வாங்க... சும்மா ஜாலியா கொஞ்சம் பழகலாம்! எழுத்தாளர் சுஜாதாவுக்கு வலையுலகில் விசிறிகள் அதிகம் என்பதை நான் அவதானித்திருக்கிறேன். அதிலும் கணேஷ் - வஸந்த் கதாபாத்திரங்கள் சிரஞ்சீவித் தன்மை பெற்றவர்கள். இங்கே (எனக்குத் தெரிந்த அளவில்) சில கேள்விகளைக் கேட்டிருக்கிறேன். ஏன்னா... எனக்கு கேக்க மட்டும்தான் தெரியும். சரியான விடை தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும். யாரும் விடையளிக்காத கேள்வி (அப்படி ஒன்று இருந்தால்) இருந்தால் சுஜாதாவின் புத்தகங்களைத் தேடிப்பிடிச்சு விடையக் கண்டுபிடிச்சு அப்டேட் செய்யப்படும்.
1) சுஜாதா முதலில் கணேஷ் மட்டும் துப்பறிவதாகத்தான் எழுத ஆரம்பித்தார். பின்னால்தான் வஸந்த் வந்து இணைந்து கொண்டான். கேள்வி என்னவெனில் - கணேஷ் கதாபாத்திரத்தை சுஜாதா எழுதிய முதல் நாவல் எது?

2) ‘‘நீங்க பைபிள் கூடப் படிப்பீங்களா?’’ பிரித்தாள். முதல் பக்கத்தில் அழகாக அச்சிட்டிருந்தது. ‘‘இந்த பைபிள் கிடியன் சங்கத்தினரால் இந்த ஹோட்டல் அறையில் வைக்கப்பட்டிருக்கிறது.’’
அதன் கீழ் பேனாவில், ‘‘இந்த பைபிள் ஆர்.வஸந்த் என்பவரால் அந்த ஹோட்டல் அறையிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறது...’’ வஸந்தைப் பார்த்துச் சிரித்தாள். ‘‘என்ன செய்யறது? எனக்குப் புஸ்தகம்னா அவ்வளவு இஷ்டம்!’’
-இந்த வரிகள் சுஜாதாவின் எந்த நாவலில் இடம் பெறுகிறது?
3) சுஜாதாவின் கணேஷ் கதாபாத்திரத்தை ‘ப்ரியா’ திரைப்படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஏற்று நடித்தார். அதற்கு முன்பே இரண்டு முறை சுஜாதாவின் கதைகள் படமானபோது வேறொரு நடிகர் கணேஷ் கேரக்டரில் நடித்திருக்கிறார். அந்தநடிகர் யார்? படங்கள் பெயர் தெரியுமா?

4) ‘‘ஏன் பொம்பளைங்களை இப்படி கலாட்டா பண்றார் அவர்?’’
‘‘அவன் எல்லாரையும் கலாட்டா பண்ணுவான். ஹி டேக்ஸ் எவ்ரிதி்ங் ஈஸி. சில வேளைகளில் எனக்கு அவன் மேல் ரொம்பக் கோபம் வரும்!’’
‘‘இருந்தாலும் அவர் உங்களைவிட இன்டலிஜென்ட்டுன்னு சொல்ல முடியாது...’’
‘‘சில சமயங்களில் அவன் மாதிரி வேகமா சிந்திக்கக் கூடியவன் இருக்கவே முடியாது. கோர்ட்டில் கிராஸ் எக்ஸாமினேஷன் பண்றதைப் பார்க்கணும் நீங்க. இட்ஸ் எ பிளஷர்...!’’
-இந்த வரிகள் இடம் பெற்ற சுஜாதாவின் நாவல் எது?
5) சுஜாதாவின் ‘கொலையுதிர் காலம்’ தொலைக்காட்சித் தொடராக வந்தபோது அதில் வஸந்த் கேரக்டரில் நடித்தவர் யார்?

6) மொஸைக் தரை முழுவதும் கண்ணாடித் துண்டுக் இறைந்திருக்க நடுவில் ரத்தக் குதறல் தெரிந்து. காலணிகள், கால்கள், இடுப்பு பெல்ட் வரை தெளிவாக இருந்த அந்த உடலின் மேற்பாகம் உருத்தெரியாமல் செஞ்சிதறலாக இருந்தது. கணேஷ் கூரையைப் பார்க்க, அதில்கூட ரத்தக் கோலம் போட்டு சதைப் பிச்சல் ஒட்டிக் கொண்டிருந்தது. ‘‘மை காட், திஸ் இஸ் டெரிபிள்’’
‘‘ஆள் செத்துப் போயிட்டான்னு நினைக்கிறேன். பல்ஸ் பாக்கலாம்னா கையே இல்லையே...!’’ கணேஷ், வஸந்த்தை முறைத்தான். ‘‘அந்தம்மா எங்கய்யா?’
‘‘தனியா அழைச்சுட்டுப் போயிருக்காங்க. நல்லவேளை பின்பக்கமா வெடிச்சிருக்குது. ஹால்ல இருக்கறவங்களுக்கு சப்தம் கேக்கலியே. கேட்டிருந்தா சனங்க பயந்துபோய் மிதிச்சு அடிச்சுகிட்டு வெளிய போயிருந்தா நிறையப் பேர் செத்திருப்பாங்க...’’
‘‘இந்தாள் யாருங்க?’’ என்று வஸந்த் கீழே கிடந்தவனைக் காட்டினான். ‘‘யாரோ! இங்க எலக்ட்ரிக் வேலை பாக்கறவராம். மலையாளி!’’ வஸந்த் அந்த உடலைப் பார்த்து, ‘‘எல்லா மலையாளமும் மறந்து போயிருக்கும் என்றான். கணேஷ் அவனை அதட்டி, ‘‘வஸந்த், டேண்ட் பி ஸில்லி’’ என்றான்.
-சுஜாதாவின் எந்த நாவலில் இந்த வரிகள் வருகின்றன?
7) ‘‘நாய் என்ன செஞ்சது?’’ என்றான் வஸந்த். ‘‘பாத்ரூம்லயே சுத்திச் சுத்தி வந்தது. எதுக்கும் பண்ணைல துப்புரவா தேடச் சொல்லியிருக்கேன். ரொம்ப பெரிய ஏரியா. அதில நூறு ஆள் மறைஞ்சிருக்கலாம். நூறு தடயம் புதைஞ்சிருக்கலாம்...’’ கணேஷ், லீனாவை அழைத்துக் கொண்டு அறைக்குள் சென்றான். டிபார்ட்மெண்டின் பழுப்புக் காகிதத்தில் தெளிவாக எழுத ஆரம்பித்தான். ‘‘நான் ஜே.கணேஷ், வயது...’’

வஸந்த் ஜன்னல் ஓரத்தில் லீனாவுடன் உட்கார்ந்து கொண்டு, ‘‘எங்கே உன் கையைக் காட்டு’’ என்றான். அவள் கையைப் பிடித்து ரேகை பார்த்தான். ‘‘லீனா! ஸாரி, நான் ஆஸ்பத்திரி போய்ட்டு வந்தப்புறம் ஒருவிதமா குழப்பமாய்ருச்சு! அதுக்கு முன்னால உன்னை நீங்க, வாங்கன்னுதான் கூப்பிட்டுக்கிட்டிருந்தேன் இல்லை?’’ ‘‘எனக்கு ஞாபகமில்லை வஸந்த். ஆனா என்னை நீன்னே நீங்க கூப்பிடலாம் நான் சின்னவ தானே?’’ ‘‘எனக்கு மட்டும் என்ன வயசுங்கறே? இன்னிக்குல்லாம் இருந்தா ஏழோ, எட்டோ?’’
-சுஜாதாவின் மிகப்புகழ்பெற்ற கணேஷ்-வஸந்த் த்ரில்லரில் இந்த வரிகள் வரும். அது எந்த நாவல்?
அம்புட்டு தாங்க... இனி உங்களோட பதில்கள் என்னவெல்லாம் சுவாரஸ்யங்களைத் தாங்கி வருகின்றன என்பதை எதிர்பார்த்து ஆவலோட காத்திருக்கேன் நான்.
விடைகள் : 1) நைலான் கயிறு, 2) நிர்வாண நகரம், 3) ஜெய் சங்கர் - காயத்ரி, இது எப்படி இருக்கு ஆகிய படங்களில். 4) எதையும் ஒரு முறை, 5) விவேக், 6) கொலை அரங்கம், 7) கொலையுதிர் காலம்.