இன்றைக்கு காலையில் அலுவலகத்துக்குப் புறப்படும் போதுகூட எனக்குள் அந்தத் திட்டமில்லை. ஏனோ திடீரென்று அம்மாவைப் பார்க்க வேண்டும் போல உள்மனம் அடித்துக் கொண்டது. சந்திராவுக்கு போன் பண்ணிக்கூடச் சொல்லாமல் உடனே கிளம்பி விட்டேன். சொன்னால் ‘போக வேண்டாம்’ என்று தடுக்கத்தானே பார்ப்பாள். எங்களுக்குக் கல்யாணமான நாளிலிருந்தே தன் மாமியாரை வெறுக்கிறவளாகத்தானே அவள் இருந்து வந்திருக்கிறாள்.
எனக்குக் கல்யாணமானதும் பேரக் குழந்தையைக் கொஞ்சலாம் என்று எதிர்பார்த்திருந்த அம்மாவுக்கு அது தாமதமானதால் மன வருத்தம் ஏற்பட்டு ஒரு சொல் சொல்லிவிட... அன்றிலிருந்து அம்மாவை எதிரியாகப் பாவித்து தினமும் சண்டை பிடிக்க ஆரம்பித்தாள் சந்திரா. அலுவலகம் விட்டு வந்தால் அம்மாவைச் சமாதானம் செய்வதா, மனைவியை அட்ஜஸ்ட் செய்வதா என்று தெரியாமல் நான் தலையைப் பிய்த்துக் கொண்ட நாட்கள் அனேகம். கடைசியில் வேறு வழியில்லாமல்தான் அப்படி ஒரு முடிவெடுக்க வேண்டியதாயிற்று.
ஊ:ரிலிருந்த வீட்டையும் அங்கிருந்த சொற்ப நிலத்தையும் பார்த்துக் கொண்டு அம்மாவை அங்கேயே இருக்கச் சொல்லி விட்டேன். ‘‘எனக்கெதுக்குடா இதெல்லாம்...?’’ என்று அம்மா மறுத்தாலும் கேட்காமல், டி.வி., ஃப்ரிட்ஜ் என நவீன வசதிகள் அனைத்தையும் அம்மாவுக்கென்று ஏற்படுத்தி வைத்திருந்தேன். செல்போன் ஒன்று வாங்கித் தந்து, தினமும் அம்மாவுடன் பேசலாம் என்றால், ‘‘போடா... இத்தனை வயசுக்கப்புறம் இதை எப்படி பயன்படுத்தறதுன்னு நான் கத்துக்கணுமாக்கும்? வேண்டாம்...’’ என்று விட்டாள் அம்மா.
எனக்குக் கல்யாணமானதும் பேரக் குழந்தையைக் கொஞ்சலாம் என்று எதிர்பார்த்திருந்த அம்மாவுக்கு அது தாமதமானதால் மன வருத்தம் ஏற்பட்டு ஒரு சொல் சொல்லிவிட... அன்றிலிருந்து அம்மாவை எதிரியாகப் பாவித்து தினமும் சண்டை பிடிக்க ஆரம்பித்தாள் சந்திரா. அலுவலகம் விட்டு வந்தால் அம்மாவைச் சமாதானம் செய்வதா, மனைவியை அட்ஜஸ்ட் செய்வதா என்று தெரியாமல் நான் தலையைப் பிய்த்துக் கொண்ட நாட்கள் அனேகம். கடைசியில் வேறு வழியில்லாமல்தான் அப்படி ஒரு முடிவெடுக்க வேண்டியதாயிற்று.
ஊ:ரிலிருந்த வீட்டையும் அங்கிருந்த சொற்ப நிலத்தையும் பார்த்துக் கொண்டு அம்மாவை அங்கேயே இருக்கச் சொல்லி விட்டேன். ‘‘எனக்கெதுக்குடா இதெல்லாம்...?’’ என்று அம்மா மறுத்தாலும் கேட்காமல், டி.வி., ஃப்ரிட்ஜ் என நவீன வசதிகள் அனைத்தையும் அம்மாவுக்கென்று ஏற்படுத்தி வைத்திருந்தேன். செல்போன் ஒன்று வாங்கித் தந்து, தினமும் அம்மாவுடன் பேசலாம் என்றால், ‘‘போடா... இத்தனை வயசுக்கப்புறம் இதை எப்படி பயன்படுத்தறதுன்னு நான் கத்துக்கணுமாக்கும்? வேண்டாம்...’’ என்று விட்டாள் அம்மா.
அதன் பிறகு இரண்டு வருடம் கழித்து, எங்களுக்குக் குழந்தை பிறந்து அம்மா பேரனைப் பார்த்து மகிழ்ந்தாள். என்னுடன் சென்னையிலேயே தங்கிவிடும்படி அம்மாவிடம் கேட்டேன். ‘‘இல்ல சரவணா... சந்திராவோட மனசுல கசப்பு படிஞ்சு போச்சு. என்னை எதிரியாவே பாக்கறா. நான் இங்க இருந்தா நீ நிம்மதியா இருக்க முடியாது. அதனால நான் கிராமத்துலயே இருந்துடறேன். நீ அடிக்கடி வந்து என்னைப் பாத்துக்கிட்டா போதும்...’’ என்று விட்டாள். ஊருக்குப் போன கையோடு நான் வாங்கித் தந்திருந்த ஃப்ரிட்ஜையும், டிவியையும் தேவையில்லையென்று சென்னைக்கு அனுப்பி விட்டாள்.
விளைவு... நான் மட்டும் அம்மாவை கிராமத்திற்குப் போய் பார்த்துவிட்டு ஒன்றிரண்டு நாள் தங்கி விட்டு வருவேன். மாதம் ஒரு முறை அம்மாவைப் பார்க்கப் போவது என்றிருந்தது சில மாதங்களுக்கு ஒருமுறை, வருடத்துக்கு ஒரு முறை என்று தேய்ந்து கொண்டே வந்து இப்போது நான் அம்மாவைப் பார்த்தே மூன்று வருஷத்துக்கு மேலாகி விட்டது.
என் ஊர் இந்தச் சின்ன இடைவெளிக்குள் சில மாற்றங்களைச் சந்தித்திருந்தது. மேலத்தெரு திருப்பத்தில் இருந்த அரசமரத்தைக் காணோம். அங்கே ஒரு பெரிய துணிக்கடை முளைத்திருந்தது. ஒன்றிரண்டு செல்போன் கடைகளும், ஷாப்பிங் காம்ப்ளக்சுமாக நல்ல முன்னேற்றம்தான். ஆனால் எங்கள் தெருவும், அங்கிருந்த வீடுகளும் மாற்றம் எதுவுமின்றி அப்படியேதான் இருந்தன. தெருவின் துவக்கத்தில் ராஜு அண்ணாவின் பெட்டிக் கடைகூட அப்படியே இருந்தது. ராஜு அண்ணா தெருவை வேடிக்கை பார்த்தபடி உட்கார்ந்திருந்தார். ‘‘ராஜுண்ணா! சவுக்கியமா?’’ என்றபடி எதிரே போய் நின்றேன். அவர் பதிலேதும் சொல்லாமல் வேறு திசையில் பார்த்தார். என்மேல் என்ன கோபம் அவருக்கு? புரியாத நிலையிலேயே ‘சரி, அம்மாவைப் பார்த்துவிட்டு வந்து இவரிடம் பேசலாம்’ என்று முடிவுகட்டி வீட்டை நோக்கி நடந்தேன்.
வீட்டை நெருங்க நெருங்க என் பரபரப்பு அதிகமாகியது. அம்மா! சின்ன வயதில் கதைகள் நிறையச் சொல்லித் தந்த அம்மா! ஊர்க் கிணற்றி்ல நீச்சல் கற்றுத் தந்த அம்மா! எதற்கும் எங்கும் பயப்படக் கூடாதென்று தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் ஊட்டி வளர்த்த அம்மா! இப்படி பல வடிவங்களில் என் அம்மா மனதிற்குள் ஸ்லைட் ஸ்லைடாக வந்து போனாள். பார்த்து எவ்வளவு நாளாயிற்று! என்ன தப்பிதம் செய்துவிட்டேன் நான்? பரபரப்பு தொற்றிக் கொண்ட மனதுடன் உள்நுழைந்தேன்.
விளைவு... நான் மட்டும் அம்மாவை கிராமத்திற்குப் போய் பார்த்துவிட்டு ஒன்றிரண்டு நாள் தங்கி விட்டு வருவேன். மாதம் ஒரு முறை அம்மாவைப் பார்க்கப் போவது என்றிருந்தது சில மாதங்களுக்கு ஒருமுறை, வருடத்துக்கு ஒரு முறை என்று தேய்ந்து கொண்டே வந்து இப்போது நான் அம்மாவைப் பார்த்தே மூன்று வருஷத்துக்கு மேலாகி விட்டது.
என் ஊர் இந்தச் சின்ன இடைவெளிக்குள் சில மாற்றங்களைச் சந்தித்திருந்தது. மேலத்தெரு திருப்பத்தில் இருந்த அரசமரத்தைக் காணோம். அங்கே ஒரு பெரிய துணிக்கடை முளைத்திருந்தது. ஒன்றிரண்டு செல்போன் கடைகளும், ஷாப்பிங் காம்ப்ளக்சுமாக நல்ல முன்னேற்றம்தான். ஆனால் எங்கள் தெருவும், அங்கிருந்த வீடுகளும் மாற்றம் எதுவுமின்றி அப்படியேதான் இருந்தன. தெருவின் துவக்கத்தில் ராஜு அண்ணாவின் பெட்டிக் கடைகூட அப்படியே இருந்தது. ராஜு அண்ணா தெருவை வேடிக்கை பார்த்தபடி உட்கார்ந்திருந்தார். ‘‘ராஜுண்ணா! சவுக்கியமா?’’ என்றபடி எதிரே போய் நின்றேன். அவர் பதிலேதும் சொல்லாமல் வேறு திசையில் பார்த்தார். என்மேல் என்ன கோபம் அவருக்கு? புரியாத நிலையிலேயே ‘சரி, அம்மாவைப் பார்த்துவிட்டு வந்து இவரிடம் பேசலாம்’ என்று முடிவுகட்டி வீட்டை நோக்கி நடந்தேன்.
வீட்டை நெருங்க நெருங்க என் பரபரப்பு அதிகமாகியது. அம்மா! சின்ன வயதில் கதைகள் நிறையச் சொல்லித் தந்த அம்மா! ஊர்க் கிணற்றி்ல நீச்சல் கற்றுத் தந்த அம்மா! எதற்கும் எங்கும் பயப்படக் கூடாதென்று தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் ஊட்டி வளர்த்த அம்மா! இப்படி பல வடிவங்களில் என் அம்மா மனதிற்குள் ஸ்லைட் ஸ்லைடாக வந்து போனாள். பார்த்து எவ்வளவு நாளாயிற்று! என்ன தப்பிதம் செய்துவிட்டேன் நான்? பரபரப்பு தொற்றிக் கொண்ட மனதுடன் உள்நுழைந்தேன்.
அம்மா பக்கத்து வீட்டு மீனாக்ஷி அக்காவுடன் பேசிக் கொண்டிருக்கிறாள். அம்மாவுக்கு ஒரு சர்ப்ரைஸ் தர விரும்பியவனாய், பூனைப் பாதம் வைத்துச் சென்று கூடத்திலிருந்த தூணின் பின்புறம் மறைந்து நின்று கொள்கிறேன். பேச்சினூடே என் பெயரும் அடிபடவே, உன்னிப்பாக காதைக் கொடுக்கிறேன்.
‘‘இந்தத் தள்ளாத வயசுல வீட்டு வேலை பாக்கற செல்வியை மட்டும் துணையா வெச்சுக்கிட்டு நீங்க எதுக்கு கஷ்டப்படணும் மாமி? எப்பப் பாத்தாலும் சோகமாவே இருககீங்க... சரவணன்தான் மெட்ராஸ்ல கை நிறைய சம்பாதிக்கிறான்ல... அவன்கூடப் போய் இருக்க வேண்டியதுதானே...? இப்படி எந்த வசதியும் இல்லாம இந்த ஊர்ல கஷ்டப்படணுமா?’’ என்று கேட்டாள் மீனாக்ஷியக்கா.
‘‘இல்லடி... என் மருமக நான் பக்கத்துல இல்லாட்டி அவன்கிட்ட அன்பாத்தான் நடந்துக்கறா. நான் அங்க போய் அவங்களுக்குள்ள வீணாப் பிரச்சனைய உருவாக்க விரும்பலை. அவன் நல்லா இருந்தாச் சரி. அவன் டிவி வாங்கித் தரணும், ஃப்ரிட்ஜும், செல்போனும் வாங்கி்த் தரணும்னா நான் எதிர்பார்த்தேன்? எனக்கு என் பிள்ளைய அடிக்கடி பாத்துட்டிருந்தாப் போதும்டி. வருஷக்கணக்கா அவன் வரலையேங்கறதுதான் என்னோட சோகம். ஒரு தடவை அவன் என் முன்னாடி வந்து ‘‘அம்மா, நல்லாயிருக்கியா’’ன்னு கேட்டுட்டா மாசம் பூரா சிரிச்சுட்டே இருப்பேனேடி... ஹும்...!’’ என்று பெருமூச்சு விடுகிறாள் அம்மா. வெற்று முதுகில் சுளீரென்று சவுக்கடி வாங்கியது மாதிரி வலிக்கிறது எனக்கு!
‘‘அவன் எப்பத்தான் வருவானோ... என்னமோ போங்க மாமி...’’ என்றபடியே மீனாக்ஷி அக்கா செல்ல, கண்ணீர் நிரம்பிய விழிகளுடன் அம்மாவின் எதிரில் போய் நிற்கிறேன். ‘‘அம்மா... என்னை மன்னிச்சிடும்மா. நான் பண்ணின தப்பை உணர்ந்துட்டேம்மா. இனி உன்னை விட்டு எங்கயும் போக மாட்டேம்மா...’’ என்று கதறுகிறேன். அம்மாவின் பார்வை என்னையும் தாண்டி வாசலை வெறி்த்துக் கொண்டிருக்கிறது. ‘‘அம்மா... பேசும்மா... கோபமா இருந்தா அடிச்சுடும்மா. இப்படி சைலண்ட்டா இருக்காதம்மா... ப்ளீஸ்!’’ என்று அலறுகிறேன் நான். அம்மாவோ சலனமில்லாத முகத்துடன் உள்ளே செல்லத் திரும்புகிறாள்.
என்ன சொல்லி அம்மாவைச் சமாதானப்படுத்துவது என்று தெரியாமல் நான் திகைத்து நின்றிருக்கிறேன். அப்போது வாசல் பக்கமிருந்து, ‘‘அம்மா...’’ என்று சத்தமாக யாரோ அழைக்கிறார்கள். அம்மா திரும்பிப் பார்க்கிறாள். தபால்துறை ஊழியர் உள்ளே நுழைந்து, ‘‘உங்களுக்குத் தந்தி வந்திருக்கும்மா...’’ என்று அம்மாவிடம் கையெழுத்தை வாங்கிக் கொண்டு தந்தியைத் தருகிறார். பிரித்துப் படித்த அம்மா அலறுகிறாள். ‘‘தெய்வமே... என்ன கொடுமை இது! ஐயோ....’’ என்று. ஓவென்று அழுகிறாள்.
அம்மாவின் உச்சபட்ச அலறல் சத்தம் கேட்டு பக்கத்து வீட்டிலிருந்து மீனாக்ஷியக்கா பதறி ஓடி வருகிறாள். ‘‘என்னாச்சு மாமி? ஏன் அழறீங்க?’’ என்ற பதைக்கிறாள். பேச வாயெழாமல் தந்தியை அவளிடம் நீட்டுகிறாள் அம்மா. தந்தியைப் படித்த மீனாக்ஷியக்காவின் முகத்தில் திக்பிரமை நிலவுகிறது..‘‘மா... மி... இதென்னது..? சரவணன் ஆபீஸ் போற வழியில லாரி ஒண்ணு மோதினதுல ஸ்பாட்லயே இறந்துட்டதாகவும், உங்களை உடனே வரச் சொல்லியும்ல சந்திரா தந்தி குடுத்திருக்கா... ஐயோ சரவணா...’’ என்கிறாள். ‘‘கடவுளே.... கல்லாட்டமா என்னை வெச்சுக்கிட்டு, வாழ வேண்டிய என் பிள்ளையப் பறிச்சிட்டயே... ஐயா சரவணா...’’ என்று மார்பிலும் முகத்திலும் அறைந்து கொண்டு அலறி அழுகிறாள் அம்மா.
‘‘என்னது.... நான் இறந்துட்டேனா? இல்லம்மா... நான் இங்கதானே இருக்கேன். உன்னை விட்டுப் பிரியக் கூடாதுன்னு முடிவு பண்ணித்தானே வந்திருக்கேன். அழாம என்னைப் பாரும்மா... அழாதம்மா...’’ என்று கதறித் துடிககிறேன் நான். ஊஹும்... அம்மாவின் காதில் என் புலம்பல் விழுந்தால்தானே!
|
|
Tweet | ||
‘என்னது.... நான் இறந்துட்டேனா? -- வேண்டாமே !!
ReplyDeleteஅமங்கலமான வார்த்தைகள்கூட வேண்டாம் என்கிற உங்களின் அன்புக்குத் தலைவணங்கி என் நன்றிகள்!
Deleteஅதான் இராரா.
Deleteஎன்ன இருந்தாலும் அம்மா தான் உண்மையான அன்பை காட்டுபவள்.
ReplyDeleteஉண்மைதான் தம்பி. அதற்கு நிகரான வேறொன்று உலகில் ஏது? ரசித்துப் படித்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!
Deleteஅம்மாவின் அன்புக்கு முன் மற்றவையெல்லாம் துாசி அண்ணா
ReplyDeleteமிகமிகச் சரியான வார்த்தைகள் தங்கையே! நன்றி!
Deleteமனதைப் பிழியும் கதை.
ReplyDeleteஎன் மதிப்பிற்குரிய அப்பாத்துரை ஸார் ‘பாலுவின் கோடை’ என்ற தலைப்பில் திகில் கிளப்பும் கதை எழுதிக் கொண்டிருக்கிறார். அதைப் படித்தபோது ஆவிக் கதையில் சென்டிமென்ட்டும், நகைச்சுவையும் கலந்து எழுதிப் பார்த்தால் என்ன என்று தோன்றியது. அதனால் முதலில் இந்த சென்டிமென்ட் கதையை எழுதினேன். மனதைப் பிழியும் கதை என்ற தங்கள் வார்த்தைகள் எனக்கு மகிழ்வளிக்கின்றன. தங்களுக்கு என் இதய நன்றி!
Deleteஆ! இது சைவ ஆவிக்கதை. அருமையா எழுதியிருக்கீங்க.
Deleteபிள்ளைகள் இருக்க அம்மாக்கள் இறந்து போவதும்,அம்மாக்கள் இருக்க பிள்ளைகள் இறந்து போவதுமான நிகழ்வுகள் நிறைந்த சமூகத்தில் இதுவும் இரு அழுத்தமான பதிவாக.நல்ல கதை ,வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅழுத்தமான நல்ல கதை என்ற தங்களின் வார்த்தைகளில் அகமகிழ்ந்து தஙகளுக்கு என்ற நன்றியை உரித்தாக்குகிறேன்.
Delete// ஒரு தடவை அவன் என் முன்னாடி வந்து ‘‘அம்மா, நல்லாயிருக்கியா’’ன்னு கேட்டுட்டா மாசம் பூரா சிரிச்சுட்டே இருப்பேனேடி... ஹும்...!’’ என்று பெருமூச்சு விடுகிறாள் அம்மா. //
ReplyDelete’கொண்டு வந்தாலும் கொண்டு வராவிட்டாலும்’ தாய் தாய் தான்.
தாயின் அன்புக்கு முன்னால் மற்ற எல்லாமே வெறும் தூசி தான்.
மிக நல்ல பதிவு. பாராட்டுக்கள்.
நிஜம்தான் ஐயா. எவ்வளவு பணம் சம்பாதித்துத் தந்தாலும் நாம் அருகிலிருப்பதுதான் அன்னைக்கு மகிழ்வுதரும் என்பதை அனுபவ பூர்வமாக உணர்ந்தவன் நான். மகிழ்வுதந்த தங்களின் வருகைக்கும் பாராட்டுக்கும் என் இதயம் நிறை நன்றி!
Delete//‘‘என்னது.... நான் இறந்துட்டேனா? இல்லம்மா... நான் இங்கதானே இருக்கேன். உன்னை விட்டுப் பிரியக் கூடாதுன்னு முடிவு பண்ணித்தானே வந்திருக்கேன். அழாம என்னைப் பாரும்மா... அழாதம்மா...’’ என்று கதறித் துடிககிறேன் நான். ஊஹும்... அம்மாவின் காதில் என் புலம்பல் விழுந்தால்தானே!//
ReplyDeleteமனதை நெகிழவைக்கும் வரிகள்.
நம் கையில் இருக்கும் ரத்தினங்களை (பெற்றோர்) தொலைத்து விட்டு அவை பறிபோன பின்னர் கதறித் துடிக்கும் பிள்ளைகள் எத்தனை பேர்..? நினைக்கும் போதெல்லாம் எனக்கு இதயம் கனத்து விடும். இக்கதையின் நாயகனும் அவ்வகையே. வரிகளை ரசித்த உங்களுக்கு என் இதய நன்றி!
DeleteSRY TAMIL WORK PANNALE. AMMAA PILLAIYIN PAASATHTHA ITHAIVIDA NEKIZVAA SOLLI IRUKKAMUTIYAATHU. NALLA URUKKAMAANA KATHAI
ReplyDeleteரெண்டு நாளைக்கு முன்னாடி எனக்கும் தமிழ்ல டைப் பண்ண முடியாம எல்லாருக்கும் இங்கிலீஷ்ல கமெண்ட் போட வேண்டியதாச்சு. மறுபடி தமிழ் லோட் பண்ணினப்புறம்தான் நிம்மதியாச்சு. நம்ம மொழில சொன்னாத்தான் திருப்தியே வருது, இல்லம்மா..! நல்ல உருக்கமான கதைன்னு அருமையான கதைகள் எழுதற உங்ககிட்டருந்து வந்த பாராட்டு எனக்கு மிகமிக மகிழ்வளிக்கிறது. மிக்க நன்றிம்மா!
Deleteஅருமை.
ReplyDeleteநன்றி.
ரசித்துக் கருத்திட்டுப் பாராட்டிய தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!
Deleteஎதிர்பார்க்காத முடிவு.மனதில் கோபமும்,சோகமும் கதையைப் படித்ததும் ஏற்பட்டது உண்மை. வாழ்த்துக்கள் நண்பரே!
ReplyDeleteஅந்த மகன் கதாபாத்திரத்தின் மீது கோபமும், முடிவின் காரணமாக சோகமும் ஏற்பட்டது என்று உணர்ந்ததைச் சொல்லி பாராட்டியுள்ள தங்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி!
Deleteநல்ல கதை நண்பரே... அம்மா என்றால் அம்மா தான்! நல்ல கதை பகிர்வுக்கு நன்றி.
ReplyDeleteஅம்மான்னா சும்மா இல்லடா, அவ இல்லன்னா யாரும் இல்லடா... என்றொரு தமிழ்ப்பாடல் இருக்கிறது. முற்றிலும் உண்மையான வரிகள். ரசித்த உங்களுக்கு என் இதய நன்றி நண்பரே!
Deleteஅற்புதம் நண்பரே..
ReplyDeleteஉணர்சிகள் எல்லாம் கூடி நரம்புகள்
முறுக்கேறி விட்டன...
"ஒரு தாயின் உணர்வுகளை அப்படியே எழுதிவிட்டீர்கள்..
வயதான காலத்தில் தன் மகன் "நீ நல்லா இருக்கியாம்மா" என்று
கேட்கும் ஒரு வார்த்தையில் பூரண மகிழ்ச்சி அடைகிறாள் என்பது
நிதர்சனமான உண்மை..
ஒவ்வொரு தாயும் வயதான காலத்தில் தன் பிள்ளைகள்
தன்னிடம் சிறிது நேரம் அமர்ந்து பேசமாட்டார்களா என்று
எண்ணுவது உண்மையிலும் உண்மை.."
இறப்புச் செய்தி மிகவும் கொடிது.. அதிலும் பெற்ற பிள்ளை
கண்முன் இறப்பது மிகமிகக் கொடிது...
பேச வார்த்தை இன்றி மௌனமாகி போனேன்..
மனதுக்குள்ளே அழுகின்றேன் நண்பரே..
தேர்ந்த நடை..
அருமை அருமை..
தான் எழுதுவது படிப்பவரின் மனதில் பாதிப்பை உண்டு பண்ணுகிறது, நிற்கிறது என்றால் அதைவிட மகிழ்வுதரும் விஷயம் வேறென்ன மகேன்? அந்த மகிழ்வை எனக்குத் தந்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!
Deleteஅருமையான கதை .. அழகிய எழுத்து நடை
ReplyDeleteரசித்துப் பாராட்டிய தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி ராஜா!
Deleteஇன்று
ReplyDeleteபயமுறுத்தும் பன்றிக்காய்ச்சல் நோய்
இருக்கும்போது ஒத்திப் போடுகிறோம்....விட்டு விடுகிறோம். காலம் கடந்த பின் கண்ணீர் வடிக்கிறோம். ம்....ஹூம்.
ReplyDeleteஆமாம் ஸார்... நம்மிடமிருக்கும் சொத்தின் மதிப்பே பல சமயங்களில் நமக்குத் தெரிவதில்லை. என்ன செய்ய..? மிக்க நன்றி!
Deleteஸ்ரீராம் சொன்னா சரியாத்தான் இருக்கு.
Deleteதிகைக்க வைத்த கதை. விளையாட்டிற்கும் அமங்கலம் எனக்கும் பிடிக்காது சார். நல்லதே எண்ணுவோம். பாராட்டுகள்.
ReplyDeleteவேதா. இலங்காதிலகம்.
எதையும் பாஸிட்டிவாகப் பார்க்கும் உங்களின் கோணம் வியக்க வைக்கிறது என்னை. வாழ்க வளமுடன். தங்களுக்கு என் இதய நன்றி!
Deletethaay thaay thaan!
ReplyDeleteஉண்மை நண்பரே... ரசித்துக் கருத்திட்ட தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!
Deleteஇன்னிக்கு பூராவும் உக்காந்து தமிழ் டைப்பிங்க் சரிபண்ணிட்டேன் கணேஷ். இப்பதான் திருப்தியா இருக்கு.
ReplyDeleteகரெக்ட்டும்மா... நம்ம மொழியில கருத்துச் சொன்னாத்தானே சந்தோஷமா இருக்கு. அதான் என் கருத்தும்!
Deleteகதை மனதினை நெகிழவைத்து கண்களை கலங்க வைத்து விட்டது.
ReplyDeleteஆண்களை விட பெண்களுக்கு எப்போதுமே இளகிய மனதுதான் தங்கையே. தாய்மை என்கிற மகத்தான விஷயத்துக்கு உரிமைக்காரர்கள் பெண்களல்லவா... உங்கள் இதயத்தை இது தொட்டதில் மனமகிழ்வுடன் என் நன்றியை உரித்தாக்குகிறேன்.
Deleteநெகிழ வைத்த கதை.
ReplyDeleteநற்கருத்திட்ட உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி நண்பரே!
Deleteஎன்ன ஃப்ரெண்ட் இப்பிடி.வாழ்க்கை இதுதான் !
ReplyDeleteஇது வாழ்க்கையிலிருந்து ஒரு துளி! மிக்க நன்றி தோழி!
Deleteஆவிக்கதையா இது? நான் பயந்தே போயிட்டேன். கதை அருமை. உணர்வுகளைக் கிளறுகிறது. உன்னதமான உறவுகளில் முதல் இடம் தாய்க்குத்தான். அதுவே இக்கதையின் கருவும் கூட. வாழ்த்துக்கள் சார்.
ReplyDeleteரசித்து, வாழ்த்திய நண்பனுக்கு இதயம் நிறை நன்றி!
Deleteகொஞ்சமும் எதிர்பாராத திருப்பம். நல்லா இருக்குங்க.
ReplyDelete//‘‘அம்மா, நல்லாயிருக்கியா’’ன்னு கேட்டுட்டா மாசம் பூரா சிரிச்சுட்டே இருப்பேனேடி... ஹும்...!’’
படிச்சதும் எங்கம்மா ஞாபகம் வந்துடுச்சு.
நான் மிக ரசிக்கும் எழுத்தாளர்களில் ஒருவரான நீங்கள் ‘நல்லா இருக்கு‘ன்னு சொன்னது எனக்கு விருதுக்கு சமம். தங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.
Deleteமனதை மிகவும் உருக்கிய கதை. முடிவில் அம்மா அவனைக் கண்டுகொள்ளாததன் காரணம் கோபமென்றுதான் நினைத்திருந்தேன். இப்படி ஒரு திருப்பம் இருக்குமென்று எதிர்பார்க்கவில்லை. இனி அந்தத் தாயின் கதி?
ReplyDeleteமிகப் பரிதாபமாக தன் மக்கள் இழந்து வாழும் பெற்றோர்களின் நிலை வேதனைக்குரியதுதான் தோழி. கருத்திட்டு ஊக்கமளித்த தங்களுக்கு என் இதய நன்றி.
Deleteகதையை படிச்சு மனசு ஒரு மாதிரி ஆயிடுத்து கணேஷ். ரொம்ப அருமையா எழுதி இருக்கீங்க. முடிவு கொஞ்சம் கூட எதிர்பாராதது.
ReplyDeleteஎன் அம்மாவிடம் நான் பல முறை சொல்லி இருக்கிறேன், 'அம்மா உனக்கு முன்னாடி நான் போய்டணும்' அப்படின்னு. எங்கம்மா உடனே என் வாயை பொத்தி 'சீ, பைத்தியம் மாதிரி பேசக் கூடாதுன்னு' சொல்லுவாங்க. நான் யாரை உயிரா நேசிக்கறேனோ அவங்களுக்கு முன்னாடி நான் சாகணும்னு எப்பவுமே நினைப்பேன். இது என் விருப்பமும் கூட. மனசு செத்து உயிர் வாழறது ரொம்ப கொடுமை இல்லையா! ஆனா நினைக்கறதெல்லாம் அவ்வளவு சீக்கிரம் நடந்துடுமா என்ன!
உங்கம்மாவாவது வாயைப் பொத்துவாங்க. எங்கம்மா விளையாட்டுக்குக் கூட அமங்கலமாப் பேசக் கூடாதுடான்னு திட்டுவாங்க. வாழ்க்கை என்பது நம் தீர்மானத்தின் படி நடப்பதில்லைதானே... அருமை என்ற வார்த்தையால் எனக்கு வைட்டமின் தந்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.
Deleteபலர் இங்கு இந்த கதையை ஆவி கதை என குறிப்பிட்டுள்ளார்களே,அப்படி இந்த கதையை நான் ஆனந்த விகடன் இதழில் படித்ததாக ஞாபகம் இல்லையே!எப்போ இது பிரசுரமாயிற்று?
ReplyDeleteமற்றபடி உங்களுக்கு கவிதை மட்டுமல்ல,கதை எழுதியும் படிப்பவர்களை அழவைக்க முடியும் என்று நிரூபித்துள்ளீர்கள்
ஹா... ஹா... ஆ.வி. கதை என்று எடுத்துக் கொண்டீர்களா... நான் அவ்வளவுக்கு இன்னும வொர்த் ஆகலைங்க... கவிதையால் நிச்சயம் இனி அழ வைக்க மாட்டேன். தங்களுக்கு என் இதய நன்றி.
Deleteஅம்மாவிற்கு நிகர் ஏது ? அருமையான கதை ! பகிர்வுக்கு நன்றி !
ReplyDeleteரசித்துப் பாராட்டிய தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.
Deleteகதை நல்லா இருக்குண்ணா. அம்மா பேசுறாதை ஒட்டு கேட்கும் வரை கதையை யூகிக்க முடிஞ்சுது. ஆனால், முடிவு மட்டும் எதிர்பாராம அமைஞ்சு போச்சு. பகிர்வுக்கு நன்றி அண்ணா.
ReplyDeleteஎதிர்பாராத முடிவுதரும் சிறுகதைகளை ஒரு வாசகனாய் எனக்கு படிக்கப் பிடிக்கும். இதன் முடிவும் அப்படி என்று பாராட்டியதில் மனமகிழ்வு கொண்டு உனக்கு என் நன்றியை உரித்தாக்குகிறேன்மா.
Deleteஉங்களுடைய புதிய வாசகி நான்.. நான் படித்த முதல் கதையே மிக அருமை.. நல்ல திருப்பம்..மனசு ரொம்ப கஷ்டமா இருக்குற மாதிரி இருந்துச்சு.. அந்த அளவுக்கு உருக்கமா சொல்லிருகிங்க.. சூப்பர்,,
ReplyDeleteமுதல் வருகைக்கு என் மனமகிவோடு கூடிய நல்வரவு. ரசித்துப் படித்துப் பாராட்டிய தங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.
Deleteகண்ணீர் நிரம்பிய விழிகளுடன் அம்மாவின் எதிரில் போய் நிற்கிறேன். ‘‘அம்மா... என்னை மன்னிச்சிடும்மா. நான் பண்ணின தப்பை உணர்ந்துட்டேம்மா.// சந்தோசமாக இருந்ததுங்க எப்படியே முடித்திருக்கலாம் . போங்க கடைசில அழவச்சிடீங்க.
ReplyDeleteஅந்த இடத்துடன் நிறுத்திக் கொண்டு சந்தோஷ முடிவாக அமைத்துக் கொள்ளுங்கள் தென்றல்! எனக்கு இந்த சோக முடிவு பிடிச்சிருந்தது. அதான்... உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.
Deleteநிச்சயமா இந்த முடிவை எதிர்பார்க்கலை.....
ReplyDeleteகண்கள் குளமாகி விட்டது. தாயைப் போல ஒரு உன்னதமான உறவை எங்கும் பார்க்கவே முடியாது.
தாய்மை போல் வேறொன்றில்லை...! உண்மைதான்... கதையுடன் ஒன்றிய உங்களுக்கு என் இதய நன்றி!
Deleteஅன்பு கணேஷ்!
ReplyDeleteஏறத்தாழ ஐம்பது அறுபது ஆண்டுகளுக்கு முன்னால் இருக்கலாம்
தங்கள் கதையின் கரு போலவே, உயிரின் ஓலம் என்ற தலைப்பில்
கதை எழதி, அரு, இராமநாதனின் காதல் பத்திரிக்கையில் வேளி
வந்தது! அதுவே முதலும் முடிவுமாக ஆகிவிட்டது
தற்போது அதிகம் தட்டச்சு செய்ய முதுகு வலியும் முதுமையும் இயலாத சூழ்நிலை!
தங்கள் கதையும் நடையும் கண்ணீரைச் சிந்தச் செய்யும்!
அருமை!
சா இராமாநுசம்
‘காதல்’ இதழைப் பற்றி நிறையக் கேள்விபட்டிருககிறேன்-அரு.ராமநாதனும், கண்ணதாசனும் எழுதிக் குவித்த இதழ் என்று. ஒன்றுகூடப் படிக்கும் வாய்ப்பு கிட்டியதில்லை. கதையைப் பாராட்டிய தங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!
Deleteதாயின் அன்பை இப்படிச் சொல்லி நெஞ்சை பிசைய வைத்துவிட்டீர்கள் உங்கள் எழுத்து நடையில் மனம் கனக்குகின்றது அம்மா! மருமகள்கள் பலர் இன்னொரு தாய் மாமி என்பதைப் புரிந்துகொள்ளனும்!
ReplyDeleteசரிதானய்யா... அப்படிப் புரிந்து கொண்டு விட்டால் உலகில் அமைதி நிலவுமே. சீரியல்கள் எதுவும் வெளிவராதே... அதற்குத்தானே நாம் ஆசைப்படுகிறோம். நற்கருத்திட்ட நேசனுக்கு நன்றிகள் பல!
Deleteசெம டச்சிங் பாஸ்....
ReplyDeleteவருக... வருக... செம டச்சிங் என்ற வார்த்தையால் எனக்குத் தெம்பூட்டிய தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!
Deleteஅம்மா கதை சொல்லி கண்கலங்க வைத்துவிட்டீர்கள்....
ReplyDeleteகண்கலங்கினேன் என்று சொல்லி எனக்கு மிகப் பெரிய பாராட்டைத் தந்த நண்பா... உனக்கு ஆயிரமாயிரம் நன்றிகள்.
Deleteகதை மனதினை நெகிழவைத்து..!!!
ReplyDeleteஎன் படைப்பைப் பாராட்டிய தங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!
Deleteவணக்கம்! மின்னல் வரிகள் கணேஷ் எம்ஜிஆர் ரசிகர் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. (நானும்தான்) கதைப்படி எம்ஜிஆருக்கு பண்டரிபாய்தானே அம்மா?
ReplyDeleteஅதெல்லாம் சரிதான். ஆனால் எம்.ஜி.ஆர். இறப்பதாகக் கதை அமைத்தால் கல்லடி அல்லவா விழும்? அதனால் சிவாஜிதான் சரி. ஹி... ஹி... நன்றிங்க!
Deleteஎன்ன இது. நெஞ்சுக்குள் பெரிய பாறாங்கல்லை தூக்கி வைத்து விட்டீர்கள். படித்துக் கொண்டிருக்கும் போதே குபுக்கென்று கண்ணீர் வந்து விட்டது.
ReplyDeleteஉடனே அம்மாவைப் பார்க்க புறப்படவேண்டும். நான் உயிருடன் இருக்கும் போதே.
நான் தினமலரில் பணி செய்த காலத்தில் வருடக் கணக்கில் அம்மாவைப் பார்க்காமல் இருக்கும்படியான சூழ்நிலை நேர்ந்தது. அந்தத் துயரம் அடிமனதில் நீண்டநாள் வண்டலாய் இருந்தது கவிஞரே... கதையின் கரு அதுவென்றதும் இயல்பாய் இறங்கி விட்டது அந்த உணர்வுகள். தங்களின் வருகைக்கும், கருத்துக்கும் என் இதய நன்றி!
Deleteஉங்களதில் இது ஒரு தலை ஆக்கம் கணேஷ் சார்...ஈரத்தோடு வாழ்த்துக்கள்....
ReplyDeleteஉங்களது ரசிப்புத் திறன் அபாரமானது. நீங்கள் சொன்னால் சரியாகத்தான் இருக்கும் என்பதை உணர்வேன் நான். பாராட்டும், ஈரமனதுடன் வாழ்த்தும் சொன்ன உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்!
Deleteபலருக்கும் இந்தக் கதை பாடமாக இருக்கும் - ”எதையும் தள்ளிப்போடாதீர்கள்”. வயதான பெற்றோர்களைவிட்டு வேறு ஊரில் பணி புரியும் நிர்பந்தம் பலருக்கும் உண்டுதான். ஆனாலும் அவர்கள் மனதளவிலாவது நெருங்கியிருக்கவேண்டும். முடிந்தபோதெல்லாம் சில மணி நேரங்களாவது சேர்ந்து இருக்க வேண்டும். - ஜெ.
ReplyDeleteஅன்பு ஜெகந்நாதன் ஸார்! நீங்கள் எழுதியுள்ள ஒவ்வொரு வரியையும் நான் ஆமோதித்து வழி மொழிகிறேன். தங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!
Deleteரொம்ப நெகிழ்ச்சி...இயல்பான நடைல எழுதிருக்கீங்க
ReplyDeleteஅக்கா... எழுத்தாளரான நீங்கள் இப்படிச் சொல்லியிருப்பது எனக்கொரு விருதுதான். மனமகிழ்வுடன் என் நன்றி!
Deleteநெகிழ வைத்துவிட்டது...படித்ததும் கூடவே ஒரு நிறைவும் வருது...!!
ReplyDeleteரசித்துக் கருத்திட்ட தங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!
Deleteஏனோ தெரியல இந்த பதிவை திரும்ப திரும்ப வாசிக்கிறேன் அம்மா என் பக்கத்தில் இருந்தும்கூட...!!
ReplyDeleteமிக நெகிழ்வாய் உணர்கிறேன். நன்றி ஐயா!
Deleteஎன்ன கணேஷ் இப்படி அழவைக்கிறீர்கள்:(((
Deleteஆனால் அத்தனையும் உண்மைதான்.
இந்தச் சிறுகதை உங்கள் மனதைத் தொட்டு அழவைத்தது என்றால்... ஈர இதயம் கொண்ட தங்களுக்கு மனமகிழ்வுடன் கூடிய என் நன்றி.
Deleteஆ மிக அருமையான கதை இறுதியில் உள்ள திருப்பம் எதிர்பார்க்காதது....இப்படி ஒரு கதையை இன்றுதான் வாசித்துள்ளேன் ...பகிர்வுக்கு நன்றி சார்
ReplyDeleteவாங்க சிட்டுக்குருவி. உங்களின் பாராட்டு மனமகிழ்வு தந்தது. உங்களுக்கு என் இதயமநிறை நன்றி.
Deleteமனதை நெகிழ வைத்த சிறுகதை .உங்களின் படைப்புகளை அற்புதம் என்று சொல்லவதை தவிர வேறு ஏதும் சொல்ல தோணவில்லை. இந்த கதை மறைந்து போன என் அம்மாவின் நினைவுகளை மீண்டும் நினைவு ஊட்டியது. இழப்புகள் ஈடு செய்யமுடியாதவைகள்.
ReplyDeleteஉங்கள் கதை வழவழ கொழ கொழ என்று இல்லாமல் மிகவும் சிறியதாகவும் மனதை தொடுவதாகவும் இருந்தது.
வாழ்த்துக்கள் நண்பர் கணேஷ்...வாழ்க வளமுடன்
தேவையற்ற வார்த்தைகள் அமைக்காமல் இருப்பது என் பழக்கம். சரியாக கணித்துச் சொல்லியிருக்கிறீர்கள். மிக்க மகிழ்ச்சி. தங்களுக்கு என் இதய நன்றி!
Deleteகண்களில் நீர் வர வைத்த கதை. பாசம் பால் போல் பொங்கி வந்த நேரத்தில் கவனிக்காமல் விட்டதால் அடுப்பு அணைவது போல் அணைய வைத்த கதை.......
ReplyDeleteஎதிர்பாராத திருப்பம்....
சென்டிமென்டை ரசித்த உங்களுக்கு மிக்க நன்றி சீனு.
Deleteகதையின் முடிவு கண்களில் நீரினை வரவழைத்துவிட்டது.
ReplyDeleteமிக்க நன்றி நண்பர் பாஷித்.
Deleteகடைசியில் நெஞ்சைக் கலங்க வைத்த கதை...
ReplyDeleteகதையின் கனத்தை உணர்ந்து ரசித்த உங்களுக்கு என் இதய நன்றி.
Deleteசெண்டிமெண்ட்ட்லையும் சஸ்பென்ஸா? நானும்தான் யோசிக்கிறேன்.... ஆனா நம்மளுக்கு.... சுத்தம்.... வரலையே! அருமை!சின்ன வயசுல இருந்து எழுதீட்டு வரீங்களா?
ReplyDeleteஇல்லிங்க சாமு... சமீபமா நாலஞ்சு வருஷமாத்தான் எழுத ஆரம்பிச்சிருக்கேன். ரசித்துப் படித்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.
Delete‘‘இல்லடி... என் மருமக நான் பக்கத்துல இல்லாட்டி அவன்கிட்ட அன்பாத்தான் நடந்துக்கறா. நான் அங்க போய் அவங்களுக்குள்ள வீணாப் பிரச்சனைய உருவாக்க விரும்பலை. அவன் நல்லா இருந்தாச் சரி. அவன் டிவி வாங்கித் தரணும், ஃப்ரிட்ஜும், செல்போனும் வாங்கி்த் தரணும்னா நான் எதிர்பார்த்தேன்? எனக்கு என் பிள்ளைய அடிக்கடி பாத்துட்டிருந்தாப் போதும்டி. வருஷக்கணக்கா அவன் வரலையேங்கறதுதான் என்னோட சோகம். ஒரு தடவை அவன் என் முன்னாடி வந்து ‘‘அம்மா, நல்லாயிருக்கியா’’ன்னு கேட்டுட்டா மாசம் பூரா சிரிச்சுட்டே இருப்பேனேடி... ஹும்...!’’ என்று பெருமூச்சு விடுகிறாள் அம்மா. வெற்று முதுகில் சுளீரென்று சவுக்கடி வாங்கியது மாதிரி வலிக்கிறது எனக்கு!
ReplyDeletemanathai varudiya varikal
//manathai varudiya varikal//
Deleteஆமா முதுகுல அடி வாங்கினது அவராச்சே!! ;-)
இந்தக் கதையை சீனு சொல்லக் கேட்டிருக்கிறேன்.. இப்போதான் படிக்கிறேன்.. "அட" போட வைத்த சிறுகதைகளுள் இதுவும் ஒன்று..
ReplyDelete