சுப்பிரமணிய பாரதி! மகாகவி என்ற சொல்லுக்கு மேல் ஏதாவது இருந்தால் அந்தப் பட்டத்துக்கும் தகுதியானவர். கண்ணன் கவிதைகளில், குயில் பாட்டில் தென்றலாய் வீசியவர்; தேசபக்திப் பாடல்களில் புயலாய்ச் சீறியவர்; வசன கவிதை என்ற ஒன்றை எழுதி, இன்றைய புதுக் கவிதைக்கு பிள்ளையார் சுழி போட்ட பிதாமகன்; உரைநடைத் தமிழையும் ஒரு கை பார்த்தவர். பாட்டுக்கொரு புலவன் பாரதியின் பிறந்த தினம் டிசம்பர் 11. இத்தருணத்தில் அவரது உரைநடையில் என்னைக் கவர்ந்த வரிகளை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிகவும் மகிழ்கிறேன்.
• தனக்கேனும் பிறர்க்கேனும் துன்பம் விளைவிக்கத்தக்க செய்கை பாவம். தனக்கேனும் பிறர்க்கேனும் இன்பம் விளைவிக்கத்தக்க செய்கை புண்ணியச் செயல் எனப்படும்.
* எப்போதும் பாடுபடு. எப்போதும் உழைத்துக் கொண்டிரு. உழைப்பிலே சுகம் இருக்கிறது. வறுமை, நோவு முதலிய குட்டிப் பேய்கள் எல்லாம் உழைப்பைக் கண்டால் ஓடிவிடும்.

• உழைப்பு எப்போதும் உண்டு. இதிலே ‘நான்’ என்ற பாரத்தை நீக்கிவிட்டு உழைத்தால், வேலை கிறுகிறு என்று வேகமாகவும், பிழை இல்லாமலும் நடக்கும். தன்னைத் தூக்கித் தலையிலே வைத்துக் கொண்டு வேலை செய்தால் வேலை குழம்பும்.
* தேசாபிமானம் கற்பியாத கல்விமுறை வெறும் மண்ணாகுமேயன்றி ஒன்றுக்கும் பயன்படாது.
* அச்சமே மடமை; அச்சம் இல்லாமையே அறிவு. அன்பே தெய்வம். அன்பு இருந்தால் குழந்தையும் தாயும் சமானம்; ஏழையும் செல்வனும் சமானம்; படித்தவனும் படியாதவனும் சமானம்; அன்பு இருந்தால் மனிதனும் தெய்வமும் சமானம். அன்பு பூமியிலேயே மேலோங்கி நிற்கும்.
• அன்பே தெய்வம். அன்பு இருந்தால் குழந்தையும், தாயும் சமானம்; ஏழையும், செல்வமும் சமானம்; படித்தவனும், படியாதவனும் சமம். அன்பு இருந்தால் மனிதனும் தெய்வமும் சமானம். அன்பு பூமியிலே மேலோங்கி நிற்கும்.
* வீட்டிலும் வெளியிலும் தனிமையிலும் கூட்டத்திலும் எதிலும் எப்போதும் நேர்மை இருக்க வேண்டும். உண்மை இருக்க வேண்டும்.
* எதற்கும் கவலைப்படாதே. கவலைப்படாது இருத்தலே முக்தி. கவலைப்படாது இருந்தால்தான் இவ்வுலகத்தில் எந்த நோயும் வராது. எவ்வித ஆபத்தும் நேராது. தவறி எவ்வித நோய் அல்லது எவ்வித ஆபத்து நேர்ந்த போதிலும் ஒருவன் அவற்றுக்குக் கவலையுறுவதை விட்டு விடுவானாயின் அவை தாமே விலகிப் போய் விடும்.
• இவ்வுலக வாழ்க்கையில் ஒருவன் வெற்றியடைய வேண்டுமானால், அவன் சம்பாதித்துக் கொள்ள வேண்டிய குணங்கள் எல்லா வற்றிலும் மிகமிக உயர்ந்த குணமாவது பொறுமை.
* மனிதனுடைய மனம் சிங்கம் போல் தாக்கும் திறனும், பாயும் திறனும் கொண்டு இருப்பது மட்டு மேயன்றி, ஒட்டகத்தைப் போல பொறுக்கும் திறனும் வேண்டும். அவ்விதமான பொறுமை பலம் இல்லாதவர்களுக்கு வராது. இவ்வுலக வாழ்க்கையில் ஒருவன் வெற்றியடைய வேண்டுமானல் அவன் சம்பாதித்துக் கொள்ள வேண்டிய குணங்கள் எல்லாவற்றிலும் மிக உயர்ந்த குணமானது பொறுமை.
• தீராத ஆவலும், அவசரமும், ஓயாத பரபரப்பும் உள்ள ஜுர வாழ்க்கை நாகரிகம் ஆக மாட்டாது. சரியான நாகரிகத்துக்குச் சாந்தியே ஆதாரம். அடக்கம், பொறுமை. ஜீவகாருண்யம் என்ற குணங்களே உண்மையான நாகரிகத்தையும், நித்திய ஜீவனையும் விளைவிக்கும்.
* மூடன் தான் செய்த குற்றத்தை மறந்து விடுகிறான் அல்லது பிறருக்குத் தெரியாமல் மறைக்கிறான் அல்லது பொய்க் காரணங்கள் செல்லி அது குற்றம் இல்லை என்று ருஜுப்படுத்த முயற்சி செய்கிறான். குற்றத்திற்குக் காரணம் அறியாமை. அதை நீக்கும் வழி சத்சங்கமும், தைரியமும்! பிறர் குற்றங்களை ஷமிக்கும் குணம் குற்றம் இல்லாதவர்களிடத்திலேதான் காணப்படும்.
• நெஞ்சம் இளகி விரிவெய்த விரிவெய்த அறிவிலே சுடர் ஏறுகிறது. நம்மிலும் மெலியாருக்கு நாம் இரங்கி, அவர்களை நமக்கு நிகராகச் செய்துவிட வேண்டும் என்று பாடுபடுதலே நாம் வலிமை பெறுவதற்கு வழியாகும் வேறு வழி இல்லை.
* சொந்த பாஷை கற்றுக் கொள்ளாதவர்கள் குரங்குகளாகப் பிறப்பார்கள் அடுத்த ஜென்மத்தில்!
• யாகம் என்பதன் பொருளை நாம் மிகத் தெளிந்து கொள்ளுதல் வேண்டும். பெரியதோர் இஷ்ட சித்தியின் பொருட்டாகச் சிறிய தற்கால சுகங்களை மனம் அறிந்து வெறுத்து விடுதலே யாகம்.
* பாவத்தைச் செய்வது இல்லை என்ற தீர்மானம் உண்மையாக இருக்க வேண்டும். ஞானமே அவ்வளவுதான். அதைக் காட்டிலும் பெரிய ஞானம் இருக்க முடியாது.
* தமிழ், தமிழ், தமிழ் என்று எப்போதும் தமிழை வளர்ப்பதே கடமையாகக் கொள்க. ஆனால் புதிய புதிய செய்தி, புதிய புதிய யோசனை, புதிய புதிய உண்மை, புதிய புதிய இன்பம் தமிழில் ஏறிக் கொண்டே இருக்க வேண்டும்.
* பொறுமை இல்லாதவனுக்கு இவ்வுலகில் எப்போதும் துன்பமே அன்றி அவன் ஒருநாளும் இன்பத்தைக் காண மாட்டான். ஒருவனுக்கு எத்தனைக்கு எத்தனை பொறுமை மிகுதிப்படுகிறதோ அத்தனைக்கு அத்தனை அவனுக்கு உலக விவகாரங்களில் வெற்றி உண்டாகிறது. வீட்டிலே பொறுமை பழகினால் அன்றி ஒருவனுக்கு நாட்டு விவகாரங்களில் பொறுமை ஏற்படாது.
* உண்மையான தெய்வ பக்தி இருந்தால் மனோ தைரியம் உண்டாகும். மனோ தைரியம் இருந்தால் உண்மையான தெய்வ பக்தி உண்டாகும்.
* தர்மத்தை நிலைநிறுத்தும் பொருட்டாக உலகத்தாரி்ன் நிந்தை, பழி, விரோதம், தீங்கு முதலியவற்றைக் கவனியாமல் உழைப்பவன் யக்ஞம் செய்பவன் ஆகிறான்.
* நெஞ்சம் இளகி விரிவெய்த விரிவெய்த அறிவிலே சுடர் ஏறுகிறது. நம்மிலும் மெலியாருக்கு நாம் இரங்கி, அவர்களை நமக்கு நிகராகச் செய்துவிட வேண்டும் என்று பாடுபடுதலே நாம் வலிமை பெறுவதற்கு வழியாகும். வேறு வழி இல்லை.
* அகண்ட வெளிக்கண் அன்பே வாழ்க! துயர்கள் தொலைந்திடுக! தொலையா இன்பம் விளைந்திடுக! வீழ்க கலியின் வலியெலாம்! கிருத யுகம்தான் மேவுகவே!

• பயத்தை உள்ளே வளர்ப்பவன் பாம்பை வளர்க்கிறான்.
• உண்மையான தெய்வபக்தி இருந்தால் மனோதைரியம் உண்டாகும். மனோ தைரியம் இருந்தால் உண்மையான தெய்வ பக்தி உண்டாகும்.
• ஊமையராய்ச் செவிடர்களாய்க் குருடர்களாய் வாழ்கின்றோம். ஒரு சொற் கேளீர்... சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செய்வீர்.
• வஞ்சகர், தீயர், மனிதரை வருத்துவோர், நெஞ்சகத்து தருக்குடை நீசர்கள் -இன்னோர் தம்மொடு பிறந்த சகோதரராயினும் வெம்மையோடு ஒறுத்தல் வீரர்தம் செயலாம்.

|
|
Tweet | ||
மீசைக்காரன் எழுதிய வரிகளில் உங்களைக் கவர்ந்த வரிகளை மேற்கோளிட்டீர்கள்..அவை என்னையும் கவர்ந்தது. படிப்போரையும் நிச்சயம் கவரும்..இந்த தருணத்தில் முண்டாசு கவியை நினைவுக்கு கொண்டு வந்ததற்கு நன்றி..
ReplyDeleteஅருமையான கருத்துகளின் தொகுப்பு ...
ReplyDelete@ மதுமதி
ReplyDelete-எனக்குக் கவிதை எழுத வராது என்பதாலோ என்னவோ... கவிஞர்கள் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். என்னைக் கவர்ந்த பாரதியின் வரிகள் உங்களையும் கவர்ந்ததில் மகிழ்ச்சி! வருகைக்கு நன்றி கவிஞரே...
@ "என் ராஜபாட்டை"- ராஜா
ReplyDelete-உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ராஜா சார்!
பாரதியை நினைவு கூர்ந்த விதம் அருமை.
ReplyDelete@ ஸ்ரீராம்.
ReplyDelete-உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் என் இதய நன்றி ஸ்ரீராம் ஸார்...
மின்னல் வீச்சு போன்று ஒவ்வோறு வரிகளிலும் ஒரு வெளிச்சம் பளிச்சிடுகிறது...
ReplyDeleteமீசைக்காரனை மிஞ்சுகிற ஒரு பேனா இன்னும் பிறக்கவில்லை...
@ கவிதை வீதி... // சௌந்தர் //
ReplyDelete-உங்கள் கருத்தை எழுத்துக்கு எழுத்து ஆமோதிக்கிறேன் செளந்தர் ஸார்... எனக்கும் இதே உணர்வுதான். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
எ ந்த வரிகளையாவது குறிப்பிட்டு நல்லா இருக்குன்னு சொல்ல வந்தேன் ஆனா எல்லா வரிகளுமே நல்லா இருக்கு.
ReplyDeleteமிக் அரும்ையான தொகுப்பு
ReplyDelete//எனக்குக் கவிதை எழுத வராது என்பதாலோ என்னவோ... கவிஞர்கள் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும்// என்க்கும் தான்
படங்களுடன் பாவேந்தன் பாரதியின் பிறந்த நாள்
ReplyDeleteசிறப்புப் பதிவு மிக மிக அருமை
பதிவுக்கு நன்றி
தொடர வாழ்த்துக்கள்
த.ம 5
ReplyDeleteஅருமையான அனைவரையும் கவரக்கூடிய தொகுப்பு.பகிர்வுக்கு நன்றிண்ணா.
ReplyDelete* சொந்த பாஷை கற்றுக் கொள்ளாதவர்கள் குரங்குகளாகப் பிறப்பார்கள் அடுத்த ஜென்மத்தில்!
ReplyDeleteவாசிக்கும்போதே சிரித்துவிட்டேன்.எத்தனை ஆக்ரோஷம் !
பாரதியையும், அவரின் வரிகளையும் நினைவுக் கூர்ந்தமைக்கு நன்றிகள்..
ReplyDeleteஅருமையான தொகுப்பு.
ReplyDeleteமுதல்வனுக்கு முதல் வணக்கம்.
ReplyDeleteமுதல்வனை நினைவு கூர்ந்த சின்னவருக்கு சிறப்பு வணக்கம்.
WoW....! Mahakaviyai Ninai paduthiya arputhamaana pathivu. Nanri. Avarukke samarppanam. Vaalthukkal Sago.
ReplyDelete@ Lakshmi said...
ReplyDelete-பாரதியாச்சே... தமிழைத் தலைநிமிரச் செய்தவரின் வரிகள்ன்னா சும்மாவா அம்மா? உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!
@ Jaleela Kamal
ReplyDelete-முதல் வருகை என்று நினைக்கிறேன். நல்வரவு! உங்கள் ரசனைக்கு என் இதய நன்றி!
@ Ramani said...
ReplyDeleteஎனக்குத் தரும் தொடர்ந்த ஆதரவுக்கும், நீங்கள் ரசித்ததற்கும்... என் இதயம் நிறைந்த நன்றிகள் சார்!
@ ஸாதிகா said...
ReplyDelete-கவிதாயினியான தங்கைக்கு பாரதியைப் பிடிக்காமல் போகுமா? வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சிஸ்!
ஹேமா said...
ReplyDelete-நானும் மிக ரசித்த வரிகள் அவை. ‘ரெளத்திரம் பழகு’ என்று சொன்ன ஆவேசத்துக்குச் சொந்தக்காரராயிற்றே பாரதி! உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
எனக்கு பிடித்த மீசைக்காரனின் வைர வரிகளை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி அண்ணா
ReplyDelete@ !* வேடந்தாங்கல் - கருன் *!
ReplyDelete-உங்களின் ரசனைக்கும், வருகைக்கும் என் மனமார்ந்த நன்றி கருன்!
@ சென்னை பித்தன் said...
ReplyDelete-உங்களின் வருகைக்கும், ரசித்ததற்கும் என் இதய நன்றிகள் ஐயா!
@ ரசிகன் said...
ReplyDelete-கவியரசன் பாரதியை ரசித்த ரசிகன் ஸாருக்கு என் இதயம் நிறைந்த நன்றி!
@ துரைடேனியல் said...
ReplyDelete-வருக சகோதரரரே... முதல் வருகை என்று நினைக்கிறேன். நல்வரவு! பாரதிக்கு சமர்ப்பணமான இந்தப் பதிவை ரசித்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!
த ம 9
ReplyDelete@ ராஜி said...
ReplyDelete-உமக்கு மட்டுமா தங்கையே? நம் அனைவருக்கும் பிடித்த முண்டாசுக் கவியல்லவா? அவரது வைர வரிகளை ரசித்த உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி!
பாரதியைப்பற்றி எழுதினாலே தமிழ் மேலும் இனிக்கிறது ! அதிலும் அவன் சிந்தனையை பகிர்ந்திருப்பதால் மனம் நிறைவு பெறுகிறது சகோதரரே!
ReplyDeleteகவிதை எழுதத்தெரியலேன்னா என்ன அதான் கட்டுரை கதைகளையே கவித்துவமாய் தரீங்களே அது்போதாதாக்கும்?:) அதுக்கு இங்க தம்பி தோள்ள சின்னத்தட்டுதான் தலைல குட்டு இல்ல சம்ஜே?:)
ReplyDeleteவீட்டிலும் வெளியிலும் தனிமையிலும் கூட்டத்திலும் எதிலும் எப்போதும் நேர்மை இருக்க வேண்டும். உண்மை இருக்க வேண்டும்.
ReplyDeleteசபாஷ்! பாரதியை பார்க்க முடியாத ஏக்கம் அவரது
படைப்பால் தீர்கிறது.
சொந்த பாஷை கற்றுக் கொள்ளாதவர்கள் குரங்குகளாகப் பிறப்பார்கள் அடுத்த ஜென்மத்தில்!
என்ன ஒரு நையாண்டி
@ ஷைலஜா said...
ReplyDeleteகரெக்ட்! எனக்கு இந்தத் தொகுப்புப் பணியைச் செய்து முடித்ததும் மனதுக்கு மிகவும் நிறைவாக இருந்ததுக்கா! அதை நீங்கள் குறிப்பிட்டது எனக்கு இனிக்கிறது! மிக்க நன்றி!
@ ஷைலஜா said...
ReplyDeleteகவிதை எழுதத்தெரியலேன்னா என்ன அதான் கட்டுரை கதைகளையே கவித்துவமாய் தரீங்களே அது் போதாதாக்கும்?:) அதுக்கு இங்க தம்பி தோள்ள சின்னத் தட்டுதான் தலைல குட்டு இல்ல சம்ஜே?
-சமஜ்கயா தீதி! எனக்கு நீங்கள் சொன்னது மிக மகிழ்வாக இருக்கிறது. இந்த மகிழ்வு போதாதா? பஹீத் தன்யவாத்!
ரிஷபன் said...
ReplyDeleteசொந்த பாஷை கற்றுக் கொள்ளாதவர்கள் குரங்குகளாகப் பிறப்பார்கள் அடுத்த ஜென்மத்தில்! என்ன ஒரு நையாண்டி.
-இது கோபமாக அவர் சொன்னதாக எனக்குப் பட்டது. நையாண்டி என்று நீங்கள் கருதுகிறீர்கள். எப்படியாயினும் பாரதி தி கிரேட்! -பாரதியின் வரிகளை நீங்கள் ரசித்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி ரிஷபன் ஸார். நன்றி!
எழில்மிகு கவி படைத்த
ReplyDeleteமுண்டாசுக் கவிஞனின்
உரைநடைகளை அற்புதமாக
பகிர்ந்தளித்தமை நன்று நண்பரே...
beautiful content
ReplyDelete@ மகேந்திரன் said...
ReplyDelete-உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் மனமார்ந்த நன்றி மகேந்திரன் ஸார்!
Latha Vijayakumar said...
ReplyDeletebeautiful content
-Thankyou Verymuch for your kind visit and opinion Madam!
This comment has been removed by the author.
ReplyDeleteஅற்புதம்.
ReplyDeleteகுறிப்பாய் பயத்தை வளர்ப்பவன் பாம்பை வளர்க்கிறான் என்பது அருமை.
‘தருமத்தின் வாழ்வதனை சூது கவ்வும், தருமமே மறுபடியும் வெல்லும்’ என்ற நம்பிக்கை வரிகளைத் தந்த பாட்டுக்கொரு புலவனின் பிறந்த நாளின் போது அவரது எழுச்சி மிக்க ‘வைர’ வரிகளை தொகுத்து அளித்தமைக்கு நன்றி.
ReplyDeleteநல்ல தொகுப்பு. சில வரிகள் இரண்டு முறை காணப்படுகின்றன.
ReplyDeletenice to read.. thanks for sharing such a wonderful information... please read my tamil kavithaigal in www.rishvan.com
ReplyDeleteபாரதியை நினைவுகூர்ந்த விதம் அருமை. அவரது பாக்களால் ஆன மாலை தொடுத்து அவருக்கு சாத்தி அரும்பணி ஆற்றிவிட்டீர்கள். பாராட்டுகள். மகாகவிக்கு என் வந்தனம்.
ReplyDelete@ மோகன் குமார் said...
ReplyDelete-ஆழ்ந்து யோசித்தால் பாரதியின் வரிகளிலுள்ள சத்தியம் விளங்கும். நீங்கள் ரசித்ததற்கும் வருகைக்கும் என் மனமார்ந்த நன்றி!
@ வே.நடனசபாபதி said...
ReplyDelete-பாரதியின் வைர வரிகளை நீங்கள் ரசித்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி! வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
@ kg gouthaman said...
ReplyDeleteஆமாம் சார். மேட்டர் ரிபீட் ஆனதை இப்பதான் கவனிச்சேன். ஸாரி! இனி இன்னும் கவனமா இருப்பேன். சுட்டிக் காட்டியதற்கு நன்றி சார்!
@ Rishvan said...
ReplyDeleteநிச்சயம் உங்கள் தளம் வருகிறேன். கவிதைகள் எனக்கு மிகவும் பிடிக்கும். வருகைக்கும் கருத்துககும் மிக்க நன்றி ரிஷ்வன் ஸார்!
@ கீதா said...
ReplyDeleteஉங்களின் வருகைக்கும், கருத்துக்கும் என் இதயம் நிறைந்த நன்றிகள்!
தேசாபிமானம் கற்பியாத கல்விமுறை வெறும் மண்ணாகுமேயன்றி ஒன்றுக்கும் பயன்படாது.
ReplyDeleteஅடுத்தஜொன்மத்தில் என்னவாகப்பிறக்கவேண்டும் என்று முடிவு செய்துகொள்ளவேண்டிய அருமையான பாரதியின் வரிகளின் பகிர்வுகள்..
பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..
பதிவை படித்ததும் தியானத்தின் அமைதி கம்பீரமாய் அனுபவித்தது போலிருந்தது.
ReplyDeleteபாரதியார் எனக்கு மிகவும் பிடித்தவர்.
முண்டாசுக் கவி பாரதியின் பிறந்த நாளை
ReplyDeleteநினைவில் வைத்து எழுதிய தங்களை நான்
மிகவும் பாராட்டுகிறேன்
பதிவு, அவருக்குச் சூட்டிய மணிமகுடம்
அருமை அன்பரே!
புலவர் சா இராமாநுசம்
த ம ஒ 13
அருமையான தொகுப்பு கணேஷ்! இனிமேல் அடுத்த வருசம் இது மாதிரி யாராவது எழுதினாத் தான் பாரதியைப் படிப்பேன் என்ற யதார்த்தம் படிக்கும் போதே உறுத்தினாலும் விரும்பிப் படித்தேன். பாரதி வாழ்ந்த அதே நூற்றாண்டில் நாமும் வாழ்ந்தோம் என்ற பெருமை நம்மில் சிலருக்குக் கிடைத்திருப்பதே பெரிய பேறென்று தோன்றுகிறது. பாரதி தாகூர் காந்தி என்று எனக்கடுத்த தலைமுறை யாரைக் கொண்டாடும் என்ற ஏக்கமும் வந்து போனது. தொகுப்புக்கு நன்றி.
ReplyDelete@ இராஜராஜேஸ்வரி said...
ReplyDeleteஉங்கள் வருகையும், பாராட்டும் தந்தது மகிழ்ச்சி. வாழ்த்துக்களுக்கும் வருகைக்கும் என் இதயம் நிறைந்த நன்றி!
@ thirumathi bs sridhar said...
ReplyDelete-அழகான வார்த்தைகளால் ரசித்ததைச் சொல்லியிருக்கீங்க. உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!
@ புலவர் சா இராமாநுசம் said...
ReplyDelete-உங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் மனம் நிறைய நன்றி நவில்கின்றேன் புலவர் ஐயா...
@ அப்பாதுரை said...
ReplyDelete-சுடுகின்ற நிஜம்! நீங்கள் சொல்லியிருக்கும் அதே ஆதங்கம் எனக்குள்ளும் எழுந்ததுண்டு. சமகாலத்தில் கொண்டாடப்பட வேண்டிய மேதைகள் எவரும் தோன்றவில்லை என்பது உண்மைதான். நம்மாலென்ன செய்துவிட முடியும்? உங்களின் நற்கருத்துக்கும் வருகைக்கும் என் மனமார்ந்த நன்றி!
உங்கள் முகப்புப் படம் நன்றாக உள்ளது. பாரதி நினைவுகள். நன்றி சகோதரா. அவரை நினைத்தாலே தமிழ் வரும். வாழ்த்துகள்.
ReplyDeleteவேதா. இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com
@ kovaikkavi said...
ReplyDeleteஉங்கள் வருகைக்கும், ரசித்தற்கும் மிக்க நன்றி சகோதரி.