சினிமா விமர்சனங்களும், நடிகனும்..!
கலைஞன் யார்? கலைஞனுக்கும் பத்திரிகைகளுக்கும் உள்ள தொடர்பு என்ன? பத்திரிகைகள் செய்ய வேண்டியதென்ன? இவற்றைச் சிறிது ஊன்றிக் கவனிப்போம்.
மக்களுக்கும் கலைஞனுக்கும் பிரதிநிதியாக நின்று அவர்கள் ஒருவரோடொருவரை இணைப்பதுதான் பத்திரிகை. இந்த வகையில் பத்திரிகைகள் பல அரும்பெரும் தொண்டுகளைச் செய்யக் கடமைப் பட்டிருக்கின்றன. உதாரணமாக, பத்திரிகைகளில் வரும் விமர்சனங்களைப் பற்றிக் கவனிப்போம்.
ஒரு பத்திரிகையில் ஒரு கட்டத்தில் எனது நடிப்பு சிறந்ததாக இருக்கிறது என்று காணப்படும். அடு்த்து ஒரு பத்திரிகையின் விமர்சனத்தில் அந்தக் கட்டத்தி்ல் எனது நடிப்பு மோசமாக இருப்பதாக எழுதப்பட்டிருக்கும். மூன்றாவது பத்திரிகையிலோ மோசம், அற்புதம் இரண்டுக்கும் பொதுவாக ‘சுமார்’ என்ற வார்த்தை இடம் பெற்றிருக்கும்.
இந்த மூன்று விமர்சனங்களில் நடிகன் எதை நம்புவது? எதை நம்பி தனது நடிப்பைத் திருத்திக் கொள்வது? அவனுக்கு மூளையே குழம்பிப் போய்விடும்.
நமது தமிழ்நாட்டில் சினிமா விமர்சனங்கள் இப்படித்தான் இருக்கின்றன. எனவே தென்னிந்திய சினிமா பத்திரிகையாளர் சங்கத்தினர் செய்ய வேண்டிய ஒரு முக்கியமான பணி இங்கிருக்கிறது. அவர்கள் தங்களுக்குள்ளாகவே நடிப்பைப் பற்றி விமர்சனம் செய்யவோ, கலைஞர்களைப் பற்றி எழுதுவதிலோ சில முறைகளை வரையறை செய்து கொண்டு, அதன்படி எழுத முயற்சிக்க வேண்டும்.
தவிர, விமர்சனம் எழுதும் போது நடிகனது சூழ்நிலை, நடிக்கும் கட்டத்தின் தன்மை மற்றும் இதுபோன்ற அம்சங்களையும் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்.

-‘நடிகன் குரல்’ பத்திரிகையில் எம்.ஜி.ஆர்.
========================================================
கண்ணுக்கு மையழகு!
பொதுவாக கண்களைச் சுற்றியுள்ள தோல் மிகமிக மிருதுவானது. இதை எண்ணெய்ப் பசை இல்லாமல் வறட்சியாக விட்டு விட்டால் சுருக்கங்களும் கோடுகளும் வெகுவிரைவாக வந்து விடும். இதற்காக இரவு படுக்கப் போகும்முன் கண்களைச் சுற்றி ஏதாவது ஒரு நல்ல ‘கிரீமை’ தடவிக் கொண்டு படுத்தால் நல்லது.
காலையில் எழுந்ததுமே கண்கள் இரண்டையும் மூடிக் கொண்டு, சில்லென்று இருக்கும் சுத்தமான தண்ணீரை வாரித் தெளித்தபடி சில நிமிஷங்கள் பயிற்சி செய்யலாம். இது கண்களுக்கு நல்ல பளபளப்பைத் தரும். தோலில் சுருக்கங்கள் ஏற்படுவதையும் தடுக்கும்.

கண்களைப் போலவே புருவங்களையும் அழகாக வைத்துக் கொள்ள வேண்டும். அடர்த்தியாக ரோமம் நிறைந்த புருவங்களை உடையவர்கள் ரோமங்களை நீக்கிவிட்டு மெல்லியதாக தீட்டிக் கொள்ளலாம். குட்டையான புருவங்களை உடையவர்கள் மை கொண்டு கொஞ்சம் வளர்த்திக் கொள்ளலாம்.
கண் இமைகளின் மேலே உள்ள ரோமங்களையும் அழகாக, கூர்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். இதைச் செய்ய ஐ லோஷன் பயன்படும்.
விழிகளை இரண்டு பக்கமும் மாறி மாறி சில நிமிஷங்கள் ஓட விடுவதும், கண்களை மூடிக் கொண்டு சில நிமிஷங்கள் இருப்பதும் தளர்ச்சி அடைந்த கண்களுக்கு நல்ல பயிற்சிகளாகும்.
-‘பொம்மை’ ஏப்ரல் 1969 இதழில் ஹேமமாலினி
========================================================
எம்.ஜி.ஆர்., சிவாஜி - யார் என் குரு?
‘பொம்மை’ ஜூன் 1972 இதழில் கலைச்செல்வி ஜெயலலிதா வாசகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்திருக்கிறார். அதிலிருந்து...
இன்று உங்கள் பெயர் அகில இந்தியாவிலும் பிரபலமாகி இருக்கிறது. பிரபல இந்திய நட்சத்திரமாகி விட்டீர்கள். இந்த நட்சத்திர வாழ்க்கை உங்களுக்கு நிறைவு தருகிறதா அல்லது வேறு துறையில் ஈடுபடாமல் போனோமே என நீங்கள் எண்ணுவதுண்டா? -பி.எக்சேவியர், தொடுப்புறா (கேரளா)
நான் அகில இந்திய நட்சத்திரமாகி விட்டாலும் இந்தத் துறையில் ஓரளவு வெற்றி பெற்றிருக்கிறேன். ஆரம்ப காலத்தில் மற்றொரு துறைக்குப் போயிருந்தால் என் வாழ்க்கை எப்படி இருந்திருக்கும் என்னும் வீணான சிந்தனைகளை நான் வளர்த்ததுமில்லை, அதில் நேரத்தைச் செலவழிப்பதுமில்லை.

காதல் பிரச்சனையிலிருந்து விடுபடுவதற்கு உங்கள் பதில் மூலம் தீர்வுகாண விரும்புகிறேன். காதல் திருமணத்தைப் பற்றி உங்கள் மேலான கருத்து என்ன? -என்.தாமோதரன், வில்லிவாக்கம்.
காதல் பிரச்சனையா? அப்படி ஒரு அனுபவம் என் வாழ்க்கையில் ஏற்படவில்லை. என்றாவது நானும் காதலித்து ஒருவரைத் திருமணம் செய்து கொள்ள நேர்ந்தால் அதற்குப் பிறகு நான் உங்களுடைய இநு்தக் கேள்விகளுக்குப் பதில் தருகிறேன்.
நீங்கள் முன்பெல்லாம் மேடைகளில் பேசிய போதெல்லாம் திரு.எம்.ஜி.ஆர். எனக்கு குரு, அவரிடம் நடிப்பைப் பற்றி எவ்வளவோ கற்றுக் கொள்ள வேண்டும் என்றெல்லாம் பேசினீர்கள். ஆனால் இன்னொரு சமயம் திரு.சிவாஜிகணேசன் என் குரு. அவரிடம் நடிப்பைப் பற்றி நிறையக் கற்றுக் கொள்ள வேண்டும் என்றும் கூறியிருக்கிறீர்கள். விளக்கமான பதில் தேவை. -ஆர்.ஜி.சபிதா மூர்த்தி, சென்னை-13.
இருவரும் சிறந்த நடிகர்கள். இருவரிடமும் என்னைப் போன்றவர்கள் கற்க வேண்டியவை ஏராளமாக இருக்கின்றன. இருவரிடமும் இருக்கும் அனுபவ வெள்ளத்திலிருந்து நானும் சில துளிகளைப் பெற்றுக் கொண்டிருக்கிறேன். அந்த வகையில் இருவருமே எனக்குக் குருவானவர்கள்தான்.

|
|
Tweet | ||
அருமையான முத்துக்களை மிக நேர்த்தியாகக்
ReplyDeleteகோர்த்து அழகிய மாலையாக்கித் தந்தமைக்கு மனமார்ந்த நன்றி
தொடர வாழ்த்துக்கள்
விதவிதமான செய்திகளை அள்ளித் தருகிறீர்கள் நண்பரே.
ReplyDeleteகாலத்தால் அழியாத அழியாச் சுடர்களாக விளங்கும்
தமிழுலக நடிகர்களின் பதிகள் அருமை அருமை.....
மூணு நாள் வெளியூர் போக வேண்டியிருந்தது. அதனால புதுசா எதுவும் உருவாக்க முடியலையேன்னு பழைய பேட்டிகளைப் போட்டேன். உங்களுக்குப் பிடிச்சிருந்ததில் மிக்க மகிழ்ச்சி நண்பரே! நன்றி!
Deleteமூன்று பிரபலங்களின் அரிய பேட்டியை தந்துள்ளமைக்கு நன்றி! அந்த பேட்டியில்திரு எம்.ஜி.ஆர். அவர்கள் அன்று சொன்ன கருத்து இன்றும் பொருந்தும். இன்றைக்கு வருகின்ற திரைப்பட விமரிசனங்கள் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு காரணமாகவே எழுதப்படுகின்றன. ஒரு ஆங்கில தினத்தாளில் ஆங்கிலப் படத்திற்கும், மலையாள படத்திற்கும் அதிக மதிப்பெண்களையும் தமிழ்படங்களுக்கு குறைந்த மதிப்பெண்களே தருகின்றனர். அவைகள் நல்ல படங்களாயிருந்தாலும்!அந்த விமரிசனங்களைப் படிக்காமல் படத்தைப் பார்ப்பதே நல்லது.
ReplyDelete1967ல் தினமலர் பேட்டியில் ‘ஒரு கத்தி சண்டைப் படம் வெற்றி பெற்றால் தொடர்ந்து கத்தி சண்டைப் படங்களாகவே வருகிறது. ஒரு சோகப்படம் வெற்றி பெற்றால் தொடர்ந்து சோகப்படங்கள் வருகின்றன. இப்படியான நிலை மாற வேண்டும்’ என்று சொல்லியிருக்கிறார் எம்.ஜி.ஆர். இதுபோல பல விஷயங்கள் அவர் சொன்னதுபோலவே இன்றும் இருக்கின்றன என்பது விந்தைதானே! ரசித்து மகிழ்ந்த தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!
Deleteபழமை என்றும் இனிமை - உண்மை!
ReplyDeleteரசித்தீர்கள் என்பதில் மகிழ்வு கொண்டு நன்றி நவில்கிறேன்!
Deleteஅறிந்து கொண்டோம் - தகவலுக்கு நன்றி
ReplyDeleteதங்களுக்கு என் இதய நன்றி!
Deleteஇது சின்ன மிக்ஸர் போல....
ReplyDeleteநடைவண்டிகள் தொடர் வர வேண்டியது. எழுத முனையாததால இந்த சின்ன மிக்ஸர். படித்து ரசித்த தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!
DeleteThaliaippu romba poruththam!
ReplyDeleteதலைப்பையும் ரசித்துக் குறிப்பிட்ட தங்களுக்கு என் இதுயும் நிறை நன்றி!
Deleteபழைய நிகழ்வுகளை அறியத்தந்தமைக்கு நன்றிகள்.
ReplyDeleteபடித்து ரசித்ததற்கு என் மனமார்ந்த நன்றி!
Deleteஇதை படிக்கும்போது அண்ணனுக்கு வயசு 70 இருக்குமோன்னு தோணுது...,
ReplyDeleteம்ம்ம்ம்ம்.... தகவல்களுக்கு நன்றி.....
ReplyDeleteஉங்களுக்கு என் இதயம்நிறை நன்றி!
Deleteஅண்ணா! தலைப்பே வசீகரமாக இருக்கு...!
ReplyDeleteஇந்த பதிவை படிக்குமோது அண்ணனுக்கு வய்சு எழுபதோன்னு யோசிக்க வைக்குது.
ReplyDeleteராஜி,
Deleteநிச்சயமாக அண்ணன் வயது எழுபதுதான்..நான் சொல்வது அவரின் மனமுதிர்ச்சியைவைத்து!
சென்ற பதிவில் அவர் கவிதையை நான் சற்று(அதிகமாகவே) கலாய்த்திருந்தேன்..
அதற்கு அவர் அளித்துள்ள பதில் அவர் எந்த அளவிற்கு மனமுதிர்ச்சி உடையவர் என காண்பிக்கிறது..மேலும் அவரின் நகைச்சுவை உணர்வும் அபாரம்.(எவரும் மற்றவரை கிண்டல் செய்யும்போது சிரிக்க முடியும்;ஆனால் தன்னையே கிண்டல் செய்வதை ரசிப்பவன் உண்மையான நகைச்சுவையாளன்.)
சிலமாதங்களுக்கு முன் எனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவம் இது:
நான் ஒரு பதிவர் எழுத்துக்களை சிலாகித்து எழுதுவேன்.அவரும் அதை ரசித்து நன்றி கூறுவார்.ஒரே ஒரு முறை அவர் கட்டுரை ஒன்று சுமார் ரகம் என எழுதப்போக,வந்ததே கோபம அவருக்கு..உங்கள் ரசனைக்கு நீங்கள் முடிதிருத்தும் சலூனில் உள்ள புத்தகங்களைத்தான் படிக்க வேண்டும் என சாடினாரே பார்க்கலாம்!எடுத்தேன் ஓட்டம்!!
சரிதான்! அடுத்த பதிவுல சங்க இலக்கியத்திலருந்து ஏதாவது நான் எடுத்துப் போட்டா அண்ணனுக்கு வயசு எண்ணூறுன்னு சொல்வியாம்மா தங்கிச்சி? டவுட்டு!
DeleteDear Ganpat,
Deleteஎப்போதும் புகழ்ந்து கொண்டேயிருந்தால் அவர் நண்பர் அல்லர். குறை கண்டபோது தயங்காமல் சொல்லத்தான் வேண்டும். அதேபோல குறைகளை ஏற்றுக் கொண்டால்தான் திருத்தி நாம் மேம்பட முடியும் அதற்கான வாய்ப்பு வரும்போது ஏற்காமல் மற்றவரைத் திட்டுபவன் வளர மாட்டான். நான் எப்போதும் வளரவே விரும்புகிறேன். சரிதானே... மிக்க நன்றி.
சிலர் இட்லியை விரும்பி 8,10 என்று உள்ளே தள்ளுவார்கள்; சிலர் இட்லியைக் கண்ணால் கூடப் பார்க்கப் பிடிக்காதவர்கள்; சிலர், வேறு ஒன்றும் இல்லையென்றால், 4 இட்லியைக் கடனே என்று முழுங்கி வைப்பார்கள்! அவரவர் டேஸ்ட் அவரவர்க்கு! எம் ஜி ஆர் இருந்திருந்தால் இன்று சொல்லியிருப்பேண்! (கொஞ்ஜம் தக்ஷனை வைத்தால், பிடிக்காதவனும் இட்லி ‘பேஷ், பேஷ்’ என்று சொல்லுவான்!) - ஜெ.
ReplyDeleteஇந்த தக்ஷினை விவரம் தலைவருக்குத் தெரியாமப் போய்த்தானே இப்படிச் சொல்லிருக்கார். நல்ல ஒரு ஆலோசகரை இழந்துட்டாரே அவர்... தங்களி்ன நற்கருத்துக்கு என் இதயம்நிறை நன்றி ஸார்!
Deleteதகவல்கள் சுவாரசியம்
ReplyDeleteரசித்துப் படித்த தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!
Deleteஎன்ன இப்படி மரியாதை இல்லாமல் ஆரம்பிக்கிறீர்களே என்று ஒரு கனம் பயந்து போனேன்! :))
ReplyDeleteஹேமமாலினி சொன்னா கரெக்டாத்தான் இருக்கும். அப்பீலே இல்லை!
மூன்றாவது பதிவின் கடைசி பதிலில் அப்போதே அரசியலில் தேர்ச்சி பெறத் தொடங்கி விட்டார் எனத் தெரிகிறது.
‘அவரை’ மனதில் வைத்து படிக்கத் தொடங்கினதால் பயந்துட்டீங்க போலருக்கு... ரசித்துப் படித்த தங்களுக்கு என் இதய நன்றி!
Deletepazhaya seuthikal!
ReplyDeletethanthamaikku nantri!
படித்து ரசித்த தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!
Deleteகலக்குறிங்க போங்க , உங்களால மட்டும் எப்படிங்க எப்படி ...ரசனையோடு ....
ReplyDeleteதென்றல் பாராட்டியதில் மிகமிக மனமகிழ்வு கொண்டு என் இதயம் நிறை நன்றியை உரித்தாக்குகிறேன்.
Deleteபழைய நட்சத்திரங்களின் பேட்டிகள் உண்மையிலேயே படிக்க சுவாரஸ்யமாக இருந்தது!
ReplyDeleteஒரு கால இடைவெளிக்குப் பின் பழைய பத்திரிகைகளைப் புரட்டுவது எனக்கும் சுவாரஸ்யமான அனுபவமாகவே இருக்கிறது. அதனால்தான் அதில் நான் ரசித்தவற்றை உங்கள் பார்வைக்கும் வைக்கிறேன். ரசித்துப் படித்த தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!
Deleteஞாயிறு மொறுமொறு நல்லாயிருக்கே.என்ன...அழகு அந்த ஹேமமாலினி !
ReplyDelete‘ட்ரீம் கேர்ள்’ன்னு ரசிகர்கள்கிட்ட பட்டம் வாங்கினவங்களாச்சே ஃப்ரெண்ட்! மயங்க வைக்கிற அழகுதான்! உங்களுக்கு என் இதய நன்றி!
Deleteதலைப்பு மிகவும் சரியே!
ReplyDeleteஅறியாதன அறியச் செய்தீர்!
சா இராமாநுசம்
நீங்கள் ரசித்ததில் மனமகிழ்வு கொண்டு உங்களுக்கு என் நன்றியை உரித்தாக்குகிறேன்!
Deleteபழைய நட்சத்திரங்களில் அரைவாசிபேர் உயிர் இறந்த பின்தான் நான் பூமியில் தோன்றினேன். அவர்களின் பேட்டி இப்படி சுவாரஸ்யம் மிகுந்ததாகவா இருக்கும்....சூப்பர் இப்ப இருக்கிற நடிகைகள் வாயை துறந்தாலே முதல்ல வாறது அக்சுவலி தான் சோ சொல்லாம அவங்க சோறு சாப்பிட மாட்டாங்க அருமையான பதிவு அண்ணா...
ReplyDeleteஆமாம்மா... இங்கிலீஷ் கலந்துதான் இப்பல்லாம் பேசறாங்க. சுத்தத் தமிழ் பேசும் நட்சத்திரங்கள் ஒரு கை விரலுக்குள் அடக்கம். இதைப் படிச்சு ரசிச்சதுக்கு என் மனமார்ந்த நன்றி!
Deleteபழைய நினைவுகளை தெரிந்து கொண்டதில் மகிழ்ச்சி சார்.
ReplyDeleteரசித்துப் படித்த தங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!
Deleteமிக அருமையான,அவசியமான,உபயோகமான பதிவு!நன்றிகள் அண்ணா.
ReplyDeleteஇதை அந்த காலத்தில் படிக்கும்போதே பலர், எம்.ஜி.ஆர மற்றும் ஜெயா அவர்கள் பல ஆண்டுகள் கழித்து இம்மாநிலத்தின் முதலமைச்சராக வருவார்கள் என ஊகித்திருக்கக்கூடும்!எனக்கு இருவரும் குருவே என ஜெயா சொல்லியிருப்பது அவர் உறுதியானவர் என காண்பிக்கிறது.
படித்து ரசித்துக் கருத்திட்ட தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!
Delete