Monday, July 1, 2013

நோ குழந்தை - வீடு சுத்தம்!

Posted by பால கணேஷ் Monday, July 01, 2013
நோ... நோ... அப்படிப் பாக்காதீங்க. இப்படியொரு (அபத்தமான) கருத்தை நான் சொல்ல மாட்டேங்க. குழந்தைங்க இருக்கணும்.... வீடு கலகலப்பா இருக்கணும். எல்லாப் பொருட்களும் இறைஞ்சு கிடக்கணும். அதை ஒழுங்குபடுத்தணும். இல்லன்னா என்ன சுவாரஸ்யம் லைஃப்ல? இப்படி ஒரு கருத்தைச் சொன்னவர் சர்ச்சைகளுக்குப் பெயர் பெற்ற நம்ம கலகநாயகன்... ஸாரி, உலகநாயகன் கமலஹாசன்தான். பழைய குமுதம் இதழில் ஒரு பக்கக் கட்டுரைகள் பல வாரங்கள் இளைஞர் கமல் எழுதியிருக்கிறார். அதில் ஒரு பக்கம் இங்கே நீங்கள் படிக்க... :ப்போது நான் திருவல்லிக்கேணி இந்து ‌ஹைஸ்கூலில் படித்துக் கொண்டிருந்தேன். ஒரு நாள் பால்கனியில் விளையாடும் போது சறுக்கி விழுந்து அடிபட்டு விட்டது. என்னை வீட்டில் கொண்டு வந்து விட்டு சிகிச்சையளித்தார்கள். என்னோடு படித்துக் கொண்டிருந்த டி.கே.பகவதியின் மகன் மணிவண்ணன் என் புத்தக மூட்டையை டி.கே.எஸ.ஸின் மகன் கலைவாணன் மூலம் வீட்டுக்கு அனுப்பியிருந்தான்.

என் உடம்பு தேறியதும் திரு டி.கே.எஸ்ஸின் வீட்டுக்குப் போனேன்- நன்றி தெரிவிக்க. வீட்டிலேயே அவர் ஷு சாக்ஸ் உடன் வெள்ளை வெளேரென்ற வேஷ்டியுடன் படு சுத்தமாக இருந்தார். அதைவிட அவர் லைப்ரரி கனகச்சிதமாக ஒழுங்காக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. வீடு முழுவதும் கோவிலைப் போல ஒரே ஊதுவத்தி ஸ்மெல். ரொம்ப இனிமையாக இருந்தது.

உடல் சுத்தத்தை விட மன சுத்தம் அந்தக் குடும்பத்தில் அதிகம். அனைவரிடமும் அன்பு, உரிமை, பிரியம் என்பது அந்தக் குடும்பத்தில் இருக்கிறது. இப்போதும் என் மனம் தடுமாறும் நேரங்களில் அண்ணாச்சி ரூமுக்குப் போய், சில நிமிடங்கள் நின்றுவிட்டு மானசீகமாக அவர் ஆசியைப் பெற்று வருவேன்.

சுத்தமான மனிதர் என்று கூறும்போது என் தந்தை திரு.சீனிவாசன் ஞாபகம் வருகிறது. அவருக்கு வயது அறுபத்தேழு. ஐம்பது வருஷமாக ஒரே பெண்டாட்டியுடன் குடும்பம் நடத்துகிறாரே? அத்துடன் வெற்றிலை, பாக்கு, பொடி, சிகரெட், ‘தண்ணி’ எதுவும் கிடையாது அவருக்கு. அதைவிட சுத்தம், பிள்ளைகள் விஷயத்தில் தலையிடாதது. அவர் எப்போதும் காவிக் கலர் கதர் சட்டை வேஷ்டியுடன்தான் இருப்பார். அவரைப் போல இப்போது யாரும் நடக்க முடியாது. சொல்லப் போனால் நான் அவரை இதுவரை இரண்டே தடவை தான் தொட்டுப் பார்த்திருக்கிறேன்!

வீடு சுத்தமாக இருக்கணுமானால் சின்னக் குழந்தைகள் இருக்கக் கூடாது.

மூன்று வயதிலிருந்து எனக்கு ஃபுல் பேண்ட் போட்டுக் கொள்ள ஆசை. வீட்டில் கேட்டால் வாங்கித்தர மாட்டார்கள். ‘‘நீ வளரும் பிள்ளை. முழுக்கால் சட்டை சின்னதாகப் போய்விடும். பெரியவனானதும் தைக்கலாம்’’ என்று சாக்குச் சொல்லி விடுவார்கள்.

இன்று வீட்டில் சூட் போடவே பிடிக்காது. பெரிய பார்ட்டிகள், நிகழ்ச்சிகளுக்கு மட்டும்தான் சூட் போடுவேன். கழுத்தில் டை இறுக்க, வேர்க்க விறுவிறுக்க என்ன சூட் வேண்டிக் கிடக்கிறது என்று சமயத்தில் கோபமாக வரும்.

வீட்டில் எப்போதும் நான் வெறும் டவலுடன்தான் இருப்பேன். அதிலிருக்கும் ஆனந்தம் எதிலும் கிடையாது. எனக்கென்று வீட்டில் வேஷ்டி எதுவும் கிடையாது. லுங்கி உண்டு. என் அப்பா மெட்றால் வரும்போது அவர் வேஷ்டி ஒனறு இரண்டை விட்டுப் போவார். அதைக்கூட லுங்கி மாதிரி இரண்டு பக்கமும் தைத்துத்தான் கட்டிக் கொள்வேன்.

55 comments:

 1. லுங்கி மாதிரி இரண்டு பக்கமும் தைத்துத்தான் கட்டிக் கொள்வேன்.//
  இந்த லுங்கிக்கு உள்ள வசதி சொல்லமுடியாதது.எல்லாத்துக்கும் சௌகர்யம்

  ReplyDelete
  Replies
  1. மிக உண்மை அமெரிக்காவிலும் கைலி கட்டும் தமிழனில் நானும் ஒருவன்

   Delete
  2. இந்த ஒரு விஷயத்துல மட்டும் கமல் சொன்னதை ஆமோதிக்கறேன். நானும் வேஷ்டியை ஓரம் அடிச்சு லுங்கி மாதிரி தான் கட்டறது.. லுங்கியும் கட்டறதுண்டு. மிக்க நன்றி!

   Delete
 2. // ஐம்பது வருஷமாக ஒரே பெண்பாட்டியுடன் குடும்பம் நடத்துகிறாரே? //

  அது சரி...!

  ReplyDelete
  Replies
  1. ஹி... ஹி... கமலோட பார்வை அப்படி! மிக்க நன்றி!

   Delete
 3. எல்லோருக்கும் ஒரே டேஸ்ட் இருபதில்லை

  ReplyDelete
  Replies
  1. ஆம் நண்பா! மிக்க நன்றி!

   Delete
 4. வீடு சுத்தமாக இருக்கணுமானால் சின்னக் குழந்தைகள் இருக்கக் கூடாது.
  >>
  இருக்குறதையெல்லாம் என்ன பண்ணாலாம்?!

  ReplyDelete
  Replies
  1. உங்க குழந்தைகள் நல்ல பொறுப்பான குழந்தைகள்....அதனால நீங்க பண்ணுற மெஸ்ஸப்பை நீங்கதான க்ளின் பண்ணனும்

   Delete
  2. அது கமல் கருத்து. என் கருத்து நேர்மாறானது தாம்மா.

   Delete
 5. //அவரை இதுவரை இரண்டே தடவை தான் தொட்டுப் பார்த்திருக்கிறேன்//
  அப்பவே புள்ளையாண்டானை பத்தி நல்லா புரிந்துக்கொண்ட அப்பா போல, தண்ணி தெளிச்சு விட்டுட்டார்.

  ReplyDelete
  Replies
  1. ரொம்பக் கரீக்ட்டு பிரதர்! மிக்க நன்றி!

   Delete
 6. Replies
  1. ஹா... ஹா... என்ன ஒரு பளிச் கருத்து! மிக்க நன்றி!

   Delete
 7. .. வீட்டில் எப்போதும் நான் வெறும் டவலுடன்தான் இருப்பேன். அதிலிருக்கும் ஆனந்தம் எதிலும் கிடையாது. ..

  பார்த்து சார்.. வழுக்கிடப்போகுது...

  ReplyDelete
  Replies
  1. எதிர்ல யாரும் இல்லாத வரையில வழுக்கினாலும் நோ ப்ராப்ளம். ஹி... ஹி... மிக்க நன்றி!

   Delete
 8. கமலின் சர்ச்சைகள் அள்ள அள்ளக் குறையாதோ?

  ReplyDelete
  Replies
  1. அன்றிலிருந்து இன்று வரை அவர் அப்படித்தான்! மிக்க நன்றி ரூபக்!

   Delete

 9. அப்பாவிலிருந்து மிகவும் வேறுபட்டவர். அப்பா ஏக பத்தினி விரதன். பிள்ளை....? வெளிச்சத்தில் இருக்கிறார்கள் என்னும் ஒரே காரணத்துக்காக இவ்ர்கள் சொல்லி நாம் கேட்டு...... போதுமைய்யா சாமி. !

  ReplyDelete
  Replies
  1. இந்த முரண்பாடுதான் இதை பப்ளிஷ் செய்ய என்னை ஈர்த்தது ஐயா. மிக்க நன்றி!

   Delete
 10. ஐம்பது வருஷமாக ஒரே பெண்பாட்டியுடன் குடும்பம் நடத்துகிறாரே// அது சரி கமலுக்கு இதெல்லாம் சரிவருமா?

  ReplyDelete
  Replies
  1. அதானே... கமல்தான் காதல் (இப்ப இளவரசனா, மன்னனா) கில்லாடியாச்சே! மிக்க நன்றி!

   Delete
 11. முதலில் தலைப்பு மிரட்டியது!

  ReplyDelete
  Replies
  1. பின் கருத்துக்களும் மிரட்டினவா? மிக்க நன்றி ஐயா!

   Delete
 12. பெரியவர்கள் மட்டும் இருக்கும் சில வீடுகளும் சுத்தமில்லாமல் இருக்கலாம்...

  ReplyDelete
  Replies
  1. பெரியவர்களும் குழந்தை மாதிரிதான்

   Delete
  2. வீட்டின் சுத்தத்தை விட அதிலுள்ள மனிதர்களின் மகிழ்வே பிரதானம். இது கமல் அறியவில்லை. மதுரைத்தமிழன் சொன்ன மாதிரி ஒரு குறி்பிட்ட வயதுக்கு மேலே பெரியவர்களும் குழந்தைதானே... வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தோழி!

   Delete
 13. இவர் அப்பவே அப்படித்தானோ? நன்றி!

  ReplyDelete
  Replies
  1. இளமையிலிருந்தே அவரின் கருத்துக்கள் யதார்த்த உலகினின்றும் வித்தியாசமாய் மிரள வைக்கும். இது ஒரு சாம்பிள்! மிக்க நன்றி!

   Delete
 14. எப்போதும் வைத்தது வைத்த மாதிரி சுத்தமாக இருந்தால் அதற்க்கு பெயர் வீடு அல்ல நூதனசாலை

  ReplyDelete
  Replies
  1. இதுவே என் கருத்தும! மிக்க நன்றி நண்பரே!

   Delete
 15. பரபரப்புக்காக எதையாவது சொல்வது கமலின் வழக்கம். அனைத்தும் சுவாரசியம்

  ReplyDelete
  Replies
  1. அவர் சாதாரணமாக கருத்துக்களை(?) கூறினாலே பரபரப்பாகிடும் முரளி. ரசித்த உங்களுக்கு மிக்க நன்றி!

   Delete
 16. 57 வருஷமாக ஒரே புருஷனுடன் வாழும் அம்மாவைப் பற்றி எழுதவில்லை இவர்! ஹூம்ம்ம் இவருக்கு ஒரே மனைவி, ஒரே துணைவியில் நம்பிக்கை இல்லை! வாணியைத் தவிர இவருடன் வாழ்ந்த, வாழும், பழகிய பெண்களும் இப்படித்தான். இவருக்கு உடம்பு அசுத்தம், மனசு அசுத்தம் ஆனாலும் ஆண்டவன் அபார திறமையைக் கொடுத்திருக்கிறான்! அப்பா, அம்மா செய்த புண்ணியம்! - ஜெ.

  ReplyDelete
  Replies
  1. மிக மிக அருமையாக, சரியான கருத்தைச் சொல்லி அசத்திட்டீங்க ஜெ! மிக்க நன்றி!

   Delete
 17. வீடு சுத்தமாக இருக்கணுமானால் சின்னக் குழந்தைகள் இருக்கக் கூடாது.

  நல்ல ஐடியா....
  ஆனால்
  மனசு அழுக்காகிடுமே...!!

  ReplyDelete
  Replies
  1. வாவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் மிக நல்ல கருத்து

   Delete
  2. கவிஞர்களின் பார்வையும், எழுத்தும் எப்போதும் வித்தியாசம்தான். மது்ரைத் தமிழனுடன் சேர்ந்து நானும் கை தட்டுகிறேன் அருணா! மிக்க நன்றி!

   Delete
 18. சாரே ஒரு தகவல் உங்களையும் சீனுவையும் வைத்து கலாய்து ஒரு பதிவு ரெடியாகி கொண்டிருக்கிறது விரைவில் இன்றோ நாளையோ வெளிவரும்

  ReplyDelete
  Replies
  1. சீனு & உங்களை கலாய்த்து ஒரு பதிவு என் வலைத்தளத்தில் நேரம் இருந்தால் வரவும் http://avargal-unmaigal.blogspot.com/2013/07/blog-post.html

   Delete
  2. கலாய்த்தலும், கலாய்க்கப்படுதலும் நமது (பிறப்பு)எழுத்துரிமை! கிளம்பிட்டேன் பாக்க...!

   Delete
 19. அப்பாக்களின் சில குணங்கள் மகன்களிடம் நேர்மாறாய் அமைந்துவிடும் போல!

  ReplyDelete
  Replies
  1. பல இல்லங்களில் அப்படித்தான் அமைந்து விடுகிறது! மிக்க நன்றி ஸ்ரீராம்!

   Delete
 20. சுத்தமான மனிதர் என்று கூறும்போது என் தந்தை திரு.சீனிவாசன் ஞாபகம் வருகிறது. அவருக்கு வயது அறுபத்தேழு. ஐம்பது வருஷமாக ஒரே பெண்டாட்டியுடன் குடும்பம் நடத்துகிறாரே? அத்துடன் வெற்றிலை, பாக்கு, பொடி, சிகரெட், ‘தண்ணி’ எதுவும் கிடையாது அவருக்கு. அதைவிட சுத்தம், பிள்ளைகள் விஷயத்தில் தலையிடாதது. அவர் எப்போதும் காவிக் கலர் கதர் சட்டை வேஷ்டியுடன்தான் இருப்பார். அவரைப் போல இப்போது யாரும் நடக்க முடியாது. சொல்லப் போனால்
  //நான் அவரை இதுவரை இரண்டே தடவை தான் தொட்டுப் பார்த்திருக்கிறேன்!// பாவம் உங்க அப்பா
  இப்படியா கிண்டலடிக்கிறது :)))))

  ReplyDelete
  Replies
  1. அவர் மனப்பாங்கு அப்படி! மிக்கநன்றிங்க!

   Delete
 21. இந்தக் கட்டுரை வந்தக் குமுதத்தை நான் காசு கொடுத்து வாங்கியிருக்கக் கூடாதே என்று ஏங்கிப் போகிறேன்.

  ஜிஎம்பியின் அட்டகாசமான கருத்து.

  ReplyDelete
  Replies
  1. ஜி.எம்.பி.யைத் தொடர்ந்து நண்பர் ‌ஜெ.வும் அசத்தும கருத்து சொல்லிருக்காரு அப்பா ஸார். மிக்க நன்ற!

   Delete
 22. உலக நாயகனின் முத்து முத்தான வார்த்தைகள் படித்து மெய் சிலிர்த்துப் போனேன். பிறவிப் பயன் இதுவே!

  ReplyDelete
  Replies
  1. யாமும் படித்து சிலிர்த்து பின்னரே உங்களிடம் அளித்தோம் அம்மா! ஹி... ஹி... படித்து பிறவிப் பயன்(?) பெற்ற தங்களுக்கு என் மனம் நிறைய நன்றி!

   Delete
 23. தேடிப்பிடித்து எங்களுக்கு இந்த தத்துவ முத்துகளைப் பகிர்ந்த உங்களுக்கு எனது நன்றிகள்.
  நிஜமாகவே கலக சாரி உலக நாயகன் தான்! :)

  ReplyDelete
  Replies
  1. கலக நாயகனை பொறுமையாக வாசித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!

   Delete
 24. ஒவ்வொருவரின் எண்ணங்களும் ஒவ்வொரு வகையில் விசித்திரம். இங்கே இவரது எண்ணங்கள். சுவாரசியப் பகிர்வுக்கு நன்றி கணேஷ்.

  ReplyDelete
  Replies
  1. விசித்திரமான கருத்துக்களைப் படித்து நற் கருத்திட்ட உங்களுக்கு மனம் நிறைய நன்றி!

   Delete
 25. குழந்தைகள் இல்லா வீடு சுத்தமாகத் தானிருக்கும். என்ன ஒரு கருத்து!!

  ReplyDelete
 26. கமல் சர்ச்சையில் சிக்கிக்கொண்டாலும், சிறந்த நடிகர் என்பதில் ஐயம் இல்லை. அவர் கருத்தை அவர் பாணியில் சொல்கிறார். இதில் நாம் விரும்புவதுபோல் அவர் சொல்லவேண்டும் என நினைப்பது சரியல்ல.

  ReplyDelete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
 • Youtube