நோ... நோ... அப்படிப் பாக்காதீங்க. இப்படியொரு (அபத்தமான) கருத்தை நான் சொல்ல மாட்டேங்க. குழந்தைங்க இருக்கணும்.... வீடு கலகலப்பா இருக்கணும். எல்லாப் பொருட்களும் இறைஞ்சு கிடக்கணும். அதை ஒழுங்குபடுத்தணும். இல்லன்னா என்ன சுவாரஸ்யம் லைஃப்ல? இப்படி ஒரு கருத்தைச் சொன்னவர் சர்ச்சைகளுக்குப் பெயர் பெற்ற நம்ம கலகநாயகன்... ஸாரி, உலகநாயகன் கமலஹாசன்தான். பழைய குமுதம் இதழில் ஒரு பக்கக் கட்டுரைகள் பல வாரங்கள் இளைஞர் கமல் எழுதியிருக்கிறார். அதில் ஒரு பக்கம் இங்கே நீங்கள் படிக்க... :
அப்போது நான் திருவல்லிக்கேணி இந்து ஹைஸ்கூலில் படித்துக் கொண்டிருந்தேன். ஒரு நாள் பால்கனியில் விளையாடும் போது சறுக்கி விழுந்து அடிபட்டு விட்டது. என்னை வீட்டில் கொண்டு வந்து விட்டு சிகிச்சையளித்தார்கள். என்னோடு படித்துக் கொண்டிருந்த டி.கே.பகவதியின் மகன் மணிவண்ணன் என் புத்தக மூட்டையை டி.கே.எஸ.ஸின் மகன் கலைவாணன் மூலம் வீட்டுக்கு அனுப்பியிருந்தான்.
என் உடம்பு தேறியதும் திரு டி.கே.எஸ்ஸின் வீட்டுக்குப் போனேன்- நன்றி தெரிவிக்க. வீட்டிலேயே அவர் ஷு சாக்ஸ் உடன் வெள்ளை வெளேரென்ற வேஷ்டியுடன் படு சுத்தமாக இருந்தார். அதைவிட அவர் லைப்ரரி கனகச்சிதமாக ஒழுங்காக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. வீடு முழுவதும் கோவிலைப் போல ஒரே ஊதுவத்தி ஸ்மெல். ரொம்ப இனிமையாக இருந்தது.
உடல் சுத்தத்தை விட மன சுத்தம் அந்தக் குடும்பத்தில் அதிகம். அனைவரிடமும் அன்பு, உரிமை, பிரியம் என்பது அந்தக் குடும்பத்தில் இருக்கிறது. இப்போதும் என் மனம் தடுமாறும் நேரங்களில் அண்ணாச்சி ரூமுக்குப் போய், சில நிமிடங்கள் நின்றுவிட்டு மானசீகமாக அவர் ஆசியைப் பெற்று வருவேன்.
சுத்தமான மனிதர் என்று கூறும்போது என் தந்தை திரு.சீனிவாசன் ஞாபகம் வருகிறது. அவருக்கு வயது அறுபத்தேழு. ஐம்பது வருஷமாக ஒரே பெண்டாட்டியுடன் குடும்பம் நடத்துகிறாரே? அத்துடன் வெற்றிலை, பாக்கு, பொடி, சிகரெட், ‘தண்ணி’ எதுவும் கிடையாது அவருக்கு. அதைவிட சுத்தம், பிள்ளைகள் விஷயத்தில் தலையிடாதது. அவர் எப்போதும் காவிக் கலர் கதர் சட்டை வேஷ்டியுடன்தான் இருப்பார். அவரைப் போல இப்போது யாரும் நடக்க முடியாது. சொல்லப் போனால் நான் அவரை இதுவரை இரண்டே தடவை தான் தொட்டுப் பார்த்திருக்கிறேன்!
வீடு சுத்தமாக இருக்கணுமானால் சின்னக் குழந்தைகள் இருக்கக் கூடாது.

மூன்று வயதிலிருந்து எனக்கு ஃபுல் பேண்ட் போட்டுக் கொள்ள ஆசை. வீட்டில் கேட்டால் வாங்கித்தர மாட்டார்கள். ‘‘நீ வளரும் பிள்ளை. முழுக்கால் சட்டை சின்னதாகப் போய்விடும். பெரியவனானதும் தைக்கலாம்’’ என்று சாக்குச் சொல்லி விடுவார்கள்.
இன்று வீட்டில் சூட் போடவே பிடிக்காது. பெரிய பார்ட்டிகள், நிகழ்ச்சிகளுக்கு மட்டும்தான் சூட் போடுவேன். கழுத்தில் டை இறுக்க, வேர்க்க விறுவிறுக்க என்ன சூட் வேண்டிக் கிடக்கிறது என்று சமயத்தில் கோபமாக வரும்.
வீட்டில் எப்போதும் நான் வெறும் டவலுடன்தான் இருப்பேன். அதிலிருக்கும் ஆனந்தம் எதிலும் கிடையாது. எனக்கென்று வீட்டில் வேஷ்டி எதுவும் கிடையாது. லுங்கி உண்டு. என் அப்பா மெட்றால் வரும்போது அவர் வேஷ்டி ஒனறு இரண்டை விட்டுப் போவார். அதைக்கூட லுங்கி மாதிரி இரண்டு பக்கமும் தைத்துத்தான் கட்டிக் கொள்வேன்.