Monday, June 24, 2013

தமிழ் படிங்க - புன்னகையுடன்!

Posted by பால கணேஷ் Monday, June 24, 2013
ந்த ஒரு மனிதனும் தான் கற்ற மற்ற மொழிகளில் பிழைபட பேசவும் எழுதவும் செய்வானே தவிர, தன் தாய்மொழியைப் பிழையறக் கற்றிருப்பான். தாய்மொழியில் எழுதுவதிலும் பேசுவதிலும் தவறு செய்கிற‌ ஒரே இனம் தமிழனாகத்தான் இருக்கும். அதற்குத் தமிழனை மட்டும் குறை சொல்லிப் பயனில்லை. மிகத்தொன்மையான தமிழ் மொழியானது, காலப்போக்கில் பிறமொழிச் சொற்களால் கலப்புற்று, ஒவ்வொரு வட்டாரங்களிலும் வசிப்பவர்கள் தங்களுக்கென தனித் தனியாகப் பேசும் முறைகளை உண்டாக்கிக் கொள்ள... மதுரைத் தமிழ், நெல்லைத தமிழ், கொங்கு தமிழ், சென்னைத் தமிழ் என்று பல ஸ்டைல்களாகப் பிரிந்து நிற்கிறது.

இதுபற்றாதென்று தமிழ்வழிக் கல்வி படிப்பது கேவலம், ஆங்கில வழிக் கல்வியே சிறந்தது என்கிற எண்ணம் தமிழ் மககளின் மனதில் விதையூன்ற, ‘நாமதான் படிககல... நம்ம புள்ளையாவது படிக்கட்டுமே’ என்கிற ஆதங்கப் பாசத்துடன் ஆங்கில வழிப் பள்ளிகளைக் கொழிக்க வைத்ததன் விளைவு... இன்று பலரும் தமிழை தப்புத்தப்பாக எழுதுகிறார்கள். தமிழில் கவிதை எழுதும் சிலர் கூட ‘செய்துப் பார்த்தான்’ என்றெல்லாம் கண்ட இடங்களில் ஒற்றைப் பிரயோகித்து எழுதுவதைக் கண்டு நொந்து போனதுண்டு நான். அப்பாதுரை ஸார் கேட்ட மாதிரி தமிழுக்கு மட்டும் ஏன் இத்தனை ரூல்ஸ்?

என்னாச்சு இந்த ஆசாமிக்கு? படு சீரியஸாப் பேச ஆரம்பிச்சுட்டாரேன்னு நீங்க நினைக்கிறது புரியுது. விஷயம் என்னன்னா... தமிழ்ல சரளமாப் பேசற நிறையப் பேர்கள் எழுதும் போது தப்புக்கள் நிறையப் பண்ணுறாங்க. வல்லின மெல்லின வித்தியாசம் புரியாம ‘ன’ ‘ண’ மாத்தி எழுதறது, ‘ல’ ‘ள’ தப்பாப் போடறது, தேவையில்லாத இடங்கள்ல ஒற்றுக்களைச் சேர்த்து எழுதி தமிழைத் தப்பில்லாம எழுதிட்டதா மார் த்டடிக்கிறது இப்படி ஏராள விஷயங்கள்!

என்னிடம் பேசும்போது ஒன்றிரண்டு பேர் கேட்டதுண்டு. ‘‘தமிழைப் பிழையின்றி எழுத, எங்கெங்க ஒற்று வரணும், வரக்கூடாதுன்ற மாதிரி முக்கிய விஷயங்களைச் சொல்லித் தர்றதுக்கு எளிமையா ஏதாவது புத்தகம் இருக்குங்களா? தெரிஞ்சா உடனே வாங்கிப் படிச்சுடுவேன்’’ அப்படின்னு. ‘‘அப்படி ஏதாச்சும் நல்ல புத்தகம் கண்ல பட்டா சொல்றேங்க’’ என்று ரெடிமேட் பதிலைச் சொல்லிவிட்டு நழுவி விடுவேன். இப்ப... அப்படி ஒரு நல்ல புத்தகம் கண்ணுல பட்டுருச்சு. அதப்பத்திச் சொல்லத்தான் இத்தனை பீடிகை! (என் கைல பீடின்னு அர்த்தம் பண்ணிக்காதீங்க... படிக்கறவங்களை தயார்படுத்தறதுக்காக சுத்திவளைக்கறதைக் குறிக்கற வார்த்தைங்க).

 தமிழ் வகுப்புல தமிழாசிரியர் பாடம் நடத்தற மாதிரி இலக்கணத்தைச் சொல்லிக் கொடுக்க ஆரம்பிச்சா, படிக்கறவங்க புத்தகத்தைக் கீழ வீசிட்டு நகர்ந்துடுவாங்கன்னு நல்லாப் புரிஞ்சு வெச்சிருக்கறாரு நூலாசிரியர். அதனால ரெண்டு நண்பர்கள் பேசிக்கற மாதிரி உரையாடலை அமைச்சு மெல்லிய நகைச்சுவை கலந்து எழுதி, காப்ஸ்யூலுக்குள்ள மருந்தை அடைச்சுத் தர்ற மாதிரி எளிமையா தமிழ் இலக்கணப் பாடத்தை நடத்தியிருக்காரு. படிக்க சுவாரஸ்யமா இருந்துச்சு. இன்றைய மாடர்ன் இளைஞர்களும் படிச்சுப் புரிஞ்சுக்கற மாதிரி லேட்டஸ்ட் சினிமாப் பாட்டுகள் உட்பட எளிய .உதாரணங்கள் கூறி தமிழ் கற்பிக்கப்படுகிறது இப்புத்தகம் மூலமா.

இடக்கரடக்கல் அப்படின்னா என்னன்னு தெரியுமா உங்களுக்கு? சரவணபவன்ல அறிமுகப்படுத்தியிருக்கற புது டிபனான்னு கேட்டீங்கன்னா உங்களுக்கு விமோசனமே கிடையாது.

தொடை தெரியுமா? ‘ஓ! ரம்பா பல படங்கள்ல காட்டியிருக்காங்க, பாத்திருக்கேனே’ன்னு சொன்னீங்கன்னா நீங்க தேற மாட்டீங்க. ‘இயைபுத் தொடை’ன்னு ஆரம்பிச்சு தமிழ்ல ரூல்ஸே இருக்குது.

அப்புறம்.... புணர்ச்சி விதிகள் தெரியுமா? இந்தக் கேள்விக்கு மட்டும் முகம் பிரகாசமாகுது. ‘தெரியும்’னு பலமா தலையாட்டறீங்க... நீங்க நினைக்கிறது இல்லீங்க... தமிழ்ல ரெண்டு வார்த்தைகளைச் சேர்க்கறதுக்கு, இயல்புப் புணர்ச்சி, விகாரப் புணர்ச்சின்னு ரூல்ஸ் இருக்கு. அதத்தான் கேட்டேன்.

அப்புறம் எந்த இடத்துல ‘ஒரு’ங்கற வார்த்தைய பிரயோகிக்கணும், எங்க ‘ஓர்’ வரணும்னு தெரியுமா உங்களுக்கு? தமிழ் வார்த்தைகள்ல எங்க வலி மிகும் தெரியுமா...? சரி.. சரி... நீங்க உருட்டுக கட்டையவும், பெண்கள் பூரிக் கட்டையவும் வீசி எனக்கு வலி மிகுந்து போறதுக்குள்ள விஷயத்தைச் சொல்லிடறேன்.. அதுவும் தமிழ் இலக்கணத்துல ஒரு பகுதிதாங்க.

இதுபோல பல தலைசுற்ற வைக்கிற விஷயங்களை, கொஞ்சம் கூடக் குழப்பமில்லாமல், நகைச்சுவை ததும்புகிற எழுத்து நடையில் சொல்லித் தருகிறது ‘ஜாலியா தமிழ் இலக்கணம்’ என்கிற புத்தகம். இதை எழுதியிருக்கிறவர் இலவசக் கொத்தனார் (ராஜேஷ் கர்கா) என்பவர். இவர் முன்னாடியே ‘ஈஸியா பழகலாம் வெண்பா’ன்னு ஒரு புத்தகம் எழுதி, வெண்பா எழுதப் பயிற்சி கொடுத்திருந்தார். இப்ப இது. பயன் தரும் 112 பக்கங்கள் கொண்ட இந்த நூலை ரூ;75 விலையில சென்னை ராயப்பேட்டையில, லாயிட்ஸ் ரோட்ல, அம்பாள் பில்டிங்கில, 177/103, முதல் தளம் என்ற இலக்கத்தில் இருக்கிற கிழக்கு பதிப்பகம் வெளியிட்டிருக்காங்க. (தொலைபேச: 4200 9603)

தப்பில்லாம தமிழ் எழுத விரும்பறவங்களுக்கு இந்தப் புத்தகத்தை நான் சிபாரிசு பண்றேன். வாங்கிப் படித்துப் பலனடையுங்கள். உரையாடல் வடிவத்துல சொல்லியிருக்கறதால அதுல உள்ள நகைச்சுவையப் படிச்சு சிரிச்சுட்டு பாடத்த மனசுல வாங்கிககாம போயிட்டா என்ன பண்றதுன்னு யோசிச்சு, ஒவ்வொரு அத்தியாய முடிவிலும் அந்த சாப்டர்ல போதிக்கப்பட்ட இலக்கணங்களை சிறு குறிப்புகளா, புல்லட் பாயிண்ட்கள் வைச்சு கொடுத்திருக்கறது இந்த நூலோட கூடுதல் சிறப்பு.

79 comments:

 1. அருமையான பதிவு சார்.. தமிழ் இலக்கணம் எல்லோருக்குமே கடினமான பகுதிதான்.. அதை ஈஸி ஆகா படிக்க முடியுமென்றால் கட்டாயம் வாங்கி படிக்கலாம்.. எழுத்தாளரின் யாப்பிலக்கணத்தைப் பற்றிய புத்தகம் முன்னமே கேள்விப் பட்டதுண்டு...

  ReplyDelete
  Replies
  1. முத்தான முதல் கருத்து தந்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

   Delete
 2. தமிழ் இலக்கண புத்தக விமரிசனம் அருமையாக இருக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. விமர்சனத்தை ரசித்த உங்களுக்கு என் மனம் நிறை நன்றி!

   Delete
 3. நல்ல நூல் அறிமுகம்...பகிர்ந்தற்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. படித்து ரசித்த உங்களுக்கு உளம் கனிந்த நன்றி!

   Delete
 4. குழந்தைகளுக்கு தமிழ் இலக்கணம் சொல்லித் தருவதில் பலருக்கும் சிரமம் தான்...!

  இன்றைக்கு மிகவும் தேவைப்படும் புத்தகம் தான்...

  ReplyDelete
  Replies
  1. படித்து ரசித்த உங்களுக்கு என் மனம் நிறை நன்றி!

   Delete

 5. தமிழ் தப்பு தப்பா எழுதுகிறோமுன்னு வருத்தப்படுகிறோம் ஆனால் அப்படியாவது எழுதுகிறார்களே என்று சந்தோஷப்படும் காலம் இது. இந்த கால குழந்தைகள் அதுவும் தமிழ்நாட்டில் வளரும் குழந்தைகள் பல தமிழில் மட்டும் பேசுகிறார்களே தவிர தமிழில் எழுத தெரியாமல் பலர் இருக்கின்றனர் என்பது மனதை வருத்த செய்யும் செய்தியாகவே இருக்கிறது

  ReplyDelete
  Replies
  1. நெஞ்சை நெருடும் நிஜம்தான் இது நண்பா. மிக்க நன்றி!

   Delete
 6. இந்த நூலை அறிமுகப்படுத்திய உங்களுக்கும் ,நூலாசிரியர் இலவசக் கொத்தனார் (ராஜேஷ் கர்கா) அவர்களுக்கும் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. படித்து ரசித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!

   Delete

 7. இந்த புணர்ச்சி ப்ரச்னையை முதலில் துவங்கிய பெருமை திரு அப்பாதுரை அவர்களுக்கு மட்டுமே.

  ஆக அவருக்குத்தான் இந்த ஜாலியா தமிழ் இலக்கணம் என்ற நூலை இலவச கொத்தனாரிடமிருந்து மொத்தமாக வாங்கி இலவசமாக வாசகர் அனைவருக்கும் வினியோகம் செய்யும் உரிமை உண்டு.

  ஒரு புத்தகம் விலை ரூ 75 தான்.அமெரிக்க செலாவணியில் சுமார் ஒண்ணே கால் டாலர் தான். மொத்தம் 125 டால்ரே.

  ஒரு நூறு புத்தகங்கள் அவர் கணக்கில் வாங்கி தாங்கள் ந்டத்த இருக்கும் பதிவாளர் கூட்டத்திற்கு வரும்
  எல்லோருக்கும் திரு அப்பாதுரை அவர்களின் அன்பளிப்பாக தரவும்.

  ஒரு கன்டிஷன் மட்டும் போட்டுடுங்க..

  இனி அடுத்த பதிவாளர் பேரவை நடக்கும் வரை வெளியிடப்படும் ஒவ்வொரு பதிவுக்கும் ( மின்னல் வரிகள் மற்றும்
  மூன்றாம் சுழி ) பின்னூட்டம் போடுபவர் மட்டுமே இந்த புத்தகத்தை இலவசமாகப் பெறத் தகுதி படைத்தவர்.

  சுப்பு தாத்தா.
  www.subbuthatha72.blogspot.com
  www.subbuthatha.blogspot.com

  ReplyDelete
  Replies
  1. சூப்பர் ஐடியா தந்த சுப்புத் தாத்தாவிற்கு மனம் நிறைய நன்றி!

   Delete
  2. Great idea. Consider it done.
   எனக்கு ஒரு காபி அப்புறம் எல்லாம் தெரிஞ்ச  கவினயாவுக்கு ஒரு காபி, போக மிச்சத்தை கொடுத்துரலாம் :)

   இலவசக் கொத்தனார் - க்  உண்டா? - புத்தகமா? சுவாரசியமாத்தான் இருக்கும்..

   Delete
  3. actually, இதைத் துவக்கியது சசிகலா.

   Delete
  4. Actually, இதைத் துவக்கியது சசிகலா.

   Delete
 8. இந்த புக், புக் பேர் ல இந்த ரூபக் பையன் வாங்கினான், அண்ணே படிச்சிட்டு தரேன் நீங்க படிங்கன்னு சொன்னான்,பயபுள்ள கரைச்சி குடிச்சிட்டான் போல :-)

  ReplyDelete
  Replies
  1. புக்கை வாங்கி நீயும் ஒரு டோஸ் கரைச்சுக் குடிச்சுடு சீனு!

   Delete
 9. நல்லது கணேஷ். நிறைய பேருக்கு (என்னையும் சேர்த்துதான்..) இந்தப் பிரச்சனை இருக்கிறது. இலக்கணம் என்றாலே மிகவும் கடினம் என்ற எண்ணத்தை மாற்றி ஜாலியாகவும் இலக்கணம் பயிலமுடியும் என்றால் யார்தான் மாட்டேன் என்பார்கள்? நல்லதொரு முயற்சி. எழுதிய இலவசக் கொத்தனார் அவர்களுக்குப் பாராட்டுகள். தகவலைப் பகிர்ந்த தங்களுக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. எத்தனை சிறந்த கவிதாயினிக்கு என்னே தன்னடக்கம்! உங்களுக்கு என இதயம் நிறை நன்றி!

   Delete
 10. இலவசக் கொத்தனார் இந்தப் பெயரில் ஏதோ வசியம் இருக்கிறது, எனக்கு மிகவும் பிடித்துள்ளது, மேலும் இந்தக் கட்டுரைகள் tamilpaper.net இல் உள்ளன, இலவசமாக கூட படிக்கலாம்

  ReplyDelete
  Replies
  1. tamilpaper.net ல வந்ததுன்னு புக்லயே போட்ருக்காங்க சீனு. லிங்க் தேட அவகாசமில்லாததால புக்கை பத்திப் பகிர்ந்தேன். சொன்னதுக்கு மிக்க நன்றி!

   Delete
  2. பத்து பக்கத குடிச்சிட்டேன் சீனு :) மீதியும் குடிச்சிட்டு உங்களுக்கு தான்....

   Delete
 11. மை அழகோ, பூ அழகோ தெரியல.. ஆனா அத எழுதிப் போடுற அம்மணி அழகோ அழகு.. :-)

  ReplyDelete
  Replies
  1. இந்த எண்ணம் புத்தகத்தை வாங்கினப்போ என் மனசுலயும் ஓடுச்சு... ஹி... ஹி...!

   Delete
  2. ஆவிக்கு குசும்பு ஜாஸ்தி... கோவையில் இருக்குற பெண் பதிவர்களைவிட்டு மொட்டை மண்டையிலேயே கொட்டச்சொல்லணும்....

   Delete
  3. ஆவி சார் நானும் அந்த அம்முணியை பார்த்து தான் இந்த புத்தகத்தை வாங்கினேன் :)

   Delete
  4. நண்பன்டா!!

   Delete
 12. இன்னைக்கே புக் வாங்கிடறேன்... கிழக்கு பதிப்பகம் என்ன் ஆபிஸ்க்கு பக்கம்கிறதால இந்த புக் வேண்டுவோர் என்னை அணுகவும்... 8939706125

  ReplyDelete
  Replies
  1. கிழக்குப் பதிப்பகமா? அட அய்யய்யே !

   Delete
  2. சீனு ... அவசரப்பட்டு வாங்கிட்டோமோ ?

   Delete
  3. தாராள மனதுடன் உதவ முன்வரும் ஸ்.பை. வாழ்க! மிக்க நன்றி!

   Delete
 13. புத்தகம் நல்ல புத்தகம்தான். எல்லாம் சரி, அதென்ன இடையில ரம்பான்னு படிச்ச மாதிரி நினைவு!! இதுக்குதான் சினு, ஸ்கூல் பையன் போல சின்ன பசங்க சகவாசம் வேணாம்ங்குறது.., வயசுக்கு தகுந்த பேச்சே இல்ல உங்க கிட்ட!!

  ReplyDelete
  Replies
  1. கொஞ்சம் உணர்ச்சிவசப் பட்டுட்டேன். ஹி... ஹி... இனிமே பழைய மாதிரியே மாறிடறேம்மா...!

   Delete
 14. //tஇயல்புப் புணர்ச்சி, விகாரப் புணர்ச்சின்னு

  ஆஹா! தமிழ் மொழி போல் இனிதாவதெங்கும் காணோம்னு சும்மாவா சொன்னான் மீசைக்காரன்?

  ReplyDelete
  Replies
  1. விகாரப் புணர்ச்சியிலயும் பல வகைகள் இருக்கு அப்பா ஸார். புத்தகம் விளக்குது. மீசைக்காரன் ரசிச்ச தமிழ்!

   Delete
 15. உண்மைத் தான் நான் பல முறை இந்த வல்லினம் மிகும் இடங்கள் மிகா இடங்களில் தடுமாறி இருக்கிறேன். அவசியம் படிக்க வேண்டும். பதிவுக்கு நன்றி ஐயா...

  ReplyDelete
  Replies
  1. ரசித்துப் படித்த உங்களுக்கு மனம் நிறைய நன்றி தமிழ் ராஜா!

   Delete
 16. சிறந்த நூல்களை தேடி பிடித்து விமர்சிக்கும் பாலா சாருக்கு என் வாழ்த்துக்கள் எனக்கும் இந்த நூலை படிக்கும் ஆர்வம் வந்துவிட்டது ஆகவே ஒரு ஸ்கூல் பையன் ஒரு நூலை எனக்கு அனுப்பி வையுங்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது முகவரியை எனக்கு மின்னஞ்சல் செய்யவும்... rakshith.sk@gmail.com

   நன்றி...

   Delete
  2. அவசியம் அனுப்பி வைக்கிறேன் சரளா. கருத்திட்டு என்னை ஊக்கப்படுத்தும் உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!

   Delete
 17. உபயோகமான புத்தகம். வாங்கி விடுவோம்.

  பதிவுகளில் வரும் ந, ண, ன பிரச்னைகள் கூகிளால் ஏற்படுகிறது யுவர் ஹானர்... மறுபடி பார்த்துப் பிழைகளைத் திருத்தாமல் இருப்பதால் வருகிறது! (ஹிஹி.. என்னை நான் டிஃபெண்ட் பண்ணிக்கறேன்!)

  ReplyDelete
  Replies
  1. என் பதிவுகளிலயும் கூட மிகச் சில சமயங்கள்ல அவசரத்துல சரி பாககாம விடற ஒண்ணு ரெண்டு எழுத்துப் பிழை இருக்கும். ஹி... ஹி...! கூடிய வரைக்கும் தவிர்க்கப் பாக்கணும்கறது என் ஆசை ஸ்ரீராம். மிக்க நன்றி!

   Delete
 18. புன்னகையுடன்!பயனும் சேர்த்தளித்த அருமையான
  பகிர்வுகள்..பாராட்டுக்கள்.

  ReplyDelete
  Replies
  1. பயனுள்ள பகிர்வு எனப் பகன்ற தங்கள் அன்பிற்கு மனம் நிறை நன்றி!

   Delete
 19. பலர் தமிழில் தடுமாறுவதைப் பார்த்திருக்கிறேன்..நல்ல முயற்சிக்குப் பாராட்டுக்கள் நூலாசிரியருக்கும் உங்களுக்கும்.

  ReplyDelete
  Replies
  1. ஆம் கலியபெருமாள்! மிகப் பயனுள்ள நூலாக இருந்தது எனக்கும். பலரையும் சென்றடைந்தால் நல்லது என்பதே என் விருப்பம். பாராட்டிய உங்களுக்கு என் உளங்கனிந்த நன்றி!

   Delete
 20. அது என்ன மாயமோ மந்திரமோ தெரியல, நம்ம தமிழனுக்கு தமிழந்தான்யா எதிரி.
  இங்கே வந்து பாருங்க, லண்டன்காரன் ஒருத்தர் இங்க்லீஷ்லே எழுத முடியாம நம்மகிட்டே வந்து எழுத சொல்றத. அப்புறம் அது என்ன, சென்னை தமிழ், மதுரை தமிழ், கொங்கு தமிழ் etc etc?
  இங்க்லீஷ்லே எத்தன இங்க்லீஷ் இருக்கு தெரியுமா?
  அமேரிக்கன் இங்க்லீஷ்
  இங்க்லீஷ் இங்க்லீஷ்
  ஆஸ்ற்றேலியன் இங்க்லீஷ்
  அப்புறம் ஒரு கேவலமான இங்க்லீஷ் இருக்கு, அதான் ஃபிலிபினோ இங்க்லீஷ்
  இப்படி சொல்லிகொண்டே போகலாம்.
  அதேபோலத்தான் அரபி மொழியும்! ஏன் மற்ற எல்லா மொழியும் அப்படித்தான்.
  மொழியின் கனமே வட்டார வழக்குதான்!
  ஒரு புக்கு ஃப்ரீயா கிடைத்ததா அதபத்தி எழுதி ஒரு பதிவ தேத்துனோமா என்று இல்லாமல்...
  "பீடிகை"க்கும் "பீடிக் கை"க்கும் வித்தியாசம் தெரியாமல்...
  (அண்ணே சீனுதான் பிரபலமாகணும்னா இப்படியெல்லாம் சொல்லனும்னு சொன்னது. so தூற்றுவோர் தூற்றலும் போற்றுவோர் போற்றலும், சீனுவுக்கே... மீ எஸ்கேப்!!!)

  ReplyDelete
  Replies
  1. கிணறு சொல்லிச்சு.. அதாங்க.. well said.

   Delete
  2. ஆங்கிலத்தில் அத்தனை வடிவங்கள் இருந்தாலும் தமிழ் போல் அத்தனை இலக்கண விதிகள், குறிப்பாக புணர்ச்சி விதிகள் கிடையாது. அரபு மொழியிலும் நான் அறிந்த வரை புணர்ச்சி விதிகள் கிடையாது.

   தமிழில் தேவையில்லாத விதிகள் நிறைய - இதைச் சொல்வதனால் தமிழின் எதிரியாவோமா என்ன? தமிழ் எளிமையாக வேண்டும் என்பது தானே இங்கே விருப்பம்?

   எதுக்கு ஒற்று சேர்க்கணும் என்பதை அன்றைக்கும் யாரும் விளக்கவில்லை, இன்றைக்கும். கொத்தனார் கூட எங்கு வரும் என்று வேண்டுமானால் விளக்கியிருக்கலாம்.. நான் இன்னும் 'ஏன் தேவை?'யில் இருக்கிறேன்.

   //ஒரு புக்கு ஃப்ரீயா கிடைத்ததா அதபத்தி எழுதி ஒரு பதிவ தேத்துனோமா என்று இல்லாமல்...
   ஹா ஹா.. இதானா விஷயம்!

   Delete
  3. ok, i get it.
   கணேசு வட்டார வழக்கிலிருந்து இலக்கண விதிகளுக்கு லாங்க் ஜம்ப் அடித்திருக்கிறார். ரெண்டும் வேறே வேறே தான்.

   Delete
  4. எலேய் சைதை! நான் புத்தகங்களை ப்ரீயா வாங்கற வழக்கமில்லைங்கறத நல்லாப் புரிஞ்சுக்கோ முதல்ல...! அந்த வார்த்தைய வன்மையா ஆட்சேபிக்கறேன். மத்தபடி நீங்க சொன்ன கருத்தை ‘கிணறு சொல்லுது’ன்னு அப்பா ஸாரே சொல்லிட்ட பிறகு நான் சொல்ல என்ன இருக்கு. இனனொரு வாட்டி இப்படி கமெண்ட் போட்டியின்னா... பக்கத்து பேட்டைல தான் நான் இருக்கேன். நேரா உன் வூடு தேடி வந்துருவேன் - கைகுலுக்க! ஹி... ஹி...!

   Delete
  5. இது வேறயா!
   எங்கிட்டே சால்வையெல்லாம் இல்லீங்கண்ணா, போத்துவதற்கு.
   அப்படியே ஒரு பதிவர் சந்திப்புன்னு சொல்லிக்கலாம்... அப்படித்தானே?
   ஹய்! நல்லாயிருக்குண்ணா. அட்ராஸக்க!

   Delete
  6. அஜீஸு! கோபு அண்ணா பொன்னாடை போர்த்தினப்பவே நான் கூச்சத்துல சங்கடப்பட்டு நெளிஞ்சது எனக்குத்தான் தெரியும். அதெல்லாம் வேணாம்ப்பா... இந்தப் பன்னாடைக்கு ஒரு கிளாஸ் காபி போதும்! ஹி... ஹி...!

   Delete
 21. யாவர்க்கும் பயன் தரக்கூடிய நல்ல பதிவு சகோதரரே!
  பகிர்விற்கு மிக்க நன்றி.
  வாழ்த்துக்கள்!


  த ம.5

  ReplyDelete
  Replies
  1. படித்து ரசித்த உங்களுக்கு என் மனம் நிறைய நன்றி!

   Delete
 22. கண்டிப்பாக நிறைய பேருக்கு அவசியமான அபூர்வ புத்தகம்...

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் எழில். அனைவரும் படித்திருக்க வேண்டியது என்பதே என் கருத்தும். மிக்க நன்றி!

   Delete
 23. அவசியமான ஒரு நூல் பகிர்வு சார் நன்றி

  ReplyDelete
  Replies
  1. படித்து ரசித்த உங்களுக்கு என் மனம் நிறை நன்றி சரவணன்.

   Delete
 24. எனக்கு நிச்சயம் பயன்படும்...... :)

  நல்ல அறிமுகத்திற்கு நன்றி கணேஷ். அடுத்த சென்னைப் பயணத்தில் வாங்கி விடலாம்...

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ வெங்கட்! அவசியம் வாங்கிப் படிச்சு மத்தவங்களையும் படிக்க வெச்சு பயன் பெற வையுங்க. மிக்க நன்றி!

   Delete
 25. பயனுள்ள புத்தகம்தான்..

  ReplyDelete
  Replies
  1. பகிர்வினை ரசித்த உங்களுக்கு என் மனம் நிறைய நன்றி!

   Delete
 26. எல்லோருமே தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் தான்.
  தமிழ் பேப்பர் என்ற இணைய இதழில் திரு சொக்கன் வாராவாரம் 'அம்மா, ஆடு, இலக்கணம்' எழுதுகிறார். இணைப்பு:http://www.tamilpaper.net/?p=7895
  மிகவும் எளிமையாக இருக்கிறது.

  நல்ல புத்தக அறிமுகத்திற்கு நன்றி கணேஷ்!

  ReplyDelete
  Replies
  1. தமிழ் பேப்பரில் சொக்கன் ஸார் எழுதியதை இதுவரை நான் படிக்கலைம்மா. இப்ப பாத்துடறேன். மிக்க நன்றி!

   Delete
  2. சுட்டிக்கு நன்றிங்க Ranjani Narayanan.

   Delete
 27. நானும் படிக்க வேண்டிய மிக அவசியமான நூல் பார்ப்போம் இங்கு வருகின்றதா என்று நன்றி பகிர்வுக்கு.

  ReplyDelete
  Replies
  1. முடிந்தால் வாங்கிப் படியுங்க நேசன். மிக்க நன்றி!

   Delete
 28. அருமையான அறிமுகம் அண்ணா.... மிக்க நன்றி
  எப்போதும் பயனுள்ள விடயங்களையே பகிர்ந்து கொள்கிறீர்கள். பாராட்டுக்கள்..

  ReplyDelete
  Replies
  1. ப்கிர்வினை ரசித்துப் பாராட்டிய தங்கைக்கு என் மனம் நிறைய நன்றி!

   Delete
 29. அண்ணா - மிகவும் அவசியமான அறிமுகம் - அனைவருமே இந்நூலைப் படித்தல் நலம்! குறிப்பாக தமிழ் பதிவர்கள் அவசியம் படித்திட வேண்டும்! - முக்கியமா நான் படிக்கணும் :)))

  ReplyDelete
 30. நல்ல பகிர்வு. ஆசிரியரின் இலக்கண அறிவு பதிவுலகில் பிரபலம். அவசியம் வாங்கி விடுகிறேன். நன்றி.

  ReplyDelete
  Replies
  1. வாங்கிப் படிக்கிறேன் என்ற உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!

   Delete
 31. இணையப் பதிவுகளில் பெரும்பாலும் எழுத்துப் பிழைகளும் ஒற்றுப் பிழைகளும் நேர்வதற்கு காரணம் டைப் செய்ய Transliteration (ஆங்கில எழுத்துக்கள் மூலம் தமிழ் டைப் செய்வது) முறையை பயன்படுத்துவதே.வல்லின மெல்லின வேறுபாடுகளை சரி செய்வது பெரும்பாடாக இருக்கிறது.
  ஆனால் மாணவர்கள் எழுதும்பொது ஏற்படும் தவறுகள் பயிற்சி இன்மையால் ஏற்படுவதே.
  நல்ல பயனுள்ள நூல் அறிமுகம் நன்றி

  ReplyDelete
  Replies
  1. நல்லதொரு கருத்துத் தந்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!

   Delete
 32. So, INI TAMIL MELLA VAZHUM ok Sir. Thank God you have not touched upon Irattai Kilavi (I do not mean any old woman), Adukku Thodar, Thema, Pulima (Not related to any new item introduced in Idly Murugan Kadai), Poovilangai, etc., etc

  ReplyDelete
 33. புத்தகக் கண்காட்சியில் இந்த புத்தகத்தை பார்த்தேன்,இலக்கணம் என்கிற வார்த்தையை பார்த்தவுட்ன் பயந்துக்கொண்டு வாங்காமல் வந்துவிட்டேன், நல்ல பதிவு நிச்சயம் வாங்கி பார்க்கிறேன்...

  www.writerkarthikeyan.blogspot.in

  ReplyDelete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
 • Youtube