Saturday, April 21, 2012

ஹலோ, ரஜினி ஸ்பீக்கிங்! - 3

Posted by பால கணேஷ் Saturday, April 21, 2012

1978-79கள்ல ‘இதயம் பேசுகிறது’ இதழில் அப்ப வளர்ந்துக்கிட்டு வந்த ஹீரோவான ‘ரஜினிகாந்த்’திடம் தொடர் பேட்டி எடுத்து ‘ஹலோ... ரஜினி ஸ்பீக்கிங்!’ அப்படிஙகற தலைப்பில சில வாரங்கள் வெளியிட்டாங்க. அதில் சில பகுதிகள் என்னிடம் இருக்கிறது. ‘சிவமகன்’ங்கிறவரு ரஜினி ஸார் பேசற மாதிரியான நடையிலயே அதை எழுதியிருக்காரு. அதுல இருந்து ஒரு பகுதியை இங்க உங்களோட பகிர்ந்துக்கறேன்.

ந்திரப்பா!

ஆளு சிகப்பு. ஒரு முறை பார்த்தா மறுபடியும் பார்க்கணும்னு தோணும். ஒரு தடவை அவரோடப் பேசினா இன்னொரு தடவை பேசணும்னு தோணும். அது என்ன கவர்ச்சியோ தெரியாது..!

ராமகிருஷ்ண பரமஹம்சரோட பக்தர். வயது 48. எனக்கும் அவருக்கும் ஒரு ஆறு வருஷ பந்தம். ஆமா! நான் வேலை செய்யற பஸ்ஸிலேதான் அவரை முதல் தடவையாகப் பார்த்தேன். ரொம்ப எக்கச்சககமான சந்திப்பு!

அவர் ஃபேமிலியோட வந்திருந்தார். டிக்கெட் கேட்டார். டிக்கெட்டைக் கொடுத்து என் தொழிலை ஆரம்பிச்சேன! தெரியுமே, திருடறதுதான்... அவரோ சிரிச்சுக்கிட்டே இருக்காரு. நல்ல மனிதர்னு நினைச்சேன். அவங்க கிட்டயும் டிக்கெட்டை திருப்பி வாங்கிடலாம்னு திட்டம் போட்டேன். எறங்கும்போது அவர்கிட்ட டிக்கெட்டைக் கேட்டேன். முடியாதுன்னு சொல்லலை... சிரிச்சுக்கிட்டே கொடுத்துட்டுப் ‌போனாரு. அப்புறம்தான் தெரிஞ்சுது... அவர் யாருன்னு! அவர்தான் பெங்களூர் டிரான்ஸ்போர்ட் சர்வீஸ்லே அஸிஸ்டெண்ட் சூபர்வைஸர்! அதாவது செக்கிங் அதிகாரி!

செக்கிங் இன்ஸ்பெக்டர் கிட்டயே கை வரிசை! மறுநாள் வழக்கம் போல டிப்போவுக்குப் போனேன். ஒரு செய்தி: ஏ.டி.‌எஸ். சந்திரப்பாவை டியூட்டி முடிச்சிட்டுப் போய்ப் பார்க்கணும்னு! ஒண்ணுமே புரியலை. டியூட்டி முடிச்சிட்டு அவர் ஆபீஸுக்குப் போனேன். உள்ளே போய்ப் பார்த்தா... நான் டிக்கெட்டை திருப்பி வாங்கிய அதே மனிதர்தான் இங்க ஏ.டி.எஸ். சந்திரப்பா!

இப்பவும் சிரிச்சாரு. அதே சிரிப்பு, அதே பார்வை! அந்த டிக்கெட் விவகாரம் பத்திக் கேட்பாருன்னு நினைச்சேன். கேக்கலை. காப்பி வேணுமான்னு கேட்டாரு. ஆர்டர் பண்ணினாரு. காப்பி வந்தது. சாப்பிட்டேன். ‘‘போயிட்டு வர்றேன்’’ன்னு கிளம்பினேன். ‘‘சரி’’ன்னாரு. போறதுக்குக் கதவைத் திறககும் போது, ‘‘ஒரு நிமிஷம்...’’ன்னாரு.

‘‘என்ன ஸார்?’’ன்னு பயந்து வளைந்து நெளிந்து கேட்டேன். ‘‘நீ மத்தவங்களை ஏமாத்து, பரவாயில்லை. ஆனால் உன்னையே நீ ஏமாத்திக்காதே’’ன்னு சொன்னாரு. இப்பவும் எப்பவும் அந்த வார்த்தை எனக்குள்ளே சுத்திக்கிட்டே இருக்கு.

அதற்கப்புறம் நானும் அவரும் சினேகிதர்களாகி விட்டோம். நானும் அவரைப் போல ராமகிருஷ்ண பரமஹம்சரோட பக்தன்.

தீபாவளிக்கு நான் போயிருந்தபோது அவரைப் பார்த்தேன். இப்பவும் அதே சிரிப்பு, அதே பார்வை, அதே உபசரிப்பு.

ஒண்ணு கேட்டாரு - ‘‘ஒரு உதவி பண்ணுவியா?’’ன்னு. அவர் கேட்டா ஒண்ணா... ஓராயிரம் உதவி பண்ண நான் தயார். ஆனா அவருக்கு நான் என்ன உதவி பண்ண முடியும்..?  என்ன எதிர்பார்க்கிறாருன்னு தெரியல, புரியல. ஏன்னா, அவரு சொல்லலை. ‘‘நேரம் வரும் போது கேட்பேன்’’ன்னு சொன்னாரு. இது எனக்கு ஒரு பிரச்சனை. ஏன்னா இதுவரைக்கும் யார் கிட்டேயும் எதுவும் கேட்டுத் தொந்தரவு பண்ணும் பழக்கம் அவருக்குக் கிடையாது.

அது எல்லாருக்கும் தெரியும்.

என் கிட்ட மட்டும்..?

கேட்டுக்கிட்டே இருக்கேன்...

-அடுத்த பகுதியுடன் ‘ஹலோ, ரஜினி ஸ்பீக்கிங்’ நிறைவடைகிறது.

டியர் ஃப்ரெண்ட்ஸ்... புதுசா ஏதாவது மேட்டர் எழுதி உங்ககூட பகிர்ந்துக்கலாம்னு நினைச்சேன். ஆனா பாருங்க... இந்த கற்பனைக் குதிரை பயங்கரமா சண்டித்தனம் பண்ணிச்சு. வாலை முறுக்கி, மூஞ்சில குத்திக் கூட பாத்துட்டேன். நகர மாட்டேன்னுடுச்சு... சரி, வாயில்லா ஜீவனை துன்புறுத்த வேணாமேன்னு விட்டுட்டு, ஸ்டாக்ல இருந்த சூப்பர் ஸ்டார் மேட்டரை எடுத்து ‘மினி’ பதிவா போட்டுட்டேன் -மெஸ்லயெல்லாம் டிபன் தீர்ந்துட்டா உப்புமாவை வெச்சு சமாளிக்கற மாதிரி. ஹி... ஹி... ரெண்டு நாள் கழிச்சு சந்திக்கறேன்.  ஸீ யு!

49 comments:

  1. hmmmmm. avasarathukku pannina uppumavum nanragathan irukkirathu.

    ReplyDelete
    Replies
    1. அவசர உப்புமாவும் சுவைக்கிறது என்று சொல்லி உற்சாகம் தந்த நண்பர் மோகனுக்கு என் மனமார்நத நன்றி!

      Delete
  2. ‘‘நீ மத்தவங்களை ஏமாத்து, பரவாயில்லை. ஆனால் உன்னையே நீ ஏமாத்திக்காதே’’ன்னு // இந்தக் காலத்துக்கு ஏற்ற வார்த்தை இப்பவெல்லாம் அவங்க அவங்களையே ஏமாதிக்கிறாங்க என்பதே உண்மை உப்புமாவானாலும் பட்டினி போடாம பசிய போக்குது இல்ல .

    ReplyDelete
    Replies
    1. தென்றல்! மிகச் சரியாக நான் ரசித்த வரிகளை இந்தக் கட்டுரையிலிருந்து மேற்கோள் காட்டி நீங்களும் ரசித்திருக்கிறீர்கள். வியக்கிறேன். மனமகிழ்வுடன் நன்றி கூறுகிறேன்!

      Delete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. ஓட்டுப் போட நேரம் பிடிக்கிறது மூன்று முறை முயன்றேன் முடியவில்லை பிறகு வருகிறேன் .

    ReplyDelete
    Replies
    1. அவ்வளவு படுத்திடுச்சா சசி! அதனால பரவால்ல... ஓட்டை விட மதிப்பு மிக்கது உங்களனைவரின் கருத்தும்!

      Delete
  5. திரு.ரஜினி காந்த் அவர்களின் சிறப்பு
    வார்த்தை ஜாலம்...
    "நேரம் வரும் போது" என்பது....

    ஆனால் சிறந்த ஆன்மீகவாதி என்பதில்
    சந்தேகமில்லை...

    அன்றைய பேச்சுக்களை இன்றைக்கு தெரிந்திட
    பகிர்ந்தமைக்கு நன்றிகள் நண்பரே...

    ReplyDelete
    Replies
    1. ரஜினியைப் பற்றி மாறுபட்ட கருத்துக்கள் பலருககு இருக்குமென்றாலும் அவரின் ஆன்மீக ஆர்வம் நீங்கள் சொன்ன மாதிரி வியப்புககுரியதுதான் மகேன்! தங்களுக்கு என் இதய நன்றி!

      Delete
  6. எப்படியோ பதிவ தேத்திபுட்டீகளே - பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
    Replies
    1. இந்த மாதிரி ‘தேத்தறது’ன்னா நிறையவே ஸ்டாக் இருக்கு. ஹி... ஹி... ஆனா முடிஞ்ச வரை நானே எதாவது எழுதணும்னுதான் பாக்குறேன். நன்றி நண்பரே!

      Delete
  7. கணேஷ் பதிவுக்கு ஒரு பலே; கடைசி பாராவுக்கு பலே பலே!!

    ReplyDelete
    Replies
    1. நிஜம் சொன்ன கடைசிப் பாராவை ரசிச்சுப் பாராட்டின உங்களுகு்கு என் மனமார்ந்த நன்றி!

      Delete
  8. ‘‘நீ மத்தவங்களை ஏமாத்து, பரவாயில்லை. ஆனால் உன்னையே நீ ஏமாத்திக்காதே’’
    பொன்னேட்டில் பொறிக்கவேண்டிய சொற்கள்.

    சுவாரஸ்யமாய் போய்க்கொண்டிருந்த தொடர் நிறைவடையைப் போகிறது என்பது வருத்தமே.எனினும் இரண்டு நாட்களில் திரும்ப புதிய செய்திகளோடு வருவீர்கள் என்பதால் மகிழ்ச்சியே

    ReplyDelete
    Replies
    1. என் மேல் நீங்கள் கொண்டுள்ள நம்பிக்கையினால் மகிழ்ந்து உங்களுக்கு என் இதயம்நிறை நன்றியைத் தெரிவிக்கிறேன்!

      Delete
  9. Replies
    1. இதுவுமா? என்றால்... வேறெங்கோ இதுபோல மீள் பதிவைப் பார்த்து நொந்து போயிருக்கீங்க போலருக்கு... அடுத்த முறை உங்களை ஏமாத்தாம நல்ல விஷயத்தோட வந்துடுலாம் சீனி! உங்களுக்கு என் இதய நன்றி!

      Delete
  10. நல்ல பகிர்வு. நம்மளை நாமளே ஏமாத்திக்கிறது தான் இப்ப நடக்கிறது.

    உப்புமாவும் ருசியே....

    ReplyDelete
    Replies
    1. அவசர உப்புமாவாக இருந்தபோதிலும் குறை சொல்லாமல் ரசித்துப் பாராட்டிய உங்களுக்கு என் உளம் கனிந்த ந்னறி தோழி!

      Delete
  11. ஹலோ ஃப்ரெண்ட் இனி உங்களை விட்டு வைப்பமோ.ஒழுங்கா ஏதாச்சும் எழுதிக்கொண்டே இருங்கோ.சரி பரவாயில்ல...சனி,ஞாயிறு ஊர் சுத்திப்போட்டு வாங்கோ.பாவம் !

    ரஜனி...கறுப்பழகருக்கு வாழ்த்துகள்.அதைப் பகிர்ந்துகொண்ட உங்களுக்கு பாராட்டுக்களும் பூங்கொத்தும் !

    ReplyDelete
    Replies
    1. போன வாரத்துலருந்தே மனசு ஏனோ Frustratedஆ இருக்கு ஹேமா! (இதை எப்படி தமிழ்ல சொல்றதுன்னு தெரியல.) அதான்... ரெண்டு நாள் எதுவும் சிந்திக்காம ஊர் சுத்தினா ஃப்ரெஷ்ஷாயிடுவனோன்னு பாக்குறன். எனக்கு விருது தந்த கையோட பூங்கொத்தும் தந்து ஆறுதல் குடுத்திருக்கீங்க ஃப்ரெண்ட்! உங்களுககு என் இதயம் நிறை நன்றி!

      Delete
  12. ம்ம்ம் நல்லா இருக்கு சார்

    ReplyDelete
    Replies
    1. உற்சாகம் தந்த உங்களுககு என் மனமார்ந்த நன்றி நண்பா!

      Delete
  13. டியர் ஃப்ரெண்ட்ஸ்... புதுசா ஏதாவது மேட்டர் எழுதி உங்ககூட பகிர்ந்துக்கலாம்னு நினைச்சேன். ஆனா பாருங்க... இந்த கற்பனைக் குதிரை பயங்கரமா சண்டித்தனம் பண்ணிச்சு. வாலை முறுக்கி, மூஞ்சில குத்திக் கூட பாத்துட்டேன். நகர மாட்டேன்னுடுச்சு... சரி, வாயில்லா ஜீவனை துன்புறுத்த வேணாமேன்னு விட்டுட்டு, ஸ்டாக்ல இருந்த சூப்பர் ஸ்டார் மேட்டரை எடுத்து ‘மினி’ பதிவா போட்டுட்டேன் -மெஸ்லயெல்லாம் டிபன் தீர்ந்துட்டா உப்புமாவை வெச்சு சமாளிக்கற மாதிரி. ஹி... ஹி... ரெண்டு நாள் கழிச்சு சந்திக்கறேன். ஸீ யு!//

    யபப்பா....இதில் கூட இவ்வளவு நகைச்சுவையா?எனக்கும் நகைச்சுவை பதிவுகள் எழுதவும் .நகைச்சுவையாக எழுதவுமே விரும்புவே.இருப்பினும் உங்களை அடிச்சுக்க முடியாது.

    முக்கியமா இன்னொன்னு உண்மையை அப்படியே எழுதுற உங்கள் தைரியத்திற்கு ராயல் சல்யூட்.

    ReplyDelete
    Replies
    1. உண்மையாவே மூளை காலியாயிட்ட மாதிரி ஒரு ஃபீல் ஸாதிகா. அதை சீரியஸாச் சொல்லலாம்னு நினைச்சாக் கூட ‘சிரியஸா’தான் சொல்ல முடியுது என்னால... உண்மைய எழுதறதால நமக்கு நல்லதுதானேம்மா... எல்லாரையும் பயமில்லாம ஃபேஸ் பண்ண முடியும். உற்சாகம் தந்த கருத்துககு உளம்நிறைந்த நன்றி தங்கையே!

      Delete
  14. ரொம்ப அபூர்வமான விஷயங்களை எடுத்துப் பதிவிடறீங்க.
    ரொம்ப சுவாரசியமாக இருந்தது இந்தத் தொடர். மிக்க நன்றி
    கணேஷ் சார்.

    ReplyDelete
    Replies
    1. பார்த்து நாளாச்சு. நலம்தானே... நீங்கள் ரசித்துப் பாராட்டியதில் எனக்குக் கொள்ளை மகிழ்ச்சி. மகிழ்ச்சி தந்த உங்களுக்கு மனம் நிறைந்த நன்றி!

      Delete
  15. அண்ணே இன்னொரு பதிவெழுதுவதற்கு ஐடியா தர்ரேன்.நாடோடி சாரின் ராஜத்தைப்போல்,கடுகு சாரின் கமலாவைப்போல்,கணேஷ் சாரின் சரிதா வலைஉலகில் பிரபலம்.நிரம்ப பேரால ரசிக்க படுவது..சரிதா மன்னியை கண்ணில் காட்ட மாட்டேன்கின்றீர்களே?????

    ReplyDelete
    Replies
    1. அட... ஆமாம்மா. சரிதா கதை எழுதி நாளாச்சுல்ல... ரெண்டு நாள் லீவுக்கப்புறம் ஃப்ரெஷ்ஷா ஒரு சரிதா கதையோடவே வர்றேன். ஓ.கே.வா? நல்ல யோசனை தந்த தங்கைக்கு சந்தோஷத்தோட கூடிய என் நன்றி!

      Delete
  16. ரஜினி சார் பற்றி சூப்பரா சொல்லியிருந்திங்க அங்கிள் அடுத்த பகுதியோட முடியப் போகுது என்றீர்களே அடுத்தது யாரு? கமலா?????

    ReplyDelete
    Replies
    1. கமல் பத்தி வேணும்னா தகவல் சேகரிச்சு எழுதிட்டாப் போச்சு எஸ்தர். இதுவரை எதுவும் ஐடியா இல்ல. அதென்ன, அண்ணான்னு கூப்பிட்டுட்டிருந்த நீ திடீர்னு அங்கிளாக்கிட்ட என்னை? நிரூ கூடச் சேர்ந்து நீயும் மாறிட்டியாம்மா? அதனால பரவால்ல... எப்படி வேணாக் கூப்ட்டுக்குங்க... சூப்பரா இருக்குன்னு சொன்னதே சந்தோஷம்தான் எனக்கு!

      Delete
  17. ஒரு பதிவு எழுதினா நூறு பதிவு எழுதின மாதிரி.

    ReplyDelete
    Replies
    1. உங்களோட இந்த ஒரு வார்த்தையே நூறு டம்ளர் பூஸ்ட் குடிச்ச மாதிரிதான் இருக்கு எனக்கு! உங்களுக்கு என் இதய நன்றி!

      Delete
  18. ரஜினி மனம் விட்டு பேசியிருப்பார் போல.... சுவாரஸ்யமான பதிவு.

    ReplyDelete
    Replies
    1. அடுத்து வர்ற நிறைவுப் பகுதியைப் பாருங்க ஸ்ரீராம். அதுலயும் மனம் திறந்துதான் பேசியிருக்காரு. சுவாரஸ்யம் என்ற வார்த்தையில் மகிழ்வுடன் என் இதயம் நிறை நன்றி!

      Delete
  19. உப்புமாவும் நல்லத்தானே இருக்கு
    எத்தனைதடவைதான் ஃபுல் மீல்ஸா சாப்பிடறது
    மனம் கவர்ந்த பதிவு
    பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
    Replies
    1. ரசித்துப் பாராட்டின உங்களால என் மனசு கொஞ்சம் லேசாயிட்ட மாதிரி ஃபீல்! என் உளம்கனிந்த நன்றிகள் ஸார்!

      Delete
  20. தாமத பின்னூட்டத்திற்கு மன்னிக்கவும், இப்பதான் படித்தேன் சார், அருமை..எப்பொழுதும் போல..

    மெஸ்லயெல்லாம் டிபன் தீர்ந்துட்டா உப்புமாவை வெச்சு சமாளிக்கற மாதிரி. @@
    உப்புமாவே இப்படி சுவையா இருக்கே, இதுல டிபன்..சீக்கிரமா வாங்க சார்..ருசிச்சு பார்க்கிறேன்.மிக்க நன்றி.

    ReplyDelete
    Replies
    1. ரெண்டு மூணு நாள்ல ரெஃப்ரெஷ் பண்ணிக்கிட்டு டிபனோட வந்துடறேன் குமரன். உற்சாகம் தந்த உங்களுக்கு என் இதய நன்றி!

      Delete
  21. //‘நீ மத்தவங்களை ஏமாத்து, பரவாயில்லை. ஆனால் உன்னையே நீ ஏமாத்திக்காதே'//

    எத்தனை உண்மையான வார்த்தைகள். உணர்ந்து விட்டால் அதன் பிறகு நிம்மதிதான்.....

    நல்லா இருக்கு கணேஷ் ரஜினி ஸ்பீக்கிங்! அடுத்த பகுதியுடன் நிறைவுன்னு சொல்லிட்டீங்களே... :(

    சில சமயம் உப்புமா கூட ரொம்ப டேஸ்டியா இருக்கும் - அம்மா செய்கிற குழமா உப்புமா டேஸ்ட் நினைவுக்கு வந்துவிட்டதே! :)

    ReplyDelete
    Replies
    1. சூப்பர் ஸ்‌டாரோட பேட்டி அவ்வளவுதான் ஸ்டாக் இருக்கு வெங்கட். சுவாரஸ்யமா அதுக்கடுத்தது இன்னொரு இன்ட்ரஸ்ட்டான மேட்டரை தேடிப் புடிச்சுடலாம். ஹையா... இப்பக் கூட எங்கம்மா குழமா உப்புமா பண்ணித்தரச் சொல்லி ருசிச்சு்ச் சாப்பிடறது என் வழக்கம். நீங்களும் நம்ம டைப்ங்கறதுல ரொம்ப சந்தோஷம்! இதயம் நி்றை நன்றி!

      Delete
  22. சும்மா அதிருதில்லே!

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம்... ஆரம்பத்துலரு்ந்தே ரஜினின்னா அப்படித்தான் இருந்திருக்கார். இல்ல நண்பரே..! நன்றி!

      Delete
  23. இது என்ன உப்புமா,ஸார்?
    அரிசி ரவை உப்புமா வா?, கோதுமை ரவை உப்புமா வா?, சேமியா உப்புமா வா?, ஜவ்வரிசி உப்புமா வா?, பிரட் உப்புமா வா?, ஓட்ஸ் உப்புமா வா?, இட்லி உப்புமா வா? உசிலி உப்புமா வா? புளி உப்புமா வா?அவல் உப்புமா வா?,

    ReplyDelete
    Replies
    1. ஆஹா... உப்புமாவுல இத்தனை வெரைட்டி உண்டா பிரதர்! ஓட்ஸ் உப்புமா! உசிலி உப்புமா! இதெல்லாம் கேள்விப்படாத புதுசா இருக்கே... வீட்ல சொல்லி ரெஸிபி தேடச் சொல்ல வேண்டியதுதான். நான் ‌குறிப்பிட்டது ஸிம்பிளாப் பண்ணக்கூடிய ரவை உப்புமாவைத்தான்...! தங்களுக்கு என் இதய நன்றி!

      Delete
  24. மெஸ்லயெல்லாம் டிபன் தீர்ந்துட்டா உப்புமாவை வெச்சு சமாளிக்கற மாதிரி. ஹி... ஹி...//என்ன உப்புமாவை இப்படி மட்டமா எடை போடுறீங்க.இதை நான் வன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்மையா கண்டிக்கறேன்:)

    http://shadiqah.blogspot.in/2010/07/blog-post_5021.html இந்தப்பதிவைப்படிச்சுப்பாருங்க...அப்புறம் சொல்லுங்க...:)

    ReplyDelete
    Replies
    1. ஆஹா... உப்புமாவின் அருமை பெருமைகளை இந்தப் பதிவைப் படிச்சு நல்லாவே தெரிஞ்சுக்கிட்டேம்மா. இனி இப்பூடிச் சொல்லவே மாட்டேன்ல...

      Delete
  25. பலே கில்லாடி தான். சுவை. ரசித்தேன்.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  26. அருமையாகத் தான் இருக்கிறது ...குறை ஒன்றும் இல்லை

    ReplyDelete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube