திருவரங்கத்திலிருந்து புறப்பட்டது அவனது கவிதையுலா
திரைத்தமிழ் தழைக்க அவன் பாடிவந்த முழுநிலா!
சென்னை வந்தவன் பட்டான் பல துயரம்! - அவனை
முன்னிறுத்தியது அவையில் வாத்யாரின் அன்புக்கரம்!
எதிர்ப்பட்டோர் பலம்பாதி கொள்ளும் வாலியெனும்
பெயர்சூடிய அந்நல்லோனின் திருநாமம் ரங்கராஜன்
பழகினோர் பகன்றிடுவார் மாண்பில் அவனோர் தங்கராஜன்!
அவதார புருஷன், பாண்டவர் பூமியெனப் படைத்தான்பல காவியம்
நற்றமிழில் நடனமிடும் அவன்றன் எழுத்து மங்காததோர் ஓவியம்!
ஜாலியான பாடல்களும் புனைந்தவனை உலகம் செய்தது கேலி
கோலமிகு தீந்தமிழ்ப் பாக்களால் வாயடைக்க வைத்தானந்த வாலி!
அவன்றன் கவிதையை அளவிட உலகிலிலை ஓர்அலகு
அம்முதியவனை வாலிபக் கவிஞனெனக் கொண்டாடியது இவ்வுலகு!
தமிழரங்கில் மணிப்பிரவாளமாய் அவன்பாடாத சரணமில்லை
தமிழர்தம் உளம்தனில் எந்நாளும் அவனுக்கு மரணமில்லை!
=====================================================
என்னுடன் இணைந்து இங்கு வாலிபக் கவிஞருக்கு இரங்கல் தெரிவிக்கும் நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றி!
=====================================================
|
|
Tweet | ||
வீட்டை விட்டு வெளியில் வந்தால் நாலும் நடக்கலாம்...!
ReplyDeleteஅந்த நாலும் தெரிஞ்சு நடந்துகிட்டா நல்லா இருக்கலாம்...!
உன்னைக் கேட்டு என்னைக் கேட்டு எதுவும் நடக்குமா...?
அந்த ஒருவன் நடத்தும் நாடகத்தை நிறுத்த முடியமா...?
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்...!
இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்...!
ஆழ்ந்த இரங்கல்கள்...
வாலி எனும் ஜாலிக் கவிஞர் மறைவு திரை உலகுக்கும் ரசிகர்களுக்கும் இழப்புதான்.
ReplyDelete/ தமிழரங்கில் மணிப்பிரவாளமாய் அவன்பாடாத சரணமில்லை
ReplyDeleteதமிழர்தம் உளம்தனில் எந்நாளும் அவனுக்கு மரணமில்லை! /
கவிஞர் வாலிக்கு தங்களின் கவிதாஞ்சலி! நானும் உங்கள் அஞ்சலியில் பங்கு கொள்கிறேன்! அன்னாரது ஆன்மா அமைதி அடையட்டும்!
வாலிக்கு நிகர் வாலி தான்
ReplyDeleteதமிழ் சினிமா ஒரு பொக்கிஷத்தை இழந்து விட்டது
ஒரு கவிதைய அருவியை இழந்துவிட்டது இலக்கிய தேசம்....
ReplyDeleteதீந்தமிழோடு விளையாடிய தேன் தமிழ் கவிஞன்! வாலி! ஆழ்ந்த இரங்கல்கள்! ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்!
ReplyDeleteவாழும் கலைஞன்! வாலியெனும் கவிஞன்!!
ReplyDeleteகவிஞரின் ஆன்ம சாந்திக்காக வேண்டுகிறேன்.
உங்களுடன் ஆழ்ந்த அஞ்சலியில் நானும்.....
அவதார புருஷனுக்கு உங்கள் அஞ்சலி உருக்குகிறது.
ReplyDelete'ஊக்குவிப்போர் இருந்தால்
ReplyDeleteஊக்கு விற்பவன் கூட
தேக்கு விற்பான்'
என்று தனது தமிழால் பலர் உள்ளம் கொள்ளை கொண்ட
வாலிக்கு அஞ்சலிகள்.
ஆன்மா சாந்தி அடைய பிரார்த்தனை!
அந்த கால மக்கள் திலகம் முதல் இக்கால சிம்பு வரை பாட வைத்தவர். இன்று அவர் பற்றி பாட வைத்து விட்டு பறந்து விட்டார், பறந்தாலும், கருத்தாழமிக்க பாட்ல்கள் மூலம் நம்மிடையே வாழ்ந்துக்கிட்டுதான் இருப்பார்.
ReplyDeleteஅன்னார் ஆத்மா சாந்தியடையட்டும்.
ReplyDeleteVetha.Elangathilakam.
RIP வாலி ஸார்
ReplyDeleteகவிஞர் வாலியின் மறைவு வருத்தமாகத்தான் உள்ளது. கண்ணீர் அஞ்சலிகள்.
ReplyDeleteதிரையுலகில் வாலி ஒரு ஜாலிக்கவிஞர் தான்.
அருமையான அஞ்சலி -மிக அழகான படம்
ReplyDeleteகொடுமையான ஆண்டு... எனக்கு பிடித்த சுஜாதா, TMS வரிசையில் இன்று வாலி :(
ReplyDeleteவாலிபக் கவிஞனின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்...
ReplyDeleteவாலிக்கு எனது அஞ்சலி.
ReplyDeleteஇருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்...!
இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்...!
சென்ற ஜூலையில் என்தந்தை இந்த ஜூலையில் வாலி ம்ம் ..மனசே சரி இல்லை...
ReplyDeleteகவிதாஞ்சலி நன்று கணேஷ்
ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்
ReplyDeleteஅன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிராத்திப்போம்.
ReplyDeleteஅவதார புருஷன், பாண்டவர் பூமியெனப் படைத்தான்பல காவியம்
ReplyDeleteநற்றமிழில் நடனமிடும் அவன்றன் எழுத்து மங்காததோர் ஓவியம்!
தமிழர்தம் உளம்தனில் எந்நாளும் அவனுக்கு மரணமில்லை!
ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்
ReplyDeleteஅவரின் உடல் மட்டுமே உலகை பிரிந்து செல்கிறது அவரின் ஆன்மாவும் அதில் உதித்த ஆயிரமாயிரம் வார்த்தைகளும் நாம் இருக்கும் வரை நம்மோடு உறவாடும் ..........அவரின் வார்த்தைக்கு நிகரான வார்த்தைஅவர் தான்.
ReplyDeleteநான் ரசித்த கவிஞன்
அவனின் வார்த்தைகளை உள்வாங்கும் போதெல்லாம் பிரமித்து நின்று இருக்கிறேன் அவனின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்
நேற்று செய்தி பார்த்ததிலிருந்து மனசு வருத்தமா இருக்கு. குமுதத்தில் இப்போதுதான் ஏதோ தொடர் எழுத ஆரம்பித்திருந்தார். அந்த விளம்பரத்தின் போது குமுதம் அவரை இளைஞர் என்றே சொல்லியிருந்தது. :(
ReplyDeleteதிருவரங்கம் ரங்கராஜன் விடைபெற்றார்! கவிஞர் வாலி என்றும் நம்முடனே இருப்பார்! அன்னாரின் ஆன்மா ரங்கனின் திருவடியில் இளைப்பாறட்டும்.
ReplyDeleteஇலக்கிய உலகத்திற்கு மாபெரும் இழப்பு...
ReplyDeleteவாலியைப் பற்றிய கவிதை என்று படித்துக் கொண்டு வந்த எனக்கு கடைசியில் எழுதியிருந்தது அதிர்ச்சியை அளித்தது. என் ஆழ்ந்த இரங்கல்கள்
ReplyDeleteவெற்றிலை மென்று
ReplyDeleteசங்கக் கவி படைத்த
கொற்றவனே...உன்
விரல் மொழிந்த
வார்த்தைகள் எல்லாம்
மேவின என் உயிரெல்லாம்
காவியக் கவிஞனே ..
படைக்கப்பட்ட காவியங்கள் எல்லாம்
கூடிநின்று உனக்கு
முகாரி பாடட்டும்...
இனியொரு கவிஞன்
உனைப்போல
வருவானோ என
ஒப்பாரி முழங்கட்டும்...
நெஞ்சம் குமுறுகிறது அய்யனே..
உன் இழப்பை ஏற்றுக்கொள்ள இயலாது...
தமிழர்தம் உளம்தனில் எந்நாளும் அவனுக்கு மரணமில்லை!
ReplyDeleteநேற்றிலிருந்தே மனம் சரியில்லை. அவர் ஆத்மா சாந்தியடையட்டும்.
Good Tribute. Will take time to digest his death but his words will live for ever.
ReplyDeleteஆழ்ந்த இரங்கல்கள்...
ReplyDeleteஇவரும் போய்விட்டாரா...?
ReplyDeleteகாலன் மிக மிக கொடியவன் தான்.
மனதை மிகவும் வருத்திய நிகழ்வு.
ReplyDeleteஇளைஞராக இருந்து, இளைஞராகவே வாழ்ந்தவர்
ReplyDeleteஅஞ்ஜலியை அழகிய பாமாலையாகவே கோர்த்த பாங்கு சிறப்பு. இந்த கடைசி வருஷங்களில் வெண் தாடியுடனும், வெள்ளாடையுடனும், விபூதி, குங்குமத்துடனும் அவர் வலம் வந்தது ஒரு மஹா புருஷனாகவே எனக்குத் தோன்றியது. யதுகை மோனை கவிஞராக மட்டும் இல்லாமல், இதிஹாசங்களிலும், புராணங்களிலும் காவியங்கள் எழுதியும், தன் வாழ்வில் பங்கு பெற்ற அனைவரையும் ஞாபகத்தில் இருத்தி தன் நன்றி அறிதலை கூச்சம் இன்றி வெளிப்படையாக எழுதிய மா மனிதர் தான் அவர். அவருடன் நட்பாக இருந்தவர்களுக்கு இது ஒரு பேரிழப்பு. கடந்த ஜனவரியில் புத்தக சந்தையில் அவரை தரிசிக்கும் வய்ப்பு கிடைத்தது. அவருடன் பேசாவில்லை, ஆனால் அவருக்கு வலது கரமாக இருந்த பழனிபாரதி அவர்களிடம் அறிமுகம் செய்துகொண்டேன். அனைவருக்கும் மனமார்ந்த அனுதாபங்கள். - ஜெ.
ReplyDeleteஇரங்கல் பா இன்னும் புகழ்பாடுகின்றது நாம் இழந்துவிட்ட இந்தயுகத்தில் இப்படி ஒரு வாலியின் இடத்தினை தமிழில் இனியொருவர் படைக்க முடியாத பா அமுதம்! வாலிக்கு என் ஆழ்ந்த அஞ்சலிகள்!!!
ReplyDeleteஅவர் கவிதைகளில் கூடுதல்
ReplyDeleteசிறப்பு இயைபுத் தொடைதான்
அதைக் கொண்டே இரங்கற்பா படைத்தது
மனம் கவர்ந்தது
அவர் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்
tha.ma 10
ReplyDeleteவாலி அவர்களின் ஆன்மா சாந்தி அடையட்டும்... எங்களின் ஆழ்ந்த இரங்கல்கள்.
ReplyDeleteஆழ்ந்த அஞ்சலிகள்.
ReplyDeleteஎனது அஞ்சலிகளும்....
ReplyDeleteகவிதை மூலமா சிறப்பான அஞ்சலி.....
அன்பின் பால கணேஷ் - என்றும் இளைஞன் வாலிக்கு அருமையான சமர்ப்பணம் - இரங்கல் கவிதை நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDeleteபின்தொடர்வதற்காக
ReplyDeleteஅன்பின் கணேஷ் - இதற்கு முந்தைய மறுமொழி மட்டுறுத்தலுக்காக நிற்கிறதா ? தெரிய வில்லை. சற்றே பார்க்கவும் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDelete"பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறார்
ReplyDeleteஅவர் கருணை உள்ள நெஞ்சினிலே கோவில் கொள்கிறார்."
கடவுள் இருக்கிறார் என்பதை இதை விட மிக எளிதாக உங்களை
தவிர வேறு யாரால் சொல்ல முடியும்.
அதே ஆண்டவனிடம் சென்ற உங்களை அவன் கண்டிப்பாக பத்திரமாக
பார்த்துக் கொள்வான்.
உங்கள் எழுத்துக்களுக்கும் உங்களுக்கும் ரசிகனாக இருக்கும் பல கோடி
ரசிகர்களில் நானும் ஒருவன் என்பதில் பெருமை கொள்கிறேன்.
ஆனந்த் சுப்ரமணியம்