‘‘என்னது... கணேஷ் ஆசிரியரா?’’ |
என்னோட 100வது பதிவைப் படிக்க வருகை தந்த அனைவருக்கும் கரம் கூப்பிய நன்றி! எந்தப் பள்ளிக்கூடத்துல எனக்கு வேலை கிடைச்சதுன்னும், என்கிட்டப் படிககிற பிள்ளைங்கல்லாம் பாவம்னும் உங்க மனசுல இந்நேரம் எண்ணங்கள் ஓடிக்கிட்டிருக்கும். எல்லாத்தையும் ரப்பர் வெச்சு சுத்தமா அழிச்சிடுங்க. நான் ஆசிரியர் (வாத்தியார்) ஆகியிருக்கிறது இந்த வார ‘வலைச்சரம்’ தளத்துக்கு. உஙக எல்லாரோட வாழ்த்துக்களோடயும், ஆதரவோடயும் இந்த வாரத்தை சிறப்பாப் பண்ண முடியம்கற நம்பிக்கையோட... வலைச்சரத்தின் முதல் நாளான இன்று என்னைப் பத்தி...
அடிச்சுக்கிட்டிருக்கேன். இங்கே கிளிக்கிச் சென்று பார்த்துக் கருத்திடும்படி வேண்டுகிறேன். இனி... நான் படித்தவற்றில் ரசித்த மின்னல் வரிகள் சில உஙகளுக்காக...
========================================
மணலாய்க் கிடந்தது தாமிரபரணி. சித்திரம் தீட்டின மாதிரி லேசான பழுப்பில் முழுசாய் நிலா மிதந்து கொண்டிருந்தது. கை கையாய் அள்ளித் தெளித்த மாதிரி நட்சத்திரங்கள். இந்தக் குளிர் கூட இதமாய் இருந்தது. மணல் இன்னும் சூடாறிப் போகவில்லை. எங்கேயோ ஒரு சிறு குயில். தம்பூரா தந்தியைச் சுண்டி விட்ட மாதிரி திரும்பத் திரும்ப வந்து மொய்க்கும் கொசுவைக் கூட பொறுத்துக் கொள்ளலாம் என்று தோன்றியது.
-‘வழி தவறிய வண்ணத்துப் பூச்சிகள்’ நாவலில் மாலன்.
========================================
இருள் மண்டிக் கிடந்த குசினியில் ஒரு அனுமானத்தில் பொருட்கள் எதனினும் இடங் கெடாமல் அடுப்பை நெருங்கி அதன் முன்னே குந்தி அமர்ந்தாள். கையை எதிரே நீட்டித் துளாவி அணைந்து கிடந்த விறகுத் துண்டொன்றை எடுத்து அடுப்பில் சாம்பலைப் பரபரவெனக் கிண்டினாள். இரண்டொரு சிறப்புப் பொறிகளை விசிறிக் கொண்டு பலாக் கொட்டை அளவில் ஒரு அனல் கட்டி மிதந்து வந்தது. அதைக் கண்ட பிறகுதான் செல்வி பரபரப்பு அடங்கினாள்.
-‘நெருப்பு’ சிறுகதையில் தேவகாந்தன்.
========================================
மழை நின்று பெய்தது. மழைக்கும் அதன் அடர்வு பொறுத்துப் பெயர்கள் உண்டு. தூற்றல், தூறல், தூவானம், சர மழை, அடைமழை, பெரு மழை. சிறு தூறலை நெசவா ளர் நூறாம் நம்பர் மழை என்பார்கள் நூலின் சன்ன ரகம் என்ற பொருளில். சீராக ஓசையுடன் பெய்து கொண்டே இருந்தது. மழைக்கு மணம் மாத்திரமல்ல, ஒலியும் உண்டு.
-‘பேச்சியம்மை’ சிறுகதையில் நாஞ்சில்நாடன்.
========================================
சுக்காய் காய்ந்த உடம்பு முழுக்க வியர்வை. உச்சந் தலையும் வியர்த்தது. முண்டாசு நமத்து அவியல் நாற்றம் எடுத்தது. நடை வேகம் கூடியது. ஈடு கொடுத்துப் பறக்க முடியாத ஒரு கிளி பாரதியின் இடது தோளில் அமர்ந்தது. கிளியின் பக்கம் பாரதி திரும்ப, மீசை மயிர், பச்சைக் கிளியின் சிவந்த அலகோடு உரசியது.
-‘கவிஞனின் முண்டாசுக்குள் ஒரு கருநாகம்’

சிறுகதையில் வேல ராமமூர்த்தி.
========================================
டாஞ்சூர் டெம்பிள் வெரி பிக் டெம்பிள்! டெம்பிளிலுள்ள ‘புல்’ வெரி வெரி பிக்! கோபுரத்தின் நிழல் கீழே விழாது. தினம் தினம் விழுந்து கொண்டிருந்தால் அதற்கு பலத்த காயம் ஏற்படும் என்பதற்காக சிற்பிகள் அவ்வாறு கட்டியிருக்கிறார்கள்.
-‘வாஷிங்டனில் திருமணம்’ நூலில் சாவி

|
|
Tweet | ||
வலைச்சரத்தில் இந்த வார ஆசிரியராக பொறுப்பேற்றதற்கு முதலில் வாழ்த்துக்கள் கணேஷ் சார். என்னையும் உங்கள் வலைச்சரப் பகுதியில் அறிமுகம் செயவித்தமைக்கு மிக்க நன்றி.
ReplyDeleteஆன்மீகம் என்றாலே இராஜராஜேஸ்வரியையும், உங்களையும் நினையாமல் எவரேனும் இருக்க முடியுமா என்ன.. தங்களின் வாழ்த்துக்கு மனமகிழ்வுடன் கூடிய என் நன்றி!
Deleteவலைச்சரம் ஆசிரியரானதற்கு வாழ்த்துக்கள். வலைச்சரம் பார்த்தேன். நல்ல பல வலைப்பதிவுகளை அறிமுகப்படுத்துங்கள். தொடரட்டும் உங்கள் ஆசிரியப் பணி...
ReplyDeleteஎன்னாலியன்றவரை நல்ல அறிமுகங்கள செய்யவே விருப்பம் எஸ்தர். வாழ்த்திக் கருத்திட்ட தங்கைக்கு மனம் நிறைந்த நன்றி!
Deleteவாழ்த்துகள் கணேஷ்
ReplyDeleteஎன் மனமார்ந்த நன்றி நண்பா!
Deleteநீங்கள் 100 வது பதிவை எட்டியமைக்கு முதலில்
ReplyDeleteவாழ்த்துக்கள் கணேஷ் சார். நீங்கள் உண்மையிலேயே நல்ல வாத்தியார்தான். அதில் சந்தேகமில்லை. ஏனென்றால் உங்கள் பதிவில் நல்ல நல்ல கதைகளில் இருந்து மேற்கோள் காட்டியுள்ளீர்கள் அல்லவா. அதுவே ஒரு சோறு
பதம். இது போல பல 100 பதிவுகளை நீங்கள் எழுதிட மனமார்ந்த வாழ்த்துக்கள்.
வலைப் பதிவுகளில் 100 என்பது பெரிய விஷயமில்லை. 300, 500க்கு மேல் எழுதிவரும் நண்பர்களும் உண்டு. ஆனால் என்னைப் போன்றவர்களுக்கு தொடர்ந்து செயல்பட ஊககம் தருவது உங்களைப் போன்ற நட்புகளின் நல்லாதரவும், வாழ்த்துக்களும்தான். அவற்றைக் குறைவின்றி வழங்கிய உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!
Deleteஇந்த வார வலைச்சர ஆசிரியர் கணேஷ் அவர்களுக்குப் பாராட்டுகள்....
ReplyDeleteநூறாவது பதிவு - வாழ்த்துகள் கணேஷ். விரைவில் மேலும் பல நூறு பதிவுகளை எட்டிடவும்.....
உங்களின் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் மனமகிழ்வு தந்தன. மிகமிகமிக நன்றி வெங்கட். (வலைச்சரத்தில் என்னை அறிமுகப்படுத்தியவர்களில் உங்கள் பெயரை விட்டுவிட்டேன். ஸாரி... இப்போது Updateட்டி விட்டேன்.)
Deletecongratulations
ReplyDeleteதங்களின் வருகையும், வாழ்த்து்ம் உண்மையில் எனக்கு பெரிய எனர்ஜி டானிக்தான்! தங்களுக்கு என் இதய நன்றி!
Deleteநூறாவது பதிவு ,வலைச்சர ஆசிரியர் --நிறைவான வாழ்த்துகள்.. பாராட்டுக்கள்..
ReplyDeleteமனமகிழ்வுடன் வாழ்த்தி மகிழும் உங்களின் அன்பிற்கு சிரம் தாழ்ந்த என் நன்றி!
Deleteவாழ்த்துகள் கணேஷ்! நூறு ஆயிரமாக, பத்தாயிரமாக, ஒரு லட்சம் ஆக! வாத்தியார் பேராசிரியர் ஆக!
ReplyDeleteஆஹா... மனநிறைவுடன் உளமார வாழ்த்திய உங்களின் வாழ்த்துக்கள் எனக்கு நிச்சயம் பலம் சேர்க்கும். உங்களுக்கு என் இதயம்நிறை நன்றி!
Deleteஉங்களது நூறாவது பதிவு வரும்போது வலைச்சரத்தின் இந்த வார ஆசிரியராக பொறுப்பேற்றமைக்கு வாழ்த்துக்கள்! மென்மேலும் தங்கள் பணி சிறக்க எனது உளம் கனிந்த வாழ்த்துக்கள்.
ReplyDeleteநீங்கள் இரசித்த ‘மின்னல் வரி’களில் எனக்குப் பிடித்த,து திரு சாவி அவர்களுடையதுதான்.
உங்களது நூறாவது பதிவு வரும்போது வலைச்சரத்தின் இந்த வார ஆசிரியராக பொறுப்பேற்றமைக்கு வாழ்த்துக்கள்! மென்மேலும் தங்கள் பணி சிறக்க எனது உளம் கனிந்த வாழ்த்துக்கள்.
ReplyDeleteநீங்கள் இரசித்த ‘மின்னல் வரி’களில் எனக்குப் பிடித்தது திரு சாவி அவர்களுடையதுதான்.
நகைச்சுவையை ரசிக்கும் உங்களுக்கு இவை பிடித்த வரிகளாக அமைந்ததில் வியப்பில்லை. என்னை வாழ்த்திய அன்புள்ளத்திற்கு என் மனம் நிறைந்த நன்றி.
Deleteநூறாவது பதிவு சிறப்புப் பதிவாய் அமைந்தமைக்கு என் பாராட்டுகள் கணேஷ். இன்னும் பல நூறு பதிவுகள் இட்டு எங்களுக்கு பல இன்சுவை விருந்தளித்திட வாழ்த்துகிறேன். இன்றைய மின்னல் வரிகள் அனைத்தும் இதம். நூறாம் நம்பர் மழையை மிகவும் ரசித்தேன். நன்றி.
ReplyDeleteநாஞ்சில் நாடனை நீங்கள் ரசித்ததில் எனக்கு மிக மகிழ்வே. வாழ்த்திய உங்களுக்கு மனநெகிழ்வுடன் நன்றி தெரிவித்து இதே ஆதரவு என்றும் தொடர வேண்டுகிறேன்.
Deleteஉங்களது நூறாவது பதிவு வரும்போது வலைச்சரத்தின் இந்த வார ஆசிரியராக பொறுப்பேற்றமைக்கு வாழ்த்துக்கள்! மென்மேலும் தங்கள் பணி சிறக்க எனது உளம் கனிந்த வாழ்த்துக்கள்.
ReplyDeleteநீங்கள் இரசித்த ‘மின்னல் வரி’களில் எனக்குப் பிடித்தது திரு சாவி அவர்களுடையதுதான்.
ஆசிரியப் பணி சிறக்கவும் 100 வது பதிவிற்கும் வாழ்த்துகள்..நீண்ட நாளுக்கு பிறகு உயிரைத் தின்று பசியாறு அத்தியாயம் 6 பகிர்ந்திருக்கிறேன்..ஓய்வாக இருக்கும்போது வாருங்கள்..
ReplyDeleteஅவசியம் வருகிறேன். உண்மையில் அக்கதையின் தொடர்ச்சிக்காக காத்திருந்தவனல்லவா நான். வாழ்த்திய தங்களுக்கு உவப்புடன் என் நன்றி.
Delete100வது பதிவிற்கு வாழ்த்துக்கள்.ஆசிரியர் பொறுப்பேற்றதற்கு வலைச்சரம் கொடுத்து வைதிர்க்குஅ வேண்டும், சிறப்பாகச் செய்யுங்கள். சிறுகதைகளில் இருந்து நீங்கள் கொடுத்த அணைத்து பகுதிகளும் அருமை. சாவி எழுதியது அருமையிலும் அருமை.
ReplyDeleteஎன் சிறுகதையை படித்துவிட்டு நிறை குறை சொல்லிச் செல்லுங்கள் சார் இல்லை இல்லை ஆசிரியர் அவர்களே.
http://seenuguru.blogspot.in/2012/04/blog-post_30.html
இன்று மாலை சிறுகதையைப் படித்து விட்டுக் கருத்திடுகிறேன் சீனு. தங்களின் ரசிப்புத் தன்மைக்கும் வருகைக்கும் என் இதய நன்றி.
Deleteநூறாவது பதிவுக்கு வாழ்த்துகக்ள்.தொடர்ந்து பல சதங்கள் அடிக்க வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅன்புடன் வாழ்த்திய தங்கைக்கு அகமகிழ்வுடன் என் நன்றி.
Delete100 வது பதிவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
ReplyDeleteஆசிரியர் பணியில் முதல் நாளே தமிழில் சிறந்த எழுத்தாளர்களின்
பொன் வரிகளைக் கொடுத்து அசத்திவிட்டீர்கள்
தொடர்ந்து வருகிறோம்
தொடர வாழ்த்துக்கள்
உற்சாகம் தந்த கருத்துக்கு மனம் நிறைநத நன்றி ஐயா.
Deleteபதிவு நூறா வாழ்த்துக்கள்! ஆயிரமாகட்டும்!
ReplyDeleteவலைச்சர வாத்தியாருக்கு உளங்கனிந்த
பாராட்டுக்கள்!
சா இராமாநுசம்
உங்களின் வாழ்த்தினால் கிடைத்த மனமகிழ்வுடன் என் இதயம் நிறை நன்றிகளை தங்களுக்கு உரித்தாக்குகிறேன்.
Delete100 வது பதிவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்கள் நற்பணி தொடரட்டும்...
ReplyDeleteஉங்களைப் போன்ற நல்லுள்ளங்களின் ஆதரவு இருக்கையில் என்ன குறை... தங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.
Deleteவலைச்சர ஆசிரியர் கணேஷ் அவர்களுக்குப் பாராட்டுகள்....ஆசிரியர் பணி முடியும் போது நீங்கள் "நல்லாசிரியர் விருதை" மக்கள் மனதில் இருந்து பெறுவீர்கள் என்பது நிச்சயம் எனவே அதற்கும் எனது அட்வான்ஸ் வாழ்த்துக்கள்
ReplyDeleteநூறாவது பதிவுக்கு வாழ்த்துகள் கணேஷ். எத்தனை பதிவுகள் இட்டோம் என்பது எண்ணிக்கை அளவில் இல்லாமல் எத்தனை தரமான பதிவுக்ளை இடுகிறோம் என்பதுதான் முக்கியம் அப்படி பார்க்கையில் எண்ணிக்கையில் மட்டுமல்ல 'தரத்திலும்" உங்கள் பதிவுகள் "ஜொலிக்கின்றன."
உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
நல்லாசிரியர் விருது பெற என்னை மனமுவந்து வாழ்த்திய நண்பா... தங்கள் அன்புக்கு என் இதயம் நிறைந்த நன்றி.
Deleteநூறாவது பதிவுக்கும் வலைச்சரப் பொறுப்புக்கும் வாழ்த்துகள்.
ReplyDeleteமின்னல் வரிகள் அருமை.
இங்கும் வலைச்சரத்திலும் என்னை வாழ்த்திய தங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.
Deleteவாழ்த்துக்கள்
ReplyDeleteபட்டய கிளப்புங்கள் - எங்கே அந்த தாரை தப்பட்டைகள் அடித்து.... ம்ம் ம்
அடிக்கிற அடியில் தாரை தப்பட்டைகள் கிழிந்து தொங்க வேண்டாமா என்கிறீர்கள். அன்புடன் உற்சாகம் தந்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.
Deleteஆஹா நூறா! தூள் கணேஷ்! மனம் நிறைந்த வாழ்த்துகள்! வலைச்சரத்துக்கு ஆசிரியர் ஆனதுக்கு சிறப்பு வாழ்த்து அங்கயும் வரேன் இருங்க. எழுத்தாளர்களின் கதை வரிகளை அளித்ததில் மகிழ்ச்சி..
ReplyDeleteஉங்களின் ஆசிகள் இருந்தால் எந்தச் சிகரமும் எனக்கு எளிது தானேக்கா... தங்களுக்கு என் இதய நன்றி.
Deleteநூறாவது பதிவுக்கு
ReplyDeleteஆசிரியர் பணிக்கும் வாழ்த்துக்கள் சார்
அன்புட்ன் வாழ்த்திய தங்களுக்கு அகமகிழ்வுடன் என் நன்றி.
Delete100- வது பதிவுக்கும் ,வலைச்சர ஆசிரியர் பொறுப்புக்கும் வாழ்த்துகள் கணேஷ்.
ReplyDeleteதங்களின் அன்பான வாழ்த்துக்களுக்கு என் இதயம் நிறை நன்றிம்மா...
Delete100- வது பதிவுக்கும் ,வலைச்சர ஆசிரியர் பொறுப்புக்கும் வாழ்த்துகள் வசந்தமே . கலக்கல் வாரமா ? ம்ம் .
ReplyDeleteதென்றலின் வாழ்த்து தந்தது மகிழ்வு. என் இதயம் நிறை நன்றி.
Deleteவாங்கைய்யா! வாத்தியாரய்யா! வரவேற்க வந்தோமையா!
ReplyDeleteவாழ்த்துக்கள்!
ஆஹா... எனக்குப் பிடித்த தலைவரின் பாடலால் வாழ்த்திய நண்பா.. உங்களுக்கு என் உளம்கனிந்த நன்றி.
Deleteநூறாவது பதிவிற்கும், "வாத்தியார்" ஆனதற்கும் வாழ்த்துக்கள் நண்பரே! மேலும் தொடருங்கள்....
ReplyDeleteஉஙகளின் ஆதரவிருக்கையில் என்ன குறை? மகிழ்வுடன் உற்சாகமாய்த் தொடர்கிறேன் நண்பரே... தங்களுக்கு என் இதய நன்றி.
Delete100 ஆவது பதிவுக்கும், வலைச்சர ஆசிரியர் பதவிக்கும், என் அன்பான வாழ்த்துகள்.
Deleteஅன்புடன் வாழ்த்திய தங்களுக்கு என் உளம்கனிந்த நன்றி!
Deleteஇனிய வாழ்த்துக்கள் கணேஸ் அண்ணா.வலைச்சரத்தில் தேர்ந்து பல திறனாளர்களை அறிமுகம் செய்வீர்கள் என்ற நம்பிக்கை இருக்கு பல முத்துக்கள் இனி மின்னல் வரியில் வரும் என்பதற்கு இறைய தொகுப்பே சான்று சொல்லுகின்றது.வாழ்த்துக்கள் தொடர்ந்து இந்த வாரம் முயல்கின்றேன் வலைச்சரத்தில் .கைகோர்க்க!
ReplyDeleteஎன் பயணத்தில் உடன் வரும் தம்பியின் அன்புக்கும் வாழ்த்துக்கும் என் உளம்கனிந்த நன்றி.
Deleteநூறுக்கும், வாத்தியார் வேலைக்கும் வாழ்த்துக்கள் நண்பரே .......!
ReplyDeleteபட்டைய கிளப்புங்க ..!
உளமார வாழ்த்தி உற்சாகம் தந்த நண்பருக்கு என் இதயம் நிறை நன்றி!
Deleteவாழ்க வளர்க
ReplyDeleteவாழ்த்து மனமகிழ்வு தநதது. உங்களுக்கு என் இதய நன்றி!
Deleteநூறாவது பதிவுக்கும், வலைச்சர ஆசிரியப் பணிக்கும் வாழ்த்துகள் சார். சாவி அவர்களின் எழுத்தை ரசித்தேன்.
ReplyDeleteமகிழ்வுடன் வாழ்த்திய தோழிக்கு என் மனம் நிறைந்த நன்றி!
DeletevaazhthukkaL....vaazhthukkaL. மிக்க சந்தோஷமாய் உள்ளது.
ReplyDeleteஎன் வளர்ச்சியைக் கண்டு நீங்கள் அகமகிழ்வது நல்ல நட்புக்குக் கட்டியம் கூறுகிறது. தங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!
Delete'தண்டோரா' படம் நல்லா இருக்கு. :)
ReplyDeleteநூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்! உங்கள் பதிவுகள் எல்லாம் சுவாரசியமானவை. இன்னும் பல நூறு பதிவுகள் காண ஆவல். :)
வலைச்சர ஆசிரியர் பொறுப்பு செய்தியை படித்ததும் மிகவும் சந்தோஷம். மனம் நிறைந்த வாழ்த்துக்கள்!
அங்கேயும் சென்று பார்க்கிறேன். எல்லாம் தாமதம்தான்! என்ன செய்வது! :)
என் மீது அன்பும் அக்கறையும் கொண்டு, இவ்வளவு மகிழ்வோடு வாழ்த்துறீங்களே... அந்த சந்தோஷத்துக்கு முன்னால தாமதம்லாம் பொருட்டே இல்லீங்க மீனாக்ஷி... வலைச்சரத்துக்கும் அவசியம் வாங்கன்னு அழைச்சு உங்களுக்கு என் இதயம்நிறை நன்றியை தெரிவிச்சுக்கறேன்!
Delete