‘‘பூலா! பூலா!! லாக்கமாய்!!!’’
எனக்கு என்ன ஆச்சோன்னு யோசிக்கறீங்களா? ஒண்ணுமில்லீங்க. ‘‘வணக்கம்! வணக்கம்!! வாங்க!!!’’ அப்படிங்கறதைத்தான் பிஜியர்களின் மொழியில் சொன்னேன். உபயம் - ஃபிஜித் தீவு (கரும்புத் தோட்டத்திலே...) நூலின் ஆசிரியர் துளசி கோபால். நம்ம துளசி டீச்சர் தாங்க! கோபால் சாரோட பணி நிமித்தமா ஆறு வருடங்கள் பிஜித் தீவில் வாழ்ந்திருந்த சமயம் அங்க அவங்க கவனிச்ச எல்லாவற்றையும் இந்த புத்தகத்துல விரிவா எழுதியிருக்காங்க.

பிஜித் தீவில் தமிழர்கள் குடியேறிய விதம், தமிழர்களுடன் சம அளவில் குஜராத்திகளும் அங்கு வாழ்வதன் பின்னணி, ஃபிஜித் தீவு மக்களின் கலாசசாரம், வாழ்க்கை முறை, தீவி்ன் எழில், அவ்வப்போது விஸிட் அடிக்கும் புயல் விளைவிக்கும் கோரம், தத்துப் பிள்ளைகள் எளிதாகக் கிடைப்பது, பெண் கர்ப்பமானால் புரளி பேசியே சாகடிக்கும் பழக்கம் அங்கில்லை என்பது போன்ற விவரங்கள், ஃபிஜி்த் தீவின் அரசியல் வரலாறு -இப்படி எல்லாக் கோணங்கள்லயும் அந்தத் தீவை அலசிப் பிழிஞ்சு காயப் போட்டிருக்காங்க துளசி கோபால்.
புத்தகத்தைப் படிச்சு முடிச்சப்புறம், முன்னபின்ன ஃபிஜித் தீவைப் பார்த்திராதவங்க கிட்ட, நீங்களே அங்க பல வருஷம் வாழ்ந்ததா ரீல் விட்டு மணிக் கணககாப் பேசி அசத்தலாம். (நான் அந்த மாதிரி யார்ட்டயும் டூப் விடலீங்கோ!) அந்த அளவுக்கு தகவல்கள் கொட்டிக் கிடக்குது. அதுக்காக ஒரே புள்ளி விவரங்களும், தகவல்களுமா போரடிக்கிற புத்தகம்னு மட்டும் நினைச்சிடாதீங்க.

துளசி டீச்சருக்கே உரித்தான இயல்பான நகைச்சுவை ததும்பற நடையில ஒரு கதைப் புத்தகம் படிக்கிற சுவாரஸ்யத்தோடதான் புத்தகத்தைப் படிக்க முடியுது. தான் சந்திச்ச, கவனிச்ச அனுபவங்களின் ஊடாக நிறையத் தகவல் அறிவையும் தேன்ல மருந்தைக் கலந்து கொடுக்கற மாதிரி நமக்குள்ளே புகுத்திடறாங்க நூலாசிரியர்.
புத்தகத்தின் மின்னல்களில் சில : ஒரு சமயம் புயல் அடிச்சு ஓய்ஞ்ச நேரம் காரை எடுத்துக்கிட்டு வெளிய சுத்தறாங்க. அப்ப...
அவ்வளவா சேதாரம் இல்லைன்னு வீட்டுக்கு திரும்பி வந்துக்கிட்டு இருக்கோம். நம்ம தெருமுனைக்கு வரும்போது ஒரு பெரிய சத்தத்துடன் காத்து கிளம்புது. அப்படியே வண்டியை தூக்கப் பாக்குது. அடிச்சுப் புடிச்சு வீட்டுக்குள்ள போயிட்டோம். அப்புறம் தொடர்ந்து ஒரு 25 நிமிஷம் புயலடிச்சது பாருங்க... ஒரே நடுக்கம்தான்! கடைசியில்தான் விவரம் தெரியுது-
பெரிய புயல் சுழிச்சு சுழிச்சு உருவாகும் போது அதுக்கு நடுவில ஒரு வெற்றிடம் இருக்குமாம். அதுக்கு ‘புயலின் கண்’ னு பெயராம். (Eye of the Cyclon) அந்த இடம் கடக்கும்போது ரொம்ப அமைதியா இருக்குமாம். காலி இடமாச்சே! அதைத்தான் புயல் நின்னு போச்சுன்னு நினைச்சுக்கிட்டு ஊர் சுத்திட்டு வந்திருக்கோம். அவ்வளவு நேரம் அமைதியாக் கடந்திருக்குன்னா, எவ்வளவு பெரிய புயலா இருக்கணும் பாருங்க!
* (ஃபிஜித் தீவின் கடற்கரையில்) பகலுணவுக்கு மணி அடித்தவுடன் அனைவரும் போய் தட்டுகளில் அவற்றை எடுத்துக் கொண்டு திரும்ப மணல்வெளியில் அமர்ந்து சுற்றிலும் உள்ள கடலை ரசித்த படி உண்ணலாம். கட்டிடத்தி் உள்ளேயும் அமரலாம். ஆனால் எல்லாரும் வெளியே இருக்கவே விரும்புவார்கள். ஆழம் மிகக் குறைவாகவே இருக்கும் என்பதால் கரையை ஒட்டி இருக்கும் தண்ணீரில் குழந்தைகளைப் பயமின்றி விளையாடவும் விடலாம்! ஒரு பெயருக்குக் கூட அலை என்ற சமாச்சாரம் இருக்காது. அமைதியான ஒரு குளம் போன்றே இருக்கும் இந்தக் கடல் பகுதி! ‘ஸ்நோர்கேல்’ செய்யும் உபகரணங்கள் வழங்கப்படுமாதலால் தண்ணீரில் குப்புற மிதந்தபடி, தெளிவான கடலின் அடியில் இருக்கும் காட்சிகளையும் கண்டு மகிழலாம்.
* ஃபிஜியின் பழங்குடி மக்களுக்கு அவசரத் தேவைக்கு பணம் வேண்டுமானால் அடகுக் கடைக்குப் போவார்கள். இதிலென்ன அதிசயம்! அதிசயம்தான்! அது இவர்கள் அடகு வைககும் பொருள்! இந்தியர்களுக்கு நகை, நட்டு எவ்வளவு மதிப்பு வாய்ந்ததோ அதே மதிப்பு இவர்களுக்கு இருப்பது இன்னொரு பொருள் மீது. அது பல்! சாதாரணப் பல் அல்ல, ‘திமிங்கலப் பல்!’ இதன் அளவைப் பொறுத்து இதன் மதிப்புக் கூடும். ஒரு ‘பல்’லைக் கயிற்றில் கோர்த்து மாலையாகக் கழுத்தில் அணிவார்கள். சிறிய பல் என்பது ஒரு ஆறு அங்குல அளவில்(!) இருக்கும். இதன் உருவம் ஃபிஜி நாணயத்திலும் பதிக்கப்பட்டு்ள்ளது. மதிப்புக்கு உரியவர் என்று இவர்கள் நினைக்கும் நபர்களுக்கோ, அல்லது மிகவும் மரியாதைக்குட்பட்ட விருந்தினருக்கோ இந்த ‘பல் மாலை’ அணிவிப்பார்கள்.
* அட்ரெனலின் வாட்டர் ஸ்போர்ட்ஸ். மனுஷனுக்கு பயத்துலே கத்தணுமாம். குடல் வந்து வாய்க்குள்ள விழுந்தாப் போலே அலறணுமாம். ஃப்ளையிங் ஃபிஷ்ன்னு ஒண்ணு. கையில பிடிச்சுக்க வாகாய் ஒண்ணுமே இல்லாத ரப்பர் / பிளாஸ்டிக் மிதவை. அதுலே உக்கார்ந்துக்கிட்டு காலை மட்டும் கீழே இருக்கும் ஒரு பட்டையில் நுழைச்சுக்கணும். இதை ஒரு விசைப்படகு வேகமா இழுத்துக்கிட்டுப் போகும். அந்த வேகத்துக்கு இது துள்ளித் துடிச்சு, மேலேயும் கீழேயுமாப் பறந்து விழுந்துன்னு... அதுலே இருக்கும் மக்கள் கத்திக் கதறி.... இதுக்கு 29 டாலர் டிக்கெட் :)))) நான் மட்டும் இந்த விளையாட்டை நிர்வகிக்கும் ஆளா இருந்தா... அவுங்களுக்கு லைஃப் ஜாக்கெட் போடும் போதே... வாய்க்கும் ஒரு ப்ளாஸ்டர் போட்டு இருப்பேன். இப்பக் கத்துங்க பார்க்கலாமுன்னு... :)))))
-இப்படித்தாங்க... எளிமையான சுவாரஸ்யமான நடையில நிறைய விஷயங்களையும் இந்த புத்தகத்துல இருந்து தெரிஞ்சுககிட்டேன். எனக்குக் கிடைச்ச அந்த அனுபவத்தை நீங்களும் பெறணும்னு விரும்பினீங்கன்னா... 208 பக்கங்கள் கொண்ட இந்தப் பயனுள்ள புத்தகத்தை சென்னை அசோ்க் நகர்ல 9வது அவென்யூவுல 53வது தெருவுல பு.எண்.77ல இருக்கற சந்தியா பதிப்பகம் ரூ.120 விலையில வெளியிட்டிருக்காங்க. போய் வாங்கிக்குங்க. அது செளகரியப்படாதவங்களுக்காக அவங்களோட தொலைபேசி எண் : 044-24896979 ங்கறதையும், www.sandhyapublications.com ங்கற அவங்களோட இமெயில் ஐடியையும் தெரிவிச்சுக்கறேன்.

===================================
பின்குறிப்பு : இந்த புத்தகத்துக்கு என்னைவிட அருமையா என் ஃப்ரண்ட் (என் நண்பரின் மனைவி) விமர்சனம் எழுதியிருந்தாங்க. அதைப் படிச்சதும் தான் இந்த நூலைப் படிக்கணும்னு குறிச்சு வெச்சுக்கிட்டேன். இங்க க்ளிக்கி அதை நீங்க படிக்கலாம்.