ஹாய்... ஹாய்... ஹாய்...! நல்லா இருக்கீங்களா? இந்த முறை நான் புதிர் போடப் போறதில்ல. இப்ப நாம ஒரு விளையாட்டு விளையாடப் போறோம். நான் சொல்ற சின்னக் கணக்கை நீங்க அங்க போடுவீங்களாம். அதோட விடைய நான் இங்கருந்தே சொல்வேனாம்... சரியா?
‘‘அவசரம்! வேகமாப் போங்க டிரைவர்!’’ |
ஒரு பேப்பரும் பேனாவும் எடுத்துக்கங்க. 1லருந்து 9க்குள்ள ஏதாவது மூணு எண்களை எழுதுங்க. அந்த எண்கள் அதிக மதி்ப்பிலிருந்து குறைந்த மதிப்புக் கொண்ட வரிசையா அமையணும்கறது மட்டும்தான் கண்டிஷன்! உதா: 742 -இப்படி. எழுதியாச்சா..? அதுக்குக் கீழே அதே எண்ணை ‘உல்டா’ பண்ணி எழுதுங்க. உதா: 247. இப்ப முதல் எண்லருந்து ரெண்டாவது எண்ணைக் கழியுங்க.
கழிச்சாச்சா? விடையா வர்ற எண்ணோட உல்டாவை அதுக்குக் கீழே எழுதுங்க. இப்ப ரெண்டையும் கூட்டுங்க.
கூட்டியாச்சா? உங்களுக்கு வந்திருக்கிற விடை என்னங்கறதை பதிவோட இறுதியில நான் சொல்றேன். சரியான்னு பாருங்க...
===========================================
மரங்களிலேயே சுற்றுப்புறத்துக்கு அதிக நலன்தரும் மரத்தை ‘அரச மரம்’ என்கிறார்கள். இதற்கு போதி மரம் என்றும் பெயர் இருக்கிறது. புத்தருக்கு ஞானம் ‘போதி’த்த மரம் என்பதால் போதி மரம் என்று சொன்னதாகச் சொன்னாலும், பூதேவியின் மரம் என்பதால் போதி மரம் என்ற பெயர் என்றும் நம்பிக்கை.

‘‘ஹாஸ்பிட்டல் வந்தாச்சா?’’ |
அரச மரத்தை ‘கல்ப தரு’ என்று சொல்லி வணங்கினார்கள். இன்று Global Warning பிரச்சனையை எதிர்கொள்ள மேலை நாட்டு விஞ்ஞானிகள் சொல்வது- மரங்களை நடுங்கள்... அதுவும், அரச மரங்களை!
கலியுகத்தில் செடி, மரம் நடுவது, பூங்கா அமைப்பது, குளம் தோண்டுவது ஆகியவை குறையும். அதனால் இயற்கையின் சீ்ற்றம் அடிக்கடி ஏற்படும் என்று சிவபுராணத்தில் (பாடல் 11.1.23) அன்றே சொல்லி வைத்திருக் கிறார்கள் என்பது ஆச்சரியம்!
-‘திரிசக்தி’ மாத இதழிலிருந்து.
===========================================
‘ஆய கலைகள் அறுபத்து நான்கு’ என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். அந்த அறுபத்துநான்கு கலைகள் என்னென்ன என்பதைத் தெரிந்தவர்கள் மிகக் குறைவே. என் நண்பர் இந்திரா செளந்தர்ராஜன் அவர்களிடம் ஒருமுறை கேட்டபோது அந்த அறுபத்து நான்கு கலைகளையும் பட்டியலிட்டுச் சொன்னார். பிரமிப்பாக இருந்தது எனக்கு. உங்களுக்காக அவற்றை இங்கே தருகிறேன்.
1. முதலில் எழுதப் பழகும் மொழியின் அட்சரங்கள், 2. லிகிதம், 3. கணிதம், 4. வேதம், 5. புராணம், 6. வியாகரணம், 7. ஜோதிடம், 8. தர்ம சாஸ்திரம், 9. யோக சாஸ்திரம், 10. நீதி சாஸ்திரம்,
11. மந்திர சாஸ்திரம், 12. நிமித்த சாஸ்திரம், 13. சிற்ப சாஸ்திரம், 14. வைத்ய சாஸ்திரம், 15. சாமுத்ரிகா லட்சணம், 16. சப்தப் பிரம்மம், 17. காவியம், 18. அலங்காரம், 19. வாக்கு வன்மை, 20. கூத்து,

தலை தெறிக்க ஓடி... |
21. நடனம், 22. வீணை இசை, 23. புல்லாங்குழல் வாசிப்பு, 24. மிருதங்க இசை, 25. தாளம், 26. ஆயுதப் பயிற்சி, 27. ரத்னப் பரீட்சை, 28. கனகப் பரீட்சை (தங்கம் எது என அறிதல்), 29. யானை ஏற்றமும் ஜாதி அறிதலும், 30. குதிரை ஏற்றமும் ஜாதி அறிதலும்,
31. ரத சாஸ்திரம், 32. பூமியறிதல், 33. போர்முறை சாஸ்திரம் மற்றும் தந்திரம், 34. மற்போர் சாஸ்திரம், 35. வசீகரித்தல், 36. உச்சாடனம், 37. பகை மூட்டுதல், 38. காம சாஸ்திரம், 39. மோகனம், 40. ஆகர்ஷணம்,
41. ரஸவாதம், 42. கந்தர்வ ரகசியம், 43. மிருக பாஷையறிவு, 44. துயர் மாற்றுதல், 45. நாடி சாஸ்திரம், 46. விஷம் நீக்கும் சாஸ்திரம், 47. களவு, 48. மறைந்துரைதல், 49. ஆகாயப் பிரவேசம், 50. விண் நடமாட்டம்,
51. கூடு விட்டுக் கூடு பாய்தல், 52. அரூபமாதல், 53. இந்திர ஜாலம், 54. மகேந்திர ஜாலம், 55. அக்னி ஸ்தம்பனம், 56. ஜல ஸ்தம்பனம், 57. வாயு ஸ்தம்பனம், 58. கண்கட்டு வித்தை, 59. வாய் கட்டும் வித்தை, 60. சுக்கில ஸ்தம்பனம், 61. சுன்ன ஸ்தம்பனம், 62. வாள் வித்தை, 63. ஆன்மாவைக் கட்டுப்படுத்துதல், 64. இசை.
===========================================
மலையாள மெகாஸ்டார் மம்முட்டி சொல்கிறார்:
‘‘நான் அமிதாப்பச்சனுடன் பங்கெடுத்த நிகழ்ச்சியை வாழ்நாளில் மறக்க முடியாது. பச்சனும் நானும் பக்கத்து பக்கத்தில் அமர்ந்திருந்தோம். சினிமாவில் புகழ்பெற்ற பலரும் வணங்கி மரியாதை செலுத்தியபடி எங்களைக கடந்து போனார்கள். யார் வந்தாலும் சிரிப்புடன் நெஞ்சில் கை வைத்து மரியாதை செலுத்தினேன். ஆனால் அமிதாப்பச்சன் பெண்கள் வந்தபோது அவர்களுடைய வயதுக்குத் தகுந்தாற்போல் நாற்காலியிலிருந்து எழுந்து மரியாதை செலுத்தினார். நான் மிகவும் வெட்கப்பட்ட தருணமாயிருந்தது அது.

அவரோட அவசரம் அவருக்கு..! |
மலையாளிகளாகிய நாம் பெண்களுக்கு மரியாதை செலுத்துவதில்லை என்பது மட்டுமல்ல; ஆண்கள் வரும்போது பெண்கள் எழுந்திருக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கிறோம். பேருந்துகளில் பெண்களின் இருக்கைகளில் நாம் உட்கார்ந்திருந்தாலும் எழுந்து இடம் கொடுக்க யோசிப்போம். ஆனால் படிப்பறிவில்லாத வட இந்தியனோ, தமிழனோ, தெலுங்கனோ பெண்களுக்காக எழுந்திருப்பான்.’’
-‘அம்ருதா’ மாத இதழிலிருந்து.
===========================================
‘நிலா நிலா ஓடி வா’ என்று நிலாவைக் காட்டிச் சோறூட்டுவார்களாம் குழந்தைகளுக்கு. பெண்களை நிலாவுடன் ஒப்பிடுவது கவிஞர்களின் வழக்கம். எல்லோரும் ரசிக்கும் இந்த நிலாவுக்கு எத்தனை வேறு பெயர்கள் இருக்கின்றன என்பது உங்களுக்குத் தெரியுமா? எண்ணிக்கோங்க...:
நிலவு, பிறை, குபேரன், அம்புலி, தண்ணவன், மருவு, சுதாகரன், சந்திரன், சோமன், கலையினன், அலவன், நசரகரன், குரங்கி, அல்லோன், ஆலோன், களங்கன், உடுவின் வேந்தன், சசி, கிரணன், மதி, விது, முயலின் கூடு, நிசாபதி, கலாநிதி, திங்கள், சாநவ்தன், இந்து, பசுங்கதிர்.

பழைய ‘சாவி’ இதழிலிருந்து... |
இத்தனை பெயர்களும் நிலவுக்கு உண்டுன்னு சொல்றது நான் இல்லீங்கோ... ‘சூடாமணி நிகண்டு’ங்கற புத்தகமுங்கோ!
===========================================
ஆம்புலன்ஸ் ஜோக்கை வரைந்தவர் என் நண்பர் ஜி.ஆரோக்கியதாஸ்.
===========================================
இப்ப உங்களுக்குக் கிடைச்சிருக்கிற விடை : 1089. எப்பூடி! கரெக்ட்டாச் சொல்லிட்டேன்ல... வேற ஏதாவது நம்பர் காம்பினேஷன் முயன்று பாருங்க...
இப்ப உங்களுக்குக் கிடைச்சிருக்கிற விடை : 1089. எப்பூடி! கரெக்ட்டாச் சொல்லிட்டேன்ல... வேற ஏதாவது நம்பர் காம்பினேஷன் முயன்று பாருங்க...
அப்புறம் ‘கணேஷ் விடையச் சொன்னா, அது ராங்காப் போறதில்ல’ன்னு பாட்டே பாடுவீங்க!
|
|
Tweet | ||
மொறு மொறு மிக்சர்... பல்சுவை தந்தது.
ReplyDeleteநல்ல பகிர்வுக்கு மிக்க நன்றி நண்பரே....
பல்சுவையை ரசித்துப் பாராட்டிய தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.
Deleteகணக்கு, ஆய கலைகள் 64, நிலாவின் பல பெயர்கள், ஜோக்ஸ் என்று அனைத்தும் அருமை சார் !
ReplyDeleteமொறுமொறு மிக்ஸரை ரசித்துப் பாராட்டிய தங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.
DeleteMixture not bad..
ReplyDeleteநாட் பேட் என்று சொல்லியிருக்கும் தங்களை ‘குட்’ என்று சொல்லும் விதமாய் விரைவில் இன்னொரு மிக்ஸர் தருவேன். நன்றி ஸார்...
Deleteநல்ல தொகுப்பு. குறிப்பாக ஆயகலைகளும், மம்முட்டி பகிர்வும் சிறப்பு. நன்றி.
ReplyDeleteதாங்கள் ரசித்துப் பாராட்டியதற்கு என் மனமார்ந்த நன்றி.
Deleteநல்ல இருக்குங்க...அப்புறம் நிலாவுக்கு இத்தனை பெயரா...
ReplyDeleteஅந்த விஷயத்தைப் படிச்சதும் எனக்கும் இதே பிரமிப்புதான் எழுந்தது. அதான் ஷேர் பண்ணிக்கிட்டேன். நீங்க ரசிச்சதில சந்தோஷத்தோட உங்களுக்கு என நன்றியை உரித்தாக்குகிறேன்.
Deleteமிகசரில் சேர்த்த பொருட்கள் அனைத்தும் சுவை பட இருந்தன.
ReplyDeleteமிக்ஸரின் சுவையை ரசித்துப் பாராட்டியமைக்கு என் இதயம் நிறை நன்றி.
Deleteசரியான சுவையில் கலந்து கொடுத்த மிக்சர் நல்ல மொறு மொருப்பாக இருந்தது எழுத்தாளர் இந்திரா சௌந்திர ராஜனும் உங்க நட்பு வளையத்தில் இருக்காரா அவர்பற்றிய பகிர்வுக்காக வெயிட்டிங்க்.
ReplyDeleteமிக்ஸரை ரசித்துப் பாராட்டிய தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி. பி.கே.பி.க்கு அடுத்து இந்திரா செளந்தர்ராஜன் பத்தித்தான் எழுதப் போறேன்னு யூகிச்சதுக்கு ஒரு சல்யூட்!
Deleteநண்பர் ஆரோக்கியதாஸிர்க்கு எனது வாழ்த்துக்களை தெரிவியுங்கள். I C U ரூமிர்க்குள்ளே நம்மையும் அழைத்து செல்கிறார். கண்ணாடிக்குப்பின் I C U தலைகீழ் ஆகத்தெரிகிறது.நுணுக்கமான கார்டூன்.
ReplyDeleteஉஙகளின் பாராட்டு தாஸுக்கு வைட்டமின் இனியவை கூறல்! அவசியம் தெரிவிக்கிறேன். உற்சாகமூட்டிய தங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!
Deleteவணக்கம் நண்பரே,
ReplyDeleteமதிமயக்கும் நிலவிற்கான தமிழ் கொடுத்த பெயர்களை
அழகாய் பகிர்ந்தமைக்கு நன்றிகள் பல.
உலகிலேயே நம் மொழி ஒன்றுக்குத் தான் இந்த பெருமை உண்டு..
அறுபத்தி நான்கு கலைகள் பற்றி என்றோ ஒருநாள் படித்த ஞாபகம்..
ஆனால் சிலவைகள் தான் ஞாபகமிருக்கிறது..
நினைவுக்கு கொண்டுவந்தமை அழகு..
அட புதிருக்கான விடை சரி தான்...
மொருமொரு மிக்சர் படித்தால், குடும்பத்துடன் அமர்ந்து
பல கதைகள் பேசி தேநீர் அருந்தியது போல இருக்கிறது..
தமிழ் மொழியின் சிறப்புகளை எண்ணி நானும் வியந்துதான் வருகிறேன் மகேன். குடும்பத்துடன் அமர்ந்து பலகதைகள் பேசி தேநீர் அருந்திய உணர்வை என் பதிவு தருகிறது என்று நீங்கள் சொல்லியிருப்பதைப் படிக்கையில் மிகப் மகிழ்வாக உணர்கிறேன். தங்களுக்கு என் இதயபூர்வமான நன்றி!
Deleteமம்மூட்டி தகவல் ரசித்தேன்.
ReplyDeleteஅப்ப... மத்த எதுவும் ரசிக்க முடியலைங்கறீங்க போல... ஹி... ஹி... நன்றி ஸார்!
Deleteநல்ல மிக்ஸ்! நல்ல சுவை!
ReplyDeleteநல்ல சுவை என்ற வார்த்தையால் எனக்கு உற்சாகமளித்த உங்களுக்கு என் இதய நன்றி!
Deleteஆயகலைகள் அறிந்துகொண்டேன் !
ReplyDeleteபெண்களை மதிக்கிறோம்,மரியாதை செய்றோம்ன்னு ஆண்கள் சொல்லிக்கிறாங்கப்பா !
அந்த நிலாவுக்கு இருக்கிற பேரெல்லாம் இனிக் கவிதையில வரும்.சந்தேகமா யாராச்சும் கேட்டா உங்களைத்தான் கைகாட்டுவன் ஃபெரெண்ட் !
ஏம்ப்பா இப்படி சலிப்பா சொல்றீங்க? நிஜமாவே பெண்களை மதிக்கிற ஆண்களும் இருக்கோம்ப்பா. நம்புங்க. கவிதையில நிலாவின் பேர் வரும்கறதுல சந்தோஷம். தாராளமா என்னைக் கை காட்டலாம் ஃப்ரெண்ட். உங்களின் ரசனைக்கு என் இதயம்நிறை நன்றி!
Deleteஇது வித்தியாசமா இருக்கே..தாமத கருத்திட்டமைக்கு மன்னிக்கவும்..
ReplyDeleteநல்ல சுவையான மிக்ஸர்தான்//ரசிச்சு..சாப்பிட்டு..இன்னும் இல்லையானு ஏங்கிட்டு இருக்கேன்.சூப்பர் சார்.நன்றி.
இன்னும் இல்லையான்னு ஏங்கிட்டு இருக்கேன்- இந்த வார்த்தைகள் யானை பலம் தருகின்றன எனக்கு. மிக்க நன்றி நண்பா!
Deleteதலைப்புக்கு தகுந்தார்ப்போல மிக்ஸர் நல்ல மொறு மொறுதான்
ReplyDeleteபடிக்க சுவையாகவும் அறிவுக்கு வலு சேர்ப்பதாகவும் உள்ளது
தொடர்ந்து தரவேண்டுகிறேன்
இயன்றவரை சுவாரஸ்யமாகவும் அறிவுபூர்வமாகவும் தர முயல்கிறேன். தங்களின் நற்கருத்துக்கு என் மனமார்ந்த நன்றி!
DeleteTha.ma 10
ReplyDeleteமொறு மொறு மிக்ஸர் மிக மிக சுவையாக இருந்தது!
ReplyDeleteரசித்துப் படித்த உங்களுக்கு என் இதய நன்றி!
Deleteமிக்சர் பல்சுவை கொண்டது!
ReplyDeleteசா இராமாநுசம்
மிக்ஸரை ரசித்த தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!
Deleteநிலவின் பெயர்களை ரசித்தேன் . மிக்சர் நல்ல மொறு மொருப்பாக சூப்பர் .
ReplyDeleteதமிழ் என்றுமே இனிமைதான் இல்லையா தென்றல்! மொறு மொறுப்பான மிக்ஸரை ரசித்துப் பாராட்டிய உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!
Deleteமொறு மொறு மிக்ஸரில் தந்துள்ள அனைத்துமே அருமை. ஆனால் எனக்குப் பிடித்தது அந்த காலியான இடத்திற்கான ‘ஜோக்’ தான். இந்த நேரத்தில் எனக்கு நான் படித்த மற்றொரு ஜோக் நினைவுக்கு வருகிறது. நம்மூர் நகைச்சுவை பேச்சாளர் ஒருவர் வெளிநாடு சென்று பேசும்போது, ஒரு நீண்ட ஜோக்கை சொன்னாராம். அதை மொழிபெயர்த்தவர் ஒரே வார்த்தையில் மொழிபெயர்த்ததும், அனைவரும் கை தட்டினார்களாம். நம்மவருக்கு ஒரே ஆச்சர்யம். அவரிடம் ‘நான் சொன்ன நீண்ட ஜோக்கை எப்படி சுருக்கமாக சொன்னீர்கள்.’ என்றாராம். அதற்கு அவர், ‘நான் நம்முடைய விருந்தினர் ஒரு ஜோக் சொல்லுகிறார். கைதட்டுங்கள் என்றேன். அவ்வளவுதான்.’ என்றாராம்!
ReplyDeleteஹா... ஹா.... நீஙகள் சொன்ன துணுக்கு அருமை. மிக்ஸரை ரசித்துப் பாராட்டிய தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.
Delete//மொறு மொறு மிக்ஸர் - 6//
ReplyDeleteநல்ல சுவையாக.
சுவையை ரசித்துப் பாராட்டிய தங்களுக்கு என் இதய நன்றி.
Deleteபல்சுவையுடன் மொறு மொறு மிக்சர் சிறப்பு வாசித்து ரசித்தேன். வாழ்த்துகள் சார்.
ReplyDeleteவேதா. இலங்காதிலகம்.
வாசித்து ரசித்த தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!
Deletemixer nalla irukkuthu!
ReplyDeleteமிக்ஸரை ரசித்துப் பாராட்டிய சீனிக்கு என் இதய நன்றி!
Deleteமிக்சர் கலக்கல்! :)
ReplyDeleteகணக்கு போட்டு பாத்தேன்.
//கணேஷ் விடையச் சொன்னா, அது ராங்காப் போறதில்ல// கணக்கு தப்பா இருந்தாலுமா! :))))) சும்மாதான். தப்பா நினைக்காதீங்க.
அரச மரம் பற்றிய குறிப்புகள் அருமை. ஆய கலைகள் அறுபத்தி நாலும் என்னன்னு இப்பதான் தெரிஞ்சுண்டேன். நன்றி.
ஆரோக்கியதாஸ் கார்டூன் மிகவும் அருமை. சாவி இதழ் ஜோக்கும் சூப்பர்!
அனைத்துப் பகுதிகளையும் ரசித்து, தனித்தனியாய்ப் பாராட்டிய உங்களுக்கு ஒட்டுமொத்தமாக என் இதயம் நிறைய மகிழ்வுடன் நன்றி தெரிவிக்கிறேன்!
ReplyDeleteவிஷத்தை எதுக்கு நக்கணும் என்று சந்தேகத்துடன் மறுபடி படித்த போது புரிந்தது.
ReplyDeleteஹா... ஹா... விஷத்தை நீக்குவது இப்படி உங்களைப் படுத்தி விட்டதா?
Deleteஆய கலை அறுபத்து நான்கு - நாலும் நல்ல தமிழ் சொல். இதுல ஸ்தம்பனம் ஆகர்ஷணம் உச்சாடனம்னு சொன்னா என்னய்யா அர்த்தம்? நியாயமா இது? :-)
ReplyDeleteகுதிரையோட ஜாதியை அறியுறதா? சரிதான்.
என்ன செய்ய... அவர் பறைஞ்சதிலருந்து இந்த வடமொழிச் சொற்களைத் தமிழ்ப்படுத்த எனக்குத் தெரியல. குதிரையோட ஜாதியை அறியுறேன்னு நீங்க போய் ஆராய்ச்சி பண்ணிடாதீங்க... உதை குடுத்துடும். குதிரைகளோட பழகும் கலைய முதல்ல கத்துக்கிட்டு அப்புறம் கிட்ட போனாத்தான் விடுமாம். இதுல விக்கிரமாதித்த மன்னன் வல்லவனாம். இந்திராஜி சொன்னார்.
Delete-உங்களுக்கு என் இதய நன்றி ஸார்!
குதிரை ஜாதி மாறிச்சா இல்லையானு எப்படி தெரிஞ்சுக்குறது சார்? ஒருவேளை மதம் தான் மாற முடியுமோ, ஜாதி மாற முடியாதோ?
ReplyDeleteஹய்யய்யோ... குதிரைக்கு ஏது மதம்? யானைக்குத் தான் உண்டு!
Deleteகுதிரையோட ஜாதிங்கறது அது ஆணா, பெண்ணாங்கறதும், எந்த நாட்டைச் சேர்ந்ததுங்கற விஷயம்தான்னு நான் நினைக்கிறேன்!
பேஷ்,பேஷ்,,பலே,பலே..
ReplyDeleteதிருவாளர்கள்.
வெங்கட் நாகராஜ்,திண்டுக்கல் தனபாலன்,சமுத்ரா,ராமலக்ஷ்மி,கோவை நேரம்,ஸாதிகா,Lakshmi,EniyavaiKooral,மகேந்திரன்,ஸ்ரீராம்,கே. பி. ஜனா,ஹேமா,Kumaran,Ramani,,
மனோ சாமிநாதன்,புலவர் சா இராமாநுசம்
சசிகலா,வே.நடனசபாபதி,மனசாட்சி™,
kovaikkavi,Seeni,மீனாக்ஷி,அப்பாதுரை
ஆகியோரின் கருத்துக்கள் அருமையிலும் அருமை
அனைத்தையும் நான் வழிமொழிகிறேன்..
தொடரட்டும் உங்கள் சீரிய பணி!
(இத்துடன் சபை கலைகிறது)
ஆஹா... தாமதமாக வந்தாலும் பதிவுடன் சேர்த்து அனைவரது கருத்துக்களையும் உங்களால் படிக்க முடிந்தது இல்லையா? ரசித்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!
Delete>>குதிரையோட ஜாதியை அறியுறதா?<
ReplyDeleteஉண்மை!
குதிரைகளிலும் நான்கு வர்ணம் உண்டு!
வெள்ளை,பழுப்பு,கருப்பு,கலப்பு...
ஹிஹி
அறுபத்து நான்கு கலைகளை வரையறுத்த காலத்துல குதிரைதானே டூ வீலர். அது ஹோண்டா கம்பெனியா, இல்ல... டிவிஎஸ் கம்பெனியான்னு தெரிஞ்சுக்கற மாதிரி, அரபுப் புரவியா, தமிழகத்துப் புரவியான்னு ஆராய்வாங்க போல... வர்ணம்ங்கறதுக்கு நீங்க கொடுத்த (புது?) விளக்கம் அருமைங்க!
Deleteஅருமையான பகிர்வு அன்பரே..
ReplyDeleteபடித்து மகிழ்ந்தேன்.
நிலவு பற்றிய செய்திகள் இன்றை தலைமுறையினர் தெரிந்துகொள்ளவேண்டிய தகவல்
சங்க இலக்கியத்தில் “நெடுவெண்ணிலவினார்“ என்றொரு புலவருக்குப் பெயரே இருந்தது அன்பரே..
http://www.gunathamizh.blogspot.in/2009/07/blog-post_06.html
சங்க இலக்கியங்களில் நான் படித்தது கொஞ்சமே. நிறைய இன்னும் படிக்க வேண்டியிருக்கிறது. இந்த ‘நெடுவெண்ணிலவினார்’ பற்றி இப்போதுதான் தெரிந்து கொள்கிறேன். தங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!
Deleteபல்சுவை விருந்து. தெரிந்துகொள்ள அருமையான தகவல்கள் நிறைய. குறிப்பாக ஆயகலைகள் அறுபத்தி நான்கு.
ReplyDeleteபல்சுவை விருந்தை ரசித்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி துரை!
Deleteமிக்சர் ரொம்ப சுவையாவும், நகைச்சுவை யாகவும் இருந்தது..
ReplyDeleteநகைச்சுவையை ரசித்துச் சுவைத்துப் பாராட்டிய தங்களுக்கு என் இதய நன்றி.
Delete