Friday, July 6, 2012

மினி க்ரைம் நாவல்!

Posted by பால கணேஷ் Friday, July 06, 2012

முன்பொரு சமயம் குமுதம் இதழைத் தயாரித்தபோது ராஜேஷ்குமார் தன் வாசகர்களுக்காக ஒரு மினி க்ரைம் நாவலை நான்கே பக்கங்களில் எழுதினார். அதை நிறையப் பேர் படித்திருக்க மாட்டீர்கள் என்பதால் இங்கே...

                               தீர்ப்பின் நிறம்
                                   - ராஜேஷ்குமார் -

(1) இரவு மணி பத்து. காலிங் பெல் நீளமாகக் கூப்பிட, யூனிபார்மைக் கழட்டிக் கொண்டிருந்த இன்ஸ்பெக்டர் சுகுமார் கதவைத் திறக்க- வெளியே ஒரு நபர். இருட்டில் முகம் தெரியவில்லை. ‘‘யார்?’’ -வந்தவன் சுட்டான். ‌‌ஸைலன்ஸர் பிஸ்டல்! இன்ஸ்பெக்டர் மல்லாந்தார்.

(2) பப்ளிக் பிராசிக்யூட்டர் நாகராஜ் செகண்ட் ஷோ சினிமா பார்த்துவிட்டு ஸ்கூட்டரில் வீடு திரும்ப, போக்குவரத்தற்ற ரோட்டின் வளைவில் திடுமென்று அவன் நின்றிருக்க, அதிர்ந்து போய் பிரேக்கை அழுத்தினார். நின்றிருந்தவன் அவருடைய தலையில் ஓங்கி அடிக்க, குப்புற விழுந்தார். விழுந்தவரை இழுத்துக் கொண்டு போய் ரோட்டின் நடுவே இருந்த மேன்-ஹோலைத் திறந்து உள்ளே திணித்து மூடினான். ஸ்கூட்டரை எடுத்துக் கொண்டு கிளம்பினான்.

(3) இரவு பன்னிரெண்டு மணி. மத்திய சிறைச்சாலை. சிறை சூப்பிரண்டெண்டுக்கு முன் ஜெயிலர், வார்டன். கலவர முகங்கள். ‘‘பூபதி தப்பிச்சுட்டானா?’’ ‘‘ஆமா ஸார். எப்படின்னு தெரியலை’’

(4) ‘‘ஸார், டெலிகிராம்’’ குரல் கேட்டுக் கொட்டாவி‌யோடு கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்த சேதுவின் மார்பில் தோட்டா பாய்ந்து அவரை உடனடியாகச் சாய்த்தது.

(5) ஊருக்கு வெளியே இருட்டில் மயானம். சுண்ணாம்புப் பூச்சோடு சமாதிகள் தெரிய, கிழக்குப் பக்க சமாதியில் ஓர் உருவம் முழங்கால்களைக் கட்டிக் கொண்டு உட்கார்ந்திருந்தது. வானத்தில் உடைந்த நிலா. சிதறிய நட்சத்திரங்கள்.

(6) காலை ஐந்தரை மணி. ஜட்ஜ் பிரகாசம் மார்னிங் வாக் போக வெளியே வந்தார். வேகமாய் நூறு மீட்டர் தூர நடை. அவர் அந்த மரத்தைக் கடந்ததும் அதன் பின்னிருந்து வெளிப்பட்டான் அவன். சுட்டான். ஜட்ஜ் பின்பக்கமாய் மடங்கி விழ, சுட்டவன் பக்கத்தில் வந்து அவருடைய நெஞ்சை மிதித்து, துடித்துக் கொண்டிருந்த உயிரை நிறுத்தினான்.

(7) சரோஜா பயமாய் அவனை ஏறிட்டாள். ‘‘நீ அவசரப்பட்டுட்டே செல்வம்...’’ என்றாள். ‘‘ஊ...ஹும்... நான் எடுத்த முடிவு சரிதான்...’’ என்றான் அவன்.

(8) ‘‘ராத்திரியில் நாலு கொலை. இன்ஸ்பெக்டர் சுகுமார், பப்ளிக் பிராசிக்யூட்டர் நாகராஜ், ஸாடாக் விட்னஸ் சேது, ஜட்ஜ் பிரகாசம் -ஒரே மாதிரி சுட்டுக் கொலை செய்யப்பட்டிருக்காங்க’’ போலீஸ் கமிஷனர் பெருமூச்சு விட்டார்.

(9) ஜெயில் சூப்பிரண்டெண்ட் ஜீப்பில் தாவி ஏறினார். ஜெயிலர் ஓடி வந்தார். ‘‘ஸார்....’’ ‘‘என்ன..?’’ ‘‘தப்பின கைதி பூபதி போன் பண்ணியிருந்தான். அவனைத் தேடறதை நாம நிறுத்தணுமாம். இல்லேன்னா உங்க கர்ப்பிணிப் பொண்ணைச் சுட்டுக் கொல்வானாம்.’’ ‘‘என்னோட இருபத்தஞ்சு வருஷ சர்வீஸ்ல எந்தக் கைதியையும் தப்பிப் போக விட்டதில்லை. என் கர்ப்பிணிப் பொண்ணை அவன் சுட்டாலும் சரி, அவனைப் பிடிக்காம நான் வரப் போறதில்லை’’ -சொன்ன ஜெயில் சூப்பிரண்டெண்ட் ஜீப்பை விரட்டினார்.

(10) டி.எஸ்.பி. அதிர்ச்சியாய் கமிஷனரை ஏறிட்டார். ‘‘தப்பியோடின கைதி பூபதி ஒரு மரண தண்டனைக் கைதியா...?’’ ‘‘ஆமா ஸார். வர்ற பத்தாம் தேதி அவனைத் தூக்கிலே போடறதா இருந்தது.’’

(11) ‘‘என்னாச்சு...?’’ டி.ஜி.பி. கேட்டார். ‘‘ஆள் கிடைக்கலை ஸார்...’’ ஜெயில் சூப்பிரண்டெண்ட் முனகினார். ‘‘ரிடையராக ரெண்டு மாசம் இருக்கும் போது உங்க சர்வீஸ்ல இப்படி நடந்திருக்க வேண்டாம்.’’ ‘‘ஸார்... ஷுட் அட் ஸைட் ஆர்டர் எனக்கு வேணும்...’’ ‘‘கிராண்டட். அந்தப் பூபதியைப் பார்த்த நிமிஷமே சுட்டுத் தள்ளுங்க...’’

(12) ‘‘ஹலோ... போலீஸ் ஸ்டேஷன்?’’  ‘‘ஆமா...’’ ‘‘கார்ப்பரேஷன் எருக் கிடங்கு லாரியில் ஒரு டெட்பாடி...’’ போலீஸ் போய்ப் பார்த்தார்கள். ஒரு நிர்வாணப் பெண்- உடம்பில் தோட்டா. ஒரு கான்ஸ்டபிள் கத்தினார். ‘‘ஸார்! இது சரோஜா. பூபதியோட காதலி!’’

(13) ராத்திரி ஒரு மணி. மயானத்துக்குக் கொஞ்சம் தள்ளி ஜீப்பை நிறுத்தி, ஜெயில் சூப்பிரண்டெண்ட் இறங்கினார். உடன் வந்த ஜெயிலரைக் கூப்பிட்டார். ‘‘விக்டர்...’’ ‘‘ஸார்...’’ நீங்க மயானத்தை இடப்பக்கமாச் சுத்திட்டு வாங்க... நான் வலது பக்கமாச் சுத்திட்டு வர்றேன்...’’

(14) சமாதிக்கு மத்தியிலிருந்து அவன் எழுந்தான். ஜீ்ப்பிலிருந்து இறங்கி நடக்கிற ஜெயில் சூப்பிரண்டெண்டையும், ஜெயிலரையும் பார்த்தான்.

(15) ஜெயில் சூப்பிரண்டெண்ட் மெதுவாய் நடந்து மயானத்திற்குள் நுழைந்து இடிந்த அந்தப் பழைய கட்டிடத்துப் பக்கமாய்ப் போனார்.

(16) கட்டிடத்துக்குள் மறைந்திருந்த அவன் சுவரில் முதுகைத் தேய்த்துக் கொண்டு அசையாமல் அப்படியே நின்றான்.

(17) ஜெயில் சூப்பிரண்டெண்ட் கட்டிடச் சுவரை நெருங்கியதும் மெல்லக் கூப்பிட்டார். ‘‘பூபதி!’’ ‘‘ஐயா...’’ ‘‘உன் லிஸ்ட்ல இருக்கற எல்லாரையும் முடிச்சுட்டியா?’’ ‘‘முடிச்சுட்டேன்யா. லட்சக்கணக்கில் பணம் தர்றவங்களுக்கு சாதகமாக தீர்ப்பை சொல்லிட்டு வந்த நீதிபதி பிரகாசம், பொய் சாட்சிகளை உருவாக்கி நிரபராதிகளை தூக்குக்கு அனுப்பிட்டிருந்த பப்ளிக் பிராசிக்யூட்டர் நாகராஜ், ப்ராடு இன்ஸ்பெக்டர் சுகுமார், பொய்சாட்சி சொல்றதுக்காகவே அவதாரம் எடுத்த சேது, என்மேல கொலைப் பழியைச் சுமத்திட்டு அப்பாவி மாதிரி நடிச்ச சரோஜா... எல்லாரையும் முடிச்சுட்டேன்யா. செய்யாத கொலைக்கு தூக்குல தொங்கணுமேன்னு நினைச்சேன்... இப்ப மனசு திருப்தியா இருக்குய்யா. ஊருக்கு ஒரு நல்ல காரியம் பண்ணின திருப்தி இருக்கு.’’ ‘‘நான் கொடுத்த துப்பாக்கி எங்கே?’’ ‘‘அதை ஆழமாக் குழி தோண்டிப் புதைச்சுட்டேன்யா...’’ ‘‘குட்..! உன்னைக் கண்டதும் சுடறதுக்கான ஆர்டரோட இப்ப வந்திருக்கேன். எனக்குப் பயந்து ஓடற மாதிரி ஓடு. சுட்டுத் தள்றேன்...’’ ‘‘சந்தோஷம்ய்யா...’’ அவன் இருட்டிலிருந்து வெளிப்பட்டு ஓடினான்.

(18) ஜெயில் சூப்பிரண்டெண்ட் வேண்டுமென்றே கத்தினார். ‘‘பூபதி... ஓடாதே...!’’ அவன் ஓடினான். ‘‘ஜெயிலர், கம் திஸ் ஸைட்..!’’ சூப்பிரண்டெண்ட் குரல் கொடுக்க, ஜெயிலர் மறு பக்கத்திலிருந்து ஓடி வந்தார். ஜெயிலரைச் சாட்சியாக வைத்துக் கொண்டு ஓடிக் கொண்டிருந்த பூபதியை நிம்மதியாய்ச் சுட்டார் சூப்பிரண்டெண்ட். பூபதி சந்தோஷமாய் தோட்டாவை மார்பில் வாங்கிக் கொண்டு சரிந்தான். திருப்தியோடு உயிரை விட ஆரம்பித்தான்.

மேய்ச்சல் மைதானத்தில் இப்போது - பேசும் ஓவியங்கள்!

53 comments:

  1. அற்புதம் வேறு என்ன சொல்ல முடியும். அவருடைய எழுத்துக்களில் மட்டுமே இவ்வளவு கிரைம் இருக்க முடியும் போல. பகிர்விற்கு நன்றி வாத்தியாரே தம (2)

    ReplyDelete
    Replies
    1. ரா.கு.வின் எழுத்தை ரசித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  2. எதிர்பார்த்த முடிவுதான் இருந்தாலும் ராஜேஷ்குமாரின் எழுத்துகளில் உள்ள அந்த வேகம் படிக்கத் தூண்டுகிறது

    ReplyDelete
    Replies
    1. எழுத்தின் வேகத்தை ரசித்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.

      Delete
  3. இதை முன்பே படிச்சிருக்கேன்... ஆனாலும் இப்ப படிக்கறப்போ புதுசா, சூப்பரா இருக்கு... அதுதான் ராஜேஷ்குமார் ஸார்...

    ReplyDelete
    Replies
    1. பிரபு... உங்களின் தொடர்ந்த வாசிப்பு எப்போதும் என்னை வியக்க வைப்பது. நீங்க முன்பே படிச்சிருக்கேன்னதில ஆச்சர்யமில்ல எனக்கு. ரா.கு.வை ரசித்த உங்களுக்கு என் இதய நன்றி.

      Delete
  4. பூபதியின் கொலைக்கான காரணம் யோசித்தபடி தான் இருந்தது. ஆனாலும் முடிவு தான் கொஞ்சம் மாறிவிட்டது. ஆனாலும் இவ்வளவு சிறிதாக க்ரைம் நாவல் எழுதுவது ... க்ரேட். பகிர்ந்தமைக்கு நன்றி. :)

    ReplyDelete
    Replies
    1. கரெக்ட். சிறுசிறு அத்தியாயங்களில் டெம்போவோடு எழுதுவது மிகக் கடினம். நான் வியந்த அதை நீங்களும் வியந்து ரசித்ததில் மகிழ்வு எனக்கு. உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

      Delete
  5. ராஜேஷ்குமார் குமார் நாவல் என்றாலே வேகம் தான்! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. வேகத்தை ரசித்துப் படித்த உங்களுக்கு என் இதய நன்றி.

      Delete
  6. சிறிய க்ரைம் நாவலாக இருந்தாலும் த்ரில்லிங்கான நாவல்...

    முன்பே படித்ததில்லை. பகிர்வுக்கு நன்றி கணேஷ்.

    ReplyDelete
    Replies
    1. முன்பே படித்ததில்லை என்றால் மிக ரசித்திருப்பீர்கள் வெங்கட். மிகமிக மகிழ்ச்சி எனக்கு, மிக்க நன்றி.

      Delete
  7. நல்லாயிருக்கு

    சா இராமாநுசம்

    ReplyDelete
    Replies
    1. படித்து ரசித்த உங்களுக்கு என் இதயம்நிறை நன்றி ஐயா.

      Delete
  8. அருமையான கதை
    எதிர்பாரா முடிவும் மிக மிக அருமை
    பதிவாக்கித் தந்தமைக்கு மனமார்ந்த நன்றி

    ReplyDelete
    Replies
    1. ரசித்துப் படித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.

      Delete
  9. Half way through the novel, I tried my level best to guess about the climax and I failed. Really unexpected one.

    ReplyDelete
    Replies
    1. அதான் ரா.கு.வின் சிறப்பே. ரசித்துப் படித்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

      Delete
  10. இந்த கதையை நான் படித்ததில்லை. எழுத்தாளர் ராஜேஷ்குமார் அவர்கள் வழக்கம்போல் சஸ்பென்ஸை கடைசிவரை கொண்டுபோய் இருக்கிறார். வெளியிட்டமைக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. ரசித்துப் படித்துக் கருத்திட்ட உஙகளுக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  11. ஏற்கனவே படிச்சிருக்கேன் இப்பதான் புதுசாப்படிக்கிராப்போல இருக்கு நன்றி

    ReplyDelete
    Replies
    1. ஓ... குமுதம் ரெகுலராப் படிக்கறவங்களா நீங்க... இப்பவும் படிச்சு ரசிச்ச உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.

      Delete
  12. நன்றாக இருந்தது .ஒரே மூச்சில் படித்தேன் .

    ReplyDelete
    Replies
    1. ரசித்துப் படித்துக் கருத்திட்ட ரசிகைக்கு என் இதய நன்றி.

      Delete
  13. படித்ததில்லை சார் ! உங்கள் பதிவின் மூலம் தான் படித்தேன். ! நன்றி ! (TM 9)

    ReplyDelete
    Replies
    1. படித்து ரசித்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

      Delete
  14. அட! நல்ல விறுவிறுப்பு! இப்பதான் முதல்முதலா படிச்சேன்.

    பகிர்வுக்கு நன்றி. இன்னும் பகிர்ந்து கொள்ளுங்க. குமுதத்தை விட்டே ஆச்சு 25 வருசம்.

    ReplyDelete
    Replies
    1. நான்கூட சமீப கால குமுதம் படிப்பதில்லை டீச்சர் இதை ரசித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  15. Replies
    1. க்ரைம் நாவலை ரசித்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.

      Delete
  16. This comment has been removed by the author.

    ReplyDelete
  17. நன்றி கணேஷ்ஜி

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்குப் பிடித்திருந்ததில் எனக்கு மகிழ்ச்சி. என் நண்பர்கள் வட்டத்தில் என் பெயர் உங்களுக்கெப்படித் தெரிந்தது? மிக்க நன்றி.

      Delete
    2. என்ன? நான் உங்கள் நண்பர்கள் வட்டத்தில் இல்லையா??
      :-((

      Delete
    3. அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை கண்பத். நேரில் சந்தித்திராத தோழமை என்பதால் அப்படிச் சொன்னேன். நீங்கள் இல்லாமலா?

      Delete
  18. மறுபடி நினைவுக்கு கொண்டு வந்த உங்களுக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. இப்போதும் ரசித்துப் படித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  19. நல்லத்ரிலிங்.

    ReplyDelete
    Replies
    1. க்ரைம்கதை மன்னரின் விறுவிறுப்பை ரசித்த தங்கைக்கு என் உளம் கனிந்த நன்றி.

      Delete
  20. கதை சீரணமாக இன்னும் சில மணி அவகாசம் தேவைப்படும் எனக்கு. அத்தனை விறுவிறுப்பும் அசாத்திய நடையும். பகிர்வுக்கு நன்றி கணேஷ்.

    ReplyDelete
    Replies
    1. ரசித்துப் படித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி தோழி.

      Delete
  21. அருமை அங்கிள்.. நல்ல க்ரைம் கதை..

    இதை தந்தை உங்களுக்கு நன்றி.

    ராஜேஸ் குமாருக்கு வாழ்த்துக்கள்..

    ReplyDelete
    Replies
    1. ரசித்துப் படித்த உனக்கு என் மனமார்ந்த நன்றி எஸ்தர்.

      Delete
  22. தங்கள் எழுத்தே எனக்கும் ராஜேஸ் குமாரை அறிமுகம் செய்தது.

    சமாதிக்கு மத்தியிலிருந்து அவன் எழுந்தான். ஜீ்ப்பிலிருந்து இறங்கி நடக்கிற ஜெயில் சூப்பிரண்டெண்டையும், ஜெயிலரையும் பார்த்தான்.
    எழுத்தாலே பயப்பட வைக்கிறார் . அருமை.

    ReplyDelete
    Replies
    1. பயந்தாலும் படித்து ரசித்த தென்றலுக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  23. விறுவிறுப்பான கதை.அண்மையில் இப்படிப் படித்ததில்லை.

    ReplyDelete
    Replies
    1. ரசித்துப் படித்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி தோழி.

      Delete
  24. A good one from Rajesh Kumar! Thank you for publishing it here. - R. J.

    ReplyDelete
  25. 20 - 20 mathiri small story but intresting story

    ReplyDelete
  26. அருமை, திகில், பரபரப்பு இதுதான் ரா.குமார்

    ReplyDelete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube