Wednesday, January 29, 2014

மொறு மொறு மிக்ஸர் - 23

Posted by பால கணேஷ் Wednesday, January 29, 2014
து தேவகோட்டையில் இவன் பள்ளிச் சிறுவனாயிருந்த காலம். மதுரையிலிருந்து சித்தப்பாவின் குடும்பம் விடுமுறைக்கு தேவகோட்டைக்குத் தவறாமல் வருவார்கள். தங்கையுடனும், தம்பியுடனும் பொழுதைக் கழிப்பதற்காக விடுமுறையை ஆவலுடன் எதிர்நோக்கியிருப்பான் இவன். மூவரும் சேர்ந்து அடிக்கும் லூட்டிகளுக்குக் கணக்கேயில்லை. ஒருநாள் அம்மா தங்கையைக் கூப்பிட்டு, ‘‘தெருமுக்குக் கடைக்குப் போயி நூறு தக்காளியும் அம்பது பொட்டுக்கடலையும் வாங்கிட்டு வா" என்று கூறி 
இவனையும் துணைக்குப் போகச் சொன்னாங்க.

கடைக்குச் சென்றதும் கிளிப் பிள்ளை மாதிரி பெரியம்மா சொன்னதை அப்படியே ஒப்பித்தாள் தங்கை. கடைக்காரர் பொட்டலம் கட்டிக் கொடுத்ததும், இவன் கையிலிருந்த சில்லறையைக் கொடுத்துவிட்டு, ‘‘வாடி, போகலாம்...!" என்றான் தங்கையிடம். அவள் நகராமலே நின்றாள், ‘‘அண்ணா! கடைக்காரன் ஏமாத்தப் பாக்குறான்... என்னன்னு கேளுங்க..." என்றாள். ‘‘என்ன ஏமாத்திட்டாரு...? எதைக் கேக்கணும் நானு?" என்று முழித்தான் இவன். அவள் சொன்னாள்: ‘‘ஐயோ அண்ணா...! பெரியம்மா நூறு தக்காளி வாங்கிட்டு வரச் சொன்னாங்க. இவன் மூணுதான் குடுத்திருக்கான். இப்படித்தான் ஏமாளியா எப்பவும் வாங்கிட்டுப் போவியா?" தங்கையின் புத்திசாலித்தனத்(?)தின் முன் அன்று ‘ஙே' ஆகி நின்றான் இவன்.

===+===+===+===+===+===+===+===+===+===+===+===+===+===+===

‘நஸ்ரியாவுக்குத் திருமணம்' நிச்சயமான செய்தி வெளியான அடுத்த தினம் என்னைப் பார்க்க வந்திருந்த கோவை ஆவியை ‘‘ஹார்ட் உடைஞ்சிச்சா? ஒட்ட(றதுக்கு)கம் எதும் வேணுமா?"ன்னு கேலி பண்ணிட்டிருந்தேன். அப்ப ஆவி ஒரு விஷயம் சொன்னார் - நஸ்ரியாவுக்கும் அவரைக் கல்யாணம் செய்து கொள்ளப்போகும் பஹத்பாசிலுக்கும் 10 வயது வித்தியாசம் என்று. மார்ஜியானாவும் நானும் ஒரே இனம், ஒரே ஜாதி என்று நிறைய ‘ஒரே' இருந்தும்கூட அவள் அம்மாவும், தாத்தாவும் இதே 10 ஆண்டு வித்தியாசத்தைக் காரணம் காட்டி அவளைத்தர மறுத்தது, இதுவும் ஆடு மாதிரி அம்மா, தாத்தாவை மீறமாட்டேன் என்று நின்றது, ‘என்னைவிட நல்ல பெண் நிச்சயம் உனக்கு கிடைப்பா' என்கிற டெம்ப்ளேட் வசனம் பேசி என்னிடம் அறை வாங்கி ஓடியது, அதன்பின் இன்றுவரை கண்ணிலேயே படாதது என்று பல காட்சிகள் ஸ்லைடு ஸ்லைடாக மனதில் ஓடி முடிந்தன சில விநாடிகளில்! ஆவியிடம் சொன்னேன்: ‘‘நஸ்ரியா வாழ்க! அவள் ஃபேமிலி வாழ்க!" என்று!
 

===+===+===+===+===+===+===+===+===+===+===+===+===+===+===

ன்றொரு நாள் என் வீட்டிலிருந்து மத்யகைலாஷ் வரை பேருந்துப் பயணம் செய்ய நேர்ந்தது. பேருந்தின் பின்வாசலில் ஏறிய எனக்குப் பின்னிருந்து ஏழெட்டு பேர் நெருக்க, கதவின் அருகிலிருந்து உள்ளே போகலாம் என்றால் முடியவில்லை. முன்னால் நின்றிருந்த ஒரவர் மலையேற்றப் பயிற்சியில் ஈடுபடுகிறவர் மாதிரி முதுகின் பின்னால் தொங்கவிட்ட பெரிய கறுப்புப் பையின் வார் தோள்பட்டையைச் சுற்றிவர, இரண்டு பேர் நிற்கும் இடத்தை ஆககிரமித்துக் கொண்டிருந்தார். அவரை நசுககிக் கொசண்டு போகலாம் என்றாலோ, அவருக்கு முன் நின்றிருந்த பெண்ணின் உடலின் மேல் நன்ன்ன்றாக உரச வேண்டியிருக்கும், வெறுப்புப் பார்வை அல்லது கோப வசவை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதால், ‘‘ஸார்... நீங்க எங்க இறங்கப் போறீங்க?" என்றேன் மெதுவாக. ‘‘கேன்ஸர் இன்ஸ்டிட்யூட்" என்றார் அவர். ‘‘இன்னும் நிறைய ஸ்டாப் இருக்கே... உங்க தோள்ல இருக்கற பேகைக கழட்டி காலடியில வெச்சா, நான் முன்னால போக முடியும்" என்றேன்.

அவர் முன்புறம் நின்றிருந்த ஒருத்தரைக் கை காட்டி, ‘‘அவர் இதே மாதிரி தோள்ல பேக் மாட்டிட்டுதான் இருக்கார். அவரைக் கேட்டீங்களா? நான்தான் கிடைச்சனா?" என்றார். முட்டாளோடு முரண்பட்டுப் பயனில்லை என, அவனை நசுக்கி முன்னேறி விட்டேன். (நல்லவேளை... அந்தப் பெண் வசவவில்லை... ஹி... ஹி...!) எனக்குப் பின்வந்த நான்கைந்து பேரும் தொடர்ந்து அர்ச்சனை செய்ய... அதன்பின் பேகைக் கழற்றி காலடியில் வைத்தார் அந்த நபர். தான் செய்யும் குற்றத்தை ஒருவன் சுட்டிக் காட்டினால், ‘அவன் செய்யறத விட நான் செய்றது மோசமில்ல' என்று தன் தப்பை நியாயப்படுத்துவது என்ன நியாயம் எனபதுதான் புரியவில்லை. அவன் கொலையே பண்றான், நான் கையைத் தானே வெட்டறேன் என்று சொல்வது என்ன லாஜிக்? என்னத்தச் சொல்ல...? இப்படியே பழகிட்டாய்ங்கப்பூ...!


 ===+===+===+===+===+===+===+===+===+===+===+===+===+===+===

இனி சில தகவல்கள்:

1) நான் சென்ற பதிவில் குறிப்பிட்டிருந்த ‘நாலு வரி நோட்டு’ புத்தகங்களை இங்கு க்ளிக் செய்து இணையத்தில் ஆர்டர் செய்து பெற்றுக் கொள்ளலாம். அல்லது (0)99001 60925 என்ற எண்ணுக்குத் தொலைபேசி உங்கள் முகவரியைக் கூறி பெற்றுக் கொள்ளலாம். மூன்று நூல்களையும் வாங்கும் சென்னை வாசகர்களுக்கு 10 சதவீத தள்ளுபடியுடன் கூரியர் செலவும் இலவசம் என்றும், சென்னைக்கு வெளியே உள்ளோருக்குக் கூரியர் செலவு மட்டும் இலவசம் என்றும் பதிப்பாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

2) ஐ பேட் வைத்திருக்கிறீர்களா நீங்கள்? ‘கல்கி' வார இதழின் வாசகரா நீங்கள்? எனில் உங்களுக்கு ஓர் அருமையான வாய்ப்பு. இந்தச் சுட்டியில் க்ளிக் செய்தால் ஐபேடில் படிப்பதற்கு வசதியாக - இலவச பயன்பாடாக - கல்கி வார இதழ் கிடைக்கிறது. படித்து ரசியுங்கள். இந்தத் தகவலைத் தந்து என் வாசகர்களுக்குப் பகிரச் சொன்ன நண்பர் ப்ரவீண் தியாகராஜனுக்கு ஒரு சல்யூட்!

3) படித்த புத்தகங்களில் ரசித்த விஷயங்கள் பற்றிப் பகிர்வதற்கும், எழுத்தாளர்கள், படைப்புகள் பற்றிய கட்டுரைகள் பகிர்வதற்கும், நூல் அறிமுகம் / விமர்சனம் செய்வதற்கும் என்று புத்தகங்களுக்காக தனியான தளம் ஒன்றை நானும் என் நண்பர்கள் சிலரும் இணைந்து துவங்கியிருக்கிறோம். அதில் முதல் பதிவை இன்று வெளியிட்டுள்ளோம். தளத்தின் பெயர் - வாசகர் கூடம்! பிடிச்சிருக்கா? அங்கும் உங்களின் ஆதரவைத் தந்து எங்களை வளர்க்கும்படி பணிவண்புடன் வேண்டிக் கொள்கிறோம் நாங்கள்.

===+===+===+===+===+===+===+===+===+===+===+===+===+===+===

ண்பார்வை தெளிவடைய வேண்டுமா? பப்பாளிப் பழம் 2 துண்டு, பேரிச்சம் பழம் 4, செர்ரிபழம் 10, அன்னாசி பழம் 2 துண்டு, ஆப்பிள், திராட்சை 50 கிராம், மலை அல்லது ரஸ்தாளி வாழைப்பழம் 2, மாம்பழம் 2 பத்தை, பலாச் சுளை 2 (மாம்பழம் அல்லது பலா_ சீசனில் மட்டும் போட்டால் போதுமானது) இவற்றை சிறுதுண்டுகளாக நறுக்கி ஒரு டம்ளர் தேங்காய்ப் பால் அல்லது பசும் பாலுடன் சேர்த்துக் கலக்கி தேவையான அளவு தேன் அல்லது பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட நல்லது.

===+===+===+===+===+===+===+===+===+===+===+===+===+===+===

to end with a smile...

hi...hi...hi...!


59 comments:

 1. மொறு மொறு வழக்கம்போல் சுறு சுறு
  கல்கி குறித்த தகவல் பயனுள்ளது
  புதிய தளமும் சிறப்படைய
  மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
  ,

  ReplyDelete
 2. மிக்ஸரையும் ரசித்து, புதிய தளத்தினையும் வாழ்த்திய உங்களுக்கு என் உளம்கனிந்த நன்றி!

  ReplyDelete
 3. அண்ணனுக்கு ஒன்றும் தெரியவில்லை... ஹா... ஹா...

  நஸ்ரியா பற்றிய தகவல்கள் ஆவிக்கு தானே தெரியும்...

  மூன்று முத்தான தகவல்களுக்கு (1+2 = மிக்க மிக்க) நன்றி... புதிய தளம் சிறக்க வாழ்த்துக்கள்... முகநூல் மூலம் ஏற்கனவே அறிந்து... Followers கூட ஆகிட்டோமில்லே... ஹிஹி... (வரும் கருத்துரையாளர்களும் Followers ஆகலாம்... நன்றி...)

  இனி நிறைய நூல்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம்... நன்றி - நீங்கள் உட்பட, வாசகர் கூடம் தளத்தில் உள்ள நமது நண்பர்கள்... அதாவது புத்தகக் காதலர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. தகவல்களைத் தந்த மிக்ஸரை ரசித்து, முதல் பின்தொடர்பவராகவும் முதல் கருத்தாளராகவும் வாசகர்கூடத்திற்கு வந்து உற்சாகம் தந்த உங்களுக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப சந்தோஷத்தோட என் நன்றி டி.டி.!

   Delete
 4. நஸ்ரியாவுக்குத் திருமணம்' நிச்சயமான செய்தி வெளியான அடுத்த தினம் என்னைப் பார்க்க வந்திருந்த கோவை ஆவியை ‘‘ஹார்ட் உடைஞ்சிச்சா? ஒட்ட(றதுக்கு)கம் எதும் வேணுமா?"ன்னு கேலி பண்ணிட்டிருந்தேன்.//

  நொந்து போயி வந்த ஒரு ஆவியை இப்பிடி கேலி பண்ணிருக்கீங்களே அண்ணே, தம்பி ரூம் போட்டுல்லா அலுதுருப்பான் ஹி ஹி...

  ReplyDelete
  Replies
  1. அன்னிக்குத்தான் அவனோட ‘ஆவிப்பா’ புத்தகமாகி வந்துருந்துச்சு. அதனால எல்லாப் பக்கங்கள்லயும் இருந்த கலர் கலர் நஸ்ரியாவைப் பாத்து சிரிச்சு ரசிச்சுட்டு இருந்ததால அழுவல மனோ! வருகைக்கும் கருத்துக்கும் மனம் நிறைய நன்றி!

   Delete
  2. நல்லா கேளுங்க அண்ணே..

   Delete
 5. பழப்பச்சடியின் சர்க்கரை அளவு கண் கோளாறை நாளாவட்டத்தில் அதிகப் படுத்தாதோ? இதென்ன சரிதாவுக்குச் சொல்ற வைத்தியத்தை எங்களுக்கும் சொல்றீங்களா?

  ReplyDelete
  Replies
  1. ஒரு மருத்துவ மேகஸின்ல படிசசது இது. சர்க்கரை வியாதி பரம்பரைல உள்ளவங்களுக்கு மட்டும் வேணா பாதிப்பிருக்கலாமோ நீண்ட காலத்திலன்னு இப்ப நீங்க சொன்னதும் தோணுது. சரிதாவுக்குச் சொல்றதா... சரிதான்! அவகிட்ட இருக்கற டிப்ஸ்க்கு தனி ப்ளாகே ஆரம்பிக்கலாம் அப்பா ஸார்...! மகிழ்வு தந்த வருகைக்கு மனம் நிறைய நன்றி!

   Delete
 6. மிச்சரு சூப்பருபா... புச்சா கடை தொர்ந்துகீறியாபா... ஆவடும்பா கண்டுக்கிறேம்பா..

  அல்லாம் போட்டாச்சு... போட்டாச்சு...

  ReplyDelete
  Replies
  1. மிக்ஸரை ரசிச்சதுக்கு படா டாங்ஸ்ப்பா...! புச்சா கடைய நாங்க ஆறு பேராச் சேந்து தொறந்துக்கினோம்பா... மொத போணி நம்முது... புள்ளையார் சுயி போட சரியான ஆளு நாமன்றதால... ஹி... ஹி...!

   Delete
 7. 100 தக்காளி
  >>
  இதை ஏன் சினிமா காரங்கக்கிட்ட சொன்னீங்க!? இப்ப பாருங்க.., எந்த ஜோக் ரகம் ரகமா, விதம் விதமா சுட்டுத் தள்ளுறாங்க!!

  ReplyDelete
  Replies
  1. ஹி.. ஹி... ஹி...! டாங்ஸு சிஸ்!

   Delete
 8. மிக்சர் தூக்கலா இருக்கு அண்ணே...

  ReplyDelete
  Replies
  1. மிக்ஸரை ரசித்த உங்களுக்கு என் உளங்கனிந்த நன்றி பிரதர்!

   Delete
 9. வழக்கம் போல் மிக்ஸர் சுவை! வாசகர் கூடத்தில் இணைந்து விட்டேன்.. சுவாரஸ்யத்துடன்........!

  ReplyDelete
  Replies
  1. மிக்ஸரையும் ரசித்து, வாசகர்கூடத்திற்கும் வரவேற்புத் தந்த உங்களுககு மகிழ்வுடன் என் நன்றி!

   Delete
 10. வாசகர் கூடத்திற்கு வாழ்த்துகள்..!

  ReplyDelete
  Replies
  1. வாசகர் கூடத்திற்கு வாழ்த்துச் சொல்லி, உறுப்பினராகவும் இணைந்த உங்களுக்கு என் உளம்கனிந்த நன்றி!

   Delete
 11. மிக்சர் பிரமாதம் சார்

  //அவன் செய்யறத விட நான் செய்றது மோசமில்ல// அடுத்தவன் திருந்துனா நானும் திருந்துவேன் என்ற ஆட்டுக் கூட்டம் தானே நாமும் நாம் சார்ந்த சமுதாயமும் ;-))))

  ReplyDelete
  Replies
  1. நிறைய சமயங்கள்ல இந்த ஆட்டுமந்தைத் தனத்தைப் பார்த்தா எரிச்சல் + கோபம் வருது சீனு! உதாரணமா... ஒருத்தன் டிராஃபிக் சிக்னலை மதிக்காம குறுக்க போனா ஆபத்து... அதே ஒரு கும்பலா கை காட்டிட்டு போனா தப்பில்ல...1 என்னத்தச் சொல்ல...?

   Delete
 12. மிக்சர் அருமை அருமை... இறுதியில் படம் சூப்பர்.

  ReplyDelete
  Replies
  1. மிக்ஸரை ரசித்த சசிக்கு மனம் நிறைய நன்றி!

   Delete
 13. You have not mentioned whether that template dialogue of Margiana (spelling correct???) has turned out to be true or not?

  ReplyDelete
  Replies
  1. இப்படிக் கேள்வி கேட்டு என்னை பூரிக்கட்டை அடி வாங்க வெச்சிரணும்னு ப்ளானா மோகன்? மீ எஸ்கேப்ப்பப்!

   Delete
 14. சார் ... உங்க தங்கை பொட்டுகடலை ஐம்பது இருக்கான்னு எண்ணி பார்த்தாங்களா?
  மிக்சர் செம டேஸ்ட்...

  ReplyDelete
  Replies
  1. நூறு தக்காளிய எண்ணச் சொன்னதுலயே நான் ஆஃப் ஆயிட்டேன். அதனால அவளை மேற்கொண்டு எண்ண விடாம கூட்டிட்டுப் போயிட்டேம்மா வீட்டுக்கு. ஹி... ஹி...! மிக்ஸரை ரசிச்ச உனக்கு மகிழ்வோட என் நன்றி!

   Delete
 15. சுவைத்தேன்!

  ReplyDelete
  Replies
  1. சுவைத்து ரசித்த உங்களுக்கு மகிழ்வுடன் என் நன்றி ஐயா!

   Delete
 16. மொறுமொறு மிக்ஸர் நல்ல டேஸ்ட். அருமை. வாசகர் கூடம் வாசிக்கும் புத்தக நண்பர்களுக்கு மிக பயனுள்ள தளம்.வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. மிக்ஸரை ரசித்து, வாசகர் கூடத்தை வாழ்த்திய உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!

   Delete
 17. மிக்சர் அருமை.. வாசகர் கூடம் அருமையான முயற்ச்சி அண்ணா... வெற்றியடைய வாழ்த்துக்கள்....

  ReplyDelete
  Replies
  1. வாசகர்கூடம் சிறப்பான வரவேற்பைப் பெற வேண்டும் என்பதுதான் என் விருப்புமும். அதற்கு வாழ்த்தி, மிக்ஸரை ரசித்த ப்ரியாவுக்கு என் உளம்கனிந்த நன்றி!

   Delete
 18. மிக்சர் ஓஓஹோ...!
  கல்கி பற்றிய செய்திக்கு நன்றி!!
  புதிய வலைப்பூவுக்கு வாழ்த்துக்கள்!!!

  ReplyDelete
  Replies
  1. மிக்ஸரை ரசித்து, வாசகர் கூடத்தை வாழ்த்திய உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!

   Delete
 19. நூறு தக்காளி:).

  தகவல்களுக்கு நன்றி. வாசகர் கூடம் நல்ல முயற்சி. வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. ரசித்துச் சிரித்ததுடன் புது முயற்சிக்கு வாழ்த்திய உங்களுக்கு மிகமிக மகிழ்வுடன் என் நன்றி!

   Delete
 20. வணக்கம்
  ஐயா.

  மொறு மொறு மிக்ஸர் .பதிவு படிக்க படிக்க மொறு மொறு என்றுதான் இருக்கு.. சிறப்பான வலைத்தஅறிமுகம். மற்று மருத்துவக்குறிப்பு... எல்லாம் நன்று... வாழ்த்துக்கள் ஐயா.

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. அனைத்துப் பகுதிகளையும் ரசித்த உங்களுக்கு அன்புடன் என் நன்றி!

   Delete
 21. /கண்பார்வை தெளிவடைய வேண்டுமா?//
  லேப்டாப்பை தூக்கி ஏறிஞ்சாலே பார்வை தெளிவடைந்துவிடும்

  ReplyDelete
  Replies
  1. கரீக்ட்டுதாமபா. ஆனா... அத நிறைவேத்தறதுதான் ªர்மபக் கஷ்டமான விஷயமாச்சுதே...!

   Delete
 22. மிக்ஸர் சுவை வழக்கம் போல அருமை ! வாசகர் கூடத்தில் இணைந்து விட்டேன். விமர்சனம் பண்ணும் புக்கை எல்லாம் மறக்காம எனக்கு அனுப்பிவிடுவீர்கள்தானே?

  ReplyDelete
  Replies
  1. வாசகர் கூடத்திற்கும் நீங்கள் வரவேற்புத் தருவதில் பெருமகிழ்ச்சி எனக்கு நண்பா. நீங்க மட்டும் தமிழ்நாட்டுல இருந்தா.... என்கிட்டருந்து எல்லா புக்கும் உங்களுக்குக் கிடைச்சிருக்கும். (சிவாஜி ஸ்டைலில் படிக்க...) என்ன செய்வது...? அமெரிக்காவுக்கு அனுப்ப முடியல்லையே...! (நம்ம ஸ்டைலில்) ஹி... ஹி... ஹி...! நன்றி நண்பா!

   Delete
 23. வழக்கம் போல மிக அருமையான மிக்சர்.....

  மார்ஜியானா.... ம்ம்ம்ம்ம் வயது வித்தியாசம் என்ன செய்யும்.

  சனிக்கிழமை இரவிலிருந்து ஞாயிறன்று மதியம் வரை சென்னையில் இருப்பேன். முடிந்தால் சந்திப்போம்....


  ReplyDelete
  Replies
  1. அவள் குடும்பத்திற்குப் பரந்த மனம் இல்லாமல் போய்விட்டதே... என் செய்ய வெங்கட்? மிக்ஸரை ரசித்துப் பாராட்டிய உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி! (ஏம்ப்பா... ஊருக்கு வர்றதுன்னா கொஞ்சம் முன்னாடி உஸார்படுத்தியிருக்கக் கூடாதா? நீங்க இங்க வர்றீங்க... நானோ சனி, ஞாயிறு கோவை விஸிட் புறப்பட்டுட்டேன்.... ஸாரிய்யா...)

   Delete
 24. Mr.Avargal Unmaigal
  why only laptop?? you include in this list, laptop mobile tv tablets etc ., all these are not only spoiling the eyes but also pollute the mind.

  ReplyDelete
 25. மிக்சர் அருமையான கலவை!! நொறுக்ஸ்!!! இடையில் இடர்படும் சுவையான கடலை போல கோவை ஆவியும், நஸ்ரியாவும்!!!

  தங்கையின் வெள்ளை உள்ளம் மிகவும் ரசனை! இல்லையென்றால் தங்கை அண்ணனை போட்டு வாங்கியதோ?!!!!

  வாசகர் கூடம் அருமையன பொருத்தமான பெயர்! ரசிக்கும்படியும் உள்ளது!!!!

  அந்த படம்- ஜோக் அருமை!!!

  மொத்தத்தில் மிக்சர் நல்ல வாசனை!!!
  த.ம.

  ReplyDelete
  Replies
  1. இல்லையில்லை... என் தங்கைகள் அனைவருமே கள்ளங்கபடற்றவர்கள் தான்மா. மிக்ஸரின் சுவையை ரசித்துப் பாராட்டிய உங்களுக்கு என் உளம்கனிந்த நன்றி!

   Delete
 26. வயசுதான் ஒரு பெரிய இடைவெளி ஆகிவிடுகிறது இல்லையா? வாசகர் கூடம் இன்று சென்று படித்துப்பார்த்தேன்! எண்டமுரி வீரேந்திரநாத் நாவலைப்பற்றி எழுதி வாங்கத் தூண்டிவிட்டீர்கள்! நன்றி!

  ReplyDelete
 27. மிக்சர் மிகவும் சுவையாகவே இருந்தது...

  வாசகர் கூடத்தை பற்றி அறிந்து மகிழ்ச்சி...

  வயது வித்தியாசம்லாம் ஒரு பெரிய விஷயமா!

  ReplyDelete
 28. இன்று மாலை பணியிலிருந்து திரும்பியதும் சுமார் 5.30 மணியளவில் கலைஞர் 'சிரிப்பொலி' பார்த்துக் கொண்டிருந்தேன். ஜோதிபாசு வழங்கும் 'சிந்தனையும் சிரிப்பும்' நிகழ்ந்து கொண்டிருந்தது.
  ஒரு காட்சி: வெ.ஆ.மூர்த்தி அவர்களின் டீக்கடையில் வேலை பார்க்கும் ஒரு சிறுவன், நெல்லை சிவா அவர்கள் வைத்திருக்கும் மளிகைக் கடையில் போய் 100 முந்திரி கொடுங்கள் என்று வாங்குறான். வாங்கி, பிரித்து, எண்ணிப் பார்க்கிறான்.
  "என்னங்க 100 கேட்டால், 15தான் கொடுக்கறீங்க? மீதி 85 எங்கே? ஏமாத்தப் பார்க்குறீங்களா?" என்று கேட்டு சண்டை வளர்த்துவிட்டு, முந்திரியை வாங்காமலேயே திரும்பி விடுகிறான்.

  என்ன ஓர் ஆச்சரியம்! இப்படி ஒரு சரித்திர நிகழ்வு உங்கள் வாழ்விலும் நடந்துள்ளதே!

  (அந்த காமெடி என்ன படம்?)

  ReplyDelete
 29. மிக்சர் மொறு,மொறு என்று...........ஸ்.....ஸ்.......கொஞ்சம் காரம்!(நஸ்!)நன்றி!!!

  ReplyDelete
 30. ‘‘நஸ்ரியா வாழ்க! அவள் ஃபேமிலி வாழ்க!" என்று!

  //அதுதான் சார்.. நஸ்ரியா மேல எனக்கு இன்னும் கொஞ்சம் மதிப்பை அதிகப்படுத்திடுச்சு..

  ReplyDelete
 31. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

  மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2014/02/thalir-suresh-day-6-part-2.html) சென்று பார்க்கவும்... நன்றி...

  ReplyDelete
 32. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

  மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

  அறிமுகப்படுத்தியவர் : மஞ்சு பாஷிணி சம்பத் குமார் அவர்கள்

  அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : கதம்ப உணர்வுகள்

  வலைச்சர தள இணைப்பு : அன்பின் பூ - மூன்றாம் நாள்

  ReplyDelete
 33. 'end with a smile' - சரியான நம்பியார்த்தனமான சிரிப்பா இருக்கே!

  ReplyDelete
 34. வணக்கம் !
  நானும் முதல் முதலாக தங்கள் மிக்ஸரை சுவைக்க வந்துள்ளேன் ம்..ம்..ம் சுவையாகவே உள்ளது. தொடர்ந்து வருகிறேன். வாசகர் கூடத்தையும் சென்று பார்க்கிறேன். நன்றி ! வாழ்த்துக்கள்....!

  ReplyDelete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
 • Youtube