சமீபத்தில் புத்தகக் கண்காட்சிக்குப் போகும் வழியில் பல இடங்களில் ‘வைரமுத்துவின் 37 புத்தகங்கள்’ என்று போட்டு ஸ்டால் எண்களைத் தெரிவித்த போஸ்டர்கள் கண்ணில் பட்டன. சிந்தனை முகமாய் புத்தகத்தைப் புரட்டியபடி கவிஞர் வைரமுத்துவின் புகைப்படம் அச்சிட்டிருந்த அந்த போஸ்டர்களில் ‘தமிழின் நிகழ்காலம்’ என்று வைரமுத்துவைப் புகழ்ந்திரு்ந்தார்கள். ‘‘அடாடா... வைரமுத்து ஸார் தமிழின் நிகழ்காலம்னா, ‘அவர்’ கடந்த காலம்னு இவங்களே ஒத்துக்கறாங்களா...?’’ என்று கேட்டது மனஸ். ‘‘தெரியலையேப்பா... தெரியலையே...’’ என்று சிவாஜி குரலில் பதிலளித்தேன் நான்.
=======================================
சமீபத்தில் ரசித்த சர்தார்ஜி ஜோக்: ரயில் நிலையம் பரபரப்பாக காணப்பட்டது. திடீரென்று எட்டு சர்தார்ஜிகள் ரயில் வரும் சமயம் பிளாட்பாரத்திலிருந்து தண்டவாளத்தில் பாய்ந்து தற்கொலைக்கு முயன்றிருக்கிறார்கள். அதில் இரண்டு பேர் மீது ரயில் ஏறிவிட்டது. மற்றவர்களை கைது செய்திருக்கிறார்கள். செய்தி சேகரிக்க வந்த பத்திரிகை நிருபர், பிளாட்பாரத்தில் குப்புறப் படுத்திருந்த ஒரு சர்தார்ஜியை எழுப்பிக் கேட்டான். ‘‘அவங்க ஏன் தற்கொலைக்கு முயற்சி பண்ணினாங்க?’’
‘‘தற்கொலையா? அதெல்லாம் ஒண்ணுமில்ல... ரயிலுக்காக வெயிட் பண்ணிட்டிருந்தப்ப, அனவுன்ஸ்மென்ட்ல ‘ரயில் முதலாவது பிளாட்பாரத்திற்கு வந்து சேரும்’னு சொன்னதும், இவங்க பயந்து போய் பி்ளாட்பாரத்துல இருந்தா ரயில் மோதி செத்துருவோமேன்னு தண்டவாளத்துக்கு பாய்ஞ்சுட்டாங்க...’’ என்றார்.
நிருபர் வியப்புடன், ‘‘அவங்க எல்லாம் முட்டாள்களா இருந்தாலும் நீங்க ஒருத்தராவது புத்திசாலியா நடந்துக்கிடடீங்களே...’’ என்றார். சர்தார்ஜி சோகமாக, ‘‘நீங்க வேற ஸார்... நான்தான் உண்மையில தற்கொலை பண்ணிக்க வந்தவன். அனவுன்ஸ்மென்டை கேட்டதும் ரயில் என்மேல ஏறட்டும்னு குப்புறப் படுத்துட்டேன். அந்த பாழாப் போன ரயில் அவுங்க சொன்னபடி பிளாட்பாரத்துல வராம, தண்டவாளத்துல வந்து ஏமாத்திடுச்சு...’’
=======================================
சமீப்த்தில் டீக்கடையில் கேட்ட உரையாடல்:
‘‘ஹும்! சேவை வரியை ரத்து செய்யணும்னு கோரி சினிமா உலகத்தைச் சேர்ந்தவங்க உண்ணாவிரதம் இருக்காங்களாம். அவங்க ப்ளாக் மணி வெச்சுக்காம இருந்தாலே அரசாங்கத்துக்கு நிறைய வரி கட்டலாமே...’’
‘‘நானும் அந்த நூஸைப் பட்ச்சேம்ப்பா. ஒரு விஸ்யம் புரில எனுக்கு.,.. அதின்னாது அது சேவை வரி?’’
‘‘அது ஒண்ணுமில்ல தம்பி. படம் பாக்கற நாமல்லாம் கேளிக்கைய அனுபவிக்கறோம்கறது்க்காக டிக்கெட்லயே கேளிக்கை வரி செலுத்தறோம்ல. அதுமாதிரி... அவங்க சேவை வரின்னு ஒண்ணு அரசாங்கத்துக்க கட்டணு்ம். அதை விதிக்கக் கூடாதுன்ற கோரிக்கைகாகத்தான் உண்ணாவிரதம்.’’
‘‘நான் ஒண்ணும் கேளிக்கை வரி கட்டறதில்லையேப்பா...’’
‘‘நீ தனியா கட்ட வேணாம். படம் பாக்கற ஒவ்வொருத்தரையும் தேடிப் பிடிச்சு வரி வசூலிக்க முடியாதுன்னுதான் அரசாங்கம் சினிமா டிக்கெட்லயே அதைச் சேர்த்திருக்கு. டிக்கெட் விற்பனைலருந்து தியேட்டர்காரங்க அதைக் கட்டிருவாங்க...’’
‘‘ஓ... அப்படியா விஸ்யம்? ஆனா ஒண்ணு புரியலப்பா... நாம கேளிக்கைய அனுபவிக்கறோம், அதனால கேளிக்கை வரி செலுத்தணும். அதான் ஞாயம். ஆனா இவங்கதான் யாருக்கும் எந்த சேவையும் செய்யலையே... அப்புறம் இன்னாத்துக்கு இவுங்க மேல சேவை வரி? அதான் நீக்கச் சொல்லிப் போராடறாங்க அல்லாரும். ரொம்பக் கரீக்டுப்பா...’’
=======================================
சமீபத்தில் படித்ததில் ரசித்தது:
அந்த விமானத்தில் வந்தவர்களனைவரும் வெளியே போய் விட்டார்கள்- ஒரே ஒருவரைத் தவிர. நாலு கெளண்ட்டர் தள்ளி ராஜீவ்காந்தியின் இரு பெரிய பெட்டிகள், கைப்பைகள் திறக்கப்பட்டு, உள்ளேயிருந்த துணிமணிகள், சாமான்களெல்லாம் வெளியே வாரியிறைக்கப்பட்டிருந்தன. அங்கே இருந்த சோதனை அதிகாரி பெட்டியில் இன்னும் ‘எதையோ’ தேடிக் கொண்டிருந்தார். ஒரு மணி நேர வதக்கலுக்கப்புறமும் ராஜீவின் முகத்தில் புன்னகை மாறவில்லை. ஆபீஸர் பார்த்த சாமான்களை திரும்பத் திரும்ப பார்த்துக் கொண்டிருந்தார். அவர் கேட்கும் கேள்விகளுக்கு ராஜீவ் பொறுமையாக பதிலளித்துக் கொண்டிருந்தார்.
கண்ணாடிச் சுவர் வழியாகப் பார்த்துக் கொண்டிருந்த எனக்குப் பொறுக்கவில்லை. ‘‘என்னடா இது... இரண்டு மணி நேரமா அவர் பொட்டியில எனு்னடா தேடறீங்க. அவர் யாரு தெரியுமில்ல...? முன்னாள் பிரதமரின் மகன்! அவரென்ன கடத்தல்காரரா? ஏண்டா இப்படிப் படுத்தறீங்க? உண்மையான கடத்தல்காரனைக் கண்டுபிடிக்கறதில்லே...’’ என்று பொரிந்து தள்ளினேன். அதற்கு ரஙகராஜன், ‘‘எங்களுக்கும் டூட்டி முடிஞ்சு வீட்டுக்குப் போகணும். ஆனா மேலிடத்திலிருந்து ஆர்டர்- குறைந்தது ரெண்டு மூணு மணி நேரமாவது அவரைத் ‘தாளித்து’ அனுப்ப வேண்டுமென்று நார்த் பிளாக்கிலிருந்து உத்தரவு. எங்களுக்கும் கஷ்டமாத்தான் ஸார் இருக்கு. ஆனா நாளைக்கு போன் வ்ந்தா நாங்க பதில் சொல்லியாகணும்’’.
எனக்கு கோபம் தாளவில்லை. ஆனால் ராஜீவ்காந்தியோ தனக்கு ஏன் இவ்வாறெல்லாம் நடக்கிறது என்று நன்றாகத் தெரிந்திருந்தும் அவர் காத்த பொறுமையை என்னால் வியக்காமலிருக்க முடியவில்லை. எப்படி அவரால் அந்தச் சமயத்தில் கடுப்பின்றிச் சிரிக்க முடிந்தது? உண்மையிலேயே பெரிய மனிதர். கடைசியில் மூன்று மணி நேர சித்ரவதைக்குப் பிறகு வெளியில் வாரியிறைத்த துணிகளை பெட்டியில் அடைக்க முயன்று, அது முடியாமல் ஒரு பெட்ஷீட்டில் தனி மூட்டையாகக் கட்டி அதை சுமந்து கொண்டு புன்சிரிப்பு மாறாமல் ஏர்போர்ட்டுக்க வெளியே காத்திருந்த காருக்கு நடந்து போனார்- பிற்காலத்தில் பிரதமராகப் போகும் அந்த முன்னாள் பிரதமரின் மகன்.
இந்தச் சம்பவம் சென்னை விமானநிலையத்தில் தமிழ்நாட்டு அரசியல் தலைவர்களின் வாரிசு ஒருவருக்கு நேர்ந்தால் என்னாகும் என்று ஒரே ஒரு கணம் நினைத்தப் பாருங்கள். தன் ஓட்டை மோட்டார் பைக்கல் தப்பாக ஓன்வேயில் போய் போலீஸ்காரரிடம் மாட்டிக் கொண்ட என்னைப் போன்ற பொதுஜனம், ‘‘நான் யாரு தெரியுமில்லே... 17வது வார்டு கெளன்சிலருக்கு ஒண்ணுவிட்ட மாமனோட சித்தப்பா எனக்கு மச்சான் முறை. கமிஷனருக்கு போன் போடுய்யா’’ என்று சொல்கிற இந்தக் காலத்தில் ஒரு வித்தியாசமான உண்மைக் காட்சிக்கு நான் ஒரு சாட்சி.
-‘பல நேரங்ளில் பல மனிதர்கள்’ புத்தகத்திலிருந்து. எழுதியவர்: பாரதி மணி.
=======================================
‘‘சமீபத்துல தொடர்ந்து ஹாலிடேவா வந்துச்சா... ஃபுல்லா வாங்கிவச்சு சரக்கு இன்னும் தீரலப்பா... மப்பும் இன்னும் தெளிய மாட்டங்குதுப்பா...!’’