கடந்த ஒரு வாரமாக இணைய இணைப்பு மூன்று நாட்கள் சொதப்பியதென்றால், கீ போர்ட் ஸ்ட்ரக்காகியதி்ல் எதையும் டைப் செய்ய முடியாமல் பேக்ஸ்பேஸாக விழுந்து இரண்டு நாட்கள் படுத்தியெடுத்ததின் விளைவாக இணையத்தின் பக்கம் வர இயலவில்லை. மொபைல் மூலம் முகநூல்தான் எளிதில் படிக்க முடிகிறது; ஒன்றிரண்டு தளங்களைத்தான் படிக்க முடிந்தது. இப்பவும் இணைய இணைப்பு முழுமையா சரியாகலை. இருந்தாலும்... உங்களோட ஒரு வார நிம்மதியைப் பறிக்க இதோ வந்தூட்டேன்.... ஹா... ஹா...!
=/*/==/*/==/*/==/*/==/*/==/*/==/*/==/*/==/*/==/*/=
இந்த ஆண்டு மெகா பதிவர் சந்திப்பு நடத்துவது குறித்துப் பேசுவதற்காக நேற்று மாலை வழக்கமான இடமான கே.கே.நகரிலுள்ள ‘டிஸ்கவரி புக் பேலஸ்’ஸில் நான், மெ.ப.சிவகுமார், கே.ஆர்.பி., பட்டிக்காட்டான் ஜெய், ஆரூர் மூனா செந்தில், அரசன், புலவர் ராமானுசம் ஐயா, கவியாழி, செல்வின், ரூபக்ராம் ஆகியோர் சந்தித்தோம். முதலில் நானும் ரூபக் ராமும் ஒரே சமயத்தில் வர, பின்னர் பட்டிக்காட்டானும், ஆரூர் மூனா செந்திலும் வர, நால்வருமாகப் பேசிக் கொண்டிருந்த பொழுது, கீழே பார்க் செய்து கொண்டிருந்த எங்கள் வாகனங்களை போலீஸ் வேனில் ஏற்றுவதாக மேலே தகவல்வர, வேகமாக கீழே ஓடினோம். கீழே சில டூவீலர்களை போலீஸ் வாகனத்தில் ஏற்றிக் கொண்டிருப்பதைப் பார்த்ததும், நானும் பட்டிக்காட்டானும் எங்கள் வாகனங்களின் பேரில் பாய்ந்து நகர்த்திவிட, ரூபக் மற்றும் செந்திலின் வாகனங்கள் வேனில் ஏற்றப்பட்டிருந்தன.
=/*/==/*/==/*/==/*/==/*/==/*/==/*/==/*/==/*/==/*/=
இந்த ஆண்டு மெகா பதிவர் சந்திப்பு நடத்துவது குறித்துப் பேசுவதற்காக நேற்று மாலை வழக்கமான இடமான கே.கே.நகரிலுள்ள ‘டிஸ்கவரி புக் பேலஸ்’ஸில் நான், மெ.ப.சிவகுமார், கே.ஆர்.பி., பட்டிக்காட்டான் ஜெய், ஆரூர் மூனா செந்தில், அரசன், புலவர் ராமானுசம் ஐயா, கவியாழி, செல்வின், ரூபக்ராம் ஆகியோர் சந்தித்தோம். முதலில் நானும் ரூபக் ராமும் ஒரே சமயத்தில் வர, பின்னர் பட்டிக்காட்டானும், ஆரூர் மூனா செந்திலும் வர, நால்வருமாகப் பேசிக் கொண்டிருந்த பொழுது, கீழே பார்க் செய்து கொண்டிருந்த எங்கள் வாகனங்களை போலீஸ் வேனில் ஏற்றுவதாக மேலே தகவல்வர, வேகமாக கீழே ஓடினோம். கீழே சில டூவீலர்களை போலீஸ் வாகனத்தில் ஏற்றிக் கொண்டிருப்பதைப் பார்த்ததும், நானும் பட்டிக்காட்டானும் எங்கள் வாகனங்களின் பேரில் பாய்ந்து நகர்த்திவிட, ரூபக் மற்றும் செந்திலின் வாகனங்கள் வேனில் ஏற்றப்பட்டிருந்தன.
டிஸ்கவரியி்ன் ‘சைடில்’ |
‘நோ பார்க்கிங்’ என்று அறிவிக்கப்படாத இடத்தில் நிறுத்திய வாகனங்களின் பேரில் ஏன் கை வைத்தார்கள்?’ என்ற குழப்பத்துடன் எங்கள் வாகனங்களை தள்ளி பார்க் செய்துவிட்டு நானும் ஜெய்யும் வர, செந்திலும் ரூபக்கும் வேனிலிருந்த போலீஸ்காரரிடம் பேசிக் கொண்டிருந்தார்கள். ‘‘நோ பார்க்கிங் போர்டு சைடு ரோடுல வெச்சிருக்கு. நீங்க பாக்கலை’’ என்றார் அந்த போலீஸ்காரர். பட்டிக்காட்டான் அவரிடம் நேராகச் சென்று, ‘‘நாங்கள்ளாம் ப்ளாகர்ஸ் சார்...’’ என்றதும் போலீஸ்காரர் ‘ழே’யென்று விழித்தார். ‘‘இவன் சிவப்பாகத்தானே இருக்கிறான்... ஏன் ப்ளாக்கர்னு சொல்லிக்கறான்? பக்கத்துல இருக்கற மூணு பேரும் வேணா கறுப்பா இருக்காங்க. ப்ளாக்கர்ஸ்னு சொல்லலாம்’’ என்று நினைத்தாரோ என்னவோ... பட்டிக்காட்டான் மீண்டும், ‘‘நெட்ல எழுதறவங்க... ரைட்டர்ஸ் சார்...’’ என்றதும் தலையாட்டிக் கொண்டார். பலனெதுவும் இல்லை. செந்தில், ரூபக் வாகனங்களுடன் கைப்பற்றப்பட்ட ஒரு ஸ்கூட்டரை மட்டும் (அதன் ஓனர் பெண்ணானதால்) விட்டுவிட்டார். பெண்ணென்றால் பேயே இரங்கும் எனும்போது ‘மாமா’க்கள் இரங்க மாட்டார்களா என்ன? இவர்களிடம், ‘‘சரி, ஸ்டேஷன்ல வந்து வண்டியை எடுத்துக்கங்க’’ என்று வேகமாக வண்டியை கிளப்பிச் சென்று விட்டார்.
டிஸ்கவரியின் எதிர்புறம் |
ரூபக்கும், ஆரூர் மூனாவும், அப்போதுதான் வந்து சேர்ந்த கே.ஆர்.பி.யுடன் காவல் நிலையத்துக்குப் போனார்கள். அங்கே வழக்கம் போல ‘கப்பம்’ கட்டிவிட்டு தங்களின் வாகனத்தை மீட்டுக் கொண்டு வெற்றி வீரர்களாகத் திரும்பினர். இதில் ஹைலைட்டான விஷயம் என்னவென்றால்.... டிஸ்கவரி புக் பேலசின் சைடிலும், எதிரிலும் நோ பார்க்கிங் போர்டு வைத்திருந்த இடங்களை இங்குள்ள படங்களில் பாருங்கள்.... ரைட் ராயலாக அங்கே வண்டியை பார்க் செய்திருக்கிறார்கள் பாவிகள்...! இதையெல்லாம் கண்டுக்காத இந்த ‘வசூல் சக்கரவர்த்தி’களுக்கோ அப்பாவிகளான நாங்கள் நோ பார்க்கிங் இல்லாத இடத்தில் வண்டியை நிறுத்தியதுதான் சமூகக் குற்றமாகப் பட்டிருக்கிறது. அட தேவுடா, இக்கடச் சூடுடா!
அதெல்லாம் சரி... பதிவர் சந்திப்பு பத்தி என்னதான்யா பேசினீங்கன்னு கேக்கறீங்களா...? அதற்கென தனித் தளம் ஒன்று தொடங்கப்பட்டு இருக்கிறது. விரைவில் அங்கே தொடர்ந்து செய்திகள் பகிரப்படும். அதன் லின்க் அனைவரின் பதிவிலும் இருக்கும். சற்றே வெய்ட்டீஸ் ப்ளீஸ்!
அதெல்லாம் சரி... பதிவர் சந்திப்பு பத்தி என்னதான்யா பேசினீங்கன்னு கேக்கறீங்களா...? அதற்கென தனித் தளம் ஒன்று தொடங்கப்பட்டு இருக்கிறது. விரைவில் அங்கே தொடர்ந்து செய்திகள் பகிரப்படும். அதன் லின்க் அனைவரின் பதிவிலும் இருக்கும். சற்றே வெய்ட்டீஸ் ப்ளீஸ்!
=/*/==/*/==/*/==/*/==/*/==/*/==/*/==/*/==/*/==/*/=
=/*/==/*/==/*/==/*/==/*/==/*/==/*/==/*/==/*/==/*/=
மகாலக்ஷ்மி, சரஸ்வதி, பார்வதி மூவரும் தேவலோகத்தில் கூடிப் பேசி்க் கொண்டிருந்தபோது தேவலோகவாசி ஒருவர் அவர்களிடம் ‘‘லக்ஷ்மி கல்யாணம், பார்வதி கல்யாணம், வள்ளி கல்யாணம், சீதா கல்யாணம் என்று தேவிகளின் பெயரிலேயே குறிப்பிடுகிறார்களே... ஏன், பரமசிவன் கல்யாணம், முருகன் கல்யாணம் என்று அழைப்பதில்லை?’’ என்று தன் சந்தேகத்தைக் கேட்டார். அப்போது அங்கு வந்த வைகுந்தவாசனான ஸ்ரீநிவாசன் பெருமையாக, ‘‘ஏன்... ஸ்ரீநிவாசன் கல்யாணம் என்று சொல்லி என்னைப் பெருமைப்படுத்துகிறார்களே...’’ என்று கூற, அருகிலிருந்த மகாலக்ஷ்மி இடைமறித்து, ‘‘அதிலும் என்னைத்தான் குறிப்பிடுகிறார்கள். உங்கள் திருநாமத்தின் முதல் எழுத்தான ஸ்ரீ என்னைத்தானே குறிக்கிறது!’’ என்று கூறிவிட்டுக் கணவரைப் பெருமையுடன் பார்த்தாளாம்!
-கவிஞர் சுப்பு ஆறுமுகத்தின் வில்லுப்பாட்டு நிகழ்ச்சியில் கேட்டு ரசித்ததாக (பழைய) விகடனில் வெளியான துணுக்கு.
=/*/==/*/==/*/==/*/==/*/==/*/==/*/==/*/==/*/==/*/=
முதல் நாவல் உருவான கதை!
‘‘என்னுடைய முதல் நாவலான ‘பவானி’யை 1944-ல் எழுதினேன். மருத்துவக் கல்லூரியில் நான்காம் வருடத் தேர்வுகளை எழுதி முடித்துவிட்டு ரிசல்ட்டை எதிர்நோக்கியிருந்த சமயம்... விடுமுறையை வீணாக்காமல் நாலு குயர் வெள்ளைக் காகிதம், பார்க்கர் பவுண்டன் பேனா, இங்க் புட்டி எல்லாம் எடுத்துக் கொண்டு முண்டக்கண்ணி அம்மன் கோயில் தெருவிலிருந்த என் சகோதரி வீட்டின் மாடியில் எனக்கென ஒதுக்கப்பட்டிருந்த தனியறையில் தொடர்ந்து ஏழு நாட்கள் இரவும் பகலும் விடாமல் இந்த நாவலை எழுதி முடித்தேன்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள தொட்டியம் என்ற சிற்றூரில் நாங்கள் ஏழெட்டு வருடங்கள் இருந்தோம். அங்கே வி்ண்ணாரம்பள்ளி ஜமீன்தாருக்கு என் தந்தை குடும்ப டாக்டராக இருந்தார். இதனால் ஜமீன்தார் குடும்பத்தினருடன் சமமாகப் பழகும் வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்தது. அந்த அனுபவமே ‘பவானி’ நாவலில் ஒரு பணக்காரக் குடும்பத்தைச் சித்தரிப்பதற்கு உதவியது.
காவிரியும், துளிர் வெற்றிலைக் கொடிக்காலும், அகத்திக் கீரையும், வயல் வரப்புகளும், ஜமீன்தார் வீட்டுக் குழந்தைகளுடன் உல்லாசப் பயணம் போன திருவேங்கிமலையும் அந்த நாவலின் வர்ணனைகளுக்கான பின்னணி ஆயின.’’
-நாவலாசிரியை ‘லக்ஷ்மி’ (நன்றி: 12.8.84 ஆ.வி.)
=/*/==/*/==/*/==/*/==/*/==/*/==/*/==/*/==/*/==/*/=
முதல் நாவல் உருவான கதை!
‘‘என்னுடைய முதல் நாவலான ‘பவானி’யை 1944-ல் எழுதினேன். மருத்துவக் கல்லூரியில் நான்காம் வருடத் தேர்வுகளை எழுதி முடித்துவிட்டு ரிசல்ட்டை எதிர்நோக்கியிருந்த சமயம்... விடுமுறையை வீணாக்காமல் நாலு குயர் வெள்ளைக் காகிதம், பார்க்கர் பவுண்டன் பேனா, இங்க் புட்டி எல்லாம் எடுத்துக் கொண்டு முண்டக்கண்ணி அம்மன் கோயில் தெருவிலிருந்த என் சகோதரி வீட்டின் மாடியில் எனக்கென ஒதுக்கப்பட்டிருந்த தனியறையில் தொடர்ந்து ஏழு நாட்கள் இரவும் பகலும் விடாமல் இந்த நாவலை எழுதி முடித்தேன்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள தொட்டியம் என்ற சிற்றூரில் நாங்கள் ஏழெட்டு வருடங்கள் இருந்தோம். அங்கே வி்ண்ணாரம்பள்ளி ஜமீன்தாருக்கு என் தந்தை குடும்ப டாக்டராக இருந்தார். இதனால் ஜமீன்தார் குடும்பத்தினருடன் சமமாகப் பழகும் வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்தது. அந்த அனுபவமே ‘பவானி’ நாவலில் ஒரு பணக்காரக் குடும்பத்தைச் சித்தரிப்பதற்கு உதவியது.
காவிரியும், துளிர் வெற்றிலைக் கொடிக்காலும், அகத்திக் கீரையும், வயல் வரப்புகளும், ஜமீன்தார் வீட்டுக் குழந்தைகளுடன் உல்லாசப் பயணம் போன திருவேங்கிமலையும் அந்த நாவலின் வர்ணனைகளுக்கான பின்னணி ஆயின.’’
-நாவலாசிரியை ‘லக்ஷ்மி’ (நன்றி: 12.8.84 ஆ.வி.)
|
|
Tweet | ||
//இவன் சிவப்பாகத்தானே இருக்கிறான்... ஏன் ப்ளாக்கர்னு //
ReplyDeleteஹாஹஹா..
நீங்க சிரிச்சதுல மிக்க மகிழ்ச்சி ஆ.வி!
Delete//(அதன் ஓனர் பெண்ணானதால்)// என்ன சார் இது, ஆண்ட்டி-கிளைமாக்ஸா போச்சே..
ReplyDelete‘ஆன்ட்டி’ சம்பந்தப்பட்டதால அப்டி ஆய்டுச்சு ஆவி!
Deleteசைலண்டா சிரிங்க-- செம்ம்ம்ம..
ReplyDeleteஅப்பப்ப சைலன்ட்டா சிரிக்க வெக்கலாம் போலயே... மி்க்க நன்றி நண்பா!
Deleteபிளாக்கர்ன்னு சொல்லியும் எஸ்கேப் ஆகமுடியலையே.....
ReplyDeleteநாம ஒர்த் இல்லையோ?
அதானே.... அதத்தான் யோசிச்சுட்டிருக்கேன் பிரகாஷ்! மிக்க நன்றி!
Deleteகாரசாரமான மொறு மொறு
ReplyDeleteசுவைத்து ரசித்தேன்
(ப்ளாக்கர் ஜோக் அருமை)
தொடர வாழ்த்துக்கள்
சுவைத்து ரசித்த உங்களுக்கு மனம் நிறைய நன்றி!
Deletetha.ma 2
ReplyDeleteப்ளாக்கர்... :) அட இதெல்லாம் சொல்லி தப்பிட முடியுமா? கப்பம் கட்டாது விடமாட்டார்களே!
ReplyDeleteபதிவர் சந்திப்பு - எப்ப... கொஞ்சம் முன்னாடியே சொல்லுங்கப்பு!
சுவையான மிக்ஸர். ரசித்தேன்.
ஆமா வெங்கட்... எவ்வளவோ ட்ரை பண்ணியும் கப்பம் கட்டாம தப்ப முடியல. சந்திப்புக்கான இடம் கிடைச்சதும் தேதி முடிவாயிரும். முடிவானதும் உடனே அறிவிப்பு வரும்ப்பா. ரசித்த உங்களுக்கு இதயம் நிறை நன்றி!
Deleteஅனைத்தும் ரசனைக்குரியவை. முறுவலை வரவழைத்த முறுவல் மிக்சர். நன்றி கணேஷ். பதிவர் சந்திப்புக்காக புதிய தளம் உருவாக்கப்படுவதறிந்து மிக்க மகிழ்ச்சி. இதுபோன்ற சந்திப்புகளால் பதிவர்களுக்குள் பேதங்கள் மறைந்து நட்புறவு தழைக்கும் என்பது உறுதி.
ReplyDeleteஆமாம்... அனைவரும் நல்லுறவுடன், நட்புடன் இருக்கே வேண்டுமென்பதே நோக்கம்! ரசித்துப் படித்து மகிழ்ந்த உங்களுக்கு என் மனம் நிறைய நன்றி கீதா!
Deleteஇவன் சிவப்பாகத்தானே இருக்கிறான்... ஏன் ப்ளாக்கர்னு//
ReplyDeleteநல்லவேளை அடி கிடைக்கவில்லை ஹா ஹா ஹா ஹா.....
அடியா...? அதெல்லாம் நாங்க விட்ருவமா? ஓஓஓடிருவோம்ல... ஹி... ஹி...!
Deleteமெ.ப. இருந்துமா...?
Deleteஎன்ன சொன்னாலும் எழுதினாலும் "மாமா"க்கள் திருந்தப்போவதில்லை அண்ணே...!
ReplyDeleteஆமாம்ப்பா... வருத்தப்பட வெக்கற நிஜம் இதான்! மிக்க நன்றி!
Deleteப்லாக்கர்னு சொன்னதும் போலீஸ்கார் பத்திரிகைகாரர்னு நினைச்சிருப்பார்.. நீங்க சொல்லியிருக்கலாமே...
ReplyDeleteகாவிரியும், துளிர் வெற்றிலைக் கொடிக்காலும், அகத்திக் கீரையும், வயல் வரப்புகளும், ஜமீன்தார் வீட்டுக் குழந்தைகளுடன் உல்லாசப் பயணம் போன திருவேங்கிமலையும் அந்த நாவலின் வர்ணனைகளுக்கான பின்னணி ஆயின.’’
ReplyDeleteபின்ன்ணிக் காட்சி ரசிக்கவைத்தது ...
படித்து ரசித்த உங்களுக்கு மனம் நிறைய நன்றி!
Deleteசார் நாங்க தமிழ் ப்ளாக்கர்ஸ் எங்களுக்கு தமிழில் மட்டும் எழுதப் படிக்க தெரியும் அதனால் நீங்கள் நோ பார்க்கிங்க் என்று எழுதி இருப்பதை எங்களுக்கு படிக்க தெரியாது என்று சொல்லி பார்த்து இருக்க வேண்டியதுதானே
ReplyDeleteநல்ல ஐடியா... அப்ப தோணாமப் போய்டுச்சே... மிக்க நன்றி!
Deleteப்ளாக்கர்னு சொல்லியும்... என்னவொரு தைரியம்...!
ReplyDeleteதுணுக்கு சுவையுடன் மிக்சர் அருமை...
மிக்ஸரை ரசித்த உங்களுக்கு மனம் நிறைய நன்றி!
Delete// ‘‘இவன் சிவப்பாகத்தானே இருக்கிறான்... ஏன் ப்ளாக்கர்னு சொல்லிக்கறான்? பக்கத்துல இருக்கற மூணு பேரும் வேணா கறுப்பா இருக்காங்க. ப்ளாக்கர்ஸ்னு சொல்லலாம்’’ என்று நினைத்தாரோ என்னவோ...// ஹா ஹா. படித்து வாய்விட்டு கொஞ்சம் சத்தமாக சிரித்து விட, என் அம்மா பதற்றத்துடன் என் அறைக்குள் எட்டி பார்த்தார்....
ReplyDeleteரசித்துச சிரித்த ரூபக்குக்கு என் இதயம் நிறை நன்றி!
Delete/நோ பார்க்கிங் இல்லாத இடத்தில் வண்டியை நிறுத்தியதுதான் /
ReplyDeleteமற்றவருக்கான எச்சரிக்கையாக கிடைத்தவற்றை அள்ளிச் சென்றுவிட்டார்கள் போலும்.
ஹும்... அதற்கு நாங்கள்தானா பலியாக வேண்டும்? நேரம்ங்க...! படித்து ரசித்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!
Deleteஅட..பிளாக்கர்ஸ்ன்னு சொல்லியும் கூட கண்டுக்க வில்லையா?ஹ்ம்....நம்ம மதிப்பு அவ்வளவுதானாண்ணா?
ReplyDeleteஉங்களுக்கே உரித்தான நகைச்சுவையுடன் எழுதப்பட்டிருந்த பகிர்வை ரசித்தேன்.சிரித்தேன்.
ரசித்துப் படித்த தங்கைக்கு மனம் நிறைய நன்றி!
Deleteபெண் என்றல் இங்கு ரொம்ப பேர் இரக்கம் காட்டுறாங்க தல
ReplyDeleteநான் தினமும் பஸ் ஏறும் இடத்தில நானும் ஒரு பெண்ணும் தினமும் செல்வது வழக்கம் அந்த பெண் ஏறும் பட்சத்தில் மட்டுமே தனியார் பேருந்து நிற்கிறது அவங்க வரல கோவிந்த தான்
இதுதான் உலக வழக்கமாக இருக்கிறது நண்பரே... ரசித்துப் படித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!
Deleteப்ளாக்கர்னு சொல்லியுமா ? நாம இன்னும் நிறைய முன்னுக்கு வரணும் போலிருக்கு
ReplyDeleteகணேஷ் சார்
உங்கள் எழுத்து நடையை வழக்கம் போல் ரசிக்கும் படி எழுதியிருகின்றீர்கள்
என் எழுத்து நடையை ரசித்த உங்களுக்கு மனம் நிறைய நன்றி!
Deleteஹா ஹா ஹா நல்லவேள நேத்து வந்திருந்தா நானும் சிக்கிறுப்பேனோ... இருந்தும் பிரபல பிளாக்கரான உங்களை ஏன் விட்டுவிட்டார்கள்... :-)
ReplyDelete//பதிவர் சந்திப்பு பத்தி என்னதான்யா பேசினீங்கன்னு கேக்கறீங்களா...? / அப்போ கடைசி வரைக்கும் ஒண்ணுமே பேசல அப்டி தான
// (நன்றி: 12.8.84 ஆ.வி.)// இதைப் படிக்கும் போது நம்மாளுக்கு புல்லரிச்சுப் போயிருக்குமே
நீயும் வந்திருந்தா ரொம்ப சுவாரஸ்யமா ஆகியிருக்கும்னுதான் எனக்கும் தோணிச்சு! எலேய்... டேட்டும் எடமும் ஃபிக்ஸ் ஆகறதுக்கு முன்னால எதுவும் மூச்சு விடக் கூடாதுன்னு சங்கத்து ஆளான உனக்கே தெரியலியா.. முதல்ல உன்னை சங்கத்த விட்டு விலக்கோணும்! ஹி... ஹி...! மிக்க நன்றி!
DeleteFestival season has started and hence traffic police is looking for extra Vitamin M to meet the forthcoming expenses. Srinivasan Kalyanam - read and enjoyed and also retained the matter in my mind which I may use in my friends / family circle. Snippet about the first story of Lakshmi Madam is also nice to know.
ReplyDeleteநீங்க சொலற மாதிரி திருவிழா சீஸன் ஆரம்பிச்சுட்டதும் கப்பம் வசூலிக்கறதுக்கு காரணமோ என்னவோ..! அனைத்துப் பகுதிகளையும் படித்து ரசித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!
Deleteஇந்த டோயிங் கொடுமை பெருங்கொடுமைங்க. நாலு வண்டி பக்கத்துப்பக்கத்துலயே நின்னாலும் புதுசா நல்லாத் தெரியற வண்டியைப் பார்த்து அள்ளிட்டுப் போயிருவாங்க.
ReplyDeleteப்ளாக்கர்ஸ் :-))))
அவஸ்தை அங்க உங்க ஊர்லயும் இருக்குதா? ரசித்துப் படித்த உங்களு்க்கு என் மனம் நிறைய நன்றி!
Deleteமிக்சர் மொறு மொறு...
ReplyDeleteசுவையை ரசித்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!
Deleteஎன்னாது பிளாக்கர்ஸ் சா ....! எவ்வளவு தகிரியம் இருந்தா பிளாக்ல டிக்கெட் விக்குறத எங்குட்டே சொல்லுவீங்க ...!
ReplyDeleteபுடிங்க ஏட்டய்யா புடிங்க...! ஒரு பயபுள்ள தப்பவிடப்புடாது . ரெம்ப முக்கியமா "ழே"ன்னு முழிச்சிட்டு இருக்க அந்த ஆள அப்புடியே அமுக்குயா ...!
புடிச்சு உள்ள போட்டு கையிலே போடுங்க, இனி பிளாக்கர்ஸ் ன்னு சொல்லுவியா சொல்லுவியா ...!
என்னா ஆசை உனக்கு தம்பீ....! ஊருக்கு வர்றப்ப ‘கவனிச்சுர’ வேண்டியதுதான். ஹி... ஹி...! மிக்க நன்றி!
Deleteமிக்சர் சுவை.
ReplyDeleteரசித்த உங்களுக்கு என் மனம் நிறைய நன்றி!
Deleteப்ளாக்கர்ஸ் என்று சொன்னதும் அடிக்காம விட்டாங்களே....!!!! சும்மா ஜோக் தான் கோச்சுக்காதீங்க!
ReplyDeleteஹா... ஹா... ஹா... உங்ககிட்ட கோபம் வருமா என்ன...? மிக்க நன்றி ஸ்ரீராம்!
Deleteபதிவர் சந்திப்புன்னு சொல்லி இப்படிலாம் லந்து பண்றீங்களா?!
ReplyDeleteலந்து பண்ணினது நாங்கல்ல தாயீ... போலீசு தான். ஹா... ஹா...!
Delete
ReplyDeleteஅது சரி, நோ பார்க்கிங் போர்ட் ரோடின் சைடில் இருந்ததா.? சற்றெ மெதுவான பதிவர்கள் கப்பம் கட்டும்படி ஆகிவிட்டதா.? பதிவர் சந்திப்பு விவரங்களுக்கு காத்திருக்கிறேன். லக்ஷ்மியின் நாவல் உருவான கதைதான் போடுவீர்களோ. இதொ இங்கே ஒரு நாவல் பிறந்த கதை. பார்க்க:- gmbat1649.blogspot.in/2012/01/blog-post_16.html
இதோ உடனே பார்க்கிறேன் ஐயா...! படித்து ரசித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!
Delete// ‘‘நாங்கள்ளாம் ப்ளாகர்ஸ் சார்...’’ என்றதும் போலீஸ்காரர் ‘ழே’யென்று விழித்தார். ” //
ReplyDeleteபடித்தவுடன் சிரிப்புதான் வந்தது. போலீஸ் நண்பர்களுக்கு “ரோட்டில்” என்ன செய்வது என்று தெரியும். “நெட்டில்” என்ன செய்வது என்று அவர்களுக்கு மட்டுமல்ல வெளியில் எத்தனை பேருக்கு தெரியும்?
நிஜம்தான் நண்பரே... ப்ளாக்கர் என்றதும் அவர் முழித்த முழியிலேயே அது தெரிந்து போனது...! சிரித்துப் படித்த உங்களுக்கு என் மனம் நிறைய நன்றி!
Deleteபோலீஸ் மாமாக்கள் கப்பம் இல்லாமல் விடமாட்டார்கள்தான்! அவர்கள் ப்ளாக்கர்ஸையும் அறிந்திருக்க வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை! துணுக்குகள் இரண்டும் அருமை! ரசித்தேன்! நன்றி!
ReplyDeleteரசித்துப் படித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!
Deleteபதிவர் விழா பற்றிய தகவல்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
ReplyDelete@ஸ்ரீராம் ப்ளாகர்ஸ் என்று சொல்லியும் அடிக்கலையா? - என்று கேட்டிருந்தால் நன்றாக இருந்திருக்குமோ? (இதுவும் சும்மா ஜோக் தான்!)நீங்களும் கோச்சுக்காதீங்க!
சுப்பு ஆறுமுகம் அவர்களின் நகைச்சுவை அருமை.
நாவல் பிறந்த கதை சுவை.
மொறுமொறு மிக்சர் தாமதமாகப் படித்தாலும் மொறுமொறுன்னு இருந்தது.
மிக்ஸரின் மொறுமொறுப்பை ரசித்த உங்களுக்கு என் மனம் நிறைய நன்றி!
Delete‘‘இவன் சிவப்பாகத்தானே இருக்கிறான்... ஏன் ப்ளாக்கர்னு சொல்லிக்கறான்:))))
ReplyDeleteகறுப்பாவது சிவப்பாவது...... காசேதான் கடவுளடா :))
உண்மைதாங்க மாதேவி நீங்க சொல்றது. ரசித்துப் படித்த உங்களுக்கு உளம் கனிந்த நன்றி!
Deleteபதிவர் சந்திப்பு பற்றிய விபரங்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். எழுத்தாளர் லக்ஷ்மி முதல் நாவல் எழுதிய விபரம் சுவாரசியமாக இருந்தது.
ReplyDeleteரசித்துப் படித்த உங்களுக்கு என் மனம் நிறைய நன்றி!
Deleteபதிவர் சந்திப்புப் பற்றிய தகவலை ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்.மிக்சர் ரொம்பவே க்ரிஸ்பாக இருக்கிறது.
ReplyDeleteமிக்ஸரை ரசித்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!
Deleteபார்க் செய்யும் போது பார்த்து செய்ய வேண்டியது தானே? போலீஸ் தன் வேலையைத் தானே செய்கிறது?
ReplyDeleteபக்கத்து சந்தில் நோ பார்க்கிங் போட்டுவிட்டு இங்கே பார்க்கிங் உள்ள இடத்தில் வண்டிகளை அள்ளியது நியாயமா அப்பா ஸார்! படம் போட்டிருக்கேனே பாக்கலியா... நோ பார்க்கிங்ல நின்ன வண்டிகளை விட்டுட்டானுங்க நியாயமாருங்க... என்னத்தச் சொல்ல, போங்க...!
Deleteஇன்னாபா நீ நோம்பு நேரத்துலே மிக்ஸரெல்லாம் சப்ளை பண்ணிக்கிட்டு?
ReplyDeleteசரி சரி நோம்பு கஞ்சியோடு மிக்ஸர் காம்பினேஷன் ஸோக்கா இர்க்கும்.
அது சரி செம்மொயி 'பார்க்'குக்கே அவ்ளோ பிரச்சன வரும்போது நம்ம டூ வீலர் "பார்க்"குக்கு... இதெல்லாம் ஜகஜம்பா!
ஸோக்கா கருத்துச் சொல்லிக்கின நைனா...! படா டாங்ஸு!
Deleteசிறப்பான தகவலக்கு நன்றி
ReplyDelete