி.

   Delete
 2. நகைச்சுவையில் கிருபானந்த வாரியாரை மிஞ்சிய ஆள் இல்லை. அவரை சில முறை தரிசித்த பேறு பெற்றிருக்கிறேன். ஆனா, அப்போது சின்ன பிள்ளையா இருந்ததால்! அவர், சொற்பொழிவை ரசித்து, மனசுல உள்வாங்கிக்கலை!:-(

  ReplyDelete
  Replies
  1. வாரியாரின் பேச்சை இப்போது ரசித்த தங்கைக்கு என் இதயம் நிறைந்த நன்றி.

   Delete
 3. சுட்டாலும் சங்கு வெண்மைதரும்-னு கே.பி.சுந்தராம்பாள், sorry, ஔவையார் சொல்லியிருக்காங்க! சுட்டாலும் எல்லாம் ஜோக்குமே நல்லாயிருக்கு! ஆனா, வாரியார் சொன்னதுதான் டாப்! :-)

  ReplyDelete
  Replies
  1. ஹா... ஹா... ஹா.. கருத்தைக் கூட நகைச்சுவை கலந்து சொல்ல உங்களால தாண்ணா முடியும். ரசித்துப் படித்த உங்களுக்கு என் மனம் நிறை நன்றி.

   Delete
 4. ///சொன்னார்கள... சொன்னார்கள்... சொன்னார்கள்..!” என்ற புத்தகத்திலிருந்து சுடப்பட்டவை. எழுதியவர் : சுகி சிவம்,///

  நீங்கள் நேர்மையானவர் எங்கிருந்து சுட்டீர்கள் என்பதை சொல்லிவிட்டீர்கள் ஆனால் சுகி சிவம் நெட்டில் சுட்டது என்று எங்கும் சொல்லிருக்க மாட்டார் என்பது நிச்சயம்.

  ReplyDelete
  Replies
  1. அந்தப் புத்தகத்தில் ‘தொகுப்பு’ என்ற வார்த்தை பயன்படுத்தப்படவில்லை நண்பா. போகட்டும்.. இதை ரசித்துப் படித்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.

   Delete
 5. கலக்கல் சமாச்சாரம் நன்று,மீண்டும் கலக்குங்க!

  ReplyDelete
  Replies
  1. கலக்கல் என்று சொல்லி ரசித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

   Delete
 6. திருட்டு மாங்காய் தான் ருசிக்கும் என்பது போல
  சுட்ட பழப் பதிவு மிகவும் சுவை ! வாழ்த்துக்கள் !

  ReplyDelete
  Replies
  1. சுட்ட பழங்களை ரசித்துப் படித்த உங்களுக்கு என் மனம் நிறை நன்றி.

   Delete
 7. ''..(வாரியாரை).அவரை சில முறை தரிசித்த பேறு பெற்றிருக்கிறேன். ஆனா, அப்போது சின்ன பிள்ளையா இருந்ததால்! அவர், சொற்பொழிவை ரசித்து, மனசுல உள்வாங்கிக்கலை!:-(Raji's line)
  நல்லா சுடுது பழம்...
  ஒரே சிரிப்பு போங்க.!
  மிக்க நன்றி.நன்றி ...நன்றி.
  வேதா. இலங்காதிலகம்...

  ReplyDelete
  Replies
  1. சிரித்து ரசித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

   Delete
 8. கலக்கல் சார்......
  இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. கலக்கல் என்று சொல்லி மகிழ்வு தந்த உங்களுக்கு என் மனம் நிறைய நன்றி.

   Delete
 9. இதே ஜோக் பெண்டாட்டி படத்தை ஆபீசில் வைத்திருப்பதற்காக bob hope சொல்லியிருக்கிறார். 'softens the disgrace and insult of working here'..

  ReplyDelete
  Replies
  1. அட. இது ஒரு வியப்புத் தகவல்தான் எனக்கு, அந்த புத்தகம் பூராவுமே தொகுப்புதான் போலருக்கு. ஆனாலும் நல்லா இருந்துச்சு அப்பா ஸார். உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

   Delete
 10. ரசிக்கும் படி அழகிய தொகுப்பு...

  ReplyDelete
  Replies
  1. தொகுப்பை ரசித்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி நண்பா.

   Delete
 11. \\“அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை, அவர் என்னைத் திட்டும் வசவு வார்த்தைகளுடன் ஒப்பிடும் போது இங்கு வாங்கும் திட்டெல்லாம் சர்வ சாதாரணம்.\\ ஒரு சிறு திருத்தம்: பொத்துவில இருக்கும் இந்த மனுஷன் என்கிட்ட வாங்குற திட்டுக்கு இதெல்லாம் சாதாரணமப்பா.................

  ReplyDelete
  Replies
  1. அட. இந்தக் கோணத்துல சொன்னாலும் நல்லாத்தாங்க இருக்கு. ரசித்துப் படித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

   Delete
 12. Replies
  1. சுவையை ரசித்த உங்களுக்கு என் மனம் நிறை நன்றி.

   Delete
 13. Replies
  1. பழத்தின் இனிப்பை ரசித்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி நண்பரே.

   Delete
 14. அடடா எல்லாம் கலக்கல்.. கடைக்குட்டி இன்னும் கலக்கல்

  ReplyDelete
  Replies
  1. கடைக்குட்டியை ரசித்து மகிழ்ந்த உங்களுக்கு உவப்புடன் என் நன்றி பிரதர்.

   Delete
 15. அட பாவமே....
  அந்தப் பெண்மணி அவரின் கணவரிடம்
  அவ்வளவு திட்டுகளா வாங்கி இருக்கிறார்..
  கொடுமை தான்....

  சொல்லின் செல்வரின் துணுக்குகள் அல்லவா..
  அதான் நச்சென்று இருக்கிறது....

  ReplyDelete
  Replies
  1. நச்சென்று இருந்தவற்றைப் படித்து ரசித்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி மகேன்.

   Delete
 16. ‘சுட்ட’ பழங்கள் அனைத்தும் இனித்தன.அதிலும் அந்த நாய் உணவு தயாரித்த நிறுவனம் பற்றிய துணுக்கு அருமை!

  ReplyDelete
  Replies
  1. நானும் மிக ரசித்த துணுக்கு அது. படித்து ரசித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

   Delete
 17. Replies
  1. ரசித்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.

   Delete
 18. சுட்ட பழங்கள் சுவையோ சுவை! இன்னும் இன்னும் என்று கேட்க வைக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. ரசித்துப் படித்து இன்னும கேட்ட உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

   Delete
 19. சுட்ட பழம் தான் டேஸ்டாயிருக்கும்னு சொல்வாங்க...எல்லா ஜோக்ஸும் நல்லாயிருந்தது. குறிப்பாக கிருபானந்தவாரியார் ஜோக்கை ரசித்தேன். :)

  ReplyDelete
  Replies
  1. வாரியார் எல்லாருக்கும பிடித்தமானவராக இருக்கிறார். அனைத்தையும் ரசித்த உங்களுக்கு என் மனம் நிறை நன்றி.

   Delete
 20. சுவையான கதைகள்! சம்பவங்கள்! அருமையான தொகுப்பு! மிக்க நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தொகுப்பை ரசித்த உங்களுக்கு என் இதய நன்றி.

   Delete
 21. அந்த பெண்மணி கணவரிடம் அவ்வளவு திட்டு வாங்கியிருக்க மாட்டாங்க. அந்த கொடுமைய பார்த்துட்டு இந்த கொடுமை எவ்வளவோ மேல்னு நினைச்சிருப்பாங்க.நாய் ஜோக் ரொம்ப சூப்பர். அப்படிதான் ஒருமுறை நான் சமைச்சதில மிச்சமான போது தெரு ஓரம் கிடந்த நாய்க்கு பரிதாப பட்டு போட்டேன்ங்க.. அந்த நாய் முகர்ந்து பார்த்துட்டு போயிடுச்சு.. அப்ப எங்க வீட்ல அவர் என்னை ஒரு பார்வை பார்த்தார் பாருங்க.. கொலஸ்ட்ரால் பிடிச்ச நாய்னு திட்டிட்டே உள்ளே வந்தேன்.. நாயைத்தான்..!

  ReplyDelete
  Replies
  1. அடாடா... கடைசில ஒரு பன்ச் கொடுத்தீங்களே... திட்டினது நாயைத்தான்னு, சூப்பர். ரசித்துப் படித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

   Delete
 22. ரசனையான பகிர்வு.

  ReplyDelete
  Replies
  1. ரசனையாய் படித்து ரசித்த உங்களுக்கு என் மனம் நிறை நன்றி.

   Delete
 23. ரசித்தேன். குறிப்பாக வாரியார்! நன்றாக வாரினார்!

  ReplyDelete
  Replies
  1. வாரியாரை சிறப்பாக ரசித்து மற்றவற்றையும் ரசித்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.

   Delete
 24. சுட்ட பழங்களின் சுவையில் மயங்கினேன்
  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
  இனிய தீபாவளித் திரு நாள் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. சுட்ட பழங்களை ரசித்து என்னை வாழ்த்திய உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும என் இதயம் நிறைந்த இனிய தீபஒளித் திருநாள் நல்வாழ்த்துகள்.

   Delete
 25. வாரியார் அவர்களின் நகைச்சுவை எப்போதுமே 'குபீரென' சிரிக்க வைக்கும். சின்ன வயதில் பல முறை கேட்டிருக்கிறேன்.

  சுட்ட பழத்திற்கு மகுடம் வாரியாரின் நகைச்சுவை.

  ReplyDelete
  Replies
  1. நகைச்சுவையை ரசித்த உங்களுக்கு என் மனம் நிறை நன்றிம்மா.

   Delete
 26. படித்து, ரசித்து, சிரித்தேன். நன்றி!

  இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. ரசித்துப் படித்து மகிழ்ந்த உங்களுக்கு நன்றி மற்றும என் இதயம் நிறைந்த இனிய தீபஒளித் திருநாள் நல்வாழ்த்துகள்.

   Delete
 27. சொன்னர்கள் சொன்னார்கள்....கேட்ட என் ஃப்ரெண்ட் சொன்னார்கள் சிரித்தபடி நாமும் கேட்டோம் !

  அன்பான தீபாவளி வாழ்த்துகள் ஃப்ரெண்ட்.விட்ட பதிவுகளை ஒரு கண்ணோட்டம் விடுகிறேன் !

  ReplyDelete
  Replies
  1. ம்ம்ம்... நீண்ட நாள் வராட்டாலும இப்ப என் பழய பதிவுகளை படிக்கறேன்னு சொல்றது... அதான் ஃப்ரெண்ட்ங்கறது, உங்களுக்கும் மனசு நிறைய சந்தோஷததோட என் தீபஒளித் திருநாள் நல்வாழ்த்துகள்.

   Delete
 28. சுருக்கமாய்ப் பாராட்டிய உங்களுக்கு என் மனம் நிறைந்த ந்ன்றி.

  ReplyDelete
 29. மிக இனிப்பான சுட்ட பழங்கள்.ஜமாய்த்து விட்டீர்கள்.

  சுகி சிவம் நல்ல மேடை பேச்சாளர் என்பதால் அவருடையது ஒரு வியாசம் எழுதும் பாணி.நகைச்சுவை துணுக்குகளில் ஒரு வார்த்தை அதிகமானாலும் அதன் வீரியம் குறைந்து விடும்.

  உதாரணத்திற்கு வாரியார் சுவாமிகள் உரையை நானும் கேட்டிருக்கிறேன்.நடு நடுவே கேள்வி கேட்டு சரியான பதில் அளிக்கும் சிறார்களுக்கு உடனடியாக பரிசு வழங்குவது அவர் பழக்கம்.இதற்கென்றே அவர் உபன்யாச நிகழ்ச்சியில் சிறுவர் கூட்டம் அதிகமாக காணப்படும்.உண்மையில் இந்த நிகழ்வு எப்படி இருக்குமென்றால்,
  “இங்கே யாராவது கடைக்குட்டிப் பிள்ளைகள் இருக்கிறீர்களா?” என்று கேட்பார், பத்துப் பதினைந்து சிறுவர் சிறுமியர் கை தூக்கிவார்கள். வாரியார் வாயைப் பொத்திக் கொண்டு குறும்பாக சிரித்துவிட்டு. “அதை எப்படி நீங்களே முடிவு செய்யலாம்? ” என்பார், கூட்டத்தினர் அனைவரும் கைதட்டி சிரிப்பார்கள்.

  இன்னொரு உதாரணம் தருகிறேன்:

  இங்கிலாந்து பிரதமராக சர்ச்சில் இருந்தபோது,அவர் தன் கரியதரிசியுடன் ஒரு முக்கிய விவாதத்தில் ஆழ்ந்திருந்தார்.அப்பொழுது பக்கத்து அறையிலிருந்து யாரோ மிக உரத்த குரலில் உரையாடுவது கேட்டு அவர் முகம் சுளித்தார்.உடனே சென்று காரணம் அறிந்து திரும்பிய அவர் உதவியாளர்,"நம் வெளிநாட்டு காரியதரிசிதான் ஸார்!வாஷிங்டனில் உள்ள தன் சக அமெரிக்க காரியதரிசியுடன் பேசிக்கொண்டிருக்கிறார்!"என்று சொல்ல,சர்ச்சிலும்,"அவரை தொலைபேசியை பயன்படுத்த சொல்லுங்கள்!"என்று பதிலளித்தாராம்.

  இதையே சுகி சிவம் பாணியில் சொல்வதென்றால்,
  "அவர் ஏன் இப்படி கூச்சலிடவேண்டும்? தொலைபேசியை பயன்படுத்தி பேசட்டுமே!மற்றவர்களுக்கு இடைஞ்சல் இல்லாமல் இருக்குமில்லையா?"என்று பதிலளித்தாராம்.
  என சொல்லவேண்டும்.

  சமீபத்தில் நான் படித்த சிறந்த உதாரணத்தை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்:
  நீலமலை திருடன் படத்தில் அஞ்சலி தேவியிடம் காதல் காட்சியில் ரஞ்சன் பேசும் ஒரு வசனம்-
  " நீ சொல்றது எப்படி இருக்கு தெரியுமா ? நாக்கை அறுத்து போட்டுட்டு பாயாசத்தை குடிச்சு பாரு ன்னு சொல்ற மாதிரி இருக்கு! மூக்கை அறுத்து போட்டு ரோசா பூவை மோந்து பாருன்னு சொல்ற மாதிரி இருக்கு!"
  காதல் வசனம் !!
  மேற்கண்ட துணுக்கில் காதல் வசனம் என்ற இரு வார்த்தைகளுக்கு மேல் ஒரு சொல் எழுதினாலும் இதன் வீரியம் குறைந்துவிடும்.அதை அறிந்து அத்துடன் நிறுத்தியுள்ளார் இதை எழுதிய மேதை திரு.R.P.ராஜநாயஹம்.Brilliant sense of humour!

  பால கணேஷ் உள்ளிட்ட அனைத்து நண்பர்களுக்கும் என் உளங்கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 30. சுட்ட பழம்.....

  எங்கள் மனதினை தொட்ட பழம்..... :)

  ReplyDelete
 31. சுட்ட பழமாக இருப்பினும் வாய்விட்டு சிரிக்க வைத்தது. குறிப்பாக நாய் பற்றியது

  ReplyDelete
 32. ஹாஹாஹா... நாய் மேட்டர்தான் எனக்கு ரொம்ப பிடிச்சது! எப்டில்லாம் யோசிக்கிறாங்கப்பா! சுட்ட பழம் சூப்பர் சார்!

  ReplyDelete
 33. Sir I am back now. Immediately I opened your blog and read this article. Very nice interesting and hilarious. Keep it up.

  ReplyDelete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
 • Youtube