Friday, December 23, 2011

எல்லோருக்கும் பிடித்த MGR

Posted by பால கணேஷ் Friday, December 23, 2011
 ‘வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிற்பவர் யார்?’ என்றும் ‘இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும். இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்’ என்றும் தான் பாடிய பாடல்களுக்கு நடைமுறை உதாரணமாக வாழ்ந்து மறைந்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகன் நான். அவரது நினைவு நாளான இன்று - டிசம்பர் 24 - அவரை நினைவு கூர்வதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

* கர்ணன் படத்தில் சிவாஜிக்கு முன்னால் எம்.ஜி.ஆரிடம்தான் நடிக்கக் கேட்டார்கள். ‘புராணப் படம் பண்ண வேண்டாம்’ என்று அண்ணா சொன்னதால் மறுத்து விட்டார் எம்.ஜி.ஆர்.

* சிகரெட் பிடிப்பது மாதிரி நடிப்பதைக்கூடத் தவிர்த்தவர் எம்.ஜி.ஆர். ‘நினைத்ததை முடிப் பவன்’ படத்தி்ல சிகரெட்டை வாயில் வைப்பார், இழுக்க மாட்டார்.     
 * முதலமைச்சர் பதவியை ஏற்றுக் ‌கொண்டபின் ஷுட்டிங் போக முடியாது என்பதால் பதவியேற்பு விழாவையே 10 நாட்கள் தள்ளி வைத்துவிட்டு (அவர் நடித்த கடைசிப் படமான) ‘மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்’ படத்தை முடித்துக் கொடுத்தார்.

• நம்பியாரும் அசோகனும்தான் எம்.ஜி.ஆருக்குப் பிடித்த வில்லன்கள்.

* எம்.ஜி.ஆருடன் அதிகப் படங்களில் நடித்தவர் சரோஜா தேவி. அடுத்தது ஜெயலலிதா.
• எம்.ஜி.ஆரும் கருணாநிதியும் இணைந்து வெற்றி பெற்ற ‘மலைக் கள்ளன்’ ஜனாதிபதி விருது வாங்கிய முதல் தமிழ் சினிமா. இந்தியாவில் உள்ள பெரும்பாலான மொழிகளில் எடுக்கப்பட்ட படம் அது.

* நாடோடி மன்னன், உலகம் சுற்றும் வாலிபன், மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் என்று மூன்று படங்களை இயக்கியிருக்கிறார் எம்.ஜி.ஆர். 


• எம்.ஜி.ஆர். எத்தனையோ குழந்தைகளுக்குப் பாதுகாவலராக இருந்து படிக்க வைத்தால். அதில் முக்கியமான இருவர் அரசியலைக் கலக்கிய துரைமுருகன், சினிமாவைக் கலக்கிய கோவை சரளா.

* கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ கதையைத் தமிழி லும் ஆங்கி லத்திலும் எடுக்க நினைத்தார் எம்.ஜி.ஆர். ஆங் கிலத்தில் அண்ணாவை வசனம் எழுதும் படி கேட்டுக் கொண்டார். ஆனால் அவர் ஆசை நிறை வேறவில்லை.
• அறிமுகம்    இல்லாத புதிய நபர்களைச் சந்தித்தால் “நான் எம்.ஜி.ராமச்சந்திரன், சினிமா நடிகன்” என்று அறிமுகம் செய்து கொள்ளுமளவுக்கு எளிமையானவர் எம்.ஜி.ஆர்.

* தன் ராமாவரம் தோட்டத்தில் ஆடு, மாடு, கோழி, நாயுடன் ஒரு சிங்கத்தையும், கரடியையும் வளர்த்தார் எம்.ஜி.ஆர். இவற்றைக் கவனிக்க தனி டாக்டரையும் நியமித்திருந்தார்.
• மிகவும் நெருக்கமானவர் களை ‘ஆண்டவனே’ என்று தான் அழைப்பார் எம்.ஜி.ஆர்.
 * ‘அடிமைப் பெண்’ ஷுட்டிங்கிற்காக ஜெய்ப்பூர் போன எம்.ஜி.ஆர். குளிருக்காக வெள்ளைத் தொப்பி அணிந்தார். அது பிடித்துப் போனதுடன், நன்றாக இருக்கிறதென்று அனைவரும் பாராட்டவே அதைத் தொடர்ந்து அணிய ஆரம்பித்தார் எம்.ஜி.ஆர்.

• எம்.ஜி,ஆர். காலில் விழுந்து வணங்கிய பெருமை உடையவர்கள் இருவர். ஒருவர் கத்திச் சண்டை, இரட்டை வேட நடிப்பு இவற்றில் எம்.ஜி.ஆருக்கு இன்ஸ்பிரேஷனாக இருந்த நடிகர் எம்.கே.ராதா. மற்றொருவர் இந்திப்பட இயக்குனர் சாந்தாராம்.

* முழுக்கை சில்க் சட்டை, லுங்கி அணிந்து தொப்பி, கண்ணாடி இல்லாமல் தானே காரை டிரைவ் செய்து எப்போதாவது சென்னையை வலம் வருவது எம்.ஜி.ஆரின் வழக்கம். ‘‘யாருக்கும் என்னைத் தெரியலை. தொப்பி, கண்ணாடி இருந்தாத்தான் கண்டுபிடிப்பாங்க போல’’ என்பாராம்!

• தன் அன்னையான சத்யா அவர்களை வணங்க ராமாவரம் தோட்டத்துக்குள்ளேயே கோயில் வைத்திருந்தார் எம்.ஜி.ஆர்.  
* ‘நான் ஏன் பிறந்தேன்?’ என்ற தலைப்பில் தன் சுயசரிதையை (முதல்வராவதற்கு முந்தைய காலகட்டத்தில்) எழுதியிருக் கிறார் எம்.ஜி.ஆர்.
• எம்.ஜி.ஆர். நடத்த 50 படங்களுக்குப் பாடல்கள் எழுதியவர் கண்ணதாசன். அவர் எழுதிய ‘அச்சம் என்பது மடமையடா, அஞ்சாமை திராவிடர் உடமையடா’ என்ற பாடல் எம்.ஜி.ஆரின் காரில் எப்போதும் ஒலித்த பெருமையுடையது.
   

* எம்.ஜி.ஆர்.1936ல் சதி லீலாவதி என்ற படத்தின் மூலம் நடிகராகி 1977ல் ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ படம் வரை மொத்தம் 136 படங்களில் நடித்தார்.

• தமிழ் சினிமா ரசிகர்கள் பற்றி 1970ல் எம்.ஜி.ஆரின் கமெண்ட் : “அந்தக் காலத்து ரசிகர்கள் மாதிரி இப்ப உள்ளவங்க இல்ல. 10 நிமிஷங்களுக்கு ஒரு க்ளைமாக்ஸ் கேட்குறாங்க. அப்படி வெச்சாத்தான் படம் ஓடும்.”
 

நன்றி : ஆனந்தவிகடன் பழைய இதழ்கள்.

51 comments:

  1. அருமை.
    பகிர்வுக்கு நன்றி .
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. எம்.ஜி.ஆர் பற்றிய சினிமா துணுக்குகளை படிக்கும் வாய்ப்பு இல்லாமல் போய்விட்டதே என்ற ஏக்கம் இருந்ததுண்டு..அதை இப்போது புதுப்பித்து கொடுத்தமைக்கு நன்றி..

    ReplyDelete
  3. அற்புதமான படங்களை கொண்ட அருமையான நினைவஞ்சலி. எம்.ஜீ.ஆர். படங்கள் என்றாலே ஜாலியாக இருக்கும். மிகவும் ரசித்து பார்ப்பேன். இவருக்கு எவ்வளவு அற்புதமான ரசனை என்பதை இவரது படங்களின் பாடல் காட்சிகளில் காணலாம். சண்டை காட்சிகளும் மிகவும் பிரமாதமாக இருக்கும். மலைக்கள்ளன், குலேபகாவலி போன்ற அந்த கால படங்களில் இவரை இன்றும் மிகவும் ரசிப்பேன். ஆயிரத்தில் ஒருவன், குடியிருந்த கோவில், உலகம் சுற்றும் வாலிபன், அன்பே வா போன்ற படங்களை எத்தனை முறை பாத்திருப்பேன் என்ற கணக்கே இல்லை. அவ்வளவு முறை பார்த்திருக்கிறேன். இவருக்கு 'காதல் சக்கரவர்த்தி' என்ற பட்டத்தை கொடுக்காமல் விட்டது பெரும் தவறென்றே சொல்லுவேன். :) ஏனென்றால் எல்லாம் அவ்வளவு அருமையான பாடல்கள், அதற்கேற்ற காட்சிகள், இதற்கு இணையாக ஓவர் ஆக்டிங் இல்லாத இவரது நடிப்பு.

    ReplyDelete
  4. இதுவரை தெரிந்திராத சுவாரசியமான தகவல்கள். நன்றி!
    (எழுத விட்டு போச்சு! :))

    ReplyDelete
  5. M.G.R patri ariya thagavalgal niraiya therindhu konden. Kuripaga Thurai Muruganaiyum, Kovai saralavaiyum padika vaithadhu M.G.Rthan enbathu pudhu thagaval. Pagirvuku nanri anna.

    ReplyDelete
  6. ஆம் நண்பரே ...
    சுறுசுறுப்பு என்றால், துருதுருப்பு என்றால் நடிகர்களில்
    அவர் தான்,,,,
    அவரின் வாழ்வின் நிகழ்ச்சிகளை அவரின் குணங்களையும்
    தொகுத்துத் தந்தமை அழகு
    நன்றிகள் பல நண்பரே.

    ReplyDelete
  7. சூப்பர் தொகுப்பு. கேமிரா கோணம் பார்க்கும் கவுன் போட எம் ஜி ஆர் படம் அருமை! 'இருந்தாலும் மறைந்தாலும்' வரி எனக்கு மிக மிக பிடித்த வரி. அவர் நடித்த படங்களில் வரும் பலப்பல பாடல்கள் பாடம். உன்னை அறிந்தால், மலை போலே வரும் சோதனை யாவும் போன்ற வரிகள் உடனடி நினைவுக்கு வருவன...

    ReplyDelete
  8. எம்ஜிஆர் அவர்களின் ரசிகர்களில் நானும் ஒருவன்.பல படங்களை பார்த்து ரசித்திருக்கிறேன்.
    நல்ல தகவல்களாக கொடுத்துள்ள தங்களுக்கு எனது நன்றி மற்றும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. @ நண்டு @நொரண்டு -ஈரோடு said...

    -முதல் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி சார்!

    ReplyDelete
  10. @ மதுமதி said...

    -புரட்சித் தலைவரை ரசித்த கவிஞருக்கு என் இதய நன்றி!

    ReplyDelete
  11. @ மீனாக்ஷி said...

    -கரெக்ட்தாங்க மீனாக்ஷி் மேடம்! எம்.ஜி.ஆரின் பாடல்களைப் பார்த்தாலே உற்சாகம் உண்டாகும். அந்தளவுக்கு ரசனையான ட்யூன்கள், அழகான படப்பிடிப்பு என அசத்தியிருப்பார். (குமரிக் கோட்டம் படத்துல மனோகர் கையில இருக்கற குச்சில கைய வெச்சுட்டு, கால் ரெண்டையும் ஆகாயத்துல தூக்கி ஒரு ஜிம்னாஸ்டிக் சண்டை பண்ணுவார் பாருங்க... சான்ஸே இல்லை!) உங்கள் ரசனைக்கு என் இதய நன்றி!

    ReplyDelete
  12. @ ராஜி said...

    -ஆமாம் தங்கச்சி. தெரிஞ்சும் தெரியாமயும் பலரோட வாழ்க்கைல விளக்கேற்றி வெச்சவர் அவர். வள்ளல் என்ற பட்டத்துக்கு முற்றிலும் பொருத்தமானவர். கருத்திட்டமைக்கு என் மனமார்ந்த நன்றி!

    ReplyDelete
  13. @ மகேந்திரன் said...

    -சரியாகச் சொன்னீர்கள் நண்பரே... அவரது படங்கள் பார்ப்பவர்களுக்கும் உற்சாக இன்ஜெக்ஷன் போடக் கூடியவை. உங்கள் ரசனைக்கு என் இதய நன்றி நண்பரே...!

    ReplyDelete
  14. @ ஸ்ரீராம். said...

    -‘புத்தன் ஏசு காந்தி பிறந்தது’ பாடலில் ‘பொருள் கொண்ட பேர்கள் அருள் கொண்டதில்லை. தரும் கைகள் தேடி பொருள் வந்ததில்லை’ன்னு பாடுவார். எனக்கு மிகப் பிடித்த வரிகள் ஸ்ரீராம் சார். அப்புறம்... ‘ஒருவன் மனது ஒன்பதடா, அதில் ஒளிந்து கிடப்பது எண்பதடா’ன்னு ஒரு வாத்யார் பாடல் கேட்டுப் பாருங்களேன்... அருமையாக இருக்கும்! வருகைக்கும் கருத்துக்கும் மனமார்ந்த நன்றி சார்!

    ReplyDelete
  15. @ Kumaran said...

    -வெல்கம் குமரன் சார்! உங்களின் வருகைக்கும் ரசித்ததற்கும் என் இதயம் கனிந்த நன்றி!

    ReplyDelete
  16. கணேஷின் கைவண்ணம் என்றைக்குமே ரசனைக்குரியது. புரட்சித்தலைவரைப்பற்றிய இடுகையும் அப்படியே படங்கள் தூள்!

    ReplyDelete
  17. ‘பதவி வரும்போது பணிவு வரவேண்டும் துணிவு வரவேண்டும் தோழா’ என்பது போன்ற காலத்திற்கும் அழியாத கருத்துக்களை, திரைப்படத்தில் பாடல்கள் மூலம் சொல்லி, மக்களின் மனதில் நிரந்தர இடத்தில் உள்ள புரட்சி நடிகர், மக்கள் திலகம் எம்.ஜி‌.ஆர் அவர்களின் ரசிகர்களில் நானும் ஒருவன். இந்த நாளில் அவரை நினைவு கூர்ந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  18. @ ஷைலஜா said...

    -படங்கள் தேடித்தான் ரொம்ப மெனக்கெட்டேன். அது உங்களுக்குப் பிடிச்சிருந்ததுல மிகமிக மகிழ்கிறேன் அக்கா!

    ReplyDelete
  19. @ வே.நடனசபாபதி said...

    -நல்ல நல்ல கருத்துக்களை பாடலின் மூலம் சொல்ல வேண்டும் என்ற உந்துதலும் அதற்கான தகுதியும் கொண்டவர் மக்கள்திலகம் மட்டுமே! உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் என் மனமார்ந்த நன்றி!

    ReplyDelete
  20. அருமையான படங்கள் ..
    பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..

    ReplyDelete
  21. காலத்தால் மறக்கபட முடியாதவர் மக்கள் திலகம் அருமையான பகிர்வு பாஸ்

    ReplyDelete
  22. எம் ஜி ஆரை எனக்கு ரொம்ப பிடிக்கும் அவர் பட பாடல்கள் படங்கள் இன்றும் ரசிக்க தக்கவை பகிர்வுக்கு நன்றி சார்

    என் தளத்திற்கும் நேரமிருக்கும் போது வருகை தாருங்கள்

    ReplyDelete
  23. நான் அறிந்திராத பல தகவல்கள்..
    பகிர்வுக்கு நன்றி தோழர்..

    ReplyDelete
  24. @ இராஜராஜேஸ்வரி said...

    படங்களும் விஷயமும் பிடிச்சிருந்ததா? மிக மிக நன்றி.

    ReplyDelete
  25. @ K.s.s.Rajh said...

    -ஆமாம் ராஜ். அவர் ‘காலத்தை வென்றவர்’ ஆயிற்றே. இன்றும் பலர் மனங்களில் வாழ்கிறார். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ராஜ்!

    ReplyDelete
  26. @ r.v.saravanan said...

    -உங்களுக்கு மட்டுமா..? எல்லோருக்கும் பிடித்தவர் என்பதால் தானே அதை தலைப்பாக வைத்தேன். ஸாரி சரவணன்... மூன்று நாட்களாக சொந்த வேலைகள் காரணமாக வலைப்பக்கம் வந்து நண்பர்களின் படைப்புகளை பார்க்க இயலாத சூழல். நாளை சரியாகி விடும். அவசியம் வருகிறேன். நன்றி.

    ReplyDelete
  27. @ !* வேடந்தாங்கல் - கருன் *! said...

    -வாங்க நண்பரே... நீங்க ரசித்ததில் மிக்க மகிழ்ச்சி. கருத்துக்கு நன்றி.

    ReplyDelete
  28. மிகவும் அருமை! பல விசயங்கள் தெரியாதவை! அவரின் (அவருக்காக எழுதியவர்களுக்கு நன்றி) தத்துவ பாடல்கள் மிகவும் பிடிக்கும். படங்கள் அருமை!
    பகிர்விற்கு நன்றி Sir!
    சிந்திக்க :
    "உங்களின் மந்திரச் சொல் என்ன?"

    ReplyDelete
  29. வணக்கம்!

    //எம்.ஜி.ஆர். எத்தனையோ குழந்தைகளுக்குப் பாதுகாவலராக இருந்து படிக்க வைத்தால். அதில் முக்கியமான இருவர் அரசியலைக் கலக்கிய துரைமுருகன், சினிமாவைக் கலக்கிய கோவை சரளா.//
    எனக்கு புதிய செய்தி. பழைய நினைவலைகளை புதிய புகைப்பட பிரிண்டுகளில் தந்தமைக்கு நன்றி!

    ReplyDelete
  30. எனக்குப் பிடித்த நல்ல ஒரு மறக்கமுடியாத மனிதர் பற்றி மீண்டும் ஒரு நினைவுப் பதிவு.
    நன்றி உங்களுக்கு !

    ReplyDelete
  31. அபூர்வத் தகவல்கள் அடங்கிய
    சிறப்புப் பதிவு வழக்கம்போல் அருமையிலும் அருமை
    இந்த நாளில் அவரை நினைவு கூர்வதன் மூலம்
    நாமும் கொஞ்சம் நம்மை தலைவரைப் போல்
    ஏழைகளின் பால் இரக்கம் கொள்ள முயல்வோம்
    த.ம 10

    ReplyDelete
  32. மக்கள் திலகம் பற்றிப் பலரும் அறிந்திராத பல சுவையானத் தகவல்களைத் தொகுத்தளித்ததற்கு நன்றி. குடிக்காமல், புகைக்காமல் ஒரு கதாநாயகனாய், ரசிகர்களுக்கு முன்னோடியாய் அவர் இருந்ததைப் பாராட்டியே ஆகவேண்டும்.

    ReplyDelete
  33. @ திண்டுக்கல் தனபாலன் said...

    -உங்கள் வருகைக்கும் ரசித்ததற்கும் நன்றி நண்பரே...

    ReplyDelete
  34. @ தி.தமிழ் இளங்கோ said...

    -பழைய நினைவலைகளை புதிய பிரிண்ட்! வார்த்தையே அழகாக இருக்கிறது தமிழ் இளங்கோ ஸார்! வருகைக்கும் ஊக்கப்படுத்தியதற்கும் என் இதய நன்றி!

    ReplyDelete
  35. @ ஹேமா said...

    -எல்லோருக்கும் பிடித்த அந்த மாமனிதரைப் பற்றி ரசித்துப் படித்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!

    ReplyDelete
  36. @ Ramani said...

    -நீங்க சொல்றது சரியே. இரக்க குணத்தை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் என் மனமார்ந்த நனறி!

    ReplyDelete
  37. @ கீதா said...

    -நிஜ வாழ்வுலயும் புகைக்காம, குடிக்காம அவர் இருந்ததாலதான் மத்தவங்களுக்கு படத்துல அட்வைஸ் பண்ற தகுதி அவருக்கு இருந்தது. அந்த நல்ல விஷயத்தைப் பாராட்டறதோட, கடைப்பிடிச்சும் வரணும். உங்களின் கருத்துக்கு என் இதயபூர்வமான நன்றி!

    ReplyDelete
  38. / ‘வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிற்பவர் யார்?’ என்றும் ‘இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும். இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்’ என்றும் தான் பாடிய பாடல்களுக்கு நடைமுறை உதாரணமாக வாழ்ந்து மறைந்த../

    உண்மை. ஒரு தலைமுறையைத் தன் பாடல்களால் நிமிர்ந்தியவர். ஏழைகளிடம் கனிவு காட்டியவர். இன்றும் அவரை தெய்வமாக வணங்குபவரும், வாத்தியராகப் போற்றுபவரும் உள்ளனர். நல்ல தொகுப்பு.

    ReplyDelete
  39. @ ராமலக்ஷ்மி said...

    -நான் விரும்பிப் படிப்பவற்றில் உங்கள் முத்துச்சரத்திற்குத் தனியிடம் உண்டு. நீங்கள் இதை ரசித்தது எனக்கு மிகமிக மகிழ்வைத் தருகிறது. நன்றிங்க...

    ReplyDelete
  40. பாடல்கள் என்றால் எம் ஜி ஆர் தான்.. துள்ளாட்டம் போட வைக்கின்றன எப்போதும்.
    நிறைய தகவல்கள் படிக்க சுவாரசியமாய் பதிவு

    ReplyDelete
  41. @ ரிஷபன் said...

    -மக்கள் திலகத்தில் பாடல்களை எத்தனை முறை பார்த்தாலும் எனக்குச் சலிப்பதில்லை ரிஷபன் ஸார். உங்களுக்கும் பிடித்தவை அவை என்பதில் மகிழ்கிறேன். தட்டிக் கொடுத்ததற்கு நன்றி.

    ReplyDelete
  42. @ சென்னை பித்தன் said...

    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் என் மனமார்ந்த நன்றி ஸார்!

    ReplyDelete
  43. மூன்றெழுத்தில் வாழ்ந்த மனிதர்...பலருக்கு வாழ்க்கை கொடுத்தவர்...உங்க் மூலம் இன்னும் பல தகவல்கள் தெரிந்து கொண்டேன் நன்றி!

    ReplyDelete
  44. பெருமைக்குரியவர். நல்ல இடுகை. வாழ்த்துகள் சகோதரா. பிந்திய நத்தார் வாழ்த்தும், இனிய புத்தாண்டு வாழ்த்துகளும்
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  45. @ விக்கியுலகம் said...

    -உங்கள் வருகைக்கும் என்னை ஊக்கப்படுத்தியதற்கும் மனமார்ந்த நன்றி சார்!

    ReplyDelete
  46. @ kovaikkavi said...

    -நல்ல இடுகை எனப் பாராட்டிய சகோதரிக்கு நன்றியும், என் இதயம் நிறைந்த புத்தாண்டு வாழ்த்துக்களும்!

    ReplyDelete
  47. நானெல்லாம் சிவாஜி ரசிகையாமே...ஆனாலும் உங்க பதிவை ரசிச்சேன். எம்.ஜி.ஆர் படங்கள் என்றால் ஒரு குஷி light hearted. அதெல்லாம் தாண்டி முத்து முத்தா வரிகளோட அற்புதமான பாடல்கள் :)

    ReplyDelete
  48. @ Shakthiprabha said...

    -சிவாஜி மிகை நடிப்பில்லாம நடிச்ச படங்களுக்கு நானும் ரசிகன்தான். கட்சி, வயசு பேதமில்லாம எல்லாரும் எம்.ஜி.ஆர் பாட்டுக்களுக்கு ரசிகர்கள் இல்லயா... உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க ஷக்தி!

    ReplyDelete
  49. இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும். இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும். நடித்ததோடு நிறுத்தாமல் வாழ்ந்து காட்டிய வள்ளல்.

    ReplyDelete
  50. @ ரசிகன் said...

    கரெக்ட் ரசிகன் ஸார்! அரசியல்ல அவரோட கருத்து வேறுபாடு இருந்தாலும் வள்ளல்ங்கறதுலயும் குழந்தைங்க மேல வெச்ச பிரியத்துலயும் எல்லாரும் அவரை விரும்புவாங்க. இல்லையா? உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் என் இதய நன்றி!

    ReplyDelete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube