‘‘என்னாச்சு உங்களுக்கு... நானும் சாயந்தரத்துலருந்து பாக்கறேன். நினைச்சு நினைச்சு சிரிச்சுட்டிருக்கீங்க?’’ என்று கேட்டாள் சரிதா.
‘‘அதுவா? இன்னிக்கு மத்தியானம் ஆஃபீஸ்ல நான் பிஸியா வேலை செஞ்சிட்டிருந்தப்போ...’’
‘‘பொய்! ஆஃபீஸ்ல நீஙக வேலையே செய்றதில்லன்னு உங்க ஜி.எம். சொல்லுவாரு. இதுல பிஸியா...?’’
‘‘என்னை வாரிட்டதா நினைப்பாக்கும்? கேளு... ரிசப்ஷனிஸ்ட் சரண்யாவுக்கு எம்.டி. ஃபோன் பண்ணி, ‘‘நைட் பாண்டியன்ல மதுரை போறேன். பெட்ரோல் ஏற்பாடு பண்ணும்மா...’’ன்னு சொல்லிட்டு போனை கட் பண்ணிருக்கார். இவ எதுக்குக் கேக்கறார்னு புரியாம திருதிருன்னு முழிச்சுட்டு, எம்.டி. கோபக்காரராச்சேன்னு ஆபீஸ் பையனை அனுப்பி 10 லிட்டர் கேன் நிறைய பெட்ரோல் வாங்கிட்டு வந்து ஸீட் கிட்ட வச்சிருந்திருக்கா. கொஞ்ச நேரத்துல எம்.டி.யோட பையன், அதான் எங்க ஜி.எம்., லன்ச் முடிச்சுட்டு ஆபீஸ்க்கு வந்தவர், ‘என்னம்மா இது கேன்ல பெட்ரோல்? உன் ஹஸ்பெண்டுக்காக வாங்கி வெச்சியா?’ன்னு கேட்க, அவ விஷயத்தைச் சொல்லியிருக்கா. அவ்வளவுதான்... ‘ஃப்ரண்ட்ஸ்’ படத்துல வடிவேலு விழுந்ததைப் பாத்துட்டு விஜய் சிரிப்பாரே... அந்த மாதிரி கடகடன்னு சிரிச்சுக்கிட்டே அவரோட ரூமுக்குள்ள போயிட்டார்...’’
‘‘இதுல சிரிக்கறதுக்கு என்னங்க இருக்கு?’’
‘‘அதான் எங்களுக்கும் புரியல. அவர் ரூமுக்குள்ளருந்து விடாம சிரிப்பு சத்தம் கேக்கவும், சரண்யா என்னைத் துணைக்கு கூப்பிட்டா. ஜி.எம். ரூமுக்குள்ள போயி, ‘‘ஏன் சார் இப்படிச் சிரிக்கறீங்க? என்ன விஷயம்’’ன்னு கேட்டேன். அவரால சிரிப்பை நிறுத்த முடியாம மதன்பாப் மாதிரி சிரிச்சுக்கிட்டே இப்படிச் சொன்னாரு: ‘எங்கப்பனுக்கு இங்கிலீஷ் சரியாவே பேச வராது. ட்ரெயினுக்குப் போகணும், Bed Roll ஏற்பாடு பண்ணுன்னு இவகிட்ட சொல்லிருக்கார். இந்த பிரகஸ்பதி Petrolன்னு புரிஞ்சுக்கிட்டு வாங்கி வெச்சிருக்கு. பெட்ரோல வாங்கிட்டுப் போயி எங்கப்பன் என்ன ரயிலையா கொளுத்தப் போறாரு?’னுட்டு அவர் சிரிக்கவும், அடக்க முடியாம நானும் சிரிச்சுட்டேன். அதான்...’’
சரிதாவும் வாய்விட்டுச் சிரித்தாள். பின் சொன்னாள். ‘‘உங்க ஆஃபீஸ்ல நீங்க மட்டும்தான் கேனைன்னு நினைச்சுட்டிருந்தேன். சரண்யாவும் அப்படித் தானா?’’
‘‘அடியேய்...’’ என்று டி.ஆர். பாணியில் குரல் கொடுத்துக் கொண்டு நான் சேரை விட்டு எழ, அவள் ‘ஸ்டாப் ப்ளாக்’கில் காணாமல் போனாள்.
மறுநாள் காலை. ‘இரட்டைப் புலவர்கள்’ எழுதிய பாட்டு்க்கள் மொத்தம் எத்தனை என்று கூகுளாண்டவரிடம கேட்டுக் கொண்டிருந்த நேரம்... சரிதா பின்னாலிருந்து குரல் கொடுத்தாள்.
‘‘என்னங்க... உள்ரூமுக்குப் போங்களேன்...’’
‘‘கொஞ்சம் இரும்மா... ஸர்ச் முடியட்டும்... இப்ப எதுக்கு அங்க போகணும்?’’
‘‘நான் பெருக்கணுங்க...’’
‘‘வேணாம் சரி! ஏற்கனவே பெருத்தது போதும்! இதுக்கு மேல பெருத்தா வெடிச்சுடுவே!’’
‘‘ஐயாங்...’’ என்ற அவள் காலால் தரையை உதைத்திருக்க வேண்டும். மானிட்டர் நடுங்கியது. திரும்பினேன். கையில் விளக்குமாறுடன் நின்று கொண்டிருந்தாள்.
‘‘ரூமைப் பெருக்கணும்னு தெளிவா சொல்ல வேண்டாமா நீ?’’ என்றபடி அறை வாசலில் நின்று கொண்டேன். ‘‘என்னங்க... நேத்து நான் சொன்னுது ஞாபகம் இருககா? இன்னிக்கு என் ஃப்ரண்டு ரம்யாவோட வளைகாப்புக்குப் போயிட்டு, அப்படியே எங்கம்மா வீட்டுக்குப் போகப்போறேன். ரெண்டு நாள் கழிச்சுத்தான் வருவேன். நான் இல்லன்னு எதுவும் சேட்டை பண்ணாம பாத்து இருந்துக்குங்க...’’
‘சேச்சே... நான் இன்னிக்கு ஈவ்னிங் புதுசா ஒரு விஷயம் பண்ணப் போறேன்...’’
‘‘என்ன... சிக்கன் வாங்கிட்டு வந்து சாப்பிடப் போறீங்களா? இல்ல பீரா?’’
‘‘அதில்லம்மா... சமூகம், க்ரைம், கொஞ்சம் சரித்திரம்னு பல சப்ஜெக்ட்ல சிறுகதை எழுதிட்டேன். படிக்கிறவங்க அலர்ற மாதிரி ஒரு பேய்க்கதை எழுதணும்னு ரொம்ப நாளா ஆசை...’’
‘‘சுயசரிதம் எழுதறதுக்கு உங்களுக்கு அவ்வளவு ஆசையா?’’
‘‘ஆமா...’’ என்று வேகமாக உளறிவிட்டு ‘திக்’கென்று விழித்தேன். ‘‘டியர்... லைஃப்ல முதல் தடவையா ஒரு பஞ்ச் அடிச்சிட்ட...’’ என்று நான் சிரித்தேன். வாயை அஷ்டகோணலாகச் செய்து எனக்கு அழகு காட்டிவிட்டு சமையலறைக்குச் சென்றாள் சரிதா.
மாலையில் அலுவலகம் முடிந்து வந்ததும் கம்ப்யூட்டரை ஆன் பண்ணி, ‘நடுநிசி பேய்கள்’ என்று தலைப்பு வைத்து எழுதத் தொடங்கினேன். அரை மணியில் பாதிக் கதை எழுதிவிட்டேன். சற்றே நீளமாக இருந்ததால் இரண்டு அத்தியாயமாக எழுதலாம் என்று நினைத்தேன். அத்தியாயத்தை முடிககும்போது ஏதாவது திகீர் பஞ்ச் வைத்தல்லவா தொடரும் போட வேண்டும்? என்ன செய்யலாம் என்று யோசித்து, டைப்பினேன். ‘‘அவன் பார்த்துக் கொண்டிருக்கும் போதே அந்தக் கல்லறை அதிர்ந்தது. எள்ளலான மெல்லிய சிரிப்பொலி ஒன்று எங்கிருந்தோ காதில் விழ, அவன் உடல் நடுங்கியது. ஜ்ல் ஜல் என்று கொலுசின் ஒலி காதுகளில் கேட்டது...’’

டைப்புவதை நிறுத்தினேன். ‘ஜல் ஜல்’ சத்தம் நிஜமாகவே கேட்டது போல இல்லை? திரும்பிப் பார்த்து, ‘பிரமை’ என்று தலையை உதறிக் கொண்டு தொடர்ந்தேன்.
‘‘கல்லறை அதிர்ந்து அதன் மேல்தளம் படீரென வெடித்துத் திறந்தது..’’ என்று டைப்பிய நொடியில் ‘‘என்னங்க...’’ என்று அருகில் குரல் கேட்க, திடுக்கிட்டு எழுந்து, அருகில் கையில் காஃபி டம்ளருடன் நின்றிருந்த சரிதாவின்மேல் இடித்துக் கொண்டேன்.
டம்ளர் உருண்டு காஃபி சிதறியது. இவள் எங்கே வந்தாள்? வெள்ளை பட்டுப்புடவையில் தலைநிறைய பூ வைத்துக் கொண்டு, தலைமுடியைப் பின்னாமல் விட்டுவிட்டு எதிரில் நின்று சிரித்தால் எனக்கு எப்படியிருக்கும்?
டம்ளர் உருண்டு காஃபி சிதறியது. இவள் எங்கே வந்தாள்? வெள்ளை பட்டுப்புடவையில் தலைநிறைய பூ வைத்துக் கொண்டு, தலைமுடியைப் பின்னாமல் விட்டுவிட்டு எதிரில் நின்று சிரித்தால் எனக்கு எப்படியிருக்கும்?
‘‘அடிப்பாவி! அசல் பேய் மாதிரியே வந்து நிககிறியேடி... அம்மா வீட்டுக்குப் போகலையா?’’ என்று நடுஙகிய குரலில் கேட்டேன்.
‘‘இல்லீங்க... வளைகாப்பு ஃபங்ஷன்ல எனக்கும் வளை போட்டுவிட்டு, பூ வெச்சு விட்டங்க. நான் என்னோட சாவி போட்டுக் கதவை திறந்துட்டு வந்தா... கம்ப்யூட்டர்ல பிஸியா இருந்திங்க. சரின்னு காஃபி போட்டுட்டு வந்தேன்...’’ என்றாள்.
‘‘நல்லா வந்தே போ... பேய்க்கதை எழுதப் போறேன்னு காலைலயே சொன்னேன்ல... ஜல்ஜல்னு கொலுசு சத்தத்தோட, மோகினி மாதிரி இப்படியா வர்றது? நீ பண்ணின கூத்துல ஒரு ட்ரெய்ன் என் மேல ஓடின மாதிரி ஹார்ட்பீட் இன்னும் அடிச்சுட்டிருககு பாரு... வேற காஃபி கொண்டு வா...’’ என்று அவளை அனுப்பிவிட்டு அடுத்த வரிக்காக சற்று நேரம் யோசித்துக் கொண்டிருந்தேன். கேட்ச் இட்!
‘‘கல்லறை வெடித்துத் திறக்க, அதிலிருந்து ஒரு பெண்ணின் வளையல் அணிந்த கை வெளிப்பட்டு அவன் முகத்துக்கு முன்னே நீண்டது...’’ டைப்பிய அதே செகண்ட் வளையல் அணிந்த கரம் ஒன்று மானிட்டரின் முன் நீண்டதும் மீண்டும் திகிலில் அலறிவிட்டேன். ‘திடுக்’ என்று உடம்பு தூககிவாரிப் போட்டது.
‘‘என்னங்க இது வம்பாப் போ்ச்சு... கொலுசு சத்தத்துக்கு பயப்படறீங்களேன்னு அதைக் கழட்டி வெச்சுட்டு வந்து காபியக் கொண்டுவந்தா இதுக்கும் அலர்றீங்களே...’’ என்றாள் சரிதா.
‘ஞே’ என்று விழித்தேன். ‘‘நல்லாக் கொண்டு வந்தே போ... கல்லறையிலிருந்து ஒரு கை வந்ததுன்னு எழுதிட்டிருக்கும் போது சத்தமில்லாம உன் கைய இப்படியா எதிர்ல நீட்டுவ?’’ காஃபியைக் குடித்துவிட்டு, கம்ப்யூட்டரை ஆஃப் செய்துவிட்டேன்.
மறுநாள் காலை எழுந்தது முதலே ஏனோ சோம்பலாக இருந்தது. தோளின் மேல் யாரோ உட்கார்ந்திருந்ததுபோல ஒரு கனம். வலி இருந்து கொண்டே இருக்க, மரியாதையாக (திருதிரு) விழித்துக் கொண்டிருந்தேன். சரிதா என்னைப் பார்த்து பயந்துபோனாள். அவள் அம்மாவுக்கு போன் செய்து பேசினாள்.
‘‘என்னது...? மாப்பிள்ளை உன்னைப் பாத்து பயந்துட்டாரா? கல்யாணம் ஆன புதுசுலன்னாலும் அர்த்தமிருக்கு! இப்ப எப்படிடி?’’ கெக்கேபிக்கே என்று சிரித்தாள் அவள் அம்மா ஸ்பீக்கர் போனில் .
‘‘நீ வேற சும்மா இரும்மா. இவர் ஆளே சரியில்ல. என்ன பண்றதுன்னே புரியல...’’ என்று சரிதா கிட்டத்தட்ட அழும் குரலில் பேச, ‘‘அழாத சரி. நம்ம வீட்டுக்கு பக்கத்து தெருல இருக்கற அய்யனார் கோயில் பூசாரியை மத்தியானம் அனுப்பி வெக்கறேன். அவர் மந்திரிச்சா சரியாயிடும்’’ என்றாள் என் மாமியார்.
அய்யனார் கோயில் பூசாரி கருகருவென்ற நிறமும், எண்ணெய் மினுமினுப்புடன் தலையும், ம.பொ.சி. மீசையுமாக அவரே பார்ப்பதற்கு அய்யனார் போலத்தான் இருந்தார். ஒரு பலகையை வைத்து அதன் முன்னால் குத்து விளக்கை ஏற்றி வைத்துவிட்டு, அருகில் கொஞ்சம் வேப்பிலைக் கொத்துக்களை வைத்து விட்டு என்னைப் பலகையில் உட்காரச் சொன்னார். சின்னவயதில் சினிமாவில் பார்த்த பி.எஸ். வீரப்பாவைப் போல சிரிப்பாரோ என்று கூடத் தோன்ற, பயத்துடன் உட்கார்ந்தேன்.
நல்லவேளை... அப்படியெல்லாம் சிரிக்காமல் மனோபாலா பேசுவது போல மென்மையாகப் பேசினார். ‘‘என்ன தம்பி... பயந்துட்டிங்களா? பேய் பிசாசுல்லாம் ஒண்ணுமே கிடையாது தம்பி. மனசுல பயத்தை வெச்சுக்கிட்டிங்கன்னா அதான் பேய், பிசாசு, பாம்பு எல்லாம்.’’ என்று பேசிக கொண்டேயிருந்தவர், எப்போது வேப்பிலைக் கொத்தை கையில் எடுத்தார்? எப்போது என் முகத்தில் அடித்தார்?
அடுத்த கணம்... உடம்பு ‘திடுக்’ என்று தூக்கிவாரிப் போட்டது. இயல்புக்கு வந்தேன். தோளில் நான் உணர்ந்த கனம் இப்போது இல்லை. உடம்பு லேசானது போல மகிழ்ச்சியாய் உணர்ந்தேன். (அதிர்ச்சியை இன்னொரு அதிர்ச்சியால் குணமாக்கி விட்டார் போலும்)
‘‘அவ்வளவு தாம்மா... இனி தம்பிக்கு ஒண்ணுமில்ல...’’ என்றபடி சரிதா தந்த ‘தட்சணை’யை வாஙகிக் கொண்டு போனார் அவர். ‘‘இனி ஒண்ணும் பயமில்ல... நீங்க தைரியமா கதையைத் தொடரலாம்’’ என்றாள் சரிதா. மூக்குக்கு மேலே கையை உயர்த்தி அவளைக் கும்பிட்டேன். ‘‘ஆளைவிடு தாயி... அந்த ஆசையை மூட்டைகட்டி பரண்ல தூக்கிப் போட்டுட்டேன். லைஃப்ல இனிமே பேய்க்கதையே எழுத மாட்டேன்’’ என்றேன். ‘‘அதுசரி... அம்மா வீட்டுல ரெண்டு நாள் தங்கப் போறேன்னுட்டுப் போனியே... ஏன் உடனே வந்து்ட்டே?’’ என்று கேட்டேன்.
‘‘அதுவா..? அம்மா வீட்டுக்குப் போனா பாவம் நீங்க சாப்பாட்டுக்கு கஷ்டப்படுவீங்களேன்னு திடீர்னு மனசுல தோணிச்சு. அடுத்த மாசம் பொங்கல் லீவுல உங்களோட போய்க்கலாம்னு வந்துட்டேன்...’’ என்றாள்.
என் மனம் நெகிழ்ந்து போனாலும் அதை வெளிக்காட்டாமல் அவளைச் சீண்டும் ஆசையில், ‘‘சும்மா டூப் விடாத. நீ இல்லாதப்ப வீட்ல ஏதாவது சேட்டை பண்றேனான்னு பாக்கத்தானே ஓடிவந்தே? நம்ம தெரு ஃபிகர்ல ஏதாச்சும் எனக்கு ரூட் போட்டுருமோன்னு பயம்.. அதான?’’ என்றேன்.
என் முகத்திலிருந்து மனதைப் படிக்கக் கற்று வைத்திருந்த அவள் சிரிப்புடன், ‘‘மனசுல மன்மதலீலை கமல்ன்னு நினைப்பு! அப்படியே பொண்ணுங்க வந்துட்டாலும்...’’ என்று முகவாயை தோளில் இடித்து பழிப்புக் காட்டியபடி உள்ளே சென்றாள்.

|
|
Tweet | ||
சொந்த நொந்த அனுபவமாண்ணா! இருங்க படிச்சுட்டு வரேன்
ReplyDeleteஉண்மையில் பேய்க்கதை பிரமாதம்
ReplyDeleteநானும் எழுதலாம் என இரண்டு நாளாய்
யோசித்துக் கொண்டிருந்தேன்
உங்கள் கதையைப் படித்தவுடன்
பிறகு பார்த்துக் கொள்ளலாம் என விட்டுவிட்டேன்
ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை
அருமையான படைப்பு தொடர வாழ்த்துக்கள்
த.ம 3
‘/மனசுல மன்மதலீலை கமல்ன்னு நினைப்பு! அப்படியே பொண்ணுங்க வந்துட்டாலும்...’’//
ReplyDeleteஅண்ணி பாவம் இப்படியா பச்சபுள்ளயாஅட்டம் இருப்பாங்க. ஏதோ நம்மால முடிஞ்சது.
நாத்தனார் சப்போட் சிலருக்குதான் வாய்க்கும் அதான் நானும் அண்ணிக்கு ஹி ஹி..
வணக்கம் நண்பர் கணேஷ்,
ReplyDelete///‘எங்கப்பனுக்கு இங்கிலீஷ் சரியாவே பேச வராது. ட்ரெயினுக்குப் போகணும், Bed Roll ஏற்பாடு பண்ணுன்னு இவகிட்ட சொல்லிருக்கார். இந்த பிரகஸ்பதி Petrolன்னு புரிஞ்சுக்கிட்டு வாங்கி வெச்சிருக்கு. பெட்ரோல வாங்கிட்டுப் போயி எங்கப்பன் என்ன ரயிலையா கொளுத்தப் போறாரு?’னுட்டு அவர் சிரிக்கவும்,///
இப்படித்தான் சிலர் ஆங்கிலம் பேசத்தெரியா விட்டாலும்
வம்படியாக பேசி மாட்டி கொள்(கொல்)வார்கள்.
////படிக்கிறவங்க அலர்ற மாதிரி ஒரு பேய்க்கதை எழுதணும்னு ரொம்ப நாளா ஆசை...’’////
என்ன ஒரு கொலைவெறி பாருங்க...
வார்த்தைகளில் சிக்கல் இல்லாமல் ரொம்ப இயல்பா கதை சொல்லியிருகீங்க நண்பரே.
சரியோசரி
Delete"ஙே " என்றுதானே விழிக்க வேண்டும்?!!
ReplyDeleteபதிவில் நகைச்சுவை இழையோடினாலும் ஒரு சிறிய அன்யோன்யம் காட்டி பதிவை சுவாரஸ்யம் கூட்டி விட்டீர்கள்.
ரொம்ப பயந்துட்டிங்களோ?
ReplyDeleteநகைச்சுவை இயல்பாய் எழுத்துக்களில்
ReplyDeleteதெளித்திருப்பது சுவாரஸ்யம்.
என் முகத்திலிருந்து மனதைப் படிக்கக் கற்று வைத்திருந்த அவள் சிரிப்புடன், ‘‘மனசுல மன்மதலீலை கமல்ன்னு நினைப்பு! அப்படியே பொண்ணுங்க வந்துட்டாலும்...’’ என்று முகவாயை தோளில் இடித்து பழிப்புக் காட்டியபடி உள்ளே சென்றாள்.
ReplyDelete>>>
என்னண்ணா அண்ணி இப்படி சொல்லிட்டாங்களே!?
Sema Comedy Sago.
ReplyDeleteகதையைப் படித்தபோது,உங்களைப் பயமுறுத்தியது ஒரு பேய் தான் என முடிக்கப்போகிறீர்ர்கள் என நினைத்தேன்.ஏமாற்றிவிட்டீர்கள். நகைச்சுவையில் ஆரம்பித்து, இடையே திகிலைக்கொண்டு வந்து, முடிவில் ஜனரஞ்சகமாக முடித்துள்ளீர்கள். வாழ்த்துக்கள்!
ReplyDeleteசென்ற மாதம் ராணிமுத்து நாவலுக்காக ஒரு க்ரைம் கதை எழுதும்போது நள்ளிரவு ஒரு மணி இரண்டு நாளில் கதை கொடுக்க வேண்டுமென்று எழுதிக்கொண்டிருந்தபோது திடீரென மின்தடை ஏற்பட நீங்கள் சொன்னது போலவே கொலுசுசத்தம் பயந்து போய் பார்த்தால் நீங்கள் கதையில் சொன்னதுபோலவே என் மனைவிதான் பக்கத்து அறையிலிருந்து இருட்டில் வந்தார்..ஞாபகப் படுத்திவிட்டீர்கள் ..கதை நன்றாக இருந்தது..
ReplyDelete@ ராஜி said...
ReplyDelete-எப்பவுமே கொஞ்சம் சொந்த அனுபவத்தோட நிறையக் கற்பனையக் கலக்கறது நம்ம வழக்கம்மா.
@ Ramani said...
ReplyDeleteஏனுங்ண்ணா... என்னை சரிதா பயமுறுத்தின மாதிரி உங்களையும் பயமுறுத்த வீட்ல ஆள் இருக்குங்களா? வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்ணா...
@ அன்புடன் மலிக்கா said...
ReplyDelete-மாட்டிக்கிட்டு முழிக்கிறது அண்ணன்; சப்போர்ட் நாத்தனாருக்கா? அப்பப்ப எனக்கும் சப்போர்ட் பண்ணும்மா... (ஆண்பாவம் பொல்லாதது்ல்ல) ஹி... ஹி...
@ மகேந்திரன் said...
ReplyDelete-ஆஃபீஸ்ல நடந்த அந்தச் சம்பவம் 100% உண்மை மகேந்திரன். அவர் அப்பாவை ‘எங்கப்பன்’ என்று சொல்லித்தான் பேசுவார். அதை அப்படியே தந்திருக்கேன். பேய்க்கதை தரணுங்கற கொலைவெறி ரொம்ப நாளாவே இருக்கு. இப்போதைக்கு சரிதாவால ட்ராப்ட். மிக்க நன்றிங்க!
@ ஸ்ரீராம். said...
ReplyDelete-முதலில் ‘ஙே’ என்றுதான் எழுதியிருந்தேன். அதற்கு காப்பிரைட் ஓனர் ராஜேந்திரகுமாராச்சே! அவர்கிட்ட சுட்ட கதைன்னு நினைச்சுடுவாங்களோன்னு பயந்துதான் ‘ஙே’ ‘ஞே’யா மாறிடுச்சு ஸ்ரீராம் சார்! உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!
@ கோகுல் said...
ReplyDelete-பயந்தது நெஜம்தான் கோகுல்! ஆனா மந்திரிச்சது கற்பனை. இயல்பான நகைச்சுவை என்ற தங்கள் பாராட்டு நான் மேலும் செயல்படத் தெம்பளிக்கிறது. மிக்க நன்றி!
@ ராஜி said...
ReplyDelete-ஆமாம்மா... நான் கமலைவிடப் பெரிய ஆள்ன்னு சொன்னா அவளுக்குப் புரியவே மாட்டேங்குது. சரி... சரி... அப்படி முறைக்காதம்மா தங்கச்சி! ஹி... ஹி...
@ துரைடேனியல் said...
ReplyDelete-நீங்க ரசிச்சதுல எனக்கு ரொம்ப சந்தோஷம் துரை சார்! நன்றி!
@ வே.நடனசபாபதி said...
ReplyDelete-கரெக்ட் நண்பரே... இந்த முறை முழுக்க நகைச்சுவை இல்லாமல் மைல்டான திகிலும் சேர்க்க வேண்டுமென்று ஆசைப்பட்டுதான் செய்தேன். தங்கள் பாராட்டுக்கு நன்றி!
@ மதுமதி said...
ReplyDelete-அட! அந்த அனுபவத்தை ஒரு பதிவாப் போட்டிருக்கலாமே கவிஞரே... மிஸ் பண்ணிட்டிங்க. நான் முந்திட்டேன் போலருக்கு. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!
பின்னிட்டீங்க.. உண்மையாகவே.
ReplyDeleteபேயானது சரிதா இல்லையே?
நல்ல நகைச்சுவை இழையூடும் பேய்க்கதை.
"டைப்பிய அதே செகண்ட் வளையல் அணிந்த கரம் ஒன்று மானிட்டரின் முன் நீண்டதும்" - நிச்சயமாகத் திகிலூட்டியது.
@ அப்பாதுரை said...
ReplyDeleteசரிதா தேவதைதான் சார். கோபத்துல சண்டை போடறப்ப மட்டும் சில சமயம் பேயாத் தெரிவா. அவ்வளவுதான்... நீங்க ரசிச்சதுல எனக்கு ரொம்ப சந்தோஷம்! உங்கள் வருகைக்கு நன்றி!
சிரித்துக் கொண்டே படித்தேன். அருமை.
ReplyDeleteபகிர்விற்கு நன்றி Sir!
சிந்திக்க :
"இன்றைய மனிதனுக்கு என்ன தானம் தேவை?"
@ திண்டுக்கல் தனபாலன் said...
ReplyDeleteசிரித்து ரசித்ததற்கு மிக்க நன்றி தனபாலன் சார்!
super boss! :-)
ReplyDelete@ ஜீ... said...
ReplyDelete-முதல் வருகைன்னு நினைக்கறேன். நல்வரவு. நீங்க ரசிச்சதுக்கு நன்றி. (நீங்க வச்சிருக்கறது சினிமா பாரடைஸோ ஸ்டில்தானே... எனக்கு ரொம்பப் பிடிச்ச படம்)
பேய்க்கதை எழுதிறதில இவ்ளோ பிரச்சனை இருக்கா.வாசிக்க வாசிக்க பயமா இருந்திச்சு.எழுதின உங்களுக்கு...இனி எப்பவும் பேய்க்கதை எழுதமாட்டீங்கதானே !
ReplyDelete@ ஹேமா said...
ReplyDelete-அது ரொம்ப நாளா இருக்கற ஆசைங்க ஹேமா. சரிதா குடுத்த அதிர்ச்சியால இப்போதைக்கு ஒத்தி வெச்சிருக்கேன்... பின்னொரு காலத்துல ஒருவேளை எழுதலாம்... உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
சிரித்துக் கொண்டே படித்தேன்.
ReplyDeleteஇறுதி வரை சிரிப்பை நிறுத்த முடியவில்லை.
அருமையான நடை
@ சிவகுமாரன் said...
ReplyDelete-வெல்கம் சிவகுமாரன் சார்... நீங்கள் சிரித்து ரசித்ததாகக் கூறியது எனக்கு விருதுக்கு ஒப்பானது. மனமார்ந்த நன்றி! (என் நடை நன்றாக இருக்குமென்று நடப்பதைப் பார்த்தவர்கள் சொல்லுவார்கள். சும்மா தமாஷ்... ஹி... ஹி...)
உங்களிடம் இருந்து பிடி சாமி ரேஞ்சுக்கு திகில் கதைன் விரைவில் கிடைக்கப்போகிறது என்று ஆரவ்த்துடன் மேலும் வாசிக்க ஆரம்பித்தால்...:(
ReplyDelete‘எங்கப்பனுக்கு இங்கிலீஷ் சரியாவே பேச வராது. ட்ரெயினுக்குப் போகணும், Bed Roll ஏற்பாடு பண்ணுன்னு இவகிட்ட சொல்லிருக்கார். இந்த பிரகஸ்பதி Petrolன்னு புரிஞ்சுக்கிட்டு வாங்கி வெச்சிருக்கு. பெட்ரோல வாங்கிட்டுப் போயி எங்கப்பன் என்ன ரயிலையா கொளுத்தப் போறாரு?’னுட்டு அவர் சிரிக்கவும், அடக்க முடியாம நானும் சிரிச்சுட்டேன். அதான்...’’
ReplyDelete//ரொம்ப ரொம்ப சிரிச்சாச்சு..ஏண்ணே இது நிஜமாலுமா?இல்லை மன்னியையும் மற்றவர்களையும் சிரிக்க வைக்க கறபனையில் உதித்ததா?
//‘‘அதுவா..? அம்மா வீட்டுக்குப் போனா பாவம் நீங்க சாப்பாட்டுக்கு கஷ்டப்படுவீங்களேன்னு திடீர்னு மனசுல தோணிச்சு. அடுத்த மாசம் பொங்கல் லீவுல உங்களோட போய்க்கலாம்னு வந்துட்டேன்...’’ என்றாள்.
//அண்ணனை பிளாக் எழுதுறதைப்பார்த்தால் சாப்பாட்டுக்கு கஷடப்படுபவர் போல் தெரியலியே?இதை எப்படி சரிதா மன்னி காதில் எத்தி வைக்க...?:)
//-ஆமாம்மா... நான் கமலைவிடப் பெரிய ஆள்ன்னு சொன்னா அவளுக்குப் புரியவே மாட்டேங்குது. சரி... சரி... அப்படி முறைக்காதம்மா தங்கச்சி! ஹி... ஹி.// அண்ணே அண்ணே..வயசைத்தானே சொல்லுறீங்க?
@ ஸாதிகா said...
ReplyDelete-கூடிய சீக்கிரமே உங்க ஆசையப் பூர்த்தி செய்யற மாதிரி ஒரு திகில் கதை தர்றேன் சிஸ்டர்...
-ஆபீஸ்ல நடந்த அந்த சமாச்சாரம் 100 சதவீதம் நடந்த விஷயம் தாம்மா...
-சரிதாவோட போன் நம்பரை ஈமெயில் அனுப்பறேன் நான்...
-பின்ன... திறமையிலயா கமலைவிடப் பெரியாளாக முடியும்?
-பொறுமையாகப் படித்து, விரிவான கருத்திட்டதற்கு என் இதய நன்றி.
பேய்க்கதை எழுதும் அனுபவமே இப்படியென்றால் கதை எப்படியிருந்திருக்கும்? நல்லவேளை, அண்ணியின் தயவால் பேய்க்கதையிலிருந்து நாங்கள் தப்பினோம். ஆரம்பம் முதல் கடைசிவரை நல்ல சுவாரசியம். பாராட்டுகள்.
ReplyDelete@ கீதா said...
ReplyDeleteஆமாம் கீதாம்மா... த்ரில்லான பேய்க் கதையிலருந்து எல்லாரும் இப்போதைக்கு தப்பியாச்சு... ஆரம்பம் முதல் கடைசிவரை ரசிச்சுப் படிச்சதுக்கு என் இதய நன்றி!