அவர் பரம ஏழை. ஆனால் சிவபக்தியில் செல்வந்தர். உடல் முழுவதும் திருநீறைப் பூசுவதனால் அவரின் இயற்பெயரே மறைந்து ‘பூசலார்’ என்ற பெயரே நிலைத்து விட்டது. ஈசனுக்கு ஒரு ஆலயம் எழுப்பிட வேண்டுமென்பதை தன் வாழ்நாள் லட்சியமாக எண்ணியிருந்தார் அவர். பலரிடமும் நிதி கேட்டு இறைஞ்சினார். அவருக்கு உதவிட எவரும் முன்வரவில்லை. ஏமாற்றமே மிஞ்சியது. பூசலார் ஒரு முடிவுக்கு வந்தார். அதாவது...தன் சித்தத்தில் உறையும் சிவனுக்கான ஆலயத் திருப்பணியை தன் மனதிலேயே நடத்தி தன் அபிலாஷையைப் பூர்த்தி செய்து கொள்ளத் தீர்மானித்தார்.
நல்ல நாள் ஒன்றைத் தேர்ந்தெடுத்து, ஒரு மரத்தடியில் தியானத்தில் அமர்ந்தார். மூடிய கண்களுக்குள் முழுமையாக வாழத் தொடங்கினார். ஆகம விதிகளின் படி ஆலயம் அமையத் திட்டமிட்டார்; பாவனையிலேயே கல் தச்சர்களை வரவழைத்து கலை நயம் மிக்க சிற்பங்களை உருவாக்கினார்; பிராகாரங்களை எழுப்பினார்; தச்சர்களை வரவழைத்து ஆலயத்தின் கதவுகளை செதுக்கினார். இரவு, பகல் பாராமல் இருதயத்திலேயே கோயில் எழுப்பும் இனிய பணியில் ஈடுபட்டார். இறுதியில் கும்பாபிஷேகத்துக்கான நாள் குறித்து, கைலைநாதனை அங்கே குடியேறுமாறு மனம் குவித்து வேண்டுகோள் விடுத்தார்.
அதே நேரத்தில்... நகரங்களில் சிறந்த காஞ்சியில் கைலாசநாதரின் கோயிலை அழகுறக் கட்டி முடித்திருந்தான் ராஜசிம்ம பல்லவன். கும்பாபிஷேகத்திற்காக நகரமே விழாக்கோலம் பூண்டிருக்க அன்றிரவு மன்னனின் கனவில் தோன்றிய சிவன்- தான் அதே தினத்தில் திருநின்றவூரில் பூசலார் என்ற பக்தர் எழுப்பும் ஆலயத்தில் உறையப் போவதாகவும், வேறொரு நாளில் பல்லவ்ன கும்பாபிஷேகம் நடத்தட்டும் என்றும் கூறி மறைந்தார். கண் விழித்த பல்லவனுக்கு மனமெல்லாம் வியப்பு. பல ஆண்டுகள் இரவு பகல் பாராது உழைத்து தான் நிர்மாணித்த ஆலயத்தைவிட திருநின்றவூர் ஆலயத்தில் அப்படியென்ன சிறப்பு இருக்கிறது என்று இறைவன் அங்கு செல்லத் தீர்மானித்தார் என்று தெரிந்து கொள்ளும் ஆவலில் தன் ஆலய கும்பாபிஷேகத்தை நிறுத்திவிட்டு ஆன்றோர் புடைசூழ திருநின்றவூர் வந்தான்.
நல்ல நாள் ஒன்றைத் தேர்ந்தெடுத்து, ஒரு மரத்தடியில் தியானத்தில் அமர்ந்தார். மூடிய கண்களுக்குள் முழுமையாக வாழத் தொடங்கினார். ஆகம விதிகளின் படி ஆலயம் அமையத் திட்டமிட்டார்; பாவனையிலேயே கல் தச்சர்களை வரவழைத்து கலை நயம் மிக்க சிற்பங்களை உருவாக்கினார்; பிராகாரங்களை எழுப்பினார்; தச்சர்களை வரவழைத்து ஆலயத்தின் கதவுகளை செதுக்கினார். இரவு, பகல் பாராமல் இருதயத்திலேயே கோயில் எழுப்பும் இனிய பணியில் ஈடுபட்டார். இறுதியில் கும்பாபிஷேகத்துக்கான நாள் குறித்து, கைலைநாதனை அங்கே குடியேறுமாறு மனம் குவித்து வேண்டுகோள் விடுத்தார்.
அதே நேரத்தில்... நகரங்களில் சிறந்த காஞ்சியில் கைலாசநாதரின் கோயிலை அழகுறக் கட்டி முடித்திருந்தான் ராஜசிம்ம பல்லவன். கும்பாபிஷேகத்திற்காக நகரமே விழாக்கோலம் பூண்டிருக்க அன்றிரவு மன்னனின் கனவில் தோன்றிய சிவன்- தான் அதே தினத்தில் திருநின்றவூரில் பூசலார் என்ற பக்தர் எழுப்பும் ஆலயத்தில் உறையப் போவதாகவும், வேறொரு நாளில் பல்லவ்ன கும்பாபிஷேகம் நடத்தட்டும் என்றும் கூறி மறைந்தார். கண் விழித்த பல்லவனுக்கு மனமெல்லாம் வியப்பு. பல ஆண்டுகள் இரவு பகல் பாராது உழைத்து தான் நிர்மாணித்த ஆலயத்தைவிட திருநின்றவூர் ஆலயத்தில் அப்படியென்ன சிறப்பு இருக்கிறது என்று இறைவன் அங்கு செல்லத் தீர்மானித்தார் என்று தெரிந்து கொள்ளும் ஆவலில் தன் ஆலய கும்பாபிஷேகத்தை நிறுத்திவிட்டு ஆன்றோர் புடைசூழ திருநின்றவூர் வந்தான்.
![]() |
ஹ்ருதயாலீஸ்வரர் |
என்ன ஆச்சர்யம்! கும்பாபிஷேகம் நடக்கும் ஊர் மாதிரி எந்தப் பரபரப்புமில்லாமல் ஊர் அமைதியாக இருந்தது. அங்குள்ளவரிடம் விசாரித்தான் மன்னன். ‘‘பூசலாரா? அவர் சிவனேன்னு மரத்தடில உக்காந்து தியானம் பண்ணிட்டிருக்காரே தவிர, கோயில் எதும் கட்டின மாதிரி தெரியலையே’’ என்று பதில் கிடைத்தது. பூசலார் இருந்த மரத்தடியை அடைந்த மன்னனும் மற்றையோரும் அங்கு ஓர் அதிசயக் காட்சியைக் கண்டனர். கண்மூடி அமர்ந்திருந்த பூசலாரின் இதயப் பகுதியில் தெய்வீக ஒளி வெள்ளம். அங்கே மானசீகமாக நிர்மாணிக்கப்பட்டிருந்த ஆலயத்தில் வேள்வியும், மற்ற மங்கலச் சடங்குகளும் மனதளவில் நடந்தேறுவதை அனைவரும் காண முடிந்தது. உரிய நேரத்தில் தனக்கான சந்நிதியில் நமச்சிவாயன் அனைவரும் பார்க்க குடியேறினான். கைலாசநாதனைக் கண்குளிரத் தரிசித்து மன்னனும் மற்றையோரும் பேறு பெற்றனர். படைபலம் மிக்க பல்லவன், எளியவரான பூசலாரின் கால்களில் விழுந்து, பணிந்து அவர் இதயத்தில் எழுப்பிய அதே கோயிலை நிஜத்திலேயே நிர்மாணித்துத் தர அனுமதி கேட்டான்.
பூசலார் புளகாங்கிதம் அடைந்தார். அவர் அருளாசியுடன் திருநின்றவூரில் (சென்னையிலிருந்து 33 கி.மீ. தூரம்) ஆலயம் நிர்மாணிக்கப்பட்டது. பூசலாரின் இதயத்தில் எழுந்தருளிய காரணத்தால் ஈசன், இருதயாலீஸ்வரன் என்று பெயர் கொண்டு இவ்வாலயத்தில் எழுந்தருளினார்.
பூசலார் புளகாங்கிதம் அடைந்தார். அவர் அருளாசியுடன் திருநின்றவூரில் (சென்னையிலிருந்து 33 கி.மீ. தூரம்) ஆலயம் நிர்மாணிக்கப்பட்டது. பூசலாரின் இதயத்தில் எழுந்தருளிய காரணத்தால் ஈசன், இருதயாலீஸ்வரன் என்று பெயர் கொண்டு இவ்வாலயத்தில் எழுந்தருளினார்.
ஆலய தரிசனம செய்வதற்கு முன்பு இந்த ஆலயத்தின் சிறப்பொன்றைச் செப்பிட விழைகின்றேன். இருதயாலீஸ்வரர் எழுந்தருளியிருக்கும் கருவறையின் மேற்கூரையில் இதய வடிவில் நான்கு பிரிவுகளுடன் இதயக் கமலம் செதுக்கப்பட்டுள்ளது. இதய நோயால் துன்புற்றிருப்பவர்கள் இங்கு வந்த இறைவனை மனமுருக வேண்டி பிரார்த்தனை செலுத்தினால் அந்நோய்களிலிருந்து விடுபடுகிறார்கள் என்பது மற்றொரு சிறப்பு. இப்போது ஆலயத்தினுள் நுழைவோம்.
ஆலயம் மூன்று பிராகாரங்களைக் கொண்டுள்ளது. கிழக்குக் கோபுரம் வழியே நுழைந்ததும் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கொடிமரம். அடுத்து பலிபீடம். அதையடத்து சிறு தனி மண்டபத்தில் நந்திதேவரின் திருவுருவம். விநாயகரும், வேலவனும் இருபுறமும் வாசம் செய்ய, நேர் எதிரில் இறைவனின் இனிய சன்னிதி. கருவறை வாயிலில் மற்றொரு நந்தி மற்றும் பலிபீடம் இருக்கின்றன. விரும்பி வழிபட்ட பக்தனின் இதயத்தில் குடியேறிய இருதயாலீஸ்வரன் இங்கே லிங்க ரூபத்தி்ல் காட்சி அருள்கிறார்.
ஈசனை இதயபீடத்தில் அமர்த்தி கும்பாபிஷேகமே நடத்திப் பார்த்த பூசலாருக்கு கருவறையிலேயே இடம் அளிக்கப்பட்டுள்ளது. இறைவனுக்கு இடதுபுறம் நின்றிருக்கிறார் பூசலார். லிங்கமே அவர் பக்கம் சற்று சாய்ந்திருப்பது போல் தோற்றம் தருகிறது. லிங்கத்தின் நெற்றியில் மூன்று பட்டையாகத் திருநீறு. சரவிளக்குகளில் பூத்திருக்கும் தீச் சுடர்கள். பூசலாரின் வலது கரத்தில் சின் முத்திரை, இடது கரம் இதயத்தின் அருகில் இருக்க, அதி்ல சிறு லிங்கமாக இருதயாலீஸ்வரன்.
![]() |
பூசலார் |
உமாபதியை வணங்கி, சந்நிதியை வலம் வருகையில் அது கஜபிருஷ்டம் என்கிற அரைவட்ட வடிவில் அமைந்துள்ளதை உணர முடிகிறது. சந்நிதியின் வெளிச் சுவரில் தென்புறத்தில் திருமுகத்தில் குமிழ் சிரிப்புடன் தக்ஷிணாமூர்த்தி, மேற்கில் மகாவிஷ்ணுவின் பிம்பம். அடுத்திருப்பது சிருஷ்டிக் கடவுள் பிரம்மன். வடபுறத்தில் துன்பங்களைத் துரத்தி அடிக்கும் அன்னை துர்க்கை குடி கொண்டிருக்கிறாள்.
மூலிகை வண்ணங்களால் எழுதப்பெற்ற ஆலயத்தின் மேற்கூரையிலுள்ள ஓவியங்களை ரசித்தபடி கடந்து வந்தால், சந்நிதியின் தென்மேற்கு மூலையில் ஸ்தல விநாயகர், வடமேற்கு மூலையில் வள்ளி-தெய்வானையுடன் வரம்தரும் சிவசுப்ரமணியர். வடக்கில் சிவகாமி சமேதராக விளங்கும் நடராஜருக்கான தனி அறை. அருகிலேயே பள்ளியறை. அதையடுத்து ஸ்ரீ பைரவர். வெளியே வந்ததும் இவ்வாலயத்தை நிர்மாணித்துத் தந்த ராஜசிம்ம பல்லவனின் சிற்பம் கைகூப்பிய நிலையில் அழகுற மிளிர்கிறது.
இருதயாலீஸ்வரரின் ஆலயத்தில் மரகதாம்பிகை என்ற பெயரில் தனிச் சந்நிதியில் அன்னை உறைகிறாள். தென்திசை நோக்கிய நின்ற திருக்கோலம். நான்கு திருக்கரங்கள். மேல் இரு கரங்களில் மலரும், பாசமும். கீழ் இரு கரங்களில் அபயஹஸ்த முத்திரை, வலது கரத்தில் அன்போடு வீற்றிருக்கும் கிளி. அன்னைக்கு அர்ச்சித்த மலர்களும், குங்குமமும் பிரசாதமாக வழங்கப்படுகின்றன. பொதுவாக ஈசானிய மூலையில் காணப்படும் நவக்கிரகங்கள் இந்த ஆலயத்தில் அக்னி மூலையில் அமைக்கப்பட்டுள்ளன.
இத்தனை பிராகாரங்களையும் இறைச் சிற்பங்களையும், கலை நுணுக்கமுடன் மனதிலேயே அமைத்து வழிபட்டு, இறைவனருள் பெற்ற பூசலார் நாயனாரைக் குறித்து மனதினுள் வியக்காமல் இருக்க முடியவில்லை. பல்லவன் பாங்குறப் படைத்த இந்த ஆலயத்தை தரிசித்து முடிந்து இல்லம் திரும்புகையில் மனமெங்கும் மகிழ்வும் அமைதியும் வியாபித்திருக்கும். ஒரு முறை சென்று தரிசித்து, உணர்ந்து பாருங்கள்.
இருதயாலீஸ்வரரின் ஆலயத்தில் மரகதாம்பிகை என்ற பெயரில் தனிச் சந்நிதியில் அன்னை உறைகிறாள். தென்திசை நோக்கிய நின்ற திருக்கோலம். நான்கு திருக்கரங்கள். மேல் இரு கரங்களில் மலரும், பாசமும். கீழ் இரு கரங்களில் அபயஹஸ்த முத்திரை, வலது கரத்தில் அன்போடு வீற்றிருக்கும் கிளி. அன்னைக்கு அர்ச்சித்த மலர்களும், குங்குமமும் பிரசாதமாக வழங்கப்படுகின்றன. பொதுவாக ஈசானிய மூலையில் காணப்படும் நவக்கிரகங்கள் இந்த ஆலயத்தில் அக்னி மூலையில் அமைக்கப்பட்டுள்ளன.
இத்தனை பிராகாரங்களையும் இறைச் சிற்பங்களையும், கலை நுணுக்கமுடன் மனதிலேயே அமைத்து வழிபட்டு, இறைவனருள் பெற்ற பூசலார் நாயனாரைக் குறித்து மனதினுள் வியக்காமல் இருக்க முடியவில்லை. பல்லவன் பாங்குறப் படைத்த இந்த ஆலயத்தை தரிசித்து முடிந்து இல்லம் திரும்புகையில் மனமெங்கும் மகிழ்வும் அமைதியும் வியாபித்திருக்கும். ஒரு முறை சென்று தரிசித்து, உணர்ந்து பாருங்கள்.
|
|
Tweet | ||
அருமையான ஆலயப்பகிர்வுக்கு இதயம் நிறைந்த பாராட்டுக்கள்..
ReplyDeleteஆலய தரிசனத்தை ரசித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.
Deleteஇதைத் தாயுமானவர் தன் பராபரக்கண்ணியில் பாடலாகப் பாடியுள்ளார். அப்பாடல்,
ReplyDelete‘நெஞ்சகமே கோவில் நினைவே மஞ்சன நீர் அன்பே சுகந்தம்
பூசனைக் கொள்ள வாராய் பராபரமே!’
பதிவிற்கு நன்றிகள்!
அட... எழுதும்போது எனக்கு இது நினைவுக்கு வரல்லியே... நினைவுபடுத்தியதற்கும் படித்து ரசித்ததற்கும் என் மனம் நிறை நன்றி ஸ்ரீனி.
Deleteமன்னிக்கவும் அவசரத்தில்/ஆர்வக் கோளாரில் தவறாக எழுதிவிட்டேன். சரியான வரிகள் இதோ...
Delete‘நெஞ்சகமே கோவில் நினைவே சுகந்தம் அன்பே
மஞ்சன நீர் பூசனைக் கொள்ள வாராய் பராபரமே!’
[அன்பு மழையாகப் பொழிய அது மஞ்சன நீராகத் தானே ஆகும் சுகந்தமாக எப்படி இருக்கும். எதுகை வேறு உதைக்கிறது. அதைக் கூட கவனிக்கவில்லை]
ஆலய தரிசனம் ஒரு அருமையான பகிர்வு
ReplyDeleteஇருதயாலீஸ்வர் ஆலயம் பற்றி அறிந்து கொண்டேன் கணேஷ் சார்
பூசலார் நாயனாரைக் குறித்து மனதினுள் வியக்காமல் இருக்க முடியவில்லை.
கண்டிப்பாக
ஆலய தரிசனத்தை ரசித்த உங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றி.
Deleteஅருமையாக ஆலய திருப்பணி செய்துள்ளீர்கள் .
ReplyDeleteதரிசித்து வர வெகு நாட்களாக எண்ணம்
தொலைக்காட்சியில் கண்டது முதல் .
அழகானதொரு ஆன்மீகப் பதிவிற்கு
பாராட்டுக்கள் . !
சென்று தரிசித்து மகிழுங்கள் தோழி. உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.
Deleteசிறப்பான ஆலய பகிர்வு... நன்றி... tm3
ReplyDeleteரசித்துப் படித்த உங்களுக்கு என் மனம் நிறை நன்றி.
DeleteVery good STHALA PURANAM. While reading we wish to be there physically and when we reach chennai from here, other priorities occupy our list and this takes the back seat. Hope to see such places after retirement.
ReplyDeleteஆலய தரிசனம் நீங்க சொன்ன மாதிரி ரிடையர்மென்ட்டுக்குப் பிறகுகூட ஆனந்தமா செய்யலாம்தான். வெல்கம் டு சென்னை. ரசித்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.
Deleteநானும் திரு நின்ற ஊருக்கு (திருநின்றவூர்) சென்று வர பல நாட்களாக நினைத்துக்கொண்டு இருக்கிறேன் ஆனால் ஏதோ காரணத்தால் போக முடியவில்லை. தங்கள் பதிவைப் படித்ததும் மூலம் நேரில் சென்று வந்ததைப்போல் உணர்ந்தேன். நன்றி!
ReplyDeleteநேரில் சென்று வந்த உணர்வைப் பெறற் உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.
Deleteநல்லதொரு பக்திபூர்வமான பதிவு, பகிர்வு. இன்னும் ரெண்டு புகைப்படம் போட்டிருக்கலாம்! :))
ReplyDeleteஓவர்டோஸா ஆயிடக் கூடாதேன்னு நினைச்சேன், இப்ப நீங்க சொல்றதால அடுத்த முறை ஆன்மீகப்பக்கம் வரும்போது நிறையப் படங்களோட வர்றேன் ஸ்ரீராம். மிக்க நன்றி.
Deleteஏதோ போனோம் வந்தோம்னு இல்லாம உணர்ந்து எழுதியிருக்கிங்க சிறப்பானதொரு அலசல்.
ReplyDeleteரசித்ததை எழுதியதை ரசித்துப் படித்த தென்றலுக்கு மகிழ்வுடன் என் நன்றி.
Deleteஅற்புதமான ஆலய தரிசனம். மிக்க நன்றி.
ReplyDeleteஇராஜராஜேஸ்வரி அவர்களும் நீங்களும் தானே எனக்கு இன்ஸ்பிரேஷன். நீங்க ரசிச்சதுல கூடுதல் மகிழ்ச்சி எனக்கு. மிக்க நன்றி.
Deleteதிருநின்றவூர் ஆலயத்தை அப்படியே கண்முன் நிறுத்திவிட்டீர்கள்.ஆலயம் உருவான கதையும் அருமை
ReplyDeleteஆலயப் பகிர்வை ரசித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.
Deletein. ஐ .com ஆக மாற்றி இருக்கிறீர்கள் போலிருக்கிறது.
ReplyDeleteஇப்பதான் கவனிக்கறீங்களா முரளி? நான் மாற்றவில்லை. ரீடைரக்ட் ஆகற மாதிரி ஒரு ட்ரிக் பண்ணியிருக்கேன். சொல்லித் தந்தவங்க சகோதரி பொன்மலர். அவங்களுக்கு மனம் நிறை நன்றி. இந்த லிங்கில பாருங்க,
Deletehttp://ponmalars.blogspot.com/2012/03/stop-blogger-redirecting-country-wise.html
”பூசலார்” கதை கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனா, கோவில் இருப்பது தெரியாது. அதுவும் அருகாமையில் இருப்பது அறியாதது மனதுக்கு வருத்தமளிக்கின்றது. அடுத்த முறை சென்னை வரும்போது ஆலய தரிசனம் செஞ்சுட்டு வரனும்ண்ணா.
ReplyDeleteஅவசியம் தரிசிக்கலாம்மா. நிறைய நேரத்தை வெச்சுக்கிட்டு சென்னைக்கு வந்தால் கூட்டிட்டுப் போறேன். சரியா...? மிக்க நன்றி.
Deleteஅற்புதமான ஆலயப் பகிர்வுக்கு நன்றி.பாராட்டுக்கள்
ReplyDeleteரசித்துப் பாராட்டிய உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.
Deleteதகவல்களுக்கு நன்றி. தரிசன அனுபவத்தை அழகாகச் சொல்லியுள்ளீர்கள்>
ReplyDeleteரசித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.
Delete... நல்லது தலைவரே...
ReplyDeleteஆன்மீகத்தை ரசித்த உங்களுக்கு அகமகிழ்வுடன் என் நன்றி.
Deleteஇடுகையை வாசித்து முடித்தபோது ‘அன்பே சிவம்’ என்ற வார்த்தைகளுக்குப் புது அர்த்தம் புரிந்தது போலிருந்தது. கட்டுரையும், சித்திரங்களும் அருமை!
ReplyDeleteஸ்ரீராம் சொன்னது போல சித்திரங்கள் கூடப் போட்டிருக்கலாம் போலருக்கேண்ணே... நீங்களும் ரசிச்சிருக்கீங்க. உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.
Deleteகஜபிருஷ்டமா? ஓகே. :)
ReplyDeleteஆலய அமைப்பில் ஒரு வகையை அப்படிச் சொல்வாங்க. ஹி... ஹி... நன்றி ஸார்.
Deleteநல்லதொரு பழமையான ஆலயத்தை அறிமுகம் செய்து அசத்திவிட்டீர்கள்! நன்றி!
ReplyDeleteரசித்துப் படித்த உக்ஙளுக்கு என் இதயம் நிறை நன்றி.
Deleteஆலய தரிசனம் அற்புதம்
ReplyDeleteஆலய தரிசனத்தை ரசித்த உங்களுக்கு என் மனம் நிறை நன்றி.
Deleteவீட்டில் இருந்தபடியே ஆலய தரிசனம் கிடைத்தது.நன்றி
ReplyDeleteஉங்களின் ரசிப்பில் மகிழ்கிறது உள்ளம். உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.
Deleteஆலயப் பகிர்வுக்கு நன்றி...
ReplyDeleteரசித்துப் படித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.
Deleteபூசலார் கதை கேள்விப்பட்டது. ஆனால் கோவில் கேள்விப்பட்டதில்லை. செல்ல வேண்டும்... பார்க்கலாம்....
ReplyDeleteரசித்துப் படித்த உங்களுக்கு மகிழ்வுடன் என் நன்றி.
Deleteஎன் அப்பா சிவ பக்தர். தினமும் ஈஸ்வரனை மனமுருக பிரார்த்திப்பவர். அவரிடம் இந்த பூசலார் கதை தெரியுமா என்று கேட்கிறேன். பூசலார் பற்றி தெரிந்து கொண்டேன். நன்றி!
ReplyDeleteஅவசியம் கேட்டுப் பாருங்கள். இந்தப் பகிர்வினை மேலும் ரசிப்பீர்கள். உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.
Delete
ReplyDeleteபூசலாரின் சரித்திரத்தை படித்தவுடன் கன்னட மொழியில் 'பசவண்ண வசன' என்ற நான்கு வரிக் கவிதை நினைவுக்கு வந்தது.
உள்ளவரு ஷிவாலயவ மாடுவரு - பணம் உள்ளவர்கள் சிவனுக்கு ஆலயம் எழுப்புவார்கள்.
நானேன மாடுவே - நான் என்ன பண்ணுவேன்?
படவனையா - ஏழை ஐயா!
என்ன காலே கம்ப - என் கால்களே தூண்கள்
தேஹவே தேகுல - உடல் தேவன் வசிக்குமிடம்
சிர ஹொன்ன கலசவையா - தலையே பொற் கலசம்
கூடல சங்கம தேவ! கேளையா! - கூடல சங்கமம் என்ற இடத்தில் குடி கொண்டுள்ள இறைவனே கேள்!
ஸ்தாவரகளி உண்டு / ஜங்கமகளிவில்ல
என்று முடியும் இந்தப் பாடல்.
பசவண்ண - வும் பூசலாரைப் போல மனதினுள்ளே ஆலயம் எழுப்பியவர்தான்.
பகிர்வுக்கு பாராட்டுக்கள்!
ஆஹா... இந்தப் பாடலும் ரொம்ப அருமையா இருக்குதே... இப்படி ஒரு ஒற்றுமை தமிழ்நாட்டு - கன்னட பக்தர்களுக்குள்ள இருக்கறது மிக விய்ப்பா இருக்கு. பகிர்ந்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.
Deleteஅருமை. அருமையாகப் பதிவு செஞ்சுருக்கீங்க.
ReplyDeleteஒருமுறை எட்டடி ராமர் பார்க்க திருநின்றஊர் போயிருக்கேன். அப்போ இந்தக்கோவிலைப்பற்றித் தெரியாது. அப்புறம்தான் பின்னூட்டத்தில் தகவல் தெரிஞ்சது.
கடவுள் அருள் இருந்தால் அடுத்த முறை சென்னைப்பயணத்தில் தரிசனம் செய்யணும்.
உங்களுக்கு ரெண்டு சுட்டிகள்:-)
http://thulasidhalam.blogspot.com/2010/06/blog-post_10.html
http://thulasidhalam.blogspot.com/2010/06/blog-post_11.html
ஆம்.. அங்கே ராமர் ஆலயமும் பிரசித்தம்தான். ‘திரு’ நின்ற ஊராச்சே. இந்தச் சுட்டிகளுக்கு நிச்சயம் ஒரு டூர் அடிக்கறேன். மிக்க நன்றி டீச்சர்.
Deleteமனமே ஆலயம்
ReplyDeleteஉதிக்கும் நல் எண்ணங்களே
தெய்வம்
என்பது போல பூசலாரின்
எண்ணமும் இங்கே ஆலயமாய்
உருமாற்றம்....
மனம் நிறைந்த பதிவு நண்பரே..
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
முன்னதான தீப ஒளித்திருநாள் நல்வாழ்த்துக்கள்..
படித்து ரசித்த உங்களுக்கு உவப்புடன் என் நன்றி மற்றும் உங்களுக்கும உங்கள் குடும்பத்தினருக்கும என் இதயம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துகள் மகேன்.
Deleteமிகவும் மகிழ்ச்சியாகவும் நிறைவாகவும் இருக்கிறது முனைவரையா தமிழறிந்த தங்கள் மனதில் எனக்கும இடம் இருப்பதில். மகிழ்வுடன் என் நன்றி.
ReplyDeleteஇருதயலீஸ்வரர் தல வரலாறை மிக அருமையாக கூறி இருகிறீர்கள். எல்லாம் எழுத்தாளர்கள் சுபா வுடன் தங்கள் கொண்டிருக்கும் நட்பு என்றே நினைக்கிறன்.... நிச்சயமாக நீங்களும் தல வரலாறு புத்தகங்கள் உங்கள் நடையில் எழுதினால் மிகப் பெரிய வெற்றி கிடைக்கும் என்பது திண்ணம் வாத்தியாரே
ReplyDeleteஇருதயாலீஸ்வரர் ஆலயம் பகிர்வு அருமை. தலவரலாறு தெரிந்துகொண்டோம்.
ReplyDeleteபூசலார் நாயனாரைக் குறித்து மனதினுள் வியக்காமல் இருக்க முடியவில்லை. \\ அருமையான தொகுப்பு அந்த ஈசன் எல்லோரையும் காப்பாற்றட்டும்
ReplyDeleteஅடிக்கடி தேடுதலின் போது எனக்கு கை கொடுப்பவர் தாங்கள் தான். அற்புதமான பதிவு.நன்றி.
ReplyDeleteமுனைவர்.எஸ்.வெள்ளையா, கோவை.