சமீபத்தில் ‘எங்கள் ப்ளாக்’கில் ‘சங்கதாரா’ என்ற நூலை அறிமுகம் செய்திருந்தார்கள். அந்த அறிமுகத்தால் ஈர்க்கப்பட்டு உடனே அந்த நூலை வாங்கிப் படித்தேன். ‘விறுவிறுப்பு நான் கியாரண்டி’ என்று எங்கள் ப்ளாக்கில் குறிப்பிட்டிருந்தது மிகச் சரியான வார்த்தை. பாதி படித்து விட்டுக் கீழே வைக்கவே மனம் வரவில்லை.
‘இறந்த கடலில்’ உள்ள ‘பெர்முடா ட்ரையாங்கிள்’ என்ற பகுதியை அறிந்திருப்பீர்கள். அப்பகுதியில் சென்ற விமனங்களும், கப்பல்களும் காணாமல் போனதால் அந்த முக்கோணப் பகுதியில் பயணம் செய்வதை அனைவரும் தவிர்த்து வருகின்றனர். சோழர்கள் அரசியலில் ‘ஆதித்த கரிகாலன் கொலை’ என்பது அத்தகையதொரு பெர்முடா முக்கோணம். கல்கி உள்ளிட்ட பல சரித்திர நூலாசிரியர்கள் மேலோட்டமாக, அதைத் தவிர்த்து விட்டே தங்கள் வாகனத்தைச் செலுத்தியிருக்கிறார்கள். அதனுள் தைரியமாக புகுந்து புறப்பட்டு, ஆதித்த கரிகாலனின் மரணத்தின் பின்னேயுள்ள மர்ம முடிச்சை இந்நூலாசிரியர் மிக அருமையாக விடுவித்திருக்கிறார்.
‘இறந்த கடலில்’ உள்ள ‘பெர்முடா ட்ரையாங்கிள்’ என்ற பகுதியை அறிந்திருப்பீர்கள். அப்பகுதியில் சென்ற விமனங்களும், கப்பல்களும் காணாமல் போனதால் அந்த முக்கோணப் பகுதியில் பயணம் செய்வதை அனைவரும் தவிர்த்து வருகின்றனர். சோழர்கள் அரசியலில் ‘ஆதித்த கரிகாலன் கொலை’ என்பது அத்தகையதொரு பெர்முடா முக்கோணம். கல்கி உள்ளிட்ட பல சரித்திர நூலாசிரியர்கள் மேலோட்டமாக, அதைத் தவிர்த்து விட்டே தங்கள் வாகனத்தைச் செலுத்தியிருக்கிறார்கள். அதனுள் தைரியமாக புகுந்து புறப்பட்டு, ஆதித்த கரிகாலனின் மரணத்தின் பின்னேயுள்ள மர்ம முடிச்சை இந்நூலாசிரியர் மிக அருமையாக விடுவித்திருக்கிறார்.
வேறெந்த இடங்களையும் விட, நம் தமிழ்நாட்டில்தான் ‘ஹீரோ ஒர்ஷிப்’ என்பது மிக அதிகம். நமக்குப் பிடித்த ஹீரோவின் கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்வோம்; பல சிறப்புப் பெயர்கள் சூட்டி மகிழ்வோம்; அவரை யாரேனும் குறை கூறினால் அடிக்கவும், கொல்லவும் தயங்கோம். தமிழன் என்ற இனத்தின் தனிக்குணங்களில் இது ஒன்று. அப்படி நீங்களனைவரும் கல்கி அவர்களின் ‘பொன்னியில் செல்வன்’ நூலைப் படித்து விட்டு சில கதாபாத்திரங்களின் மீது ‘ஹீரோ ஒர்ஷிப்’ மனதில் வளர்த்து வைத்திருப்பீர்கள். அந்தக் கண்ணோட்டத்துடன் இந்நூலைப் படித்தீர்கள் எனில், இந்நாவல் உங்களுக்குப் பேரதிர்ச்சி தரும். குந்தவையும், வந்தியத் தேவரும், பழுவேட்டரையர்களும், அனிருத்தப் பிரம்மராயரும், உத்தம சோழனும் கல்கிக்கு மாறான குணாதிசயங்களில் வேறுவிதமாய் அறிவீர்கள். ‘பொன்னியின் செல்வன்’ என்கிற கூலிங்கிளாஸைக் கழட்டி விட்டு நீங்கள் இந்தப் புதினத்தைப் படிப்பது நல்லது என்கிறார் நூலாசிரியர்.. அப்படிப் படித்ததால்தான் எனக்கு நல்ல வாசிப்பனுபவம் கிடைத்தது.
பொதுவாக எதிரி மன்னர்களுடன் போர் தொடுப்பவர்கள், அவனை சிறை செய்வார்கள் அல்லது கொன்று விடுவார்கள். இது இயல்பு. இந்த இயல்புக்கு மாறாக ஆதித்த கரிகாலன் ஏன் வெறி கொண்டு வீரபாண்டியனின் தலையை வெட்ட வேண்டும்? இந்தக் கேள்விக்கு நூலாசிரியர் சரியான விடை தந்திருக்கிறார். சகல காவலுடன் இருக்கக் கூடிய பட்டத்து இளவரசன், அதிலும் பெரு வீரன்... அப்படிப்பட்ட ஆதித்த கரிகாலனை அவ்வளவு எளிதாக ஒருவன் கொன்றுவிட முடியுமா? ரவிதாஸன் என்பவனும் அவனைச் சேர்ந்த பாண்டிய ஆபத்துதவிகளும் கொன்றனர் என்றும் அவர்களின் சொத்துக்களைப் பறித்துக் கொண்டு நாட்டை விட்டே துரத்தினான் ராஜராஜ சோழன் என்றும் கல்கி, விக்கிரமன், பாலகுமாரன் போன்ற பலர் எழுதிய சரித்திர நூ்ல்கள் கூறுகின்றன. அதேசமயம் ராஜராஜனுக்கு முன் ஆட்சி செய்த உத்தம சோழனின் காலத்தில் ரவிதாஸனுக்கு சோழ அரசில் பெரும் பதவி கொடுத்து ‘பிரும்மாதி ராயன்’ பட்டமும் கொடுத்திருக்கிறார்கள். அப்படியெனில் அவன் எப்படி கொலையாளியாக இருக்க முடியும்?
-இப்படிக் கேள்வியுடன் புதினப் பயணத்தைத் துவக்கம் நூலாசிரியர் ‘காலச்சக்கரம் நரசிம்மா, விறுவிறுப்புக் குன்றாமல் பயணம் செய்து மிகத் தெளிவான ஒரு முடிவைத் தருகிறார். சோழர்கள் காலத்து ஆட்சி முறை, அவர்களுக்குள் இருந்த உறவுச் சிக்கல்கள, அக்காலத்திய பழக்க வழக்கங்கள் என்று நாவலைப் படிக்கையில் ஆச்சரியமும் பிரமிப்பும் எழும். ‘முருக்கல் அல்ல, முருங்கல்’ என்ற வார்த்தைப் பிரயோகத்தின் மூலமே என்னைக் கட்டிப் போட்டார் நரசிம்மா. இந்த வார்த்தைகளின் அர்த்தத்தை நூலாசிரியர் விவரிக்கையில் ஏற்பட்ட ஆச்சரியத்தை நீங்கள் உணர, நீங்களும் அவசியம் வாங்கிப் படியுங்கள்.
நாவலின் ஓட்டத்தினிடையே இத்தனை காலமாக பல சரித்திர நவீனங்களையும், க்ரைம் கதைகளையும் படித்த அனுபவத்தை வைத்து, நூலின் முடிச்சுகளை ஆசிரியர் இப்படித்தான் அவிழ்ப்பார் என்கிற அனுமானத்துடனேயே படித்து வந்தேன். ஆனால் முடிச்சுகள் அவிழ்க்கப்படும ஒவ்வொரு கட்டத்திலும் நான் எதிர்பார்த்தபடி இல்லாமல் வேறு கோணத்தில் பயணித்து முடிச்சுகளை அவிழ்த்து ஆச்சரியமளித்தார் நூலாசிரியர். நான் ஆனந்த அதிர்வுடன் தோற்றுத்தான் போனேன்.
மக்களின் ஆட்சி என்று நாம் மார்தட்டிக் கொள்ளும் இன்றைய காலகட்டத்தில் பதவிக்காகவும், பணத்துக்காகவும் நடைபெறும் சூழ்ச்சிகளையும், ஊழல்களையும் கண்கூடாகக் கண்டு வருகிறோம். பணத்துக்காக தாயைக் கொன்ற மகன், காதலியைக் கொன்ற காதலன் என்று தினசரி செய்தித் தாள்களில் பல செய்திகளைப் படிககிறோம். அரசன் என்கிற தலைவனின் பேச்சுக்கு மறுபேச்சில்லாதிருந்த சரித்திர காலகட்டத்தில் வாழ்நதவர்களிடம் பதவி ஆசையோ, பண ஆசையோ இல்லாதிருந்திருக்குமா? இக்காலத்தைவிட அதிகமாகவே சதிகளும், போர்களும் நடைபெற்றிருக்கும் என்பதே உண்மை. இப்புதினம் அந்த அரசியல் சதிகளைக் கையாண்டு, விறுவிறுப்புடன் கூடிய ஒரு வாசிப்பனுபவத்தைத் தந்திருக்கிறது.
ஆதித்த கரிகாலன் கொலை இன்னாரால், இன்னவிதமாக நிகழ்ந்தது என்று சரித்திர முடிச்சு ஒன்றை அவிழ்க்கும் நூலாசிரியர் அதை மேலோட்டமாக நுனிப்புல் மேயவில்லை. தகுந்த சரித்திர ஆதாரங்களை நூல் நெடுகிலும் தந்திருக்கிறார். கடின உழைப்பின் பேரில் மட்டுமே சாத்தியப்பட்டிருக்கும் விவரங்கள் இவை. இத்தனை தகவல்களுடன் கூடிய, சர்ச்சைக்குரிய விஷயத்தை அலசும் ஒரு நூல் பள்ளி நாட்களில் நாம் படித்திருக்கும் வரலாற்றுப் புத்தகம் போல் இருக்கும் என்று எண்ணிவிட வேண்டாம். ஒரு க்ரைம் கதைக்குரிய விறுவிறுப்பும், வேகமும் இந்த சரி்த்திரப் புதினத்தில் இருக்கிறது. படிக்கத் துவங்கினால் ஒரே மூச்சில் முடித்து விட்டுத்தான் கீழே வைக்க நினைப்பீர்கள் என்பதில் எனக்கு சந்தேகமில்லை.
இந்த ‘சங்கதாரா’ புதினத்தை ஒரே மூச்சாகப் படித்த முடித்த உடனேயே இந்நூலாசிரியரின் மற்ற இரு புத்தகங்களான ‘காலச்சக்கரம்’ மற்றும் ‘ரங்கராட்டினம்’ ஆகியவற்றை வாங்கிப் படித்தேயாக வேண்டும் என்கிற தீர்மானம் எனக்குள் எழுந்து விட்டது. புத்தகத்தைப் படித்தால் நீங்களும் அதே முடிவிற்கு வருவீர்கள் என்பதில் எனக்கு துளியளவும் ஐயமில்லை. 450 பக்கங்கள் கொண்ட, ‘காலச்சக்கரம் நரசிம்மா’ எழுதிய ‘சங்கதாரா’ என்ற இந்நூலை சென்னை தி.நகர் தீனதயாளு தெருவில் 23ம் இலக்கத்திலுள்ள வானதி பதிப்பகம் வெளியிட்டிருக்கிறார்கள்.
-இப்படிக் கேள்வியுடன் புதினப் பயணத்தைத் துவக்கம் நூலாசிரியர் ‘காலச்சக்கரம் நரசிம்மா, விறுவிறுப்புக் குன்றாமல் பயணம் செய்து மிகத் தெளிவான ஒரு முடிவைத் தருகிறார். சோழர்கள் காலத்து ஆட்சி முறை, அவர்களுக்குள் இருந்த உறவுச் சிக்கல்கள, அக்காலத்திய பழக்க வழக்கங்கள் என்று நாவலைப் படிக்கையில் ஆச்சரியமும் பிரமிப்பும் எழும். ‘முருக்கல் அல்ல, முருங்கல்’ என்ற வார்த்தைப் பிரயோகத்தின் மூலமே என்னைக் கட்டிப் போட்டார் நரசிம்மா. இந்த வார்த்தைகளின் அர்த்தத்தை நூலாசிரியர் விவரிக்கையில் ஏற்பட்ட ஆச்சரியத்தை நீங்கள் உணர, நீங்களும் அவசியம் வாங்கிப் படியுங்கள்.
நாவலின் ஓட்டத்தினிடையே இத்தனை காலமாக பல சரித்திர நவீனங்களையும், க்ரைம் கதைகளையும் படித்த அனுபவத்தை வைத்து, நூலின் முடிச்சுகளை ஆசிரியர் இப்படித்தான் அவிழ்ப்பார் என்கிற அனுமானத்துடனேயே படித்து வந்தேன். ஆனால் முடிச்சுகள் அவிழ்க்கப்படும ஒவ்வொரு கட்டத்திலும் நான் எதிர்பார்த்தபடி இல்லாமல் வேறு கோணத்தில் பயணித்து முடிச்சுகளை அவிழ்த்து ஆச்சரியமளித்தார் நூலாசிரியர். நான் ஆனந்த அதிர்வுடன் தோற்றுத்தான் போனேன்.
மக்களின் ஆட்சி என்று நாம் மார்தட்டிக் கொள்ளும் இன்றைய காலகட்டத்தில் பதவிக்காகவும், பணத்துக்காகவும் நடைபெறும் சூழ்ச்சிகளையும், ஊழல்களையும் கண்கூடாகக் கண்டு வருகிறோம். பணத்துக்காக தாயைக் கொன்ற மகன், காதலியைக் கொன்ற காதலன் என்று தினசரி செய்தித் தாள்களில் பல செய்திகளைப் படிககிறோம். அரசன் என்கிற தலைவனின் பேச்சுக்கு மறுபேச்சில்லாதிருந்த சரித்திர காலகட்டத்தில் வாழ்நதவர்களிடம் பதவி ஆசையோ, பண ஆசையோ இல்லாதிருந்திருக்குமா? இக்காலத்தைவிட அதிகமாகவே சதிகளும், போர்களும் நடைபெற்றிருக்கும் என்பதே உண்மை. இப்புதினம் அந்த அரசியல் சதிகளைக் கையாண்டு, விறுவிறுப்புடன் கூடிய ஒரு வாசிப்பனுபவத்தைத் தந்திருக்கிறது.
ஆதித்த கரிகாலன் கொலை இன்னாரால், இன்னவிதமாக நிகழ்ந்தது என்று சரித்திர முடிச்சு ஒன்றை அவிழ்க்கும் நூலாசிரியர் அதை மேலோட்டமாக நுனிப்புல் மேயவில்லை. தகுந்த சரித்திர ஆதாரங்களை நூல் நெடுகிலும் தந்திருக்கிறார். கடின உழைப்பின் பேரில் மட்டுமே சாத்தியப்பட்டிருக்கும் விவரங்கள் இவை. இத்தனை தகவல்களுடன் கூடிய, சர்ச்சைக்குரிய விஷயத்தை அலசும் ஒரு நூல் பள்ளி நாட்களில் நாம் படித்திருக்கும் வரலாற்றுப் புத்தகம் போல் இருக்கும் என்று எண்ணிவிட வேண்டாம். ஒரு க்ரைம் கதைக்குரிய விறுவிறுப்பும், வேகமும் இந்த சரி்த்திரப் புதினத்தில் இருக்கிறது. படிக்கத் துவங்கினால் ஒரே மூச்சில் முடித்து விட்டுத்தான் கீழே வைக்க நினைப்பீர்கள் என்பதில் எனக்கு சந்தேகமில்லை.
இந்த ‘சங்கதாரா’ புதினத்தை ஒரே மூச்சாகப் படித்த முடித்த உடனேயே இந்நூலாசிரியரின் மற்ற இரு புத்தகங்களான ‘காலச்சக்கரம்’ மற்றும் ‘ரங்கராட்டினம்’ ஆகியவற்றை வாங்கிப் படித்தேயாக வேண்டும் என்கிற தீர்மானம் எனக்குள் எழுந்து விட்டது. புத்தகத்தைப் படித்தால் நீங்களும் அதே முடிவிற்கு வருவீர்கள் என்பதில் எனக்கு துளியளவும் ஐயமில்லை. 450 பக்கங்கள் கொண்ட, ‘காலச்சக்கரம் நரசிம்மா’ எழுதிய ‘சங்கதாரா’ என்ற இந்நூலை சென்னை தி.நகர் தீனதயாளு தெருவில் 23ம் இலக்கத்திலுள்ள வானதி பதிப்பகம் வெளியிட்டிருக்கிறார்கள்.
|
|
Tweet | ||
நூல் விமரிசனம் மிக அருமை! Keep it up.
ReplyDeleteதங்களின் தெம்பூட்டும் பாராட்டிற்கு என் இதயம் நிறை நன்றி.
Deleteநானும் உங்கள் பதிவை எட்டிப்பார்த்து விட்டேன்....
ReplyDeleteஎட்டிப் பார்த்த நண்பருக்கு மகிழ்வுடன் என் நன்றி.
Delete‘பொன்னியின் செல்வன்’ என்கிற கூலிங்கிளாஸைக் கழட்டி விட்டு நீங்கள் இந்தப் புதினத்தைப் படிப்பது நல்லது என்கிறார் நூலாசிரியர்..
ReplyDeleteசிறப்பான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..
சிறப்பான பகிர்வென்று சொல்லி மகிழ்வளித்த தங்களுககு என் இதய நன்றி.
Deleteஉங்கள் பதிவைப் படித்ததும் உடனே ‘சங்கதாரா’ வாங்கிப் படிக்கவேண்டும் என்ற ஆவலை ஏற்படுத்திவிட்டது. நீங்கள் சொல்வது போல், கல்கி அவர்களின் ‘பொன்னியில் செல்வன்’ நூலைப் படித்து விட்டு சில கதாபாத்திரங்களின் மீது ‘ஹீரோ ஒர்ஷிப்’ மனதில் வளர்த்து வைத்திருக்கிறேன் என்பது உண்மை. இந்த நூலைப் படித்தால் அவைகள் தகர்ந்துவிடுமோ என்ற பயம் இருந்தாலும் உண்மையை, வரலாற்று சான்றுகளுடன் தரும் புதினத்தைப் படிக்கவே விரும்புகிறேன்
ReplyDeleteஅப்படியல்ல. அனைத்து மனிதர்களுக்கும் பிரசித்தி பெற்ற பக்கங்கள் தவிர்த்து இயல்பான பலவீனங்களும் இருக்கத்தான் செய்யும். இதை உணர்ந்து படித்தாலே கதாபாத்திர நியாயங்கள் நமக்குப் புரியும். வாங்கிப் படிக்க வேண்டும் என்ற ஆவல் கொண்ட உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.
Deleteநூலின் விமர்சனமே இவ்வளவு அருமை என்றால் நூல் கண்டிப்பாக அருமையாகத் தான் இருக்கும். பார்த்திபன் கனவு படித்துவிட்டேன், பொன்னியின் செல்வன் படிக்க வேண்டும் என்பது கனவாகவே உள்ளது. அதையும் சீக்கிரம் படிக்க வேண்டும். இந்த நாவலை அடுத்த நெடுந்தூர பேருந்துப் பயணத்தின் நண்பன் ஆகிக் கொள்கிறேன் வாத்தியாரே. விமர்சனம் அருமை. தங்கள் படிக்கும் புத்தகங்களை தவறாது எங்களுடன் பகிர்ந்து கொள்ளும் உங்கள் செயல் உற்சாகப்படுத்தப் பட வேண்டிய ஒன்று. தொடருங்கள் தொடர்கிறோம்
ReplyDeleteவிரிவாக உற்சாகம் தரும் கருத்தினைப் பகிர்ந்ததற்கும், நான் நல்ல நூல்களைப் பரிந்துரை செய்வேன் என்று என்மீது வைத்த நம்பிக்கைகைகும் ம(நெ)கிழ்வுடன் கூடிய என் நன்றி நண்பா.
Deleteநீங்களும் பல நுால்கள் பற்றிய
ReplyDeleteஅறிமுகத்தை வழங்குகிறீர்கள்
என்றாலும் அந்நுால்களை படிக்கும் பாக்யம் எனக்கு இல்லையே அங்கிள்.
விமர்சனம் மிக அருமை அங்கிள்.
நிறைய நூல்களைப் படிக்கும் ஒரு காலம் உன் வாழ்வில் வரட்டும் என்று வாழ்த்துகிறேன் எஸ்தர். உனக்கு என் உளம் கனிந்த நன்றி.
Deleteநூல் விமர்சனம் அருமை.சரித்திரபுதினக்கள் படிப்பதற்குத்தான் எனக்கு இப்பொழுது ஈடுபாடே வருவதில்லை.
ReplyDeleteஉங்கள் விமர்சனத்தை படித்து விட்டேன்.
சரித்திரப் புதினங்கள் படிக்கும ஈடுபாடு இல்லாவிட்டால் என்ன... இந்த விமர்சனத்தைப் படித்து என்னை ஊக்கப்படுத்தியதற்கு என் இதயம் நிறை நன்றிம்மா.
Deleteபுத்தகங்கள் அவ்வளவு பெரிதாக வாசிக்கும் பழக்கம் இல்லாத என்னையும் படிக்க சொல்லி கேட்கிறது உங்கள் நூல் விமர்சனம் சார்..ரொம்பவும் விரிவாக அழகாக பகிர்ந்துள்ளீர்கள்.மிக்க நன்றி.
ReplyDeleteமகிழ்வு தந்த நற்கருத்தினை வழங்கிய நண்பருக்கு என் இதயம் நிறை நன்றி.
Deleteசரித்திர நாவல் என்றால் முதலில் சாண்டில்யன், கல்கி கோவி மணி சேகரன் கௌதம நீலாம்பரன் போன்றவர்களைத்தான் படிச்சிருக்கேன். சாண்டில்யன் நாவல களில் வர்ணனைகளும் கதை சொல்லிப்போகும் பாங்கும் நம்மையும் அந்த இடங்களுக்கே அழைத்து சென்று விடும். நீங்க சொல்லி இருக்கும் இந்த நாவல் இதுவரை படிக்க வாய்ப்பு கிடைக்கலே.உங்க விமரிசனம் படித்ததும் நாவல் படிக்கணும்னே தோணுது.
ReplyDeleteநீங்கள் சொல்லியிருக்கும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் பிரபலமானவர்கள். ஆனால் இந்நூலாசிரியர் வர்ணனைகளுக்கும், சிருங்கார ரஸத்திற்கும் முன்னுரிமை தராமல் உண்மைகளை உரைக்கப் பயணம் செய்துள்ளார். ஆகவே ரம்யமான ரசனைக்குரியதாகவே உள்ளது இந்நூல். படித்துப் பாருங்கள், பிடித்து விடும். தங்களுக்கு என் இதய நன்றிம்மா.
Deleteஎனக்கு வரலாறுகள் பற்றியும் வரலாறுகளின் வரலாறு பற்றியும் அவ்வளவாக தெரியாது..இருந்தும் அந்த பெர்முடா முக்கோணம் பற்றி அறிந்துள்ளேன்..அது பற்றி மேலதிகமாக நூலகள் இருந்தால் சொல்லவும் அல்லது லிங் தரவும்....
ReplyDeleteதேடித் தர முயற்சிக்கிறேன் நண்பரே. மிக்க நன்றி.
Deleteநல்ல பதிவு தொடருங்கள்
ReplyDeleteஉற்சாகம் தந்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.
Deleteஎனக்கென்னவோ சரித்திர கால புதினம் என்றால் கல்கியும், சாண்டில்யனும்தான் நினைவுக்கு வராங்க. அவங்களை போல் எழுதி இருப்பாரா? எப்படியோ நல்லதொரு சரித்திர நாவலை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி அண்ணா.
ReplyDeleteஅவர்கள் பாணி வேறு. இவர் வேறம்மா. விரிவான விளக்கம் அவரே தந்துவிட்டார் உனக்காக. படித்துப் பாரும்மா. மகிழ்வளித்த தங்கையின் வருகைக்கு மனம் நிறைய நன்றி.
Deleteநல்லதொரு நூலை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி சார்
ReplyDeleteரசித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி பாலா.
Deleteஇந்த வெய்யிலில் போக முடியவில்லை. இல்லாவிட்டால் வாங்கி இருக்கலம் இன்னும் விவரமாக,சுவாரஸ்யத்தை தூண்டி விட்டீர்கள் கணேஷ். அக்னி முடிந்த பிறகு தலை வெளியில் நீளும்.:)
ReplyDeleteஎன் அலுவல் நிமித்தம் தினம் மைலாப்பூர் வருகிறேன் வல்லிம்மா. 98406 11370 என்ற என் எண்ணில் அழையுங்கள். நானே புத்தகம் தருகிறேன் உங்களுக்கு. படிக்கும் ஆர்வத்துக்கு என்னாலானது. தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.
Deletemrrao1959@gmail.com
ReplyDeleteI have already purchased the book thro UDUMALAI.COM online . It was really interesting to read. I will consider it as a investigative report rather than a fiction. A fiction will be having additives like the views or opinions of the writer. I have shared my ideas to Mr NARASIMHA and he recommeded the other 2 books KALACHAKKARAM & RANGA RATTINAm for reading.
உங்கள் கருத்து நிஜம்தான் ஐயா. இதை புதினம் என்பதை விட ஒரு சி.பி.ஐ ரிப்போர்ட் மாதிரிதான் அவ்வளவு அழகாக தெளிவாக இருக்கிறது. நூலாசிரியரின் மற்ற இரண்டு நூல்களை நானும் விரைவில் வாங்கிப் படித்துவிடும் எண்ணமுடன்தான் உள்ளேன்.
Deleteதலையில குட்டுறதோ... எங்களுக்கு கஷ்டமுங்க!
ReplyDeleteதோள்ல தட்டிக் கொடுக்கறதோ
. எங்க இஷ்டமுங்க!
சா இராமாநுசம்
எப்போதும் என் முயற்சிகளை தட்டிக் கொடுக்கும் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி ஐயா.
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஅன்பர் கணேஷ் அவர்களுக்கு,
ReplyDeleteஉமது விமர்சனம் கண்டேன். எனது நாவல் சங்கத்தாரா வை தீவிரமாக படித்து உள்ளீர்கள். மிக்க நன்றி. தமிழக மக்கள் மிகவும் உணர்ச்சிவச படுபவர்கள். எனவேதான், நமது உணர்ச்சிகளோடு அரசியல் வாதிகளும், நடிக நடிகையரும் விளையாடி கொண்டு இருக்கின்றனர். நான் ஒரு பத்திரிகையாளன் என்பதால் என்றுமே உணர்ச்சிவசப்படுவதில்லை. அதுவும் ஹிந்து மாதிரி நடுநிலை நாளிதழின் செய்தி ஆசிரியர் பொறுப்பில் இருப்பதால், உணர்ச்சிக்கு நான் அடிமை ஆகவே கூடாது. ஆனால், முதன் முறையாக, உமது விமர்சனத்தை படித்ததும் நான் உணர்வு வய பட்டேன். நீர் என்னை புகழ்ந்து தள்ளியதால் அல்ல. ஆதித்த கரிகாலனுக்கு ஒரு வழியாக விமோசனம் கிடைத்ததே என்று, குறிப்பாக என் மூலமாக மக்கள் அவனை புரிந்து கொண்டு இருக்கிறார்கள் என்பது எனக்கு மாபெரும் பெருமை.
நீங்கள் தந்த பாராட்டு உரைகளை அவனுக்கே அர்பணிக்கிறேன். நான் பெரும் நாவலாசிரியன் என்று அழைக்க படுவதை விட, சரித்திர மர்மங்களை விடுவிக்கும் ஒரு துப்பறியும் நிபுணன் ஆக மக்கள் என்னை அழைப்பதையே நான் விரும்புகிறேன்.
எனது முதல் நாவல் காலச்சக்ரம் நமது நாட்டின் மாபெரும் மர்மம் ஒன்றை உடைத்துள்ளது. இதை படித்தபின்னரே கவிஞர் வாலி இந்த புத்தகத்தை வெளியிட்டார்.
எனது இரண்டாவது நாவல் ரங்கராட்டினம் கூட ஒரு மர்மத்தை விடுவிப்பதாக அமைந்துள்ளது.
உங்கள் பாராட்டுரைகளுக்கு நன்றி. உங்கள் விமர்சனத்தை விமர்சித்தவர்களின் கருத்தையும் நான் கண்டேன்.
அதில் ராஜி என்ற பெயரில் ஒரு கருத்தினை கண்டேன். "நீங்கள் சொல்லும் சங்கத்தார வை அதன் ஆசிரியர் கோவி மணிசேகரன் போலும், சாண்டில்யன் போலும் எழுதியிருப்பாரா என்று கேட்டிருந்தார்.
சிவாஜியை போலே நடிக்க முடியுமா, டெண்டுல்கரை போல ஆட முடியுமா, எம் எஸ் சுபலட்சுமி யை போல பட முடியுமா, மைக் டிசைனை போல சண்டை இட முடியுமா என்றெல்லாம் அடுக்கி கொண்டே போகலாம்.
உலகம் சதுரமானது என்ற நம்பிக்கையில் இருந்தபோது உலகம் உருண்டையானது என்று சொன்னவனை மடையன் என்றவர்கள் நாம்.
கல்கி, விக்ரமன், சாண்டில்யன், கோ வி போன்றவர்கள் எல்லாமே நீராவி என்ஜின்காலத்தில் இலக்கிய ரயிலை இழுத்து சென்ற நீராவி இஞ்சின்கள். அவர்கள் இழுத்த வழிதான் சரித்திரமும், இலக்கியமும் சென்றது. இன்று நாம் மெட்ரோ, புல்லெட் மற்றும் பறக்கும் இரயில் காலத்தில் இருக்கிறோமே. நீராவி இன்ஜினை போல இந்த புல்லெட் ரயில் ஓட முடியுமா என்று கேட்டால் என்ன பதில் சொல்வது"
கணித மேடை ராமானுஜன் தனது முப்பத்தி இரண்டாவது வயதில் காலமானபோது நிறைய கணித பார்முலாக்களை விடுவிக்காமல் வைத்திருந்தார். அதை இன்று விடிவித்து வருகின்றனர் பல கணித மேதைகள். அவர்களின் விடையை தெரிந்து கொள்ளுவதற்கு பதிலாக, ராமானுஜனை போல உன்னால் கணக்கு போடா முடியுமா என்று கேட்டால் நிச்சயம் யாராலுமே அவரது புதிர்களை விடுவிக்கவே முடியாது.
இவர் சொல்லுகிற எழுத்தாளர்கள் எல்லாருமே தங்களை மாபெரும் எழுத்தாளர்கள்களாக அங்கிகாரம் பெற வேண்டியும் தங்கள் தமிழ் இலக்கிய திறமையை வெளிபடுத்தவும் எழுதியவர்கள். யாருமே உண்மைகளை அறிவதற்காக எழுதியவர்கள் இல்லை. கல்வியோடு கலவி சேர்த்து சரித்திரம் போதிக்கும்போது, அங்கே ரசத்துக்கு தான் முக்கியத்துவம் கிடைக்கிறது. உண்மைக்கு அல்ல.
என் கதை ஒரு நடுநிலை கண்ணோட்டத்தோடு, ஒரு செஸ் ஆட்ட முறையில் எழுதப்பட்டது. இதுவரி சோழ சரித்திரம் எழுதிய மேதைகள் ஒரு புறம் ஆட, நான் அவர்களோடு ஆடி, அவர்களது ஒவ்வொரு நகர்வையும் முறியடித்து அவர்களை ஸ்டெல் மேட் ஆகி உள்ளேன்.
மீண்டும் கூறுகிறேன். கல்கி அணிவித்த பொன்னியின் செல்வன் என்கிற கூலிங் கிளாஸ் சை அவிழ்த்து விட்டு, சோழ சரித்திரத்தை நோக்குங்கள். அப்போதுதான் உங்களுக்கு உண்மை எது பொய் எது என்பது விளங்கும்.
கணேஷ், உமது விமர்சனத்தை எருவாக உபயோகித்து இன்னும் பல சரித்திர உண்மைகளை விடுவிப்பேன் என்று நம்புகிறேன்.
வாழ்த்துகளுக்கு நன்றி
அன்பன்'
காலச்சக்ரம் நரசிம்மா
நான் கமலஹாசனின் நடிப்பை கடுமையாக விமர்சிக்கிறேன் என்றால் என் மீது வீசப்படும் முதல் கல் ‘உனக்கு என்ன தகுதி இருக்கிறது விமர்சிக்க?’ என்பதுதான். சமையல் சரியில்லை என்று சொல்ல சிறந்த சமையல்காரனாக இருக்க வேண்டுமா என்று எனக்குப் புரிவதில்லை. இது எனது நேரடி அனுபவம். இத்தகைய ஹீரோ ஒர்ஷிப்பால் உங்கள் மீதும் கற்கள் வீசப்பட்டிருக்குமோ என்னவோ தெரியவில்லை. நான் பூமாலை அணிவித்திருக்கிறேன் என்றால்... your writing deserves that! மற்றபடி உங்களது கருத்துக்கள் எனக்கு ஏற்புடையவையே. நீங்கள் சொல்லியிருப்பது போல ஆதித்த கரிகாலனின் ஆன்மா நிச்சயம் உங்களை வாழ்த்தியிருக்கும் என்று நான் நம்புகிறேன். மற்ற இரு புத்தகங்களையும் விரைவில் படித்துவிட்டு தொடர்பு கொள்கிறேன். மிக்க நன்றி.
Deleteவணக்கம் நண்பரே...
ReplyDeleteஇதுவரை நான் படிக்க கிடைக்காத நாவல்...
அறிமுகத்திற்கும் மின் நூலுக்கும்
நன்றிகள் பல..
நிச்சயம் படித்து கருத்திடுகிறேன்...
வாங்க மகேன், படிக்க வேண்டிய நல்ல நூல் இது. படித்து மகிழுங்கள். என் இதய நன்றி உங்களுக்கு!
Deleteஉங்கள் பிளாக் சில நாட்களாக எனக்குத் திறக்காமல் இரட்டைத் தாழ்ப்பாள் போட்டிருந்தது கணேஷ்... ஒரு வழியாய் நல்ல நேரத்தில் வந்து சேர்ந்து விட்டேன்!நல்ல விமர்சனம்.
ReplyDeleteஏன் தாழ்ப்பாள் போட்டிருந்தது என்ற மர்மம் எனக்கும் இன்னும் விளங்காத புதிராகத்தான் இருககிறது ஸ்ரீராம். விமர்சனத்தை ரசித்துப் பாராட்டிய உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteT F
ReplyDeleteபடிக்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டும் விமரிசனம்.பிரமாதம்.பின்னுட்டத்தில் நூலாசிரியர் சொல்லியிருக்கும் கருத்துக்களும் சிறப்பாக இருக்கின்றன.வாழ்த்துகள்
ReplyDeleteவிமர்சனத்தையும் நூலாசிரியரின் கருத்தையும் படித்துப் பாராட்டி வாழ்த்திய உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!
Deleteஅறிமுக மின் நூலுக்கு நன்றிகள் பல..
ReplyDeleteவாருங்கள் இளங்கோ. நான் படித்து மகிழ்ந்த நல்லதொரு நூலை அனைவருக்கும் அறியத் தந்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. தங்களுக்கு என் இதய நன்றி!
Deleteநிச்சயம் வாங்கிப் படித்துவிடுகிறேன்
ReplyDeleteவிமர்சனம் மிக மிக அருமை
பகிர்வுக்கு மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்
விமர்சனம் மிகமிக அருமை என்று கூறி மகிழ்வு தந்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!
DeleteTha.ma 10
ReplyDeleteஅருமையான விமர்சனம்.
ReplyDeleteஉங்களின் பாராட்டு எனக்குத் தெம்பளிப்பதாக உள்ளது. தங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!
Deleteஅருமையான நூல் விமர்சனம்...
ReplyDeleteவாழ்த்துக்கள் அண்ணா.
படித்து ரசித்துக் கருத்திட்ட தம்பிக்கு என் மனமார்ந்த நன்றி!
Deleteநானும் அங்கு பார்த்தேன் இன்னும் நூல் கிடைக்கவில்லை அடுத்த முறை சென்னையில் பார்ப்போம் வாங்குவதற்கு! நல்ல ஆவலைத்தூண்டும் விமர்சனம்.
ReplyDeleteஇங்கு வாங்க தேவையெனில் நான் உதவுகிறேன் பிரதர். அவசியம் படிக்க வேண்டிய ஒன்று. உங்களுக்கு என் இதய நன்றி!
Deleteநூல் விமரிசனம் மிக அருமை...நிச்சயம் வாங்கிப் படித்துவிடுகிறேன்...நன்றி கணேஷ் சார்...As usual..உங்கள் பதிவு டாஷ்போர்டில் மிஸ்ஸிங்...தமிழ் மண முகப்பில் தான் பார்த்தேன்...
ReplyDeleteடாஷ் போர்டில் தெரியாதிருக்கும் மர்மம் என்னவென்றுதான் எனக்கும் புரியவில்லை ரெவெரி. நூல் விமர்சனத்தை ரசித்து, படிககிறேன் என்று சொன்ன உங்களுக்கு என் இதயம்நிறை நன்றி!
Deleteபுத்தகமெல்லாம் வாசிக்கிறீங்க ஃப்ரெண்ட்.கோவமா வருது.சரி நீங்க வாசிச்சா நானும் வாசிச்சதுபோலத்தானே !
ReplyDeleteநான் உங்களுக்கும் சேர்த்துத் தான் படிக்கிறேன். பின்ன கொஞ்ச நாளில் முழுக் கதையையும் கேப்ஸ்யூலாய் தருவேன்தானே... அதனால கோவிக்காம சொக்லேட் குடுத்து எப்பவும் போல என்னை உற்சாகப்படுத்தணும் ஃப்ரெண்ட்! சரியா... மிக்க நன்றி!
Deleteமிக அருமையான ஒரு நூலை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி.
ReplyDeleteதந்தை புலி சித்ராலயா கோபு;தாய் புலி கமலா சடகோபன்;
ReplyDeleteகுட்டிக்கு பதினாறு அடி பாய சொல்லித்தரவேண்டுமா என்ன?
மற்றும் நரசிம்மா வின் விளக்கம்(பின்னூட்டம்) அருமை.
முன்னேயே வாங்கியிருக்கவேண்டிய புத்தகம்..நரசிம்மா என்ற பெயரைப்பார்த்து கேப்டன் ஞாபகம் வந்து ஒரு கிலி ஏற்பட எண்ணத்தை
செயல்படுத்தவில்லை..இப்போ உடனே போய் வாங்கிவிடுகிறேன்..
இதுதான் பிரச்சனை கண்பத் அவர்களே,
ReplyDeleteஉங்கள் கருத்துக்கு நன்றி. புலிக்கு பிறந்தது பூனை ஆகுமா என்கிற வகையில் எனது பெற்றோர்ரின் திறமைக்கு ஒப்பாக பேசிவிட்டு, என் புத்தகத்தை வாங்காததுக்கு காரணம், என் பெயரான நரசிம்மாவை கண்ட பொது கேப்டன் நினைவு வந்தது என்று கூறி என்னை நெளிய வைத்து விட்டீர்கள். நரசிம்மா என்கிற என் பெயரை கேட்டவுடன் உமக்கு ஒன்று திருமாலின் அவதாரம் நினைவுக்கு வந்திருக்க வேண்டும் அல்லது பல்லவ மன்னன் நரசிம்மா வர்மன் பெயர் நினைவுக்கு வந்திருக்க வேண்டும்.
தாய் எட்டடி பாய்ந்தால் சேய் பதினாறு அடி பாய்வான் என்பது தவறாக புழங்கி கொண்டிருக்கும் பழமொழி.
விளக்கம் இதுதான்: தாய் எட்டடி பயந்தால், (பயந்தால் என்றல் கற்று தருவது என்று பொருள்) .சேய் பதினாறு வகை செல்வங்களை பயந்திடுவான் என்பது வழக்கு) என் வரையில் அது உண்மையாகி விட்டது.
வாழ்த்துக்கள்.
காலசக்கரம் narasimma.
வாழ்த்துக்கள் நரசிம்மாஜி அருமையான பதில்..நன்றி..
ReplyDeleteவிஷயம் என்னவென்றால் நீங்கள் நேரடியாக சங்கதாரவிற்கு வந்துவிட்டீர்கள்.நானோ "காதலிக்கநேரமில்லை","கதவுகள்" இரண்டையும் தாண்டி வரவேண்டி உள்ளது.எனவேதான் காலதாமதம் மன்னிக்கவும்..
பிரபுவாகவும்,ராஜேந்திரனாகவும்,ராதாவாகவும் பிறப்பது பேரதிருஷ்டமே!அதே சமயம் சில இடர்பாடுகளும் இருக்கவே செய்கின்றன..
Best Wishes,
can i download this book in pdf format please give me link-Roshan ,srilanka
ReplyDeleteI too very much love this reviews of this novel...
ReplyDeletei don't have habit of reading books. i just now only started it. now only i found i am very interested reading books.
I just now only finished Ponniyin Selvan, kaviri mainthan, vangayin mainthan...
I love this kinds of tamil novels and i am having Parthiban kanavu , Sivagamiyin sabadham novels soft copy with me.
Now i am very much interested to read this "Sankathara" novel.
i need soft copy of this novel. would you pls share me...
and i feel you are very good reader...so could you pls share me some good historical tamil novel soft copy to me...
This comment has been removed by the author.
ReplyDeletewhere i get this novel i need this i m big fan of aaadhithakarikalan
ReplyDeleteif e-book is available plz give me
பொன்னியின் செல்வன்’ என்கிற கூலிங்கிளாஸைக் கழட்டுவது அவ்வளவு சுலபம் இல்லை என்று நினைத்த வேளையில் ஆசிரியரின் நேரடி கருத்து கொஞ்சம் பாதிப்பை ஏற்படுத்திவிட்டது .வரலாற்று முடிச்சுகளை அவிழ்க்க நினைக்கும் ஆசிரியருக்கு என் வாழ்த்துக்கள் .மேலும் இந்த பதிவின் மூலம் நல்ல நூல்களை அறிய செய்த பாலா சாருக்கு என்னுடைய நன்றிகள் .
ReplyDeleteஆனாலும் முதல் பாதிப்பு முற்றிலும் அகற்ற முடியாத பாதிப்புகள்தான் அந்த வகையில் பொன்னியின் செல்வன் கதை மாந்தர்கள் இன்னும் எனக்குள் உயிரோடு உலாவிகொண்டுதான் இருக்கிறார்கள்
,. அவர்களை வேறு ஒரு குணத்தோடு சந்திக்க என் மனதை பக்குவபடுதிகொண்டுதான் இந்த நூலை நான் படிக்க வேண்டும் விரைவில் வாங்கி படிக்கிறேன் .நன்றி பதிவிற்கு
காலச்சக்கரம் நரசிம்மா அவர்கள் இப்புத்தகத்தை எழுதியுள்ளார். இப்புத்தகம் ஆதித்ய கரிகாலன் கொலை பற்றியது. வரலாற்றில் சில மர்மங்கள் நிலவத்தான் செய்கின்றன. அவற்றுள் ஆதித்ய கரிகாலன் கொலையும் ஒன்று. இக்கொலையை முற்றிலும் வேறு ஒரு கோணத்தில் ஆசிரியர் நமக்கு வழங்கியுள்ளார். இப்புத்தகத்திற்கு ஆசிரியர் மிகவும் சிரமப்பட்டுள்ளது அவருடைய எழுத்து நடையில் தெரிகிறது.
ReplyDeleteஇப்புத்தகத்திற்க்காக ஆசிரியர் பல சான்றுகள் வைத்துள்ளதாக கூறியுள்ளார். எனினும் சரித்திரத்தில் நீங்கா புகழ்ப்பெற்ற ஒரு மன்னனை சுற்றி கதைக்களம் அமைந்திருக்கின்றபோது எழுத்தாளர் சிறிது கவனத்தை கடைப்பிடிதிருக்கலாமோ என்றே எண்ணத்தோன்றுகிறது,
இப்புத்தகத்தில் அருள்மொழிவர்மர் (ராஜ ராஜ சோழன்) கி .பி 956 ஆம் வருடம் பிறந்ததாக ஒரு தகவல் தரப்பட்டுள்ளது. இதுதான் என்னை இந்த வலைப்பதிவு எழுதத்தூண்டியது. ஒரு வருடம் தானே, அதில் என்ன குறை கண்டுவிட்டீர் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் இந்த ஆண்டுதான் புத்தகத்தின் ஆணிவேர். எனவேதான் அதைக்குறித்து எனது கருத்துகளை தங்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டிய சூழ்நிலை.
ராஜ ராஜ சோழன் கி.பி 956 ஆம் ஆண்டு பிறந்தார் என்று ஆசிரியர் எடுத்துரைப்பதை நாம் உண்மை என்று வைத்துக்கொள்வோம். ராஜ ராஜ சோழன் கி.பி 986 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வருகிறார். அப்படி என்றால் அவர் தனது 30 ஆம் அகவையில் ஆட்சிக்கு வருகிறார். ராஜ ராஜ சோழனின் ஆட்சிக்காலம் கி.பி 986-1012 என்பது பெரும்பாலான வரலாற்று ஆய்வாளர்களால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 1014 ஆம் ஆண்டு ராஜ ராஜ சோழன் இறக்கிறார். அதாவது இந்த புத்தகத்தின் படி ராஜ ராஜ சோழன் தனது 58 ஆம் வயதில் சிவனடியை அடைகிறார்.
இது வரை வாசகர்களுக்கு எவ்வித குழப்பமும் ஏற்ப்பட்டிருக்காது என்று நினைக்கிறேன.
ராஜ ராஜ சோழரின் திருக்குமரனான ராஜேந்திர சோழன் கி.பி 1012 ஆம் ஆண்டு சோழ சிம்மாசனத்தில் அமர்கிறார். தமிழ்நாட்டின் பொற்காலம் என்று வர்ணிக்கக்கூடிய ஆட்சியை கி.பி 1044 ஆம் ஆண்டு வரை அளிக்கிறார். இவர் இறக்கும் பொழுது இவருடைய அகவை 82 என கல்வெட்டுகளில் மிகத்தெளிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர். கி.பி 1044 ஆம் ஆண்டு ராஜேந்திர சோழரின் வயது 82 என்றால் கி.பி 1014 இல் அதாவது ராஜ ராஜ சோழர் இறக்கும் பொழுது ராஜேந்திர சோழரின் வயது சரியாக 52.
இரு பத்திகளுக்கு முன்னர் தான் ராஜ ராஜ சோழரின் வயதை யாம் கூறியிருந்தோம். அதாவது தனது 58 ஆம் வயதில் அவர் சிவனடியை அடைந்ததாக கூறியிருந்தேன். அதே வருடத்தில் ராஜேந்திர சோழரின் வயது 52. அதாவது தந்தைக்கும் மகனுக்கும் வெறும் 6 வயது வித்தியாசம். இது எப்படி சாத்தியம் என்று தெரியவில்லை.
அடுத்த புத்தகத்தில் இதற்கான விடையை அவர் அளிக்கக்கூடும். எனினும் வருடம் தப்பாக குறிப்பிடப்பட்டுள்ளம்மையால் இப்புத்தகத்தின் வாயிலாக ஆசிரியர் கூறவரும் அனைத்துமே சற்றே மிகைப்படுத்தப்பட்ட ஒரு கற்பனை என்ற ஒரு முடிவுக்கு வரவேண்டியுள்ளது.
ஆனால் புத்தகம் நல்ல விறுவிறுப்பாக உள்ளது என்பது ஒத்துக்கொள்ளபடவேண்டிய உண்மை. வாசகர்களுக்கு இப்புத்தகம் ஒரு நல்ல அனுபவத்தை தரும் என்பதி எனக்கு எந்த ஐயமும் இல்லை. I think the author will delete this comment.
ஒரு வரலாற்று நாவலை எழுதும் போது சரியான ஆதாரம் இல்லாமல் கற்பனை கதைகளை அவர் எழுதியிருக்கமாட்டார்.கூகுள் ஆண்டவரின் தகவல்களும் 6 வயது வித்தியாசங்களை தான் காட்டுகிறது.அதுவும் சற்றே மிகைபடுத்தபட்ட கற்பனையாக இருக்கலாம். அப்படியென்றால் ராஜராஜ சோழன் மற்றும் அவரின் மகனின் உண்மை காலங்கள் என்னவோ?
Deleteஒரு பதிவிற்கு இத்தனை பின்னுட்டங்கள் இருப்பது பதிவரின் பெருமையை சொல்கிறது
ReplyDeleteஒரு பதிவிற்கு இத்தனை பின்னுட்டங்கள் இருப்பது பதிவரின் பெருமையை சொல்கிறது
ReplyDeleteIdhoda 356 and 357 page illa yaradhu send panna mudiyuma please.
ReplyDeleteஇப்புத்தகத்தின் வாயிலாக ஆசிரியர் கூறவரும் அனைத்துமே சற்றே மிகைப்படுத்தப்பட்ட ஒரு கற்பனை
ReplyDeleteஏன்?
Delete