விஞ்ஞான வசதிகளும், கல்வியறிவிற்கான எல்லை விஸ்தீரணங்களும் அதிகரித்துவிட்ட நிலையில் இன்றைய குழந்தைகள் புத்திசாலிகளாக இருக்கிறார்கள். ஒரு ஏழு வயதுப் பையன்/பெண்ணுக்கு மொபைல் ஆபரேட் பண்ணவும், கம்ப்யூட்டரில் கேம்ஸ் விளையாடவும், கூகிளில் தேடவும், சமயங்களில் பெற்றோருக்கே சொல்லித் தரும் அளவுக்கு விஷயம் தெரிந்திருக்கிறது. சுமார் 35 வருடங்களுக்கு முன்னால் இத்தகைய வசதிகளுடன் பழகாத குழந்தைகள் இந்த அளவுக்கு ப்ரைட்டாக இல்லை. அதிலும் இவன் ரொம்பவே மோசம். புத்தகம் படிப்பதும், எஞ்சிய நேரங்களி்ல தெருவில் விளையாடுவதும் தவிர வேறு பொதுஅறிவு எதுவும் கிடையாது. மற்ற பிள்ளைகள் போல துறுதுறுவென்று கடைகளுக்கும் ஊர் சுற்றவும் செல்லக்கூடிய சாமர்த்தியம்கூட இல்லாமல் ரொம்பவே ‘அப்பாவி’யாக இருந்தான் இவன்.
இவனுடைய அப்பா ஜமீன்தாராகப் பிறந்திருக்க வேண்டியவர், தவறிப்போய் சாதாரண குடும்பத்தில பிறந்து தொலைத்தார். ‘‘இன்னொருத்தன்கிட்ட கை கட்டி வேலை பாக்குறது ஒரு பொழைப்பா?’’ என்று சொல்லிவிட்டு சொந்தமாக ஒரு மாவுமில் வைத்து நடத்தினார். (இதே டயலாக்கை இவன் சொல்லலாம்னு நெனச்சாலும் இந்தக் காலகட்டத்துல முடியலியேஏஏஏ!) நன்றாகத்தான் வியாபாரம் நடந்தது; வருமானம் வந்தது. அந்த வருமானத்தை வெச்சு தம்பியை இன்ஜினியரிங் படிக்க வெச்சு, தங்கைகளை கல்யாணமும் பண்ணிக் குடுத்திருக்கார்னா பாருங்க! அத்துடன் சும்மாயிராமல் ஒரு ஓட்டலும் ஆரம்பிக்க, அது நஷ்டத்தைத் தர, கூடவே உடல்நிலையும் மோசமாக இவன் தன் ஆறாவது வயதிலேயே அப்பாவை இழக்க நேர்ந்தது.அப்பாவின் பிரின்ஸிபிள் சித்தப்பாவிடம் இல்லை. இன்ஜினியரிங் கிராஜுவேட்டான அவருக்கு டி.வி.எஸ்.ஸி.ல் வேலை கிடைத்து விட்டதால் கடையைப் பார்த்துக் கொள்ள மறுத்துவிட, கடையை விற்றுவிட்டு அந்தப் பணத்தை ஹாஸ்டலில் படிக்கும் இவன் அண்ணனின் கல்விச் செலவுக்காக ஒதுக்கி விட்டார்கள். அண்ணன் படிப்பை முடித்து வேலைக்குச் செல்லும் காலம் வரை இவனும் அம்மாவும் சித்தப்பாவின் ஆதரவில்தான் இருக்க வேண்டியிருந்தது. அதன்பின் ஓராண்டு கழிந்து சித்தப்பா கல்யாணம் செய்து கொண்டார். சித்தியாய் வரவிருந்தவர் ஏற்கனவே மாமா பெண் உறவுமுறைதான் என்பதால் தெரிந்தவரே. அந்நாளில் சித்தப்பா காதல் கல்யாணம் செய்து கொண்டார் என்கிற தகவல் இவனுக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை. மதுரையிலிருந்து சென்னைக்கு ரயிலில் போகப் போகிறோம். அங்கே மயிலாப்பூர் என்ற இடத்திலுள்ள கபாலீஸ்வரர் கோயிலில் கல்யாணம் என்கிற தகவல் மட்டுமே இவனை குஷிப்படுத்தப் போதுமானதாயிருந்தது.
அப்போது நிலக்கரி ரயில்கள்தான் பெரும்பாலும் புழக்கத்தில் இருந்தன. ரயில் வந்து நிற்கையிலும், புறப்படுகையிலும் ‘புஸ்ஸ்ஸ்ஸ்’ என்று அது பெருமூச்சு விடும் சப்தம் இருக்கிறது பாருங்கள்...! மிக ரசிக்கிற ஒரு விஷயம்! இன்றைய தலைமுறையினருக்கு இனி கிடைக்க வாய்ப்பில்லாத ஒன்றும் கூட! ரிஸர்வேஷன் கன்ஃபர்ம் ஆகாமல், அன்ரிஸர்வ்ட் கம்பார்ட்மெண்ட்டில் சிலர் பயணம் செய்ய நேர்ந்தது. இன்ஜினுக்கு அடுத்த இரண்டாவது கம்பார்ட்மெண்ட். இவன் அடம்பிடித்து ஜன்னலோர சீட்தான் வேண்டுமென்று கேட்டு வாங்கி அமர, ‘ழே’ என்று ரயிலின் நீஈஈஈண்ட விசில் கூவலும், ஜன்னலின் வழி வரும் எதிர்காற்றும் மிகவும் குஷியைத் தந்தது இவனுககு. எதிர்காற்று மட்டுமா வந்தது ஜன்னல் வழி? என்ஜினிலிருந்து தெறித்த சில நிலககரி நெருப்புத் துளிகள் காற்றில் பறக்க, அதில் ஒன்று மிகச் சரியாக இவன் கன்னத்தைக் குறிவைத்து வந்து ஒட்டிக் கொண்டது. ஹா ஹுவென்று அலறித் துடிக்க, மற்றவர்கள் துடைத்து வேறிடத்தில் அமர வைக்க, அந்நாளைய எட்டணா அளவுக்கு ஒரு நெருப்புச் சுட்ட வடு கன்னத்தில்! சித்தப்பா ஒரு பிளாஸ்டரை ஒட்டி விட்டார்.
சித்தப்பா தன் கல்யாணத்தை முன்னிட்டு இவனுக்கு ட்ராயர் சட்டையுடன் ஒரு வாட்ச்சும் வாங்கித் தந்திருந்தார். ரொம்ப நல்ல வாட்ச் அது. ஒரு நாளைக்கு இரண்டு தடவை மிகத் துல்லியமாக நேரத்தைக் காட்டும். இவனுக்கு அந்த வாட்ச்சைக் கையில் கட்டியதும் கொள்ளைப் பெருமை. புது டிரஸ்ஸுடன், கையில் வாடச்சுடன் போட்டோ்வில் தானும் இருக்க வேண்டுமென்று பேராசை வந்துவிட்டது. மதுரையில் குடும்ப நண்பரான போட்டோகிராபர் கோபு அண்ணாவையும் சென்னைக்கு அழைத்து வந்திருந்ததால், அவர் கேமராவைத் தயார் செய்யும் போதெல்லாம் இவன் ஓடிச்சென்று போட்டோவுக்கு நிற்பவர்களின் அருகில் நின்றோ, காலடியில் அமர்ந்தோ தானும் படங்களில் விழும்படி பார்த்துக் கொண்டான். வாட்ச் தெரியாமல் போய் விட்டால்...? நெஞ்சில் ஒரு கையை வைத்தபடி போஸ் வேறு! கூடவே ஒரு பக்கம் கன்னத்தில் பிளாஸ்திரி இருந்ததால் ‘தெய்வமகன்’ சிவாஜி மாதிரி ஒருபக்க முகத்தைக் காட்டாமல் மறுபக்க முகம் மட்டுமே போட்டோவில் விழும்படி போஸ் கொடுக்க வேண்டிய அவசியம் வேறு. ரெம்பக் குஷ்டமப்பா... ச்சே, ரொம்பக் கஷ்டமப்பா!
அத்தனை சிரமமாக இருந்தாலும், கல்யாண ஆல்பம் வந்ததும் ஏகப்பட்ட ஃப்ரேம்களில் தான் பளிச்சென்று பிரிண்ட்டாகி இருந்ததை (எல்லாம் க/வெ. படங்கள்தான். அப்ப கலர் பிலிம் அதிகம் புழக்கத்திலில்லை) பார்த்ததும் ரொம்ப ரொம்ப சந்தோஷப்பட்டான் இவன். அந்தக் கல்யாண ஆல்பத்தை வந்தவர்களிடமெல்லாம் காட்டி மகிழ்ந்தது போக, அடுத்த சில மாதங்கள் வரை படிக்கும், விளையாடும் நேரம் தவிர மற்ற நரங்களெல்லாம் அந்த ஆலபத்தோடேயே பொழுது கழிந்தது இவனுக்கு. ஹு...ம்! அது ஒரு அழகிய நிலாக்காலம்!
-சமீபத்தில் இவனுடைய இல்லத்திற்கு விசிட் அடித்த தோழி மஞ்சுபாஷிணி, அலைகள் எதுவுமின்றி உறைந்த நீருடன் இருந்த இவன் மனக்குளத்தில் ஒரு சின்னக கல்லெறிந்து போனார். அதன் விளைவாய் ஏற்பட்ட சலனத்தின் விளைவாய்தான் இவனுடைய சுயபுராணத்தை நீங்கள் கேட்டுத் துன்புற நேர்ந்தது. இதெல்லாம் சொல்லப்பட வேண்டிய பெரிய விஷயமா என்ன? 1) என் டைரி மாதிரி இதை சொல்றதுல எனக்கு மகிழ்ச்சி. 2) வரலாறு ரொம்ப முக்கியம் நண்பர்களே...! ஹி... ஹி...!
|
|
Tweet | ||
உங்களுக்கே உரிய பாணியில் இனிய நினைவுகள்...
ReplyDeleteமஞ்சுபாஷிணி அவர்களுக்கும் நன்றி...
ரசித்த உங்களுக்கு மனம் நிறைய நன்றி!
Deleteஆம். வரலாறு அதுவும் 'தன் வரலாறு' மிகவும் முக்கியம். கடந்து வந்த பாதை கொடுக்கும் பலமே அலாதி!
ReplyDeleteரசித்தேன்.
ரசித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!
Delete//ஒரு நாளைக்கு இரண்டு தடவை மிகத் துல்லியமாக நேரத்தைக் காட்டும்//
ReplyDeleteஹாஹஹா..
தலைவரின் "சத்திய சோதனை" யா.. எழுதுங்க.. எழுதுங்க..
ReplyDeleteமுதல் அத்தியாயத்திலேயே நகை, மெல்லிய சோகம், சிறுவனின் ஆனந்தம் என நவ"ரசங்களையும்" படைத்திருக்கிறீர்கள்.. தொடரட்டும்!!
‘சத்தியசோதனை’ எழுதற அளவுக்கு நான் வொர்த் இல்ல ஆவி! அப்பப்ப மாணவப் பருவத்துக்குப் போய் வர்றது வழக்கம். இந்த வருஷம் அதிகமாகவே மலரும் நினைவுகள் இருக்கும். பின்னாளில் தொகுத்து புத்தகமாக்கலாம்னு ஒரு (அல்ப) ஆசை! ஹி... ஹி... டைமிருந்தா இந்த லிங்க்கைப் பாரு...
Deletehttp://www.minnalvarigal.blogspot.com/2011/12/blog-post_26.html
Ms.மஞ்சுபாஷினி வரவு உங்களுக்கு மலரும் நினைவுகளை வரவழைத்து விட்டது.
ReplyDeleteஎங்களுக்கும் உங்கள் வரலாறு கிடைத்தது.
ஆஹாங்... இப்படி முடிச்சுட்டா எப்படிங்க? இன்னும் பல வரலாறுகள் சொல்லப்பட வேண்டியிருக்கே! விட்ருவனா? ஹி... ஹி..! உங்களுக்கு என் உளம்கனிந்த நன்றி!
Deleteஎங்கே அந்த போட்டோக்கள். அதையும் வெளியிடுங்கள் யாரும் திருஷ்டி போடமாட்டார்கள் வேண்டுமென்றால் ஒரு பெரிய கருப்பு பொட்டு இட்டு அதை வெளியிடுங்கள்... நாங்கள் படத்தை பார்த்து பேய் அறைந்தது போல ஆகமாட்டோம்... அப்படியே ஆனால் மந்திரிக்க தமிழ் நாட்டில் பல தர்காக்கள் உள்ளன
ReplyDeleteஉண்மைதான் வரலாறு ரொம்ப முக்கியம்... நம் நினைவுகள் தான் பொக்கிஷம்...
ReplyDeleteபடித்து ரசித்த உங்களுக்கு என் மனம் நிறைய நன்றி!
Deleteஅவனை பற்றி தெரிந்துக்கொண்டோம். அவனுக்கு ரொம்ப தன்னடக்கம் போல!?
ReplyDeleteஆமம்மா... ரொம்ப கூச்ச ஸ்பாவி வேற! ஹி.. ஹி..!
Deleteஉங்களின் மலர்ந்த நினைவுகளை இரசித்தேன்!
ReplyDeleteரசித்த உங்களுக்கு மனம் நிறைய நனறி!
Deleteமனம் கவர்ந்த சிங்கத்தின் வரலாறுக்கும்
ReplyDeleteசிங்கத்தைச் சீண்டி வரலாறை வரவழைத்த
மஞ்சுபாஷிணி அவர்களுக்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
ரசித்து வாழ்த்திய உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!
DeleteSo you are going to take a long walk down the memory lane. Keep it up.
ReplyDeleteஆமாம் மோகன்... நேரம் கிடைக்கறப்பல்லாம் ஞாபக நதிக்கரையில கொஞ்சம் நடக்கலாம்னுட்டு ஆசை. மிக்க நன்றி!
Deleteரெண்டு தடவை சரியான நேரம் காட்டுமா?.. ஜூப்பர் வாட்ச்தான் :-))
ReplyDeleteஇப்பதான் எழுதியாச்சேன்னு பின்னாடி சுயசரிதை எழுதும்போது இதெல்லாம் விட்டுராதீங்க :-)
இது மாதிரி துளித் துளியா எழுதறதுதானே பின்னால சுயசரிதையாகும். மிக்க நன்றிங்க!
Deleteமஞ்சுப் புயல் ஊர் கிளம்பி விட்டது போல! நல்ல கொசுவத்தி!
ReplyDeleteகொசுவத்தியை ரசித்த உங்களுக்கு என் மனம் நிறைய நன்றி!
Deleteசுவையான நினைவுப் பயணத்தில் தங்களுடன் பயணித்ததில் மகிழ்ச்சி! வாழ்த்துக்கள்!
ReplyDeleteஉடன் பயணித்து மகிழ்ந்து வாழ்த்திய உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!
Deleteஅவன் எடுத்துக்கொண்ட போட்டோக்களை இணைத்து இருந்தால் , நாங்களும் அவனை பார்த்திருப்போம்....
ReplyDeleteஅந்த ஆல்பம் மதுரைல இருக்கு ரூபக். அடுத்த பகிர்வின்போது தேடிப்பிடிச்சு ‘அவனை’ உங்களுக்குக் காட்டிடறேன். மிக்க நன்றி!
Delete"வரலாறு முக்கியம் " ....தொடரலாமே நாங்களும் உங்கள் மலரும்நினைவுகளுடன் பயணிப்போம்.
ReplyDeleteதொடருங்கள்......
உற்சாகம் தந்த கருத்தைத் தந்த மாதேவிக்கு மனம் நிறைய நன்றி!
Deleteநகைச்சுவை ததும்ப ததும்ப மலரும் நினைவுகள்...!
ReplyDeleteபடித்து ரசித்த தங்கைக்கு இதயம் நிறை நன்றி!
Deleteவாட்ச் ரொம்ப அருமையானது போலயே சார்... இனிமையான நினைவுகள் பல கசப்புகளை மூடி மறைத்தவாறே...
ReplyDeleteகசப்புகளைச் சுமந்து என்ன பயன் ப்ரியா? புன்னகையால் எதிர் கொள்வதே வாழ்வை சிறப்பாக்கும் என்பது ‘இவன்’ கருத்து. ரசித்த உங்களுக்கு என் மனம் நிறை நன்றி!
Deleteயார் இவன்?
ReplyDeleteஇந்தக் கேள்விக்கான பதிலைத்தான் ‘இவன்’ ரொம்ப நாளாகத் தேடிக்கிட்டிருக்கான். இன்னும் கிடைச்ச பாடில்லையே அப்பா ஸார்!
Deleteசுய புராணம் நன்றாக இருந்தது. அன்றைய பசுமையான நினைவுகளுடன்...
ReplyDeleteநினைவுகளை ரசித்த உங்களுக்கு என் மனம் நிறைய நன்றி!
Deleteஒரு நாளைக்கு இரண்டு தடவை மிகத் துல்லியமாக நேரத்தைக் காட்டும்....
ReplyDeleteஅருமையான கைக்கடிகாரம் தான், அப்படியே அந்த ஆல்பத்தையும் இங்க போட்டுருக்கலாமே, இன்னும் ஜோரா இருந்திருக்கும்...
அழகாக தொகுத்து வழங்கியுள்ளீர்கள்.... கலக்கல்...
த. ம 4
அடுத்த பதிவில் படங்களையும் இணைக்க முயல்கிறேன் நண்பரே. படித்து ரசித்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!
Deleteஆமாம்... வரலாறு ரொம்ப முக்கியம்!!
ReplyDeleteஇருந்தாலும் சந்திரி சாக்குல “தெய்வமகன்“ சிவாஜி ரேஞ்சிக்கு உங்களை உயர்த்திக்கிட்டீங்களே... ஹா ஹா ஹா..
ஹி... ஹி... நாமளே நம்மளை உயர்த்திக்கிட்டாதான் உண்டு. அதான்... ரசித்த உங்களுக்கு என் மனம் நிறைய நன்றி!
Deleteமலரும் நினைவுகள் அருமை
ReplyDeleteரசித்த உங்களுக்கு என் மனம் நிறை நன்றி!
Deleteபொக்கிஷமான நினைவுகள் கணேஷ்..... உங்கள் பாணியில் படித்து ரசித்தேன்......
ReplyDeleteபடித்து ரசித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!
Deleteஉங்கள் பழைய கணக்கை நாங்கள் புதிதாகப் படித்தோம். இதற்கு வழி வகுத்த மஞ்சு பாஷிணியைக் கட்டாயம் பாராட்ட வேண்டும்.
ReplyDeleteமனவருத்தங்களையும் மெல்லிய நகைச்சுவையுடன் சொல்லியிருப்பது பெரிய விஷயம்.
தொடருங்கள். படிக்கக் காத்திருக்கிறோம்.
அந்த நகைச்சுவை உணர்வு மட்டும் இல்லாவிடில் இன்று ‘இவன்’ கீழ்ப்பாக்கத்தில் தான் இருந்திருப்பான் ரஞ்சனிம்மா. தொடருங்கள் என்று சொல்லி ஊக்கம் தந்த உஙகளுக்கு என் உளம் கனிந்தநன்றி!
Delete//மிக ரசிக்கிற ஒரு விஷயம்! இன்றைய தலைமுறையினருக்கு இனி கிடைக்க வாய்ப்பில்லாத ஒன்றும் கூட! // நிச்சயம் உண்மை ... நல்ல வேளை நான் ஊட்டியில் இதைக் கண்டிருக்கிறேன்....
ReplyDeleteஅட உங்க கதையா... அந்த தெய்வமகன் ஜிவாஜி நீங்க தானா... ஹா ஹா ஹா ஹா....
ஒவ்வொருவரிடமும் பழைய போட்டா ஆல்பக் கதைகள் இருக்கவே செய்கின்றன. இருக்கும் ஒரு ஜோடி ஸ்லிப்பரை நீ போட்டுக்கண்ணா என்று நானும் நீ போட்டுக்கம்மா என்று என் அண்ணனும் (8, 10 வயதில்) எடுத்த குடும்ப போட்டோ பார்த்தால் உடனே கண்ணீர் வந்து விடும் எனக்கு. இன்றும் என் அண்ணன் (புதியவன் பக்கம் ப்ளாக் எழுதுபவர்) வருடம் தவறாமல் எங்களுடைய கிராம பள்ளிக் குழந்தைகளுக்கு இலவசமாக பாடப் புத்தகங்களும் செருப்பும் வாங்கிக் கொடுக்கிறார்.
ReplyDeleteநன்றாக இருக்கின்றது. தொடர்ந்து எழுதுங்கள் கணேஷ்.
ReplyDeleteகருப்பு வெள்ளை நினைவுகள் உங்கள் எழுத்தில் கலராய்த்தான் தெரிகிறது.
ReplyDeleteசெம சூப்பரு ...! ட்ராயர் சட்டையுடன் அண்ணனின் அழகியநிலாக்காலம் பார்க்க ஆசையுடன் காத்திருக்கிறேன் ....!
ReplyDeleteவரலாறு முக்கியமே. படத்தைப் பகிர்ந்திடுங்கள்!
ReplyDeleteதங்கள் பாணியில் உங்கள் நினைவுகளை அழகாக திரும்பிப்பார்க்க வைத்துவிட்டீர்கள்..
ReplyDeleteசகோதரி மஞ்சுபாஷிணி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
ரொம்ப நல்ல வாட்ச் அது. ஒரு நாளைக்கு இரண்டு தடவை மிகத் துல்லியமாக நேரத்தைக் காட்டும். இவனுக்கு அந்த வாட்ச்சைக் கையில் கட்டியதும் கொள்ளைப் பெருமை. //
ReplyDeleteஉறைந்த நீருடன் இருந்த மனக்குளத்தில் ஒரு சின்னக கல்லெறிந்து போன மஞ்சுபாஷினிக்கு வாழ்த்துகள்..
அன்னிக்கு மெட்ராஸ்க்கு வந்த நீ இன்னும் போலியாபா?
ReplyDeleteஹிஸ்ட்ரீ சூப்பராகீது பா
கன்டினூ பண்ணு வாத்யாரே!
மறக்க முடியாத நிலாகாலம்.. நீங்க சொல்லியது படிக்கும் போது ஒருபக்கம் பிளாஸ்திரி போட்டு நெஞ்சில கைவைத்த ஒரு குட்டி பையன் கற்பனைக்கு வரான்(ர்)...அப்போ நீங்க .. இப்போ என்னவிட சின்னவர் தானே!! சோ கோச்சிக்காதீங்க!! ஹி!ஹி!
ReplyDeleteநல்ல அனுபவ தொடர் சார் ....
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
ReplyDeleteமேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...
அறிமுகப்படுத்தியவர் : ரூபக் ராம் அவர்கள்
அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : கனவு மெய்ப்பட
வலைச்சர தள இணைப்பு : பனியைத் தேடி - மலைப் பயணம்