Monday, December 26, 2011

ரத்தத்தில் பூத்த நட்பு!

Posted by பால கணேஷ் Monday, December 26, 2011
ல்லவர்களைத்தான் ஆண்டவன் சோதிப்பான்!’ -இது எவ்வளவு சத்தியமான வார்த்தை! ரொம்ப நல்லவர் நீங்க (ஐஸ்லாம் இல்லீங்க, நிஜமாத்தான் சொல்றேன்!). பிறக்கப்போகிற புதுவருஷம் உங்க எல்லாருக்கும் வளத்தையும் நலத்தையும் குடுக்கணும்னு வாழ்த்தி, ஆண்டவனை வேண்டேறேன். ஆனாலும் பாருங்க... புது வருஷத்துல உங்களுக்கு ஒரு சோதனையைக் குடுக்கறதுன்னு அந்த ஆண்டவன் முடிவு பண்ணிட்டான் போலருக்கு... எதுக்கு இந்த பில்டப்புன்னு யோசிக்கறீங்க தானே..? இந்தப் பதிவோட கடைசியில உங்களுக்கே புரிஞ்சுடும். இப்ப நான் சொல்ல வந்த விஷயத்துக்கு வர்றேன்.

வன்’ 10ம் வகுப்பு, +2 படிச்சது தேவகோட்டையில இருக்கற தே பிரித்தோ மேல்நிலைப் பள்ளியில. கிறிஸ்தவப் பள்ளியான அதில் படிப்புக்குத் தர்ற அதே முக்கியத்துவத்தை ஒழுக்கத்துக்கும் கொடுப்பாங்க. படிக்கிற காலத்துல இவன் அநியாயத்துக்கு அப்பாவியா, சாதுப் பையனாயிருந்தான். (இப்பக் கொஞ்சம் ரெளத்திரம் பழகியிருக்கான்). யாராவது திட்டினாக் கூட பதிலுக்குத் திட்ட வராது. அழுதுடுவான். அவ்வளவு ஸாஃப்ட்! அப்படிப்பட்ட இவன்தான் சக மாணவனை ரத்தம்வரத் தாக்கினான் ஒருமுறை.

பொதுவா உடற்பயிற்சி வகுப்புல வாத்தியார் விளையாடச் சொல்லிட்டார்னா பசங்க கிரிக்கெட்டை செலக்ட் பண்ணினா இவன் ட்வெல்த் மேனாப் போட்டாலே போதும்னுடுவான். ஆனா ஃபுட்பால் விளையாடலாம்னு பாலைக் கையில எடுத்துட்டாங்கன்னா... முதல் ஆளா ஓடிப் போய் நிப்பான். அந்த விளையாட்டு மேல அவ்வளவு ஆசை இவனுக்கு.

ஒரு நாள் பி.டி. மாஸ்டர் லீவு போட்டதால சயன்ஸ் மாஸ்டர் சந்தியாகு அந்த அவருக்கு சார்ஜ் எடுத்துக்கிட்டாரு. அவரு ஃபுட்பால் விளையடச் சொன்னதுல இவனுக்கு படுகுஷிபசங்க ரெண்டு டீமாப் பிரிஞ்சு ஃபுட்பால் விளையாடிக்கிட்டிருந்தோம். ஒரு கட்டத்துல எதிர் அணில இருந்த ராமநாதன் பந்தை வேகமா கடத்திக்கிட்டு வர்றான். எங்க அணிப் பசங்கல்லாம் பின்தங்கிட்டாங்க. அவனை யாரும் சேஸ் பண்ணவே இல்லை. இவன் மூச்சைப் பிடிச்சுக்கிட்டு (எங்க போயிருந்துச்சு அது... புடிககிறதுக்கு?) வேகமா ஓடி, ராமநாதனுக்கு சைடிலருந்து ஏறக்குறைய கீழே படுத்து பந்தை எட்டி உதைச்சான். பந்து பறந்து எங்க டீம் பையன் பக்கம் போயிடுச்சு. ஆனா... பந்தை உதைச்ச இவனுக்கு உடனே சுறுசுறுப்பா காலை பின்னால எடுக்கணும்னு தெரியாததால... பாவம் ராமநாதன்! கால் தடுக்கி குட்டிக்கரணம் அடிச்சான்.

இவன் பதறிப் போய், அவனை கை தூக்கி வி்ட்டான். இவன் பேச ஆரம்பிக்கறதுக்குள்ள... கீழ விழுந்ததுல ராமநாதனுக்கு கண்மண் தெரியாம கோபம வந்துடுச்சு போல... இவன் கையப் புடிச்சு அழுத்தமா கடிச்சுட்டான். சாதாரணக் கடி இல்ல.... வெறிநாய்க் கடி! இவன் கைல பல் பதிஞ்‌சது மட்‌டுமில்லாம, ரத்தம் வர ஆரம்பிச்சுடுச்சு... அப்படி ஒரு அசுரக்கடிவலியில இவன் சுபாவத்தை மீறி அப்ப இவனுக்கு எங்கருந்தோ ஒரு வெறி வந்துட்டுது. அப்ப இவன் கைல நீளமா நகம் வளர்த்திட்டிருந்தான். அப்படியே ராமநாதன் முகத்துல கைய வெச்சு அழுத்தமா ஒரு கீறல் போட்டான். ராமர் அணில் முதுகுல கோடு போட்டதா சொல்லுவாங்களே... அந்த மாதிரி மூணு நகங்கள் அழுத்தமாப் பதிச்ச கோடுகள் ராமநாதன் கன்னத்துல! அவன் முகததுலருந்தும் ரத்தம் வர ஆரம்பிச்சுது.

இதுக்குள்ள நடந்ததை தூரத்துலருந்து பாத்துட்ட சயன்ஸ் மாஸ்டர் சந்தியாகு ஓடி வந்தார். ரெண்டு பேரையும் முதுகுல சாத்தி, டாக்டர்ட்ட கூட்டிட்டுப் போய் .டி.எஸ். இன்ஜெக்ஷன்லாம் போட்டு முதலுதவி செய்ய வெச்சாரு அந்த நல்லவர். அதோட விடாம இதை ஹெட் மாஸ்டர்கிட்ட ரிப்போர்ட் பண்ணணும்னு ரெண்டு பேரையும் இழுத்துட்டுப் போனாரு அவர். அன்னிக்குன்னு பாத்து ஹெச்.எம். லீவ்ல இருந்ததால அசிஸ்டென்ட் ஹெச்.எம். ரூமுககு கூட்டிட்டு்ப் போனாரு. அவ்வளவுதான்... இவனுக்கு கை, காலெல்லாம் ஆட ஆரம்பிச்சுடுச்சு.

ஏன்னா... அப்ப ஹெச்.எம்.மா இருந்த ஃபாதர் டி.எம்.மத்தாய் ரொம்பவே அன்பானவரு. இவன் உட்பட எல்லாப் பசங்களும் அவர்மேல உயிரையே வெச்சிருந்தோம். (அவர் நல்லவரு... ரிடையராகிப் போறப்ப உயிரை திருப்பிக் கொடுத்துட்டாரு.). அசிஸ்டென்ட் ஹெச்.எம். ஃபாதர் இருதயராஜ் ரொம்ப கோபக்காரர். கன்னாபின்னான்னு திட்டுவார், அடிக்கவும் செய்வார். அவர் சில பசங்களை தண்டிக்கிறத இவனே கண்ணால பாத்துருக்கான். (ஆமா... மத்தவங்கல்லாம் மூக்காலயா பாப்பாங்க? எழுதறான் பாருய்யா இவன்!)

அப்படிப்பட்டவர் முன்னால இவன் போய் நிக்கும்போது, ‘பில்டிங் ஸ்ட்ராங்; பேஸ்மெண்ட் வீக்ன்னு வடிவேலு பிரகாஷ்ராஜ்கிட்ட டயலாக் பேசும்போது அவர் கால் நடுங்கும் பாருங்க... அந்த மாதிரி கால் உதற புதுவகை டான்ஸ் ஆடிட்டே போய் நின்னான். ஹார்ட் பீட் உச்சத்துல அடிச்சிட்டிருந்தது. ஆனா பாருங்க...  அன்னிக்கு அதிசயம் நடந்துச்சு! சந்தியாகு மாஸ்டர் சொன்னதையெல்லாம் கேட்டுட்டு ஃபாதர் இருதயராஜ் அடிக்கலை, திட்டலை! ரெண்டு பேருக்கும் சிரிச்சுட்டே அட்வைஸ் பண்ணி அனுப்பிட்டாரு.

பின்னால ஒரு நாள்ல தைரியத்தை வரவழைச்சுக்கிட்டு அதைப்பத்தி அவர்கிட்ட இவன் கேட்டப்ப, ‘‘நீ ரொம்ப நல்ல பையன்னு தெரியும். லீவ் போடறதுன்னாக் கூட அம்மா, அண்ணன்ட்ட லெட்டர் வாங்கிட்டு வராம, நீயே இங்கிலீஷ்ல சொந்தமா எழுதி என்கிட்ட கையெழுத்து வாங்குவ. அதனாலதான் உன்னை கண்டிச்சு மட்டும் விட்டேன்’’ என்றார்.ஹய்யோ... ஹய்யோ... அம்மாவுக்கு ஆங்கிலம் எழுத வராது, அண்ணனைப் பிடிக்கவே முடியாத அளவு பிஸிங்கற சூழ்நிலையிலதான் இவன் தானே சுயமா எழுதினான்னு.. பாவம், அவருக்குத் தெரியல!

அன்னிலருந்து மூணு நாள் ராமநாதன் வலப்பக்கம் போனா, இவன் இடப்பக்கம் போவான். நாலாம் நாள் மனசு பொறுக்காம இவனே ராமநாதன்கிட்டப் போயி, ‘‘என்ன இருந்தாலும் நான் நடந்துக்கிட்டது ரொம்பத் தப்புடா. ஸாரி...’’ன்னு சொன்னான். மன்னிப்புக் கேக்கறதோட மகத்துவத்தை அன்னிக்கு இவன் புரிஞ்சுக்கிட்டான். ராமநாதன் இவன் தோள்ல கை போட்டு, ‘‘என் மேலயும்தான் தப்பிருக்கு. விடுடா... உனக்குக்கூட கோபம் வரும்னு நான் எதிர்பாக்கவே இல்லடா...’’ன்னுட்டு சிரிச்சான். அப்பலருந்து ஸ்கூலை விட்டுப் பிரியற வரைக்கும் மத்த பசங்க பொறமைப்படற அளவுக்கு இவனுக்கு நெருங்கிய நண்பனாக இருந்தான் ராமநாதன்.

உங்களுக்கு இவன் சொல்ல விரும்புவதும் இதுதான். உங்கள் பக்கம் தவறிருக்கும் பட்சத்தில் கொஞ்சமும் தயங்காமல் மனம் விட்டு மன்னிப்புக் கேளுங்கள். அதனால் உங்களுக்கு ஒன்றும் குறைவு ஏற்பட்டு விடாது. மாறாக, உங்கள் மதிப்பு உயரத்தான் செய்யும்!

இனி... உங்களுக்கு வரவிருக்கும் சோதனை :


50 comments:

  1. இதெல்லாம் பள்ளி கூடத்தில் சகஜமங்க....

    அப்புறம் கடைசியா ஒரு டச்சிங்க வச்சிங்க பாருங்க சூப்பருங்க...

    மன்னிப்பு என்பது தன்டணையின் இறுதி வடிவம்..
    மன்னிக்க தெரிந்த மனதுக்கு எல்லாம் நல்லதாகவே நடக்கும்....

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. என்னது நடைவண்டிகளா...

    தொடரா..?

    பாத்து செய்யுங்க தல...

    ReplyDelete
  3. .// மன்னிப்புக் கேக்கறதோட மகத்துவத்தை அன்னிக்கு இவன் புரிஞ்சுக்கிட்டான்.//

    என்றோ நடந்த நிகழ்ச்சி என்றாலும்,அதை
    சற்றும் சுவை குன்றாது மிகவும் சிறப்பாக எழுதியுள்ளீர்
    நல்ல நடையழகு, கவிதை போல் உள்ளது
    கவிதை எனக்கு எழுத வரவில்லை என்று நீங்கள்
    சொல்வதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன்
    முயலுங்கள் சகோ!
    வெற்றி உறுதி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  4. அருமையான பதிவு
    மன்னிப்பின் மகத்துவம் சொல்லிப் போனவிதம் அருமை
    சிறுவர்களாய் இருக்கையில் சரியாகத்தான் இருக்கிறோம்
    வளர்ந்தவுடன் தான் ஈ.கோ கொம்பு முளைத்துவிடுகிறது
    பகிர்வுக்கு நன்றி த.ம 4

    ReplyDelete
  5. @ கவிதை வீதி... // சௌந்தர் // said...

    -சரிதான் செளந்தர் ஸார். பள்ளிப் பருவத்துல இந்த மாதிரி பலருக்கும் அனுபவங்கள் இருந்திருக்கும். அப்புறம்... பயப்படாதீங்க. மினி தொடர்தான். ரொம்பப் படுத்திடாது நண்பா. முதல் வருகை‌யா கருத்திட்டு என்னை உற்சாகப்படுத்தியதற்கு நன்றிகள் பல!

    ReplyDelete
  6. @ புலவர் சா இராமாநுசம் said...

    -புலவரையா... எனக்கு கதை, கட்டுரைகள் கூட எழுத வராது என்றுதான் எண்ணியிருந்தேன். நண்பர் பட்டுக்கோட்டை பிரபாகர்தான் உங்களால் நிச்சயம் முடியும் என்று ஊக்கப்படுத்தி எழுத வைத்தார். என் எழுத்தை நண்பர்கள் பாராட்டுகிறார்கள என்றால் அதற்கு முழுக்காரணம் அவரே. இப்போது கவிதையும்கூட நீ முயன்றால் வரும் என்கிறீர்கள். நிச்சயம் முயல்கிறேன். அது வெற்றியடைந்தால் எல்லாப் புகழும் தங்களுக்கே. நன்றிங்க!

    ReplyDelete
  7. @ Ramani said...

    -சரியாச் சொன்னீங்க ரமணி சார்! ஈகோன்ற ஒன்றைத் தாண்டி வந்துட்டோம்னா, நமக்கு எல்லாருமே நண்பர்கள்தான். நல்ல கருத்துரை வழங்கிய தங்களுக்கு என் இதய நன்றி!

    ReplyDelete
  8. நடைவண்டியில் பயணிக்க காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  9. உங்க கதையில நீங்களே மைன்ட் வாய்ஸ்ல பேசியிருக்கிங்க பாருங்க...(அவரு கதையில அவர் பேசாம நீயே பேசுவ...)ஆங் எனக்கும் தொத்திக்கிச்சு....மன்னிப்பின் மகத்துவம்....எல்லாருக்கு புரியவைத்திருக்கிங்க....(சின்ன வயசுல சண்டை போட்டு யாரு பிரிஞ்சிருக்காங்க...செல்ல சண்டைதானே யாவும்)ஆமா இன்ட்லி மேல உங்களுக்கு என்ன கோபம் ஓட்டு பட்டைய காணம்.....(படிச்சியா...ஓட்டை போட்டியா...போயிட்டே இரு அத காணம் இத காணம்ன்ட்டு இண்ட்லி ஓட்டு பட்டைய சேட்டு கடையில அடகா வைக்கமுடியும்)

    ReplyDelete
  10. ”நடை வண்டி”யில் எனக்கும் இடம் உண்டா அண்ணா?

    ReplyDelete
  11. உங்களுக்கு இவன் சொல்ல விரும்புவதும் இதுதான். உங்கள் பக்கம் தவறிருக்கும் பட்சத்தில் கொஞ்சமும் தயங்காமல் மனம் விட்டு மன்னிப்புக் கேளுங்கள்.
    >>
    ஆஹா என் வழிதான் என் அண்ணன் வழியும் போல.

    ReplyDelete
  12. @ ராஜி said...

    -‘நடை வண்டியை’ வரவேற்கும் முதல் குரல் என் தங்கையுடையது என்பதில் மிக மகிழ்ச்சி. கண்டிப்பா இடம் தர்றேன் சிஸ்டர்!

    ReplyDelete
  13. @ veedu said...

    -மத்தவங்க நம்மளை கிண்டல் பண்றதுக்கு முன்னால நாமளே நம்மள கிண்டல் பண்ணிக்கறது நல்லது. ‘சோ’ அப்படித்தான் செய்வாரு. அது எனக்குப் பிடிச்சதாலதான் அப்பப்ப கட்டுரைல என் மைண்ட் வாய்ஸ் வருது. உங்களுக்குப் பிடிச்சிருக்குறதுல மகிழ்ச்சி. இண்ட்லி ஓட்டுப் பட்டைய எப்படி இணைக்கிறதுன்னு தெரியாமதான் வைக்கலை. நண்பர்கள்ட்ட கேட்டுட்டு, அடுத்த பதிவுல வெச்சுடறேன் சரியா சுரேஷ்! வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

    ReplyDelete
  14. @ ராஜி said...

    -இதைத்தான் ‘அண்ணனுக்கு தங்கச்சி தப்பாம பொறந்திருக்கு’ன்னு சொல்லுவாங்க. ரொம்ப சந்தோஷம்மா!

    ReplyDelete
  15. Mannippin Magathvam Sollum arumaiyana pathivu.

    Sago. Office-larunthu vantha piragu mobile moolamaaga commentm vote um poduven. But oru arrow mark Tamilmanam vote button kitta thadaiya irukku. Tamilmanam vote poda mudiyala. Kavanikkavum.

    ReplyDelete
  16. @ துரைடேனியல் said...

    -நீங்கள் ரசித்ததற்கு மனமார்ந்த நன்றி துரை! தவறாமல் படித்துக் கருத்திடும் உங்கள் அன்பிற்கு முன் ‘வோட்’ பெரிதில்லை. இருப்பினும் நீங்கள் சொன்னதைக் கவனிக்கிறேன்.

    ReplyDelete
  17. பள்ளிவாழ்க்கை மனதில் ஊஞ்சலாடுது நண்பரே..
    உங்கள் பதிவு என்னை இருபத்து நான்கு வருடங்களுக்கு முன்னர்
    இழுத்துச் சென்றது,,,,
    நடைவண்டிப் பயணத்திற்கு காத்திருக்கிறோம் நண்பரே.

    பிறக்கபோகும் புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பரே.

    ReplyDelete
  18. மன்னிப்புக் கேட்பதால் ஒன்றும் குறைந்துவிடப்போவதில்லை.மன அழுத்தம்கூடக் குறைகிறது.

    எங்களுக்கு நடைபழக்கப்போறீங்கன்னு மட்டும் விளங்குது !

    ReplyDelete
  19. தாமதத்திற்கு மன்னிக்கவும்..மன்னிப்பு கேட்டால் நமக்கான மதிப்பு உயரும் என்ற அருமையான விசயத்தோடு முடித்திருந்தீர்கள்..

    எங்களுக்கு வரவிருக்கும் சோதனை என்று உங்களது நடை வண்டியை அறிமுகப்படுத்தியது சுவை..எதிர்பார்க்கிறேன்..

    ReplyDelete
  20. @ மகேந்திரன் said...

    -ஏதாவது கால யந்திரத்தின் மூலம் பள்ளிப் பருவத்துக்கு மீண்டும் சென்றுவிட முடியாதா என்று பல சமயம் எனக்குத் தோன்றும். வசந்தப் பருவமல்லவா! வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி மகேன்! உங்களுக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  21. @ ஹேமா said...

    -நிஜம்தாங்க. ஆனா அப்படி மன்னிப்புக் கேக்கறது வாய் வார்த்தையா இல்லாம உணர்ந்து கேக்கணும். அதான் நான் சொல்ல வந்தது. (நானே நடை பழகற குழந்தையாத்தான் இருக்கேன்.) நீங்கள்ளாம் தான் எனக்கு நடை வண்டிகளா இருப்பீங்க! (படிச்சதும் புரியும்). நன்றிங்க ஹேமா!

    ReplyDelete
  22. @ மதுமதி said...

    -நீங்க படிக்கிறதே சந்தோஷம் கவிஞரே... மன்னிப்பெல்லாம் எதுக்கு கேக்கறீங்க- சின்ன விஷயத்துக்கு. நடை வண்டிகளுக்கான ஹோம் வொர்‌க் பண்ணிட்டிருக்கேன். சீக்கிரமே அழகா தயார் பண்ணிட்டு வந்துடறேன். நன்றி நண்பா!

    ReplyDelete
  23. மன்னிப்பின் மகத்துவத்தை பற்றிய தங்களது பதிவை,திரும்பத்திரும்ப படிக்கத்தூண்டுகிறது தங்கள் எழுத்தின் நடை என்பதே உண்மை.நிகழ்வை விவரிக்கும்போது இடையிடையே இழைந்தோடும்
    (அவர் நல்லவரு... ரிடையராகிப் போறப்ப உயிரை திருப்பிக்கொடுத்துட்டாரு.).
    (ஆமா...மத்தவங்கல்லாம் மூக்காலயா பாப்பாங்க? எழுதறான் பாருய்யா இவன்!)
    போன்ற உங்களது நகைச்சுவையை மிகவும் இரசித்தேன்.வாழ்த்துக்கள்!
    நடைவண்டியின் பயணத்தை இரசிக்கக் காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  24. பள்ளிக்கூட வாழ்க்கையில் விளையாட்டு மைதானங்களில் பசங்களுக்குள் இப்படி சின்ன தகறாறு வருவது வழக்கம்தான் அதையும் அழகா சொல்லி இருக்கீங்க ஆனா இருவருமே மனசார உணர்ந்து ஒருவரிடம் ஒருவர்மன்னிப்புகேட்டது நல்ல விஷயம் நல்லா சொல்லி இருக்கீங்க , வாழ்த்துகள்.

    ReplyDelete
  25. மிக அருமையான வர்ணனை.. பள்ளி கண்முன் விரிந்தது. கணேஷ்..:)

    ReplyDelete
  26. @ துரைடேனியல் said...

    -நான் சிறந்த பண்பாளன் என்று சொல்லியிருப்பதற்கு நன்றி துரை. என்னிடமும் குறைகள் உண்டு. திருத்திக் கொண்டு வந்துள்ளேன், வருகிறேன் என்பதே உண்மை. நன்றி!

    ReplyDelete
  27. @ வே.நடனசபாபதி said...

    -என் எழுத்து நடையை நீங்கள் ரசித்து பாராட்டியிருப்பது என் தன்னம்பிக்கையைக் கூட்டுகிறது நண்பரே... உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!

    ReplyDelete
  28. @ Lakshmi said...

    -மாணவப் பருவத்துல இருக்கற கள்ளமில்லாத மனது எப்போதும் நமக்கு இருக்க வேண்டுமென்று விரும்புபவன் நான். உங்க்ள் வருகைக்கும் கருத்துக்கும் என் இதய நன்றிம்மா...

    ReplyDelete
  29. நடைவண்டி பிடித்து நடை பழகக் காத்திருக்கோம்..

    ReplyDelete
  30. @ தேனம்மை லெக்ஷ்மணன் said...

    -உங்கள் வருகை எப்போதுமே எனக்கு ஒரு பாட்டில் ஹார்லிக்ஸ் ஒரே மூச்சில் குடித்த உற்சாகம் தரும் தேனக்கா... நீங்கள் ரசித்ததில் மிக மகிழ்ச்சி, மனமார்ந்த நன்றி.

    ReplyDelete
  31. @ அமைதிச்சாரல் said...

    -மென்மையா நாம் நடை பழகலாம். மிக்க நன்றிங்க...

    ReplyDelete
  32. பள்ளி வாழ்க்கையின் மறக்க முடியாத தருணமொன்றை மிக அழகாக சொல்லியிருக்கிறீர்கள்!
    செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்பதை நாம் கடைபிடிப்பது மட்டுமல்ல, நம் குழந்தைகளையும் சிறு வயதிலிருந்து கடைபிடிக்க பழக்க வேன்டும்!

    ReplyDelete
  33. @ மனோ சாமிநாதன் said...

    -கரெக்ட்! சின்ன வயசுல மனசுல பதியறதுதான் எப்பவும் தொடரும். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் என் மனமார்ந்த நன்றி!

    ReplyDelete
  34. குழந்தைகளின் உலகம் கபடமற்றது என்பதை மீண்டும் ஒருமுறை அழுத்தி சொல்லி இருக்கிறீர்கள். அனுபவத்தை கதை வடிவில் சொல்வதும் நல்ல உத்தி தான்.

    நடை வண்டி விளையாட ஆவலுடன் காத்திருக்கிறேன். அடுத்த பதிவில் நானும் கூட ஒரு தொடர் துவங்குகிறேன்.

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  35. மன்னிக்கத் தெரிந்தவன் தான் மனிதன். மன்னிப்பு கேட்பவன் பெரிய மனிதன். நன்றி சார்!

    ReplyDelete
  36. என்ன அழகா சொல்லிருகிங்க........... மன்னிப்பு கேட்கும்போது மனிதன் மகான் ஆகிறான், மன்னிப்பு குடுக்கும் போது கடவுளாகிறான்.. எங்கயோ படிச்சது..

    புத்தாண்டு வாழ்த்துக்கள் ........
    இந்த புத்தாண்டில் சில வார்த்தைகள்..

    ReplyDelete
  37. பள்ளிக்காலத்தின் நினைவுகளை அழகாகப் பகிர்ந்துள்ளீர்கள். ரமணி சார் சொல்வதுபோல் அந்நாளில் நம்மிடம் ஈகோ இருப்பதில்லை. வாழ்க்கையில் நாம் எதிர்கொள்ள வேண்டிய பல பிரச்சனைகளுக்கு தீர்வுகளை அங்கிருந்துதான் கற்றுக்கொள்கிறோம். நடைமுறைப்படுத்தத்தான் மறந்துபோய்விடுகிறோம். நினைவுகளும் பகிரந்துகொண்ட விதமும் அருமை.

    நடைவண்டியின் பின்னே வர நானும் தயார். வாழ்த்துக்கள் கணேஷ் சார்.

    ReplyDelete
  38. நண்பர்களுக்கு
    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

    நொடியாய்ப் பிறந்து
    மணித் துளியாய் மறைந்து
    புது ஆண்டாய் மலர்ந்த
    பொழுதே....
    வறண்ட வாழ்வும்
    தளர்ந்த கையும்
    உன் வரவால்
    நிமிர்ந்து எழுதே!
    புது வருடம் பிறந்தால்
    வாழ்வு மாறும்-என
    ஏங்கித் தவிக்கும்
    நெஞ்சம்..
    உன் வரவே
    நெஞ்சின் தஞ்சம்!
    இறந்த காலக்
    கவலை அதனை
    மறந்து வாழ
    பிறந்து வா வா
    என் புதிய வாழ்வே
    விரைந்து வா வா!
    அழுதுவிட்டேன்
    ஆண்டு முழுதும்
    முயன்று பார்த்தேன்
    விழுந்து விட்டேன்
    அழுத நாளும் சேர்த்து
    மகிழ்ந்து வாழ
    எழுந்து நின்று
    இமயம் வெல்ல
    இனிய ஆண்டே
    இன்றே வா வா
    நன்றே வா வா!

    அன்புடன் இனியவன்

    ReplyDelete
  39. @ ரசிகன் said...

    -‘நடை வண்டிகள்’க்கு வரவேற்புத் தந்த ரசிகன் சாருக்கு நன்றியும், என் இதயம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்களும்!

    ReplyDelete
  40. @ திண்டுக்கல் தனபாலன் said...

    -வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே...

    ReplyDelete
  41. @ எனக்கு பிடித்தவை said...

    -முதல் வருகைக்கும் கருத்துக்கும் என் இதய நன்றியும், புத்தாண்டு வாழ்த்துக்களும்!

    ReplyDelete
  42. @ கீதா said...

    -உங்களின் பாராட்டுக்கும் நடைவண்டிக்கு கொடுத்த உற்சாகத்துக்கும் என் இதய நன்றி!

    ReplyDelete
  43. @ என்றும் இனியவன் said...

    -அழகிய கவிதையால் புத்தாண்டு வாழ்த்துக்கள் சொல்லி மகிழ்வித்த உங்களுக்கு என் இதயம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  44. நானும் வந்துட்டேன் உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்...!!!

    ReplyDelete
  45. @ MANO நாஞ்சில் மனோ said...

    -என் இனிய நண்பருக்கு நல்வரவு. நன்றி.

    ReplyDelete
  46. ஆஹா!.... மெஸேஜ் நலா இருக்கு! நீங்க அந்த அளவு அப்பாவியா? நம்பவே முடியல!...... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  47. ஐ.. நடைவண்டிகள் திரும்ப தொடரப் போறீங்களா.. சூப்பர்.. !

    ReplyDelete
  48. புட்பால் சீசன் பார்த்து புட்பால் சம்பந்தமான அனுபவப் பதிவு.. அதான் வாத்தியார்..

    ReplyDelete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube