Tuesday, April 3, 2012

நடை வண்டிகள் - 11

Posted by பால கணேஷ் Tuesday, April 03, 2012

பி.கே.பி.யும், நானும் - 3

பி.கே.பி. ஸாரின் திருவான்மியூர் அலுவலகத்துக்கு நான் சென்றபோது, அவரது உதவியாளர்கள் நால்வரையும் எனக்கும், என்னை அவர்களுக்கும் அறிமுகப்படுத்தினார். அனைவருக்கும் ‘ஹாய்’ சொன்ன நான், ‘‘ஸ்ரீனிவாஸ் பிரபுங்கற உங்க பேர் மட்டும் எனக்குப் பரிச்சயம். உங்களோட சிறுகதைத் தொகுதி ஒண்ணை ஜீயே ஸார் ஆபீஸ்ல வேலை பாத்தப்ப படிச்சிருக்கேன்...’’ என்றேன் ஏறக்குறைய என்னுடைய உடல்வாகில் இருந்த அவர்களில் ஒருவரிடம். மகிழ்வுடன் புன்னகைத்தார் அவர். ஸ்ரீனிவாஸ் பிரபு இப்போது அரசு அலுவலகத்தில் அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார். மயங்க வைக்கும் தமிழில் ரசிக்க வைக்கும் கவிதைகளும், சுவாரஸ்யம் குன்றாத சிறுகதைகளும் படைத்து வரும் ஆர்வமிக்க படைபபாளி அவர்.
ஸ்ரீனிவாஸ் பிரபு

நிறையப் பேர் நமக்கு அறிமுகமானாலும், சிலர்தான் மனதிற்கு நெருக்கமாக வருவார்கள். அப்படித்தான் அன்று பி.கே.பி. ஸார் அறிமுகப்படுத்திய ஸ்ரீனிவாஸ் பிரபுவும், ஆரோக்கிய தாஸும் இன்று வரையிலும் இனி என்றும் என் மனதுக்கு நெருக்கமான நண்பர்கள். ஜி.ஆரோக்கிய தாஸ் அழகாய் படம் வரைவார். நான் அளித்த பல மிக்ஸர்களில் அவர் கைவண்ணத்தைப் பார்த்திருப்பீர்கள். இப்போது தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நியூஸ் எடிட்டராக பணியாற்றி வருகிறார் தாஸ். பூக்கூடை என்ற பெயரில் வலைத்தளம் துவங்கி தன் எண்ணங்களைப் பகிர்ந்து வருகிறார். (என்னைப் போல் ஜோக்குகளும், மொக்கைகளும் அவரிடம் இருக்காது. சீரிய சிந்தனைகள் மட்டுமே அந்தத் தளத்தில் இருக்கும்.)

ஜி.ஆரோக்கிய தாஸ
பி.கே.பி. ஸார் என்னை அழைத்த விஷயத்தை விரிவாகச் சொன்னார். சுபாவும் அவரும் கூட்டாக ‘உங்கள் ஜுனியர்’, ‘உல்லாச ஊஞ்சல்’ ஆகிய மாத இதழ்களை நடத்திக் கொண்டிருந்தார்கள். ஒரு கட்டத்திற்குப் பின் திரைத் துறையிலும் தொலைக்காட்சித் துறையிலும் இரண்டு (மூன்று?) எழுத்தாளர்களும் பிஸியாகிவிட, தொடர்ந்து பத்திரிகையில் கவனம் செலுத்த முடியாமல், ‘உங்கள் ஜுனியர்’ இதழை எஸ்.பி.ராமு ஸாரும், ‘உல்லாச ஊஞ்சல்’ இதழை ஜி.அசோகன் ஸாரும் வெளியிட்டார்கள். சில காலம் வந்தபின் அந்த இரு இதழ்களும் நின்று விட்டன. இப்போது ஒரு பதிப்பாளர் ‘ஊஞ்சல்’ இதழை வெளியிட முன்வந்திருப்பதாகச் சொன்னார் பி.கே.பி.

‘‘144 பக்கங்கள்ல புத்தகத்தைக் கொண்டு வர்றதா ப்ளான் பண்ணியிருக்கோம். அதில சுமாரா 60லருந்து 65 பக்கங்கள் என்னோட நாவல் வந்துடும். மற்ற பக்கங்கள்ல வெரைட்டி மேட்டர்ஸ் தரணும். படிக்கிற வாசகர்களுக்கு ஒரு ஃபுல் மீல்ஸ் சாப்பிட்ட திருப்தி கிடைக்கணும்னு நான் விரும்பறேன்’’ என்றார் பி.கே.பி. ஸார். அவர் பொறுப்பாசியராகவும், தாஸும், பிரபுவும் உதவி ஆசிரியர்களாகவும், நான் வடிவமைப்பாளராகவும் ஒரு குழு அமைத்திருக்கும் விஷயத்தை அவர் சொன்னபோது மகிழ்ச்சியுடன் சற்றுக் கவலையும் இருந்தது எனக்கு.

காரணம்... முன்பு சுபாவும், பி.கே.பி.யும் இணைந்து நடத்திய ‘உங்கள் ஜுனியரும்’, ‘உல்லாச ஊஞ்ச’லும் குமுதம் கிட்டத்தட்ட சைஸுக்கு இருக்கும். இப்போது திட்டமிட்டுள்ளதோ ‘க்ரைம் நாவல்’ போல அகலம் குறைவாகவும், உயரம் அதிகமாகவும் இருக்கும் ஒரு வடிவம். இந்த மாதிரி வடிவத்தில் கவிதைகள், ஜோக்குகள் இவற்றுக்கெல்லாம் படங்கள் வைத்து ரசனையுடன் வடிவமைப்பு செய்வது சற்று சவாலான பணிதான். அதை எண்ணித்தான் சற்றே கவலை. என்றாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், மகிழ்வுடன் அவரிடம் சம்மதம் சொல்லிவிட்டு முதல் இதழுக்காக டைப்செட் செய்யச் ‌சொல்லி அவர் தந்த நாவலையும் பெற்றுக் கொண்டு விடைபெற்றேன்.

ஆனால் ஊஞ்சல் இதழ் லேஅவுட் செய்யத் தொடங்கியபோது மிக எளிதாகவே இருந்தது. ஸ்ரீனிவாஸ் பிரபுவும், தாஸும் லேஅவுட் செய்யும் போது என்னுடன் இருந்தார்கள். பிரபுவுக்கு டிசைனிங்கில் நிறையவே இன்ட்ரஸ்ட் இருந்ததால் நிறைய ஐடியாக்களைத் தந்து என் வேலையை எளிதாக்கினார். கேள்வி பதில், சினிமா விமர்சனம், நிறைய வாசகர்களின் கவிதைகள், ஜோக்கு களைத் தாங்கி வெளிவந்த ஊஞ்சல் எங்களுக்குப் பிடித்திருந்ததைப் போலவே வாசகர்களுக்கும் பிடித்திருந்தது. ஒரு மாதம் விட்டு ஒரு மாதம் புத்தகத்தைக் கொண்டு வருவதாகத்தான் ஆரம்பத்தில் திட்டமிடப்பட்டு துவங்கப்பட்டது. பின்னாளில் அது மாத இதழானது.

ஒரு மாத இதழுக்கான வேலைகளை முடித்து ப்ரிண்டிங் அனுப்பி விட்டு, அந்த இதழ் பிரிண்ட் ஆகி வந்ததும் அடுத்த இதழ் வேலைகளைத் திட்டமிட்டு ஆரம்பிக்க வேண்டும். பி.கே.பி. ஸார் அற்புதமான நிர்வாகி. எப்போது நாவல் டைப் செய்து முடிக்க வேண்டும், எப்போது லேஅவுட் வேலைகளை ஆரம்பித்து, எப்போது முடிக்க வேண்டும், பப்ளிஷரிடம் எப்போது தர வேண்டும் என்று எல்லாவற்றையும் தேதிவாரியாக அழகாக டேபிள் போட்டுத் தந்து விடுவார். இந்தத் திட்டமிடல் பண்பு அவரிடம் எனக்குப் பிடித்த இரண்டாவது விஷயம். அவரிடமிருந்து நான் ‘சுட்ட’ இரண்டாவது விஷயமும் இதுவே!

சிதம்பரத்திலிருந்து இன்னொரு தபூசங்கர் போல காதல் கவிதைகளாக எழுதித் தள்ளும் சிவபாரதி என்ற வாசகர், வேலூரிலிருந்து ஜோக்குககள் மற்றும் கவிதைகள் நிறைய அனுப்பும் முத்து ஆனந்த் என்ற வாசகர் இப்படிப் பல புதியவர்களின் படைப்புகளைப் படித்து ரசிக்கவும், லேஅவுட் செய்யவும் வாய்ப்புக் கிடைத்தது ஊஞ்சலில் பணி செய்தபோது. அப்போதெல்லாம் நான் வியந்த ஒரு வாசகரும் உண்டு. மாதம் மூன்று அல்லது நான்கு கவர்களாவது அவரிடமிருந்து வரும். ஒவ்வொன்றிலும் 40, 50 ஜோக்குகளை மழையாகப் பொழிந்திருப்பார். ஒருசில ஜோக்குகள் ஜோக்காக இல்லாமல் வார்த்தை விளையாட்டுகளாக அமைந்திருக்கும்.  ஆனால் நிறைய ஜோக்குகள் படித்துச் சிரிக்கும்படி இருக்கும். அவரின் அந்த ஆர்வம் என்னைப் போலவே பி.கே.பி. ஸாருக்கும் மிகப் பிடித்திருந்தது.

ஒரு இதழில் அவரின் ஜோக்குகளை மட்டுமே ஆறு பக்கங்கள் வெளியிட்டு, ‘சிக்ஸர் அடிக்கிறார் சென்னிமலையார்’ என்று தலைப்பு வைத்து வெளியிட்டிருந்தோம். இப்போ புரிஞ்சிருக்குமே அவர் யார்ன்னு... ‘அட்ரா சக்க’ என்ற தளத்தில் எழுதிக் குவித்துக் கொண்டிருக்கும் சி.பி.செந்தில்குமார்தான் அந்த வாசகர்! அவரின் தொலைபேசி எண்ணையும் குறிப்பிட்டுத்தான் எழுதுவார் என்பதால் போனிலும் பேசினேன். ‘ஊஞ்சல்’ இதழ் தந்த இன்னொரு நல்லறிமுகம் அவர்! 

-தொடர்கிறேன்...

67 comments:

  1. ஊஞ்சலின் வாசகன் நான்..ஆனால் இப்போது வருகிறதா இல்லையா என்று தெரிய வில்லை..

    ReplyDelete
    Replies
    1. ஊஞ்சலின் ஆட்டம் இப்போது நின்றிருக்கிறது அன்பரே... மீண்டும் ஒரு சந்தர்ப்பத்தில் ஆட்டம் துவங்கினால் அவசியம தெரிவிக்கிறேன். நன்றி.

      Delete
  2. ஏறக்குறைய என்னுடைய உடல்வாகில் இருந்த அவர்களில் ஒருவரிடம். மகிழ்வுடன் புன்னகைத்தார் அவர். ஸ்ரீனிவாஸ் பிரபு //

    உண்மைதான் சார்..பார்க்கையில் உங்களைப்போலவே இருக்கின்றார்..வாழ்க வளமுடன்..வேலன்..

    ReplyDelete
    Replies
    1. ரசித்துப் படித்துக் கருத்திட்ட தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி நண்பரே...

      Delete
  3. ஆம் ஆம் நீங்கள் சொன்ன மாதிரியே அண்ணா தாஸ் அவர்களின் பூக்கூடை சிந்தனை இருக்கிறது அவர் தளத்தில் இப்போதுதான் இணைந்தேன்.....

    ReplyDelete
    Replies
    1. நான் சொன்னதை மதித்துப் படித்து தாஸின் தளத்தில் இணைந்ததற்கு நன்றி தங்கச்சி. கணேஷண்ணாவை விட தாஸண்ணா நன்றாகவே எழுதுவார். உங்களுக்கு என் இதய நன்றி.

      Delete
  4. பூக்கூடை என்ற பெயரில் வலைத்தளம் துவங்கி தன் எண்ணங்களைப் பகிர்ந்து வருகிறார். (என்னைப் போல் ஜோக்குகளும், மொக்கைகளும் அவரிடம் இருக்காது. சீரிய சிந்தனைகள் மட்டுமே அந்தத் தளத்தில் இருக்கும்./

    பகிர்வுக்கு நன்றிகள்..

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் பூக்கூடையை ரசித்து கருத்திட்டதைப் பார்த்தேன். என் தளத்திற்கும் தாங்கள் அளித்து வரும் ஆதரவுக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  5. நடை வணடிகள் சுவாரஸ்ய நடையில் போய்க்கொண்டுள்ளது.

    ReplyDelete
    Replies
    1. நடைவண்டியின் நடையை ரசித்த தங்கைக்கு என் மனமார்ந்த நன்றி.

      Delete
  6. //‘உங்கள் ஜுனியரும்’, ‘உல்லாச ஊஞ்ச’லும் குமுதம் கிட்டத்தட்ட சைஸுக்கு இருக்கும்.

    கிட்டத்தட்ட குமுதம் என்றுதானே இருக்கவேண்டும்?

    பிகேபி சாரிடம் இருந்து நல்ல கொள்கையைத்தானே திருடி இருக்கிறீர்கள் தவறே இல்லை.

    நடைவண்டி வேகம் பிடிக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. ஹி... ஹி... அந்தத் தப்பு... எப்படியோ கண்ணைக் கட்டிருச்சு. அதனாலென்ன... புரிஞ்சுக்கிட்டீங்கதானே... தங்களின் பாராட்டினால் மனம் மகிழ்ந்து என் நன்றியை உங்களுக்கு உரித்தாக்குகிறேன்.

      Delete
  7. பூக்கூடை சென்று பார்த்தேன் நண்பரே..
    பின்தொடர்ந்து கருத்தும் அளித்து வந்தேன்.
    ஊஞ்சல் படித்திருக்கிறேன் நண்பரே..
    நடைவண்டிப்பயணம் மிகவும் சுவாரஸ்யமாக
    நடைபோட்டுக் கொண்டிருக்கிறது..
    தொடருங்கள்.

    ReplyDelete
    Replies
    1. கவனித்தேன் மகேன். தாங்கள் தாசுக்கு அளித்த நற்கருத்துக்கும் எனக்கு அளித்து வரும் தொடர் ஆதரவுக்கும் என் இதயம் நிறை நன்றி.

      Delete
  8. நடை வண்டி மிகவும் சுவாரசியமாகப் பயணத்தினைத் தொடர்கிறது.... நல்ல தகவல்கள். பூக்கூடை, தாங்கள் அறிமுகம் செய்தபிறகு நான் தொடர்ந்து படிக்கும் ஒரு வலைப்பூ....

    நல்ல தகவல்களுக்கு நன்றி நண்பரே....

    ReplyDelete
    Replies
    1. தங்களின் கருத்துக்களைத் தொடர்ந்து தாஸின் பதிவுகளில் பார்த்து மகிழ்ந்திருக்கிறேன் வெங்கட். நன்றி. என்னுடைய தளத்திற்கும் வலைச்சரப் பணிகளுக்கு இடையிலும் வந்து படித்து கருத்துக் கூறியமைக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  9. நடை வண்டி உல்லாசமாக ஊஞ்சல ஆடுகிறது!

    ReplyDelete
    Replies
    1. ஹா... ஹா... சுருக்கமான வரிகளில் நிறைந்த பாராட்டினை வழங்கிய தங்களுக்கு என் இதய நன்றி.

      Delete
  10. சுவாரசியமாக இருக்கு மேலும் நடை வண்டி தெரிந்துகொள்ள ஆவல்.

    அட்ராசக்க....அப்படியா.

    ReplyDelete
    Replies
    1. ரசித்துப் படித்த தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

      Delete
  11. நிரைய புதியவர்களை தெரிந்து கொள்ள முடிகிரது சிபி. செந்திலை போனமாசம் ஈரோடில் சந்தித்து பதிவுகூட போட்டிருக்கேனே பாக்கலியா கனேஷ்

    ReplyDelete
    Replies
    1. அடாடா.... மிஸ் பண்ணிட்டனே... மன்னிச்சூ! இப்ப வர்றேன்மா. தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

      Delete
  12. Good. Waiting for further posts in this series

    ReplyDelete
    Replies
    1. காத்திருக்கும் தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

      Delete
  13. நடை வண்டி ஜெட் ஆகிவிட்டது...

    ReplyDelete
    Replies
    1. இந்தத் தொடரை நீங்கள் ரசிப்பதில் மனமகிழ்வு கொண்டு என் நன்றியைத் தங்களுக்கு உரித்தாக்குகிறேன்.

      Delete
  14. Replies
    1. ரசித்துப் படித்துக் கருத்திட்ட நண்பர் சீனிக்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
  15. அருமையான அனுபவப் பகிர்வு.

    ReplyDelete
    Replies
    1. ரசித்து வாழ்த்திய தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!

      Delete
  16. நடைவண்டியில எங்களையும் ஒரு பிடிக்க வச்சுக்கூட்டிக்கொண்டு போறமாதிரி இருக்கு ஃப்ரெண்ட்.பதிவு வாசிக்கமுதல் அந்தப் படம் நீங்கள்தானெண்டு நினச்சு ஏமாந்துபோனன்.உங்கள் எழுத்தை வாசிக்க வாசிக்க ஒரு பிரமாண்டம்.நிறையப் படிக்க இருக்கு உங்களிட்ட !

    ReplyDelete
    Replies
    1. அந்தப் படம் நானெண்டு நினைச்சு ஏமாந்திங்களோ? ‌நானென்ன அவ்வளவு வடிவாகவா இருக்குறேன்..? என் எழுத்தை ரசித்துப் பாராட்டியதில் மகிழ்வோட நன்றி ‌சொல்லிக்கிறேன் ஃப்ரெண்ட்!

      Delete
  17. நிறைய தகவல்கள். திட்டமிட்டு செயல்படுவது பி.கே.பி சாரிடம் தாங்கள் கற்றுக் கொண்டதை எங்களிடம் பகிர்ந்து கொண்டது மகிழ்ச்சி. நானும் இப்படித் தான் இருக்க வேண்டும் என்று நினைப்பேன்.

    பூக்கூடை தளத்தை இன்று முதல் தொடர்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. திட்டமிட்டுச் செயலாற்றுவதில் நிறைய நேரம் மிச்சமாகிறது. நற்பெயர் கிடைக்கிறது. தாங்களும் கடைப்பிடிப்பதில் எனக்கு மிக மகிழ்ச்சி. தாஸின் தளத்தை படிக்கிறேன் என்று சொன்ன உங்களுக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி!

      Delete
  18. சிபி சாரை பிகேபிக்கு பிடிக்குமா?!

    ReplyDelete
    Replies
    1. நல்ல படைப்புகளைத் தரும் அனைவரையும் அவருககுப் பிடிக்கும் தங்கையே! அவ்வகையில் சிபியையும்!

      Delete
  19. முத்து ஆனந்தின் படைப்புகளை பத்திரிகைகளில் அடிக்கடி பார்த்து படித்து ரசித்திருக்கிறேன். என் வாழ்த்தை அவர்கிட்ட சொல்லிடுங்கண்ணா.

    ReplyDelete
    Replies
    1. நான் அடிக்கடி வேலூர் வருவேனென்று சொன்னேனே... அது இந்த நண்பனைச் சந்திககத்தான். அடுத்த முறை போனில் பேசும்போது அவசியம் உன் வாழ்த்தைச் சேர்த்திடுறேன்மா.

      Delete
  20. >>
    சிதம்பரத்திலிருந்து இன்னொரு தபூசங்கர் போல காதல் கவிதைகளாக எழுதித் தள்ளும் சிவபாரதி என்ற வாசகர், வேலூரிலிருந்து ஜோக்குககள் மற்றும் கவிதைகள் நிறைய அனுப்பும் முத்து ஆனந்த் என்ற வாசகர் இப்படிப் பல புதியவர்களின் படைப்புகளைப் படித்து ரசிக்கவும்,

    இவர்கள் மூவரும் என் நண்பர்கள்.. நண்பர்களை குறிப்பிட்டு கவுரம் சேர்த்தததுக்கு நன்றி.. மற்றும் மகிழ்ச்சி

    ReplyDelete
    Replies
    1. எனக்கும் இவர்கள் நண்பர்கள்தானே செந்தில்! ஆகவே மகிழ்ச்சி என்னுடையதும்தான்.

      Delete
  21. உல்லாச ஊஞ்சலில் நாவல் வந்தால் போதும்.. பல் சுவைப்பக்கங்கள் எதுக்கு இத்தனை? என பி கே பி கேட்டதாக ஒரு செய்தி வந்ததே அது உண்மை அல்லவா?

    ReplyDelete
    Replies
    1. துளிக்கூட உண்மையில்லை. பப்ளிஷரின் கருத்து அது. நாவல் தவிர பல வெரைட்டியான விஷயங்கள் வாசகர்களுக்குத் தர வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தவர் பி.கே.பி. ஸார்! அதுதான் நிஜம்! உங்களுக்கு என் இதய நன்றி செந்தில்!

      Delete
  22. நடைப்பயணம் மிக இனிமையாக போய் கொண்டிருக்கிறது

    ReplyDelete
    Replies
    1. பயணத்தில் இணைந்து என்னுடன் வரும் தங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
  23. பல புதிய விஷயங்கள் தெரிந்து கொள்ள முடிகிறது.

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி ஸார்...

      Delete
  24. நிறைய புதிய தகவல்கள் சகோதரா. அருமை. தொடருவேன். நன்றி.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
    Replies
    1. தொடரும் தங்களின் அன்புக்கு என் இதயம் நிறைந்த நன்றி.

      Delete
  25. அருமையா போகுது தொடர். உங்க பழைய பதிவுகள் ரொம்ப நல்லாருக்கு, படிச்சிட்டு இருக்கேன்.......

    ReplyDelete
    Replies
    1. அண்ணே வரணும்... பல தடைவை உங்க பதிவுகளைப் படிச்சுட்டு கமெண்ட் போடாம வந்திருக்கேன்- பெரிய ஆளாச்சேன்ற பயத்துல... நீங்கல்லாம் படிக்கிறேன்னு சொல்றது என் பாக்கியம். உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
    2. தலைவரே அப்படியெல்லாம் சொல்லாதீங்க, உங்க வாசிப்பனுபவம் என்ன, உங்கள் எழுத்தனுபவம் என்ன, நான்லாம் ஒண்ணுமே இல்ல, சும்மா ப்ளாக்னு ஒண்ணு ஃப்ரீயா கிடைக்கறதால எதையோ எழுதிட்டு இருக்கோம்.

      Delete
  26. Arumai. Wait for next part.

    Power cut. So i have write this comment through mobile.

    ReplyDelete
    Replies
    1. எப்படி வந்தாலென்ன... துரை படிப்பதும் கருத்துச் சொல்வதும் எனக்கு மகிழ்ச்சி தரும் விஷயம்தான். தங்களுக்கு என் இதய நன்றி.

      Delete
  27. ஒரு இதழை வெளியிடுவது என்பது அவ்வளவு சுலபமல்ல என்று கேள்விப்பட்டு இருக்கிறேன்.தாங்களும் அந்த சவாலான பணியில் பங்கு பெற்று ‘ஊஞ்சல்’ இதழ் வாசகர்களின் மனதில் நிரந்தரமாக ஊஞ்சலாட காரணமாக இருந்தீர்கள் என்பதை அறிய மகிழ்ச்சியாய் உள்ளது. புதிய படைப்புகளை படிக்கவும், புதிய எழுத்தாளர்கள் அறிமுகம் கிடைக்கவும், இதழ் வடிவமைக்கும் பணி உங்களுக்கு நீங்கள் முன்பே சொன்னதுபோல் ஒரே கல்லில் பல மாங்காய்கள் அடிக்க உதவியிருக்கிறது. வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொன்னது மிகச் சரியே. என்னை நான் செதுக்கிக் கொள்ள பத்திரிகைப் பணி மிகமிக உதவிகரமாக இருந்தது, தங்களுக்கு என் இதய நன்றி.

      Delete
  28. வசந்தமே பூக்கூடை பக்கம் சென்று " என்னே ஒரு அக்கறை " பதிவைப் பார்த்துவிட்டு வந்தேன் அருமை . தங்களின் அனுபவத்தை அழகாக பகிர்ந்துள்ளீர்கள் .

    ReplyDelete
    Replies
    1. நன்றி தென்றல்! பூக்கடையில் உங்கள் கருத்தைக் கண்டு மகிழ்ந்தேன்.

      Delete
  29. ரசித்துப் படித்தேன்....தொடர்ந்து ஓடட்டும் நடைவண்டி..வாழ்த்துக்கள் கணேஷ் சார்...

    ReplyDelete
    Replies
    1. நடை வண்டி வெற்றிகரமாக நடை பயில நீங்களெல்லாரும் தரும் ஆதரவுதானே காரணம். அதற்கு என் மனமார்ந்த நன்றி!

      Delete
  30. சென்னையை விட்டு வெளிவந்து பல வருடங்கள் ஆகிவிட்டது. 'ஊஞ்சல்' மாத இதழ் பற்றி கேள்விப்பட்டதில்லை. மன்னிக்கவும்! அடுத்த முறை சென்னை வரும்போது நிச்சயம் படிக்கிறேன். உங்கள் அனுபவங்களை படிக்க படிக்க மிகவும் சுவாரசியமாக இருக்கிறது.
    'மயங்க வைக்கும் தமிழில், ரசிக்க வைக்கும் கவிதைகள்' அழகாக எழுதி இருக்கிறீர்கள்.
    உங்கள் நண்பர் ஆரோக்கியதாஸ் வரைந்த படம் மிகவும் அழகாக இருக்கிறது. 'பூக்கூடை' வலைதளத்தை பார்க்கவேண்டும்.

    தொடருங்கள்!

    ReplyDelete
    Replies
    1. சென்னை வரும் போது என்னைத் தொடர்பு கொள்ளுங்கள். நீங்கள் ரசிக்க விரும்பும் ஊஞ்சலின் இதழ்கள் தருகிறேன். ரசித்துப் படித்த தங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
    2. நன்றி கணேஷ்!

      Delete
  31. இதென்ன நடைவண்டியா ஆகாயவிமானமே ஓட்டி இருக்கீங்க எத்தனை அனுபவங்கள் கணேஷ் என்னவோ அன்னிக்கு என்கிட்ட இன்னிக்குத்தான் பேனா பிடிக்கிற எழுத்தாளர் மாதிரி அவ்வளோ பவ்யமா பேசினீங்க?! நான் இனிமே கொஞ்சம் தள்ளியே நின்னு பேசறேன்ப்பா!! தொடருங்க ரசிச்சி வாசிக்கிறேன்!

    ReplyDelete
    Replies
    1. நீங்க வேற... நான் பழகின ஆளுங்கதான் பெரியவங்கக்கா. நான் சாதாரணன்தானே... நீங்கல்லாம் தள்ளிப் போறேன்னு சொன்னா எனக்குக் கோபம் வரும். அப்புறம் அழுவேன். ஊம்ம்ம்ம்....!

      Delete
  32. பிகேபி அவர்களிடம் இருந்து கற்றுக் கொண்ட விசயங்களை நீங்கள் இன்றளவும் செயல்படுத்தி வருகிறீர்கள் என்பதை நான் அனுபவப்பூர்வமாக தங்களை சந்தித்த நாளில் தெரிந்து கொண்டேன்... இனி நானும் முயற்சி செய்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. நல்ல கரு்த்திட்டு என்னை ஊக்கப்படுத்திய நண்பர் அன்புக்கு என் அன்பும், இதயம் நிறை நன்றியும்!

      Delete
  33. மின்சாரம் தடை பட்டதால் தொடர்ந்து படிக்க முடியவில்லை. அலுப்பு தட்டாமல் செல்லுகிறது உங்கள் நடை பயணத்தில் இணைந்த புதிய பயணியாகக் கருதிக் கொள்கிறேன்

    ReplyDelete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube