Monday, June 3, 2013

பதிவர் சந்திப்பு தேவைதானா?

Posted by பால கணேஷ் Monday, June 03, 2013
னிக்கிழமை காலை அலுவலகத்தில் இருந்தபோது சீனுவிடமிருந்து போன். ‘‘வாத்யாரே... ‘சினிமா சினிமா’ தளத்துல எழுதற ஹாலிவுட் ராஜ் சென்னைக்கு வந்திருக்காரு. ஈவ்னிங் நீங்க ஃப்ரீயா?’’ என்று கேட்டார். ‘‘ரைட்டு. சந்திக்கலாம். எப்போ, எங்கேன்னு சொல்லு’’ன்னு கேட்டேன். ‘‘புலவர் ஐயா வீட்ல வெச்சு சந்திக்கலாம்னு சிவா சொல்றாரு. நீங்க புலவர் ஐயாகிட்ட கேட்டுட்டு ஓகேயான்னு சொன்னா,சங்கத்து ஆட்கள் எல்லாரையும் வரச் சொல்லிடறேன்’’ என்றார் சீனு. புலவர் ஐயாவுக்கு போன் செய்து கேட்டால், ‘‘இதுக்கெல்லாம் கேக்கணுமா என்ன? சந்தோஷமா சந்திக்கலாம். ட்ரிங்ஸ், ஸ்நாக்ஸ் எல்லாம் நான் வாங்கி ‌வைக்கட்டுமா?’’ என்றார். நோ... நோ...! கற்பனையைக் கண்டபடி பறக்கவிடக் கூடாது. ட்ரிங்ஸ் மீன்ஸ்... பேன்டா, ஸ்நாக்ஸ் மீன்ஸ் சமோசா அண்ட் பிஸ்கட்ஸ்! மீ ரொம்ம்ப்ப நல்லவன்! ஹி... ஹி...!

மற்றவர்களை ஒருங்கிணைத்து வரச்செய்யும் பொறுப்பை சீனுவின் தலையில் (கதறக் கதற) கட்டிவிட்டு அலுவலகப் பணியில் மூழ்கினேன். மதியம் சிவாவை பிக்கப் செய்து கொண்டு புலவர் ஐயா வீட்டுக்குச் சென்றோம். சற்று நேரத்தில் இந்த எதிர்பாராத சந்திப்பின் கதாநாயகன் ஹாலிவுட் ராஜ் வந்து சேர்ந்தார். அவருக்கு மிகச்சமீபத்தில் ஆண்குழந்தை பிறந்திருப்பதாகவும், புதிய ஜீவனை வரவேற்க யு.எஸ்.ஸிலிருந்து பறந்து வந்திருப்பதாகவும் நல்ல செய்தி சொன்னார். பையனுக்கு வியாஸ் என்று (அழகான) பெயர் வைத்திருக்கிறாராம். அவரை வாழ்த்தினோம். 

கொஞ்ச நேரத்துல சீனுவும், ஸ்கூல் பையனும் சேர்ந்து வந்து ‘உள்ளேன் ஐயா’ன்னாங்க. ஸ்கூல்பையன் கேக்கும், சாக்லெட்டும் சாப்ட்டுட்டுதான் வருவேன்னு அடம் பிடிச்சதால கொஞ்சம் லேட்டா வந்ததா அடங்கொண்டு.... ஸாரி, திடங்கொண்டு சீனு சொன்னார். அடுத்ததா வந்து சேர்ந்தார் கவிஞர் மதுமதி. அவரைத் தொடர்ந்து கலகலப்பு தளபதி பட்டிக்ஸ்! பின்னாலேயே அரசன். என்ன வினோதம் பாருங்க... சங்க காலத்துல அரசர்கள்தான் புலவர்களுக்கு இடம் தருவாங்க. இப்ப புலவர் அரசன் உட்பட எங்களுக்கு இடம் தர்றாரு. ஹா...  ஹா...!

இத்த‌னை பேர் இருந்தும் சபை நிறைய‌லையேன்னு மனசுல ஒரு எண்ணம் ஒடினதைப் புரிஞ்சுக்கிட்ட மாதிரி ஆரூர் மூனா செந்தில் வந்து சபையை நிறைச்சுட்டாரு. அப்பத்தான் எனக்கு நம்ம தல செ.பி. கிட்டருந்து போன் வந்துச்சு. ஒரு ஆட்டோக்காரரை நம்பி ஏறிட்டதாவும், அவன் தன்னை எங்கயோ நார்த் உஸ்மான் ரோடு தாண்டி கடத்திட்டுப் போகப் பாக்குறான்னும் சொன்னாரு. அடையாறு அஜீதன்னா சும்மாவா...? போன்லயே அவருக்கு புலவர் வீட்டுக்கு வர வழி சொல்லிட்டு, எதிர்கொண்டு அழைத்துவர வேண்டியதாயிடுச்சு.

எல்லாரும் அரட்டை அடிக்க ஆரம்பிச்‌சு சபை கலகலப்பா நடந்துட்டிருந்தது. பதிவுலக விஷயங்கள்லருந்து சினிமா உலக விஷயம் பேசி, எழுத்தாளர்கள் தலைகள் உருட்டப்பட்டு சுவாரஸ்யமா போயிட்டிருந்தது ஜீன்ஸ், டீஷர்ட் போட்ட நவீன நாரதரான நம்ம பட்டிக்ஸ் கண்ணை அது உறுத்திடுச்சு போலருக்கு. டபார்னு ஒரு குண்டைத் தூக்கிப் போட்டாரு.‘‘போன வருஷம் ஆகஸ்ட்டுல நாம பதிவர் சந்திப்பு நடத்தினோம். இந்த வருஷம் நடத்தறதுக்கு இப்ப இருந்தே கலந்து பேசி ஏற்பாட்டைப் பண்ணினாத்தான் சரியா வரும்.’’ என்றார். ‘‘அவசரப்படாத பட்டிக்ஸ்’’ன்னு நான் மறுக்க நினைக்கறதுக்குள்ள உறுப்பினர்கள் ஆர்வமா பண்ணலாமேன்னு பேச ஆரம்பிச்சதும் என் திருவாயை மூடிக்கிட்டேன். அடுத்த வாரம் இதைப் பத்தி மீட்டிங் வெச்சுக்கலாம்னு பட்டிக்ஸ் சொன்னாரு. அப்புறமென்ன... வழக்கம்‌போல நம்ம எக்ஸ்‌பிரஸ் செ.பி. வீட்டுக்குப் போனதுமே சுடச்சுட தன் தளத்துல ஒரு பதிவு முன்னோட்டமா போட்டுட்டாரு.ஆரூர் மூனா செந்தில் ஆர்வக்கோளாறுல போட்டோஷாப் டிசைன் ஒண்ணைப் பண்ணி முகநூல்ல போட, அதை அரசனும், ஸ்கூல்பையனும் ஷேர் பண்ண... இன்னிக்கு நம்ம சீனு வேற இதைப் பத்தி ஒரு பதிவு போட்டிருக்கார்.

ஆனா... எனக்கென்னமோ இந்த வருஷம் பதிவர் திருவிழான்னு ஒண்ணு நடந்தறதுல முழுச் சம்மதமில்ல. சென்ற முறை நடத்தினதே ஒரு கல்யாணத்தை நடத்தின மாதிரி ஃபீலிங். கல்யாணத்துக்கு வந்தவங்களை என்னதான் வுயுந்து வுயுந்து கவனிச்சுக்கிட்டாலும் ஒன்றிரண்டு பேருககு சின்னக் குறைகள் இருக்கத்தான் செஞ்சுது. கல்யாணத்துக்கு எனக்கு இன்விடேஷன் அனுப்பலையேன்னும் சிலர் குறைபட்டுக்கிட்டாங்க. தவிர ‘பதிவர் திருவிழான்னு ஒண்ணு நடத்தறதால ‌பத்து பைசாவுக்கு பிரயோஜனமுண்டா’ன்னு ஒரு கேள்வியும் வந்துச்சு. இதெல்லாம் சென்றமுறை நடத்தியதில் ஏற்பட்ட நெருடல்கள். 

ஆரூரார் டைரியில்ல!. அவருக்கேத்த பெரிய போன்!
இந்த ஆண்டில் பதிவுலகில் ஏனோ முன்பிருந்த உற்சாகம் குறைந்திருப்பதாக என் உள்ளுணர்வு சொல்கிறது. தவிரவும் நிறையப் பதிவர்கள் இணையதளத்தை ஒரு ஓரமாக வைத்துவிட்டு முகநூலில் மற்றும் ட்விட்டரில் உலாவச் சென்று விட்டார்கள். ஆகவே சென்ற முறை வந்த அளவுக்கு அணிதிரண்டு நம்மவர்கள் வருகை இருக்குமா என்ற ஐயம் எனக்குள் எழுகிறது. இன்னொரு முறை இப்படியான உறுத்தல்களைத் தாண்டி ஏன் நடத்த வேண்டும் என்று ஒரு கேள்வியும் அயர்ச்சியும் கூடவே இருக்கிறது ஆனாலும் பட்டிக்ஸ் போட்ட ஒரு விதைக்கு நண்பர்கள் கொஞ்சம் தண்ணீரையும் ஊற்றி விட்டார்கள். அது வளர்ந்து செடியாக, மரமாக வேண்டுமா? இல்லை இப்படியே அதை நிறுத்தி விடலாமா? என்று தோன்றுகிறது.

இந்த ஆண்டும் ஒரு பதிவர் திருவிழாவை நடத்தலாமா? நடத்தலாம் எனில் என்ன விதமாய் உருப்படியாய், யாருக்கும் குறைவராத விதமாய் எப்படி அதைச் செய்யலாம்? இந்த விஷயத்தில் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? உங்களின் கருத்துக்களை உரைத்து ஒரு தெளிவும் உற்சாகமும் (எனக்கு) கிடைக்க உதவுங்கள்.

84 comments:

 1. பதிவர் திருவிழாவில் முகநூல் பதிவர்களையும் இணையுங்கள். ஏனென்றால் Blog என்பதன் பரிணாம வளர்ச்சிதான் MicroBlog. அங்கே ஒரு Events பக்கம் ஆரம்பித்து மக்களை இணையுங்கள். என்னால் ஆன உதவிகளை செய்யக் காத்திருக்கிறேன். வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. கீச்சர்கள் தனியா மீட் நடத்திருக்காங்க சண்முகம். முகநூலர்களையும் பதிவர்களையும் சேர்த்தா பிரம்மாண்ட கூட்டமாயிரும். அது்க்கு இடவசதி, பணவசதி எல்லாம் சமாளிக்கறது கஷ்டம். அதான் பதிவர் சந்திப்புன்னு தனியா நடத்தக் காரணம். உங்கள் ஆலோசனையையும் குறிச்சுக்கறேன். மிக்க நன்றி!

   Delete
 2. மறுபடியுமா.....? ஆரோக்யமான விசயம் தான்...முதல் முறை இருந்த ஈர்ப்பு இப்போது இருக்குமா என்று தெரியவில்லை

  ReplyDelete
  Replies
  1. இதேதான்... இதே எண்ணம்தான் எனக்குள்ளயும் ஓடுது ஜீவா! வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

   Delete
 3. பத்து பைசாவுக்கு பிரயோஜனம் இருக்குற மாதிரி நடத்திட வேண்டியது தானே? இதுல யாருக்குப் பிரயோஜனம் என்பது தான் கேள்வி. குறைந்திருக்கும் உற்சாகத்தைக் கூட்டவும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தலாம். முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. கரெக்ட் அப்பா ஸார்... ஏதாவது பயனுள்ளதா நி்ச்சயம் பண்ணனும். மிக்க நன்றி!

   Delete
  2. கரெக்ட் அப்பா துரைசார்

   Delete
  3. @ பால கணேஷ்

   எத்தனை பேர் வந்தாலும் பரவாயில்லை ஆதரவு அளிக்கும் நண்பர்களை பதிவர்களை நம்பி களத்தில் தைரியமாய் இறங்கினால் அனைத்து பதிவர்களும் ஒன்று கூட சாத்தியம் அதிகம்.

   சென்ற வருடம் இது போல் தான் நடந்தது...

   இப்போதே இப்படி என்றால் இனி வரபோகும் காலங்களில் பதிவுலகம் இன்னும் சோர்வடைந்து போனால் என்ன செய்வது ?


   Delete
 4. //இத்த‌னை பேர் இருந்தும் சபை நிறைய‌லையேன்னு மனசுல ஒரு எண்ணம் ஒடினதைப் புரிஞ்சுக்கிட்ட மாதிரி ஆரூர் மூனா செந்தில் வந்து சபையை நிறைச்சுட்டாரு.//

  ஆரூர் அண்ணே, நீங்க அறையை “நெறை”ச்சிட்டீங்களாம். நோட் திஸ் பாய்ண்ட் யுவர் ஆனர்.

  (எதோ நம்மால முடிஞ்சது)

  ReplyDelete
  Replies
  1. தம்ப்ரீ கண்ணா... எத்த‌ன நாளா இந்தப் பத்தவெக்கற வேலை? ஆரூருக்கு கோவம் வராது. வந்தாலும் சமாளிக்க எனக்கு வழி தெரியும்னேன்! மிக்க நன்றி!

   Delete
  2. ஹா ஹா சூப்பர், கரெட்டு கரெட்டு மெரட்டு மெரட்டு

   Delete
  3. ஆரூர் மூனா செந்தில் :-)

   Delete
 5. நல்ல விஷயம்தான். மீண்டும் பலரையும் சந்திக்க வாய்ப்பு.

  ReplyDelete
  Replies
  1. அப்ப... முரளி சந்திப்பு நடத்தலாங்கறீங்களா? மிக்க நன்றி!

   Delete
 6. வாத்தியார் சொல்வதைப் பார்த்தால் மூன்று அல்லது நான்கு வருடங்களுக்கு ஒருமுறை பதிவர் சந்திப்பு நடத்தலாம் என்று தெரிகிறது. தவிர இன்னொரு விஷயம் உள்ளது. வெளிநாடு வாழ் பதிவர்கள் அனைவராலும் ஒவ்வொரு வருடமும் பதிவர் சந்திப்புகளில் கலந்துகொள்ள முடியாது...

  ReplyDelete
  Replies
  1. அதேதான் தம்பி! ரெண்டு வருஷத்துக்கு ஒரு முறை பண்ணினா ஒரு ஃப்ரெஷ்னஸ் இருக்கும்னு தோணுது. மிக்க நன்றி!

   Delete
  2. மூன்று வருடம் என்பது மிகபெரிய இடைவெளி போன்று தோன்றுகிறது

   Delete
 7. இரண்டாவது திருவிழா நடக்கட்டும்... இப்போதே..................... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. முடிவே பண்ணிட்டாரு நம்ம தி.த. சரிங்கோ...!

   Delete
 8. பதிவர் திருவிழாவுக்கு வாழ்த்துகள்..

  ReplyDelete
  Replies
  1. ரைட்டு. நீங்களும் நடத்தலாம்கறீங்க! மிக்க நன்றி!

   Delete
 9. Replies
  1. நீரெல்லாம் வாழ்த்து சொல்லிட்டு விலகி நின்னுர முடியுமா வேய்? பண்றதுன்னா உம்மையும் இழுத்து விட்ருவோம்ல... மிக்க நன்றி!

   Delete
 10. ///பதிவர் திருவிழான்னு ஒண்ணு நடத்தறதால ‌பத்து பைசாவுக்கு பிரயோஜனமுண்டா’ன்னு ஒரு கேள்வியும் வந்துச்சு.///

  இப்படிகேள்வி கேட்ட நபர்கள் அந்த பதிவு திருவிழா நடக்க ஒரு மயிரும் புடுங்கி இருக்க மாட்டார்கள் நண்பரே. இதுக்கெல்லாம் நீங்க அசரமா நடத்துங்க.....

  பதிவுலகில் கருத்து வேறுபாடுகளால் அடித்து கொள்ளும் பதிவர்கள் இந்த திருவிழாவில் சந்தித்தால் அணைத்து கை கோர்த்து சிரித்து மகிழ்ந்து செல்ல்லுகிறார்களே இதைவிட வேறு என்ன எதிர் பார்க்க வேண்டும்

  சந்திக்க நேரம் கிடைக்கும் போதெல்லாம் சந்தியுங்கள்.. என்னைப் போன்றவர்களுக்குதான் இந்த மாதிரி சந்திக்க நேரம் கிடைக்கவில்லை. வாழ்த்துக்கள்

  ஏன் நீயூஜெர்ஸியிலே சில பெரியவர்கள் இந்தியாவில் இருந்து வந்தவர்கள் சந்திக்கலாமா என்று கேட்டும் எனக்கு சந்திக்க நேரம் கிடைக்காததால் அவர்களை சந்திக்க இயலவும் இல்லை அதில் உங்களுக்கு வேண்டியவரும் ஒருவர்

  ReplyDelete
  Replies
  1. மிக அழகாய் கருத்தைச் சொன்னீர்கள் நணபா! நன்றி! என் நியூஜெர்ஸி நண்பரை நான் நன்கறிவேன். அவசியம் சந்தியுங்கள்...

   Delete
 11. இந்த ஆண்டும் ஒரு பதிவர் திருவிழாவை நடத்தலாமா? //

  என்ன லாமா ? அப்படின்னு ஒரு கேள்வி !! தலாய் லாமா பஞ்சன் லாமா மாதிரி...

  லாம். லாம்.

  அண்மையில் ஒரு ப்ளாக்கர் மீட்டுக்கு சென்னை ஹயாட் ரெசிடென்சி சென்றிருந்தேன். சென்னை ப்ளாக்கர்ஸ் மீட் என்று சொன்னாலும் ஒரு தொண்ணூறு விழுக்காடு அது ஆங்கிலப்பதிவர் குழாம் ஆகவே இருந்தது. எனது நண்பர்
  ஒருவர் தான் ஷங்கர் . அவர் மட்டுமே தமிழில் பேசி என்னை அப்பாடா என்று சொல்லவைத்தார். அதுபற்றிய எனது அனுபவங்களைக்கூட என் வலையில் பகிர்ந்திருந்தேன்.

  http://subbuthatha.blogspot.in/2013/05/blog-post_1996.html


  சுப்பு தாத்தா.

  ReplyDelete
  Replies
  1. ஹா... ஹா... நல்லாச் சொன்னேள் போங்கோ... உங்களோட அந்த அனுபவத்தை நான் படிச்சு கருத்தும் போட்ருக்கேனே... மிக்க நன்றிங்கோ.!

   Delete
 12. பதிவர் திருவிழா இனிதே நடைபெற வாழ்த்துக்கள்

  ReplyDelete
 13. இந்த ஆண்டு, ஆகஸ்ட் பத்தாம் தேதி இரண்டாம் சனிக்கிழமை (வெள்ளிக்கிழமை ரம்ஜான் - பொது விடுமுறை) பதிவர் சந்திப்பு வைத்துக் கொள்ளலாம் என்று என்னுடைய யோசனை.

  ReplyDelete
  Replies
  1. //(வெள்ளிக்கிழமை ரம்ஜான் - பொது விடுமுறை)// சென்ற வருடமும் ரம்ஜான் அன்று தான் நடதுவாதாக இருந்தது இருந்தாலும் இஸ்லாமிய நண்பர்கள் அந்த தினத்தன்று தொழுகை மற்றும் குடும்ப நிகழ்வுகள் இருக்கும் என்று குறிப்பிட்டதால் பின்னர் ஒத்திவைக்கப்பட்டது

   Delete
  2. கரெக்ட் தகவல் சீனு! சென்ற ஆண்டும் ரம்ஜானுக்கடுத்த வாரத்தில்தான் நடத்தினோம். மிக்க நன்றி கே.ஜி. ஸார்!

   Delete
 14. என் இல்லம் வந்து சிறப்பித்த அனைவருக்கும் மிக்க நன்றி!

  ReplyDelete
  Replies
  1. எங்களை நன்கு உபசரித்து மகிழ்ந்த உங்களுக்கு நாங்களல்லவோ நன்றி சொல்ல வேண்டும் ஐயா!

   Delete

 15. /ஒரு ஆட்டோக்காரரை நம்பி ஏறிட்டதாவும், அவன் தன்னை எங்கயோ நார்த் உஸ்மான் ரோடு தாண்டி கடத்திட்டுப் போகப் பாக்குறான்னும் சொன்னாரு. அடையாறு அஜீதன்னா சும்மாவா...?/

  ஹா ஹா...

  ReplyDelete
 16. அவர்கள் உண்மைகள் கருத்தை 100% வழிமொழிகிறேன்.

  ReplyDelete
  Replies
  1. உன் கருத்தை அறிய ஆவலாக இருந்தேன். மிக்க நன்றி சிவா!

   Delete
 17. அட இது தான் காரணமா, சந்திப்பு முடிந்து வரும்பொழுது இதே போன்ற என் ஐயத்தை ஸ்கூல் பையன் சாரிடம் (இங்கு ஒரு ஆச்சரியக் குறி சேர்த்துக் கொள்ளவும் ) கூறினேன்,

  இருந்தாலும் அனைவரது உற்சாகமும் ஒருங்கே அமைந்தால் நலமே... உடன் உற்சாகமாய் உழைக்க நம்மை தயார்படுத்திக் கொள்வோம் வாத்தியாரே... நீங்கள் எல்லாம் முன் நிற்க வேண்டியவர்கள்...

  ReplyDelete
  Replies
  1. அடடே! ஆச்சர்யக்குறி சேத்துட்டேன்பா. உனக்கு என் இதயம் நிறை நன்றி!

   Delete
 18. Replies
  1. மகிழ்வோடு வாழ்த்திய உங்களுக்கு மனம்நிறைய நன்றி மாதேவி!

   Delete
 19. அண்ணா! சந்திப்பு நடத்தலாம்ண்ணா! சில கசப்புகளை சந்திக்க நேரும். இருந்தாலும் ஆரம்பிச்சுட்டதை நிறுத்த வேணாமே!

  ReplyDelete
  Replies
  1. தங்கை சொல்லிட்டா அப்பீல் ஏது? ‌நடத்திரலாம்மா....

   Delete
 20. உங்க அனைவரது வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி..
  வருஷத்துக்கு ஒரு முறை பதிவர்கள் சந்திப்பது அவசியம் என்பது என் கருத்து ...ஆனால் மண்டபத்தில் நடத்தாமல் பள்ளியிலேலோ அல்லது சிறு ஹால்லிலோ சிறிது சிக்கனமாய் நடத்தலாம்..

  ReplyDelete
  Replies
  1. உங்களுடன் கழித்த பொழுது இனிமையானது ராஜ். உங்களின் ஆலோசனையையும் மனதில் கொள்கிறோம். மிக்க நன்றி!

   Delete
 21. உங்கள் சிந்தனையும் நியாயமானதே

  ReplyDelete
  Replies
  1. ஆமோதிப்பிற்கு என் மனம் நிறை நன்றி சக்கரக்கட்டி!

   Delete
 22. Every meet will give you an opportunity to learn some new things which you have keep in mind during next meeting. However, in the subsequent meeting, there will some other unexpected problems which will be a challenging one. Hence, take it easy and go ahead. But one thing is clear; such problems are created out of sheer ignorance and not out of our own willingness. Go ahead.

  ReplyDelete
  Replies
  1. அருமையான கருத்துக்கு என் இதயம் நிறை நன்றி!

   Delete
 23. சகோதரரே!..
  பதிவர் சந்திப்பை பார்க்கவே ஹும்... இப்படியெல்லாமான்னு இருக்குதே... எல்லாவற்றையும் படிக்கும்போது எத்தனை சந்தோஷமா இருக்கு. நல்ல விஷயம்தான்.
  இவை எல்லாம் நீங்க அங்கேயே இருப்பதால் சாத்தியமாகிறது. சரி.ஈ.ஈ.. பதிவர்களில் பதிவள்(பெண்கள்) யாரையுமே காணோம். ஏன் அவங்களுக்கு தனியா சந்திப்பு இருக்குமோ?... இல்லை நீங்க யாரையும் அழைக்கலையோ?..

  அருமை. நல்ல விஷயம். பகிர்விற்கு மிக்க மகிழ்ச்சி சகோ!
  வாழ்த்துக்கள்!

  த ம. 8

  ReplyDelete
  Replies
  1. பெண் பதிவர்கள் யாரும் அருகிலில்லை. அந்தச் சமயம் நாங்கள் எண்ணிப் பார்க்கவும் இல்லை சிஸ். இனிமே நிச்சயம் அவங்களையும் சேர்த்துக்குவோம். சரியா? மிக்க நன்றி!

   Delete
 24. இளமதி எங்களை யாருமே அழைக்கவில்லை. பதிவர் சந்திப்புக்காவது அழைப்பாங்களா பார்ப்போம்.

  ReplyDelete
  Replies
  1. அட... அப்பிடி சொல்லுங்க தோழி...
   இப்போ ஒருத்தர் செம மாட்டீ...:))).

   Delete
  2. ஊரைவிட்டு ‌சசிகலா ரொம்ப தூஊஊரத்துல இருக்காங்க மதி சிஸ்! இப்ப நல்ல புள்ளையாட்டம் உங்கட்ட புகார் குடுக்கறாங்க. இருந்தாலும் அடுத்த சந்திப்புல நிச்சயம் தென்றலை அழைத்து வந்துருவோம். மிக்க நன்றி!

   Delete
 25. ஆரூர் மூனா செந்தில் அவர்களது பதிவில் எழுதிய எனது கருத்தினையே இங்கும் பதிகின்றேன்.

  // நல்ல செய்தி! சென்றமுறை போல் சென்னையிலேயே நடத்த வேண்டாம். என்னைப் போன்றவர்களுக்கு வந்து போகவும், தங்குவதற்கும் சிரமமாக உள்ளது. தமிழ் நாட்டின் மத்தியில் ஒருநாள் பொழுதிற்குள் வந்து போகுமாறு உள்ள இடத்தில் நடத்தவும். தஞ்சாவூர் என்றால் தஞ்சை பெரியகோயிலை இதுவரை பாராத பல பதிவர்களுக்கு பார்க்க ஒரு வாய்ப்பும் அமையும். //

  ReplyDelete
  Replies
  1. நீஙகள் சொன்னபடி செய்வதில் நடைமுறைச் சிக்கல்கள் பல உண்டு. எனினும் குறித்துக் கொள்கிறோம். நற்கருத்திட்ட உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!

   Delete
 26. பதிவர் திருவிழாவை நடத்துவதற்கே என் சம்மதச்சீட்டு.

  எப்பொழுதும் அனைவரையும் மகிழ்விப்பது கடினம், அதை எண்ணி சந்தோஷப்படும் பலரை பட்டினி போடுவது சரியா?

  எல்லா வகையிலும் உதவ\உழைக்க நான் தயார்.

  ReplyDelete
  Replies
  1. ரூபக், உன் போன்ற புதியவர்கள் முதல் பதிவர் சந்திப்பிற்காக ஆவலாக இருப்பதைக் கண்டு மகிழ்ச்சி. உதவி, ஒத்துழைப்பு இரண்டையும் உங்களிடமிருந்து உரிமையுடன் பெற்றுக் கொள்வோம். மிக்க நன்றி!

   Delete
 27. சீனுவுக்கு 3 வருடம் என்பது மிகப் பெரிய இடைவெளியாக இருந்தால் இரண்டே முக்கால் வருடத்தில் நடத்தலாம்! :))

  குலுக்கலில் இந்தமுறை ஒரு கார் பரிசளிக்கப் போவதாய் ஒரு பேச்சு உள்ளதே... நிஜமா?

  ReplyDelete
  Replies
  1. ஹா... ஹா... ஐடியா சூப்பர் ஸ்ரீராம். அப்டியே செஞ்சிரலாம். குலுக்கல் எல்லாம் இல்லாம வர்றவங்க எல்லாருக்குமே ஒரு கார் பரிசளிச்சிரலாம்னு (இருபது ரூபாய் விலையில) இப்பவே நூறு காருக்கு ஆர்டர் குடுத்தாச்சூஊஊஊ!

   Delete
 28. பதிவர் திருவிழா சிறக்க வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 29. my view is to conduct this meet every year ..........nt to make break.......... hw many came is nt important............hw useful to bloggers is noted.....as i attend this meet in 2011 at discovery book palce...

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் நற்கருத்திற்கும் என் மனம்நிறை நன்றி ஸார்!

   Delete
 30. பதிவர் சந்திப்பு கட்டாயம் தேவை கணேஷ்! போனமுறை வந்தபோது பலரைத் தெரியவில்லை. இந்தமுறை எல்லோரையும் சந்தித்துப் பேச ஆவலாக இருக்கிறேன்.

  எப்போது என்று கொஞ்சம் சீக்கிரம்சொல்லிவிடுங்கள். டிக்கட் புக் பண்ண வேண்டும்.(அவரவர் கவலை அவரவர்களுக்கு!)

  ReplyDelete
  Replies
  1. முதல் கூட்டம் நடத்தி, தேதி, இடம் முடிவானதும் நிச்சயம் அறிவிக்கிறோம். அனைவரும் வரவேண்டும் என்பதுதானே இதன் நோக்கம். இயன்றவரை முன்னதாகவே சொல்கிறோம்மா. மிக்க நன்றி!

   Delete
 31. மனிதர்களைச் சந்திப்பதே மகிழ்ச்சியான விஷயம். அதிலும் பதிவர்கள் என்றால் கேட்கவா வேண்டும்? நிச்சயம் நடத்துங்கள். ஆகஸ்டு 10க்குப் பின்னால் வையுங்கள். நானும் யு.எஸ்.சிலிருந்து வந்துவிடுவேன். முயற்சிக்கு என் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் நண்பரே. மிக்க நன்றி!

   Delete
 32. //இத்த‌னை பேர் இருந்தும் சபை நிறைய‌லையேன்னு மனசுல ஒரு எண்ணம் ஒடினதைப் புரிஞ்சுக்கிட்ட மாதிரி ஆரூர் மூனா செந்தில் வந்து சபையை நிறைச்சுட்டாரு//

  தம்பி செந்தில்: நீங்கள் சபையை முழுவதும் ஆக்கிரமித்ததால்...
  இது இரட்டை அர்த்தம் மாதிரி இருந்தாலும், எனது சில கருத்துக்கள் (நான் யாருக்கும் அறிவுரை வழங்குவது கிடையாது; அந்த தகுதி எனக்கில்லை எனபது என் கணிப்பு)).

  உங்கள் படங்களைப் பார்க்கும் போது நீங்கள் எடையை "உடனே" குறைக்கவேண்டும் என்று தான் எனக்கு தோன்றுகிறது. நான் என்றும் 34; வயதில் அல்ல; இடுப்பு அளவில். திருமணத்திற்கு பிறகு, எனது இடுப்பு 38 இஞ்சை தொட்டது; எடை 92 kilo ஆனது; ஆறடி உயரம் என்பதால் பூதம் மாதிரி இருந்தேன் (மாத்ருபூதம் மாதிரி அல்ல).

  என் மனைவி, இதுக்கு மேலே பேண்ட்டை பெரிசு பண்ண மூடியாது மவனே; வயுத்தைக் குறை என்றார்கள். இரண்டு வருடத்தில் குறைத்தேன். ஆம், எடை போடுவது எளிது; குறைக்க எனக்கு இரண்டு வருடம் ஆனது.

  என் மனைவி சொல்லி, இப்போ 28 வருடங்கள் ஆகிறது. இப்பவும் என் இடுப்பு அளவு 34 இன்ச் தான். எடை: 77 கிலோ தான் துணியுடன்; கடந்த 26 வருடங்களாக.

  வயித்தைக் குறைத்தால் பல வியாதிகளில் இருந்து தப்பிக்கலாம். கிண்டலுக்கு சொல்லவில்லை; உங்களைப் பார்த்தால் சொல்லனும் போல இருந்தது. அவ்வளவே...

  பால கணேஷ்:
  இது பொது வெளியில் வருவதை செந்தில் விரும்பாவிடில் தணிக்கை செய்யுங்கள்; இந்த பின்னூட்டத்தை வெளியிடவேண்டாம். ஆனால், அவரிடம் இந்த செய்தியை சேர்த்து விடுங்கள்.

  தம்பி செந்தில், நலமுடன் வாழ ஒரு கருத்து அவ்வளவே!

  ReplyDelete
  Replies
  1. டியர் நம்பள்கி! உண்மையில் நானும்கூட மிகமிகக் குண்டான ஆசாமியாக இருந்தவன்தான். (அதுக்காக இப்ப ஒல்லின்னு நெனச்சிடாதீங்க) ஓரளவு உடம்பு + எடை குறைத்தது எனக்கு நன்றாகவே இருக்கிறது. இன்னும் குறைக்கணும். அக்கறையாய் நீங்கள் சொன்ன அறிவுரையை அவசியம் தம்பி செந்தலிடம் சேர்ப்பிக்கிறேன். நகைச்சுவையாய் சொன்னதா(?) நினைச்சு நான் இப்படி எழுதினதுக்கே கோபப்படாத அவர், உங்க அறிவுரைய கண்டிப்பா ஏத்துக்குவொர்! மிக்க நன்றி!

   Delete
  2. இதிலெல்லாம் வருத்தப்பட ஒன்றுமில்லை நம்பள்கி, உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்கிறேன். நண்பர்கள் கலாய்த்தால் சிரிப்புடனே ஏற்றுக் கொள்வேன். நானும் உடம்பை குறைக்க முயற்சிக்கிறேன். இதில் ஒரு விஷயம் என்னவென்றால் நான் பார்ப்பது ஒயிட் காலர் ஜாப் கிடையாது. தினமும் உடல் வியர்வை சிந்த 3 மணிநேரம் கடுமையாக உழைக்கிறேன். அதற்கேற்ற அளவுக்கு பசிக்கிறது. எனவே டயட் கொண்டு வருவது சிரமமே. வாக்கிங் செல்ல வேண்டும். இந்த மாதத்திற்குள் துவங்கி விடுவேன் என்று நினைக்கிறேன். தங்கள் ஆலோசனைக்கு நன்றி.

   Delete
  3. எனக்குத் தெரிய கொஞ்சம் குண்டா உள்ளவர்கள் "ஹெல்த்தியா"கவும் ஒல்லியாக இருக்கவங்க "அன்ஹெல்த்தியா"கவும் இருக்காங்க! அதனால் இதை வைத்து "ஹெல்த்" எல்லாம் பேசமுடியாது.

   நீங்க உடம்பை குறைக்கணும்னா, அது கஷ்டமான ஒரு டார்கெட்தான். அதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.

   We eat lot of rice (three times a day and "full stomach"). You need to cut down your ice amount just to "HALF" and stop right there. பாதி சாப்பிட்ட உடனே பசி அடங்கிடும். வயிறு நெறையா சாப்பிடணும்னு அவசியம் இல்லை. இதுபோல் செய்து பாருங்க! ஒரு மாதத்தில் 5 கிலோ எடை குறைவீங்க. நம்ம தேவைக்கு அதிகாம "சாதம்" சாப்பிடுகிறோம்..

   நீங்க உடம்பை குறைத்து ஸ்லிம்மானாலும், "என்னப்பா ஆச்சு உனக்கு? எளச்சி துரும்பாப் போயிட்ட?" னு ஒப்பாரிகள் வரத்தான் செய்யும். அதையெல்லாம் கண்டுக்காமல் போகவும்! :) Like I said, it is a very difficult target to achieve but just try and see. :) Good luck!

   Delete
  4. நல்ல கருத்து வருண்! மிக்க நன்றி!

   Delete
 33. எடையை [எளிதாக] குறைப்பது எப்படி என்று ஒரு இடுகை வெளியிடுகிறேன்.
  மனம் இருந்தால் மார்க்கம் உண்டு.
  என்னாலே முடியும் போது...உங்களால் முடியும்.

  ReplyDelete
  Replies
  1. எனக்கும மிக உபயோகமாக இருக்கும் நம்பள்கி! அவசியம் பார்க்கிறேன். மிக்க நன்றி!

   Delete
 34. நடக்கட்டும் விவாதம் ஞாயிறன்று!

  ReplyDelete
  Replies
  1. நீங்களும் வருவீங்களா குட்டன்? நடத்திரலாம் அமர்க்களமா... மிக்க நன்றி!

   Delete
 35. சங்க காலத்துல அரசர்கள்தான் புலவர்களுக்கு இடம் தருவாங்க. இப்ப புலவர் அரசன் உட்பட எங்களுக்கு இடம் தர்றாரு. ஹா... ஹா...!


  இது தான் பால கணேஷ் சார் டச்

  பதிவர் திருவிழா நடத்தலாம் சார் பழைய குறைகளை சரி செய்து சரியாக செய்ய முடியும் கூடவே சமுதாயத்திற்கு பயன் படும் விதமாகவும் ஏதேனும் நற்பணி செய்யலாம்

  ReplyDelete
  Replies
  1. லாம். அவசியம் உங்களின் பங்களிப்பும் இருக்கணும் சரவணன். மிக்க நன்றி!

   Delete
 36. பதிவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்திய உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!

   Delete
 37. First you described him as ADAMKONDA SEENU now you describe him as DIDAMKONDA SEENU
  I think soon he will become a SINAMKONDA SEENU hence please stop these adjectives

  ReplyDelete
 38. சோர்ந்து போயிருக்கும் பதிவுலக நட்புகளுக்கு ஒரு ஊட்ட மருந்தாக அமையலாம் பதிவர் சந்திப்பு....

  ReplyDelete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
 • Youtube