Monday, August 27, 2012


பிரமிப்பு, மகிழ்ச்சி போன்ற உணர்ச்சிகள் அளவு கடந்து போய்விட்டால் வாயில் பேசுவதற்கு வார்த்தைகள் வராது. என்ன சொல்வது என்றே தெரியாமல் திகைத்துத் தடுமாறி நிற்கும் நிலை ஏற்படும். அப்படித்தான்... நேற்று நடந்த பதிவர் திருவிழாவைப் பற்றி சுருக்கமாக சில வார்த்தைகள் எழுதலாம் என்று நினைத்து ஆரம்பித்தால் மகிழ்வின் உச்சத்தில் வார்த்தைகள் ‌மனதுக்கு வசப்படாமல் விளையாட்டு காட்டுகின்றன. ஏனெனில் மகிழ்ச்சி என்கிற சொல்லை அதன் முப்பரிமாணத்தில் அனுபவிக்கிற வாய்ப்பு நேற்றுக் கிடைத்தது.

பதிவர் திருவிழாவிற்கான ஏற்பாடுகளை அனைவரும் பார்த்துப் பார்த்துச் செய்திருந்தாலும், ‘மைக்செட்காரன் வந்து சேரலையா இன்னும்’, ‘ஷீல்டுல்லாம் ரெடியாய்டுச்சாப்பா?’ ‘பேனர் கட்டியாச்சா?’ போன்ற கடைசி நிமிட டென்ஷன்கள் ஓடிக் கொண்டுதான் இருந்தன. காலையில் 9.30க்கு விழா துவங்கும் என்று போட்டிருந்தோம். காலை 8 மணி முதலே பதிவுலக நண்பர்கள் வரத் துவங்கி விட்டனர், நண்பர் ‘வசந்த மண்டபம்’ மகேந்திரன் அவைக்கு முதல் ஆளாக வந்து மகிழ்வைத் தந்தார். அநாயசமாக, ரசனைக்கு விருந்தாய் கவிதை படைக்கும் அந்த நண்பனை நேற்று பார்த்துப் பேசியதில் அளவிட இயலாத மகிழ்ச்சி எனக்கு.

வலையில் நாம் எழுதுவதை வலைப் பதிவர்கள் தவிர, வலைப்பதிவுகளில் எழுதாமலேயே படித்து போன் மற்றும் இ மெயில் மூலம் உற்சாகப்படுத்தும் விசிறிகள் நிறைய உண்டு அனைவருக்கும். அவர்களின் பிரதிநிதி நான் என்பது போல காலை 8 மணிக்கு அரங்கிற்கு வந்து உற்சாகமாய் விழாவில் கலந்து கொண்டார் சமீரா. பலரின் பதிவுகளை படித்து ஊக்குவிப்பவர் என்ற அறிமுகத்தோடு அவரை நான் மேடையில் பேசச் சொன்ன போது “எங்களைல்லாம் ஊக்குவிக்க மாட்டீங்களா மேடம்?“ என்று கிண்டலித்தார் கேபிள் சங்கர். (அம்மாம சமீரா... அவர்ட்டயும் ஊக்கு வித்துடும்மா... ஸாரி. ஊக்குவிசசுடும்மா) அடுத்தடுத்து ஒவ்வொருவராக வரவும் குறித்த நேரத்தில் விழாவை ஆரம்பித்துவிடுவது சுலப சாத்தியமாய்த்தான் இருந்தது. கோவை மற்றும் மதுரையிலிருந்து வந்திருந்த நண்பர்கள் அன்பைப் பரிமாறி மனதிற்கு மகிழ்வையும் நெகிழ்வையும் தந்தார்கள்.

பதிவர்கள் அனைவரும் அரங்கத்திற்குள் நுழைந்ததும் தங்களுக்குள் சுய அறிமுகம் செய்து கொண்டது ஒரு புறம் நிகழ்ந்து கொண்டுதான் இருந்தது. என்றாலும், மேடைக்கு அழைத்து ஒவ்வொருவரையும் அறிமுகம் செய்து கொள்ளச் ‌‌சொன்னபோது அனைவரும் கவனத்தை அங்கே திருப்பி, கவனி்த்தது ரொம்பவே மகிழ்வான விஷயம். புலவர் சா.இராமானுசம், திரு.சென்னைப் பித்தன், வலைச்சரம் திரு.சீனா ஆகிய மூவரும் ‌முன்னிலை வகித்து காலை நிகழ்விற்கு சிறப்புச் சேர்த்தார்கள். கேபிள் சங்கர், ஜாக்கி சேகர் போன்ற பிரபல பதிவர்கள், புலவர் சா.இராமானுசம், சென்னைப் பித்தன், கணக்காயன் போன்ற மூத்த பதிவர்கள், சென்ற ஆண்டிலும் இந்த ஆண்டிலும் வலைப் பதிவைத் துவங்கி எழுத ஆரம்பித்திருக்கும் (என்போன்ற) குழந்தைப் பதிவர்கள் என அனைவரும் தங்களை அறிமுகம் செய்து கொண்டு பேசியது மனதிற்கு இதமாக இருந்தது. விழாவிற்கு வந்திருந்த சேட்டைக்காரன் அனைவருடனும் சகஜமாக அவருக்கே உரித்தான இயல்பான நகைச்சுவையுடன் பேசி மகிழ்ந்ததைப் பார்க்க நிறைவாக இருந்தது.

மதிய உணவிற்கான இடைவேளை அறிவித்ததும், சிறப்பு அழைப்பாளர் திரு.பட்டுக்கோட்டை பிரபாகரை அழைத்துவர அவர் இல்லாம் நோக்கிச் சென்று கொண்டிருக்கையில் என் அலைபேசி அலறியது. பேசியவர் புதுச்சேரியில் வசிக்கும் ‘சிந்தனைச் சிறகுகள்’ வலைப்பூவின் சாமுண்டீஸ்வரி பார்த்தசாரதி. நேரலை ஒளிபரப்பு ஏற்பாடு செய்திருந்ததன் மூலம் விழாவைக் கவனித்ததாகவும், சிறப்பாக விழா நடந்து கொண்டிருப்பதில் மகிழ்வைத் தெரிவித்து, விழாவுக்கு வந்திருக்கும் அனைவரும் தன் வாழ்த்துக்ளையும் தெரிவித்தார். அவருடைய பிறந்ததினம் என்பதால் நான் அவரை அகமகிழ்வுடன் வாழ்த்தினேன். நேரலை ஒளிபரப்பின் மூலம் நிறையப் பேர் ஆர்வமாக நம் விழாவை கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதில் மட்டற்ற மகிழ்ச்சி மனதில் நிரம்பியிருக்க, சிறப்பு அழைப்பாளருடன் அரங்கிற்குத் திரும்பினேன்.

உணவு இடை‌வேளைக்குப் பின் மதிய நிகழ்ச்சிக்கு 2.30க்கு கூட வேண்டும் என்று அனைவருக்கும் அறிவித்திருந்தோம். நண்பர்கள் அனைவரும் அதை மிகச்சரியாக நிறைவேற்றினார்கள். மீண்டும் அரங்கிற்கு அனைவரும் குன்றாத ஆர்வத்துடன் வந்துவிட, 2.30க்கு சரியாக மதிய நிகழ்வுகளை ஆரம்பிக்க முடிந்தது. மதிய நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கிய சுரேகா அவர்களின் ஸ்பான்டேனியஸான பேச்சும், இயல்பான ந்கைச்சுவையும் கலந்த பேச்சு அரங்கை களைகட்டச் செய்தது.  மூத்த பதிவர்களை மேடையேற்றி அவர்களை கெளரவித்தது விழாக் குழுவைச் சேர்ந்த அனைவருக்கும் மிகுந்த சந்தோஷத்தைத் தந்தது. சிறப்பு அழைப்பாளர் பேசும்போது இந்த விஷயத்தைக் குறிப்பிட்டுப் பாராட்டினார். கவிதைகள் என்கிற பெயரில் வீரிய விதைகளைத் தூவி கேட்பவரின் மனங்களைப் பறித்துச் சென்றார்கள் நம் பதிவுலகக் கவிஞர்கள். ‘தென்றல்’ சசிகலாவின் ‘தென்றலின் கனவு’ என்ற புத்தகம் இந்த அரங்கில் வெளியிடப்பட்டது அவருக்கு மட்டுமல்ல, பதிவர்கள் அனைவருக்குமே மகிழ்ச்சியாக இருந்தது.

அதன் பின் அற்புதமான உரையொன்றை நிகழ்த்தினார் சிறப்பு அழைப்பாளர் திரு.பட்டுக்கோட்டை பிரபாகர். முதலில் விழாவுக்கு வரும்படி அவரை நான் அழைத்தபோதே, ‘‘பதிவர்கள் சந்திக்கப் போறீங்க. அங்க நான் வந்து எதைப் பத்திப் பேசறது?’’ என்று கேட்டிருந்தார். நான், ‘‘சார், நீங்க எழுத வநத விதத்தையும், .உங்க எழுத்தையும் பத்திப் பேசுங்க. எங்களில் நிறையப் பேர் உங்களின் வாசகர்கள்தான். அதனால ஆர்வமாக் கேப்பாங்க. நீங்க பாக்கற பதிவுலகத்தைப் பத்தியும் உங்க கண்ணோட்டத்துல பேசலாம்’’ என்று சொல்லியிருந்தேன். ஆனால் பி.கே.பி.யோ பதிவுலகின் சக்தியைப் பற்றியும், பதிவர்களாக இருப்பதன் ப்ளஸ் மற்றும் மைனஸ் ஆகிய அனைத்தையும் அலசிய தன் உரையின் மூலம் அனைவருக்கும் பிரமிப்பை அள்ளித் தந்து, அரங்கின் பலத்த கரகோஷத்தைப் பெற்றுக் கொண்டார்.

தலைவர் உரைக்குப்பின் கவிஞர் மதுமதி நன்றியுரைத்து விழா நிகழ்வு நிறைவுற்றதும் சிறப்பு விருந்தினரை வழியனுப்பி வைத்துவிட்டு வெளியூரிலிருந்து வந்திருந்த, கிளம்ப வேண்டிய அவசர(சிய)த்திலிருந்த நட்புகள் விடைபெற்றுச் சென்றுவிட மற்றவர்கள் நிறைய நேரம் மனம்விட்டுப் பேசிவிட்டுப் பிரிந்தோம். இப்படி அனைவரையம் சந்தித்து, கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டதிலும், திருமதி. வல்லி சிம்ஹன் என்னை அவர்களின் குடும்ப உறுப்பினர்களில் ஒருவராகவே அங்கீகரித்து அன்பைப் பொழிந்ததிலும் மகிழ்ச்சி நிரம்பியிருந்த மனது அன்று நடந்த ஒவவொரு நிகழ்வையும் ரீவைண்ட் பண்ணி சந்தோஷித்தபடி இருந்ததால் இரவு விழிகளை உறக்கம் தழுவ வெகுநேரமானது!

இது நாமே நடத்துகிற, நமக்கான விழா என்று மகிழ்வுடன் உணர்வுரீதியாக ஒன்றிணைந்து விழாவிற்கு வருகை தந்து சிறப்பித்த அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் நெகிழ்வுடன், மனமகிழ்வுடன் என் நன்றியை சமர்ப்பிக்கிறேன்.

120 comments:

  1. மிக்க மகிழ்ச்சி சார்...

    வருடா வருடம் இன்னும் சிறப்பாக தொடர்வோம்...

    நன்றி (த.ம.2)

    ReplyDelete
    Replies
    1. ஒவ்வொரு ஆண்டும் தொடர வேண்டும் என்பது பலரின் ஆசை. இறையருள் இருப்பின் நடத்தி விடலாம் நண்பா. உங்களைச் சந்தித்ததில் மிக மகிழ்வு கொண்டு என் நன்றி.

      Delete
  2. பகிர்வுக்கு மகிழ்ச்சியும் நன்றியும் .நெகிழ்வான பதிவு.

    ReplyDelete
    Replies
    1. விழாவுக்கு தவறாமல் வந்திருந்து விழாவைச் சிறப்பித்து மகிழ்வு தந்த தங்கைக்கு மனநெகிழ்வுடன் என் நன்றி.

      Delete
  3. அருமையான நிகழ்வுகள்... ஒவ்வொருவரின் பதிவையும் படிக்கும் பொழுது அந்த நிமிடங்கள் மீண்டும் மீண்டும் கண் முன் வந்து செல்கின்றன... முப்பரிமானம் அழகான வார்த்தைக் கையாடல்

    ReplyDelete
    Replies
    1. அடப்பாவி... வார்த்தைக் கையாளல்னு சொல்லியிருக்கணும் நீ. நான் யார்ட்டயும் கையாடல் பண்ற வழக்கமில்லைப்பா. சிரமம் பாராது தன் தோழர்களையும் அழைத்து வந்து பேருதவி செய்த உனக்கு உளம் நிறைந்த நன்றி.

      Delete
  4. தங்கள் அனைவரையும் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி பால கணேஷ் சார்

    ReplyDelete
    Replies
    1. வாங்க சரவணன்... உங்களின் அன்பு மழையில் நனைந்து மகிழ்ந்தது எனக்கு என்றும் மறவாதது. மிக்க நன்றி.

      Delete
  5. தங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி....

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் நண்பா. ஈமெயிலிலும். தொலைபேசியிலும் அறிமுகமாகியிருந்த உங்களை நேரில் கண்டு உரையாடி மகிழ்ந்த அந்த தினம் என்றும் நினைவில் பசுமையாய் இருக்கும. நன்றி.

      Delete
  6. விழா சிறப்பாக நடந்ததில் மிக்க மகிழ்ச்சி சார்! குடும்ப விழாவை தவறவிட்ட வருத்தம் இருக்கத் தான் செய்கிறது.

    இரண்டாம் ஆண்டில் கலந்துக் கொள்வேன் என்று நம்புகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. அவசியம் வருவீர்கள் என்ற நம்பிக்கை எனக்குண்டு பாஷித். விழாவுக்கு வராவிட்டாலும் எனக்கு மேப் தேடித் தந்தது முதல் ஆர்வமாய் எங்களின் செயல்பாட்டிற்கு ஊக்கம் தந்தவராயிற்றே நீங்கள். உங்களுக்கு என் இதயம் நிறைந்த நன்றி.

      Delete
  7. விழா ஏற்பாடுகளை மிகச் சிறப்பாக
    செய்திருந்தீர்கள்.அனுபவமும் இளமையும்
    கலந்த சென்னைப்பதிவர் கூட்டணி
    எதையும் சாதிக்கும் சக்திபெற்றது என்பதை
    அறிந்து கொண்டோம்.
    எங்களுக்கெல்லாம் இந்த சந்திப்பு ஏற்பாடுகள்
    ஒரு நல்ல முன்னுதாரணமாக இருந்தது என்றால்
    மிகையில்லை.மீண்டும் மீண்டும் நன்றி கூறி..

    ReplyDelete
    Replies
    1. உங்களைப் போன்ற சீனியர்களின் வழிகாட்டல் அன்றோ இந்த மகிழ்வை ஈட்டித் தந்தது. உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.

      Delete
  8. விழாவின் பிற்பாதியைத் தவற விட்டதன் வருத்தம் தங்கள்

    விரிவான வர்ணனையால் தீர்ந்தது. மகிழ்ச்சி.

    ReplyDelete
    Replies
    1. விழாவன்று ஹலோ சொன்னதோடு சரி, உங்களைக் கவனிக்கு இயலாமல் போய்விட்டது. மன்னிக்க. ரசனையாய் படித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

      Delete
  9. நன்றி சொல்ல மீண்டும் வாய்ப்புக் கொடுத்தற்கு நன்றி கணேஷ். நாங்கள் அனைவரும் உடனே தோழிகளாகக் காரணமே இந்த வலைப்பூக்கள் தான். பிரிந்த உறவுகளை எல்லாம்சேர்த்துப் பார்த்த மகிழ்ச்சி.
    அருமையான விழா.நினைத்து நினைத்து மகிழ்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. எத்தனையோ கஷ்டங்களை பொருட்படுத்தாமல் வந்து எங்களை மகிழ்வித்த உங்களுக்கு நாங்கள்தான் நன்றிகூற வேண்டும் வல்லிம்மா. மிகமிக மகிழ்வுடன் நன்றி சொல்கிறேன் நான்.

      Delete
  10. வணக்கம் ஐயா மிக அழகாக அங்கு நடந்த நிகழ்வுகளை
    சிறப்பித்து நன்றி உரை ஒன்றை தந்துள்ளீர்கள் அருமையாக
    உள்ளது .தங்கள் ஒவ்வொருவருடைய கனவும் நினைவாக
    மலர்ந்த விதம் பாராட்டுக்கும் வாழ்த்திற்கும் உரியது.மேலும்
    மேலும் இந்த நிகழ்வு சிறப்பாக நிகழ வாழ்த்துக்களும் இன்றைய
    பகிர்வுக்கு மிக்க நன்றியும் உரித்தாகட்டும் .

    ReplyDelete
    Replies
    1. ரசனையுடன் கருத்திட்டு என்னை உற்சாகத்தில் ஆழ்ததிய உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  11. கணேஷ் சார்,

    வாழ்த்துக்கள் &பாராட்டுக்கள்!

    ReplyDelete
    Replies
    1. உங்களின் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் மனம் மகிழச் செய்கிறது நண்பரே. உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.

      Delete
  12. தகவல் பகிர்வு அருமை. பாராட்டுக்கள், நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. ரசித்துப் பாராட்டி. உற்சாகம் தரும் கருத்தினைத் தந்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி ஐயா.

      Delete
  13. இந்த பதிவர் சந்திப்பிற்கு துவக்கால சிந்தனைகளைத் தூவி செயல்பட்ட பாலகணேஷ், மதுமதி, சென்னை பித்தன், புலவர் இராமானுசம், தென்றல் சசிகலா ஆகியோருக்கும், சிறப்பாகச் செய்த அனைவருக்கும் நன்றி!

    ReplyDelete
    Replies
    1. விழாவை ரசித்துக் கருத்திட்டு எங்களை வாழ்த்திய உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.

      Delete
  14. வணக்கம் சார்
    நிகழ்ச்சியை நேரலையில் கண்டேன்

    நிகழ்ச்சி சிறப்பாய் அமைத்து வழங்கியதில் மகிழ்ச்சி
    மூத்த பதிவர்களின் பங்கு மிகவும் மகிழ்ச்சியை தந்தது
    இளைய பதிவர்களின் பங்கு நாழிய பதிவுலகின் வலிமையை காட்டுகிறது

    ReplyDelete
    Replies
    1. ஆம் நண்பா. அனைத்துக் கரங்களும் இணைந்து எழுப்பிய ஓசை அது. அதை நீங்கள் ரசித்ததில் அகமகிழ்வுடன் என் நன்றி.

      Delete
  15. அண்ணே அற்புதமான விழா... தங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி...

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் எனக்கு நண்பராகக் கிடைத்ததில் நான் மிகமிக மகிழ்ச்சி அடைந்துள்ளேன் சங்கவி. உங்களுக்கு உளம்நிறைந்த நன்றி.

      Delete
  16. மிக அழகாகவும் நெகிழ்வாகவும் தொகுத்து வழங்கியுள்ளீர்கள். ஏற்பாடு செய்தவர்களுக்கும் கலந்து கொண்டு சிறப்பித்தவர்களுக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும்!!

    ReplyDelete
    Replies
    1. ரசனையுடன் கருத்திட்டு எங்களைப் பாராட்டி வாழ்த்திய உங்களுக்கு மனமகிழ்வோடு என் இதயம் நிறைந்த நன்றி.

      Delete
  17. ஆரம்பித்திருக்கும் (என்போன்ற) குழந்தைப் பதிவர்கள் என/// என்னாது? நீங்களே குழந்தைப் பதிவரா?.... வர வர உங்க அவை அடக்கத்துக்கு ஒரு அளவே இல்லாம போச்சே சார்!அவ்வ்வ்வ்வ்

    ReplyDelete
    Replies
    1. உன்னைவிடச் சின்னவங்க யாரும் இல்லன்னு நினைச்சு மரியாதை கொடுக்கணும்னு ஒரு பெரியவர் சொல்லிருக்கார். அதான்... ஹி... ஹி...

      Delete
  18. என் அலைபேசி அலறியது. பேசியவர் புதுச்சேரியில் வசிக்கும் ‘சிந்தனைச் சிறகுகள்’ வலைப்பூவின் சாமுண்டீஸ்வரி பார்த்தசாரதி. நேரலை ஒளிபரப்பு ஏற்பாடு செய்திருந்ததன் மூலம் விழாவைக் கவனித்ததாகவும், சிறப்பாக விழா நடந்து கொண்டிருப்பதில் மகிழ்வைத் தெரிவித்து, விழாவுக்கு வந்திருக்கும் அனைவரும் தன் வாழ்த்துக்ளையும் தெரிவித்தார். அவருடைய பிறந்ததினம் என்பதால் நான் அவரை அகமகிழ்வுடன் வாழ்த்தினேன். /// நான் இதை எதிர்பாக்கவேஇல்ல சார்! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்... pkp அவரது பேச்சு மிக அருமை! தாங்கள் எழுதிய நன்றியுரை மிக அருமை!

    ReplyDelete
    Replies
    1. என்னுரையை ரசித்துப் பாராட்டிய என் தோழிக்கு என் இதயம் நிறைந்த நன்றி.

      Delete
  19. மனசுக்குத் திருப்தியா நடந்த விழா! மனசு நிறைஞ்சு போச்சுன்னா பசியும் எடுக்காது. ராத்திரி தூக்கமே வந்துருக்காதே!

    ReplyDelete
    Replies
    1. மிக உண்மை நீங்க சொல்றது. அன்னிக்கு ராத்திரி ரெண்டும் இல்லாம போனாலும் வருத்தம் எதுவும் இல்லாம மனசு சந்தோஷத்துல இல்ல நிரம்பியிருந்தது. வந்து உற்சாகம் தந்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.

      Delete
  20. விரிவான விளக்கம்!நன்றி சகோ!

    ReplyDelete
    Replies
    1. உங்களைப் போன்ற ஒரு அன்பான இதயத்துடன் இணைந்து செயல்பட்டதில் கொள்ளை மகிழ்வு எனக்கு. உங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றி.

      Delete
  21. மிக்க மகிழ்ச்சி சார்...

    ReplyDelete
    Replies
    1. என்றும் என் நண்பரான கருண் ரசித்துக் கருத்திட்டதில் மிகமகிழ்வுடன் என் நன்றி.

      Delete
  22. அற்புதமான நாள் சார் .. ரொம்ப மகிழ்ச்சி

    ReplyDelete
    Replies
    1. ஆம் அரசன். அந்த அற்புதமான நாளின் மகிழ்வில் பங்கு கொண்டு இங்கும் பகிர்ந்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

      Delete
  23. நேரலையில் பார்த்தேன்! விழா பிரம்மாண்டமாக வெற்றிகரமாக நடந்தேறியத்தில் மகிழ்ச்சி!

    ReplyDelete
    Replies
    1. நீங்களும் வந்திருந்தால் இன்னும் மகிழ்ச்சியின் சதவீதம் கூடியிருக்கும நண்பா. நேரலை கண்டு மகிழ்ந்து வாழ்த்திய உங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றி.

      Delete
  24. மிக மிக வாழ்வில் மறக்கமுடியாத மிக முக்கியமான ஒரு விழா என் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.

    ReplyDelete
    Replies
    1. ஆம் தென்றல். உங்களின் நூல் வெளியீட்டு விழா என்னையும் மிக பூரிப்படைய வைத்தது என்பதே உண்மை. நன்றிம்மா.

      Delete

  25. // (என்போன்ற) குழந்தைப் பதிவர்கள்//

    என்ன கொடும சரவணன்..

    ReplyDelete
    Replies
    1. அட... நிஜத்தைப் பேச விடறாய்ங்க இல்ல... என்ன உலகமடா! நன்றி சிவா.

      Delete
  26. நேரலையில் பார்த்தேன்! விழா பிரம்மாண்டமாக வெற்றிகரமாக நடந்தேறியத்தில் மகிழ்ச்சி!

    ReplyDelete
    Replies
    1. தூர இருந்தாலும் நேரலையில் பார்த்து மகிழ்ந்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.

      Delete
  27. இதனை விழா என்று சொல்லுவதை விட பதிவுலகின் சாதனை என்று சொல்லுவது மிகச் சிறப்பாக இருக்கும் என நினைகிறேன்...
    என்னைப் போன்ற இலங்கைப் பதிவர்களுக்கு இது ஒரு முன்னுதாரணமாக அமைந்துள்ளது இனிவரும் காலங்களில் இலங்கையிலும் இப்படியான ஒரு சாதனையினை நிகழ்த்த இலங்கைப் பதிவர்கல் ஒன்றினைய வேண்டும் என்பது என் அடி மனது ஆசை...

    விழாவினை சிறப்பாக நடத்த துணை புரிந்த அனைத்து உள்ளங்களுக்கும் என் வாழ்த்துக்களியும் தெரிவித்து விடுங்கள் சார்......

    பதின் மூலம் நிகழ்வு கண்களில் அசைபோடுகிறது

    ReplyDelete
    Replies
    1. உங்களின் ஆசை நிச்சயம் நிறைவேறும் நண்பா. எங்களை வாழ்த்திய உங்களுக்கு மனமகிழ்வுடன் என் நன்றி.

      Delete
  28. பகிர்வுக்கு மிக்க நன்றி
    கலந்து கொள்ள முடியவில்லை எனறு வருத்தம்,
    வந்திருந்தால் , வல்லி அக்காம் ருக்மணி அக்கா, ஸாதிகா அக்கா சசிகலா எல்லாரையும் பார்த்து இருக்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க... உங்க மாதிரி நிறையப் பேரை மிஸ் பண்ணிட்டோம். பரவால்ல... அடுத்த சந்திப்புல சேர்த்து வெச்சு கொண்டாடிரலாம். பகிர்வை ரசித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  29. என்னை பத்தி பத்தி ஒரு வார்த்தையும் சொல்லலை பார்த்திங்களா?! சோ, நான் கோச்ச்ச்ச்ச்ச்சிக்கிட்டு உங்க வலைப்பூவை விட்டு போறேன், உங்க பேச்சு க்க்க்க்க்காஆஆஆஆ...

    ReplyDelete
    Replies
    1. எல்லா எடத்துலயும் இதே வேலையா அக்கா உங்களுக்கு...? ஹி... ஹி...

      Delete

    2. சகோவிடம் சொல்லி ஒரு ஐஸ்கிரீம் வாங்கிதர சொல்லுறேன் அப்ப கோபமெல்லாம் சரியாப் போய்விடுமல்லவா

      Delete
    3. பாத்திங்களா உங்க அண்ணன் இங்க உங்களை பற்றி சொல்லாமலும் மேடையில் நீங்க பேசும் போது உங்களை ஒழுங்காக கவர் செய்யாமலும் விட்டுவிட்டார் நீங்கள்மேடையில் பேசும் போது கவரேஜ் சரியில்லை அது யாரு செய்த சதி? சிபிஜ என் கொயரி தேவை..

      Delete
    4. ஏன்பா... மதுரைத் தமிழா... ஏன்? என் தங்கையைப் பத்தி நானே சொன்னா சரியா இருக்காதுன்னு தான் இங்க சொல்லலை. டோன்ட் வொர்ரி தங்கையின் கோபம்லாம் சீக்கிரம் காணாமப் போக வெச்சிரலாம்.

      Delete
  30. பதிவு விழா சிறப்பாக அமைந்தமைக்கு மகிழ்ச்சி. நான் அயல்நாட்டில் பணியில் இருப்பதால் என்னால் கலந்து கொள்ள இயலவில்லை. வருந்துகிறேன். இருந்தும் மகிழ்ச்சியும் ஆனந்தமும் நல்ல நிறைவுடன் இனிதே நிகழ்வு முடிந்தமைக்கு.. அனைவருக்கும் பாராட்டுக்கள்!

    என் பதிவில் "வேண்டாம் தூக்கு கயிறு"..

    ReplyDelete
    Replies
    1. வெளிநாட்டில் இருந்தாலும் மனதை இங்கே அனுப்பி எங்களுக்கு உற்சாகம் தந்த உங்களைப் போன்ற உறவுகள் நிறைய. உங்களுக்கு மனநெகிழ்வோடு என் நன்றி.

      Delete
  31. கணேஷ்! பிரம்மாண்டமாக நடத்தி விட்டீர்கள்! இனி வரும் வலையுலக சந்திப்புகள் நேற்றைய நிகழ்ச்சியுடன் ஒப்பிடப்படும் என்றே சொல்லலாம். அப்படியொரு உன்னதமான வைபவமாக நடத்திய உங்களுக்கும், விழாக்குழுவினருக்கும் எனது நன்றிகள்! பாராட்டுகள்! வணக்கங்கள்!!

    ReplyDelete
    Replies
    1. நீண்ட நாள் கழிச்சு என் தளத்துக்கு வந்து வாழ்த்துச் சொல்லி மகிழ்வைத் தந்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.

      Delete
  32. நல்லா விவரிச்சிருக்கீங்க. பி.கே.பி. வந்து விழாவைச் சிறப்பிச்சது உங்களாலதான். உங்களுக்கு ஒரு ஸ்பெசல் சல்யூட்...

    ReplyDelete
    Replies
    1. உங்களைப் போன்ற பிகேபி ரசிகர்கள் நேற்று அவரைக் கண்டு மகிழ்ந்ததில் நான் மகிழ்ந்தேன் ஜெய். உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  33. அருமை !

    உங்களை மாதிரி முக்கிய புள்ளியே ஒரு பதிவோட நிறுத்தினா எப்புடி? நீங்க இப்படி செஞ்சா இதை வச்சு நாலஞ்சு பதிவு எழுதும் என்னை எல்லாரும் திட்ட மாட்டாங்க? :)))

    ReplyDelete
    Replies
    1. இதோ... அடுத்ததை தொடர்ந்துடறேன் மோகன். மிக்க நன்றி.

      Delete
  34. Replies
    1. விழாவுக்கு வராம சைலன்ட்டா இருந்துட்டு இப்ப இங்க வாழ்த்தற உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.

      Delete
  35. விழாவில் நான் கண்டது பதிவர்களை மட்டும் அல்ல பல தேனீக்களையும் தான் சார்.... என்ன ஒரு குழும அமைப்பு... ஒரு குடும்பத்தில் ஒருவர் சுறு சுறுப்பாக உள்ளதை காணலாம்... வலைப்பூ குடும்பத்தில் உள்ள அனைவரும் அப்படியே என்றால் ஆச்சர்யம் மற்றும் (முப்பரிமான) மகிழ்ச்சி தான் சார்... எனக்கு பல மூத்த பதிவுலக தோழிகளை தோழர்களையும் அறிமுகம் செய்துள்ளது இந்த சந்திப்பு...தோழமைக்கு வயதில்லை என்பதை கண்கூடாக கண்டேன் அகமகிழ்ந்தேன்....

    //“எங்களைல்லாம் ஊக்குவிக்க மாட்டீங்களா மேடம்?“ என்று கிண்டலித்தார் கேபிள் சங்கர். அம்மாம சமீரா... அவர்ட்டயும் ஊக்கு வித்துடும்மா... ஸாரி. ஊக்குவிசசுடும்மா)// - கண்டிப்பா ஊக்கு வித்துட்டா போச்சி சார்...

    உங்கள் பதிவில் என் பெயரையும் போட்டு என்னை மகிழ்சிகடலில் முழ்கவிட்டீர்கள் சார்... நான் கட்டுமரம் தேடவில்லை கரையை அடைய!!!

    உங்களை அனைவரையும் பார்த்து பழகும் வாய்ப்பு அமைந்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.....

    ReplyDelete
    Replies
    1. முதல் ஆளா ஓடிவந்து. கடைசி வரைக்கும் இருந்து நீங்க உற்சாகம் தந்தீங்க எங்களுக்கு. மிகமிகமிக மகிழ்வோட நன்றி சொல்றேன் நான் உங்களுக்கு.

      Delete
  36. Replies
    1. உங்களின் வாழ்த்து மகிழ்வு தருகின்றது. மிக்க நன்றி ஜெ.

      Delete
  37. விழாவின் வெற்றிக்கு உழைத்த அனைவருக்கும் பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. பாராட்டிய உங்களுக்கு என் இதயம் நிறைந்த நன்றி நண்பா.

      Delete
  38. விழாவில் பங்கேற்றவர்கள் வலைப்பூவெல்லாம் இன்று ஒரே பிரம்மாண்டம் தான்... நேற்று நடந்த விழாவினைப்பற்றி படங்கள் போட்டு கருத்து எழுதி ஒரு பக்கம் மகிழ்ந்திருக்க....

    படமே இல்லாமல் அழகாய் வர்ணனையோடு ஆரம்பித்து மகிழ்ச்சி கடலில் திக்குமுக்காடி எல்லோரையும் அன்புடன் நலமும் விசாரித்து ஒருத்தரைக்கூட விடாமல் ( மூச் ராஜியை விட்டுட்டீங்க தானே? கோச்சுட்டு க்கா சொல்லிட்டு போயிட்டாங்களே? முதல்ல அவங்களை சமாதானப்படுத்தி கூட்டிட்டு வாங்க )

    என்ன அருமையா தொகுத்திருக்கீங்கப்பா... வாவ்.... படம் பார்க்கலை என்ற ஏக்கமே தீர்ந்தது போங்க... நேரடி ஒளிபரப்பு பார்க்க இயலாத என்னைப்போன்றோர் திரும்ப அந்த நிகழ்ச்சியை பார்க்க ஏதேனும் வழி இருக்கா?

    ரசனையுடன் ஒவ்வொரு நுணுக்கமான விஷயத்தையும் கவனிச்சு (ச்சாமுண்டேஸ்வரி சிலாகிச்சு மனம் நிறைந்த நன்றிகளை மறக்காம இதோ இங்கே பகிர்ந்தது - என்னுடைய அன்பு பிறந்தநாள் நல்வாழ்த்துகளையும் எடுத்துக்கோங்கப்பா சாமுண்டேஸ்வரி பார்த்தசாரதி.. )இங்கே பகிர்ந்தது ரொம்ப சிறப்பு கணேஷா..

    மண்டபத்துக்கு பதிவர்கள் சந்திப்புக்கு வந்து நீங்க சொன்ன நிகழ்வுகளை எல்லாம் அடுத்திருந்து கண்டது போலவே இருந்ததுன்னா சொன்னா அது மிகையில்லை கணேஷா...

    என்ன ஒரு பொறுமை... என்ன ஒரு பொறுப்பு.... ரொம்ப சந்தோஷமா இருக்கு.. கலந்துக்கிட்டவங்க எத்தனை சந்தோஷத்தோடு மன மகிழ்வோடு திரும்ப இப்படி ஒரு சந்திப்பு நிகழுமா என்ற ஏக்கத்தோடு விடைப்பெற்றதை படிக்கும்போதே உணரமுடிகிறது... மிஸ் பண்ணிட்டோமே அடடா என்று மனதில் மெல்லிய வருத்தம் இழையோடுவதையும் தடுக்கமுடியலைப்பா...

    அருமையான தொகுப்பு கணேஷா.. மனதில் இருந்தவை எல்லாம் அடுக்கடுக்காக தொகுத்த விதம் மிக்க சிறப்பு....

    அவ்ளோ தானா??? பிக்சர் அபி பி பாக்கி ஹை தோஸ்த்.... அப்டின்னு சொல்லி தொடர்ந்தால் சலிக்காம நாங்களும் படிப்போம்ல???

    அன்பு நன்றிகள் கணேஷா சிறப்பான பகிர்வுக்கு...

    ReplyDelete
    Replies
    1. மகிழ்ச்சியின் சிதறல்கள் நேற்று அரங்கம் முழுவதும் நிரம்பிக் கிடந்தன தோழி. படங்கள் எதுவும் இல்லாமல் பகிர்கிறோமே என்று எனக்குள் இருந்த மனக்குறையை உங்களின் பாராட்டு போக்கிட்டுது. அடுத்ததும் சுவாரஸ்யமா தொடர உங்களுக்காக ஒரு பதிவு வெச்சிருக்கேன். இதோ தந்துடறேன் மஞ்சு. என்க்குள்ள சக்தியை ரீசார்ஜ் பண்ற உங்களோட கருத்துக்களுக்கு அகமகிழ்வோட என் நன்றி.

      Delete
  39. விழா அருமையாக நடக்க சரியான திட்டமிடலும் , கடினமான உழைப்பும் ஒருங்கிணைத்து செயல்படுத்திய அனைவருக்கும் வாழ்த்துக்கள்
    விழா நிகழ்வுகளை இணையத்தில் கண்ட நாங்களே மகிழ்ந்து சிறிது ஏக்கத்துடனே உறங்க சென்றோம்

    ReplyDelete
    Replies
    1. விழா நிகழ்வுகளை இணைய்த்தில் கண்டு மகிழ்ந்து எங்களை வாழ்த்திய உங்களின் அன்பிற்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  40. பதிவர் சந்திப்பு முதல் நிகழ்வு போன்று இல்லை. சிறப்பான நிகழ்வை நடத்தியவர்களுக்கு நன்றி. நான் பங்கேற்ற முதல் பதிவர் நிகழ்வும் இதுதான்.

    மது, மதம், சாதி: மிகத் தீமையானது எது?

    http://arulgreen.blogspot.com/2012/08/blog-post_27.html

    ReplyDelete
    Replies
    1. உங்களின் மகிழ்வினில் மகிழ்கின்றேன் நான். உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி அருள்.

      Delete
  41. விழாவிலிருந்து திரும்பி இப்பொழுது வரை இதே எண்ணங்கள் தான்.
    என்னுடைய மனைவியிடமும் மகளிடமும் பேத்தியிடமும் பொன்னாடையைக்
    காண்பித்தபோது, அந்த நினைவு பரிசை தந்தபொழுது அவர்கள் மகிழ்ச்சிக்கு அளவில்லை.

    இது பற்றிய ஒரு படத்தொகுப்பினையும் எனது யூ ட்யூபில் வெளியீட்டு இருக்கிறேன்.

    விழாவுக்கு வந்திருந்த பதிவாளர்கள் அதிகம் பேருடைய பதிவுகளுக்குச் சென்று படித்திருந்தாலும்
    அவர்களை சந்தித்தது இது தான் முதல் தடவை.

    அவர்கள் கண்களில், உள்ளங்களில் கொப்பளித்துக்கொண்டிருந்த உற்சாகம்
    ஆஹா.. ஒன்று நன்றாகத் தெரிகிறது.

    தமிழ் வலையுலக எதிர்காலம் ஒளிமயமானது.

    விழாவினை நன்று நடத்திய நல் உள்ளங்களுக்கு என் ஆசிகள்.

    சுப்பு ரத்தினம்.
    http://vazhvuneri.blogspot.com

    ReplyDelete
    Replies
    1. ஆம் ஐயா... யூட்யூபில் நீங்கள் பகிர்ந்ததைப் பார்த்தேன். மனதுக்கு மகிழ்வாகவும் நெகிழ்வாகவும் இருந்தது. உங்களைப் போன்ற பெரியவர்களின் ஒத்துழைப்பும் ஆசியும்தான் எங்கள் பலமே. அதை அளவின்றி வழங்கும் உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.

      Delete
  42. உழைப்புக்கும் வெற்றிக்கும் பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. மகிழ்வு தந்த உங்களின் பாராட்டுக்கும வாழ்த்துக்கும் மனம் நிறைந்த நன்றி.

      Delete
  43. நல்லதொரு பகிர்வு! நன்றி!
    இன்று என் தளத்தில்
    நினைவுகள்! கவிதை!
    http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_27.html
    நடிகை சுஜிபாலா தற்கொலைமுயற்சி காரணம் இயக்குனரா?
    http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_3738.html

    ReplyDelete
    Replies
    1. பகிர்வை ரசித்துப் பாராட்டிய உங்களுக்கு என் இதய நன்றி.

      Delete
  44. சிறப்பானதொரு திருவிழாவை அட்டகாசமா நடத்தியதோடு மட்டுமல்லாமல் பதிவில் நிகழ்வுகளை கண்முன் கொண்டு வர செய்திருக்கிறீர்கள் மிக்க நன்றி (நாம கலந்துக்க முடியலங்கர ஏக்கம் இருந்தாலும் லைவ் ஸ்டீரிமில் கண்டு களித்தோம் கைகுடுக்க முடியலயே..)

    ReplyDelete
    Replies
    1. நேரலையில் கண்டு ரசித்ததோடு இங்கும் எங்களைப் பாராட்டிய உங்களுக்கு என் இதயம் நிறைந்த நன்றி. விரைவில் இன்னொரு பதிவர் சந்திப்பில் கைகுலுக்கலாம் நாம்.

      Delete
  45. கணேஷ்! உங்களின் மனம் போல குறை ஏதுமில்லாமல் மிக பிரம்மாண்டமாக நடத்தி விட்டீர்கள்! இணையத்தை இதயமூலமாக இணைத்து உன்னதமான வைபவமாக நடத்திய உங்களுக்கும், மதுமதி ,சசிகலா, சென்னை பித்தன் சாருக்கும் புலவர் அவர்களுக்கும் மற்றும் விழாக்குழுவினருக்கும் எனது பாராட்டுகளும் வாழ்த்துக்களும்! அனைவரும் வாழ்க வளமுடன்!!

    ReplyDelete
    Replies
    1. எங்களை வாழ்த்தி, பாராட்டிய உங்களுக்கு மனநெகிழ்வுடன் என் நன்றி நண்பா.

      Delete
  46. என்ன சார்....எப்பவும் முடிக்கிற மாதிரி இதையும் முடிச்சிடீங்க..மெகா சீரியல் மாதிரி இழுப்பீங்க அப்படின்னு பார்த்தா....பொசுக்குனு போச்சே...அப்புறம் உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி...மறக்காமல் கோவை வரும் போது அழையுங்கள்....சந்திப்போம்.....

    ReplyDelete
    Replies
    1. உங்களுடன் இன்னும நிறைய உரையாட ஆசை இருந்தும் முடியானப் போயிட்டுது ஜீவா. பதிவர் சந்திப்பு பதிவு இன்னும் ஒண்ணு உண்டு. அதிவிரைவில் கோவையில் உங்களை சந்திக்கிறேன். நன்றி.

      Delete
  47. மகிழ்ச்சி என்கிற சொல்லை அதன் முப்பரிமாணத்தில் அனுபவிக்கிற வாய்ப்பு கிடைத்ததற்கு வாழ்த்துகள்!.

    ReplyDelete
    Replies
    1. மனமகிழ்வுடன் என்னை வாழ்த்திய. என்றும் எனக்கு ஊக்கத் தரும் உங்களுக்கு என் நெகிழ்வான நன்றி.

      Delete
  48. விழா சிறப்பாக நடைபெற்றது குறித்து நேற்றே திரு ரேகா ராகவன் அவர்களுடன் பேசினேன். இன்றும் உங்களுடன் பேசியதில் மகிழ்ச்சி.

    நேற்று காலை நிகழ்ச்சிகளை நேரடி ஒளிபரப்பில் பார்த்து மகிழ்ந்தேன் கணேஷ். மதியம் அலுவலகம் சென்றுவிட்டதால் பார்க்க முடியவில்லை. காணொளி பார்க்க ஏதாவது வாய்ப்பு இருந்தால் நன்று....

    விழா சிறப்பாக நடந்தேறியதில் மகிழ்ச்சி. பாடுபட்ட உங்கள் அனைவருக்கும் பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. ரேகா ராகவன் சாருடன் நிறைய அளவளாவ விரும்பியும் கூட எனக்கு அதற்கான வாய்ப்புகள் அமையாததில் வருத்தம் வெங்கட். காணொளி விரையில் கிடைக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. மகிழ்வுடன் எங்களைப் பாராட்டிய உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.

      Delete
  49. நிறைவான தொகுப்பு.பகிர்விற்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. ரசித்துப் படித்துக் கருத்திட்ட தங்களுக்கு மனம் நிறைந்த நன்றி.

      Delete
  50. ஒரு பதிவர் சந்திப்ப இப்படிக்கூட பகிர முடியுமா...... ? இந்த பதிவ படிச்சதும் கலந்துக்க முடியலையேன்னு மனசுல இருந்துக்கிட்டிருந்த ஏக்கம் பாதி போய்டுச்சு....
    நன்றி.....

    ReplyDelete
    Replies
    1. ஆஹா.. உங்கள் வார்த்தைகள் உற்சாகத்தை நிரப்புகிறது என்னுள். மிக்க நன்றி நண்பா.

      Delete
  51. // மதிய நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கிய சுரேகா அவர்களின் ஸ்பான்டேனியஸான பேச்சும், இயல்பான ந்கைச்சுவையும் கலந்த பேச்சு அரங்கை களைகட்டச் செய்தது. //

    உங்கள் அன்புக்கு மிக்க நன்றி அண்ணே !

    ஆனால்..எனக்கு மட்டும் ஒரு உறுத்தல் இருந்துகொண்டே இருக்கிறது. நீங்கள் சொன்ன ஒரு விஷயத்தை, கடைசி நேரப் பரபரப்பில் சொல்ல விட்டுவிட்டேன். என்னை மன்னித்துவிடுங்கள்!!

    ReplyDelete
    Replies
    1. அதனாலென்ன நண்பா... வருத்தம் ஏதுமில்லை. சந்தோஷம்தான் மனமெங்கும் ததும்பி நிற்கிறது. உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  52. பதிவர் மாநாடு என்றாலே, தலைக்கவசம் அணிந்துதான் செல்லவேண்டும் என்று சகபதிவர்
    ஒருவர் கூறுவார். முதன்முறையாக அப்படி பாதுகாப்புக்கு பங்கம் வராத வகையில் நடத்திக்
    காட்டிய பதிவுலக நண்பர் கணேஷும், நிகழ்ச்சி அமைப்பாளர்கள் அனைவரும் பாராட்டுக்குரியவர்கள்!

    ReplyDelete
    Replies
    1. என்க்கு மகிழ்வும் உற்சாகமும் தந்த உங்களின் கருத்துக்கு மனம் நிறைந்த நன்றி.

      Delete
  53. நேற்று வலைப்பூவின் வாசம் நுகர முடியவில்லை இன்று தான் பார்த்தேன் உங்களின் உணர்வு பூர்வமான வரிகளுக்குள் சிக்கி கொண்டிருகிறது மனது இன்னும் .........உங்களின் எளிமை பெரும் வியபிற்குள்ளாக்கியது நிறைகுடம் எப்போதும் தழும்புவதில்லை உங்கள் பனி சிறப்பிற்குரியது ........மனது இன்னும் அகலவில்லை அந்த விழா நாட்களில் இருந்து உங்களை பார்த்தது என் பாக்கியம்

    ReplyDelete
    Replies
    1. என்னை நிறைகுடம் என்று சொல்லி பெருமைப்படுத்தியிருக்கிறீர்கள் தோழி. இயல்பாக அன்பு ததும்பப் பேசிய உங்களின் நட்பின் வாசமும் சொற்களை வைத்து சித்து விளையாடிய உங்களின் கவிதையும் என்றும் என் இதயத்தினை விட்டு நீங்காது. உங்களுக்கு என் இதயம் நிறைந்த நன்றி.

      Delete
  54. மிகவும் ரசித்துப்படித்தேன்.
    http://dohatalkies.blogspot.com/2012/08/one-flew-over-cuckoos-nest.html

    ReplyDelete
    Replies
    1. ரசித்துப் படித்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.

      Delete
  55. விழா நல்லா நடந்தது கணேஷ். உங்களுடன் அதிகம் பேச இயலவில்லை. மீண்டும் சிந்திப்போம்

    ReplyDelete
    Replies
    1. ஆம். அதிகம் பேச இயலாமல் போனதில் எனக்கும்தான் வருத்தம் அதிகம் எல்.கே. விரைவில் மீண்டும் சந்திக்கலாம். உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  56. விழா பற்றிய விவரம் நன்றி
    மகிழ்ச்சி. காலையில் கொஞ்சம் பார்த்தேன்
    மதிய இடைவேளைக்குப் பின் பார்க்கவில்லை.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
    Replies
    1. விழாவின் நேரலையைக் கண்டு ரசித்து கருத்திட்ட உங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றி.

      Delete
  57. கணேஷ் இந்தப்பதிவைப்படிக்கும்போது மருபடியும் புண்ணிய கோடி மண்டபத்துக்குள்ளயே போயீட்டேன் அவ்வளவு தரூபமான பதிவு. நான்
    இதுபோல பதிவர் சந்திப்பில் முதல் முறையாக கலந்து கொண்டேன்
    எழுத்து மூலமே அறிமுக மாகி இருந்த பலரையும் நேரில் சந்த்தித்து
    பேசி சிரித்து மகிழ்ந்தது பரவசமான நிக்ழ்ச்சி.வாழ்க்கையில் மறக்கவே முடியாத
    சந்தோஷமான நெகிழ்ச்சியான பெருமையான தருணங்கள் . இதுபோல
    மறுபடியும் ஒரு சந்திப்பு எப்போ வரும் என்று ஏங்கவே வைத்து விட்டது.
    நிரைய பேருடன் தனியாக பேசமுடியவில்லை சீக்கிரமே கிலம்ப வேண்டிய
    நிலமை. மனசு பூராவும் சந்தோஷம் நிறம்பி இருக்கு. அதற்க்காக உழைத்த
    நண்பர்களுக்கு நன்றியும் பாராட்டுக்களும் வாழ்த்துகளும் சொல்லிக்கரேன்

    ReplyDelete
    Replies
    1. ஆம். எங்களுக்கும் கூட மனதில் அப்படி ஒரு ஏக்கம் இருக்கிறது - இதுபோல் ஒரு நாள் இனி வருமா என்று. மனம் நிறைந்து வாழ்த்தின உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  58. தேனீ போன்று சுறு சுறுப்பாக அங்குமிங்கும் ஓடி தாங்கள் பணியாற்றியதை பாராட்டுகிறேன். தங்களின் திருக்கரத்தால் எனக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்த போது அளவில்லா ஆனந்தமடைந்தேன். மீண்டும் சந்தித்து அளவளாவும் தருணத்தை எதிர் நோக்கிக் காத்திருக்கிறேன். மொத்தத்தில் பதிவர்கள் திருவிழா ஒரு வெற்றித்திருவிழா.

    ரேகா ராகவன்.

    ReplyDelete
    Replies
    1. ஐயா... ஒரு மூத்த பதிவரை, அதிலும் எனக்குப் பிடித்த உங்களை கவுரவிக்கும் பாக்கியம் அமைந்ததில் உண்மையில் எனக்குததான் பெருமகிழ்ச்சி. நிறையப் பேச நினைத்திருந்தேன் அன்று அமையவில்லை. நிச்சயம் விரைவில் நான் தங்களைச் சந்திக்க வருவேன். மிக்க நன்றி.

      Delete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube