Wednesday, July 4, 2012

நடை வண்டிகள் - 24

Posted by பால கணேஷ் Wednesday, July 04, 2012

கடுகு அவர்களும் நானும் - 2

சுபாவின் வீட்டிற்குச் சென்றிருந்த ஒரு சந்தர்ப்பத்தில் பேசிக் கொண்டிருந்த போது பாலா கேட்டார். ‘‘கடுகு என்கிற எழுத்தாளரை உங்களுக்குத் தெரியுமா?’’ என்று. ‘‘கடுகு என்கிற அகஸ்தியன் என்கிற பி.எஸ்.ரங்கநாதன் எழுதிய கதை, கட்டுரைகளை படிச்சிருக்கேன் ஸார்’’ என்றேன். ‘‘அவர் உங்களைப் பார்க்கணும்னு விரும்பறார்...’’ என்ற பாலா, கடுகு ஸாருக்கு போன் செய்து பேசினார். ‘‘ஸார்! கணேஷ் வந்திருக்கார். உங்களை அறிமுகம் செய்ய வேண்டிய தேவையே இல்ல எனக்கு. உங்க கதைகள் நிறையப் படிச்சிருக்காராம். புனைபெயர், அசல் பெயர் எல்லாம் சொல்றார். இப்ப அங்க வரச் சொல்லட்டுமா?’’ என்று கேட்டார்.

அவர் போனை வைத்ததும் கேட்டேன்- ‘‘ஸார்! அவர் டெல்லில இல்ல இருக்கார்? எப்படிப் போய் பார்க்க?’’ என்று. ‘‘டெல்லியில இருந்து எப்பவோ சென்னைக்கு வந்தாச்சு. பக்கத்துல சாஸ்திரி நகர்லதான் இருக்கார். வழி சொல்றேன்’’ என்று ஒரு பேப்பரில் அட்ர‌ஸை எழுதி, வழியும் பேப்பரில் வரைந்து காட்டினார்.

பாலா ஒரு இடத்துக்கு வழி சொல்கிறார் என்றால் பள்ளிச் சிறுவன்கூட எந்தக் குழப்பமும் இன்றி அந்த இடத்தை அடைந்துவிட முடியும். அவர் விளக்குவதும், எழுதுவதும் அவ்வளவு தெளிவாக இருக்கும். எனவே, எந்தக் குழப்பமும் இன்றி நான் கடுகு ஸாரின் வீட்டைச் சென்றடைந்து காலிங் பெல்லை ஒலிக்க விட்டேன்.

ஓவியர் நடனம் வரைந்த ‘கடுகு’
அவர் வீட்டு்க் கதவில் ‘உயர்வு அற உயர்நலம் உடையவன் எவன்? அவன்’ என்று துவங்கும் பாசுரத்தை ஒட்டி இருந்தார். அதுவே எனக்குப் பிடித்திருந்தது. மணி ஒலித்ததும் ஒல்லியான தேகத்துடன், புன்னகை முகத்துடன் கடுகு ஸார் கதவைத் திறந்து வரவேற்றார் என்னை. ‘‘சுபா நிறைய சொல்லியிருக்காங்க உங்களைப் பத்தி. இப்ப என்ன பண்ணிட்டிருக்கீங்க?’’ என்று கேட்டார்.

நான் ‘கல்யாணமாலை’யில் வேலை பார்ப்பதைச் சொல்லி விட்டு, ‘‘நான் சின்னப் பையனா இருந்தப்பவே உங்க கதைகள் நிறையப் படிச்சிருக்கேன் ஸார். உங்க எழுத்து எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஆனா, எல்லாம் வாரப் பத்திரிகைகள்ல படிச்சதுதான். லைப்ரரி எடிஷனா எதுவும் படிச்சதில்ல. ‘கமலாவும் கத்தரிக்காய் கூட்டும்’னு ஒரே ஒரு புத்தகம் மட்டும் கிடைச்சது. வாங்கி்ப் படிச்சேன்.’’ என்றேன்.

உள்ளே திரும்பி கமலா அம்மாவுக்குக் குரல் கொடுத்தார். ‘‘கமலா... இங்க பாரேன்... இவர் ‘கமலாவும் கத்தரிக்காய் கூட்டும்’ புத்தகத்தை காசு கொடுத்து வாங்கிப் படிச்சிருக்காராம். ஐயோ பாவம்...’’ என்றார் சந்தோஷமாக. ‘‘நந்தினி பப்ளிகேஷன்ஸ்னு போட்டு ஏதோ அட்ரஸ் கொடுத்திருந்தாங்க. வேற எதுவும் உங்களோட புத்தகம் போட்ருக்காங்களான்னு விசாரிச்சு வாங்கலாம்னு இருக்கேன் ஸார்’’ என்றேன்.

‘‘நந்தினி பப்ளிகேஷன்ஸ்லதான் இப்ப நீங்க இருக்கீங்க. நான்தான் பப்ளிஷ் பண்ணிட்டிருக்கேன்.’’ என்று சொல்லி, இன்னும் மூன்று புத்தகங்களை எடுத்துக் காட்டினார். அகஸ்தியன் நாவல்கள், கேரக்டர், மிஸ்டர் பஞ்சு ஆகிய அந்த மூன்று புத்தகங்களில் கேரக்டர் மற்றும் அகஸ்தியன் நாவல்கள் நான் பத்திரிகைகளில் படித்தவை என்றும், மிஸ்டர் பஞ்சு மட்டும் நான் படிக்கத் தவறிய கதை என்றும் அவரிடம் தெரிவித்தேன்.

அந்த மூன்று புத்தகங்களையும் நான் எடுத்துக் கொள்வதாகச் சொல்லி அதற்குரிய தொகையை மனக் கணக்காக கூட்டத் தொடங்கினேன். அவரோ, ‘‘எடுத்துக்கங்க. பணம் எதுவும் தர வேண்டாம்’’ என்று ஒரு கவரில் போட்டுக் கையில் கொடுத்தார். ‘‘மூணு புத்தகத்துக்கும் பணம் கொடுத்து வாங்கலாம்னு நினைச்சோமே... அன்பளிப்பாவே தந்துட்டாரே இந்த அப்பாவி எழுத்தாளர்’’ என்று நான் மனதில் நினைத்தது நமக்குள்ளேயே இருக்கட்டும், கடுகு ஸாருக்குத் தெரிய வேண்டாம்.

‘‘இது தவிர வேற எதுவும் பப்ளிஷ் பண்ணப் போறீங்களா ஸார்?’’ என்று கேட்டேன். ‘‘ஆமா. ஐயோ பாவம் கடுகுன்னு... ஸாரி, ஐயோ பாவம் சுண்டுன்னு ஒரு கதை ப்ரிண்டிங்ல இருக்கு. படிச்சிருக்கீங்களா?’’ என்று கேட்டார். ‘‘படிச்சதில்லையே ஸார்...’’ என்றேன். ‘‘சர்க்கஸ் பேக்ரவுண்ட்ல நான் எழுதினது. புத்தகம் ரெடியானதும் உங்களுக்குத் தர்றேன்’’ என்றார்.

‘‘கடுகுன்னா தினமணி கதிர்ல உங்க கதைகளுக்கு கார்ட்டூனா கூர் மூக்கோட ஓவியங்கள் வருமே... அதான் ஸார் நினைவுக்கு வருது எனக்கு உங்க வீட்டுக் கதவுலகூட அதை ஒட்டியிருக்கீங்க’’ என்றேன். ‘‘அது நடனம்ங்கற ஓவியர் வரைஞ்சது...’’ என்றார். ‘‘நடனம் ஸார் எனக்குப் பழக்கமானவர்தான் ஸார். ‘கல்யாணமாலை’க்கு என்னை சிபாரிசு பண்ணினவரே அவர்தான்...’’ என்றேன் ஆச்சரியமாக. ‘‘அப்படியா... ஸர்ப்ரைஸ்தான். எல்லாரும் சுத்தி ஒரு வட்டத்துக்குள்ளயே வர்றோம்’’ என்றார். இப்படி இன்னும் நிறைய விஷயங்கள் பேசிக் கொண்டிருந்துவிட்டு விடைபெற்றேன்.

-இது எங்களுடைய முதல் சந்திப்பு. இரண்டாவது சந்திப்பில் கடுகு ஸாரைப் பற்றிய வியப்பான விஷயம் ஒன்றை அவர் மூலமாகவே தெரிந்து கொண்டேன். மூன்றாவது சந்திப்பிலோ... சுலபத்தில் யாரும் செய்யாத ஒரு செயலை எனக்காகச் ‌செய்தார் அவர். அந்த சந்திப்புகளைப் பற்றி....

                                                                                       -தொடர்கிறேன்...

இடையிடையே கடுகு அவர்களின் துணுக்குகள் இருந்தால் சொருகி விடுங்கள் என்று கேட்ட நண்பர் மதுமதிக்காக... கடுகு அவர்கள் தினமணி கதிரில் எழுதிய ஒரு துணுக்கு :

==================================================================

ஆக,19, சென்னை பதிவர் சந்திப்புக்கான நிகழ்ச்சி நிரல் :


கவியரங்கத்தில் பங்கு கொள்ள விரும்பும் நண்பர்கள், மதுமதி (தூரிகையின் தூறல்)  அவர்களை 9894124021 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பங்களிப்பை உறுதி செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.வாசிக்கப்படும் கவிதைகள் முப்பது வரிகளுக்கு மிகாமல் இருத்தல் நலம். குலுங்கட்டும் சென்னை 19-08-2012 அன்று பதிவர்களின் உரத்த குரலால்!

==================================================================

மேய்ச்சல் மைதானத்தில் இப்போது - கத்தரித்தவை-6

38 comments:

  1. சுற்றி வந்தால் வட்டம் என்ற மூத்தோர் வார்த்தை
    மிகவும் சரியானது நண்பரே...
    இனிக்கச் செய்த நடைவண்டிப் பயணம்...

    பதிவர் சந்திப்புக்கு வாழ்த்துக்களும்..
    நேரமிருப்பின் நிச்சயம் கலந்துகொள்வேன் நண்பரே...

    ReplyDelete
    Replies
    1. நடைவண்டிப் பயணத்தை ரசித்த உங்களுக்கு என் இதய நன்றி. முடிந்தவரை கலந்து கொள்ள முயலுங்கள் நண்பரே... நான் சந்திக்க விரும்பும் நண்பர்களின் பட்டியலில் உங்களுக்குத் தனியிடம் உண்டு.

      Delete
  2. Your experience with Kadugu sir is really interesting but always end it with a suspense. You might have thought of getting those books at any cost but surprisingly you got at no cost and that too from the author himself. This must have been an unexpected but a thrilling experince for you. Please do not make us to wait for a long. Publish the next article soon.

    ReplyDelete
    Replies
    1. சரி நண்பரே... விரையிலேயே தொடர்ந்து விடுகிறேன். தங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.

      Delete
  3. Replies
    1. ரசித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  4. அது நடனம்ங்கற ஓவியர் வரைஞ்சது...’’ என்றார். ‘‘நடனம் ஸார் எனக்குப் பழக்கமானவர்தான் ஸார். ‘கல்யாணமாலை’க்கு என்னை சிபாரிசு பண்ணினவரே அவர்தான்...’’ என்றேன் ஆச்சரியமாக. ‘‘அப்படியா... ஸர்ப்ரைஸ்தான். எல்லாரும் சுத்தி ஒரு வட்டத்துக்குள்ளயே வர்றோம்’’ என்றார். இப்படி இன்னும் நிறைய விஷயங்கள் பேசிக் கொண்டிருந்துவிட்டு விடைபெற்றேன்.//உங்களுக்கு தெரியாதவர்களே இருக்க முடியாது போலும் ஆச்சரியமாக இருக்கு.

    ReplyDelete
    Replies
    1. வியப்புகள் இன்னும தொடரும் தென்றல். ரசித்துப் படித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.

      Delete
  5. பா. கணேஷ் பாணியில் பால கணேஷ் எழுதுகிறாரே! சஸ்பென்ஸொடு முடித்திருக்கிறாரே!!!!--கடுகு

    ReplyDelete
    Replies
    1. அவரேதான் இவர். இவரேதான் அவர். ஏற்றம் பெற பெயர் மாற்றமாவது உதவட்டும் என்ற சபலம்தான் ஸார்...

      Delete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
  7. கடுகு சாரின் முதல் அறிமுகமே அமர்களமாக உள்ளது.//இரண்டாவது சந்திப்பில் கடுகு ஸாரைப் பற்றிய வியப்பான விஷயம் ஒன்றை அவர் மூலமாகவே தெரிந்து கொண்டேன். மூன்றாவது சந்திப்பிலோ... சுலபத்தில் யாரும் செய்யாத ஒரு செயலை எனக்காகச் ‌செய்தார் அவர். அந்த சந்திப்புகளைப் பற்றி....
    // இப்படி ஒரு சஸ்பென்ஸ் வைத்து முடித்து விட்டீர்களே.இரண்டாவது சந்திப்பைக்காண பெருத்த ஆவலுடன் வெயிட்டிங்.கரெக்ட் ஆக ஆகஸ்ட் 19 ரம்ஜான் அன்று பதிவர் சந்திப்பு வைத்திருக்கின்றீர்கள்..!

    ReplyDelete
    Replies
    1. ஆஹா... அன்றுதான் ரம்ஜான் பெருநாளா... நினைத்தபடி அரங்கம் அன்றுதான் கிடைத்தது. என்ன செய்ய... சஸ்பென்ஸை சீக்கிரமே உடைச்சிடறேன் சிஸ்டர். மிக்க நன்றி.

      Delete
  8. Replies
    1. ரசித்துப் படித்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

      Delete
  9. நல்ல தகவல்கள். கடுகு அவர்களின் துணுக்கையும் இணைத்தமைக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. பதிவை ரசித்துப் பாராட்டிய உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  10. அருமை தொடருங்கள் அங்கிள்.....

    ReplyDelete
    Replies
    1. உற்சாகமூட்டும் கருத்திட்ட எஸ்தருககு உளம் நிறைந்த நன்றி.

      Delete
  11. பல வருடங்களுக்கு முன்பு நடந்த நிகழ்வுகளை ஏதோ நேற்று நடந்து இன்று சொல்வது போல் சூடாகவும் சுவையாகவும் சொல்றீங்க, உங்க நியாபகத் திறனை எண்ணி வியக்கிறேன், உங்கள் நியாபகத்திறனால் எழுத்து மேம்பட்டு உள்ளதா இல்லை உங்கள் எழுத்துத் திறனால் நியாபகம் மேம்பட்டு உள்ளதா என்று பிரித்துக் கூற முடியவில்லை.

    எப்போதும் எழுதப் போகும் அடுத்த பதிவிற்கு மட்டும் தன சஸ்பென்ஸ் வைப்பீர்கள், இதிலோ தொடர்ந்து ரெண்டு பதிவுக்காக காத்திருக்க வைத்து விட்டீர்கள். வாத்தியாரே சூரியன் உதிக்கும் வரை காத்திருந்து தானே ஆக வேண்டும். காத்திருக்கிறேன் உம்மோடு நடை பழக

    ReplyDelete
    Replies
    1. காத்திருந்து தொடர்ந்து என்னுடன் நடைவண்டியில் பயணிக்கும் நண்பனுக்கு என் மனமார்ந்த நன்றி.

      Delete
  12. நல்ல பகிர்வு. கூடவே கடுகு சாரின் துணுக்கினையும் இணைத்தமைக்கு நன்றி. சுவையாகச் செல்லும் நடைவண்டிகள் பயணத்தில் அடுத்த பாகத்திற்கான காத்திருப்புடன்....

    ReplyDelete
    Replies
    1. சுவையாகச் செல்கிறது என்று சொல்லி ஊக்கம் தந்த நண்பருக்கு என் உளம் கனிந்த நன்றி.

      Delete
  13. சுவையாகச் செல்லும் நடைவண்டிகள் பயணத்தில் தொடர்ந்து கொண்டிருக்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. என்னுடன் என்றும் தொடர்ந்து வரும் உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி நண்பா.

      Delete
  14. வந்தேன்! படித்தேன்! சிவைத்தேன்! வழக்கம்போல.

    சா இராமாநுசம்

    ReplyDelete
    Replies
    1. சுவைத்து ரசித்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.

      Delete
  15. கடுகு ஸார் போல பழக இனிமையான எளிமையான ஒருவரைப் பார்ப்பதே கடினம்.
    நானும் ஆர்.ஆர்.ஆரும் உங்களை கூட வைத்துக் கொண்டு ஒரு நாள் கடுகு ஸார் வீட்டில் அரட்டை அடிக்க (உங்க ரெண்டு பேர் பர்மிஷனோடு தான்) ரொம்ப ஆசைப்படுகிறோம்.

    ReplyDelete
    Replies
    1. ஆஹா... இப்படியொரு சந்திப்பு என் பாக்யம் என்றே கருதுகிறேன். எப்போதெனினும் நான் (நாங்கள்) தயார் தான் நண்பரே... தங்களுக்கு என் இதய நன்றி.

      Delete
  16. உங்களுக்குக் கிடைத்திருக்கும் வாய்ப்புகள் அரியவை.எல்லோருக்கும் கிடைக்காது.ரசித்துப் படித்தேன்

    ReplyDelete
    Replies
    1. ரசித்துப் படித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  17. Replies
    1. பகிர்வை ரசித்து வாழ்ததிய நண்பருக்கு என இதய நன்றி.

      Delete
  18. வழக்கம்போல் படு சுவாரஸ்யம்
    அவரை அறிமுகம் செய்தவரை அறிமுகப் படுத்தியது
    அவரைச் சந்தித்த நிகழ்வுகளை விளக்கியது
    அவருடைய அருமையான எழுத்தை சுவைக்கக் கொடுத்தது
    அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்க்க ஒரு லீட் கொடுத்தது
    அனைத்தையும் மிகவும் ரசித்தேன்
    மனம் கவர்ந்த் அருமையான பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. ஆஹா... (எனக்கே தெரியாத) அனைத்து நல்ல அம்சங்களையும் எடுத்துக்கூறி ரசித்து என்னை உற்சாகப்படுத்திய உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.

      Delete
  19. ’கல்கி’யால் எழுத வந்த இந்தக் ‘கடுகு’வுக்கு அவர்மீது பக்தி அதிகம். ஆகவே, தான் கட்டிய வீட்டுக்குக் ‘கல்கி’ என்று பெயர் வைத்தார், மகளுக்கு ‘ஆனந்தி’ என்று பெயர் சூட்டினார், தன் புத்தகங்களைப் பிரசுரிக்கும் நிறுவனத்துக்கு ‘நந்தினி’ என்று பெயர் வைத்தார்.

    அதோடு நிறுத்தவில்லை, இவர் உருவாக்கிய தமிழ் எழுத்துருக்கள் (Fonts) அனைத்துக்கும் கல்கியின் கதாபாத்திரங்களையே பெயராகச் சூட்டினார்: குந்தவி, வந்தியத்தேவன், ராஜராஜன், தாரிணி, கரிகாலன் மற்றும் ‘பொன்னியின் செல்வன்’.
    (ஆதாரம்: ‘கடுகு’ எழுதிய ‘கமலாவும் நானும்’ நூல்)

    http://nchokkan.wordpress.com/2012/06/25/bm003/

    ReplyDelete
  20. நடைவண்டி 23க்குப் பிறகு வாசிக்காததால் இன்று 24 பார்த்தேன். இனி மாலையில் வேலைவிட்டு வந்து வசதிப்படி வாசிப்பேன் .நல்வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube