சரிதாவின் அண்ணன் சாரதி இருக்கிறாரே... அவரிடம் பேசும்போது எப்போதுமே நான் மிக ஜாக்கிரதையாகத்தான் பேசுவேன். பேச்சில் திறமைசாலியென்று (தவறாக) எண்ணிவிட வேண்டாம். சதா வாயி்ல் வெற்றிலையை திணித்துக் கொண்டு மாடு மெல்லுவதைப் போல அசை போட்டுக் கொண்டிருப்பார். அருகில் நின்று பேசினால் ‘மழை’ச் சாரலில் என் வெள்ளைச் சட்டை நனைந்து செம்பழுப்பு சட்டையாகிவிடும் அபாயம் உண்டு. ‘இஷ்ட மித்ர பந்துக்களுடன்’ வரும்படி கல்யாண அழைப்பிதழ்களில் சொல்வது போல, ‘குடும்பத்தோட வாங்க’ என்று சரிதா அடிக்கடி லெட்டர் போடுவாள் (இரண்டும் ஒன்றுதான் என்பது வேறு விஷயம்). இவரும் தங்கை சொல் தட்டாத தமையனாக குடும்பத்தோடு ‘டேரா’ போட வந்து விடுவார்.
‘‘மாப்ளே... இந்தாங்க...’’ என்று ஒரு லிஸ்ட்டை நீட்டினார் என்னிடம். ‘‘என்ன, மளிகை சாமான் லிஸ்ட் போலருக்கே. இங்கருந்தே வாங்கிட்டுப் போகப் போறீங்களா ஊருக்கு?’’ என்றபடி வாங்கிப் படித்துப் பார்த்தேன். ‘‘விஜிபி கோல்டன் பீச், மகாபலிபுரம், திருவேற்காடு, மாங்காடு, மேல்மருவத்தூர், எக்ஸிபிஷன், சத்யம் தியேட்டர், முருகன் இட்லிக் கடை’’ என்று இன்னும் நிறைய வரிசையாக எழுதி வைத்திருந்தார்.
‘‘என்ன சாரதி... இங்கல்லாம் வீடு வாங்கப் போறீங்களா? சொல்லவே இல்லயே...’’ என்றேன்.
‘‘மாப்ளைக்கு எப்பவும் குறும்புதான்...’’ என்று அருகில் வந்து தோளில் தட்டி, வாய்விட்டுச் சிரித்தார். போச்...! சட்டை போச்..!
‘‘இந்த இடங்களையெல்லாம் சுத்திப் பாக்கணும்னு குறிச்சு வெச்சுக்கிட்டேன் மாப்ளே. உங்க கார்ல நீங்கதான் கூட்டிட்டுப் போறீங்க...’’ என்றார். ‘‘ஆமாங்க... எல்லாரும் குடும்பத்தோட வெளிய போய் நாளாச்சு. ப்ளான் பண்ணுங்க, போகலாம்’’ என்றாள் என் சகதர்மிணியும்.
அவளை சற்றுத் தள்ளி அழைத்துச் சென்று, ‘‘அடியே... செகண்ட் ஹேண்ட்ல வாங்கின கார்டி நம்முது. உன் வெயிட்டையே தாங்காம அடிக்கடி முனகிட்டு மக்கர் பண்ணும். உங்கண்ணன் வீட்டு டிக்கெட் ஆறையும் ஏத்தினா, கார் தாங்காதுடி’’ என்றேன். ‘‘பேசாம இருஙக. அதெல்லாம் ஒண்ணும் ஆகாது. எங்க பக்கத்து மனுஷங்கன்னா ஆயிரம் யோசிப்பீங்க. இதுவே உங்கம்மா, தங்கச்சில்லாம் வந்தப்ப...’’ என்று ஆரம்பித்து தன் வீட்டோ பவரை அவள் வெளிப்படுத்த, நான் (வழக்கம் போல்) அடங்கிப் போனேன்.
முதலில் எக்ஸிபிஷன் செல்லலாம் என்று (அவர்கள்) அனைவரும் தீ்ர்மானிக்க. வெற்றிலை மென்று துப்ப வசதியாக சாரதி ஜன்னலோரத்திலும் அவன் மனைவி அழகுசுந்தரி என்கிற அழகி (பெயரில் மட்டும்தாங்க) இந்தப் பக்க ஜன்னலோரத்திலும் அமர, நான்கு குழந்தைளில் இரண்டை மடியிலும் இரண்டை அருகிலும் அமர வைத்துக் கொள்ள, முன்பக்கம் சரிதா அமர, முக்கி முனகி புறப்பட்டது கார்.
‘‘மாப்ளே... முதல்ல நங்கநல்லூர் போங்க... ’’ என்றார் சாரதி. ‘‘எக்ஸிபிஷன் தீவுத்திடல்ல தானே... நேர் எதிரால்ல போகச் சொல்றீங்க? அங்க எதுக்கு போகணும்?’’ என்றபடி புரியாமல் அவரை ஏறிட்டேன் நான்.
‘‘அங்க எங்க சி்த்தப்பா வீடு இருக்கில்ல... அவரையும் கூட்டிட்டுப் போறதாப் பேசியிருக்கோம்’’ என்றார்.
இன்னும் ஒரு டிக்கெட்டா...? அப்போதே தலை சுற்றியது எனக்கு.
அந்தக் கார் பயணத்தை விவரிப்பது ரொம்பவே கஷ்டமான விஷயம். அழகிக்கு பயணங்கள் ஒத்துக் கொள்ளாது என்பதால் கையில் எலுமிச்சைகள் நிறைய வைத்திருந்தும், அதன் பாச்சா பலிக்காமல் மசக்கைக்காரி மாதிரி கிலோமீட்டருக்கு ஒரு முறை ‘உவ்வே’ பண்ணிக் கொண்டிருந்தாள். அந்த சித்தப்பா இருக்கிறாரே... பக்தி மான், பக்திப் புலி எல்லாம் இல்லீங்க.. பக்தி டைனோசாராக் இருந்தார். போகிற வழியில் ஏதாவது ரோட்டோரக் கோயில் ஏதாவது கண்ணில் பட்டாலும் போயிற்று...! காரை நிறுத்தச் சொல்லி இறங்கிப் போய் விழுந்து கும்பிட்டு விட்டு வந்துதான் காரை நகர்த்த விடுவார். ‘‘கார்ல போறதுல என்ன சவுரியம் பாருங்க... இல்லன்னா இப்படி நிம்மதியா சாமி கும்பிட முடியுமா மாப்ளே?’’ என்று சிரித்தார்.
இந்தக் குழப்படிகளின் விளைவு... கல்யாண ஊர்வலக் கார் போல மெதுவாகப் போகும்படி ஆயிற்று. பற்றாக்குறைக்கு காரில் பாட்டைப் போடச் சொன்ன அந்த நான்கு வாண்டு(?)களும் ஆடுகிறேன் பேர்வழி என்கிற பெயரில் காருக்குள்ளேயே குதிக்கத் துவங்க, ஒரு புதுவிதமான நாட்டியம் போல, கள் குடித்த குரங்கு போல கார் குலுங்கிய ஆடியபடியேதான் சென்றது.
எக்ஸிபிஷன் கிரவுண்டின் வாசலில் நிறுத்திவிட்டு இறங்கியதும் பார்த்தால்... சத்தியமாக என் கார் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தது.
‘‘இங்க பாரு சரி... நீங்க படுத்தின பாட்டுல பொறுக்க முடியாம நம்ம காரே கண்ணீர் விட்டு அழுவுது பாரு...’’ என்றேன்.
‘‘ஹய்யோ... ஹய்யோ... பெட்ரோல் டாங்க்ல ஏதோ லீக் போலருக்கு. பெட்ரோல் ஒழுகிட்டிருக்குங்க. ஸ்மெல்கூடவா தெரியலை?’’ என்று தலையில் அடித்துக் கொண்டாள் சரிதா. ‘‘போய் முதல்ல அதை சரி பண்ணிட்டு வாங்க. நாங்க எக்ஸிபிஷன்ல சுத்திட்டிருக்கோம். வந்து ஜாயின் பண்ணிக்குங்க...’’ என்று விட்டு அந்தக் கும்பலுடன் உள்ளே போய் விட்டாள்.
ஒரு மணி நேரம் கழித்து, நான் .உள்ளே அவர்கள் இருக்கும் இடத்தைக் கேட்டுப் போனபோது... ஒருவருக்கொருவர் திட்டிக் கொண்டிருந்தார்கள். ‘‘நீங்க பொறுப்பா பாத்துட்டிருந்தீங்களேன்னுதான் நான் கவனிக்கலை. வரவர உங்களுக்கு மறதி ரொம்ப ஜாஸ்தியாய்டுச்சு’’ என்று அழகி சீற, ‘‘அதென்னமோ வாஸ்தவம்தான். ஒரு நாள் ஆபீஸ்ல நீயின்னு நினைச்சு எங்க ரிசப்ஷனிஸ்ட் கிட்ட...’’ என்று அவர் நிறுத்த, ‘‘என்ன.... என்ன பண்ணித் தொலைச்சீங்க?’’ என்று அவள் அலற, சாரதி கூலாக, ‘‘நீயின்னு நினைச்சு... இன்னிக்கு மார்க்கெட் போறச்சே உனக்கு என்னல்லாம் காய்கறி வேணும்னு கேட்டு்த் தொலைச்சிட்டேன்’’ என்க, ‘ஙே’ என்று விழி்த்தாள் அவள்.
‘‘ஐயோ அண்ணா... முதல்ல உன் பையனைத் தேடற வழியப் பாப்போம். உங்க சண்டையை அப்பறம் போடலாம்...’’ என்று சரிதா சீறினாள். அப்போதுதான் கவனித்தேன்- சித்தப்பா மேய்த்துக் கொண்டிருந்தது அவர்களின் முதல் மூன்றைத்தான், கடைக்குட்டியைக் காணோம் என்பதை. முதலில் அவர்கள் கவனிக்கவில்லை. அரை மணி நேரம் ஸ்டால் ஸ்டாலாகச் சுற்றிவிட்டு கண்ணில் பட்டதையெல்லாம் வாங்கித் தள்ளியபடி வந்தவர்கள் அப்புறம்தான் கவனித்திருக்கிறார்கள் ஒரு டிக்கெட் குறைவதை. உணர்ந்ததும் தேடிப் பார்த்திருக்கிறார்கள். கிடைத்த பாடில்லை.
‘‘அடப்பாவிகளா! குழந்தையக் காணோம்னா முதல்ல அனவுன்ஸ்மெண்ட் ரூமுக்குப் போய் தகவல் சொல்லணும்னு கூடவா உங்க யாருக்கும் தோணலை? இங்க நின்னு சண்டை பிடி்ச்சுட்டிருக்கீங்களே...’’ என்று திட்டினேன் நான்.
அதற்குள் ‘மதுரப் பொண்ணு’ என்று பாடிக் கொண்டிருந்த ஸ்பீக்கர்கள், பாட்டை நிறுத்திவிட்டு அலறின இப்படி: ‘‘போதுண்டா சாமிங்கற அஞ்சு வயசுப் பையன் இங்க இருக்கான். அவனோட பெற்றோர் எங்கிருந்தாலும் வரவும்’’ என்று அலறியது. வரிசையாக மூன்று ஆண் குழந்தைகள் பிறந்ததால் சென்டிமென்டாக சாரதியின் அப்பா நாலாவது குழந்தைக்கு வைத்த பெயர் ‘போதுண்டா சாமி’ என்பது.
அரக்கப் பறக்க அனவுன்ஸ்மெண்ட் ஸ்டாலை நாங்கள் அடைந்தபோது... ‘போதுண்டா சாமி’ இரண்டு கையிலும் இரண்டு கோன் ஐஸ்க்ரீம்களை சப்பிக் கொண்டு உட்கார்ந்திருக்க, பக்கத்தில் ‘ஙே’ என்று விழித்தபடி அமர்ந்திருந்தார் ஒரு போலீஸ் கான்ஸ்டபிள். என்னைப் பார்த்ததும், ‘‘நாலு கேக், மூணு சோளத் தட்டை, ரெண்டு ஐஸ்க்ரீம்’’ என்றார்.
‘‘பையனைப் பாத்துக்கிட்டதுக்கு இதெல்லாம் வேணுமா உங்களுக்கு?’’
‘‘நாசமாப் போச்சு. இதெல்லாம் உங்க வீட்டுப் பையன் அரை மணி நேரத்தல தின்னு தீர்த்தது ஸார். திங்கறதை நிப்பாட்டினா ஸைரன் மாதிரில்ல அலர்றான்னு வாங்கித்தர வேண்டியதாப் போச்சு. நூத்தம்பது ரூபா ஆச்சு ஸார்... நம்மையும் கவனிச்சுக்கங்க...’’ என்று தலையைச் சொறிந்தார். ‘கவனித்து’ விட்டு கிளம்ப ஆயத்தமான நேரத்தில் வாயை வைத்துக் கொண்டு சும்மாயிராமல், ‘‘எப்படித்தான் இவனை வீட்ல சமாளிக்கறீங்களோ... இது மாதிரி ஒரு பிள்ளை போதுண்டா சாமி’’ என்று அவர் புலம்ப, ‘‘அங்க்கிள் கூப்பிடறார்’’ என்று அவர் மீது பாய்ந்தது அந்த ‘போதுண்டா சாமி’. ‘‘இன்னொரு ஐஸ்க்ரீம் வாங்கித் தாங்க அங்க்கிள்’’ என்று அது அவர் தாடையைப் பிடிக்க, அவர் தலைசுற்றி மயக்கமாக விழுந்து வைத்தார்.
அதன்பின்னரும் அரைமணி நேரம் எக்ஸிபிஷனை சுற்றியதும் நான் சொன்னேன். ‘‘சரி, புறப்படலாமா?’’
‘‘இருங்க... அந்த ஸ்டால்ல ஏதோ நிறையக் கூட்டமா இருக்கு. என்னமோ இன்ட்ரஸ்டிங்கா இருக்கும் போலருக்கு... பாத்துடலாம்...’’
கையில் நிரம்பி வழிந்த அட்டைப் பெட்டிகள் கண்ணை மறைக்க, எரிச்சலுடன் (கண்ணீருடன்?) சொன்னேன். ‘‘அடியேய்... அங்க என்ன வேணா இன்ட்ரஸ்டிங்கா இருக்கலாம். ஆனா உனக்கு ஒண்ணு, உங்கண்ணன் வீட்டுக்கு ஒண்ணுன்னு நீ டபுள் டபுளா திங்ஸ் வாங்கிக் குவிச்சதுல என் பர்ஸ் காலிடி. இங்க இன்ட்ரஸ்ட் இருக்காது.’’
ஒரு வழியாக வீட்டுக்கு வந்து சேர்ந்துவிட்டோம் என்று நிம்மதிப் பெருமூச்சு விட முடியவில்லை. சரிதா கோபமாய் இருக்கிறாள். ‘‘ஏங்க... கொஞ்சமாவது மேனர்ஸ் வேண்டாம் உங்களுக்கு? கார் நின்னு போச்சேன்னு நட்டநடு மத்தியான வெயில்ல எங்கண்ணனும். அண்ணியும், நானும் இறங்கித் தள்ளினா... அந்த நேரத்துல பாட்டென்ன வேண்டிக் கிடக்கு உங்களுக்கு?’’
‘‘இல்ல... தள்றதுக்கு உங்களுக்கு ஒரு உற்சாகமா இருக்கட்டுமேன்னு தான்மா...’’
‘‘நல்லாப் பாடினீங்க... ‘ஆகட்டுண்டா தம்பி ராஜா, நடராஜா’ன்னு நீங்க பாடி, நாங்க தள்ளின லட்சணத்துக்கு பக்கத்துல பைக் ஓட்டிட்டு வந்த ஒருத்தன் வண்டியை நிறுத்தி, ‘பொருத்தமாத்தான் பாடறீங்க சார்’ன்னுட்டு என்னைப் பார்த்து சிரிச்சுட்டுப் போறான். யானையா நானு? ரோட்ல நாலு பேர் என்னைப் பாத்து சிரிச்சுட்டுப் போற மாதிரில்ல பண்ணிட்டிங்க..! இன்னும் ரெண்டு நாளைக்கு உங்களுக்கு சாப்பாடு கிடையாது. இந்த ஓட்டைக் காரை முதல்ல விக்கற வழியப் பாருங்க... வேற ஒண்ணு இன்ஸ்ட்டால்மெண்ட்ல போட்டு புதுசா வாங்கிரலாம்’’
மரியாதையாய் (திருதிரு) விழித்தேன். ‘‘அடியேய்... வயசாயிடுச்சுன்னா நம்ம தாத்தா பாட்டிக்கு கூடத்தான் கொஞ்சம் முடியாமப் போகும். அதுககாக வீட்டை விட்டு போகச் சொல்லிடுவியா? ரொம்ப ராசியான வண்டிடி’’ என்றேன்.
‘‘அதெல்லாம் ஒண்ணும் பேசாதீங்க. ஒழுங்கா மரியாதையா அதை யார்கிட்டயாவது தள்ளிட்டு வாங்க. அதுவரைக்கும் என் பக்கத்துலயே வராதீங்க’’ என்று கோபமாகக் கத்திவிட்டு உள்ளே போய் விட்டாள்.
ரொம்ப நல்ல மாடல் அம்பாஸடர் ஸார் அது..ஹாரனை அழுத்தினால் ஏரியாவே திரும்பிப் பார்க்கும்படி அலறும் (சிலசமயம் நிறுத்துவதுதான் கஷ்டம்). பிரேக் பிடித்தால் பத்தே பத்தடி ஓடிவிட்டு கரெக்டாக நின்று விடும். ரஜினி ஸார் டாக்ஸியுடன் பேசுவாரே... அதுமாதிரி உங்களைப் புரிஞ்சுக்கிட்டு அனுசரிச்சு நடந்துக்கும் ஸார்! இப்படிப்பட்ட நல்ல கார். உங்கள்ல யாருக்காவது வேணும்னா உடனே ஒரு போன் அடிங்க ஸார்! ரேட்டுல்லாம் முன்னபின்ன அட்ஜஸ்ட் பண்ணி போட்டு்க்கலாம்...! உடனே வித்தாகணும் ஸார்..! குளிர்காலம் வேற ஆரம்பிச்சுடுச்சு பாருங்க...! ஹி... ஹி.. ஹி...!

|
|
Tweet | ||
ஆஹா மச்சானை பத்தி நல்லா சொல்லிருக்கீங்க சார்
ReplyDelete//அடிக்கடி லெட்டர் போடுவாள் // இந்த காலத்தில் போன் போதுமே சார்
நல்லா காமெடியா இருக்கு
ஆமாம் இது புனைவோ?
கணேஷ் அண்ணவோட தலையெழுத்து புனைவுன்னுதான் சொல்லியாகனும். அப்புறம், இது தெரிஞ்சா, யாரு அண்ணிக்கிட்ட பூரிக்கட்டையால அடி வாங்குறது?!
Deleteநான் சொல்ல வேண்டிய பதிலை கனகச்சிதமா சொன்லி தங்கையுடையான் பதிவுக்கஞ்சான்னு நிரூபிச்சுட்டே. தாங்க்ஸ் தங்கச்சி. ரசித்துப் படித்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி மோகன்.
Deleteசெமயா இருக்கு.. :-))
ReplyDeleteரசித்துப் படித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.
Delete"போதுண்டா சாமி" ஹா ஹா.. நல்ல பெயர்...
ReplyDeleteரசித்தேன்.. நன்றி சார் ...!
மேய்ச்சல் மைதானத்திக்கு போகிறேன்...
த.ம. 2)
நகைச்சுவையை ரசித்து மைதான்த்திலும் என்னைத் தொடரும் உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.
Deleteஹைய்யோ கணேஷ்!!!!
ReplyDeleteயூ மேட் மை டே:-)))))))))))))))
Oh, I'm honoured by your comment. My Heartful Thanks to you!
Deleteஹா ஹா ஹா வாத்தியரே படிசிகிட்டே இருக்கலாம் போல இருக்கு ... அவ்ளோ சூப்பரா இருக்கு .... உங்க ஹாஸ்ய நடை எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு ... சரிதா கூட அடிகடி எங்கயாவது போய்டுவாங்க எங்களுக்கும் பொழுது போக வேண்டாமா ... வேனும்ன அந்த போதுண்டா சாமியவும் கூப்பிட்டுகோங்க ... வோட்டு போட்டாச்சு
ReplyDeleteஒரு புதுவிதமான நாட்டியம் போல, கள் குடித்த குரங்கு போல கார் குலுங்கிய ஆடியபடியேதான் சென்றது.
Deleteஆடிமாத கார் நடனம் !
இந்த நகைச்சுவையை ரசித்துப் படித்த சீனுவுக்கும் இராஜராஜேஸ்வரிக்கும் என் இதயம் நிறை நன்றி.
Delete'தன் வீட்டோ' பவர் என்ற வார்த்தையில் சிலேடை தெரிகிறதே!
ReplyDeleteநகைச்சுவையில் கலக்கிட்டீங்க பாஸ்...பல வரிகள் ரசிக்க வைத்தன.
ஆமாம்... வீட்டம்மமா காட்டும் பவர் ‘வீட்டோ’ பவர்தானே! ரசித்துப் படித்த உங்களுக்கு என் இதய நன்றி.
Deleteவழக்கம்போல் வரிக்கு வரி நகைச்சுவை தான். ஆரம்பம் முதல் கடைசி வரி வரை இரசித்து சிரித்தேன். வாழ்த்துக்கள்.
ReplyDeleteரசித்துச் சிரித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.
Deleteஎப்படியண்ணா உண்மையெல்லாம் இப்படி புட்டு புட்டு வைக்குறீங்க. ரொம்ப மனதைரியம்ண்ணா உங்களுக்கு.
ReplyDeleteஎன் தைரியத்தோட பின்விளைவுகள் எனக்கு மட்டும் தானே தெரியும். ஹி... ஹி... நன்றிம்மா...
DeleteVery very interesting to read. Enjoyed a lot. What is your next destination? MahaBALIpuram?
ReplyDeleteஅட, நீங்கள் சொன்னதும்தான் சுற்றுலா விஷயத்தை வைத்தே நான்கைந்து பதிவுகள் தேத்தலாமோன்னு தோணுது. மிக்க நன்றி நண்பா.
Deleteவீட்டின் கணவன் நிலையில் இருந்து கார் வரை அழகாய் நகர்த்திய நகைச்சுவைக்கு பஞ்சம் இல்லாத கதை!ஹீ
ReplyDeleteரசித்துச் சிரித்த தம்பி நேசனுக்கு என் மனம் நிறைந்த நன்றி.
Deleteவழக்கம் போல கலாட்டா பதிவுதான்.சரிதா என்றாலே நகைச்சுவைக்கு உத்திரவாதம் உண்டு.நல்லாயிருக்கே போதுண்டா சாமிங்கற் பேரு...
ReplyDeleteநகைச்சுவையை ரசித்துப் படித்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி கவிஞரே... ராஜேந்திரகுமார் தன் கதையொன்றில் ஒரு பெண்ணுக்கு போதும்மா என்ற பெயர் வைத்து. இனி பெண் குழந்தை பிறக்காமல் இருப்பதற்காக வைக்கப்பட்ட பெயர் என்று எழுதியிருப்பார். அதை சற்றே மாற்றி பயன்படுத்திக் கொண்டேன். நன்றி.
Deleteஅமர்க்களம்! கடைசி வரியை, முந்தய பாராவின் கடைசி வரியோடு படிக்க யாராவது மறந்து விடப்போகிறார்கள்!ஸ்மார்ட்!
ReplyDeleteஇஷ்ட மித்ர பந்துக்கள் / குடும்பத்துடன் - இரண்டும் ஒன்றில்லையே! முதலாவதில் நண்பர்களும் உண்டு. சாரதி மட்டும் அவர் நண்பர்கள், அவர்கள் குடும்பம் எல்லோருடனும் வந்திருந்தால், நீங்கள் பஸ்ஸில் போயிருப்பீர்கள், கார் தப்பித்திருக்கும்!
-ஜெ.
ஆமாம்... நீங்கள் சொன்னபின்தான் அந்த வாக்கியத்தில் கருத்துப் பிழை இருப்பது தெரிகிறது. கவனித்துச் சொன்னதற்கு நன்றி. இனி உஷாவா... ஸாரி. உஷாரா இருந்துப்போம்ல...
Deleteகாமெடி அனுபவம் அருமை! நன்றி!
ReplyDeleteஇன்று என் தளத்தில் சகல சௌபாக்கியம் தரும் வரலஷ்மி விரதம்!
http:thalirssb.blogspot.in
நகைச்சுவையை ரசித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி சுரேஷ்.
Deleteமிகவும் சிரிக்க வைத்த நகைச்சுவை பதிவு கடுகு அவர்களின் சிஷ்யன் என்பதில் சிறிதுகூட சந்தேகம் இல்லை. பாராட்டுகளும் வாழ்த்துக்களும்
ReplyDeleteஉங்களின் பாராட்டுக்கள் + வாழ்த்துக்கள் எனக்குத தெம்பூட்டுபவை. உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி நண்பா.
Deleteநகைச்சுவை கதை எழுதுவது சாதாரண விஷயம் இல்லை.அற்புதமாக எழுதி இருக்கிறீர்கள்.இன்னொரூ பாக்கியம் ராமசாமி ராமசாமி கிடைத்துவிட்டார்
ReplyDeleteஹய்யோ... நகைச்சுவையில் மேதை அவர். அவருடன் என்னை ஒப்பிடுவதா...? இல்லை முரளிதரன். நான் அவ்வளவுக்கு வொர்த் இல்லீங்க. ரசித்துப் படித்து என்னை உயர்வாக மதித்து கருத்திட்ட உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.
Deleteஅருமையான நகைச்சுவைப் பதிவு
ReplyDeleteரசித்துப் படித்துச் சிரித்தோம்
அனைவர் வீட்டிலும் நடப்பதுதான் என்பதால்
நேடிவிடி இருப்பதால் சிரிப்பு ச் சத்தம்
கொஞ்சம் கூடுதலாகவே இருந்தது
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
வாய்விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும் என்பார்களே... நீங்கள் ரசித்துச் சிரித்தீர்கள் என்பதில் மிகமிக சந்தோஷம் எனக்கு. தங்களுக்கு என் இதய நன்றி.
Deletetha.ma 11
ReplyDeleteVery very similar to pattukkottai prabakar's story.
ReplyDeleteEspecially the last line is the same.
ஆமாம் ஸ்ரீராம். ‘மங்கம்மா சபதம்’ என்பது நீங்கள் குறிப்பிடும் கதையின் பெயர். முத்தாய்ப்பாக நிறைவு செய்ய என் நண்பரின் கதையிலிருந்து அந்த கடைசிப் பாரா வரிகளை எடுத்துக் கொண்டேன். உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.
Deleteமிக அருமையான நகைச்சுவைப் பதிவு.இரசித்து சிரித்தேன்.நகைச்சுவையில் கலக்கிட்டீங்க எப்பவும் போல...பல இடங்கள் ரசிக்க வைத்தன.
ReplyDelete12
இது என்ன எண் என்று பார்க்கிறீர்களா..ஓட்டு எண்..ஹாஹாஹாஹ்..
நகைச்சுவையை ரசித்துச் சிரித்த என் ரசிகைக்கு என் இதயம் நிறை நன்றிம்மா.
Deleteரசித்து சிரித்தேன் (TM 13)
ReplyDeleteரசித்துச் சிரித்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி நண்பரே.
Deleteஎப்பிடியாச்சும் சிரிக்க வைக்க முயற்சி செய்றீங்க ஃப்ரெண்ட்....சந்தோஷம் !
ReplyDeleteமுயற்சிதானா ஃப்ரெண்ட்? நீங்க சிரிக்கலையா..? அடுத்த கதை எழுதும் போது இன்னும் நிறைய ட்ரை பண்றேன். கொஞ்ச நேரமாவது நீங்க கவலை இல்லாம சிரிச்சு மகிழ்ந்தா அதுதான் எனக்குப் பரிசு. உக்ஙளுக்கு என் இதய நன்றி.
Deletesuvaraasyam!
ReplyDeleteசுருக்கமாய் சொன்னாலும் மகிழ்வு தருவது சீனியின் கருத்து. உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.
Deleteஆஹா... உறவுகளின் கலாட்டாவும் காரின் கண்ணீர்க்கதையும் அதை நீங்கள் எழுதிய அழகும் மிக அழகு. பல இடங்களில் புன்னகையும் சிரிப்பும் எழவைத்த அழகான ரசனையான கதைக்குப் பாராட்டுகள் கணேஷ்.
ReplyDeleteபுன்னகையும், சிரிப்பும் எழுந்தன என நீங்கள் சொல்வதே எனக்கு விருதுக்கு சமம். உஙகளுக்கு என் இதயம் நிறை நன்றி தோழி.
Deleteஹையோ..சிரித்து சிரித்து வயிறு புண்ணாகியது.உங்கள் எழுத்தில் சரிதா மன்னி வந்தாலே கலக்கல்தான்.உங்களுக்கு வார்த்தை சித்தர் பட்டம் வழங்களாம்.அப்படி அபாரமான வார்த்தை கோவைகள் நயம் பட தாண்டவம் ஆடுகின்றது உங்கள் பதிவில்.
ReplyDeleteஅடடே... எனக்குப் பட்டம் எதுவும் வேணாம் தங்கச்சி. உங்களோட அன்பே போதும். ரசித்துப் படித்து சிரித்து மகிழ்ந்த உங்களுக்கு என்னுடைய உளம் கனிந்த நன்றி.
Deleteநல்ல நகைச்சுவை கலந்த சம்பவம் . சிரிப்புத்தான் நன்றி...
ReplyDeleteவேதா. இலங்காதிலகம்.
நகைச்சுவையை ரசித்துச் சிரித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.
Deleteரசிச்சுப் படிக்க வைத்த கதை...
ReplyDeleteரசித்துப் படித்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி குமார்.
Deleteஇவ்வளவு கிண்டல் பண்ணி எழுதி இருக்கீங்களே. உங்க மனைவி இந்த பதிவைப்படித்து உங்களை எவ்வளவு நாள் பட்டினி போட்டாங்க?
ReplyDeleteஅதான் சொல்லியிருக்கேனே... ரெண்டு நாள் சாப்பாடு. டிபன் எதுவும் கண்ல காட்டலைம்மா... வெளில செலவு பண்ணி அழுதுட்டேன்... ரசிச்சுப் படிச்ச உங்களுக்கு என் இதய்ம் நிறை நன்றி.
Deleteஐயோ, சரிதா அக்கா ரொம்ப பாவம்... பூரீக்கட்டையால விலாசு விலாசுன்னு விலாசி கை வலிச்சு இருக்கும்ம்ம்... அப்பரம் உங்களுக்குப் போட்டியா அவங்க ஒரு ப்லாக் ஆரம்பிச்சு, இடியின் முழக்கம்னு பேரு வச்சு.... பூரிக் கட்டைகளின் வரலாறு அப்டின்ற டாபிக்ல ஒரு போஸ்ட்ட் போட்டு, உங்களோட சேட்டைகளை எல்லாம்... ஹீ..ஹீ..ஹீ.. சிரிச்சு சிரிச்சு.... முடியல சார்! great! காமெடி செம செம செம! அருமை! தொடர்ந்து நல்ல காமெடி போஸ்ட் எழுதுங்க! நன்றி!
ReplyDeleteஅவ்வ்வ்வ்வ்! சரிதாவுக்கு நீங்களே இப்படி ஐடியால்லாம் குடுத்து என்னை இன்னும் வம்புல மாட்டி விட்ருவீங்க போலருக்கே.. விட்றும்மா... மீ பாவம்! ரசிச்சுச் சிரிச்சு தொடர்ந்து காமெடி எழுதச் சொன்ன உஙகளுக்கு என் உளம் கனிந்த நன்றி.
Deleteவரிக்கு வரி ரசித்தேன்... சிரித்தேன்....
ReplyDeleteசரிதா - சிரிக்க வைத்தா[ள்].... :)
Writing with a smile on lips (in office, though!) - very humorous. But, I felt the story is a bit short; with your "nadai", you could have extended it further on the brother-in-law character. I agree that these in-laws (rather, outlaws) could be a menace to society! Btw, it is interesting to read your interview with famous authors.
ReplyDelete