இன்றைய தமிழக முதலமைச்சரான ஜெயலலிதா புரட்சித் தலைவி, அம்மா என்று எத்தனையோ பட்டங்களால் அழைக்கப்பட்டாலும் திரைப்படத் துறையில் புகழ் பெற்ற நடிகையாக இருந்தபோது அவர் கலைச் செல்வி ஜெயலலிதா என்றுதான் அழைக்கப்பட்டார். திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்ற எண்ணமே இல்லாமல் இருந்த ஜெயலலிதாவை திரைத் துறைக்கு அழைத்து வந்தது விதி. (இன்று அரசியலில் பலராலும் திட்டப்பட்டுக் கொண்டிருக்கும் முதல்வர் ஜெ.வைப் பற்றியது அல்ல இக்கட்டுரை. திரை நட்சத்திரம் பற்றியதே...)
1964ம் ஆண்டு குமுதம் இதழில் ஜெயலலிதாவின் தாயார் நடிகை சந்தியா எப்படி தன் மகள் ஜெயலலிதாவுக்கு சினிமா வாய்ப்புக்கள் வந்தது என்பதையும், அவர் நடிகையான பின்ணணியையும் கூறி விரிவாக ஒரு பேட்டி கொடுத்து இருக்கிறார். இந்த விவரங்கள் தெரியாத இளைய தலைமுறையினருக்காக இங்கே அந்தப் பேட்டியைக் கொடுத்துள்ளேன் :
என் மகள் அம்மு - ஜெயலலிதா - திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்று நான் முதலில் விரும்பவில்லை. சிறு குழந்தையாக இருக்கும் போதே அம்மு எதையும் எளிதில் புரிந்து கொள்ளும் திறமையைப் பெற்றிருந்தாள். படிப்பில் அம்மு கெட்டிக்காரி. வகுப்பில் அவள்தான் முதல் மாணவி! படித்துப் பட்டம் பெற வேண்டும் என்ற ஆர்வம் அம்முவுக்கு இருந்தது. அவள் விரும்பியவாறு நிறையப் படிக்கட்டும் என்றுதான் நானும் எண்ணினேன்.
ஜெ.வின் தாயார் சந்தியா |
சிறு வயதில் ரேடியோவில் ஒலிபரப்பாகும் இசையைக் கேட்டால் அதற்கேற்ப நடனமாடத் தொடங்குவாள் அம்மு. நடனத்தின் மீது அவளுக்குள்ள ஆர்வத்தை ஏன் வீண் அடிக்க வேண்டும் என்று நினைத்த நான், நடன ஆசிரியை திருமதி கே.ஜே.சரசாவிடம் அம்முவுக்கு நடனம் சொல்லிக் கொடுக்க ஏற்பாடு செய்தேன். அம்மு விரைவாகக் கற்றுத் தேறியதால் அவளுடைய நடன அரங்கேற்றத்தையும் ஏற்பாடு செய்து நடத்தினேன்.
சென்னை சர்ச் பார்க் கான்வென்ட்டில் அம்மு படிக்கும் போதே அவளுக்கு நாடகத்தில் நடிக்க அழைப்பு வந்தது. அதுவும் ஆங்கில நாடகம். திரு.ஒய்.ஜி.பார்த்தசாரதி குழுவினர் நடத்திய நாடகம் அது. ஆங்கில மொழியை நன்கு அறிந்து சரளமாகப் பேசும் அம்முவுக்கு அந்த நாடகத்தில் ஆங்கிலம் பேசத் தெரியாத பிரெஞ்சுப் பெண்ணின் வேடம் கிடைத்தது. இந்த நாடகத்தில் வி்ல்லனாக நடித்தவர் சோ. அனைவரும் அம்முவின் நடிப்பைப் பாராட்டினார்கள்.
சற்றேறக்குறைய இதே சமயத்தில் திரு.சங்கர் கிரி (ஜனாதிபதி திரு.வி.வி.கிரி அவர்களி்ன் மகன்) ஆங்கிலத்தில் டாக்குமெண்டரி படம் ஒன்றைத் தயாரிக்க ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்தார். அதில் கதாநாயகியாக நடிக்க ஆங்கிலம் நன்றாகப் பேசத் தெரிந்த ஒரு பெண்ணைத் தேடிக் கொண்டிருந்தார்.
சற்றேறக்குறைய இதே சமயத்தில் திரு.சங்கர் கிரி (ஜனாதிபதி திரு.வி.வி.கிரி அவர்களி்ன் மகன்) ஆங்கிலத்தில் டாக்குமெண்டரி படம் ஒன்றைத் தயாரிக்க ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்தார். அதில் கதாநாயகியாக நடிக்க ஆங்கிலம் நன்றாகப் பேசத் தெரிந்த ஒரு பெண்ணைத் தேடிக் கொண்டிருந்தார்.
அம்முவின் நடிப்பைப் பாராட்டிய திருமதி. ஒய்.ஜி.பி., திரு.சங்கர் கிரியிடம் அம்முவை சிபாரிசு செய்திருக்கிறார். திரு.சோ அவர்களும் அம்முவின் நடிப்பை சங்கர் கிரியிடம் புகழ்ந்து கூறி, ‘‘உங்கள் படத்தில் அம்மு சிறப்பாக நடிப்பாள்’’ என்று சொல்லி இருக்கிறார்.
அம்முவை தனது டாக்குமெண்டரி்ப் படத்தில் நடிக்க என்னிடம் அனுமதி கேட்டார் சங்கர் கிரி. ‘‘அம்மு சினிமாவில் நடிப்பதை நான் விரும்பவில்லை’’ என்று அவரிடம் சொன்னேன். ‘‘இது ஒரு டாக்குமெண்டரிப் படம். உங்கள் மகளின் படப்பிடிப்புக்கு இடையூறு ஏற்படாமல் சனி, ஞாயிறு போன்ற விடுமுறை நாட்களில் படப்பிடிப்பை நடத்திக் கொள்கிறேன். உங்கள் மகளுக்கும் இது ஒரு நல்ல பொழுதுபோக்காக இருக்கும்’’ என்றார்.
சனி, ஞாயிறுகளில் படப்பிடிப்பு, அதுவும் ஆங்கிலப் படம். இரண்டையும் எண்ணிப் பார்த்த நான் சம்மதித்தேன். அந்தப் படம்தான் ‘எபிசில்’. படப்பிடிப்பு தொடங்கியது.
அப்போது நான் ‘நன்ன கர்த்தவ்யா’ என்ற கன்னடப் படத்தில் நடித்து வந்தேன். அதில் எனக்கு மாமியார் வேடம். படத்தின் கதாநாயகி ஒரு பால்ய விதவை. அந்த வேடத்தில் நடிக்க களை சொட்டும் முகமுடைய ஓர் இளம் நடிகையைத் தயாரிப்பாளர்கள் தேடி வந்தனர்.
சனி, ஞாயிறுகளில் படப்பிடிப்பு, அதுவும் ஆங்கிலப் படம். இரண்டையும் எண்ணிப் பார்த்த நான் சம்மதித்தேன். அந்தப் படம்தான் ‘எபிசில்’. படப்பிடிப்பு தொடங்கியது.
அப்போது நான் ‘நன்ன கர்த்தவ்யா’ என்ற கன்னடப் படத்தில் நடித்து வந்தேன். அதில் எனக்கு மாமியார் வேடம். படத்தின் கதாநாயகி ஒரு பால்ய விதவை. அந்த வேடத்தில் நடிக்க களை சொட்டும் முகமுடைய ஓர் இளம் நடிகையைத் தயாரிப்பாளர்கள் தேடி வந்தனர்.
அவர்கள் தேடிய வண்ணம் கதாநாயகி கிடைக்காததால் அந்தப் பாத்திரம் சம்பந்தப்பட்ட சில காட்சிகளை விட்டுவைத்து விட்டு படத்தில் வரும் மற்ற காட்சிகளைப் படம் எடுத்துக் கொண்டிருந்தார்கள்.
ஒருநாள் என்னிடம் கால்ஷீட் வாங்க தயாரிப்பாளர்கள் வந்தபோது தற்செயலாக அம்முவைப் பார்த்து விட்டனர். ‘‘நாங்கள் தேடிய முகப் பொலிவுள்ள கதாநாயகி இதோ இங்கேயே இருக்கிறாரே.. உங்கள் பெண்ணையே எங்கள் கதாநாயகியாப் போடப் போகிறோம்’’ என்றனர். ஆனால் நான் அதற்கு சம்மதம் அளிக்கவில்லை.
ஒருநாள் என்னிடம் கால்ஷீட் வாங்க தயாரிப்பாளர்கள் வந்தபோது தற்செயலாக அம்முவைப் பார்த்து விட்டனர். ‘‘நாங்கள் தேடிய முகப் பொலிவுள்ள கதாநாயகி இதோ இங்கேயே இருக்கிறாரே.. உங்கள் பெண்ணையே எங்கள் கதாநாயகியாப் போடப் போகிறோம்’’ என்றனர். ஆனால் நான் அதற்கு சம்மதம் அளிக்கவில்லை.
ஆறு மாதங்கள் சென்றிருக்கும். மீண்டும் அவர்கள் என்னிடம் வந்தனர். ‘‘இன்னும் எங்கள் படத்திற்குக் கதாநாயகி அமையவில்லை. உங்கள் பெண்ணையே தயவுசெய்து நடிக்க அனுமதியுங்கள்’’ என்று கேட்டுக் கொண்டனர். நீண்ட நேரம் யோசித்து ஒரு முடிவுக்கு வந்தேன்.
அம்முவை நடிக்க வைப்பது என்று அவர் முடிவெடுத்தார் என்பதும், இரண்டாவது படத்திலேயே எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக நடத்து பிரபல நடிகையானதும் அனைவருக்கும் தெரிந்த விஷயமாக இருந்தாலும் அது அவ்வளவு எளிதில் நடந்து விடவில்லை. அதிலும் ஒரு சிக்கல் இருந்தது. அதையும், ஆயிரத்தில் ஒருவன் படப்பிடிப்பில் நடந்த ஒரு சுவாரஸ்ய அனுபவத்தையும் அடுத்த பதிவில் வெளியிடுகிறேன். அதுவரை சற்றுப் பொறுத்திருங்கள் நண்பர்களே...!
|
|
Tweet | ||
இந்த வரலாறு தெரியாதே... இப்போ தெரிஞ்சுகிட்டேன். பகிர்ந்தமைக்கு நன்றி சார்.
ReplyDeleteஎனது வலைப்பூ இன்று முதல் புதிய டொமைனுக்கு மாறுகிறது:
வலையுலக நண்பர்களே, எனது வலைப்பூ பற்றி ஓர் அறிவிப்பு
அன்பு கணேஷ் சார்
ReplyDeleteமிகவும் சுவாரஸ்யமான
தகவல் ....அதனை தங்கள்
கொடுத்திருக்கும் விதம் அதாவது
வடிமைப்பு சூப்பர் .
ரசித்து படித்து இந்த கருத்தை
சொல்கிறான்
அன்புடன்
யானை குட்டி
தமிழ் நாட்காட்டி
சூப்பர்
அன்பு கணேஷ் சார்
ReplyDeleteமிகவும் சுவாரஸ்யமான
தகவல் ....அதனை தங்கள்
கொடுத்திருக்கும் விதம் அதாவது
வடிமைப்பு சூப்பர் .
ரசித்து படித்து இந்த கருத்தை
சொல்கிறான்
அன்புடன்
யானை குட்டி
தமிழ் நாட்காட்டி
சூப்பர்
தலைவி அழகோ அழகு!! சுவாரஸ்யமா எழுதறீங்க கணேஷ்..படங்கள் அட்டகாசம்.
ReplyDeleteநம்ம முதல்வர் அவர்கள் சினிமா துறைக்கு எப்படி வந்தார் என வாலாறு எனக்கு தெரியாது. தெரிய வைப்பதற்கு நன்றிகள்..
ReplyDeleteதொடருங்கள் சகோ..
பகிர்வுக்கு நன்றி,
முன்பு குமுதம் இதழில் படித்த ஞாபகம் இருக்கின்றது. மீண்டும் நினைவு படுத்தியதற்கு நன்றி.
ReplyDeleteகாத்திருந்தாப் போச்சு...!
ReplyDeleteதமிழ்வாசி பிரகாஷ் said...
ReplyDeleteஇந்த வரலாறு தெரியாதே... இப்போ தெரிஞ்சுகிட்டேன். பகிர்ந்தமைக்கு நன்றி சார்.
-நன்றி நண்பா... உங்கள் புதிய டொமைன் பார்த்தேன். அருமை...
யானைகுட்டி @ ஞானேந்திரன் said...
ReplyDeleteஅன்பு கணேஷ் சார்
மிகவும் சுவாரஸ்யமான தகவல் ....அதனை தங்கள் கொடுத்திருக்கும் விதம் அதாவது வடிமைப்பு சூப்பர். ரசித்து படித்து இந்த கருத்தை சொல்கிறான்.
அன்புடன். யானை குட்டி
தமிழ் நாட்காட்டி சூப்பர்
-நன்றி நண்பரே... ரொம்ப நாளாச்சு உங்களைப் பார்த்து. மனம் விட்டுப் பாராட்டிய தங்களின் பாராட்டுக்கு மிக்க நன்றி.
ஷைலஜா said...
ReplyDeleteதலைவி அழகோ அழகு!! சுவாரஸ்யமா எழுதறீங்க கணேஷ்..படங்கள் அட்டகாசம்.
-நன்றிக்கா... ஜெ. என்ற தலைவியை விட ஜெயலலிதா என்ற திரைத் தாரகையை எனக்குப் பிடிக்கும். நடனத்தில் வல்லவர். படங்களும் உங்களுக்குப் பிடிச்சிருந்ததில் மகிழ்ச்சி.
வேடந்தாங்கல் - கருன் *! said...
ReplyDeleteநம்ம முதல்வர் அவர்கள் சினிமா துறைக்கு எப்படி வந்தார் என வாலாறு எனக்கு தெரியாது. தெரிய வைப்பதற்கு நன்றிகள்..
தொடருங்கள் சகோ..
-ஊக்கமளிக்கும் கருத்துக்கு மிக்க நன்றி கருன் சார்...
kg gouthaman said...
ReplyDeleteமுன்பு குமுதம் இதழில் படித்த ஞாபகம் இருக்கின்றது. மீண்டும் நினைவு படுத்தியதற்கு நன்றி.
-கரெக்ட் சார். பழைய காலத்து குமுதம் படிக்காதவர்களுக்காக அவ்வப்போது தர இன்னும் சில ஆச்சரிய தகவல்களை தொகுத்து வைத்துள்ளேன். நன்றி!
ஸ்ரீராம். said...
ReplyDeleteகாத்திருந்தாப் போச்சு...!
-வெல்கம் ஸ்ரீராம் சார்... உங்களின் கருத்து எனக்குத் தெம்பூட்டுகிறது. இன்னும் நிறைய நல்ல விஷயங்கள் தரவேண்டும் என்ற உற்சாகத்தையும் தருகிறது. நன்றி!
சுவாரசியமா எழுதி இருக்கீங்க .
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி
அம்மாவோட வரலாறு நல்லாத் தான் இருக்கு.
நம்மளோடது தான் சொல்லிகிராப்பல இல்லை.
ஜெயலலிதா என்னும் நடிகையை எனக்கு மிகவும் பிடிக்கும். மேஜர் சந்திரகாந்த், யார் நீ?போன்ற படங்களில் அவரது அழகையும் நடிப்பையும் கண்டு பிரமித்திருக்கிறேன். புதிய பூமி திரைப்படத்தில் அவரது நடனம் மிகவும் ரசிக்கத்தக்க வகையில் இருக்கும். மொத்தத்தில் திறமையான நடிகை. தொடர்ந்துவரும் பகுதிகளுக்காகக் காத்திருக்கிறேன். பகிர்வுக்கு நன்றி.
ReplyDeleteசிவகுமாரன் said...
ReplyDeleteசுவாரசியமா எழுதி இருக்கீங்க. பகிர்வுக்கு நன்றி
அம்மாவோட வரலாறு நல்லாத் தான் இருக்கு. நம்மளோடது தான் சொல்லிகிராப்பல இல்லை.
-பாராட்டியதற்கு நன்றி சிவகுமாரன் சார். நம்ம வரலாறும் சொல்லிக்கறாப்பல ஒருநாள் ஆகும். கொஞ்ச காலம் காத்திருக்கணும். அவ்வளவதான். சரிதானே...
கீதா said...
ReplyDeleteஜெயலலிதா என்னும் நடிகையை எனக்கு மிகவும் பிடிக்கும். மேஜர் சந்திரகாந்த், யார் நீ?போன்ற படங்களில் அவரது அழகையும் நடிப்பையும் கண்டு பிரமித்திருக்கிறேன். புதிய பூமி திரைப்படத்தில் அவரது நடனம் மிகவும் ரசிக்கத்தக்க வகையில் இருக்கும். மொத்தத்தில் திறமையான நடிகை. தொடர்ந்துவரும் பகுதிகளுக்காகக் காத்திருக்கிறேன். பகிர்வுக்கு நன்றி.
-ஆமாங்க. அவங்க டான்ஸ் எனக்கும் பிடிக்கும். உங்க வருகைக்கு மிக்க நன்றி!
நல்லபதிவு தோழரே! உங்கள பணிசிறக்க வாழ்த்துக்கள்!
ReplyDeleteஇது ஒரு அழகிய நிலா காலம்! ( பாகம் 1 ) இது எனது கற்பனையில் உதித்ததாக இருந்தாலும் இது நிஜமானால் எவ்வளவு சந்தோசமாக இருக்கும் என்று என்மனம் ஏங்குகிறது. ஒவ்வொரு தமிழனின் மனமும் ஏங்கும் என்று நம்புகிறேன்.இதை கதையாக எண்ணி எழுதவும் இல்லை! இது ஒரு வரலாறாக மாறவேண்டும் என்பதே எனது நோக்கம். உங்கள் சிந்தனைகள் தொகுக்கப்படுகின்றன. தமிழர் சிந்தனை களத்தை உருவாக்குவதே இந்த ஆவணத்தின் நோக்கம் நம்பிக்கையோடு தொடர்வோம் please go to visit this link. thank you.
தமிழகத்தை தாக்கும் சுனாமி! தமிழக மக்களே! சிந்தியுங்கள்! மீண்டும் ஒரு சுதந்திர போராட்டத்திற்கு தயாராகுங்கள்! மக்களின் நலனில் அக்கறையில்லாத வட இந்திய ஹிந்தி அரசு முல்லை பெரியாறு அணை முதல் கூடங்குளம், தமிழக மீனவர் பிரச்சனை, காவேரி பிரச்சனை, ஹிந்தி மொழி திணிப்பு, என்று தமிழகத்தை தொடர்ந்து குறிவைத்து தாக்கும் சுனாமியாக திகழ்ந்து வருகிறது. தமிழக மக்கள் அடைந்த துன்பம் போதும். சிந்திப்பீர்! செயல்படுவீர்!. please go to visit this link. thank you.
தமிழர்களால் துரத்தி அடிக்கப்பட்ட தினமலர்!தமிழினத்தின் வீரமங்கை செங்கொடியின் நினைவிடத்திலே தமிழர் துரோக பத்திரிக்கையான தினமலருக்கு என்ன வேலை. அந்த விழாவின் நோக்கத்தை கொச்சைபடுத்தி செய்தி வெளியிடவா? அல்லது உனது விற்காத பத்தரிக்கைக்கு செங்கொடியின் செய்தியை போட்டு விளம்பரம் தேடவா? please go to visit this link. thank you.
இந்தியா உடையும்! ஆனா உடையாது!இந்தியா ஏன் உடைய வேண்டும்? உங்களுக்கு ஏன் இந்த கெடுமதி! என்று எண்ணத் தோன்றுகிறதா? அதற்க்கு நிறைய காரணங்கள் உண்டு. ஒன்று ஈழத்து பிரச்சனை, தமிழக மீனவர்கள் பிரச்சனை, காஷ்மீர் பிரச்சனை, சத்தீஸ்கர் பழங்குடி மக்களின் மீது நடத்தப்படும் தாக்குதல், போபால் விசவாய்வு, பாபர் மசூதி இடிப்பு, குஜராத் இனப்படுகொலை. இவை மட்டுமே போதும் இந்தியா உடைவதற்கு தேவையான காரணிகளில் மிக முக்கியமானவை.
please go to visit this link. thank you.
ஆபத்தானது! கூடங்குளம் அணுமின் நிலையமா? தினமலரா?ஈழத்தமிழர் போராட்டத்தையும், தமிழர்களின் போராட்டங்களையும் தேசவிரோதமாக, பயங்கரவாதமாக சித்தரித்து எழுதிவந்தது தினமலர். please go to visit this link. thank you
கொன்றவனை கொல்கிறவன் எங்களுக்கு மகாத்மா!ஈழத்து போராளிகளை கொன்று குவித்து, தமிழ் பெண்களின் கற்ப்பை சூறையாடி, சமாதான கொடி ஏந்தி வந்தவர்களையும் பொதுமக்களையும் கூண்டோடு கொலை செய்த கயவர்களை கொல்பவர்கள் யாரோ அவரே எங்களுக்கு மாகாத்மா please go to visit this link. thank you.
போலி தேசபக்தியின் விலை 2 இலட்சம் தமிழர்களின் உயிர்!நாம் கொண்டிரிருக்கும் மூடத்தனமான போலி தேசபக்தியின் விளைவு ஈழத்திலே இரண்டு இலச்சத்திற்கும் அதிகமான தமிழர்கள் கொல்லப்பட காரணமாக் அமைந்து விட்டது. please go to visit this link. thank you.
ஜெ(நடிகை) பற்றி அருமையான தொகுப்பு அடுத்த பகுதிக்கு வெயிட்டிங்
ReplyDeleteமாப்ள தொடருங்கள் காத்திருக்கிறேன்...நன்றி!
ReplyDeletePUTHIYATHENRAL said...
ReplyDeleteநல்லபதிவு தோழரே! உங்கள பணிசிறக்க வாழ்த்துக்கள்!
-வாழ்த்துக்கு நன்றி! நீங்கள் குறிப்பிட்ட நல்ல பதிவுகளை அவசியம் பார்க்கிறேன்.
K.s.s.Rajh said...
ReplyDeleteஜெ(நடிகை) பற்றி அருமையான தொகுப்பு அடுத்த பகுதிக்கு வெயிட்டிங்.
-வருக நண்பரே... ரசித்ததற்கு நன்றி. அடுத்த பகுதி நாளை (3ம் தேதி) வந்துவிடும். அதிகம் வெயிட் பண்ண வேண்டியதில்லை.
விக்கியுலகம் said...
ReplyDeleteமாப்ள தொடருங்கள் காத்திருக்கிறேன்...நன்றி!
-பதிவுலகில் சீனியரான உங்களின் வருகையும், பாராட்டும் எனக்கு மிகப் பெரிய புத்துணர்ச்சியைத் தந்திருக்கிறது. அதற்காக உங்களுக்கு என் இதய நன்றி சார்!
அறிந்திராத ப ல அறியத் தகவல்களை
ReplyDeleteதங்கள் பதிவின் மூலம் தெரிந்து கொண்டேன்
பதிவு சுவாரஸ்யமாகப் போகிறது
தொடர வாழ்த்துக்கள்
(இன்று அரசியலில் பலராலும் திட்டப்பட்டுக் கொண்டிருக்கும் முதல்வர் ஜெ.வைப் பற்றியது அல்ல இக்கட்டுரை. திரை நட்சத்திரம் பற்றியதே...)
ReplyDeleteதெளிவான விளக்கத்தை முன்பே தந்தமை நன்று..
காலம் ஒரு மனிதனை எவ்வாறெல்லாம் மாற்றிவிடுகிறது...!!!
ReplyDeleteRamani said...
ReplyDeleteஅறிந்திராத ப ல அறியத் தகவல்களை தங்கள் பதிவின் மூலம் தெரிந்து கொண்டேன். பதிவு சுவாரஸ்யமாகப் போகிறது. தொடர வாழ்த்துக்கள்.
-நீங்கள் ரசித்ததில் மகிழ்ந்தேன். வாழ்த்துக்கு மிக்க நன்றி சார்...
முனைவர்.இரா.குணசீலன் said...
ReplyDelete(இன்று அரசியலில் பலராலும் திட்டப்பட்டுக் கொண்டிருக்கும் முதல்வர் ஜெ.வைப் பற்றியது அல்ல இக்கட்டுரை. திரை நட்சத்திரம் பற்றியதே...)
தெளிவான விளக்கத்தை முன்பே தந்தமை நன்று..
காலம் ஒரு மனிதனை எவ்வாறெல்லாம் மாற்றிவிடுகிறது...!!!
-உண்மைதான் முனைவரையா... எம்ஜிஆருடன் நடித்த கலைச்செல்வியை ரசித்த போதெல்லாம் நான் அவர் பின்னாளில் முதல்வராவார் என்று நினைத்துக்கூட பார்த்ததில்லை. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
முதல்வரை பற்றி தெரியாத பல தகவல்களை தெரிந்து கொண்டேன். பகிர்வுக்கு நன்றி அண்ணா
ReplyDeleteசார் தெரியாத விஷயங்களை கூறி இருக்கிறீர்கள். தொடர்ந்து அறிவதற்கு ஆர்வமாக இருக்கிறேன். பழைய நடிகைகளில் என் மனங்கவர்ந்தவர் ஜெ தான்.
ReplyDeleteராஜி said...
ReplyDeleteமுதல்வரை பற்றி தெரியாத பல தகவல்களை தெரிந்து கொண்டேன். பகிர்வுக்கு நன்றி அண்ணா.
-வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி...
பாலா said...
ReplyDeleteசார் தெரியாத விஷயங்களை கூறி இருக்கிறீர்கள். தொடர்ந்து அறிவதற்கு ஆர்வமாக இருக்கிறேன். பழைய நடிகைகளில் என் மனங்கவர்ந்தவர் ஜெ தான்.
-வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி பாலா...
அருமையான புதுத்தகவல்கள்..
ReplyDeleteஅமைதிச்சாரல் said...
ReplyDeleteஅருமையான புதுத்தகவல்கள்..
-உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சிஸ்டர்...
இளைய தலைமுறையினருக்கு இந்த தொடர் நிச்சயம் பயனளிக்கும். வாழ்த்துக்கள் தலைவரே
ReplyDeleteஇந்த பதிவு மூலம் நிறைய விஷயங்களை நான் தெரிந்துகொண்டேன். பயனுள்ளதாகவும் இருக்கிறது. அமர்க்களமாக ஆரம்பிக்கப்பட்டிருக்கும் இது தொடரட்டும்.
ReplyDeleteரஹீம் கஸாலி said...
ReplyDeleteஇளைய தலைமுறையினருக்கு இந்த தொடர் நிச்சயம் பயனளிக்கும். வாழ்த்துக்கள் தலைவரே.
-மிக்க நன்றி கஸாலி சார்...
இந்த பதிவு மூலம் நிறைய விஷயங்களை நான் தெரிந்துகொண்டேன். பயனுள்ளதாகவும் இருக்கிறது. அமர்க்களமாக ஆரம்பிக்கப்பட்டிருக்கும் இது தொடரட்டும்.
-இதுக்கு இன்ஸ்பிரேஷனே நீங்கதான். எம்ஜிஆர் அரசியலுக்கு வந்த கதை நீங்க எழுதினதைப் படிச்சதும்தான் இதை வெளியிட எனக்குத் தோணிச்சு. நன்றி சார்...
பல புதிய தகவல்கள் நன்றி
ReplyDeleteஇன்று
நடிகர் விஜய் : நேற்று ! இன்று !! நாளை ?
அண்ணே... நான் உங்களை விட ரொம்ப இளையவன். சார் என்றெல்லாம் அழைத்து சங்கடப்பட வைக்காதீர். கஸாலி என்றோ, தம்பி என்றோ அழைத்தாலே போதும். மகிழ்சியடைவேன்
ReplyDeleteதெரியாத புதிய செய்திகளைத் தந்துள்ளீர்கள்.நன்றி.
ReplyDeleteஅடுத்த பதிவுக்கு காத்திருக்கிறேன்.
"என் ராஜபாட்டை"- ராஜா said...
ReplyDeleteபல புதிய தகவல்கள் நன்றி.
-வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ராஜா...
வே.நடனசபாபதி said...
ReplyDeleteதெரியாத புதிய செய்திகளைத் தந்துள்ளீர்கள்.நன்றி.
அடுத்த பதிவுக்கு காத்திருக்கிறேன்.
-என்னை உற்சாகப்படுத்தியதற்கு நன்றி சார். நாளை மதியம் அடுத்த பகுதியை நீங்கள் படிக்கலாம்.
பகிர்வுக்கு நன்றி சார்
ReplyDeleteவெண்ணிற ஆடை பார்த்து ஜெ ரசிகனானவன் நான்.உங்கள் பதிவு அந்த நாள் ஞாபகங்களைக் கிளறி விட்டு விட்டது.நன்றி.
ReplyDeleteஇதுவரை அறிந்திராத சுவாரஸ்யமான விடயங்கள்.
ReplyDeleteஇன்று அரசியலில் பலராலும் திட்டப்பட்டுக் கொண்டிருக்கும் முதல்வர் ஜெ.வைப் பற்றியது அல்ல//ஒரு உண்மையை தெரிஞ்சுக்க ஆசை கணேஷண்ணா.நீங்கள் மேற்படியாரை திட்டிக்கொண்டே இருக்கின்றீர்களா?அல்லது தட்டிக்கொடுத்துக்கொடுத்துக்கொண்டே இருக்கின்றீர்களா?
r.v.saravanan said...
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி சார்
-உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சரவணன்.
சென்னை பித்தன் said...
ReplyDeleteவெண்ணிற ஆடை பார்த்து ஜெ ரசிகனானவன் நான்.உங்கள் பதிவு அந்த நாள் ஞாபகங்களைக் கிளறி விட்டு விட்டது.நன்றி.
-எம்.ஜி.ஆருடன் நடித்த ஜெ.யின் நடிப்பும், நடனமும் எனக்கும் பிடிக்கும். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க...
ஸாதிகா said...
ReplyDeleteஇதுவரை அறிந்திராத சுவாரஸ்யமான விடயங்கள்.
இன்று அரசியலில் பலராலும் திட்டப்பட்டுக் கொண்டிருக்கும் முதல்வர் ஜெ.வைப் பற்றியது அல்ல//ஒரு உண்மையை தெரிஞ்சுக்க ஆசை கணேஷண்ணா.நீங்கள் மேற்படியாரை திட்டிக்கொண்டே இருக்கின்றீர்களா?அல்லது தட்டிக்கொடுத்துக்கொடுத்துக்கொண்டே இருக்கின்றீர்களா?
-இதிலென்னம்மா சந்தேகம்? அரசியல்வாதி ஜெ.வை திட்டிக் கொண்டும், திரைத் தாரகை ஜெ.யை தட்டிக் கொடுத்து வாழ்த்திக் கொண்டும்தான் இருக்கிறேன்.
ஜெ.யின் தன்னம்பிக்கை, ஆங்கிலப் புலமை போன்ற பன்முகத் திறமைகள் பிடிக்கும். தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என்று அவர் அடம் பிடிப்பதுதான் பிடிக்காது.
ரசித்துக் கருத்துச் சொன்னதற்கு நன்ற தங்கையே!
இதுவரை நான் பார்க்காத ஜெயலலிதா அவர்களின் புகைப்படங்கள்-தகவல்கள் அருமை.
ReplyDeleteவாழக் வளமுடன்
வேலன்..
வேலன். said...
ReplyDeleteஇதுவரை நான் பார்க்காத ஜெயலலிதா அவர்களின் புகைப்படங்கள்-தகவல்கள் அருமை.
வாழக் வளமுடன். வேலன்..
-அடுத்த பகுதில இன்னும் இருக்கு நண்பரே... வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
புதிய விஷயங்கள்... பகிர்வுக்கு நன்றி. அடுத்த பகுதிக்கு வெயிட்டிங்
ReplyDeleteபகிர்வு அருமை!.. இன்றைய என் ஆக்கத்தினை நீங்கள் அவசியம்
ReplyDeleteபார்க்க வேண்டும் என அன்போடு அழைக்கின்றேன் .மிக்க நன்றி
ஐயா பகிர்வுக்கும் ஒத்துளைப்புகளிக்கும் .
middleclassmadhavi said...
ReplyDeleteபுதிய விஷயங்கள்... பகிர்வுக்கு நன்றி. அடுத்த பகுதிக்கு வெயிட்டிங்
-நன்றிங்க... அடுத்த பகுதி தோ வந்துடுச்சு...
அம்பாளடியாள் said...
ReplyDeleteபகிர்வு அருமை!.. இன்றைய என் ஆக்கத்தினை நீங்கள் அவசியம்
பார்க்க வேண்டும் என அன்போடு அழைக்கின்றேன் .மிக்க நன்றி
ஐயா பகிர்வுக்கும் ஒத்துளைப்புகளிக்கும் .
-மிக்க நன்றி. தோ வந்துட்டேங்க...
படங்கள் அருமை.
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி சார்!
எப்படி இருந்தவங்க இன்னைக்கு எப்படி ஆகிடாங்க
ReplyDeleteஇதன் தொடரின் தலைப்பு என்ன? படிக்கணும்..
ReplyDelete