Saturday, December 3, 2011

ஜெ. சினிமா நடிகையான கதை-2

Posted by பால கணேஷ் Saturday, December 03, 2011
சென்ற பதிவில் இன்றைய முதல்வர் ஜெயலலிதா அவர்கள் சினிமா நடிகையான வரலாற்றை அவரது தாயார் சந்தியா கொடுத்திருந்த பேட்டியின் ஒரு பகுதியை வெளியிட்டிருந்தேன். சென்ற பதிவைப் படிக்காதவர்கள் இங்கே சொடுக்கி படித்துக் கொள்ளலாம். இனி, அந்தப் பேட்டியின் தொடர்ச்சி :

‘‘அம்முவின் படிப்பு கெடக் கூடாது. அவளுக்குக் கோடை விடுமுறை வரும் வரை காத்திருப்பீர்களா?’’ என்று ஒப்புக்குக் கேட்டேன். அவர்களும் உடனே, ‘‘ஆகட்டும்’’ என்றார்கள். மேலும் மூன்று மாதங்கள் ஓடிவிட்டன. அம்முவுக்குக் கோடை விடுமுறையும் வந்தது. அதே தயாரிப்பாளர்கள் திரும் பவும் வந்தனர். 
      ‘‘தொடர்ந்து நடிக்கச் செய்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி... உங்கள் மகளை இந்த முறை மட்டும் நடிக்க அனுமதியுங்கள்’’ என்று கேட்டனர். என் நிலைமை தர்மசங்கடமாகி விட்டது. ‘அம்முவை நடிக்க அனுமதிக்க வேண்டியது தானா?’ என்ற எண்ணம் எழுந்தது. அம்முவிடமும் கேட்டேன்.

‘‘நான் திறமையாக நடிப்பேன் என்று உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் எனக்கு ஆட்சேபணை இல்லை’’ என்றாள். விடுமுறை நாட்கள்தானே என்று அம்முவை நடிக்க அனுப்பி வைத்தேன்.

நான் நடித்திருந்த ‘கர்ணன்’ தமிழ்த் திரைப்படத்தின் 100வது நாள் விழாவுக்குப் போயிருந்தேன். என்னுடன் அம்முவும் வந்திருந்தாள். அப்போது அம்முவைப் பார்த்த திரு.சிவாஜிகணேசன், அவள் பிற்காலத்தில் பெரிய நடிகையாக வருவாள் என்று வாழ்த்தினார்.

அம்முவைக் கண்ட தயாரிப்பாளர் - டைரக்டர் பி.ஆர்.பந்துலு அவர்கள், அம்முவை அவரது படத்தில் நடிக்க அனுமதிக்க வேண்டும் என்று என்னிடம் கேட்டார். நான் வழக்கம்போல் மறுத்தேன். கோடை விடுமுறையிலேயே படப்பிடிப்பை முடித்துக் கொள்வதாகக் கூறினார். ‘முரடன் முத்து’ என்ற கன்னடப் படம் அது. கல்யாண்குமார்தான் ஹீரோ. அம்மு நடிக்க ஒப்பந்தம் ஆனாள்.

னாரஸ் மெட்ரிக் ரிசல்ட் வந்தது. பரீட்சையில் நிறைய மார்க்குகள் வாங்கியிருந்த அம்முவுக்கு மேற்படிப்புக்கு சிறப்பு ஸ்காலர்ஷிப் கொடுத்தார்கள். அம்முவும் கல்லூரியில் சேர்ந்து இரண்டு நாட்கள் சென்றும் வந்தாள். அப்போது ஒரு பெரிய திருப்பம் ஏற்பட்டது.

தாசிரியர் - டைரக்டர் திரு.ஸ்ரீதர் அவர்கள் அம்முவுக்குத் தன் படத்தில் கதாநாயகியாக நடிக்க அழைப்பு விடுத்தார். திரு.பந்துலு அவர்கள் ‘ரஷ்’ படத்தில் அம்முவின் நடிப்பைப் பார்த்திருக்கிறார். ‘புகழும் திறமையும் உள்ள ஒரு முன்னணி டைரக்ட ரிடமிருந்து ஒரு வாய்ப்புக் கிடைத் துள்ளது.

இதைப் பயன்படுத்திக் கொண்டு அம்முவை நடிக்கச் செய்வதா அல்லது தொடர்ந்து படிக்கச் செய்வதா?’ எனக்கு ஒரு பெரிய பிரச்சனை மீண்டும் ஏற்பட்டு விட்டது. என் குடும்ப நண்பர்கள், என் நல்வாழ்வில் அக்கறை கொண்டோர் அனைவரிடமும் இது பற்றி ஆலோசனை செய்தேன்.


அம்முவுக்குப் படிப்பா? நடிப்பா? இதை முடிவு செய்ய வேண்டிய நெருக்கடியான நிலை எனக்கு.


என் தந்தையோ, ‘‘குழந்தை நன்றாகப் படிக்கிறாள். நீயும் உன் தங்கையும் (வித்யாவதி) சினிமாவில் நடிப்பது போதாதா? அம்முவை ஏன் சினிமாத் துறைக்கு வரச் செய்கிறாய்?’’ என்று தன் எதிர்ப்பைத் தெரிவித்தார். முடிவில் அம்முவைத் தேடி வந்த வாய்ப்பை நழுவவிட வேண்டாம் என்று தீர்மானித்து அம்முவை நடிக்க அனுமதித்தேன். (அந்தத் திரைப்படம்தான் ‘வெண்ணிற ஆடை‘) அம்முவைப் பொறுத்தவரை சந்தர்ப்பங்கள் அவளைத் தேடித்தான் வந்தது. அதற்கு அடுத்த படத்தில் மக்கள் திலகத்தின் கதாநாயகியாக ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தில் நடித்தாள்.

அம்மு நடிக்க வேண்டும் என்று நான் விரும்பவில்லை. அம்முவுக்கும் படிப்பில்தான் மிகுந்த விருப்பம். அப்படி இருந்தும் அம்மு நடிப்புத் துறைக்கு வந்துவிட்டாள் என்றால் அதை விதியின் வலிமை என்றுதானே கூற முடியும்?

என் மகள் அகில உலக நட்சத்திரமாக வளர வேண்டும் என்பதுதான் என் ஆசை.

-1964ம் ஆண்டு குமுதத்தில் ஜெயலலிதாவின் தாயார் சந்தியாவின் பேட்டி.

கோவாவுக்கு அருகில் இருந்த கார்வாரில் ‘ஆயிரத்தில் ஒருவன்’ ஷுட்டிங். கார்வாரில் வேறுவேறு விடுதிகளில் தங்கியிருந்த படக்குழுவினர் அனைவரும் படகுத் துறையில் ஒன்றுகூடி அங்கிருந்து 25 கி.மீ. தொலைவில் கடலுக்கு நடுவிலிருந்த தீவுக்குச் செல்ல வேண்டும்.  ஒருநாள் ஜெயலலிதா வரத் தாமதமானது. அவருடைய டூப் அணிந்திருந்த உடைகளை வைத்து அவர் வந்ததாக எண்ணிய தயாரிப்பு நிர்வாகி ஓகே சொல்ல, படகு புறப்பட்டுச் சென்று விட்டது.

படகுத்துறைக்கு வந்த ஜெயலலிதாவைக் கண்ட தயாரிப்பு நிர்வாகி சுப்பிரமணியத்திற்கு அதிர்ச்சி. அனைவரும் புறப்பட்டுச் சென்று விட்டதை அறிந்த ஜெயலலிதாவிற்கு அழுகை அழுகையாக வந்தது. வேறு படகு கிடைக்குமாவென்று சுப்பிரமணியம் விசாரித்துப் பார்த்தும் எதுவும் கிடைக்கவில்லை. அப்போது உள்ளூர்க்காரர் ஒருவர் யோசனை ‌சொன்னார்: ‘‘இங்கிருந்து ரோடு வழியாக பதினைந்து கி.மீ. தூரம் போனால் மீன் பிடிப்பவர்கள் அந்த தீவுப் பக்கம் குறுக்கு வழியாகச் செல்லும் இடம் வரும். அங்கிருந்து 3 கி.மீ. தொலைவில்தான் தீவு இருக்கிறது. கட்டுமரத்தில் போய் விடலாம்’’ என்று கூறினார்.

அப்படியே செய்தார்கள். மூன்று கிலோமீட்டர் தூரம்தான் என்றாலும் அலையடிக்கும் கடலில் நிலையற்று ஆடும் கட்டுமரத்தில் பயணம் செய்யத் துணிச்சலும் மன வலிமையும் நிறைய இருக்க வேண்டும். அவை இரண்டுமே ஜெயலலிதாவிடம் நிறைய இருந்தன. மோட்டார் படகில் சென்றவர்கள் தீவுக்குச் சற்று முன்பாகவே படகை நிறுத்திவிட்டு, கரைக்குச் செல்ல சிறிய துடுப்புப் படகுகள் வந்துசேர்வதற்காக காத்திருந்தார்கள். தங்களுக்கு முன்பாகவே கட்டுமரத்தில் ஜெயலலிதா செல்வதைப் பார்த்து ஆச்சரியம் அடைந்தார்கள்.

ஜெயலலிதாவின் உடையும் ஒப்பனையும் கடல் நீர் வாரியடித்ததில் நனைந்து விட்டிருந்தன. எம்.ஜி.ஆர். வந்ததும், ‘‘ஒரே ஆச்சரியமா இருக்கு. எங்களுக்கு முன்னாடி எப்படி வந்தே?’’ என்று கேட்டார். அதுவரை அடக்கி வைத்திருந்த ஆத்திரமும், அழுகையும் பீறிட்டுக் கொண்டு வெளிப்பட்டன ஜெயலலிதாவிடமிருந்து. நடந்ததை விளக்கினார். எம்.ஜி.ஆரின் மோதிரக் கையால் அன்று குட்டுப்பட்டார் தயாரிப்பு நிர்வாகி. படக் குழுவிலிருந்த அனைவருமே ஜெய லலிதாவின் துணிச்சலைக் கண்டு ஆச்சரியப்பட்டு அவரைப் பாராட்டினார்கள்.

பின்னிணைப்பு :  செல்வி ஜெயலலிதா சில பாடல்களையும் பாடியிருக்கிறார். 1974ல் வெளியான ‘வைரம்’ திரைப்படத்தில் தேன்குரல் தென்றல் எஸ்.பி.பி.யுடன் அவர் பாடிய இந்த டூயட் எனக்கு மிகவும் பிடிக்கும். நீங்களும் இங்கே சொடுக்கி தரவிறக்கி கேட்டு மகிழலாம். (இனிமையான இசையை வழங்கிய புண்ணியவான் யாரென்றுதான் எனக்குத் தெரியவில்லை).

30 comments:

 1. புதிய புதிய தகவலுடன் அறிய தொகுப்பு...
  வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 2. ரசித்துப் படித்தேன்.

  ReplyDelete
 3. //படக் குழுவிலிருந்த அனைவருமே ஜெய லலிதாவின் துணிச்சலைக் கண்டு ஆச்சரியப்பட்டு அவரைப் பாராட்டினார்கள்.//

  அந்தத் துணுச்சல்தான் இன்று அவரை உயரத்தில் வைத்திருக்கிறது!
  நன்றி.

  ReplyDelete
 4. கவிதை வீதி... // சௌந்தர் // said...
  புதிய புதிய தகவலுடன் அறிய தொகுப்பு... வாழ்த்துக்கள்..

  -வாழ்த்துக்களுக்கும் வருகைக்கும் நன்றி நண்பரே...

  ReplyDelete
 5. அப்பாதுரை said...
  ரசித்துப் படித்தேன்.

  -உங்கள் ரசனைக்கு என் சல்யூட்! நன்றி ஐயா...

  ReplyDelete
 6. சென்னை பித்தன் said...
  //படக் குழுவிலிருந்த அனைவருமே ஜெய லலிதாவின் துணிச்சலைக் கண்டு ஆச்சரியப்பட்டு அவரைப் பாராட்டினார்கள்.//

  அந்தத் துணுச்சல்தான் இன்று அவரை உயரத்தில் வைத்திருக்கிறது! நன்றி.

  -ஆமாம் சார்! இப்பவும் துணிச்சலுக்குப் பேர் பெற்றவங்களாத்தான் இருக்காங்க... நன்றி சார்...

  ReplyDelete
 7. புதிய தகவல்களை சுவைபடத் தந்துள்ளீர்கள்.வாழ்த்துக்கள்!.

  இரு மாங்கனி என்ற அந்த பாடலை எழுதியவர் கவிஞர் கண்ணதாசன்.
  அந்த பாடலுக்கு இசை அமைத்தவர் திரு T.R.பாப்பா அவர்கள்.

  ReplyDelete
 8. வே.நடனசபாபதி said...

  புதிய தகவல்களை சுவைபடத் தந்துள்ளீர்கள்.வாழ்த்துக்கள்!.
  இரு மாங்கனி என்ற அந்த பாடலை எழுதியவர் கவிஞர் கண்ணதாசன்.
  அந்த பாடலுக்கு இசை அமைத்தவர் திரு T.R.பாப்பா அவர்கள்.

  -அழகான அந்த ட்யூனுக்கு உரியவர் யாரென்று தெரியாமல் இருந்த எனக்கு புரிய வைத்த உங்களுக்கு மனமார்ந்த நன்றி.

  ReplyDelete
 9. புதிய தகவலை அறிந்துகொண்டேன்.அருமையான தகவல்கள். பாடல் அருமை...
  வாழக் வளமுடன்
  வேலன்.

  ReplyDelete
 10. வேலன். said...
  புதிய தகவலை அறிந்து கொண்டேன். அருமையான தகவல்கள். பாடல் அருமை... வாழக் வளமுடன்
  வேலன்.

  -பாடல் உங்களுக்குப் பிடித்திருந்ததில் மகிழ்ச்சி. வருகைக்கு நன்றி நண்பரே...

  ReplyDelete
 11. அம்முவுக்குப் படிப்பா? நடிப்பா?

  மலரும் நினைவுகளான பகிர்வுகள்..

  சுவாரஸ்யமான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

  ReplyDelete
 12. ஜெயின் மனவுறுதி சொல்லும் அந்த நிகழ்வு ஆச்சர்யமாயிருந்தது. நல்ல தகவல்கள். சூர்யகாந்தி படத்திலும் எஸ் பி பியுடன் இணைந்து அவர் பாடியுள்ளார். (நானென்றால் அது அவளும் நானும்) டி எம் எஸ் அவர்களுடனும் பாடல்கள் பாடியுள்ளார்! (சித்திர மண்டபத்தில் - அன்பைத் தேடி)

  ReplyDelete
 13. இராஜராஜேஸ்வரி said...
  அம்முவுக்குப் படிப்பா? நடிப்பா?
  மலரும் நினைவுகளான பகிர்வுகள்..
  சுவாரஸ்யமான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

  -மிக்க நன்றிங்க...

  ReplyDelete
 14. ஸ்ரீராம். said...
  ஜெயின் மனவுறுதி சொல்லும் அந்த நிகழ்வு ஆச்சர்யமாயிருந்தது. நல்ல தகவல்கள். சூர்யகாந்தி படத்திலும் எஸ் பி பியுடன் இணைந்து அவர் பாடியுள்ளார். (நானென்றால் அது அவளும் நானும்) டி எம் எஸ் அவர்களுடனும் பாடல்கள் பாடியுள்ளார்! (சித்திர மண்டபத்தில் - அன்பைத் தேடி)

  -ஜெ.யின் மன உறுதி அனைவரும் அறிந்தது தானே... சூர்யகாந்தி பாடல் தெரியும். அன்பைத் தேடி பாடல் பார்த்ததி்ல்லை. யூ டியூபில் தேடிப் பார்க்கிறேன். தகவலுக்கு நன்றி!

  ReplyDelete
 15. மலரும் நினைவுகள் மணக்கிறது.

  நடிகையாக, அரசியல்வாதியாக மட்டுமே அவரை நான் அறிந்திருக்கிறேன். பாடகியாக எனக்கு அறிமுகம் செய்ததற்கு நன்றி அய்யா.

  ReplyDelete
 16. பழைய நிகழ்வுகளை புதிய தகவல்களாக மிக சுவாரஸ்யமாக அளித்திருக்கின்றீர்கள்.

  ஜெயலலிதாவைப்போன்றே அவரது குரலும் மிகவும் அழகுதான்.மிக சொற்பமாக சினிமாவில் பாடி இருக்கின்றார்.எனக்கு பிடித்த இந்தப்பாடலையும் கேளுங்கள்.கண்டிப்பாக உங்களுக்கு மட்டுமில்லாமல் கேட்பவர்க்கெல்லாம் பிடிக்கும்.

  ReplyDelete
 17. மிக இனிமையான குரல்வளம் ஜெயலலிதாவுக்கு.
  பன்முகத் திறமை கொண்டவர் தான் அவர்.
  பகிர்வுக்கு மிக்க நன்றி

  ReplyDelete
 18. அருமையான ஒரு பேட்டியை அசத்தலாக கொடுத்திருக்கிறீர்கள் சார்.

  ReplyDelete
 19. சுவாரசியமான பேட்டி. அதுவும் நிறைய தகவல்களோடு.

  ReplyDelete
 20. ரசிகன் said...
  மலரும் நினைவுகள் மணக்கிறது.
  நடிகையாக, அரசியல்வாதியாக மட்டுமே அவரை நான் அறிந்திருக்கிறேன். பாடகியாக எனக்கு அறிமுகம் செய்ததற்கு நன்றி அய்யா.

  -வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

  ReplyDelete
 21. பழைய நிகழ்வுகளை புதிய தகவல்களாக மிக சுவாரஸ்யமாக அளித்திருக்கின்றீர்கள்.

  ஜெயலலிதாவைப்போன்றே அவரது குரலும் மிகவும் அழகுதான்.மிக சொற்பமாக சினிமாவில் பாடி இருக்கின்றார்.எனக்கு பிடித்த இந்தப்பாடலையும் கேளுங்கள்.கண்டிப்பாக உங்களுக்கு மட்டுமில்லாமல் கேட்பவர்க்கெல்லாம் பிடிக்கும்.

  -அம்மா என்றால் அன்பு கேட்டு/பார்த்து ரசிச்சிருக்கேன். திருமாங்கல்யம் பாடல்தான் எனக்குப் புதுசு. ரொம்ப நல்லா இருக்கும்மா... ரசிச்சதுக்கும், பாட்டுக்கும் நன்றி.

  ReplyDelete
 22. ரஹீம் கஸாலி said...
  அருமையான ஒரு பேட்டியை அசத்தலாக கொடுத்திருக்கிறீர்கள் சார்.

  -மிக்க நன்றி தம்பி. நான் அனுப்பிய ஈமெயில் கிடைத்ததா? கணேஷுடன் பேச: 98406 11370/90300 36166.

  ReplyDelete
 23. ரிஷபன் said...
  சுவாரசியமான பேட்டி. அதுவும் நிறைய தகவல்களோடு.

  -வருகைக்கு நன்றி ரிஷபன் சார். நீங்கள் ரசித்ததில் எனக்கு மகிழ்வு.

  ReplyDelete
 24. சிவகுமாரன் said...
  மிக இனிமையான குரல்வளம் ஜெயலலிதாவுக்கு.
  பன்முகத் திறமை கொண்டவர் தான் அவர். பகிர்வுக்கு மிக்க நன்றி

  -ஆமாங்க சிவகுமாரன் சார்... அரசியல் தவிர்த்த அவர் திறமைகளுக்கு நான் ரசிகன். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  ReplyDelete
 25. வரலாற்று தொகுப்பு தொடர். சில தகவல்களை அறிய உதவியாக உள்ளது.

  ReplyDelete
 26. சத்ரியன் said...
  வரலாற்று தொகுப்பு தொடர். சில தகவல்களை அறிய உதவியாக உள்ளது.

  -தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

  ReplyDelete
 27. 'ஜெ' அவர்களைப் பற்றி தெரியாத தகவல்கள். பகிர்வுக்கு நன்றி சார்!

  ReplyDelete
 28. @ திண்டுக்கல் தனபாலன்

  -நீங்கள் ரசித்ததில் மகிழ்ச்சி! உங்களுக்கு என் நன்றி!

  ReplyDelete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
 • Youtube