Friday, January 17, 2014

என்றென்றும் எம்.ஜி.ஆர்!

Posted by பால கணேஷ் Friday, January 17, 2014
வாத்யார் சொன்னவை : (தொகுத்தது: ‘நான் ஆணையிட்டால் - விகடன் பிரசுர வெளியீடு’ மற்றும் ‘எம்.ஜி.ஆர். பேட்டிகள் - மனோன்மணி பதிப்பக வெளியீடு’ இரண்டிற்கும் ஆசிரியர்: எஸ.கிருபாகரன்)

* பக்தி உள்ளவர்கள் சாமி கும்பிட வேண்டும் அல்லது வேண்டாம் என்று நான் சொல்லத் தயாராக இல்லை. ஆனால் கடவுளின் பெயரால் ஏமாற்ற நினைக்காதீர், மோசடிகள் செய்ய முயலாதீர் என்பதே என் வேண்டுகோள். ஒன்றே குலம், ஒருவனே தேவன் - இதுதான் என் கொள்கை. (மதிஒளி 15.12.1962 - மருதமலை முருகன் கோயிலில பேசியது)

* நடிக்கக் கூடியவர்கள், எழுத்துத் திறமை படைத்தவர்கள் ஆயிரக்கணக்கில் நாட்டில் இருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு வவய்ப்பு இல்லை. காரணம் அவர்களுக்கு விளம்பம் இல்லை. விளம்பரம் வேண்டும் என்றால் அவர்களுக்கு வேலை கிடைக்க வேண்டும். அவர்கள் திறமையைப் பயன்படுத்த வேண்டும். ஆனால் திறமையைப் பயன்படுத்த வேண்டும் என்றால் அவர்களுக்கு விளம்பரம் இருக்க வேண்டும் என்ற நிலை. திருமணம் ஆனால்தான் பைத்தியம் தீரும், பைத்தியம் தீர்ந்தால்தான் திருமணம் ஆகும் என்ற இந்த நிலைதான் நாட்டில் இருக்கிறது. (தென்றல் திரை, 05.11.57) 


* ‘நீங்கள் விரும்புகிறபடியெல்லாம் படத்தின் கதைகளை மாற்றினால் பணம் போட்டுப் படம் எடுப்பவர்களின் கதி என்ன ஆவது?’ என்ற கேள்விக்கு, ‘‘ஒன்றும் ஆகிவிடாது. என்னுடைய ஆலோசனையைக் கேட்டு எடுத்த படங்கள் நன்றாக வெற்றி பெற்றுள்ளன. ‘மதுரை வீரன்’ படத்திள்ள பல காட்சிகளுககும், கர்ண பரம்பரைக் கதைக்கும் சம்பந்தமில்லை. பழைய கதையில் வெள்ளையம்மாள் என்ற பாத்திரம் படுமோசமாக சிருஷ்டிக்கப்பட்டிருந்தது. அதன் தயாரிப்பாளர் என் ஆலோசனைக்கு செவி சாய்த்தார். படம் வெற்றி பெற்றது. ‘மலைக்கள்ள’னிலும் இவ்வாற என் யோசனைக்கு மதிப்பு தந்தார்கள். ‘அலிபாபா’விலும் என்னுடைய யோசனைகள் உபயோகமாக இருந்தன. இதிலிருந்து என் அரசியல் கொள்கைகளை நான் நடிக்கும் படங்களில் திணிப்பதாக முடிவுகட்டி விடாதீர்கள். நான் முதலில் கலைஞன், பிறகுதான் மற்றவை என்ற ரீதியிலேயே இவற்றைக் கூறகிறேன். என் அனுபவத்தை அவர்கள் உபயோகித்துக் கொள்ள அனுமதிக்கிறேன். அவ்வளவுதானே! (தென்னிந்திய சினிமா பத்திரிகையாளர் சந்திப்பில் அளித்த பேட்டியிலிருந்து)

* உள்ளம் எந்த அளவுக்கு உறுதியாக இருக்க வேண்டுமோ, அந்த அளவுக்கு உடலும் உறுதியாக இருந்தால்தான் நாம் காரியங்களை நல்ல முறையில் கவனிக்க முடியும். ஆகவே நடிப்புக்காக வருகிற அன்பர்கள் உடற்பயிற்சியையும் முக்கியமாகக் கொள்ள வேண்டும். (தென்றல் திரை, 05.11.57)

* ‘உங்கள் வயதுக்கு மிகவும் குறைந்த வயது கொண்ட இளைஞனாக நீங்கள் நடிப்பது பொருத்தமாகுமா?’ என்ற கேள்விக்கு, ‘‘திரையில் நீங்கள் என்னைப் பார்க்கும்போது இளைஞனாக நான் தோன்றுகிறேனா இல்லையா என்பதுதான் என் கேள்வி. இருபது வயது இளைஞன் ஐம்பது வயதுக்காரராக நடித்தால் பாராட்டுகிறீர்கள் அல்லவா? நான் இருபது வயது வாலிபனாக நடித்தால் ஏன் பாராட்டக் கூடாது? அதற்குப் பெயர்தானே நடிப்பு?’’ (‘இதயவீணை’ படப்பிடிப்பில் எடுத்த பேட்டியிலிருந்து)

* ‘‘என் மறைவிற்குப் பிறகு என்னைப் பற்றிப் புரிந்து கொள்வார்கள் என்று பேசி இருக்கிறீர்களே, இப்படிப்பட்ட வார்த்தைகளைக் கூறி மனதைப் பதற வைக்க வேண்டுமா?’’ என்ற கேள்விக்கு, ‘‘தோற்றம் இருந்தால் மறைவு இருக்கும். வளர்ச்சி இருந்தால் தளர்ச்சி இருக்கும். இளமையிருந்தால் முதுமையிருக்கும். பிறப்பிருந்தால் இறப்பிருந்தே தீரும். எனவே இளைஞர்கள் ஒருவனுடைய கொள்கையிலும், அதைச் செயல்படுத்தும் முறைகளிலும் உண்மையான பற்று வைத்திருந்தார்களேயானால் அவைகளைத் தாங்களும் செயல்படுத்திக் காப்பாற்றுவதற்கு, மேலும் வளர்ப்பதற்குத் தயாராகிக் கொள்ள வண்டும் என்பதற்காக நீங்கள் சொன்ன வார்த்தைகளை வெளியிட்டேன். ஒரு மனிதன் மறைந்தாலும் கொள்கை வளர்ந்து கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் அந்தக் கொள்கையைத் தந்த பெயரும் புகழும் காப்பாற்றப்படும். எனக்குப்பின் உங்களைப் போன்றவர்களின் நம்பிக்கையைப் பெற்றவர்கள் வேறு யாரும் இல்லை என்கிற நிலையில் கழகத்தை விட்டு வைப்பேனேயானால் அது அமரர் பேரறிஞர் அண்ணாவிற்குச் செய்கின்ற மிகப் பெரிய துரோகம் என்று நான் கருதுகிறேன்.


ன்னால் மறக்க முடியாதவர் எம்.ஜி.ஆர். செட்டுக்குள்ளே அவர் வர்றாருன்னாலே அவ்வளவு அமர்க்களப்படும். ஆனா அவர் ரொம்ப சாது. அவரைச் சுத்தி இருக்கறவங்க ஷூட்டிங் சமயத்துல ஆடோ ஆடுன்னு ஆடுவாங்க. என் மேல் எப்பவுமே எம்.ஜி.ஆருக்கு நல்ல மரியாதை உண்டு. நான் அவரை ‘மிஸ்டர் ராமச்சந்திரன்’ அப்படின்னுதான் கூப்பிடுவேன். என் குரலைக் கேட்டதும் இயல்பா புன்னகை உதிர்ப்பார். எந்தப் படம்னு எனக்குச் சரியா ஞாபகம் இல்ல. எம்.ஜி.ஆர். ஹீரோ. நான் ஹீரோயின். வழக்கம் போல நம்பியார்தான் வில்லன். அன்னிக்கு ஷூட் பண்ண வேண்டிய சீன் இதுதான்: என்னை நம்பியார் கிட்ட இருந்து காப்பாத்தறதுக்காக எம்.ஜி.ஆர். அவரோட கத்திச் சண்டை போடணும். நான் பயந்த மாதிரி உடம்பு நடுங்கணும். அன்னிக்குன்னு பார்த்து எம்.ஜி.ஆரும் நம்பியாரும் ரீடேக் வாங்கிட்டே இருக்காங்க. காட்சிக்காக நடுங்குற மாதிரி நடிச்சு நடிச்சு எனக்கு ரொம்ப வெறுப்பாயிடுச்சு. எத்தனை முறை வசனம் எதுவமே இல்லாம நடுங்குற மாதிரி நடிச்சுக்கிட்டே இருக்க முடியும்? நேரா எம்.ஜி.ஆர். கிட்டப் போனேன். ‘‘மிஸ்டர் ராமச்சந்திரன்! காலையில இருந்து கத்திச் சண்டை போட்டுக்கிட்டே இருக்கீங்க. ஆனா என்னைக் காப்பாத்த மாட்டேங்கறீங்க. பேசாம அந்தக் கத்தியை என்கிட்டக் குடுங்க. நானே என்னைக் காப்பாத்திக்கறேன். நானா, நம்பியாரான்னு ஒரு கை பாத்திடுறேன்’’ என்று போலியான எரிச்சலோடு நான் சொன்னதுதான் தாமதம்... வெள்ளிக்காசு கொட்டின மாதிரி எம்.ஜி.ஆரும், நம்பியாரும் சேர்ந்து சிரிச்சாங்க. நம்பியார் வாய்விட்டுச் சிரிச்சதை நான் அன்னிக்குத்தான் பார்த்தேன்.
-பானுமதி ராமகிருஷ்ணா
ஆ.வி.தீபாவளி மலர் 2003-ல் இருந்து...


52 comments:

 1. இதை பானுமதி முன்பே பல முறை சொல்லியிருக்கிறார்.
  யேசுவைக் கும்பிடுவதைப் போல்.. ஓ என் பார்வையில் கோளாறு.
  ஆமா.. அம்மாவுடன் ஒரு படமும் காணோம்.. மின்னல் கலைஞர் கட்சியோ?

  எம்ஜிஆர் நினைவுகள் நன்று.

  ReplyDelete
  Replies
  1. பானுமதி சொன்னது திரும்ப ரிப்பீட்டானாலும் சுவையான செய்திதானே...! வாத்யார் சாமி கும்பிடற படத்துக்கும் ஏசுநாதர் போஸ்க்கும் நடுவுல கோடு போட மறந்துட்டன். ஹி... ஹி...! உங்க தப்பில்லே! அம்மாவுடன் வாத்யார் பற்றி தனிப் பதிவாகவே (தொடரா?) பின்னொரு சமயம் எழுதலாம்னு எண்ணம் இருக்கறதால... இப்ப ‘கலைச்செல்வி’ வரல்லை! ரொம்ப டாங்ஸு ஸாரே முதல் ஆளா ரசிச்சதுக்கு!

   Delete
  2. வாத்தியார் சாமி கும்புடலை சாரே..

   Delete
  3. அம்மாவை தெய்வமா வணங்கறவர் அவர்ங்கறதால அது சாமி கும்புடறதா அர்த்தம்தானே அப்பா ஸார்..? (அவ்வ்வ்வ்வ்! எப்டிலாம் சமாளிக்க வேண்டியிருக்கு!)

   Delete
  4. நான் இப்போதான் பானுமதி 'அம்மா' சொன்னத கேள்விப் படறேன்.. ரசித்தேன்.. :)

   Delete
 2. என்றென்றும் சினிமா மாயை.

  ReplyDelete
  Replies
  1. பல வகையான உணவுகளைச் சாப்பிடுவது மாதிரி சினிமாவும் ஒருவகை ரசனையில் சேர்ந்ததுதான்! அது கண்ணை மறைத்து வேறு வேலையின்றி அதிலேயே மூழ்கும் போதுதான் மாயையாகிறது. எனக்கு மாயை என்றும் இருந்ததில்லை! ரசனை மட்டுமே நண்பரே! மிக்க நன்றி!

   Delete
 3. ரசனை நிரம்பிய பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!

  ReplyDelete
  Replies
  1. ரசனையைப் பாராட்டிய தங்களுக்கு மனம் நிறைய நன்றி!

   Delete
 4. தலைவருக்கு பதில்கள் படித்து இருந்தாலும் மறுபடியும் ரசித்தேன் - அவரின் திரைப்படங்களைப் போல... அவரின் ஏதேனும் ஒரு படத்தை ஒரே ஒரு முறை மட்டும் பார்த்துள்ளோமோ என்றால்... ம்ஹீம்... அவரை பெயர் சொல்லி கூப்பிட்ட ஒரே ஒரு நடிகை பானுமதி அவர்கள் மட்டும் தான்...

  இன்றைக்கு வாத்தியார் வாத்தியார் பற்றி பகிர்ந்து கொண்டதற்கு நன்றி...

  ReplyDelete
  Replies
  1. கரெக்ட்தான் டி.டி. அவரின் நிறையப் படங்களை பலமுறை பார்த்து ரசித்துள்ளேன் நான். பகிர்வை ரசித்த உங்களுக்கு இதயம் நிறை நன்றி!

   Delete
 5. அவரால் பலன் அடைந்தவர்களே அவரை மறந்து விட்டார்கள் ,நீங்க இன்னுமா மறக்கலே ?
  +3

  ReplyDelete
  Replies
  1. ஏன்னா... நான் அவரால எந்தப் பலனையும் அடைஞ்சதில்ல. அதான் மறக்கலை ஸாரே... டாங்ஸு!

   Delete
 6. காலையில் ( 5.30 ) தமிழ்மணம் பார்த்த போது ” இன்று எம்ஜிஆர் பிறந்தநாள் ஆயிற்றே! எம்ஜிஆரின் ரசிகர், வலையுலக வாத்தியார் மின்னல்வரிகள் பாலகணேஷ் பதிவு ஒன்றையும் காணோமே? “ என்று நினைத்தேன். ஏமாற்றாமல் வந்து விட்டீர்கள். பழைய செய்திகள் என்றாலும் சலிப்பு தட்டாதவை. பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. இப்போ மட்டுமல்ல... இனி தவறாமல் ஏமாற்றாமல் மின்னல் தொடர்ந்து மின்னும். புத்தகத் திருவிழா பிஸிதான் முடிஞ்சுட்டுதே. பழமையை ரசித்த உங்களுக்கு என் மனம் நிறைய நன்றி!

   Delete
 7. மிகவும் பக்குவமான பதில் தலைவர் கூறி இருப்பது....! அவர் மறைவுக்கு பின்தான் அவரை நாம் புரிந்து கொள்வோம் என்பதை தீர்க்கதரிசனமாக சொல்லி இருக்கிறார் பாருங்கள்...ஆச்சர்யம்...!

  ReplyDelete
  Replies
  1. மக்களின் ரசனையையும், எண்ணப் போக்கையும் மிகத் தெளிவாகக் கணித்து வைத்திருந்தார் வாத்யார் என்பது நிதர்சனம்! அவரின் பகிர்வை ரசித்த மனோவுக்கு என் மனம் நிறைந்த நன்றி!

   Delete
 8. வாத்தியார் பற்றி வலையுலக வாத்தியார் எழுதிய பதிவு எந்த வாத்தியாரை புகழ்வது

  ReplyDelete
  Replies
  1. மக்கள் மனதில் பதிந்த வாத்யாரைப் புகழ்ந்து ரசித்தாலே எமக்கு மிகமகிழ்வுதான் நண்பா! மிக்க நன்றி!

   Delete
 9. எனக்கு எம்ஜிஆரை அவ்வளவா பிடிக்காது. அதனால, அண்ணாவுக்காக மட்டும் தமிழ்மணம் ஓட்டு.

  ReplyDelete
  Replies
  1. உங்க அட்ரெஸ் சொல்லுங்க..

   Delete
  2. ஆட்டோ வருது அக்கா உங்க வீட்டுக்கு.. ;௦)

   Delete
  3. எம்.ஜி.ஆரை அவ்வளாப் பிடிக்காட்டியும், அவருக்கும் உனக்கும் ஒரு ஒறறுமை இருக்கும்மா. ரெண்டு பேருமே ‘அண்ணா’ன்னா உயிரையும் தர்றவங்க. ஹி... ஹி...!

   Delete
 10. MGR oru THEERKA THARISI
  His answer to the question of his interference in director's work, is a sample to indicate his confidence

  ReplyDelete
  Replies
  1. ஆமாம். அந்தப் புத்தகத்தில் பேட்டிகளின் வாயிலாக எம்.ஜி.ஆரின் எண்ணங்கள் பலவற்றைப் படித்து வியந்துதான் போனேன். இங்கு ரசித்த உங்களுக்கு என் உளம்கனிந்த நன்றி!

   Delete
 11. அருமையான புகைப்படங்கள்&பகிர்வு!நன்றி!!என்றென்றும் எம்.ஜி.ஆர் தான்!!!

  ReplyDelete
  Replies
  1. எம்.ஜி.ஆரை ரசித்த உங்களுக்கு என் மனம் நிறைய நன்றி!

   Delete
 12. அறிந்திராத தகவல்களுடன்,பார்த்திராத படங்களுடன் கூடிய பகிர்வு அருமை.எம் ஜி ஆருக்கு திரையுலகில் வாத்தியார் என்ற பெயர் எப்படி வந்தது என்பதோடு வலையுலகில் கணேஷண்ணாவுக்கு வாத்தியார் என்ற பட்டம் எப்படி வந்தது என்ற தகவலையும் ஒரு பதிவாக்கி விடுங்களேன்.:) யப்பா..ஒரு பதிவுக்கு ஐடியா தேத்தியாச்சு...

  ReplyDelete
  Replies
  1. // வலையுலகில் கணேஷண்ணாவுக்கு வாத்தியார் என்ற பட்டம் எப்படி வந்தது// அப்படியே ரெமோ ன்னு பேர் வந்த கதையையும் யாராவது சொன்னா நல்லா இருக்கும்.. :) :)

   Delete
  2. அவருக்கு மக்கள் திலகம், பொன்மனச் செம்மல், புரட்சித் தலைவர் போன்ற பட்டங்கள் வந்ததுக்கு நிகழ்வுகள் உண்டும்மா. வாத்யார்ங்கற பேர் மக்களின் அன்பால வெளிப்பட்ட பெயர். அதற்கு தோற்றுவாய் கண்டுபிடிக்கறது.... ரொம்பக் கஷ்டம்! அதனால அதையெல்லாம் சீக்கிரம் எழுதிடறேன். மிக்க நன்றிம்மா! யோவ் ஆவி...! ‘ரெமோ’வுக்கு ஆரம்பம் தெரியணுமா? வாரும்... முதல்ல ‘அன்னியனை’ உமக்குக் காட்டிடறேன்... ஹி... ஹி...!

   Delete
  3. அன்பின் "பாலகணேஷர்",

   எம்சிஆர் ஜெயந்தியன்று(பிறந்த நாளைத் தான் சொல்கிறேன்)ஆகச்சிறந்த நினைவு கூறல்!

   //வாத்யார்ங்கற பேர் மக்களின் அன்பால வெளிப்பட்ட பெயர். அதற்கு தோற்றுவாய் கண்டுபிடிக்கறது.... ரொம்பக் கஷ்டம்!//

   தனது படங்களின் சண்டைக்காட்சிகளில் பயன்ப்படுத்த என ஒரு குழுவினரை உருவாக்கி,அவர்களுக்கு ராமாவரம் தோட்டத்தில் குஸ்தி,சிலம்பம், கத்தி சண்டை முதலியவற்றை கற்றுக்கொடுத்து ,தொடர்ப்பயிற்சியும் அளித்து வந்தார், பெரும்பாலும் எம்சிஆரின் நேரடி மேற்பார்வையில் தான் நடக்குமாம்,அக்காலத்தில் சிலம்பம், குஸ்தி கற்றுக்கொடுப்பவரை "வாத்தியார்" என்றழைப்பார்கள், எனவே எம்சிஆரின் சீடர்கள் வாத்தியார் என அழைக்க அதுவே திரையுலகிற்கும் பரவிடுச்சாம்.

   எம்சிஆரின் திரைப்படங்களில் மெயின் வில்லன் தவிர மற்ற கூட வரும் அடிப்பொடிகள் குறிப்பாக எம்சிஆரின் அருகில் நின்று சண்டைப்போடுபவர்கள் அனைவரும் "எம்சிஆரின்" பயிற்சியில் உருவானவர்களாம்.

   இவ்வகையில் எம்சிஆர் ஒரு இந்திய "புரூஸ் லீ" ஏன் எனில் புரூஸ் லீ படத்திலும் சண்டைக்காட்சிகளில் உடன் நடிப்பவர்கள் அனைவரும் புரூஸ் லீயின் மாணவர்கள் தானாம்.

   நாமளும் வழக்கம் போல தாமதமாக ஒரு பதிவு போடுவோம்ல அவ்வ்!

   எம்சிஆரின் மருமகன் முறையான காலஞ்சென்ற விஜயன் என்பவர் எழுதிய எம்சிஆர் பற்றிய தொடரில் இதனைப்படித்துள்ளேன்.

   Delete
  4. ஆஹா! எனக்குத தெரியாத ஒன்றை இப்போ உங்களால தெரிஞ்சுக்கிட்டேன் வவ்வால்1 மிக்க மகிழ்வுடன் என் நன்றி!

   Delete
 13. வாத்தியார், வாத்தியார் பத்தி தொகுத்த விதமே அழகு!!

  ReplyDelete
  Replies
  1. ரசித்த ஆவிக்கு மனம் நிறைய நன்றி!

   Delete
 14. எம்.ஜி.ஆர் அவர்களின் நினைவுகளை கூறும் நல்லதோர் பகிர்வு... தகவல்கள் சுவை கூட்டின..

  ReplyDelete
  Replies
  1. பகிர்வை ரசித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!

   Delete
 15. நடிகை பானுமதி தைரியமான பெண்மணி! வாத்தியாரின் பதில்களை ரசித்தேன்! சிறப்பான பகிர்வு! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. பகிர்வை ரசித்த உங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றி!

   Delete
 16. சுவையான அறியாத செய்திகளுடன்
  சிறப்புப் பதிவு வெகு சிறப்பு
  பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. சிறப்பான பகிர்வென்று ரசித்த உங்களுக்கு என் இதயம் நிறை நனறி!

   Delete
 17. மக்கள் இந்த அளவு உயர்த்திப் பேசும் அளவுக்கு அவர் ஒன்றும் சாதித்துவிடவில்லை என்பது என் கருத்து.

  வாரிசு இல்லாதவர் வள்ளலாவது ஒன்றும் பெரிய விசயமில்லை அல்லவா. ராம ராஜனும் பாக்யராஜும் அவரது அரசியல் வாரிசு ஆக முயன்றார்கள் என்ற அளவுக்கு அவர் கட்சியை வளர்த்து விட்டிருந்தார். திரைப்படங்களை ஒரு பொழுது போக்காக மட்டும் தமிழக மக்கள் இன்று வரை நினைப்பதில்லை. இதற்கு அவரும் ஒரு காரணம் அல்லவா.

  இறுதியில், பாரத ரத்னா என்ற உயர்ந்த பட்டம் அவருக்கு எதற்காக வழங்கப்பட்டது என்று இதுவரை எனக்குப் புரியவில்லை. தயவுசெய்து தெரிவிக்க முடியுமா.

  கே. கோபாலன்

  ReplyDelete
  Replies
  1. தெய்வம் என்றால் அது தெய்வம்; சிலையென்றால் வெறும் சிலைதான்! உங்களுக்கு சிலையாகவே இருப்பதில் எனக்கு ஆட்சேபம் ஒன்றுமில்லை. மிக்க நன்றி!

   Delete
  2. சரியான பதில் சார்...

   Delete
 18. இதய தெய்வத்தின் பதில்கள் அருமை.
  பானுமதி அம்மாவின் கத்திச் சண்டை சூப்பரண்ணா...

  ReplyDelete
  Replies
  1. ரசித்துப் படித்துப் பாராட்டிய பிரதருக்கு மனம் நிறைய நன்றி!

   Delete
 19. அறிந்திராத தகவல்களுடன்,பார்த்திராத படங்களுடன் கூடிய பகிர்வு அருமை.

  ReplyDelete
  Replies
  1. ப்கிர்வை ரசித்த உங்களுக்கு மகிழ்வுடன் என் நன்றி!

   Delete
 20. மக்கள் திலகம் பற்றிய சில தகவல்கள் முன்பே அறிந்தவை. சில இதுவரை அறியாதவை. அவரது பிறந்தநாளை சிறப்பிக்கும் விதமாக அவரைப்பற்றிய பதிவைப் படங்களோடு வெளியிட்டமை சிறப்பு. பின்னூட்டங்களும் ரசிக்கவைக்கின்றன. பாராட்டுகள் கணேஷ்.

  ReplyDelete
 21. எவ்வளவு படிச்சாலும் அலுக்காத டாபிக் " எம்.ஜி.ஆர்
  நன்றி சார் பகிர்விற்கு!!

  ReplyDelete
 22. பல விஷயங்கள் தெரியாதவை. சுவையான தகவல்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி வாத்தியாரே!......

  //திருமணம் ஆனால்தான் பைத்தியம் தீரும், பைத்தியம் தீர்ந்தால்தான் திருமணம் ஆகும்//

  :))))) அது சரி!

  ReplyDelete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
 • Youtube