இரண்டு வாரங்களாக டூர் அடித்தபின் நேற்று ஞாயிறன்று சென்னையிலேயே சோம்பலான பொழுதாகக் கழிந்து கொண்டிருந்த சமயம், மெ.ப.சிவகுமாரிடமிருந்து போன் வந்தது. ‘‘என்ன சிவா?’’ என்றதற்கு, ‘‘ஸார்! வடபழனில ஃபோரம் மால்ன்னு புதுசா ஒண்ணு திறந்திருக்காங்க. போய் சுத்திட்டு வரலாமா?..’’ என்றார். கொளுத்தும் வெயிலில் இருந்து தப்பித்து மூன்று மணி நேரம் ஏ.ஸி.யி.ல் கழிக்கலாம் என்ற சபலத்தில் ‘‘ஓ.கே.’’ என்றேன் சிவாவின் பின்னணிச் சதி புரியாமல். ‘‘சரி, 12 மணிக்கு ரெடியா இருங்க’’ என்றார். அந்த நல்லவன் வீட்டிலிருந்து கிளம்புவதற்கு முன், ‘‘சிவனேன்னு வீட்ல கிடந்த என்னை 'வடபழனில புதுசா Forum Mall திறந்திருக்காங்க. கெளம்புடா. சைட் அடிக்க போலாம்' என்று தரதரவென்று உச்சி வெய்யில் இழுத்து செல்லப்போகும் பாலகணேஷ் அவர்களே!! நம்மள எதிர்க்கட்சிக்காரன் பாத்தா என்ன நெனைப்பான்? இருந்தாலும்...இதோ கெளம்பிட்டேன்’’ என்று மூஞ்சிப்புத்தகத்தில் ஒரு ஸ்டேட்டஸ் போட்டுவிட்டு கிளம்பியிருக்கிறார். கூடவே ‘ரெமோ பாலகணேஷுடன் அம்பி சிவா’ என்று கமெண்ட் வேறு. பாருங்க பொது(ப்ளாக்)மக்களே... ஒரு அப்பாவி(!)யோட இமேஜை எப்படில்லாம் டாமேஜ் பண்றாங்கன்னு...! அவ்வ்வ்வ்வ்!
![]() |
தரைத்தளத்திலிருந்து பிரம்மாண்டமான இந்த மாலின் ஒரு பகுதி! |
வடபழனியில் கமலா தியேட்டருக்கு எதிரில், க்ரீன் பார்க் ஓட்டலுக்கு அருகில் நான்கு ப்ளோர்களுடன் பிரம்மாண்டமாக முளைத்திருக்கிற ஒய்யார மோகினி ஃபாரம் விஜயா மால்! சென்ற வாரம் கோவை ஆவியுடன் கோவையில் பார்த்த மாலை மனதிற்குள் மிக வியந்திருந்தேன். இந்த மாலின் அழகு அதைத் தூக்கிச் சாப்பிட்டு ஏப்பம் விட்டது! சென்னையில் உள்ள எக்ஸ்பிரஸ் மால், ஸ்கைவாக் மால் உள்ளிட்ட எல்லாவற்றையும் விட வெகு அழகு! வாகனத்தை உள்ளே செலுத்தி நிறுத்தியதுமே முதல் அதிர்ச்சி காத்திருந்தது. ‘‘பார்க்கிங் ஃப்ரீ சார்’’ என்றாள் அங்கு டிக்கெட் வழங்கிய கன்னி(?). சிவாவிடம் இதைப் பற்றிப் புகழ்ந்தவாறே மாலினுள் நுழைய, ‘‘முதல் ஒரு மாசம்தான் இப்படி ஃப்ரீ பார்க்கிங் தருவாங்க. அப்புறம் கண்டிப்பா சார்ஜ் பண்ணிடுவாங்க ஸார்’’ என்றார் சிவா. ம்ம்ம்... இந்த விஷயத்தைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேணும்!
![]() |
சிங்கம் போல... ஏ சிங்கம் போல நிக்கிறாரு எங்க தளபதி, அட எஸ்கலேட்டர் ஏறி வாரார் எங்க தளபதி! |
உள்ளே சென்றதும் முதலில் கவனத்தை ஈர்த்தது இரண்டு வரிசைக கடைகளுக்கு இடையில் நடப்பதற்கு தாராளமாக இடம் விட்டு அமைத்திருக்கும் விதம். இரண்டாவதாக கவனத்தைக் கவர்ந்தது ஒவ்வொரு மாடிக்கும் ஏறி இறங்க எஸ்கலேட்டர்கள் வைத்திருப்பது! மூ்ன்றாவதாக கவனத்தைக் கவர்ந்தது வெறும் செருப்புக் கால்களாலேயே ஸ்கேட்டிங் செய்கிற விதமாக அமைக்கப்பட்டிருக்கும் அழகான வழவழ ஃப்ளோரிங்! நான்காவதாக... ‘‘சிவா, அந்த பொம்மை நல்லா இருக்கு பாரேன்’’ என்றேன். வேகமாக நான் கை காட்டிய திசையில் திரும்பிப் பார்த்த சிவா, அங்கே ஒரு கடையின் கவுண்ட்டரில் பில்லிங் செக்ஷனில் இருந்த பெண்ணைக் கண்டதும் ஜெர்க் ஆனார். ‘‘ஸாஆஆர்!’’ என்றார். பின்ன ‘ரெமோ’ வேற எப்படி இருக்கறதாம்? எனக்குப் பெண் குழந்தைகள் என்றால் மிகவும் பிடிக்கும் - நிபந்தனை - பதினெட்டு ஆண்டுக்கு முன் பிறந்திருக்க வேண்டும். ஹி... ஹி...!
கிரவுண்ட் ஃப்ளோரில் ‘தாம்பூலா -ரிடர்ன் கிஃப்ட் ஷாப்’ என்று ஒரு கடையினுள் முதலில் நுழைந்தோம். ‘‘ரிடர்ன் கிப்ட் என்றால் கல்யாணத்துல நமக்கு அதிகமா வந்த பொருள்களை இவங்கட்ட ரிடர்ன் பண்ணிட்டு பணம் வாங்கிக்கற சிஸ்டமா இருக்கும்’’ என்றேன். கடையில் இருந்தவர், ‘‘கல்யாணத்துல நமக்கு கிஃப்ட் பண்றவங்களுக்கு, நாம ரிடர்ன் கிஃப்ட் இங்க வாங்கி பண்ணலாம். அதுக்கான கடை இது’’ என்றார். அங்கே வைக்கப்பட்டிருந்த சின்ன, பெரிய யானை பொம்மைகள் நுணுக்கமான கலை வேலைப்பாடுகளுடன் கவனத்தைக் கவர்ந்தார். சிவா ஒரு யானை பொம்மையை எடுத்துப் பார்த்துவிட்டு, ‘‘ரொம்ப சீப் ஸார்... 850 ரூபாதான்’’ என்றார். ‘‘அடப்பாஆஆஆவி! இதுவா சீப்பு?’’ என்று வேகமாக அவரை இழுத்துக் கொண்டு, அடுத்த ப்ளோருக்குச் சென்றோம்.

நடக்கறதுக்கு என்னங்க... ஓடிப்பிடிச்சே விளையாடற அளவு தாராளமா இடம்! |
கிரவுண்ட் ஃப்ளோரிலும் முதல் ப்ளோரிலும் ஆரெம்கேவி இரண்டு ஷாப்கள் இருக்கின்றன. முதல் ப்ளோர் கடையில் உள்ளே நுழைந்ததும் கஸ்டமர்களுககு அவர்கள் தரும் வரவேற்பு மிகப் பிடித்திருந்தது. உள்ளே ஒரு ரவுண்ட் வந்தோம். குறைந்த பட்ஜெட்டாக 500 ரூபாயில் தொடங்கி கல்யாண மாப்பிள்ளைகள் அணியும் கற்கள் பதித்த உடை, கிரீடம், வேலைப்பாடான செருப்பு உள்ளிட்ட உடைகள் 20ஆயிரம் வரை எக்க்கச்சக்கமாக வைத்திருக்கிறார்கள். கடையின் முகப்பிலேயே எலக்ட்ரானிக் தறியில் ஒருவர் பட்டுப் புடவை நெய்து கொண்டிருப்பதை லைவாகப் பார்க்க முடிந்தது கூடுதல் ரசனை!
இரண்டாவது ப்ளோரில் ஒரு ஸ்போர்ட்ஸ் கடையினுள் விசிட் அடித்தோம். டென்ட் அடிக்கும் மெட்டீரியலிலிருந்து பந்து வரை எல்லா ஐட்டங்களும் வைத்திருக்கிறார்கள்- ‘குறைந்த’(?) விலையில்! அங்கே ஒரு ஆசாமி வாட்டர் ஸர்ஃபிங் பண்ணுவது மாதிரியான ஒரு சக்கரம் வைத்த ஐட்டத்தில் ;நின்றபடி கடையைச் சுற்றிச் சுற்றி வந்ததும், அவர் கையில் விஷ்ணுவின் சக்கரம் போல ஒரு வாலிபால் பந்தை சுழல வைத்தபடி கீழே விழாமல் இருந்ததும் அசர வைத்தது! அங்கே ‘ஸால்ட்’ என்ற ரெஸ்டாரண்ட் இருகக, அதன் வாசலில் ப்ரைஸ் லிஸ்டை போர்டில் எழுதி வைத்திருந்தார்கள். ‘‘இருங்க ஸார், பாத்துட்டுப் போலாம்’’ என்றார் சிவா. என்னே ஒரு தீர்க்கதரிசனம் சிவாவுக்கு! அந்த விலைகளை பார்க்க மட்டும்தான் முடிந்தது. ‘ஹும்ம்’ என்று பெருமூச்சு விட்டு, ‘‘வா, அடுத்த ஃப்ளோருக்குப் போலாம்’’ என்றேன். மூன்றாவது மாடிக்குச் சென்றோம். வழியில் நிறைய ‘பொம்மைகள்’ இந்த இளைஞனின் கண்ணில் பட்டு ரசிக்க வைத்தன. ஸைட் அடிக்கும் வயதைக் கடந்திருந்த சிவா பவ்யமாக நேர் பார்வையுடன் உடன் வந்தார்.
மூன்றாவது மாடியில் சுற்றியபடியே வர ‘உணவு நீதிமன்றம்’ (Food Court) கண்ணைக் கவர்ந்தது. உள்ளே... அராபியன் கடைகளிலிருந்து நம்ம இட்லி, வடை கடை வரை வரிசையாக அணிவகுத்திருந்தன. வரிசையாகப் பார்த்தபடி வர, பாண்டி கடை எனற தலைப்பில் கீழே மதுரை - போஸ்ட் நம்பர் 5 என்ற சப்டைட்டிலுடன் இருந்த கடை கண்ணை இழுத்தது. திண்டுக்கல் பிரியாணியிலிருந்து ஜிகர்தண்டா வரை சுத்தமான எங்கூர்க் கடை! கண்ணை இழுக்காதா பின்னே? சிவா அங்கே ஏதாவது சாப்பிட்டு டேஸ்ட் பார்க்கலாம் என்றதால் (அவர் உபயத்தில்) உணவை வாங்கினோம். ‘‘தண்ணி குடுங்க ஸார்’’ என்றதற்கு, ‘‘லெஃப்ட்ல ரெண்டாவது கடையில கிடைக்கும் ஸார்’’ என்றார்கள். தலைவர் கேபிள் சங்கர் சொல்லித் தந்தபடி சண்டை போட்ர வேண்டியதுதான் என்று எங்களுக்குள்ளிருந்த அன்னியனை எழுப்பி நாங்கள் தயாராகி, ‘‘அது வேணாம் ஸார்... சாப்பாடு குடுத்த நீங்க தண்ணி தர வேணாமா?’’ என்க, ‘‘அப்ப ரைட் சைட்ல போனீங்கன்னா வாட்டர் இருக்கு. எடுத்துக்கலாம் ஸார்’’ என்றார் கடைச் சிப்பந்தி. வலதுபக்கத்தில் நிறைய பெட் பாட்டில்கள் வைத்து, வாட்டர் கூலரும் வைத்திருந்தார்கள். அன்னியனை கூல் பண்ணி அனுப்பிவிட்டு பாட்டிலில் தண்ணீர் பிடித்துக் கொண்டு சாப்பிட்டோம். கொடுத்த பணத்துக்கு நிறைவான மதிய உணவுங்க!

எலக்ட்ரானிக் தறியும், பாண்டி கடையும், பின்னே ஃபுட்கோர்ட்டும்! |
இந்த ஃபுட்கோர்ட்டிலும் சாப்பிடுவதற்கு வசதியாக அமைக்கப்பட்டிருந்த டேபிள் சேர்கள் மிகப் பிடித்திருந்தன. நான்கு பேர் உட்கார்ந்து சாப்பிடும்படியும், கூடுதல் இரண்டு பேர் வந்தால் பக்கத்திலிருந்து இழுத்துப் போட்டுக் கொள்ளும்படியும் இருந்தன. கலர் காம்பினேஷனும் ரசனை! நிதானமாக அங்கே அமர்ந்து அரட்டையடித்து விட்டு நிறைய (விண்டோ) ஷாப்பிங் பண்ணியதில் களைப்பாகி விட்டதால், கீழே வந்து ஆளுக்கொரு சாக்லேட் பட்டையை பர்ச்சேஸ் பண்ணிவிட்டுக் கிளம்பினோம். மூன்று மணி நேரத்தை நண்பனுடன் அங்கே கழித்ததில் மனம் உற்சாகமாகியிருந்தது. என் பேட்டரி ரீசார்ஜ் செய்யப்பட்டுவிட்ட உணர்வு எனக்குள் நிரம்பியிருந்தது. மாலே மால் இது பலே மால் என்று அடையாளம் காட்டிய சிவகுமாரா! உனக்கு மிக்க நன்றி! (ஹையா... ஒருவழியா டைட்டிலை ஜஸ்டிஃபை பண்ணிட்டேனே!)