Tuesday, May 15, 2012

நடை வண்டிகள் - 16

Posted by பால கணேஷ் Tuesday, May 15, 2012

பி.கே.பி.யும் நானும் - 8

Terrorist என்ற பதத்தின் பொருள் பயங்கரவாதி என்றுதான் இருக்க வேண்டும். தீவிரவாதி என்று பத்திரிகைகளில் தலைப்புச் செய்தியாகப் படித்தவர்களுக்கு தீவிரவாதி என்றாலே பயங்கரவாதம் செய்பவன் என்றுதான் பொருள் கொள்ளத் தோன்றுகிறது. ‘பெரியார் ஒரு தீவிரவாதி’ புத்தகத்தின் முன்னுரையில் பி.கே.பி. எழுதியதில் ஒரு பகுதியை இங்கே தருகிறேன்:

தன் இனத்திற்காக, மொழிக்காக, மண்ணிற்காக ஆயுதம் ஏந்தி களத்தில் இறங்கி போர் செய்யும் போராளிகளைப் போல சமூகத்தின் முட்டாள்தனங்களுக்கும், அடிமைத்தனத்திற்கும் எதிராக சிந்தித்து செயல்பட்ட தந்தை பெரியார் அவர்களும் ஒரு சமூகப் போராளிதான். கொண்ட லட்சியத்தில் உறுதியும், தீவிரமும் கொண்டு அர்ப்பணிப்புடன் உழைக்கிற ஒவ்வொரு நபருமே ஒரு தீவிரவாதி என்பேன். விஞ்ஞானக் கண்டுபிடிப்பில் தாமஸ் ஆல்வா எடிசன் ஒரு தீவிரவாதி. நாட்டின் சுதந்திரத்திற்காக அஹிம்சை என்கிற ஆயுதத்துடன் போராடிய மகாத்மா காந்தியும் ஒரு தீவிரவாதி. அந்த வரிசையில் சமூக மேம்பாட்டிற்காக தீவிரமாக கடைசி மூச்சு வரை உழைத்த, தன்னையே அர்ப்பணித்த தந்தை பெரியாரும் ஒரு தீவிரவாதியே! எனவேதான் இந்தப் புத்தகத்திற்கு ‘பெரியார் ஒரு தீவிரவாதி’ என்கிற தலைப்பைத் தேர்வு செய்தேன்.

புத்தகம் தயாரானதும் திரு.பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் திருச்சியில் புத்தக வெளியீட்டு விழா நடத்தினார் பி.கே.பி. கச்சிதமாக சொன்ன நேரத்தில் துவங்கியும், துல்லியமாக சுவாரஸ்யமாக நிகழ்ச்சிகளை வரிசைப்படுத்தியும் இருந்ததால் விழாவுக்கு வந்திருந்த எவரும் இடையில் எங்கும் எழுந்து போகாமல் முழுமையாக விழா முடியும்வரை இருந்தனர். புத்தக வெளியீட்டு விழாவாக மட்டுமின்றி, ‘க்ளோபல் வார்மிங்’ என்கிற ‘புவி வெப்பமயமாதல்’ பற்றி விரிவான தகவல்களுடன் ஒரு விளக்கப்படம் தன் மகளின் உதவியுடன் தயார் செய்திருந்தார். அதைத் திரையிட்டுக் காட்டியதுடன், வந்திருந்த அனைவருக்கும் ஒரு மரக்கன்றும் வழங்கப்பட்டது.

 விழாக்களில் பொன்னாடை என்று ஒரு கலர் துண்டு போர்த்தி மரியாதை செய்வார்கள். அதை வீட்டில் எடுத்துச் சென்று வைத்துக் கொள்ளலாமே தவிர, எதற்கும் பயன்படாது. அப்படியின்றி நல்ல குற்றாலத் துண்டு ஒன்றை போர்த்தி மரியாதை செய்தால் அது அனைவருக்கும் பயன்படுமே என்று திட்டமிட்டு, அப்படியே செய்தார். வந்திருந்தவர்களுக்கு நினைவுப் பரிசு கூட அழகான புத்தாண்டு டைரியும், பேனாவும் என்று ஒவ்வொன்றையும் பார்‌த்துப் பார்த்து அவர் செய்திருந்தார். நானும் எல்லாவற்றிலும் உடனிருந்தேன். அப்படி உடனிருந்த எனக்கே தெரியாமல் விழா நிகழ்ச்சிகளின் போது (ப்ளானிங், பர்சேஸிங் எல்லாவற்றிலும் உடனிருந்த எனக்கே சர்ப்ரைஸாக) என்னையும் மேடையேற்றி மரியாதை செய்தார் அவர். மிக மகிழ்வாக நான் உணர்ந்த தருணம் அது.

இந்த ‘பெரியார் ஒரு தீவிரவாதி’ புத்தகத்தை தமிழகத்தின் முக்கியப் பிரமுகர்களுக்கு எல்லாம் அனுப்பி வைத்தார் பி.கே.பி. அனைத்துத் தரப்பின ரிடமிருந்தும் புத்தகம் பாராட்டுப் பெற்றது. தலைப்பையும் ரசித்துப் பாராட்டியவர்கள் பலர். சிலருக்கு பி.கே.பி. விளக்கம் சொல்ல வேண்டியிருந்தது. சொன்னதும் புரிந்து கொண்டு பாராட்டுவார்கள். ஆனால் அரசு இயந்திரத்திற்குத்தான் புரியவைக்க முடியவில்லை. நூலகத் துறையில் தலைப்பின் காரணமாக புத்தகத்துக்கு ஆர்டர் கொடுக்கவில்லை. நூலகத்துறை சம்பந்தப்பட்டவர்களை சந்தித்து பி.கே.பி. விளக்கம் சொன்னார். என்றாலும் ஏற்கவில்லை அவர்கள்.

முன்பே சொல்லியிருக்க வேண்டிய, விடுபட்ட ஒரு விஷயம் நினைவுக்கு வருகிறது. கல்யாணமாலை இதழின் தலைமை வடிவமைப்பாளராக நான் இருந்த நேரத்தில் ராஜேஷ்குமாரைப் பேட்டி எடுத்தது போன்று பி.கே.பி.ஸாரையும் பேட்டி கண்டு வெளியிட்டேன். அவர் குறித்த நேரத்திற்கு நானும், உதவி ஆசிரியர் திருமதி.புஷ்பா ரமணி அவர்களும் அவர் வீட்டிற்குச் சென்றோம். தான் கொண்டு வந்திருந்த ஐபாட்-இல் ரெக்கார்ட் செய்தார் புஷ்பா ரமணி இந்தப் பேட்டியை.

 எந்தக் கேள்விக்கும் மழுப்பல் இன்றி தெளிவான பதில்கள் உடனுக்குடன் வந்து விழுந்தன பி.கே.பி.யிடமிருந்து.  அலுவலகம் வந்ததும் அந்த ஐபாட்-ஐ இயக்கினால் என்ன காரணத்தாலோ பேசிய எதுவும் பதிவாகவில்லை என்று தெரிந்தது. ‘ஙே’ என்று விழித்தோம் நானும் உதவி ஆசிரியரும்.

பிறகென்ன... அவர் பேசியது என் ஞாபகத்தில் இருக்கிறது என்று சொல்லி அங்கே பேட்டி எடுத்தது முழுமையையும் வரிசைக் கிரமமாக டைப் செய்து கொடுத்தேன். புஷ்பா ரமணி வியந்து போனார். ஒன்றிரண்டு வரிகளை அவர் சேர்த்தார். அந்தப் பேட்டியின் பிரிண்ட் அவுட்டை பி.கே.பி.யிடம் எடுத்துச் சென்று காண்பித்து, அவர் சொன்னவை அப்படியே வந்திருக்கின்றன என்று ஒப்புதல் தந்தபின் வெளியிட்டோம். (இப்படி பேட்டியை சம்பந்தப்பட்டவர்களிடம் காண்பித்துவிட்டு வெளியிடுவது நல்ல நடைமுறை என்று பி.கே.பி. ‌சொன்னதால், அதன்பின் பேட்டிகண்ட வி.ஐ.பி.க்களிடம் இ‌‌தையே நடைமுறைப்படுத்தினோம். அதற்கு நல்ல மதிப்பு இருந்தது).

இந்தப் பேட்டி வெளிவந்த கிட்டத்தட்ட ஓர் ஆண்டிற்குப் பின்னர், அவருடன் உதவியாளனாக புதுச்சேரிக்கு காரில் சென்று கொண்டிருக்கையில் எங்களின் அரட்டைக்கிடையில் பத்திரிகைகள் பற்றியும் பேட்டிக் கட்டுரைகள் பற்றியும் பேச்சு வந்தது. அப்போதுதான் நான் அவரது பேட்டியை ரெக்கார்ட் செய்தது சரியாக வராமல் சொதப்பியதையும், நாங்கள் சமாளித்த விதத்தையும் அவருக்குச் சொன்னேன். ‘‘அடப்பாவிகளா!’’ என்று செல்லமாக அழைத்து வாய்விட்டுச் சிரித்தார். அவரது நாவலின் பெயரைச் சொன்னால் உடனே அதன் கதைச் சுருககத்தைச் சொல்ல முடிகிற என்னுடைய நினைவாற்றல் அவருக்கு மிகவும் பிடித்தமானது.

எந்த ஒரு விஷயத்திற்கும் ஆரம்பம் என்று ஒன்று இருந்தால், அது தொடர்ந்து முடிவு என்றும் ஒன்று வந்துதானே தீர வேண்டும். நட்பு என்கிற விஷயம் வாழ்நாள் முழுமைக்கும் தொடர்கிற விஷயம். மற்ற விஷயங்கள் அப்படியல்லவே... ஒரு கட்டத்தில் அவரிடம் பணி செய்வதிலிருந்து விலக நேர்ந்தது. ஊஞ்சல் இதழின் வடிவமைப்பு + உ.ஆ. வேலையும் ஒரு முடிவுக்கு வந்தது. அந்த இரண்டையும் பற்றி...
-தொடர்கிறேன்!

41 comments:

 1. ஜஜஜஜ இன்னைக்கு நான் முதல வந்திட்டன். எனக்கும் கன நாளாக ஒரு சந்தேகம் இருந்தது கணேஸ் அங்கிள். தீவிர வாதி என்றாலே பயங்கரமான காரியங்களில் ஈடுபடுபவர்கள் என்று. ஆனால் அந்த சந்தேகம் இன்று போய் விட்டது. பெரியார் வழி வநதால் எல்லாம் புரியும் போல......

  ReplyDelete
  Replies
  1. பெரியார் ஒரு மகத்தான மனிதர்தான் எஸ்தர். பெண்ணுரிமைக்காகவும் நிறையக் குரல் கொடுத்தவர் அவர். முதல் நபராய் வந்ததுக்கு பிடிம்மா சூடான காபி! மிக்க நன்றி!

   Delete
 2. உண்மை வரலாறே கதை போல வருவது மிகவும் சுவையாக உள்ளது.
  தொடரும் என்று போடுவதே தடையாக உள்ளது.

  சா இராமாநுசம்

  ReplyDelete
  Replies
  1. என்ன செய்வது ஐயா... பக்க அளவு அதற்கு மேல் அனுமதிக்கவில்லை. சுவையாக உள்ளது என்று கூறி மகிழ்வளித்த தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!

   Delete
 3. //உடனே அதன் கதைச் சுருககத்தைச் சொல்ல முடிகிற என்னுடைய நினைவாற்றல் அவருக்கு மிகவும் பிடித்தமானது.//

  அதனால்தான் எல்லா செய்திகளையும் துல்லியமாக தங்களால் தர முடிகிறது என நினைக்கிறேன். திரு பி.கே.பி அவர்களிடம் பணி செய்வதிலிருந்து விலகிய காரணம் அறிய ஆவலாய் காத்திருக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. விரைவில் தொடர்ந்து விடுகிறேன் நண்பரே. தங்களுக்கு என் இதய நன்றி!

   Delete
 4. வாழ்த்துகள்
  உங்கள் பதிவுகளை DailylLib ல் இணைத்து பயன் பெறுங்கள். DailyLib செய்தி தாள் வடிவமைப்பு உங்கள் பதிவுகளை அழகாக வெளிகாட்டும்

  தமிழ்.DailyLib

  we can get more traffic, exposure and hits for you

  To link to Tamil DailyLib or To get the Vote Button
  தமிழ் DailyLib Vote Button

  உங்கள் பதிவுகளை இணைத்து பயன் பெறுங்கள்

  நன்றி
  தமிழ்.DailyLib

  ReplyDelete
  Replies
  1. கடந்த ரெண்டு பதிவுகளை இணைக்க மறந்துட்டேன். இப்ப இந்தப் பதிவை இணைச்சுட்டேன். இனியும் தொடர்கிறேன் நட்பே. நன்றி!

   Delete
 5. கணேஷ் ஸார்,

  உண்மையிலேயே வியக்க வைக்கும் நினைவாற்றல் தான் உங்களுக்கு... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. உங்களின் வாழ்த்தினால் மகிழ்ந்து போன மனதுடன் உங்களுக்கு என் உளங்கனிந்த நன்றி!

   Delete
 6. சுவாரசியமாக போய் கொண்டிருக்கிறது. ஆனால் இறுதியில் கொஞ்சம் பயத்தை ஏற்படுத்தி விட்டீர்கள். சோகமாக எதுவும் நடக்காது என்று நம்புகிறேன்.

  ReplyDelete
  Replies
  1. சேச்சே... இப்போதும் என் இனிய நண்பர்தான். நேற்றுகூட சந்தித்துப் பேசிவிட்டு வந்தேன் பாலா. சோகம் எதுவும் வராது நண்பா. உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!

   Delete
 7. அந்த போட்டோவுல இருக்குற வெள்ளாஇ சட்டை போட்ட பெரிய மனிதர் யார்ண்ணா?!

  ReplyDelete
  Replies
  1. அவரைப் பத்தி நல்லதா நாலு வார்த்தை சொல்லிப் புகழணும்னு ஆசைதான். ஆனா தன்னடக்கம் தடுக்குதேம்மா... என்ன செய்ய?

   Delete
 8. என்னே ஞாபக சக்தி.மலரும் நினைவுகளை அப்படியே நேரில் பார்த்தது போல பிரம்மை ஏற்படுத்தும் அளவு உணர்வூட்டமாக எழுதி வருகின்றீர்கள்.சபாஷ்!

  ReplyDelete
  Replies
  1. அந்த நினைவு சக்திதான் எனக்கு வரம் சாபம் ரெண்டுமேன்னு எங்கம்மா சொல்லுவாங்க ஸாதிகா. சில சமயங்கள்ல நிஜம்தானோன்னு தோணிடும் எனக்கு. ரசித்துப் படித்து உற்சாகமூட்டும் கருத்தளித்த தங்கைக்கு என் இதய நன்றி!

   Delete
 9. Quite interesting article. But as usual you have ended this article with a suspense. May be, this is also the effect of your working with a novel writer PKP. URAVU ENRORU SOL IRUNTHAL, PIRIVU ENRORU PORUL IRRUKKUM.......

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் மோகன்! சžžஸ்பென்ஸ் மன்னர்களிடம் ‌நிறையப் பேசியும் பழகியும் கிடைத்த அனுபவம்தான் இதன் பின்னணி. கேட்கத் தெவிட்டாத இனிய பாடலை நினைவூட்டிய உங்களுக்கு என் உளம்கனிந்த நன்றி!

   Delete
 10. //எந்த ஒரு விஷயத்திற்கும் ஆரம்பம் என்று ஒன்று இருந்தால், அது தொடர்ந்து முடிவு என்றும் ஒன்று வந்துதானே தீர வேண்டும். //

  உண்மைதான்.

  சுவாரசியமான தகவல்கள்..உங்கள் ஞாபசக்தி பாராட்ட பட வேண்டிய ஒன்று. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. உற்சாகமூட்டும் கருத்தை அளித்து வாழ்த்திய உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!

   Delete
 11. இப்படி பேட்டியை சம்பந்தப்பட்டவர்களிடம் காண்பித்துவிட்டு வெளியிடுவது நல்ல நடைமுறை அறிமுகப்படுதியதற்குப் பாராட்டுக்கள்..

  ReplyDelete
  Replies
  1. பி.கே.பி.யின் சொற்படி இதை நடைமுறைப்படுத்திய போது ராஜேஷ்குமாரும் வெகுவாகப் புகழ்ந்தார். அதனால் அதையே பிடித்துக் கொண்டோம் க.மா.வில். இப்போது எப்படியோ... தெரியவில்லை. தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!

   Delete
 12. "பெரியார் ஓரு தீவிரவாதி" வித்தியாசமான விளக்கம் ..!

  ReplyDelete
  Replies
  1. ரசித்துப் படித்து உற்சாகமூட்டும் நற்கருத்திட்ட தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!

   Delete
 13. கணேஷ் சார் உங்களின் நினைவாற்றல் கண்டு வியப்பு அடைகிறேன் நடைவண்டி தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 14. //தன் இனத்திற்காக, மொழிக்காக, மண்ணிற்காக ஆயுதம் ஏந்தி களத்தில் இறங்கி போர் செய்யும் போராளிகளைப் போல சமூகத்தின் முட்டாள்தனங்களுக்கும், அடிமைத்தனத்திற்கும் எதிராக சிந்தித்து செயல்பட்ட தந்தை பெரியார் அவர்களும் ஒரு சமூகப் போராளிதான்.//

  இதைத்தானே நாங்களும் செய்தோம்.பயங்கரவாதிகள் என்றார்களே.....மனதில் பாரங்களை ஏற்றிவிட்டது உங்கள் பதிவு ஃப்ரெண்ட் !

  ReplyDelete
  Replies
  1. அதிலுள்ள நியாயங்களைப் புரிந்து உணர்வுரீதியாய் துடிக்கவும், பங்கெடுக்கவும் என்னைப் போல தமிழ் மக்கள் ஏராளம் இருந்தும் ஆள்பவர்க்கு அந்த எண்ணம் இல்லாமல் போயிட்டதே ஃப்ரெண்ட்! நொந்து கொள்வதைத் தவிர வேறென்ன செய்ய? உங்கள் மனதி்ன் பாரங்களைக் குறைப்பதாகவே என் பதிவு இருக்கணும்னு விரும்புவேன் ஹேமா. இப்ப பாரம் கூட்டிட்டதுக்காக வருந்தறேன். ஸாரி!

   Delete
 15. எல்லாருமே சொல்லி இருப்பதுபோல உங்க நினைவாற்றல் அபாரம். ஒவ்வொரு விஷயத்தையும் கோர்வையாக சொல்லி வருவது எங்களுக்கெல்லாம் நல்ல படிப்பு அனுபவம் கிடைக்குது நன்றி

  ReplyDelete
  Replies
  1. தொடர்ந்து படித்துக் கருத்திட்டு என்னை ஊக்குவிக்கும் நீங்களெல்லாம்தான் எனக்கு பலம். என் இதயம் நிறை நன்றிம்மா!

   Delete
 16. நட்பு என்கிற விஷயம் வாழ்நாள் முழுமைக்கும் தொடர்கிற விஷயம். மற்ற விஷயங்கள் அப்படியல்லவே... // நூறுவீதம் உண்மையான விடயம் தொடருங்கள் பின் கூடவே பயணிக்கின்றேன்.

  ReplyDelete
  Replies
  1. என்னுடன் துவக்கம் முதலே வரும் உங்களை என்னவென்று சொல்வேன் நேசன்? மனம் நெகிழ உங்களுக்கு நன்றி!

   Delete
 17. இதுவரை வெளிவராத ஆனால் உண்மையை சுமந்து வரும் மிக சுவாரசியமான தகவல்கள்..உங்கள் ஞாபசக்தி பாராட்டபடக் கூடிய ஒன்று. வழக்கம் போல எனது வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தொடர்ந்து நடைவண்டியில் பயணிக்கும் உங்களின் ஆதரவுக்கு மனம் மகிழ்ந்து என் நன்றி நண்பா.

   Delete
 18. கொஞ்சம் தாமதமாக வந்தமைக்கு மாணிக்க வேண்டுகிறேன் வாத்தியரே. விதி வழியில் செல்வதால் சதி ஒன்று நிகழ்ந்து விட்டது'

  // குற்றாலத் துண்டு // எங்க ஊர் பெமேஸ்.

  உங்கள் நினைவாற்றல் நானும் வியக்கிறேன். உங்களோடு நடை பழக காத்திருக்கிறேன்

  ReplyDelete
  Replies
  1. விதி வழி செல்லும் வாழ்வில் உங்களுக்கும் சோதனைகள் நேர்கின்றனவா... மீண்டு வாருங்கள். எல்லாம் நமக்கு உரமே... நடை வண்டியில் தொடர்ந்து வரும் உங்களுக்கு என் உளம்கனிந்த நன்றி.

   Delete
 19. நடை வண்டியை பழக இப்போ முடியல்ல பிறகு வருகிறேன் வசந்தமே தங்கள் பதிவொன்றை வலைச்சரத்தில் பதிந்துள்ளேன் . நேரமிருப்பின் வலைச்சரம் வருமாறு அன்போடு அழைக்கிறேன் .

  ReplyDelete
  Replies
  1. வந்துட்டேன் சசி. என்னையும் மனதில் வைத்து பகிர்ந்தமைக்கு மனம் நிறைந்த நன்றி.

   Delete
 20. நடந்தவைகளை கண்ணுக்கு முன் கொண்டு வந்து நிறுத்துவது போன்ற எழுத்து.

  ReplyDelete
  Replies
  1. ரசித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் இதயம் நிறைந்த நன்றி!

   Delete
 21. நிறைய தெரிந்து கொண்டோம்...
  தொடருங்கள்... தொடர்கிறோம்...

  ReplyDelete
  Replies
  1. என் மனமார்ந்த நன்றி நண்பா!

   Delete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
 • Youtube