பி.கே.பி.யும், நானும் - 6
பி.கே.பி ஸார் ஒரு PERFECTIONIST. செய்யும் வேலைகளில் 100 சதவீதம் ரிசல்ட்டை எதிர்பார்ப்பார். தாம் செய்யும் வேலைகளிலும் எதிலும் அலட்சியமின்றி அவ்விதமே இருப்பார் அவர். நான் அப்படியான ஆசாமியில்லை. நான் மனதில் வைத்திருந்த டிசைனை என்னால் செயல் வடிவத்தில் கொண்டு வர முடிந்து விட்டாலே திருப்தியாகி விடுவேன். அதில் சின்னச் சின்ன இடறல்கள இருப்பதை பெரிதுபடுத்த மாட்டேன். அதாவது... 80 சதவீதத்திலேயே திருப்தியாகி விடுகிற ஆசாமி.
அதற்கு முந்தைய இதழ் வரை நான் ப்ரிண்ட் அவுட் தர, அதை அவர் திருத்தம் செய்து தர, நான் இறுதி ப்ரிண்ட் அவுட் தருவது என்று இருந்ததால் என்னைப் பற்றிய இந்த விஷயம் அவருக்குத் தெரியாது. கணிப்பொறி முன் அமர்ந்து பணி செய்யும் போது வெளிப்படாமல் போய்விடுமா என்ன? ஒரு டிசைன் நான் செய்து முடித்து, டெக்ஸ்ட் வைத்து பக்கத்தை வடிவமைத்தேன். அப்போது எங்களுக்குள் நடந்த உரையாடல் இங்கே:
பி.கே.பி. : டிசைன் நல்லா இருக்கு கணேஷ்... இங்க பாருங்க... அந்தப் பொண்ணு முகத்துக்குப் பககத்துல சின்னதா நாலஞ்சு டாட்ஸ் இருக்கு. அதை க்ளியர் பண்ணுங்க..
நான் : டிஸைன் ஓ.கே. தானே? அந்தச் சின்ன கறுப்புப் புள்ளிகளை யார்சார் உத்துப் பாத்து கண்டுபிடிககப் போறாங்க? ஏதோ ப்ரிண்டிங்ல இங்க் கொட்டிருச்சுன்னு நினைச்சுப்பாங்க. விடுங்க...
பி.கே.பி. : என்னங்க இப்படிச் சொல்றீங்க? ட்ராஃபிக் சிக்னல்ல கான்ஸ்டபிள் இல்லன்னா, ரெட் இருக்கும் போதே க்ராஸ் பண்ணிப் போய்டுவீங்களா?
நான் : நிச்சயம் போக மாட்டேன் ஸார்!
பி.கே.பி. : கடையில ஒரு பொருள் வாங்கறதுக்கு 50 ரூபாய் தர்றீங்க. கடைக்காரர் ஏதோ ஞாபகத்துல நீங்க 100 ரூபாய் கொடுத்ததா நினைச்சுக்கிட்டு பாக்கி தர்றார். சரின்னு வாங்கிட்டு வந்திடுவீங்களா?
நான்: ஒரு நாளும் செய்ய மாட்டேன் ஸார். அவர்கிட்ட விஷயத்தைச் சொல்லிட்டு மீதிப் பணத்தைக் கொடுத்துடுவேன்.
பி.கே.பி. : ஏன் அப்படிச் செய்யறீங்க? அங்கல்லாம் யாரும் பாத்துட்டா இருந்தாங்க?
நான் : யாரும் பாக்காட்டி என்ன ஸார்..? அதெல்லாம் தப்புன்னு எனக்குத் தெரியும்தானே! என் மனசு சொல்லுமே ஸார்...!
பி.கே.பி. : அதுபோலத்தானே இதுவும். இதை யாரும் பாக்காட்டி என்ன? தப்பா இருக்குன்னு உங்க மனசுக்குத் தெரியணும்தானே..! மத்தவங்க பாக்கறாங்க, பாக்கலைங்கறது பிரச்னையில்ல கணேஷ்! நம்ம கிட்டயிருந்து ஒரு விஷயம் வெளிய போகுதுன்னா, அது நமக்கு 100 சதவீதம் திருப்தியா இருக்கணும். அப்பத்தான் அதுக்கு ஒரு மதிப்பு இருக்கும்.
நான் : புரிஞ்சுது ஸார்... இதோ, சரி பண்ணிடறேன்!
இந்த விஷயம் நான் அவர்கிட்டயிருந்து எடுத்துக்கணும்னு நினைக்காமயே கூட இருந்ததால தானா எனக்குள்ள இறங்கினது. இபபவும் நான் அவர் மாதிரி 100 சதவீதம்னு மார் தட்டிக்க மாட்டேன். முன்பை விட பெட்டரா 95 சதவீதத்துல இருக்கேன்னு வேணா பெருமையா சொல்லிக்கலாம். (ஏறக்குறைய இதே கருத்தை பின்னாளில் இந்திரா செளந்தர்ராஜனும் என்னிடம் சொன்னார். அதுபற்றி இ.செள.ராஜனும் நானும் என்ற பகுதியை எழுதும் போது விரிவாய் விளக்குகிறேன்)
அவருடனான இந்த அனுபவத் தொடரில் நான் ஊஞ்சல் பணியைப் பத்தியும், மத்த அலுவலகப் பணிகள் பத்தியும் சொல்றதுல மாற்றி மாற்றித் தாவ வேண்டியிருக்கிறது. நீங்களும் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டு என்னோட தாவுங்க.
ஊஞ்சலின் சில சாம்பிள் டிசைன்ஸ் |
புத்தகங்கள் படிக்கிற பழக்கம் ஓரளவுக்கு இருந்ததால கதைன்னா என்ன, எந்த அளவு வர்ணனைகளும், எந்த அளவு உரையாடல்களும் இருக்க வேண்டும் என்கிற விஷயம் எனக்கு சிறிதளவு தெரிந்திருந்தது. அப்போது அவர் டி.வி. தொடர் ஒன்றுக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதும் பணியை ஏற்றுக் கொண்டிரு்ந்ததாலும், திரைப்பட வசனப் பணியிலும் ஈடுபட்டிருந்ததால் அலுவலகம் பிஸியாகவே இருக்கும். கதை என்றால் என்ன என்று தெரிந்திருந்த எனக்கு திரைக்கதை என்றால் என்ன, வசனம் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பதையெல்லாம் தெளிவாக எடுத்துரைத்த கலங்கரை விளக்கம் பி.கே.பி. ஸார்.
மிகைப்படுத்தலாகச் சொல்கிறேன் என்று தோன்றுகிறது இல்லையா..? பொதுவாக ஒரு இயக்குனரிடம் உதவி இயக்குனராக இருந்தவர்களைக் கேட்டுப் பாருங்கள்... தனியாக உட்கார வைத்து, கதையில் இந்தத் தவறு, இப்படித் திருத்த வேண்டும், வசனத்தை இப்படி மாற்ற வேண்டும் என்றெல்லாம் குழந்தைக்குச் சொல்லித் தருவது போல சொல்லித் தர மாட்டார்கள் எந்த இயக்குனர்களும். அவர் வேலை செய்யும் விதத்தையும், எதை எப்படிச் செய்கிறார்கள் என்பதையும் கவனித்தும் தான் தொழில் கற்றுக் கொள்ள வேண்டும். ஆனால் வகுப்பறையில் மாணவனுக்குச் சொல்லித் தரும் ஆசிரியரைப் போல காரண, காரியங்களோடு விளக்கி இதை இப்படி மாற்ற வேண்டும் என்று தெளிவாய் எனக்குக் கற்றுத் தந்த குரு என் நண்பர்! என் இடத்தில் நீங்கள இருந்தால் இன்னும் புகழ்வீர்கள் என்பது திண்ணம்!
டி.வி. தொடருக்கான கதையை விவாதித்து, காட்சிகளாகப் பிரித்து, வரிசைப்படுத்தி எபிஸோடுகள் எழுதியபின், கதையையும், வசனங்களையும் தெளிவான குரலில் பாவத்துடன் பேசி காஸட்டில் பதிவு செய்வார் அவர். அதை வாக்மேனில் போட்டு காதில் கேட்டு டைப் செய்வேன் நான். (பெரும்பாலும் நானும் சிறுபாலும் என்னுடனிருந்த மற்றொரு உதவியாள நண்பரும்). டைப் செய்ததை அவர் பார்த்து, பிழைகள் திருத்தி, வசனங்களை இன்னும் மெருகேற்றி, பின் பிரி்ண்ட் அவுட் எடுத்து, தயாரிப்பு நிறுவனத்திற்கு அவை செல்லும்.
மிகைப்படுத்தலாகச் சொல்கிறேன் என்று தோன்றுகிறது இல்லையா..? பொதுவாக ஒரு இயக்குனரிடம் உதவி இயக்குனராக இருந்தவர்களைக் கேட்டுப் பாருங்கள்... தனியாக உட்கார வைத்து, கதையில் இந்தத் தவறு, இப்படித் திருத்த வேண்டும், வசனத்தை இப்படி மாற்ற வேண்டும் என்றெல்லாம் குழந்தைக்குச் சொல்லித் தருவது போல சொல்லித் தர மாட்டார்கள் எந்த இயக்குனர்களும். அவர் வேலை செய்யும் விதத்தையும், எதை எப்படிச் செய்கிறார்கள் என்பதையும் கவனித்தும் தான் தொழில் கற்றுக் கொள்ள வேண்டும். ஆனால் வகுப்பறையில் மாணவனுக்குச் சொல்லித் தரும் ஆசிரியரைப் போல காரண, காரியங்களோடு விளக்கி இதை இப்படி மாற்ற வேண்டும் என்று தெளிவாய் எனக்குக் கற்றுத் தந்த குரு என் நண்பர்! என் இடத்தில் நீங்கள இருந்தால் இன்னும் புகழ்வீர்கள் என்பது திண்ணம்!
டி.வி. தொடருக்கான கதையை விவாதித்து, காட்சிகளாகப் பிரித்து, வரிசைப்படுத்தி எபிஸோடுகள் எழுதியபின், கதையையும், வசனங்களையும் தெளிவான குரலில் பாவத்துடன் பேசி காஸட்டில் பதிவு செய்வார் அவர். அதை வாக்மேனில் போட்டு காதில் கேட்டு டைப் செய்வேன் நான். (பெரும்பாலும் நானும் சிறுபாலும் என்னுடனிருந்த மற்றொரு உதவியாள நண்பரும்). டைப் செய்ததை அவர் பார்த்து, பிழைகள் திருத்தி, வசனங்களை இன்னும் மெருகேற்றி, பின் பிரி்ண்ட் அவுட் எடுத்து, தயாரிப்பு நிறுவனத்திற்கு அவை செல்லும்.
இப்படி சுவாரஸ்யமாக நாட்கள் சென்றதில் என் சொந்தக் கவலைகளை மறந்து உற்சாகமாகியிருந்தேன்.
சில மாதங்கள் இப்படி சுவாரஸ்யமாகச் சென்றபின் டி.வி. தொடர் விஷயத்திலும், ஊஞ்சல் விஷயத்திலும் அடுத்தடுத்து திருப்பங்கள் நிகழ்ந்தன. சில காரணங்களினால் டி.வி. தொடரிலிருந்து விலகும்படியான சூழல் பி.கே.பி. ஸாருக்கு ஏற்பட்டது. அவர் பக்கம் நியாயம் இருந்ததால் டி.வி. தொடர்களே தனக்கு இனி வேண்டாம் என்று உறுதியான முடிவெடுத்தார். அதே சமயத்தில் என் நண்பர் ஆரோக்கிய தாஸ் ‘ஐ.ஏ.எஸ். தேர்வுக்குத் தயார்ப்படுத்தும் பயிற்சி’க்குப் போக வேண்டியிருந்ததால் பி.கே.பி. ஸாரிடம் பணியை விட்டு விலகினார். இந்த இரண்டு திருப்பங்களும் எனக்குக் கூடுதல் பொறுப்பைத் தந்தன. அவை பற்றி...
-தொடர்கிறேன்.
|
|
Tweet | ||
//தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க!/// இருங்க முதல்ல படிச்சுடுவந்து என்ன செய்யறதுண்ணு முடிவு பண்ணூறேன்
ReplyDeleteமுதல் நபரா வந்திருக்கற உங்களுக்கு வெல்கம்!
Deleteபடத்திற்கு முன் போட்ட விஷயங்களில் இருந்து பல நல்ல விஷயங்களை கற்க முடிகிறது. அதனால் அதனை பதிவிட்ட உங்களுக்கு தோளில் நட்புடன் ஒரு தட்டு
ReplyDeleteவாழ்த்துகள் கணேஷ்
நட்புடன் தட்டிப் பாராட்டிய நண்பா... உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!
Deleteநல்ல பகிர்வு.உங்களோட கைவண்ணத்தில் உருவானவை தானா ஊஞ்சலின் அட்டை பக்கம்....அனைத்தும் படித்து இருக்கிறேன்..
ReplyDeleteரசித்துக் கருத்திட்ட தங்களுக்கு என் உளமார்ந்த நன்றி!
Deleteநீங்கள் சொல்லியிருக்கும் அந்த 80% கூட இல்லாத ஆசாமி நான்! புல்லுக்கும் பொசிவது போல உங்கள் அனுபவங்கள் எனக்கும் உதவுகின்றன! தொடர்கிறேன்.
ReplyDeleteபடிக்கும் விஷயங்களிலிருந்து நல்லனவற்றை இயன்ற வரை கைக் கொள்ளும் பழக்கம் எனக்கும் உண்டு. நண்பரான உங்களையும் அவ்விதமே காண்பதில் மிக்க மகிழ்ச்சி கொண்டு உஙகளுக்கு என் இதயம்நிறை நன்றி!
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteதொடருங்கள். படித்து வருகின்றேன்.
ReplyDeleteதொடர்ந்து தட்டிக் கொடுத்து வரும் உங்களின் ஆதரவிற்கு என் மனமார்ந்த நன்றி!
Deleteறொம்ப சுவாரஸ்யமா போய்கிட்டு இருக்கு
ReplyDeleteஅருமையான அனுபவங்கள் தொடருங்கள்.
அனுபவங்களைத் தொடர்ந்து வரும் எஸ்தருக்கு என் இதயம் நிறைந்த நன்றி!
Deleteஒவ்வொரு பகிர்விலும் நல்ல விஷயங்கள்.... தொடருங்கள். 100% perfection எதிர்பார்ப்பதும், அப்படி இருக்க முயற்சிப்பதும் நல்லது. நல்ல விஷயங்களை பகிர்ந்து உங்கள் நல்லெண்ணத்திற்கு ஒரு பூங்கொத்து!
ReplyDeleteஉங்கள் பூங்கொத்தை மகிழ்வுடன் பெற்றுக் கொண்டு, என்னை உற்சாகப்படுத்திய தங்களுக்கு என் உளம்கனிந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
Deleteநான் கூட எந்த பணியிலும்,பூரணத்துவம் (Perfection) வேண்டும் என நினைத்தவன்/நினைப்பவன்.திரு பி.கே.பி அவர்களும், அவரை பின்பற்றும் தாங்களும் அதுபோன்று இருப்பது அறிந்து மகிழ்ச்சி. தாங்கள் ஏற்றுக்கொண்ட கூடுதல் பொறுப்பு பற்றி அறிய ஆவலுடன் காத்திருக்கிறேன். தொடருங்கள்.
ReplyDeleteஆவலுடன் காத்திருக்கிறேன் என்ற வார்த்தை மூலம் உற்சாகம் தந்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!
Deleteஉங்கள் அனுபவங்கள் மற்றவர்களுக்கு வழிகாட்டுதல்கள். இடையில் இருந்து படித்த என்னக்கு முதலில் இருந்து படிக்க வேண்டும் என்ற அவளைத் தூண்டியது உங்கள் எழுத்து நடை. அத்தனையும் படித்து விட்டு வருகிறேன்
ReplyDeleteசீனு! என் இந்தப் பதிவைப் படித்து எழுத்து நடையைப் பாராட்டியதோடு நில்லாமல் முதலிலிருந்தே அனைத்தையும் படித்துக் கருத்திட்ட உங்களுக்கு... என் இதயம் நிறைந்த நன்றி! உங்களைப் போன்ற நண்பர்கள் தரும் சக்திதான் என்னை ஓட வைக்கிறது! இதுதான் என் சொத்து! வேறென்ன..?
Deleteநான ஒருமுறை சொன்னா நூறுமுறை சொன்னதா
ReplyDeleteஅர்த்தம்!
அராமை!
சா இராமாநுசம்
ஐயா... இவ்வளவு அழகான ஒரு பாராட்டினைத் தந்து என்னைப் பெருமிதம் கொள்ளச் செய்து விட்டீர்கள். தங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!
Deleteஎழுத்துப் பிழை! அருமை!
ReplyDeleteசா இராமாநுசம்
யாரும் பாக்காட்டி என்ன ஸார்..? அதெல்லாம் தப்புன்னு எனக்குத் தெரியும்தானே! என் மனசு சொல்லுமே ஸார்...!
ReplyDeleteஒவ்வொரு வருக்குமே இந்த மனசு இருந்தா நல்லா இருக்கும்.
நிஜம் தாம்மா... மனதின் வழி நடப்பவன் தவறு செய்ய மாட்டான். சமூகம் நன்றாகவே இருககு்ம். இதைப் பாராட்டிக் கருத்திட்ட உங்களு்க்கு என் மனமார்ந்த நன்றி!
Deleteஅநேகமா ஏகப்பட்ட உங்க பதிவுகள மிஸ் பண்ணிருப்பேன் போலயே..கொஞ்சம் பிஸி..ரெண்டு நாளாதான் ரொம்ப பிளாகிங் வேலையில இருக்கேன்...இந்த தொடர் சிறப்பாக அனைவரும் ரசிக்கும்படி அமைவதை கண்டு மனம் மகிழ்கிறேன் சார்..பதிவுலகில் நான் ரொம்பவும் ரசிக்கும் எழுத்துகளில் ஒன்று தங்களுடையது என்பதே உண்மை..அருமையான பகிர்வு..முதல் பத்தியிலேயே என்னை உட்கார வச்சிட்டீங்க/மிக்க நன்றி.
ReplyDeleteபதிவுகளை எப்ப வேணா சேர்த்துப் படிச்சுக்கலாம் குமரன். நான்கூட வர்ற வாரம் பலரது பதிவுகளை மிஸ் பண்ண வேண்டிய சூழ்நிலை உருவாகியிருக்கு. அதனாலென்ன... ரசித்துப் படித்து ஆதரவு தரும் உங்களுக்கு எப்போதும் என் மனதில் இடம் உண்டு. நன்றி!
Deleteயாரும் பாக்காட்டி என்ன ஸார்..? அதெல்லாம் தப்புன்னு எனக்குத் தெரியும்தானே! என் மனசு சொல்லுமே ஸார்...!
ReplyDeleteநிறைய நல்ல விஷங்களை சொல்லிப் போகும் பதிவு தொடருங்கள் . ஆமா அது என்ன தாவுங்க என்று வடிவேல் காமெடி மாதிரி இல்ல இருக்கு .. தாவுடா தாவு என்று கூறி விட்டு மதில் சுவற்றில் தொங்க விட்ட கதையாகிடப் போகுதுங்க .
நாங்களும் உங்களோட சேர்ந்துட்டோம் இல்ல .வவ்வவ்
பயப்படாதீங்க... என்னோட சேர்ந்த உங்களை பத்திரமா தாவ வெச்சிடுவேன் நான். வடிவேலு மாதிரி சுவர்ல உககாந்து, அடிபட்டுட்டு அழ மாட்டிங்க... ஹா.. ஹா... ரசித்துக் கருத்திட்ட தங்களுக்கு என் இதய நன்றி!
Deleteத . ம .5
ReplyDeleteLearning is a continuous process. And implementation is the next step of learning. You have not only learnt but also you were made to implement the same instantly. Such Gurus are rare now a days. You are blessed with one. Getting a good Boss (for peace in office) and good Wife (for peace in house) - for both we must be lucky enough. It is also a sort of gift from the Almighty. Keep it up.
ReplyDeleteஉங்களின் ஒவ்வொரு வார்த்தையையும் நான் ஆமோதிக்கிறேன் மோகன். மிகச் சரியான கருத்தைச் சொல்லியிருக்கிறீர்கள். உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!
Deleteநல்ல பதிவு சார்
ReplyDeleteஎனக்கும் வாசித்தலின் ஆவர்வம்
தொடருங்கள் சார்
உற்சாகம் தரும் கருத்தினைத் தந்திட்ட உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!
Deleteஉங்கள் அனுபவங்கள் மற்றவர்களுக்கு வழிகாட்டுதல்கள். இடையில் இருந்து படித்த என்னக்கு முதலில் இருந்து படிக்க வேண்டும் என்ற அவளைத் தூண்டியது உங்கள் எழுத்து நடை. அத்தனையும் படித்து விட்டு வருகிறேன்
ReplyDelete//அவளைத் // ஆவல் என்று படிக்கவும்.
அடுத்த பதிவிற்காக ஆவலுடன் உள்ளேன்
அடுத்த பதிவிற்காக ஆவலுடன் காத்திருக்கும் நண்பருக்கு என் மனமார்ந்த நன்றி!
Deleteதொடருங்கள் பல நல்ல விடயங்கள் தெரிந்து கொள்ளலாம்
ReplyDeleteநிச்சயம் தொடர்கிறேன் நல்ல விதமாய். உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!
Deleteமிகவும் சுவாரசியமான அனுபவங்கள். பிகேபி சார் என் மனதிலும் இடம்பிடித்து விட்டார் ஏனென்றால் நானும் ஒரு பெர்பெக்சனிஸ்ட்(என்று சொல்லிக்கொள்பவன்) ஹி ஹி
ReplyDeleteஅவர் அனைவர் மனதிலும் இடம் பிடிக்கக கூடிய இதயத் திருடர்தான்! ரசித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் இதய நன்றி!
Deleteஎதுவுமே கிண்டல் செய்ய வரேல்ல ஃப்ரெண்ட்.உங்களின் திறமையும் அனுபவமும் அப்பாடா சொல்ல வைக்கிறது.பிடியுங்கோ...சுவிஸ் சொக்லேட் !
ReplyDeleteஹையா... உங்க கிட்டருந்து ஆசையா எதிர்பார்த்திட்டிருந்த சுவிஸ் சொக்லேட் கிடைச்சிடுச்சு... இதுக்காகவே இன்னும் நிறைய எழுதுவேன் ஃப்ரெண்ட்! என்னைத் தட்டியும் கொடுக்கலாம், குட்டியும் போகலாம், கிண்டலும் பண்ணலாம். You have all the rights friend! அடுத்தது ஜாலியான பதிவாப் போட்றலாம் நாம. ஓ.கே!
Deleteஅனுபவங்கள் மூலம் நீங்கள் கற்றவற்றை அனுபவப்படாமலேயே நாங்களும் கற்று அனுபவிக்கிறோம். பிகேபி அவர்களிடமிருந்து கிடைத்திருக்கும் இந்தப் பாடம் வாழ்க்கைக்கு மிகவும் அவசியமானது. பகிர்வுக்கு நன்றி கணேஷ்.
ReplyDeleteநடைவண்டி நல்ல வேகமாய்ப் போகிறது. பல தடங்கல்களால் என்னால் பின்தொடர முடியவில்லை.விட்டவற்றை விரைவில் படிக்கவேண்டும்.
இடையில் சில பதிவுகளைத் தவற விடும் அனுபவம் ஏறக்குறைய அனைவருக்கும் நேர்வதுதான். அதனாலென்ன... எப்போது வேண்டுமானாலும் நண்பனின் தளத்திற்கு நீங்கள் வந்து படிக்கலாம். உஙகள் கருத்து எப்பவுமே கரெக்ட்தான். நானும் பலரது அனுபவங்களிலிருந்து பாடம் கற்று வந்தவன்/வருபவன்தானே. அதனால்தான் என் அனுபவங்களையும் நேர்மையாக அறியத் தருகிறேன். தங்களுக்கு என் இதய நன்றி!
Deleteஉங்கள் அனுபவங்கள் எங்களுக்கும் நல்ல நல்ல விஷயங்களை சொல்லித் தருகிறது. இன்று 100% பெர்பெக்ஷன். மற்றவரிடம் எதிர்பார்ப்பதை விட நான் அப்படி இருக்க முயற்சிக்கிறேன்.
ReplyDeleteஆம்! அப்படி இருப்பது கடினம்தான் தோழி! ஆனாலு்ம் அதை நோககியே செல்வோம்- அதனால் நமக்கு மரியாதை கிட்டும் என்பதால்! மனமகிழ்வு கிட்டும் என்பதால்! நற்கருத்திட்ட உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!
Deleteநம்ம கிட்டயிருந்து ஒரு விஷயம் வெளிய போகுதுன்னா, அது நமக்கு 100 சதவீதம் திருப்தியா இருக்கணும். அப்பத்தான் அதுக்கு ஒரு மதிப்பு இருக்கும்.
ReplyDeleteசிறப்பான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்.
ரசித்துப் பாராட்டிய உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!
Deleteஅன்புள்ள கணேஷ்,
ReplyDeleteநண்பர் கடுகு அவர்கள் மூலமாக உங்கள் தளத்தின் அறிமுகம் சமீபத்தில் கிடைத்தது. உங்கள் நடை வண்டிகள் தொடர் மிகவும் அருமை.பல நல்ல விஷயங்களைக் கற்றுக் கொள்ள முடிகிறது. உங்கள் சேவை தொடரட்டும்...
ஸ்ரீனிவாசன்
http://BalHanuman.wordpress.com
கடுகு ஸாரின் மூலம் எனக்குக் கிடைத்த நல்லறிமுகங்கள் பல. இப்போது நீங்கள். அவருக்கும் என் எழுத்தைப் பாராட்டிய தங்களுக்கு் என் இதயம் நிறை நன்றி!
Deleteநடைவண்டி வெகு சுவாரஸ்யமாக நடைபோட்டுக்கொண்டுள்ளது.
ReplyDeleteநடைவண்டியை ரசித்தப் பாராட்டிய தங்கைக்கு என் உளம்கனிந்த நன்றி!
Deleteஉங்களை மேம்படுத்திக் கொள்ள உதவிய ஒரு நட்பு;இது எல்லோருக்கும் கிடைக்கது!தொடருங்கள்.
ReplyDeleteஎன் வலைக்கு வருகை தாருங்களேன்
http://shravanan.blogspot.in/2012/04/blog-post.html
ஆஹா! தங்கள் தளத்தை வாசித்துப் பார்த்தேன். அருமையிலும் அருமை. தொடர்கிறேன். என்னை ஊக்கப்படுத்திய உங்களின் கருத்துக்கு என் உளமார்ந்த நன்றி!
Deleteநீங்களாவது 80% ல திருப்தி பட்டுக்குவீங்க. ஆனால், நான் இருக்கேனே 50%லயே திருப்தி பட்டுக்குவேனே அவ்வ்வ்வ்வ்வ்வ். ஆனால், இதுலயும் நிறைய நன்மைகள் இருக்குண்ணா. தங்க வளைவிக்கு ஆசைப்படும் மனசு டிசைன் கண்ணாடி வளையலில் திருப்தி பட்டுக்கும். பட்டு சேலைக்கு ஆசைப்படும் மனசு, டிசைனர் சேலையில் திருப்தி பட்டுக்குவேன். அதனால, உங்க மாப்பிள்ளைக்கிட்ட அது வேணும், இது வேணும்ன்னு கேட்டு சண்டை பிடிக்க சான்ஸ் இல்ல. சோ, வீட்டுல நிம்மதி மட்டுமே இருக்கு
ReplyDeleteஹலோ... நான் செய்யற வேலையிலதான் 100 சதவீத திருப்தியைச் சொன்னேன். ஷாப்பிங்ல இல்லம்மா... அதுல சத்குரு சொல்ற மாதிரி ‘அத்தனைக்கும் ஆசைப்படு’ டைப்தான்! ஆனா ஒண்ணு... சுலபமா திருப்தியடைஞ்சுடறதால வீட்டுல நிம்மதி இருக்குன்னு சொன்னியேம்மா... அதைவிட வேறென்ன சொத்து வேணும்? அருமை. அருமை.
Deleteநல்லா சுப்பரா இருக்குங்க அண்ணா
ReplyDeleteவாம்மா கலை... ரொம்ப நாளைக்கப்புறம் வந்திருக்கே... மொதல்ல இந்த சாக்லேட்டைப் புடி. நல்லா சூப்பரா இருக்குன்னு பாராட்டினதுக்கு என்னோட இதயம் நிறை நன்றி!
Deleteஎதுவுமே கிண்டல் செய்ய வரேல்ல ஃப்ரெண்ட்.உங்களின் திறமையும் அனுபவமும் அப்பாடா சொல்ல வைக்கிறது.பிடியுங்கோ...சுவிஸ் சொக்லேட் !//////
ReplyDeleteநானும் ஹேமா அக்களோடு கட்சி செர்ந்துகிரன் ...நானும் கிண்டல்செய்ய வரேல்ல அண்ணா .
கலை! நீ என்னோட Small Sister! எவ்வளவு வேணாலும் கலாய்க்கலாம். இன்னும சொல்லப் போனா... நேசனோட ப்ளாக்ல நான் படிச்சுட்டு கருத்துப் போடக் கூட மறந்து உன்னோட கமெண்ட்ஸைத்தான் ரொம்ப நேரம் படிச்சு ரசிச்சிட்டிருப்பேன். அதான் நிஜம். அதனால Be Free with ME! சரியா?
Deleteஉங்கள் அனுபவங்கள் நல்லா இருக்கு. தொடருங்கள்! தொடர்ந்து படிக்கிறேன்.
ReplyDeleteதொடர்ந்து வரும் உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!
Deleteநடை வண்டி எக்ஸ்பிரஸ் ரயில் வேகத்துல போய்க்கிட்டிருக்கு. ரொம்ப நாளைக்கு அப்புறம் தொடரை காத்திருந்து படிக்கிற அனுபவம் சுவாரஸ்யம்.
ReplyDeleteவெல்கம் தாஸ்! பல சம்பவங்கள் நீங்கள் அறிஞ்சதே... உடன் இருந்தவராச்சுதே! காத்திருந்து படிக்கும் சுவாரஸ்ய அனுபவம் என்று ஊக்கம் தந்த உங்களுக்கு உளம்கனிந்த நன்றி!
Deleteஉங்கள் அனுபவங்கள் நல்ல பாடமாக உள்ளது.. மிகவும் சுவாரஸ்யமாக செல்கிறது... தொடருங்கள் இன்னும் நிறைய பாடங்களை கற்று கொள்கிறோம்...
ReplyDeleteஎன் படைப்புகளை நீங்கள் ரசித்துப் பாராட்டி பின்தொடர்வதில் எனக்கு மிகமிக மகிழ்ச்சி. தங்களுக்கு என் இதய நன்றி!
Deleteவெகு சுவாரஸ்யம்
ReplyDeleteஇத்தனை அனுபவங்கள் தான்
தங்க்ள் பதிவில் அதிக
சுவாரஸ்யமூட்டிப் போகின்றன என்றால்
அது மிக ஆகாது
நாங்க்ளும் நிறைய கற்றுக் கொள்ள முடிகிறது
பகிர்வுக்கு நன்றி
ிதொடர வாழ்த்துக்கள்
அனுபவங்களிலிருந்து நிறையக் கற்றுக் கொள்ள முடிகிறது என்ற வார்த்தைகளால் உற்சாகமூட்டிய உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!
DeleteTha.ma 8
ReplyDeleteஅன்புள்ள கணேஷ்,
ReplyDeleteபட்டுக்கோட்டை பிரபாகர் பற்றி சக்தி விகடன் பொறுப்பாசிரியர் ரவி பிரகாஷ்..
http://vikatandiary.blogspot.com/2011/01/blog-post_03.html.
பட்டுக்கோட்டை பிரபாகர் பற்றி மிகத் தீவிர சிவாஜி விசிறியான சாரதா பிரகாஷ்...
http://ennangalezuththukkal.blogspot.com/2011/06/blog-post.html
அன்புடன்,
ஸ்ரீனிவாசன் (California)
ஆஹா... இந்த இரண்டு கட்டுரைகளுமே நான் இதுவரை படித்திராதவை. என் நண்பரைப் பற்றி நான் மேலும் தெரிந்து கொள்ள உதவிய உங்களுக்கு மிகமிகமிகமிக மகிழ்வுடன் என் இதயம் நிறைந்த நன்றிங்க!
Delete