Wednesday, July 17, 2013

வாத்யாரின் படகோட்டி - 2

Posted by பால கணேஷ் Wednesday, July 17, 2013
க்கள் விரும்பிப் பார்த்து ரசித்த படங்களை அதே கதையை வைத்துக் கொண்டு புதிய ட்ரீட்மெண்ட்டில் கொடுத்து வெற்றி பெறுவது சமீப காலமாக தமிழ்சினிமாவில் வழக்கமாகி விட்டது. பில்லா, நான் அவன் இல்லை, தில்லுமுல்லு.... இப்படிப் பல படங்கள் வந்து விட்டன. எம்.ஜி.ஆர்., நம்பியார், நாகேஷ் போன்றோரை வைத்து சி.ஜி.யில் மீண்டும் படகோட்டி-2 படம் தயாரிக்க முடிவு செய்தார் எனக்குத் தெரிந்த ஒரு தயாரிப்பாளர். கதையை புதிய ட்ரீட்மெண்டில் எழுதித்தர குடிகார எழுத்தாளர் கோவணாண்டியிடம் கேட்டுக் கொண்டார். கோவணாண்டியும் குடிக்காத நேரம் போக மீதி நேரமெல்லாம் சிரமப்பட்டு உழைத்து(!) கதையை எழுதினார்.

ஒரு சமயம் டாஸ்மாக்கில் பிராந்தி வாங்கிக் குடிக்கப் பணமில்லாமல் தான் எழுதிய ஸ்கிரிப்டை எடைக்குப் போட்டுவிட்டு அந்தப் பணத்தில் குடிக்கப் போய்விட்டார். என் வீட்டுப் புத்தகங்களை எடைக்குப் போடப் போயிருந்தபோது, அந்த ஸ்கிரிப்டைப் பார்த்துவிட்டு விசாரித்த என்னிடம் கடைக்காரன் சொன்ன தகவல் இது. கடைக்காரன் எடை போடுகையில், அந்த ஸ்கிரிப்டிலிருந்து இரண்டு தாள்களை சுட்டு வந்தேன். அதில் இருந்தது ஒரு சீனும், அதைத் தொடர்ந்து வரும் பாடலும்...! இதோ உங்களுக்காக அது இங்கே:

ரசாங்கம் மதுக்கடைகளை அரசைத் தவிர தனியாரும் ஏலத்தில் எடுத்து நடத்தலாம் என்று அறிவித்திருந்தது. ஆகவே ஆங்காங்கே தனியார் மதுக்கடைகளும் முளைக்கத் துவங்கியிருந்தன. வில்லன் எம்.என். நம்பியாரும் தனது பிரம்மாண்டமான மதுக்கடை‌யைத் திறந்திருந்தார். அந்த மதுக்கடையை நோக்கிச் செல்லும் தன் காலனி மக்களை வழிமறிக்கிறார் வாத்யார்.

எம்.ஜி.ஆர்.: ‘‘இதோ பாருங்க... குடிக்காதீங்க, குடிக்காதீங்கன்னு நான் தலை தலையா அடிச்சுக்கிட்டாலும் நீங்க கேக்கறதா இல்ல. சரி, குடிக்கறதுதான் குடிக்கறீங்க... தமிழ்நாடு ஸ்டேட் மார்க்கெட்டிங் கார்ப்பரேஷன் கடைகள்ல குடிங்க...’’

குடிகாரன் 1 : ‘‘இன்னாபா இது... புச்சா ஏதோ கடை பேரச் சொல்றாரு தலீவரு...?’’

நாகேஷ் : ‘‘அட லூசு! டாஸ்மாக்கைத் தான்யா அவர் விரிவாச் சொல்லுறாரு... அங்க சரக்குல்லாம் சரியா இல்லண்ணே... அதான் வேற கடைக்குப் போறோம்...’’

எம்.ஜி.ஆர்.: ‘‘அரசுக்கு வரி செலுத்தறது குடிமகன்களோட கடமை. அதுமாதிரி ‘டாஸ்மாக்’ல குடிக்கறதும் ‘குடி’மகன்கள் கடமை. உங்களுக்காக இன்னிக்கு குடிக்கறவங்களுக்கெல்லாம் சைட் டிஷ் இலவசமா தரச் சொல்லியிருக்கேன்...’’

அப்போது ஒரு கார் வந்து நிற்க, அதிலிருந்து எம்.என். நம்பியார் இறங்குகிறார். கைகளில் (இல்லாத) கஞ்சாவைக் கசக்கியபடி எம்.ஜி.ஆரைப் பார்த்துச் சிரிக்கிறார்.

நம்பியார்: ‘‘ஹுக்குக்கும்! டேய்... இவன் சைட்டிஷ் மட்டும்தான் கொடுப்பான். நான் சரக்கையே கொடுப்பேன்டா... என் கடையில விஸ்கி பாதி ரேட்ல தரச் சொல்லியிருக்கேன். அத்தோட... நீங்கள்ளாம் ரசி்க்கறதுக்காக ஒரு ஐட்டம் டான்ஸும்  ஏற்பாடு பண்ணியிருக்கேன். அங்க‌ே போங்கடா....’’

‘குடி’ மக்கள் அனைவரும் வாத்யாரைத் தள்ளிவிட்டு, நம்பியாரின் மதுக்கடையை நோக்கி ஓட, வாத்யாரின் மேல் ஒரு ஏளனப் பார்வையை வீசுகிறார் நம்பியார். வெறுப்புப் பார்வை ஒன்றை நம்பியாரின் மீது வீசிவிட்டு, தோள்களை ஏற்றி இறக்கி, கைகளைத் தூக்கி விரித்துவிட்டு கேமராவை நோக்கி நடக்கத் துவங்குகிறார் எம்.ஜி.ஆர். ஸ்டார்ட் மூஜிக்...! டன்டன் டன்டன் டன்டன் டன்டன்.....


குடித்ததெல்லாம் குடித்தார் - அவர்
யாருக்காகக் குடித்தார்?
ஒருத்தருக்கா குடித்தார் - இல்லை,
அரசுக்காகக் குடித்தார்..!
ஒருத்தருக்கா குடித்தார் - இல்லை,
அரசுக்காகக் குடித்தார்...!


பாதிரேட்டில் விஸ்கி என்றால் எவர் குடிக்க வெறுத்திடுவார்?
பிராந்தி தரும் போதையைத்தான் பீரும் தர மறுத்திடுமா?
முடியாட்சி அன்று, ‘குடி’யாட்சி இன்று
குடிக்காமல் எவரும் இருப்பதில்லை!


குடித்ததெல்லாம் குடித்தார் - அவர்
யாருக்காகக் குடித்தார்?
ஒருத்தருக்கா குடித்தார் - இல்லை,
அரசுக்காகக் குடித்தார்..!


குடித்தவன் மேல் பழியுமில்லை...
கொடுத்தவன்‌மேல் பாவம் இல்லை...
சந்து சந்தாய் கடை திறந்தார்
குடித்தவர்கள் தெருவில் நின்றார்...!
துயர் வந்தபோதும், சுகம் வந்தபோதும்
ஒருபோதும் குடியை நிறுத்தவில்லை!


குடித்ததெல்லாம் குடித்தார் - அவர்
யாருக்காகக் குடித்தார்?
ஒருத்தருக்கா குடித்தார் - இல்லை,
அரசுக்காகக் குடித்தார்..!


பண்புடையோர் சபைதனிலே
குடித்தவர்கள் தொல்லை செய்வார்!
வயிறு நிறைய மதுவிருக்கும்....
வார்த்தையெல்லாம் கப்படிக்கும்...!
தடையொன்று போட்டு கடைதன்னை மூடி
குடியாதோர் வாழ வாழ்த்திடுவோம்!


குடித்ததெல்லாம் குடித்தார் - அவர்
யாருக்காகக் குடித்தார்?
ஒருத்தருக்கா குடித்தார் - இல்லை,
அரசுக்காகக் குடித்தார்..!


பாடியபடியே மாலை நேர எஃபெக்டில் கடற்கரையை நோக்கி வாத்யார் நடக்க அவர் உருவம் புள்ளியாகும் வரை காமிரா தொடர்கிறது. வாத்யார் ஸில் அவுட்டாக... டிஸ்ஸால்வ்!

கட்!

=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*

கோவணாண்டியிடமிருந்து இதற்குமுன் நான் சுட்ட பாடல் : போனால் போகட்டும் போடா!

=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*

56 comments:

  1. Replies
    1. ரசித்த உங்களுக்கு மனம் நிறைய நன்றி!

      Delete
  2. "கண்ணதாசன்" ஸ்டைல் தெரியுதே பாட்டுலே.. ;-)

    ReplyDelete
    Replies
    1. கண்ணதாசன் இல்லப்பா... அது வாலி! ரசித்தமைக்கு மிக்க நன்றி!

      Delete
  3. Replies
    1. ரசித்த உங்களு்க்கு என் உளம் கனிந்த நன்றி!

      Delete
  4. இனிய வணக்கம் நண்பரே...
    நீண்ட இடைவெளிக்கு மன்னிக்கவும்...
    சூழல் என்னைக் கட்டிப்போட்டு விட்டது...
    ==
    தாளம் தப்பாமல் அப்படியே கருத்து மாற்றி
    எழுதுவது மிகவும் கடினமான செயல்..
    அழகாக இருக்கிறது...
    வார்த்தைச் சித்தர் கண்ணதாசன்
    அப்படி என் கண்முன்னே தெரிகிறார்...
    ===

    ReplyDelete
    Replies
    1. நீண்ட காலத்தின்பின் தங்களைப் பார்ப்பதில் மிகமிக மகிழ்ச்சி ம்கேன்! பாடலை ரசித்தமைக்கு என் மனம் நிறைய நன்றி! நீங்களும் வாலியின் பாடலை கண்ணதாசன்னே நினைச்சுட்டீங்களே...!

      Delete
  5. கடைக்காரன் எடை போடுகையில்,
    ஸ்கிரிப்டிலிருந்து சுட்டு வந்த காட்சியும் பாடலும்
    ரசிக்கவைத்தன ..பாராட்டுக்கள்..!

    ReplyDelete
    Replies
    1. ரசித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
  6. Replies
    1. பாடலை ரசித்த உங்களுக்கு என் மனம் நிறைய நன்றி!

      Delete
  7. Replies
    1. ரசித்துப் பாராட்டிய உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!

      Delete
  8. வித்தியாசமான சிந்தனை பாராட்டுகள் எங்க ஊர்காரரே...

    //எம்.ஜி.ஆர்.: ‘‘அரசுக்கு வரி செலுத்தறது குடிமகன்களோட கடமை. அதுமாதிரி ‘டாஸ்மாக்’ல குடிக்கறதும் ‘குடி’மகன்கள் கடமை. உங்களுக்காக இன்னிக்கு குடிக்கறவங்களுக்கெல்லாம் சைட் டிஷ் இலவசமா தரச் சொல்லியிருக்கேன்...///


    டாஸ்மாக்குல குடிச்ச ஒரு சைட்டும் டிஷும் தருகிறா நம்ம வாத்தியார் வாத்தியார் புத்திசாலிங்க சைட் வந்தா நம்ம கண்களில் இருந்து கண்ணிர் வரும் என்று டிஷும் தருகிறாரே’’

    ReplyDelete
    Replies
    1. வித்தியாசமான சிந்தனை எனப் பாராட்டிய என்னூர்த்தமிழனுக்கு என் மனம் நிறைய நன்றி!

      Delete
  9. எம்ஜிஆர் உயிரோடு இருந்த போது எம்ஜிஆர் உருவத்தை கதாநாயகனாக வைத்து காமிக்ஸ் இதழ் ஒன்று வந்தது. எங்கிருந்து என்ன தகவலோ, காமிக்ஸை நிறுத்தி விட்டார்கள். நல்லவேளை இன்று எம்ஜிஆர் இல்லை. உங்கள் பதிவு தப்பியது. நகைச்சுவையாகவே கோவணாண்டியின் “ஸ்கிரிப்ட்” ஐ நான் ரசிக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. நகைச்சுவையாக புரிந்து கொள்ளப்படும் என்று நம்பித்தான் நானும் எழுதினேன் நண்பரே... இல்லாட்டி வாத்யாரை வெச்சே காமெடி பண்ணுவனா? ரசித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
  10. ஹ ஹா ஹா ஹா அட இது வேறயா சிரிச்சு முடியல போங்க....!

    ReplyDelete
    Replies
    1. ரசித்துச் சிரித்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!

      Delete
  11. ரசனையான பாடல்.

    ReplyDelete
    Replies
    1. ரசித்த உங்களுக்கு என் மனம் நிறைய நன்றி!

      Delete
  12. //தடையொன்று போட்டு கடைதன்னை மூடி
    குடியாதோர் வாழ வாழ்த்திடுவோம்!//
    உங்களின் நல்லெண்ணம் நிறைவேறட்டும்
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்திய உமது அன்புள்ளத்திற்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
  13. மிக மிக அருமை
    காட்சியும் அதற்கான பாடலும்மனதை கொள்ளை கொண்டது
    கஞ்சா இல்லாமல் நம்பியார் கையைக் கசக்குவதை
    மிகவும் ரசித்தேன்
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. ஹா... ஹா... ஹா... நம்பியார்னாலே அந்த ஓரப் பார்வையும், கையக் கசக்கறதும், எகத்தாளக் குரலும் நினைவுக்கு வராம போகுமோ ரமணி ஸார்! ரசித்துப் பாராட்டிய உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!

      Delete
  14. சூப்பர் சார். மாடர்ன் படகோட்டி

    //வயிறு நிறைய மதுவிருக்கும்....
    வார்த்தையெல்லாம் கப்படிக்கும்...!// ஹா ஹா ஹா

    ReplyDelete
    Replies
    1. ரசித்துச் சிரித்த ரூபக்குக்கு என் மனம் நிறைய நன்றி!

      Delete
  15. நாட்டு நடப்பை சொல்லி செல்லும் பாடல் அருமை அண்ணா!

    ReplyDelete
    Replies
    1. உனக்குப் பிடிச்சிருந்துச்சுன்றதுல கொள்ளை மகிழ்ச்சி எனக்கு சிஸ்!

      Delete
  16. இன்றைய சூழலுக்கு தேவையான பாடல்தான் சிந்திக்க வேண்டியவர்கள் எல்லாம் போதையில் இருக்கிறார்கள் யாருக்காக இதை எழுதினீர்கள் என்று யோசிக்கிறேன் ..........மேலும் இந்த பதிவை படிக்கும் 'குடி' மகன்கள் சிந்தியுங்கள் நன்றி பாலா சார் ( விரைவில் பாடல் ஆசிரியராக உங்களை பார்க்கலாம் போல )

    ReplyDelete
    Replies
    1. நம்ம உ.சி.ர ஸார் எடு்க்கற படத்துல பாடலாசிரியராய்டலாம்னு சின்னதா ஒரு ஐடியா! ஹி... ஹி... மிக்க நன்றி தோழி!

      Delete
  17. This might be the effect of your recent meeting with Settaikaran. Nicely worded and the entire song is quite meaningful. Good job and well done. Keep it up.

    ReplyDelete
    Replies
    1. சேட்டையண்ணாவின் பாதிப்பு என்ட்ட எப்பவுமே உண்டு. அதனாலதான் இதுக்கு முன்னாடி இப்படி ஒரு பாட்டு பண்ணியிருக்கேன்னு லிங்க்கும் தந்திருக்கேன். ரசித்துப் படித்த உங்களுக்கு என் மனம் நிறைய நன்றி!

      Delete
  18. ஹா...ஹா... கலக்கல் கணேஷ்.

    ReplyDelete
    Replies
    1. ரசித்துப் படித்த ஸ்ரீராமுக்கு என் இதயம்நிறை நன்றி!

      Delete
  19. ரீ மேக் சாங் சூப்பர்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. பாடலை ரசித்த சுரேஷுக்கு என் உளம் கனிந்த நன்றி!

      Delete
  20. :-) என்னா தகிரியம்! ஆனால் நீங்க அந்தக் கால எம் ஜி ஆர் ரசிகன் என்று முன்பு குறிப்பிட்டிருந்ததால் பிழைத்தீர்கள்!
    ஆனால் வாலி இந்தப் பாட்டைப் படித்திருப்பார் போலிருக்கு, அவர் ஆஸ்பத்திரியில் அனுமதி என்று செய்தி வருகின்றது.

    ReplyDelete
    Replies
    1. இந்த நிமிடம் வரை நான் வாத்யாரின் தீவிர ரசிகன்தான் கே.ஜி. ஸார். அதனாலதான் உரிமையா அவரை கலாய்ச்சிருக்கேன். காவியக் கவிஞர் ஆஸ்பத்திரியிலா...? அடடா...! அவர் நலம்பெற்று வர வேண்டுகிறேன். ரசித்துப் படித்த உங்களுக்கு என் மனம் நிறைய நன்றி!

      Delete

  21. எங்கிருந்து சுட்டதாய் இருந்தால்தான் என்ன. ? அருமை.ரசிக்க வைக்கிறது. பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. ரசித்துப் பாராட்டிய ஜி.எம்.பி. ஸாருக்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
  22. பாடலை வெகுவாக ரசித்தேன், கணேஷ், கூடவே அனாயாசமாக உங்களுக்கு வரும் நகைச்சுவையையும்!

    ReplyDelete
    Replies
    1. பாடலுடன் சேர்த்து நகைச்சுவையையும் ரசித்தேன் என்று சொல்லி உற்சாகம் தந்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!

      Delete
  23. கோவண ஆண்டியிடமிருந்து சுட்டதோ..... :)

    மிக நல்ல காட்சி - பாட்டும் சூப்பர் - செம ஹிட் தான் படம்!

    ReplyDelete
    Replies
    1. அப்ப.... தைரியமா எடுத்துரலாம்ங்கறீங்க...! சூப்பர்ஹிட் படம் என்று கூறி மகிழ்வு தந்த உங்களுக்கு என் மனம் நிறைய நன்றி!

      Delete
  24. ஹா... ஹா....
    பாடல் அருமை அண்ணா....
    குடிக்கிற மாதிரி நடிக்காத வாத்தியாரை கோவணான்டி டாஸ்மார்க்கிட்ட விட்டுட்டாரே...

    ReplyDelete
    Replies
    1. ரசித்துச் சிரித்து பாடலை ரசித்த குமாருக்கு என் மனம் நிறைய நன்றி!

      Delete
  25. Replies
    1. நறுக்கென சுருக்கமாய்ப் பாராட்டி அளவில்லாத ‌உற்சாகத்தைத் தந்த தங்கைக்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
  26. சரி, குடிக்கறதுதான் குடிக்கறீங்க... தமிழ்நாடு ஸ்டேட் மார்க்கெட்டிங் கார்ப்பரேஷன் கடைகள்ல குடிங்க...’’

    குடிகாரன் 1 : ‘‘இன்னாபா இது... புச்சா ஏதோ கடை பேரச் சொல்றாரு தலீவரு...?’’

    நாகேஷ் : ‘‘அட லூசு! டாஸ்மாக்கைத் தான்யா அவர் விரிவாச் சொல்லுறாரு..

    நினைத்து நினைத்து சிரிக்கவைத்தப் பதிவு.

    குடித்தாலும் அரசின் மதுபானக்கடையில் குடியுங்கள் என்று பிரச்சாரம் செய்வதுபோல் பாடல் ஆரம்பித்தாலும் முடிவில்...

    \\தடையொன்று போட்டு கடைதன்னை மூடி
    குடியாதோர் வாழ வாழ்த்திடுவோம்!\\

    என்று பாடி மக்கள் திலகம் தன் கொள்கையைக் காப்பாற்றிவிட்டார்.

    நல்ல கற்பனைவளம் உங்களுக்கு கணேஷ். மனமார்ந்த பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. நிஜந்தான் கீதா... என்னதான் நமக்குப் பிடிச்சவராச்சேன்னு வாத்யாரை வெச்சே கலாய்த்தல் பண்ணினாலும் இந்த முத்தாய்ப்பு ரெண்டு வரிகள் வெச்சதும்தான் நிம்மதியாயிருந்துச்சு. அதான் வாத்யார்! படித்து ரசித்து நிறையப் பாரட்டிய உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!

      Delete
  27. அண்ணா! உங்களை தொடர்பதிவுக்கு அழைச்சிருக்கேன். வந்து பார்த்து தொடருங்க ப்ளீஸ் http://rajiyinkanavugal.blogspot.in/2013/07/blog-post_8644.html

    ReplyDelete
  28. இது நிஜமா சார்... நம்பவே முடியல? அந்த ரீமேக் சாங் சூப்பர்...

    ரொம்ப நாள் அப்புறம் இப்ப தான் சார் வரமுடிஞ்சது! ரொம்ப மிஸ் பண்றேன்!

    ReplyDelete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube