Wednesday, January 9, 2013

சரித்திரக் கதை எழுதுவது எப்படி?

Posted by பால கணேஷ் Wednesday, January 09, 2013

ரித்திரக் கதையில ரெண்டு டைப் இருக்குங்க. ஒண்ணு கல்கி, சாண்டில்யன், விக்ரமன் மாதிரி எழுத்தாளர்கள் எழுதிய அக்கால பாணிக் கதைகள். இன்னொண்ணு சுஜாதா, சுபா மாதிரி எழுத்தாளர்கள் எழுதின நவீனபாணி சரித்திரக் கதைகள். ரெண்டையும் பார்க்கலாம் இப்ப. முதல்ல பழைய பாணி...

முதல்ல கதாபாத்திரங்களை உருவாக்கிக்குங்க. சரித்திரக் கதைகள்ல நிறையக் கற்பனையக் கலந்து சரடு விடலாம் நீங்க. ஆனா, அதுல வர்ற மன்னர்கள் பேரு மட்டும் சரியானதா இருக்கணும். அதுக்கு பழைய சரித்திர புத்தகங்கள் ஏதாவது படிச்சு ரெஃபரன்ஸ் எடுத்துக்கணும். எடுத்தாச்சா... ரைட்டு, இப்ப ஹீரோ கேரக்டர். ஹீரோங்கறதால அவன் பெரிய வீரனாகவும் புத்திசாலியாகவும் இருத்தல் அவசியம். மன்னனோட படைத் தளபதியாவோ, இல்ல மன்னர் மரபில வந்து இப்ப செல்லாக்காசா இருக்கறவனாவோ உருவாக்கிக்கங்க. அடுத்தது கதாநாயகி. கதாநாயகிங்கறதால அவ ஒரு இளவரசியாகவும், அதியற்புத அழகியாகவும் இருக்க வேண்டியதும் காலத்தின் கட்டாயம்.

அப்புறம்... சரித்திரக் கதைகள்ல ஒரு துறவி கேரக்டர் இருக்க வேண்டியது அவசியம். அவர் துறவிக்குரிய பணியைத் தவிர மத்த எல்லா அரசியல் பணியையும் செய்யறவரா அமைச்சுக்கறது மிக முக்கியமான விஷயமுங்க. இன்னொண்ணு... அந்தக் காலத்து மன்னர்கள் மாறு வேஷத்துல நகர் வலம் வர்றதும், மக்களை சந்திக்கறதும் வழக்கம்கறதால ஒரு மர்ம கதாபாத்திரத்தை அமைச்சுக்கணும். கடைசி சீன்லதான் அது மன்னர்தான்கற சஸ்பென்ஸை உடைக்கணும். -அது சஸ்பென்ஸா இல்லாம பாதியிலயே வாசகர்களுக்குத் தெரிஞ்சிட்டாலும் கூட. இவங்களுக்குத் துணையா இன்னும் எத்தனை கேரக்டர்களை வேணுமுன்னாலும் நீங்க சேத்துக்கலாம்.

ரைட். இப்ப இந்த எல்லா கதாபாத்திரங்களையும் உங்க மனக்குடுவைல போட்டு, அதை நல்லாக் குலுக்குங்க. -ரெண்டு மூணு குட்டிக்கரணம் அடிச்சாலு்ம் சரிதான்... ஆச்சா? சம்பவங்கள்ங்கற கோந்தை வெச்சு இவங்களை ஒட்டினீங்கன்னா, சரித்திரக் கதை தயார். என்னது...? எப்படி ஒட்டறதுன்னா கேக்கறீங்க? அதையும் சொல்றேன். ஓப்பனிங் ஹீரோ இன்ட்ரடக்ஷன். குதிரைல ஹீரோ இயற்கைய ரசிச்சுட்டு வர்றப்ப, அவனை சில பெண்கள் ரசிக்கறாங்கன்னு சொல்லிட்டு, அவன் வீரம் வெளிப்படற மாதிரி ஒரு சண்டை சம்பவத்தை அமைச்சுக்கணும். அடுத்து அவன் கதாநாயகியைப் பார்த்து காதல் வசப்படணும். மன்னரோட எதிரி போருக்கு வர்ற மாதிரியோ, இல்ல மன்னர் ஏதோ ஒரு போர்ல தோத்துட்டு நாட்டை மீட்கப் போராடற மாதிரியே வெச்சுக்கிட்டு, ஹீரோ போய் அவருக்கு ஐடியாஸ் தர்ற மாதிரி வெச்சுக்கணும்.

அதுக்காக எதிரி நாட்டுக்கு துப்பறியப் போறான். அங்க இன்னொரு பொண்ணை காதலிக்கறான். - சரித்திரக் கதைன்னா எத்தனை பொண்ணுங்களை வேணும்னாலும் காதலிக்கலாம். நமக்கு வேண்டியது காதலை வெச்சு ரெண்டு சாப்டர் தள்ளணும்கறதுதான். -  அங்க அவனுக்கு ஒரு துறவி உதவறார். சில பல சாகசங்களுக்குப் பின் வெற்றிகரமா தன் நாட்டுக்கு வர்றான். இப்படி்ல்லாம் சம்பவ கோந்துகளை உங்க கற்பனைக் குதிரையக் கண்டபடி தறிகெட்டு ஓடவிட்டு உருவாக்கி ஒட்டிக்கணும். கடைசியா க்ளைமாக்ஸ்னு வர்றப்ப ஒரு போர்க்களம் நிச்சயம் இருந்தாகணும். அந்தப் பெரும் போர்ல நம்ம ஹீரோவோட ஐடியாக்களாலயும், வீரத்தாலயும் மன்னர் ஜெயிக்கறதா காட்டிரணும். அவர் அரசவைக்கு வந்ததும் அவர்தான் துறவியா வந்து ஹீரோவுக்கு உதவி செஞ்சார்ங்கற மஹா சஸ்பென்ஸை உடைச்சு, ஹீரோவுக்கு பரிசுகள் தரணும். அவன் தன் காதலிகளோட கொஞ்சறதோட கதைய முடிச்சிரணும். - இல்லன்னா, கல்லெறிஞ்சு முடிக்க வெச்சிருவாங்க. ஹி... ஹி...!

இதையெல்லாம் எழுதும் போது இலக்கிய நயமா இல்லாட்டியும் கூட ஒரளவுக்காவது பழங்கால தூய தமிழ்ல சொற்களை அமைச்சுக்க வேண்டியது அவசியம். அது தெரிஞ்சாதான் சரித்திரக் கதைகள்னு எழுதி ஜல்லியடிக்கலாம். இல்லாட்டி ரசிக்க மாட்டாங்க யாரும். இத்தனை விஷயங்களை வெச்சு சீரியஸ் டைப் சரித்திரக் கதைகளை ஈஸியா எழுதி அசத்திடுவீங்கதானே... என்னது... அந்த இன்னொரு நவீன பாணி சரித்திரக் கதைன்னா என்னன்னு கேக்கறீங்களா... சொல்றேன்.

நவீன பாணி சரித்திரக் கதைகள் எழுதறது மிகமிகச் சுலபமான விஷயம். முதல்ல நீங்க ஒரு சாதாரண நாவல் எழுதிக்கங்க. அது க்ரைம் கதையாக கூட இருக்கலாம். எழுதி முடிச்சாச்சா...? இப்பத்தான் முக்கியமான விஷயம். அந்த க்ரைம் கதையில வர்ற பெயர்களை முதல்ல சரித்திர காலப் பெயர்களா மாத்தணும். உதாரணமா ஹீரோ பேர் தினேஷ்னு வெச்சிருந்தா ‌தினேசவர்மன்னும், ஹீரோயின் பேரு சுலபான்னு வெச்சிருந்தா சுலபதேவின்னும் மாத்திக்கலாம். அப்புறம்... கார்ல வந்து இறங்கினான்னு எழுதியிருந்தீங்கன்னா, குதிரையில அல்லது தேர்ல வந்து இறங்கினான்னும், துப்பாக்கியால சுட்டான்னு எழுதியிருந்த அதை வாளால் வெட்டினான்னும் மாத்தி எழுதிக்கணும்.

இப்படி எல்லாத்தையும் கவனமா மாத்திட்டீங்கன்னா நவீன பாணி சரித்திரக் கதை ரெடி. கணேச பட்டர், வசந்தகுமாரன்னு சுஜாதா ஸாரும், நரேந்திரவர்மன், வைஜயந்தி தேவின்னு சுபாவும் அவங்கவங்க எழுதின க்ரைம் கதைகளை சரித்திரமா மாத்தி இப்படித்தான் கும்மியடிச்சாங்க. உங்க பங்குக்கு நீங்களும் கும்மியடிச்சு தமிழை வாழ வையுங்க... ஹி... ஹி...

=============================

நிஜமாவே சரித்திரக் கதைகளை விரும்பிப் படிக்கும் வாசகர்களுக்கு நான் எழுதினதுல கோபம் வந்திருக்கும். எத்தனை கல் விழுதுன்னு பாக்க ஆவலோட வெயிட்டிங். அப்புறம்... நாளை மறுதினம் துவங்க இருக்கும் புத்தகக் கண்காட்‌சியில ‘டிஸ்கவரி புக் பேலஸ்’ ஸ்டால் எண் 43, 44 ஆகிய எண்கள்ல அமைஞ்சிருக்கு. அங்கே என்னோட ‘சரிதாயணம்’ கிடைக்கும். இன்னும் சில பதிவர்களோட புத்தகங்களும் அங்க கிடைக்க இருக்கறதாகத் தெரிய வருகிறது. இரண்டு புத்தகஙகளை இங்க சொல்றேன். இன்ன பிறவற்றை தகவல்கள் திரட்டி நாளை சொல்றேன்.

1. கவியாழி கண்ணதாசன் - ‘அம்மா நீ வருவாயா, அன்பை மீண்டும் தருவாயா?’ என்கிற தலைப்பில் இவரின் கவிதைகள் மணிமேகலைப் பிரசுர வெளியீடாக புததக வடிவம் பெற்றுள்ளன. மணிமேகலையின் அரங்கு எண் 244ல் இந்தப் புத்தகத்தை நீங்கள் பெறலாம். 13-1-2013 ஞாயிறு அன்று மதியம் 2 மணிக்கு புத்தகக் கண்காட்சி அரங்கிலேயே நடக்கற இந்த நூல் வெளியீட்டு விழாவுக்குப் போனீங்கன்னா ஆசிரிரின் ஆட்டோகிராபோட புத்தகத்தை வாங்கிக்கலாம்.

2. கோவை மு.சரளா - இவங்களோட கவிதைகளுக்கு அறிமுகம் தேவைப்படாது. ரசிக்க, மயங்க, உருக, உற்சாகப்பட, துடிக்க... இப்படி பல உணர்வுகள்ல நம்மை தோய்த்தெடுக்கற அழகான கவிதைகளுக்கு சொந்தக்காரரான இவரின் கவிதைகளும் ‘மெளனத்தின் இரைச்சல்’ என்கிற தலைப்பில் புத்தக வடிவம் பெற்றிருக்கிறது. இதையும் டிஸ்கவரியின் ஸ்டாலில் நீங்கள் சந்திக்கலாம்.

60 comments:

 1. நீங்க மொக்கையா சொன்னீங்களோ சீரியஸா சொன்னீங்களோ ஆனால் நீங்க சொன்னதை வச்சி நிச்சயம் சரித்திர கதை எழுதலாம் போலத்தான் இருக்கு பயப்படாதீங்க நான் ரைபண்ண மாட்டேன் அப்பறம் உங்கள் புத்தகம் பலரையும் சென்று சேர வாழ்த்துக்கள் பாஸ்

  ReplyDelete
  Replies
  1. நான சொன்னது சீரியஸா இல்ல ராஜ்... மொக்கையாத்தான். நான் சீரியஸா எழுதறதை மொக்கைன்னும், மொக்கையா எழுதறதை சீரியஸ்ன்னும் நினைச்சுடறீங்களே... அவ்வ்வ்வ்! புத்தகத்திற்காய் வாழ்ததிய உங்களுக்கு மகிழ்வுடன் என் நன்றி.

   Delete
 2. புத்தக வெளியீடுகளுக்கு வாழ்த்துகள்...

  ReplyDelete
  Replies
  1. உற்சாகம் தந்த உங்களின் வாழ்த்திற்கு என் உளம் கனிந்த நன்றி.

   Delete
 3. கதை எழுதணும் என்றால் காத தூரம்
  எனக்குக் கூட
  அடடே... நம்மளும் கதை எழுதலாம் போல
  என்று சொல்லத் தோணுது...
  நகைச்சுவை இழையோடும்
  நல்ல பதிவு நண்பரே...

  கவியாழி கண்ணதாசன் அவர்களின் கவிதைகளும்
  கோவை மு சரளா அவர்களின் கவிதைகளும்
  வலைப்பூக்களில் ரசித்து படித்திருக்கிறேன்...
  புத்தக வடிவில் இருக்கிறது என்றால்
  நிச்சயம் வாங்கிப் படித்துவிடுகிறேன்....

  ReplyDelete
  Replies
  1. கவிதைக்காரர்களால் கதை எழுதிவிட முடியும் மகேன். கதை எழுதுபவர்களுக்கு கவிதை எழுதுவதுதான் மிகக் கடினம். நீங்களும் எழுதி அசத்துங்க. எங்களின் புத்தகங்களை வாங்கிப் படிக்கிறேன் என்றுகூறி மகிழ்வு தந்த உங்களுக்கு மனம் நிறைந்த நன்றி.

   Delete
 4. நீங்க எழுதியதை படிக்க கோபம் வரவில்லை. கணேஷ். யோசித்துப் பார்த்ததில் பல கதைகள் இப்படிதான் எழுதப்பட்டதோ என்று தோன்றியது.

  ReplyDelete
  Replies
  1. நானும் நிறைய சரித்திரக் கதைகளை விரும்பிப் படித்திருக்கிறேன் மேம். அவற்றில் சில பொதுவான அம்சங்கள் இருப்பதைக் கவனித்ததில் ஒரு அங்கதம் செய்யலாமே என்று தோன்றியது. இதை ரசித்த உங்களுக்கு என் இதய நன்றி.

   Delete
 5. கதை கூறுதல் என்பது பெரும் கலை அது உங்களுக்கு சிறப்பாக வருகிறது .......ஒரு ஆசிரியர் மாணவனுக்கு சொல்லும் விதத்தில் நகை மிளிர நீங்கள் கூறிய விதம் அருமை .........மேலும் என் புத்தகத்தை அறிமுகம் செய்தமைக்கு என் மகிழ்ச்சியை தெரிவிக்கிறேன் நன்றியுடன்

  ReplyDelete
  Replies
  1. என் நட்புகளின் புத்தகங்கள் பல இந்தத் திருவிழாவில் வர இருப்பதில் பெருமகிழ்ச்சி எனக்கு. இந்தப் பதிவை ரசித்துப் படித்த உங்களுக்கு என் இதயம்நிறை நன்றி.

   Delete
 6. நெடுநாளைக்குப் பின் உங்களது உற்சாகமான எழுத்துக்களைப் படிப்பது போல் உள்ளது, முதலிரண்டு பாராக்கள் பொம்மியின், செல்வனையும் பார்த்திபன் கனவையும் பற்றி குறிப்பிட்டு உள்ளீர்கள் என்று நினைக்கிறன், ஏன் என்றால் நான் படித்த சரித்திர கதை இவை இரண்டு தான்....

  உங்கள் புத்தகம் பார்க்கும் ஆவலில் இருக்கும் உங்கள் வாசகன்...

  கண்ணதாசன் மற்றும் மு சரளா அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.... பதிவர்கள் எழுத்தர்களாக உருபெருவது பாராட்டப்பட வேண்டிய விஷயம்

  ReplyDelete
  Replies
  1. தம்பி... சாண்டில்யனின் மன்னன் மகள். கன்னி மாடம். யவன ராணி இவற்றைப் படித்துப் பார். அவற்றிலும் நான் சொன்ன அமசங்கள் வரும். தவிர கௌதம நீலாம்பரன். விக்கிரமன் என்று எந்த எழுத்தாளரின் சரித்திரக் கதையிலும வரும் பொதுவான அம்சங்கள் இவை. பதிவர்களின் புத்தகங்களை வாழ்த்திய உனக்கு மகிழ்வுடன் என் நன்றி.

   Delete
 7. I thought it is very difficult to write historical novel and this is the reason why I did not make any efforts to write one. Now, you have given me the hints and let me rush to stationary mart to buy bundles of papers and addgel pens. Bye I will be very busy for next 10 days as I will be driving my imaginary horse as you said in the first line. Bye and see you with a new historical novel soon.

  ReplyDelete
  Replies
  1. உங்களின் கற்பனைக் குதிரையை ஓடவிட்டு நல்லதொரு சரித்திரக் கதையுடன் வருவீர்கள் என்பதில் மகிழ்ச்சி... ஏதோ என்னாலான இலக்கிய சேவை. ஹி... ஹி... மிக்க நன்றி நண்பரே.

   Delete
 8. கதையா எனக்கா அது உங்களைப்போன்றவர்களுக்கே உரியது. நான் சென்று புத்தகங்களை வாங்கி வருகிறேன்.

  ReplyDelete
  Replies
  1. புத்தகங்களை வாங்கிப் படிக்க விரும்பும் தென்றலுக்கு என் இதயம் நிறை நன்றி.

   Delete
 9. சரித்திரக்கதையா,? சமூக, நகைச்சுவை கதையே எழுத வராது. சரித்திரக்கதை நல்லா ரசிக்கத்தான் தெரியும். ஆரம்ப அறிமுகம், வர்ணனைகள் சில கதை களில் ஒன்னு போலத்தான் வருது. அதை நானும் கவனிச்சிருக்கிறேன்

  ReplyDelete
  Replies
  1. கவனித்ததைப் பகிர்ந்து ரசித்துக் கருத்திட்ட பூந்தளிருக்கு என் உளம் கனிந்த நன்றி.

   Delete
 10. தங்கள் நூல் வெளியிவந்துள்ளதற்கு வாழ்த்துக்கள்! கதை எழுத முற்படுவோருக்கு பால பாடம் நன்று!

  ReplyDelete
  Replies
  1. ரசித்துப் படித்து என்னை வாழ்த்திய உங்களின் அன்பிற்கு மனம் நிறைந்த நன்றி ஐயா.

   Delete
 11. கல்கி, சாண்டில்யன் எல்லாரோட சரித்திர நாவல்களையும் அக்கு வேறு ஆணி வேற பிரிசிடீங்க... என்னோட ஹீரோக்கள ரொம்ப கலாச்சிடீங்க (அருள்மொழிவர்மன், வந்தியத்தேவன் etc)...
  உங்கள் டிப்ஸ் பாக்கும் போது என்னக்கே சரித்திர கதை எழுத தோணுது சார்... நவீன சரித்திர கதை தான் சூப்பர் (சரித்திர பழைய புத்தகங்கள புரட்டி கூட பார்க்கவேண்டாம் ) மனசுல வரதெல்லாம் கதை தான்...

  புத்தக கண்காட்‌சியில சந்திக்கலாம் சார்...

  ReplyDelete
  Replies
  1. ஹீரோ ஒர்ஷிப்பை கலைக்கறது என் நோக்கமில்லம்மா சமீரா. சும்மா ஜாலிக்காக கலாய்க்கறதுதான். ம்ம்ம்... நவீன சரித்திரக் கதை எழுத தயாராயிட்டே போலருக்கே... வாழ்த்துகள். புத்தகக் கண்காட்சியில் நிச்சயம் என்னை சந்திக்கலாம். மிக்க நன்றி.

   Delete
 12. சரித்திரக் கதை குறித்த பெரிய பிரமிப்பு இருந்தது
  தகர்த்தெரிந்தமைக்கு மனமார்ந்த நன்றி
  நமது பதிவர்கள் இருவர் புத்தகம் வெளியிடுவது
  குறித்த தகவல் அதிக மகிழ்ச்சி கொடுத்தது
  மனம் கவர்ந்த பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. ரசித்துப் படித்து, நம்மவர்களை வாழ்த்திய உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

   Delete
 13. புத்தக வெளியீடுகளுக்கு வாழ்த்துகள் மகிழ்ச்சி

  எனக்கும் சரித்திர கதை எழுத ஆசை வருகிறது கணேஷ் சார்

  புத்தக கண் காட்சியில் பார்க்கலாம் சார்

  ReplyDelete
  Replies
  1. எழுதுங்க சரவணன்... பு.கண்காட்சில சந்திக்கலாம். உங்களின் வாழ்த்துக்ள் தந்த மகிழ்வோடு மனம் நிறைந்த என் நன்றி.

   Delete
 14. ரொம்ப நல்ல யோசனையா இருக்கே! கொஞ்சம் மெனக்கெட்டா ஒரு மொக்கை நாவலை எழுதி சரித்திரம் படைச்சுடலாமுன்னு சொல்லுங்கோ! புத்தக வெளியீட்டுக்கு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. கொஞ்சமென்ன... நிறையவே மெனக்கெடணும் சுரேஷ். முயற்சித்துப் பாத்திங்கன்னா புரியும். என்னை வாழ்த்திய உங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றி.

   Delete
 15. அப்போ விரைவில் உங்கள்
  சரித்திரக் கும்மி அடித்தலை
  எதிர்பார்க்கலாம் தானே ?
  அட புத்தகக் கண்காட்சி இன்னொரு
  'பதிவர் திருவிழா' ஆகி விடும் போல இருக்கே !

  ReplyDelete
  Replies
  1. ஆமாங்க... இந்த முறை பல பதிவர்களோட புத்தகங்கள் வெளிவர இருக்கிறது. அனைவரையும் அங்க சந்திக்க முடியும்கறது கூடுதல் மகிழ்ச்சி. ரசித்துப் படித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

   Delete
 16. அந்தி சாயும் நேரம்.. கொல்லி மலை முகடுகளில் நிலவுப் பெண் மெல்ல.. மெல்ல நாணத்தில் மறைத்து கொண்டு போனாள். பிருத்விராஜன் தன் புரவியின் வேகத்தை கூட்டினான். டொக்... டொக். பிருத்விராஜனுக்கு கவலை கூடியது. நாம் நாளை பட்டினத்தை சென்று அடையுமுன் அந்த ஓலைச்சுவடி மொத்தமாக பாலவர்மனின் தோழர்களால் கைப்பற்றப்பட்டு கிடைக்காமல் போய்விடுமோ என்று அச்சம் படர்ந்தது. எப்படியாவது அந்த ‘ சரிதாயணம் ஓலைச்சுவடியை’ கைப்பற்றி விட்டால் பால வர்மனின் ரகசியங்கள் வெளிப்பட்டுவிடும். பிறகு நமது ராஜ்ஜியத்தில் கொண்டாட்டம்தான்.டொக்..டொக்.. புரவியின் வேகத்தை கூட்ட.. பட்டினத்தை நோக்கி பறந்து கொண்டிருந்தது.

  ( ஹா... ஹா...!)


  ReplyDelete
  Replies
  1. அடாடா... நான் ஹீரோ கிட்டருந்து ஆரம்பிக்க ஐடியா கொடுத்தா, நீங்க ஹீரோவான என்கிட்ட திருட வர்ற வில்லன் கிட்டருந்து ஆரம்பிச்சு அசத்திட்டீங்களே... ஹி... ஹி... நீங்க எழுத்தாளரல்லவா..? அதான அருமையா எழுதி அசத்திட்டீங்க. மிக்க நன்றி உஷா.

   Delete
 17. நன்றிங்க நண்பரே என்னைப்பற்றி அக்கரைக்கொண்டு விளம்பரபடுத்திமைக்கு

  ReplyDelete
  Replies
  1. சக நண்பர்களை அறிமுகப்படுத்துவது கடமையல்லவா நண்பரே... வருகை தந்து கருத்திட்ட உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.

   Delete
 18. சரித்திரக்கதை சிரித்திரபுரம் உருவானதும் இப்படித்தானா கணேஷ்? நல்ல பதிவு. வாழ்த்துக்கள்

  ReplyDelete
 19. சரித்திரக்கதை சிரித்திரபுரம் உருவானதும் இப்படித்தானா கணேஷ்? நல்ல பதிவு. வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. சிரித்திரபுரத்தைப் பொறுத்தவரை கொஞ்சமும் சீரியஸ்னஸ் இல்லாமல் முழுக்க முழுக்க கேலி, கலாய் என்று திட்டமிட்டு எழுதியது. நான் இங்கே சொல்லியிருப்பதை சீரியஸாய் ட்ரை பண்ணினால் சுமாரான சரித்திரநாவல் வரும். பொதுவில் எனக்கு சரித்திரத்தில் ஆர்வம் உண்டு என்பதால் அதை ரசித்துப் படிப்பதுடன் கேலியும் செய்கிறேன்- நமக்குப் பிடித்தவர்களை உரிமையாய் கலாய்ப்பது மாதிரி. ரசித்துப் படித்த உங்களுக்கு என் இதய நன்றி.

   Delete
 20. கண்ணதாசன் அவர்களுக்கும் சரளா அவர்களுக்கும் என் வாழ்த்துகள்! சரித்திராயணம் வெற்றி பெறவும் வாழ்த்துகள்:)!

  ReplyDelete
  Replies
  1. எங்கள் அனைவரையும் வாழ்த்திய உங்களின் அன்பிற்கு மகிழ்வுடன் எங்களின் மனம் நிறைந்த நன்றி.

   Delete
 21. விரைவில் சரித்திர நாவல் ஏதேனும் எழுதப்போகிறீர்களா? அதற்கான ஆயத்தங்கள் தானா இவை?

  தங்களுடைய புத்தக வெளியீட்டிற்கு என் உள‌மார்ந்த வாழ்த்துக்கள்! இந்த டிஸ்கவரி புக் பாலஸ் எங்கிருக்கிறது என்று சொல்ல முடியுமா? அங்கே அனைத்துப் புத்தகங்களும் விற்கிறதா? சென்னை வ‌ரும்போது போய்ப்பார்க்க வேண்டும்!!

  ReplyDelete
  Replies
  1. இல்லை மனோம்மா. அப்படி எதுவும் விபரீத முயற்சி பண்ணிட மாட்டேன். பயப்படாதீங்கோ... இது ச்ச்சும்மா ஜாலிக்கு. டிஸ்கவரி புக் பேலஸ் சென்னை கே.கே.நகரில் பாண்டிச்சேரி கெஸ்ட் ஹவுஸ் அருகில் உள்ளது. அனைத்து பதிப்பகத்தினரின் புததகங்களையும் ஒருசேரப் பார்த்து ரசிக்கலாம், வாங்கலாம். சென்னை வரும்போது ஒரு தொலைபேசி அழைப்பு விடுத்தால் நான் உங்களுக்கு உடன் வந்து உதவத் தயாராய் உள்ளேன். (அழைக்க: 73058 36166). உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.

   Delete

 22. உங்களுக்கும், கவியாழி கண்ணதாசன் அவர்களுக்கும், கோவை மு. சரளா அவர்களுக்கும் வாழ்த்துகள்.

  சரித்திரக் கதை எழுத நீங்கள் கொடுத்திருக்கும் டிப்ஸ் அபாரம்.

  ReplyDelete
  Replies
  1. டிப்ஸ்களை ரசித்து எங்களனைவரையும் வாழ்த்திய உங்களுக்கு மனமகிழ்வுடன் என் நன்றி.

   Delete
 23. தங்களின் புத்தக வெளியீட்டிற்கு என் வாழ்த்துக்கள்.
  கவியாழி ஐயா அவர்களுக்கும் மு. சரளா அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.
  அனைத்து புத்தகங்களையும் வாங்கி படிக்க வேண்டும் என்று ஆசையாகத் தான் இருக்கிறது.
  மணிமேகலைக்கு எழுதிப் போட வேண்டும்.
  என் ஆறு புத்தகங்களையும் மணிமேகலை பிரசுரத்தில் தான் பதிப்பித்தேன்.
  கிடைத்தால் வாங்கிப் படித்தப் பாருங்கள்.

  ReplyDelete
  Replies
  1. எங்களை வாழ்த்திய உங்களுக்கு மனமகிழ்வுடன் என் நன்றி மிஸ்டர் அருணா. நிச்சயம் மணிமேகலை ஸ்டாலில் உங்கள் புத்தகத்தை சந்திக்கிறேன் நான்.

   Delete

 24. வணக்கம்!

  பால கணேசா் படைத்த எழுத்துகள்
  கோலமாய் மின்னுமெனக் கூறு!

  கவிஞா் கி. பாரதிதாசன்
  பிரான்சு

  ReplyDelete
  Replies
  1. கவிதையாய் வாழ்த்திய உங்களுக்கு மனமகி்ழ்வுடன் என் நன்றி கவிஞரே...

   Delete
  2. This comment has been removed by the author.

   Delete
 25. புத்தக பாலஸ் பற்றிய விலாசமும் அதன் கூடவே போனஸாக தங்களின் தொலைபேசி எண்ணும் தந்தத‌ற்கு அன்பார்ந்த நன்றி! சென்னை வரும்போது நிச்சயம் தங்களை அழைக்கிறேன்!

  ReplyDelete
  Replies
  1. மகிழ்வுடன் காத்திருக்கிறேன் நான்.

   Delete
 26. சரித்திரக் கவிதைகள் இப்படித்தான் உருவாகிறதோ....!

  உங்களுக்கும்,கவியாழி கண்ணதாசன் அவர்களுக்கும்,கோவை மு.சரளா அவர்களுக்கும் வாழ்த்துகள் !

  ReplyDelete
  Replies
  1. இப்படியும் உருவாக்கலாம் என்பதுதான் நான் சொல்ல வந்தது. எங்கள் அனைவரையும் மகிழ்வுடன் வாழ்த்திய உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி ஃப்ரெண்ட்!

   Delete
 27. உங்களது குறிப்புகளைப் பார்த்துவிட்டு எத்தனை பேர் சரித்திர நாவல் எழுதப் போகிறார்களோ!

  சரிதாயணம் வெளியீட்டிற்கு வாழ்த்துக்கள்.
  திரு கவியாழி அவர்களுக்கும், திருமதி மு.சரளாவிற்கும் பாராட்டுக்கள்.

  ReplyDelete
  Replies
  1. என் பதிவை ரசித்து எங்கள் அனைவரையும் வாழ்த்திய உங்களுக்கு என் இதயம் நிறை நன்றிம்மா.

   Delete
 28. தவறாக நினைக்க வேண்டாம் - திரு கவியாழி கண்ணதாசனுடைய புத்தகத்தில் மேல் அட்டை ஓவியத்தைப் பார்த்தால் கஷ்டமாக இருக்கிறது. சில சமயம் நல்ல படங்களைப் பார்த்தாலே கதையை / புத்தகத்தைப் படிக்க ஆவல் வரும். - ஜெ .

  ReplyDelete
 29. ஆஹா.... நல்ல ஐடியாவா இருக்கே கணேஷ்....

  ஆனா.. ஒரு விஷயம் - இப்படி ஜல்லியடிக்கவும் தைரியம் வேணும். :)

  புத்தக வெளியீட்டிற்கு வாழ்த்துகள். முழுப் புத்தகத்தையும் படித்து முடித்தேன்.....

  ReplyDelete
 30. நீங்க இப்படி சொன்னதுக்கு அப்பறமா நான் ட்ரை பண்ணாம இருந்தா எப்டி? நான் கூட? நான் ஒரு சரித்திரக் கதை எழுதுவேன் அத நீங்க 100 முறை படிச்சுத்தான் ஆகனும்! ###லால முடிஞ்சது!

  ReplyDelete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
 • Youtube