கோவையில் கல்லூரி விழா ஒன்றில் நேருக்கு நேர் நிகழ்ச்சியில் என்னிடம் ஒருவர் கேட்ட கேள்வி இது: ஜோதிடத்தை நம்பலாமா? நான் சொன்ன பதில்: மனோதிடம் உள்ளவர்களுக்கு ஜோதிடம தேவையில்லை.
நான் குடியிருக்கும் பகுதியைச் சேர்ந்த நண்பர் ஒருவர் பஸ் ஸ்டாப்பில் பஸ்ஸுக்காக காத்திருந்தபோது அந்தப் பக்கமாய் காரில் சென்ற நான் அவரைப் பார்த்ததும் காரை நிறுத்தினேன். ‘‘என்ன ஜானகிராமன்... பஸ்ஸுக்கா? கார்ல ஏறுங்களேன். சிட்டிக்குத்தானே போறீங்க...?’’
ஜானகிராமன் ஏறிக் கொண்டார். பதினைந்து நிமிஷப் பயணத்தில் காந்திபுரம் வந்தது. காரை நிறுத்தினேன். அவர் செல்ல வேண்டிய வீட்டுக்கு முன்பாய் சுவரில் ஒரு சிறிய போர்டு தெரிந்தது.
ஜோதிடபூஷணம் மாணி்க்கவேலு
(இங்கே கைரேகை, ஜாதகம், எண்கணிதம், வாஸ்து துல்லியமாய் கணித்துச் சொல்லப்படும்)
‘‘நீங்களும் உள்ளே வாங்க ராஜேஷ்குமார்! ஜோதிடர் மாணிக்க வேலு உங்களைப் பார்த்தா ரொம்பவும் சந்தோஷப்படுவார்!’’ என்றார் நண்பர். மறுக்க முடியாமல் உள்ளே போனேன்.
ஜோதிடர் மாணிக்க வேலு சுமார் அறுபது வயதில் பளீரென்ற வெள்ளை வேஷ்டி, சட்டையில் நெற்றியில் சந்தனம், குங்குமம் மின்ன உட்கார்ந்திருந்தார். நண்பர் என்னை அவர்க்கு அறிமுகப்படுத்தி வைத்ததும் பெரிதும் சந்தோஷப்பட்டார். காபி வரவழைத்தார். பொதுவான விஷயங்களைப் பேசிக் கொண்டே காபி சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது வாசல் பக்கம் ஒரு குரல் கேட்டது. ‘‘அய்யா...’’
ஜோதிடர் எட்டிப் பார்த்துவிட்டு மலர்ந்தார். ‘‘வாங்க பொன்னம்பலம்...’’ அந்த பொன்னம்பலம் உள்ளே வந்தார். கையில் ஸ்வீட் பாக்ஸ். ‘‘என்ன பொன்னம்பலம்... குழந்தை பொறந்தாச்சா?’’
‘‘ஆமாங்கய்யா... அய்யா, நீங்க பொண்ணுதான் பொறக்கும்னு சொன்னீங்க. ஆனா பையன் பொறந்து இருக்கான்...’’
‘‘நான் அப்படிச் சொல்லியிருக்கவே மாட்டேன். நீங்க எப்ப என்கிட்டே ஜோஸ்யம் பாக்க வந்திருந்தீங்க?’’
‘‘ரெண்டு மாசத்துக்கு முந்தி. இருப்தி ரெண்டாம் தேதி’’
‘‘இப்ப பாத்துடலாம்...’’ என்று சொன்ன ஜோசியர், மேஜை டிராயரைத் திறந்து, ஒரு டைரியை எடுத்தார். புரட்டினார். ‘‘22ம் தேதிதானே...! ம்... உங்களுக்குச் சொன்ன பலன்களை சுருக்கமா எழுதி வெச்சிருக்கேன். அதில ஒரு பலன் ஆண் குழந்தை பிறக்கும்னு எழுதி வெச்சிருக்கேன். நீங்களே பாருங்க...’’ டயரி வரிகளைக் காட்டினார். அந்த பொன்னம்பலம் பார்த்தார். ‘‘நீங்களும் பாருங்க ஸார்...’’ என்று என்னிடமும் காட்டினார். ‘ஆண் குழந்தைபிறக்கும்’ என்று தெளிவாக எழுதி வைத்து இருந்தார்.
பொன்னம்பலம் தலையைச் சொறிந்தார். ‘‘அய்யா... மன்னிக்கணும். நீங்க சொன்னதை நான்தான் காதுல சரியாப் போட்டுக்கலை போலருக்கு... தப்பா நெனைச்சுக்காதீங்கய்யா...’’ ஸ்வீட் பாக்ஸைக் கொடுத்து விட்டு அவர் போய் விட்டார்.நானும் நண்பர் ஜானகிராமனும் ஜோதிடரிடம் விடை பெற்றுக் கொண்டு புறப்பட்டோம். என் மனசுக்குள் ஜோதிடத்தைப் பற்றிய ஓர் உயர்வான அபிப்ராயம் லேசாய் முளை விட்டிருந்தது.
காரை ஓட்டிக் கொண்டே நான் ஜானகிராமனைப் பார்த்தேன். ‘‘பரவாயில்லையே... உங்க ஜோதிட நண்பர் ரொம்பவும் பவர்ஃபுல்லாய் இருக்கார்...’’
ஜானகிராமன் உதடு பிரியாமல் சிரித்தார் ‘‘என்ன சிரிக்கறீங்க?’’
‘‘சிரிக்காமே என்ன பண்றது? பொழப்பு நடக்கணும்னா இப்படிப்பட்ட கெட்டிக்காரத்தனம் வேணும். இல்லையா?’’
‘‘கெட்டிக்காரத்தனமா..?’’
‘‘ம்... அந்த பொன்னம்பலத்தோட ஜாதகத்தைப் பார்த்துட்டு, உனக்கு பெண் குழந்தைதான் பிறக்கும்னு சொல்லியிருப்பார் மாணிக்கவேலு. அவர் போனதும் டைரியில சொன்ன பலன்களை எழுதும் போது பெண் குழந்தை பிறக்கும் என்பதற்குப பதிலாய் ஆண் குழந்தை பிறக்கும்னு மாத்தி எழுதிக்குவார். ரெண்டு மாசம் கழிச்சு பொன்னம்பலம் வரும்போது பெண் பிறந்திருக்குன்னு அவர் சொன்னா... ‘பாத்தியா, நான் சொன்ன மாதிரியே பெண் குழந்தை பிறந்தது’ன்னு சொல்லி தன்னோட ஜோசியத் திறமையை மெச்சிக்குவார்... ஒருவேளை இவர் சொன்னதுக்கு மாறாய் ஆண் குழந்தை பிறந்து இருந்தால் உடனடியாய் டைரியை எடுப்பார். அதில் ஆண் குழந்தை என்று எழுதியிருப்பதைப் பார்த்ததும் வந்தவர் அயர்ந்து போய் விடுவார். இப்ப சொலலுங்க... இது கெட்டிக்காரத்தனம் இல்லையா?’’
ஜானகிராமன் பேசப் பேச... ஜோதிடக்கலையை உயர்வாய் எண்ணிய என்னுடைய எண்ணத்திற்கு ஒரு மெகா முற்றுப்புள்ளி வைத்தேன்.

-‘ஊஞ்சல்’ இதழில் ராஜேஷ்குமார் எழுதிய
‘ ரெடி, ஸ்மைல் ப்ளீஸ்!’ தொடரிலிருந்து...
ராஜேஷ்குமாரின் ஒரு அனுபவத்தைப் படிச்சு ரசிச்ச நீங்க அவரோட கதாபாத்திரங்களான ரூபலா - விவேக் - விஷ்ணு புகுந்து விளையாடும் வலைச்சரப் பதிவை இங்கே க்ளிக் பண்ணிப் படிச்சு ரசியுங்க..!
|
|
|
Tweet | ||

பிரமாதம்! நல்ல கெட்டிக்காரத்தனம்! :)
ReplyDeleteஇன்னிக்கு சீக்கிரமாவே வந்துட்டேன். :) உங்களோட 'வாத்தியாராயட்டேன்' பதிவுல உங்களுக்கு வாழ்த்து சொல்லி இருக்கேன் கணேஷ் ரொம்பவே தாமதமா.
அப்பறமா நிதானமா பாருங்க.
படிக்கும் போதே இந்த தொழில் தந்திரம் என்னையும் அசர வெச்சது. சரியான சமயத்துல ஷேர் பண்ணிக்கிட்டிருக்கேன். மகிழ்வு தந்த வருகைக்கும் கருத்துக்கும் என் மனமார்ந்த நன்றி!
Deleteதிரு ராஜேஷ்குமாருக்கு ஏற்பட்ட அனுபவம் நம்மில் பலபேருக்கு ஏற்பட்டு இருக்கும்.ஜோதிடம் என்பது ஒரு அறிவியல் கலை. (It is an Art and Science) ஆனால் துரதிர்ஷ்டவசமாக அது வியாபார பொருளாகிப்போனது. இன்றைக்கும் இருக்கும் ஜோதிடர்களில் 90 சதவிகிதத்திற்கு மேல் தங்கள் வாய் ஜாலங்களினாலும், மக்களின் அறியாமையினாலும் தங்களது பிழைப்பை நடத்திக்கொண்டு இருக்கிறார்கள்.
ReplyDeleteதிரு ராஜேஷ்குமார் அவர்கள் பற்றிய பதிவுக்கு நன்றி.
முறையாகப் பயின்றால் ஜோதிடம் ஒரு அரிய கலை என்று நண்பர் இ.செள.ராஜன் எனக்குச் சொல்லியிருக்கிறார். நீங்கள் சொல்லியிருக்கும் ஆதங்கம் எனக்கும் உண்டு. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் என் இதய நன்றி!
Deleteராஜேஷ்குமார் அவர்களின் சுவையான ஒரு அனுபவத்தினை எங்களுடன் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி கணேஷ். இதுவரை இது படித்ததில்லை.
ReplyDeleteஜோதிடம் - மனோதிடம் - ரசித்தேன்...
வலைச்சரத்திலும் நல்லா மூக்குப் பிடிக்க சாப்பிட்டு வந்தேன். பாருங்க வாயைத் தொறந்தா காக்கா கொத்திடும் போல இருக்கு! :)
ராஜேஷ்குமாரின் அனுபவத்தையும், வலைச்சர விருந்தையும் ரசித்துக் கருத்திட்ட உங்களின் வேகம் எனக்கு அளிக்கிறது உத்வேகம். மிக்க நன்றி நண்பா!
Deleteஇந்த ஐடியா நல்ல இருக்கே
ReplyDeleteமனம் கவர்ந்த பதிவு
தொட்ர வாழ்த்துக்கள்
ரசித்துக் கருத்திட்ட தங்களுக்கு என் இதய நன்றி!
DeleteTha.ma 3
ReplyDeleteராஜேஷ்குமாரின் ஒரு அனுபவத்தைப் படிச்சு ரசிச்ச நான் ,அவரோட கதாபாத்திரங்களான ரூபலா - விவேக் - விஷ்ணு புகுந்து விளையாடும் உங்களின் வலைச்சரப் பதிவையும் படிச்சு ரசித்தேன்...இரண்டு பதிவுகளும் "தேன்" போல இருந்தது..
ReplyDeleteஇரண்டையும் ரசி்த்து, இரண்டிலும் கருத்திட்டு என்னை வாழ்த்திய நண்பனுக்கு என் உளம்கனிந்த நன்றி!
Deleteநான் அமெரிக்காவில் இருந்து தமிழகம் வந்த போது திருச்சியில் உள்ள என் நண்பண் எனது மனைவியையும் என்னையும் சுவடி பார்த்து மிக நன்றாக சொல்லும் ஒருவரிடம் கூட்டி சென்றான். முதலில் அந்த நபர் என் மனைவியிடம் சிறிது பேசி முதலில் அவள் வாயை கிளறி விட்டு பலன் சொல்ல ஆரம்பித்தார் அவள் சொன்ன விஷ்யங்களை மனதில் போட்டு அதற்கு ஏற்றார் போல பலன் சொல்ல ஆரம்பித்தார். அதை நான் தனியாக் உட்கார்ந்து கூர்ந்து கவனித்து விட்டு அவரிடம் எனக்கு பாருங்கள் என்று சொன்னேன்.
ReplyDeleteநாம மதுரைக்காரான் அல்லவா மிக கமுக்கமாக இருந்து என்னைப்பற்றி எந்தவித சிறிய விஷயத்தையும் வெளியிடாமல் இருந்தேன்.
எனக்கு பலன் சொல்லும் போது மிக தடுமாறிவிட்டார் காரணம் நானும் என் மனைவியும் மாற்று மதத்தை சார்ந்தவர்கள் என்ற விபரத்தை அவரிடம் சொல்லவில்லை அவர் எனது மனைவியின் மதததை சார்ந்த பெயாராகவே எனது பெயரை கருதி பலன் சொல்ல ஆரம்பித்தார் எல்லாமே ஏட்டிக்கு போட்டியாகவே முடிந்தது. நான் அவர் சொன்ன பலனை கேட்டு சிரிக்க ஆரம்பித்தது அவருக்கு புரிந்துவிட்டது கடைசியில் சார் உங்களுக்கு இந்த ஏடு பலன் மீது நம்பிக்கை இல்லை நம்பிக்கை இல்லாமல் இருப்பவர்களுக்கு சரியாக பலன் வராது என்று சொல்லிவிட்டு பணம் கூட வாங்காமல் மற்றொரு அறைக்கு சென்றுவிட்டார்
அதே சமயத்தில் என் நண்பரின் அப்பா அவர் மலையாள பிராமின் அவர் சொன்னது எல்லாம் பலித்திருப்பதை நானும் மற்றவர்களும் பார்த்து இருக்கிறோம் என் விஷயததில் அவர் சொன்ன அனைத்து விஷயங்களும் இன்று வரை பலிதிருக்கின்றன. அவர் இதற்க்காக ஒரு சல்லிகாசு யாரிடமும் வாங்க வில்லை. நான் படிக்கும் போதே அவர் சொன்னார் அமெரிக்காவில் நீங்கள் செட்டில் ஆகி விடுவாய் என்று சொன்னார் முதலில் அப்போது நான் சிரித்தேன் நாம படிக்கும் லட்சணத்திற்கு அங்கே எப்படி போவோம் என நினைத்தேன் மேலும் எனது சகோதர்கள் அரபு நாடுகளில் வசிப்பதால் அங்கு செல்லும் எண்ணம் மட்டும்தான் இருந்தது. ஆனால் அவர் சொன்ன இந்த விஷ்யமும் மேலும் பல குடும்ப விஷயங்களும் அப்படியே பலித்தன.
‘நாலு அண்ணனும் மூணு தங்கச்சிக்கப்புறம் பொறந்து என்ன பிரயோஜனம்?’ (ஓஹோ... பெரிய குடும்பம் போலருககு) ‘எங்கப்பா அந்தக காலத்துல வெள்ளித் தட்டுல சாப்பிட்டவர்’ (அந்தக் காலத்துலன்னா... பெரிய குடும்பத்துக்கு செலவழிச்சு சொத்து கரைஞ்சிட்டுது போல) -இப்படி நாம பேசறதிலிருந்தே பல பேர் சாமர்த்தியமா கிரகிச்சதை வெச்சு ஜோசியம்னு ஒண்ணு சொல்வாங்க. இப்படியான பல ஆசாமிகளால தாம்ப்பா நிஜமான ஜோசியர்ளுக்கும் கெட்ட பேரு!
Deleteநீங்க எழுதும் ஜோடிகளில் கணேஷ் வஸந்தைத்தவிர வேற யாரையுமே எனக்குப் பரிச்சயமில்லை. தமிழ்நாட்டை விட்டு கிட்டத்தட்ட 37 வருசமாயிச்சு. இப்போ இணையம் தந்த கொடையில் மீண்டும் தமிழ் வாசிக்கும் ஆர்வம். ஊருக்குப்போகும்போதெல்லாம் கொஞ்சம் புத்தகங்கள் வாங்கிவர ஆரம்பிச்சுருக்கேன். அப்பவும் ராஜேஷ்குமார், சுபா எல்லாம் வாங்கலை. இனி அந்தப்பக்கமும் கொஞ்சம் கவனத்தைத் திருப்பணும் !
ReplyDeleteகாரணம்..... தனியாச் சொல்லணுமா? எல்லாம் உங்களாலேதான்:-)
ஜோசியத்தைப் பொறுத்தவரை.... அந்தக்காலத்தில் எனக்கு ஒருத்தர் சொன்னது நடந்துருக்கு!
]அவரை[ப்பத்தி எழுதியாச்சு சுட்டி இதோ!
நேரம் கிடைக்கும்போது பாருங்க.
http://thulasidhalam.blogspot.co.nz/2006/09/16.html
டீச்சர்...! தமிழ்நாட்டுப் பக்கம் வந்தால் எனக்கு தகவல் கொடுங்க. அந்தந்த எழுத்தாளர்களோட ஆட்டோகிராஃபோடயே புத்தகங்கள் வாங்கித் தரதுக்க்கு நானாச்சு உங்களுக்கு! நீங்க எழுதிய ஜோசிய அனுபவத்தை இப்பவே படிச்சிடறேன். உங்களு்க்கு என் இதயம் நிறை நன்றி!
Deleteஜோசியம்....நம்மகூடாதுதான் ஆனால் ஒரு சிலருக்கு அது தீர்வு தருவதாக நம்புகிறார்கள்.....எனக்கு நம்பிக்கை துளி கூட கிடையாது...இணையத்தில் நண்பர் ஒருவருக்காக ஜோதிட சாப்ட்வேர் டவுன்லோடு செள்து வைத்தேன்.....ஒரு முறை மிகப்பெரிய ஜோதிடர் ஒருவரிடம் சென்ற போது அவருடைய லேப்டாப்பை பார்த்த போது அதே சாப்ட்வேரை வைத்து ஜோதிடம் சொல்லிக்கொண்டு இருந்தார் அவர் அரை மணி நேரம் ஜோதிடம் பார்த்ததுக்கு வாங்கிய தொகை ஆயிரம் ரூபாய்! இலவச சாப்ட்வேர் இத்தனைக்கும்!
ReplyDeleteஅடப்பாவிகளா... இதைல்லாம் நம்பறவங்க இருக்கற வரைக்கும் அவங்க பொழைப்பு கொண்டாட்டம் தான். இல்லையா... நற்கருத்துக்கு நன்றி சுரேஷ்.
Deleteஜோசியத்தைப் பற்றிய அபிப்பிராயத்தை எங்களுடனும் பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி சின்ன வாத்தியாரே...
ReplyDeleteசின்ன வாத்தியார்ன்னு முடிவே பண்ணிட்டிங்களா சீனு. உங்களன்பில் நெகிழ்ந்து என் மனம் நிறைய நன்றி.
Deleteசாரே..வலைபூவிற்கு வந்ததற்கு நன்றி. சிலசமயம் ஆர்வகோளாறினால் செய்வது பிழையாகிவிடுகிறது!! அடுத்தமுறை இன்னும் கவனம் கொள்கிறேன்.
ReplyDeleteஎனினும் மோதிர கையால் குட்டு வாங்குவது குறித்து பெருமையே :)
பாஸிட்டிவாக எடுத்துக் கொண்டதற்கு என் உளம் கனிந்த நன்றி நண்பா.
Deleteஎனக்கு ஜோசியத்தில் நம்பிக்கை இல்லை இருப்பினும் அவரது அனுபவங்களை கேட்கும் போது மக்களை ஏமாற்றும் அளவிற்கு திறமைசாலிகள் இருப்பது குறித்து வருத்தமே .
ReplyDeleteநானும் இந்த விஷயத்துல உஙக கட்சிதான். ஜோசியத்துல துளிகூட நம்பிக்கை இல்லாதவன்தான். மிக்க நன்றி தென்றல்.
DeleteI am also not interested in Jothidam for the reason that if he says anything good, I will remain idle hoping that good thing will happen without our efforts and if he says anything bad, I will be thinking only about it feeling restless in mind, which makes me again to remain idle. But today there are so many people to approach Josiyars for every silly problem. Waste of money and time apart from confusing our mind which prevents us from making any analytical decisions.
ReplyDeleteமிகவும் சரி. நம் உழைப்பிலும் திறமையிலும் நம்பிக்கை வைத்தால் ஜோதிடத்தை நாம் நம்ப மாட்டோம். நற்கருத்துரைத்தமைக்கு உளம் கனிந்த நன்றி நண்பா.
Deleteஜோதிடத்தை ராஜேஷ்குமார் எப்போதும் பலித்ததில்லை, ஆனால் இப்போதிருக்கும் எவரும் ஜோதிடத்தை முழுமையாய், முறையாய் பயின்றவர்கள் இல்லை என்பது அவர் கருத்து. அதைப்போல இறை நம்பிக்கையின் மீதும் அலாதியான பற்று கொண்டவர் ராஜேஷ்குமார், அவருடைய நிறைய நாவல்களை வாசிதித்துருக்கிறேன் என்பதால் இதை சொல்கிறேன் ..!
ReplyDeleteநிறையப் படித்திருக்கும் விசிறி நீங்கள் சொன்னா சரியாத்தான் இருக்கும் தோழா. வருகைக்கு மனம்நிறைந்த நன்றி.
Deleteada nalla pakirvu!
ReplyDeleteThankyou Verymuch Seeni.
Deleteபடித்துக் கொண்டு வரும்போதே நான் வேறு மாதிரி நினைத்தேன். ஸ்வீட் கொண்டு வந்த ஆளே ஜோசியர் செட் அப் செய்திருக்கும் ஆள் என்று நினைத்தேன்! இதெல்லாம் இப்படித்தான். பலிக்கும் வரை ஜோசியம்!
ReplyDeleteநம்பிக்கை இருப்பவர்களுக்கு மட்டும் தானே ஜோதிடம் எல்லாம், மிக்க நன்றி ஜராம்
Deleteஒரொரு இடத்திலும் சைன் இன் செய்ய வேண்டியதிருக்கே....! தொடர்வதற்கு வசதியாக...!
ReplyDeleteஎனக்கும இதே எண்ணம் தான். ஒவ்வொரு இடத்திலும் நானும் சைன் இன் பண்ணித்தான் செல்கிறேன். இதை நிவர்த்திக்க வழியுண்டான்னு தான் தெரியலை...
Deleteசிலநேரங்களில் சில மனிதர்கள் போல..
ReplyDeleteசில சந்தர்பங்களில் ஜோதிடத்தை நம்பும்
வகையும் நம் வாழ்வில் சேர்ந்துவிடுகிறது...
ராஜேஸ்குமார் அவர்களின் அனுபவம்
இங்கே அழகாக கதை பேசுகிறது...
அனுபவத்தை ரசித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் இதய நன்றி மகேன்.
Deleteastrology is blamed by some persons wrong materialistic mentality
ReplyDeleteராஜேஷ்குமார் அவர்களின் ஒரு அனுபவத்தைப் எங்களுடன் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி...நகைச்சுவையாக இருந்தது. ஆனால் இப்படியெல்லாம் செய்பவர்களினால் உண்மையான ஜோதிடர்களை கூட நம்ப முடியவில்லை.
ReplyDeleteநிஜம்தான். ஜோதிட சாஸ்திரத்தை முழுமையாகப் படித்த நல்ல ஜோதிடர்களுக்குக் கூட இப்படிச் சிலரால் கெட்ட பெய்ர்தான். தங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.
Deleteநகைச் சுவை அனுபவம் அருமை!
ReplyDeleteசா இராமாநுசம்
ரசித்துக் கருத்திட்ட தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.
Deleteஃப்ரெண்ட் ஒரே நேரத்தில உங்க வீட்லயும்,வலைச்சரத்திலயுமா அசத்துறீங்களே.க.க.போங்க.....ஜோதிடக்காரார் எல்லாருமே இப்பிடித்தான் இருப்பாங்க.இன்னும் நம்புறாங்க ரொம்பப் பேர் !
ReplyDeleteஜோசியத்தை நம்பறத்துக்கு நிறையப் பேர் எல்லாக் காலத்துலயும் உண்டு ப்ரெண்ட். எனக்கு நம்பிக்கையில்ல. அவ்வளவுதான். நன்றி.
Deleteராஜேஷ்குமார் அவர்களின் ஒரு அனுபவத்தை சுவைப்பட சொன்ன உங்களுக்கு நன்றிங்கோ....
ReplyDeleteஏனுங்க... தவறாம என் போஸ்டைப் படிச்சுப் போட்டு கருத்து சொல்ற உஙகளுக்கு நானில்லங்க நன்றி சொல்லோணும்? ரொம்ப ரொம்ப நன்றிங்கோ...
Deleteநான் கிறிஸ்தவள் என்பதால் யோதிடத்தில் நம்பிக்கை இல்லை. உங்கள் அனுபவம் சரிக்க சொல்கிறது...
ReplyDeleteநான் இந்துவாக இருந்தும் நம்பிக்கை இல்லை. அனுபவத்தை ரசித்துக் கருத்திட்ட உனக்கு என் உளம்கனிந்த நன்றி.
Deleteகணேஷ், உங்களுடைய நேரப்பகிர்வும் திட்டமிடலும் பிரமிக்கவைக்கிறது. முதலில் அதற்குப் பாராட்டுகள்.
ReplyDeleteசோதிடம் பற்றிய ராஜேஷ்குமார் அவர்களின் அனுபவம் சுவையாக இருந்தது. மனோதிடம் உள்ளவர்களுக்கு சோதிடம் தேவையில்லை என்பது மிகச்சரியான வார்த்தை. நன்றி கணேஷ்.
மனம் திறந்த பாராட்டி மகிழ்வளித்த தோழிக்கு என் இதயம் நிறை நன்றி!
Deleteஜோதிட அனுபவம் ரசிக்க வைத்தது. முதலிலேயே சந்தேகம் தட்டியது, 'ஏன் எழுதி வைக்க வேண்டும்?' இப்படி செய்கிறவர்களும் இருக்கிறார்கள் போல. அருமையான பதிவு....
ReplyDeleteஅனுபவத்தை ரசித்த உங்களுக்கு என் உளம்கனிந்த நன்றி!
Deleteஇப்பெல்லாம் சோதிடத்தை நம்புவதில்லை..முன்பு நிறைய நம்பியதுண்டு.
ReplyDeleteVetha.Elangathilakam.
http://kovaikkavi.wordpress.com
உங்களின் வருகைக்கும் மகிழ்வூட்டிய கருத்துக்கும் என் மனமார்ந்த நன்றி!
Deleteஉங்களின் வருகைக்கும் மகிழ்வூட்டிய கருத்துக்கும் என் மனமார்ந்த நன்றி!
Deleteகணேஷ், இது ஒரு பழைய கதை, ராஜேஷ்குமார் இதை தனக்கு ஏற்பட்ட ஒரு அனுபவமாக சொல்லிவிட்டார் போல இருக்கு
ReplyDeleteஎன்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்