Friday, March 30, 2012

மொறு மொறு மிக்ஸர் - 5

Posted by பால கணேஷ் Friday, March 30, 2012
ன் முயற்சியில் சற்றும் மனம் தளராத நீங்கள் ‘மின்னல் வரிகள்‘ தளத்தை ஓப்பன் செய்ய, அதில் வேதாளம் தோன்றி இப்படிக் கேட்டது. ‘‘மதிப்புக்குரியவரே... நகைச்சுவை நடிகர் ஜே.பி. சந்திரபாபு படங்களில் பாடி நடிக்கும் போது சொந்தக் குரலில்தான் பாடி நடிப்பார். ஒரே ஒரு படத்தில் மட்டும் பி.பி.ஸ்ரீனிவாஸ் பாட, அதற்கு வாயசைத்து நடித்திருக்கிறார். அது எந்தப் படம், எந்தப் பாடல் என்று தெரிந்திருந்தும் சொல்லாவிட்டால் உங்கள் தலை சுக்குநூறாக வெடித்துச் சிதறி விடும்...’’

நீங்கள்: ‘‘சரியாச் சொல்லிட்டா...? என்ன தருவ?’’ என்க, ‘‘கணேஷ்! நீங்க சொல்லுங்க’’ என்று எஸ்கேப் ஆகிறது வேதாளம். நான்: ‘‘‌என் ராஜ்யத்துல பாதியையும் என் மகளையும் தர்றேன்...’’ (ரெண்டுமே இல்லைங்கற தைரியம்தான். ஹி.... ஹி...)

========================================================
ஐயோ, பாவம் சிங்கம்ன்னு...

ன்னிடம் சில பேர், ‘‘அது என்ன சார் பூதம் என்றெல்லாம் பெயர்?’’ என்று கேட்பார்கள். ‘‘இல்லையப்பா. நான் திருச்சில பிறந்ததால அந்தப் பெயர். தாயுமானவ ஸ்வாமிக்கு சமஸ்கிருதத்தில் ‘மாத்ருபூதம்’ என்று அர்த்தம். இந்த பூதம் என்ற பெயர் எனக்கு மேலும் பொருத்தமானதுதான். அதாவது... நான் பூதம் என்றால் மற்றவர்களை மாத்ர பூதம், நிறைய மாத்திரைகளைக் கொடுக்கறதினாலே மாத்திரை பூதம் என்றும் சொல்லலாம். ஆனால் ஒருநாளும் நான் ஏமாத்தற பூதம் இல்லை’’ என்பேன்.
-‘புன்னகைப் பூக்கள்’ நூலில்
(பஞ்சபூதங்களுடன் எக்ஸ்ட்ரா பூதமாக ஐக்கியமாகிவிட்ட)
 டாக்டர் மாத்ருபூதம்
========================================================

மிழை வளர்க்கறேன்னு சிலபேர் செய்யற கொடுமைங்களைப் பாத்தா அழுகாச்சி அழுகாச்சியா வருது. அதுலயும் அரசியல் போஸ்டர்களை சுவர்கள்ல பாத்தா... ‘வெற்றிப்பெற்ற’ அப்படின்னு தேவையில்லாத இடத்துல ஒற்று சேத்திருப்பாங்க. ஆனா ‘மாநில செயலாளர்’ ‘மாநில பொருளாளர்’ன்னு சேக்க வேண்டிய இடத்துல ஒற்று சேர்க்காம விட்ருப்பாங்க. இதைத் தவிர ஏராளமான ஸ்பெல்லிங் மிஸ்டேக்ஸ் வேற! இவங்க இப்படின்னா... பல பத்திரிகை ஆபீஸ்கள்லயும் இந்தமாதிரி கொடுங் காமெடி நடக்கும்.

‘மாண்புமிகு மின்சாரத்துறை அமைச்சர் ............. அவர்கள்’ன்னு போடுவாங்க. மின்சாரத் துறையா மாண்புமிகு? ‘மின்சாரத்துறை அமைச்சர் மாண்புமிகு ........... அவர்கள்’ன்னுல்ல நியாயமா வரணும்? ஒரு ரிப்போர்ட்டர் இப்படி எழுதிக் கொடுத்தார். ‘‘பொதுக்குழுவில் தாறுமாறாக பஸ் ஓட்டி 20 குழந்தைகள் அடிபடக் காரணமாக இருந்த பஸ் டிரைவருக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.’’ அய்யோ... அய்யோ... பொதுக்குழுவுல டிரைவர் ஏன் பஸ் ஓட்டணும்? ‘‘தாறுமாறாக பஸ் ஓட்டி 20 குழந்தைகள் அடிபடக் காரணமாக இருந்த பஸ் டிரைவருக்கு பொதுக்குழுவில் கண்டனம் தெரிவிககப்பட்டுது’’ன்னு வாக்கியம் அமைச்சிருக்கணும். என்னத்தச் சொல்ல? தமில் வால்க!

========================================================

* உலகின் மிகப்பெரிய விமான நிலையம் பீஜிங் நகரிலுள்ள கிஸ்மோடோ விமான நிலையம்தான். 501 சதுரஅடி பரப்பில் வருடத்துக்கு ஐம்பது மில்லியன் பயணிகளை அனுமதிக்கும் அளவில் .இது உருவாக்கப்பட்டுள்ளது.
* பெண்களுக்கு முதலில் ஓட்டுரிமை வழங்கிய நாடு நியூஸிலாந்து.
* கடல்நீரில் இருக்கும் ஆக்ஸிஜனின் சதவீதம் எவ்வளவு தெரியுமா? 85.5%
* உலகிலேயே அதிகமாக சினிமா தயாரிக்கும நாடு.... இந்தியா!
* பூனை இனத்தில் மிகப் பெரிய விலங்கு புலி!
*இந்தியாவின் மிக உயரமான நீர்வீழ்ச்சி கர்நாடக மாநிலத்திலுள்ள ‘ஜோக்’ நீர்வீழ்ச்சி!
*கிளியின் ஆயுட் காலம் - சுமார் 50 வருடங்கள் (மனிதர்க்குத் தோழன்!)

========================================================

பரிதாபப்பட்டு உதவி செஞ்சவனுக்கு...

சுவாமி ----------------ஐப் பேட்டி காண பத்திரிகை நிருபரான என் நண்பன் ராஜா(என்று வைத்துக் கொள்க)வுடன் செல்ல, நான் உடன் சென்றிருந்தேன்.  வரிசையில் நின்றிருககும் போது, முன்னால் கைக் குழந்தையுடன் நின்றிருந்த ஒரு பெண்ணிடம் பேச்சுக் கொடுத்தான் ராஜா. ‘‘பிறந்து ஒரு மாசம்தான் ஆயிருககும் போலருக்கு. இவ்வளவு சின்னக் குழந்தையத் தூக்கிட்டு இந்த வெயில் நேரத்துல சாமியாரைப் பாக்க வரணுமாம்மா?’’ என்றான்.

‘‘நீங்க வேறங்க... இந்தக் குழந்தை பிறக்கறதுக்கே ------------------------ சுவாமிதான் காரணம்’’ என்றாள் அவள். ராஜா ஆர்வமாக குறிப்பு நோட்டுப் புத்தகத்தைத் திறந்து கொள்ள, எனக்கும் சுவாரஸ்யம் ஏற்பட்டது.

‘‘அப்படியா? இவரோட உங்களுக்கு எத்தனை நாளாப் பழக்கம்? என்ன பண்ணினார் அவர்ன்னு விளக்கமாச் சொல்லுங்க?’’ என்றான் ராஜா. அவள் சொன்னாள். ‘‘ரெண்டு வருஷம் முந்தி இங்க வந்திருந்தப்ப, ‘உனக்கு இன்னும் ஒண்ணரை வருஷத்துல குழந்தை பிறக்கும்’னு சொல்லி ஆசீர்வதிச்சு, விபூதி கொடுத்தார். அதுனால பிறந்தவன்தான் இவன். அதைத்தான் நான் சொன்னேன்...’’

நான் ‘ஙே!’. ராஜா: அவ்வ்வ்வ்வவ்வ்!

========================================================

மேகம் கவிந்த வானம்
குடைபிடித்து வந்தாள் என்னவள்
குமுறி அழுதது ஆகாயம்!

-எழுதினவர்: நான்தேங்!

========================================================

அதோட பசி  தெரியல... பாவம்!

டிரைவிங் லைசென்ஸ் தொலைந்து விட்டால் காவல் துறையிடம் புகார் அளித்து, அவர்களிடமிருந்து லைசென்ஸை தேடித்தர முடியவில்லை என்ற சான்றிதழைப் பெற்று அதை விண்ணப்பத்துடன் இணைத்து ஆர்.டி.ஓ. ஆபீஸில் கொடுத்தால் 55 ரூபாய் கட்டணத்துடன் விண்ணப்பித்த தினத்தன்றே டூப்ளிகேட் டிரைவிங் லைசென்ஸ் வழங்கப்பட்டு விடும்.

-சமீபத்துல என் டிரைவிங் லைசென்ஸ் தொலைஞ்சு போனப்ப, டூப்ளிகேட்டுக்கு என்ன செய்யணும்னு விசாரிச்சப்ப இப்படிச் சொன்னாங்க.
இதுதான் டிரைவிங் லைசென்ஸ் காணாமல் போனால் ‌கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறையாம்! போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்து, சர்டிபிகேட் வாங்கி வருவது என்பது புலிப்பால் கறக்கிற வேலைதான். இந்தக் கருமத்துக்கு புதுசாவே டிரைவிங் லைசென்ஸ் வாங்கிடலாம். அததான் செஞ்சேன்!

82 comments:

 1. போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்து, சர்டிபிகேட் வாங்கி வருவது என்பது புலிப்பால் கறக்கிற வேலைதான்.//இந்த விஷயத்துக்கு மட்டுமில்லை.எல்லா விஷயங்களை அணுகும் பொழுது புலிபால கறக்கிற அனுபவம்தான்.

  // இந்தக் கருமத்துக்கு புதுசாவே டிரைவிங் லைசென்ஸ் வாங்கிடலாம். அததான் செஞ்சேன்!// நல்ல வேலை செய்தீர்கள்.

  மூன்று வரிக்கவிதை அபாரம்.கவிஞர் கணேஷ் அண்ணா வாழ்க!

  ReplyDelete
  Replies
  1. பலருக்கும் இநத விஷயத்தில் நொந்த அனுபவம் ஏற்பட்டிருக்கும்கறது என்னோட கணிப்பு. கவிதையைப் பாராட்டிய தங்கைக்கு என் இதயம் நிறை நன்றி.

   Delete
 2. இப்பவு நான் தான் பர்ஸ்டு

  ReplyDelete
  Replies
  1. இப்ப மட்டுமில்ல... எப்பவும் ஸாதிகாதான் ஃபர்ஸ்ட் - எனக்கு உற்சாகம் அளிக்கறதுல. நன்றிம்மா.

   Delete
 3. மிக்சர் நன்றாக இருக்கிறது. தமிழ்க்கொலை பற்றிய நகைச்சுவை அருமை (ஒருவேளை சீரியசாக எழுதினீர்களோ?) உங்களுக்குக் கவிதை வரவில்லை.
  தயவு செய்து அந்த முயற்சியைக் கைவிட்டு விடவும்.

  ReplyDelete
  Replies
  1. முன்ன ஒருமுறை கலைடாஸ்கோப்ல கருத்து சொல்றப்ப ‘கவிதைக்கும் எனக்கும ரொம்ப தூரம்’னு சொன்னேன் நினைவிருக்குங்களா... சும்மா ஒரு ட்ரை பண்ணிப் பாத்தேன். இந்த அபாய விளையாட்டை இத்தோட விட்ரலாம். ஓ.கேவா..? தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

   Delete
 4. ஒரு முப்பத்தைந்து வயது ஆசாமிக்கு, பிறப்புச் சான்றிதழ் வாங்க சற்றேறக்குறைய இருபது மாதங்களும், இருபதாயிரம் ரூபாய்களும் செலவழித்தார், எனக்குத் தெரிந்த உறவினர் ஒருவர். சான்றிதழ்கள் வழங்க எவ்வளவு சட்ட திட்டங்கள் உள்ளனவோ அவைகளின் ஒவ்வொரு பாயிண்டுக்கும் குட்டி தேவதைகள் எல்லோரும் தாராளமாக சம்பாதித்துக் கொள்கின்றார்கள்!

  ReplyDelete
  Replies
  1. ம்... நீங்க சொன்னதும் சரியே. ஆர்.டி.ஓ. ஆபீஸ் வாசல்லயே ஒரு குட்டிதேவதை என்னை அணுகி பேரம் பேசிச்சு. எனக்குததான் இப்படிக் கொடுக்க மனசு வராததால ஒரு வாரம் அலைஞ்சு வாங்க வேண்டியதாச்சு. என்ன செய்ய...? நன்றி ஸார்!

   Delete
 5. மிக்சர் போதாது இன்னும் கொஞ்சம்
  கொடுத்திருக்கலாம்!

  சா இராமாநுசம்

  ReplyDelete
  Replies
  1. இன்னிக்கு பதிவு போடணுமேன்னு அவசரத்துல பண்ணின மிக்ஸர். அதனால உங்களுக்குத் தோணினது நியாயம்தான். அடுத்த முறை இன்னும் சுவையான மிக்ஸரே தந்திடுறேன்... நன்றி ஐயா.

   Delete
 6. இந்ததடவை கொஞ்சம் வித்யாசமான மொறு மொறுப்பு மிக்சர். நல்லா இருக்கு கணேஷ்

  ReplyDelete
  Replies
  1. ரசித்துப் பாராட்டிய தங்களுக்கு என் இதயம் கனிந்த நன்றி.

   Delete
 7. பலசுவைப் பகுதி அருமை
  பயனுள்ள தகவலும் ரசிக்கும்படியான செய்தியும்
  கலந்து கொடுத்தமைக்கு நன்றி
  அந்தச் சதுர அடித் தகவல்தான் கொஞ்சம் குழப்பியது

  ReplyDelete
  Replies
  1. நீங்கள் ரசித்துப் படித்ததற்கு என் மனமார்ந்த நன்றி. இனிவரும் பதிவுகளில் இத்தகைய குழப்பங்கள் நேராமல் இன்னும் அழகாகத் தருகிறேன்.

   Delete
 8. ரொம்பவே conventionalஆக இருக்கிறது. Different ஆக ஏதாவது முயற்சி செய்து
  எழுதவும்.உதாரணம், அந்த சாமியார் ஜோக்.

  ReplyDelete
 9. மிக்சர் ரொம்ப டேஸ்ட். அப்புறம் காவல் நிலையத்துல ஈஸியா வாங்கிடலாம் சார். புகார் கொடுத்துட்டு நிலைய எழுத்தரைப் பிடித்து ஒரு 100 ரூபாய் கொடுத்தா கொடுத்துருவாங்க. அலைய விட மாட்டாங்க. (ஹி..ஹி) உண்மை. டெஸ்ட் பண்ணி வேணா பாருங்க.

  ReplyDelete
  Replies
  1. அடடா... இப்படி ஒரு வழி இருக்கறது தெரியாம ஒரு வாரம் அலைய வேண்டியதாப் போச்சே... இனி ஒரு சந்தர்ப்பம் நேர்ந்தால் ட்ரை பண்ணிப் பாக்கறேன் துரை. மிக்க நன்றி.

   Delete
 10. தமிழை வளர்க்கறேன்னு சிலபேர் செய்யற கொடுமைங்களைப் பாத்தா அழுகாச்சி அழுகாச்சியா வருது.

  ரசிக்கும்படியான செய்தியும்
  பயனுள்ள தகவலும் அருமை.. பாராட்டுக்கள்..

  ReplyDelete
  Replies
  1. ரசித்துப் பாராட்டிய தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

   Delete
 11. வழக்கம்போல மிகசரை ரசிச்சேன்...லைசன்ஸ் கிடைக்கவே இல்லையா கணேஸ்ஹ்?

  ReplyDelete
  Replies
  1. ம்ஹூம்... போராடினதுதான் மிச்சம். ரசிச்சுப் பாராட்டினதுக்கு என் இதய நன்றி.

   Delete
 12. ரொம்ப நல்ல இருக்குது மிக்சர் ...

  முதல் தரம் சாபிடுரணன்

  ReplyDelete
  Replies
  1. முதல் வருகைக்கு நல்வரவு கலை. நல்லா இருக்குன்னு சொல்லி மகிழ்ச்சி தந்ததற்கு நன்றி.

   Delete
 13. தமிழ் பிழையா எழுதுவது ஆருருரு---எனக்கு உண்மையாவேத் தெரியாது எண்டு சொல்ல மாட்டினம் ஆரெண்டு

  ReplyDelete
 14. பூனை இனத்தில் மிகப் சிறிய விலங்கு எது தெரியுமா ??


  ...நல்ல யோசியுங்க ...கிட்னி க்கு வேலைக் கொடுங்கோ ...ம்ஹும் ...இன்னும் தெரியலையா ..சரி விடுங்கோ ...மூளை குறஞ்சிடுமொல்லோ..போதும் யோசனை செய்தது ..மீ சொல்லிப் போடுறேன்


  விடை :குட்டிப் பூனை

  ReplyDelete
  Replies
  1. அடாடா... எனக்கு இருக்கறது சின்ன மூளைன்னு எப்டியோ தெரிஞ்சுக்கிட்டு உடனே விடை சொல்லி அசத்திட்டியேம்மா... ஹி.... ஹி...

   Delete
 15. ------ஐப் பேட்டி காண பத்திரிகை நிருபரான///  ஹ ஹா ஹா இது ஆரெண்டு எனக்கு ரொம்ப நல்லாவேத் தெரியுமே !

  ReplyDelete
  Replies
  1. ஐயோ... பேரைச் சொன்ன வம்பு வருமெண்டுதானே ‘டாஷ்’ போட்டினம்? ஆரெண்டு தெரிஞ்சதை ஆருக்கும் சொல்லிடாத தங்கச்சி...

   Delete
 16. எனக்கு ஒரு பெரிய சந்தேகம் அழுகாச்சி அழுகாச்சியா வருது. இதைப் பார்த்து எனக்கு அழுகை அழுகையாய் வருகிறது . என்ன செய்யலாம் வசந்தமே ?

  ReplyDelete
  Replies
  1. சீத்தலைச் சாத்தனார் என்று ஒரு புலவர் இந்த மாதிர் தமிழ்க் கொலையைக் கண்டால் எழுத்தாணியாலயே தலையில குட்டிக்குவாராம். தலையெல்லாம் புண்ணா இருக்கறதாலதான் அவர் பேர் ‘சீத்தலை’ சாத்தனார்னு ஆச்சாம். நீங்களும் நானும் அப்படி குட்டிக்கக் கூடாதுன்னுதான் பால்பாயிண்ட் பேனா கண்டுபிடிச்சாங்க போலருக்கு... புலம்பறதோட நிறுத்திக்குவோம் தென்றல்!

   Delete
  2. வழக்கில் உள்ள சொற்கள் தமிழின் வளர்ச்சியை எப்படி எல்லாம் பாதிக்கிறது , நாம் எப்படி காயப்படுகிறோம் என்பதை உரைக்க வந்தேன் . உங்கள் ரசிகை நான் .

   Delete
  3. உங்கள் ரசிகை நான்! இதைவிட மகிழ்வுதரும் வார்த்தை வேறென்ன இருக்க முடியும் சசிகலா? மிகமிக மகிழ்வுடன் கூடிய என் நன்றி!

   Delete
 17. மிக்சரோ மிக்சர் ரசிச்சேன்.....!

  ReplyDelete
  Replies
  1. ரசித்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!

   Delete
 18. எல்லா தகவல்களுமே நன்றாக இருந்தது சார்.
  அந்த பாடல் தெரியும் ஆனால் நினைவுக்கு வர மாட்டேங்குது.....அப்படின்னா ஐய்யோ என் மண்டை சுக்கு நூறாக நொறுங்கப் போகுதா......

  ReplyDelete
  Replies
  1. ஹய்யய்யோ... என் தோழியின் தலை வெடிக்கக் கூடாது. விடையைச் சொல்லிடறேன்... படம்: பறக்கும் பாவை. பாடல்: சுகம் எதிலே? இதயத்திலா? என்பது. சரிதானே... தங்களுக்கு என் இதய நன்றி!

   Delete
 19. மொறுமொறு ‘மிக்ஸர்’ வழக்கம்போல் சுவையாக இருந்தது. அதுவும் தமிழ் வளர்ப்பதாக சொல்லிக்கொள்வோரைப்பற்றிய பதிவு அருமை.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் ஸார்... சில காலமாகவே இதைக் கவனித்து மனதில் புலம்பியிருக்கிறேன். இப்போ உங்களோடல்லாம் ஷேர் பண்ணிக்கிட்டதுல மகிழ்ச்சி. ரசித்துப் பாராட்டிய தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!

   Delete
 20. பல்சுவை கலவையாக வந்துள்ளது. அனைத்திலும் மெல்லிய நகைச்சுவை உணர்வு அருமை

  ReplyDelete
  Replies
  1. மெலிதான காமெடி டின்ச்சை ரசித்த நண்பர் பாலாவுக்கு என் இதய நன்றி!

   Delete
 21. மாத்ருபூதம் காமெடிகளை நானும் மிக ரசிப்பேன்.

  தமில் கொளைகல் நானும் பல இடங்களில் பார்த்ததுண்டு.

  இருங்க...டிரைவிங் லைசன்ஸ் வாங்கணும்...அப்புறம் தொலைக்கணும்...அப்புறம்தான் இது உதவும் எனக்கு. ஆனால் அதுக்கு முன்னால எதாவது வண்டி வாங்கணும்!

  இந்த சிங்கம் கார்ட்டூன் விகடனில் வந்ததுதானே...!

  (முதல் பாரா மட்டும் நான் படிக்கவே இல்லையே...நம்புங்க!)

  ReplyDelete
  Replies
  1. தமில் கொளை... பாத்து நீங்களும் புலம்பினதுண்டா? சிங்கம் கார்ட்டூன் சாவி ஆசிரியராய் இருந்த தினமணி கதிரில் வந்தது. (நல்லா இருக்கில்ல... இன்னும் நிறைய சாவி ஜோக்ஸ் கைவசம் இருக்கு) முதல் பாரா படிககலையா..? நம்பிட்டேன்! நன்றி ஸார்!

   Delete
 22. நவ்ரங்க் மிக்சர் அருமை!
  எஸ்.பாலச்சந்தருக்கு ஒரு படத்தில் சந்திரபாபு பின்னணி பாடியிருக்கிறார் தெரியுமா?

  ReplyDelete
  Replies
  1. மிக்ஸரை ரசித்த தங்களுக்கு நன்றி! எஸ்.பாலசந்தருக்கு சந்திரபாபுவா...? ‘மாமன் மகள்’ படம் என்று மெலிதாக நினைவு. சரிதானா ஸார்?

   Delete
 23. நல்ல பகிர்வுகள். லைசன்ஸ் வாங்க நீங்கள் செய்த முறைதான் சரி!!!

  ReplyDelete
  Replies
  1. முன்பொருமுறை என் செல்போன் தொலைந்தபோது இன்ஷுரன்ஸ்க்காக காவல் துறையில் புகார் கொடுத்து இந்த மாதிரி சர்டிபிகேட் வாங்க நாயாய் அலைந்திருககிறேன். அப்போது ஆன செலவு செல்போன் தொகையில் 30 சதவீதம். அதனால்தான் இம்முறை இப்படிச் செஞ்சாச்சு. நல்ல பகிர்வென்று பாராட்டிய தங்களுக்கு என் இதய நன்றி!

   Delete
 24. ஆகா கவிதை.அதுவும் காதல் கவிதை மொறு மொறு வாசனை ருசி !

  தமிழ் ஆசானே பயமாத்தான் கிடக்கு.நானும் சிலசமயங்களில் சொற்களை இடம்மாறிப்போடுவது உண்டு !

  ReplyDelete
  Replies
  1. ஆஹா... நீங்கல்லாம் எழுதற கவிதைக்கு முன்னாடி பாத்தா இது குழந்தையோட கிறுக்கல் இல்லையா? நீங்க பயப்பட வேண்டாம். உங்களின் தமிழ் நல்லாத்தான் இருக்கு ஃப்ரெண்ட்!

   Delete
 25. டிரவிங்க் லைசன்ஸ் தொலைஞ்சு போனா இவ்வளவு கஷ்டப்படனுமா? ஓக்கே ஓக்கே நான் வண்டி ஓட்ட லைசன்ஸ் வாங்கினா பத்திரமா பார்த்துக்குறேன்ண்ணா

  ReplyDelete
  Replies
  1. நல்லதும்மா... நான் கூட வீடு மாறினதுலதான் தொலைச்சுட்டேன். இனி உஷாரா இருப்பம்ல...

   Delete
 26. மேகம் கவிந்த வானம்
  குடைபிடித்து வந்தாள் என்னவள்
  குமுறி அழுதது ஆகாயம்!
  >>>
  அண்ணன் கவிதையை பார்த்து நான்கூட குமுறி குமுறி அழுதேன்.

  ReplyDelete
  Replies
  1. அடடா... கவிதை மாதிரி ஒண்ணை எழுதி அழ வெச்சுட்டனா? இனி அழாமல் சிரிக்கவே வெக்கிறேன். சரிதானே..!

   Delete
 27. நச்சுன்னு சில வரிகளில் கவிதை அருமைண்ணா.

  ReplyDelete
 28. நல்ல சுவையான மிக்சர்.....

  கவிதை எல்லாம் ட்ரை பண்றீங்க! நல்லாத்தான் இருக்கு.... இப்படி ஆரம்பித்தால் தானே பின்னாடி நல்ல கவிதைகள் எழுத முடியும்!

  ReplyDelete
  Replies
  1. மனதுக்கு ஆறுதலளிக்கும் வார்த்தைகள்... மிக்க நன்றி நண்பா!

   Delete
 29. nalla rasikkumpadiyaana-
  thakavalkal!

  vaazhthukkal!

  ReplyDelete
  Replies
  1. ரசித்து வாழ்த்திய தங்களுக்கு மனமகிழ்வுடன் என் நன்றி!

   Delete
 30. ஒரு கிராமத்து நண்பர் தினமும் உணவு விடுதிகளில் சாப்பிட்டே பழகியவர், ஆனா இரண்டு இட்லிக்கு ஒரு குவளை சாம்பார் கேட்பார். அப்படி ஒரு ஆள்.
  தினமும் சாம்பார் கேட்டதால், அவர்கள் சாம்பார் இல்லை சர்க்கரை தான் இருக்கிறது என்றார்கள். அதையும் நிறைய வாங்கி சாபிட்டார்.

  கடைக்காரர் பார்த்தார், இனிமேல் நாம் ஏதாவது செய்தால் தான் அந்த ஆளை கடையிலிருந்து விரட்ட முடியும் என்ற முடிவுக்கு வந்தார்.
  மறுநாள் கடையில் "இன்று முதல் தோசைக்கு சர்க்கரை கிடையாது" என்று எழுதிப்போட்டார்கள்.
  நம்ம ஆள் வந்தார், ஒரு தோசை கொண்டுவாங்க என்றார், வந்ததும் தோசையை வாங்கி
  சத்தமே இல்லாமல் சாப்பிட்டார். கடையின் முதலாளிக்கு மிகுந்த சந்தோசம், சிரித்திக்கொண்டே இருந்தார்.
  நம்ம ஆள் அடுத்த தோசையை கொண்டாங்க என்றார், வந்ததும் சர்க்கரை கொண்டு வாங்க என்றார். பரிமாறுபவர் சொன்னார் " இன்று முதல் தோசைக்கு சர்க்கரை கிடையாது".
  நம்ம ஆள் சொன்னார் " இன்று முதல் தோசைக்கு தானே சர்க்கரை கிடையாது, இரண்டாவது தோசையிலிருந்து கொடுக்கணும் ல" என்றார்.
  வார்த்தையை பிரித்து எழுதியதால் வந்த வினையை பார்த்தீர்களா?!!!!

  சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்த்தும் பிரிக்க வேண்டிய இடத்தில் பிரித்தும் எழுதிப்
  பழக வேண்டும்...

  இன்றைய மிக்சர் .....
  ராகமாளிகை....

  ReplyDelete
  Replies
  1. போர்டில் இடம் இல்லாததால் இப்படி எழுதினார்களாம்:
   பிராமணர்
   கள் சாப்பிடும்
   இடம்
   -என்று. எப்படி விபரீத அர்த்தம் தருகிறது பாருங்கள் மகேன்! மொழியைச் சரியாகக் கையாள வேண்டும் இல்லையா? ராகமாலிகையை ரசித்த தங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!

   Delete
 31. சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்த்தும் பிரிக்க வேண்டிய இடத்தில் பிரித்தும் எழுதிப்
  பழக வேண்டுமெனபது ரெம்பக் கஷடம்...

  மொறு மொறு மிக்சர்ல 60வது ஆளா கருத்திடுகிறேன். ரெம்ப நல்லா மொறு மொறு வென்றே இருக்கிறது மிக்சர்.உங்கள் குட்டிக்கவிதையும் நன்று. வாழ்த்துகள் சகோதரா.
  Vetha. Elangathilakam.

  ReplyDelete
  Replies
  1. நற்கருத்திட்டு வாழ்த்திய தங்களுக்கு மனமகிழ்வுடன் கூடிய என் நன்றியை உரித்தாக்குகிறேன்.

   Delete
 32. மிக்சர் நல்லா இருக்கு
  கவிதையும் அருமை

  ரொம்ப நாளுக்கு அப்புறம் ஒரு பதிவு எழுதி இருக்கேன்.வந்து பாருங்க
  ப்ளாக்கர் திரை மூட வைப்பது எப்படி?

  ReplyDelete
  Replies
  1. வெல்கம் சதீஷ்! நீண்ட நாளாச்சு பாத்து... நலம்தானே..! ரசித்துப் பாராட்டியதற்கு என் மனமார்ந்த நன்றி!

   Delete
 33. வணக்கம்! அடையாறு ஆனந்த பவன் ஸ்பெஷல் மிக்சர், காரமும் இனிப்பும் கலந்து இருக்கும். அதே போன்று இப்போதைய உங்கள் மிக்சர்.

  ReplyDelete
  Replies
  1. அ.ஆ.பவனில் முந்திரிப் பருப்பு மிக்ஸர் ரொம்பவே டேஸ்ட்டியாக இருக்கும். அதைப் போல அடுத்த மிக்ஸர் தர முயல்கிறேன். ரசித்துப் பாராட்டிய உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!

   Delete
 34. மிக்ஸர் மிக அருமை எனக்கு 2 பதிவுக்கு வராப்பல கொஞ்சம் பார்சல் அனுப்பவும்.

  ReplyDelete
  Replies
  1. அதுக்கென்ன... அனுப்பிட்டாப் போச்சு. பாராட்டி, உற்சாகம் தந்ததற்கு என் இதய நன்றி நண்பா!

   Delete
 35. This comment has been removed by the author.

  ReplyDelete
 36. // 501 சதுரஅடி பரப்பில் வருடத்துக்கு ஐம்பது மில்லியன் பயணிகளை அனுமதிக்கும் அளவில்//
  501 சதுர அடியில் ஐம்பது மில்லியன் பயணிகளா.. எல்லாரும் எறும்பு சைசுக்கு இருப்பாங்களோ?

  ReplyDelete
  Replies
  1. ‘மேதை’ புத்தகத்தில படிச்ச தகவல் அது. சரிபாக்காம சேத்துட்டேன். ஸாரி! இனி உஷாரா இருப்பேன்ல...

   Delete
 37. ராஜி அக்கா அங்க ஜஞ்சுவை அவியல் இங்க நீங்க மொறு மொறு மிக்சர் ஓஓஓஒ நானும் இந்த மிக்சர் சாப்பிட்டன் அருமையா இருந்தது.........

  ReplyDelete
  Replies
  1. மிக்ஸர் நல்லா இருந்ததா தங்கச்சி? மிக்க மகிழ்ச்சி. என் மனமார்ந்த நன்றி!

   Delete
 38. கவிதை மிக அருமை..பல மணி நேரம் சிந்திக்க வைத்தது..ஈழத்தமிழர்களின் இன்னல்களை இதைவிட சிறப்பாக ஒரு மூன்று வரிகளுக்குள் சொல்லிவிடமுடியாது.வாழ்த்துக்கள்.ஆமாம் எழுதியவர் பெயர்:நான்தேங்!என கூறி உள்ளீர்களே,அவர் சீன கவிஞரா?
  நான்யாங்,நான்யூங் போன்ற சீனக்கவிஞர்கள் எழுதிய பலகவிதைகளை நான் படித்திருக்கிறேன்..இவர் பெயர் புதிதாக இருக்கிறது..
  உங்கள் தமிழாக்கதிற்கும் ஒரு ஸ்பெஷல் பாராட்டு..

  ReplyDelete
  Replies
  1. ஆஹா.... அங்கதச் சுவை மிக்க வரிகளால் உள்குத்து குத்திட்டீங்களே... மறந்தும்கூட இனி கவிதைப் பேட்டைக்குப் போயிட மாட்டேன் ஐயா... மன்னிச்சூ!

   Delete
 39. //உலகின் மிகப்பெரிய விமான நிலையம் பீஜிங் நகரிலுள்ள கிஸ்மோடோ விமான நிலையம்தான். 501 சதுரஅடி பரப்பில் வருடத்துக்கு ஐம்பது மில்லியன் பயணிகளை அனுமதிக்கும் அளவில் .இது உருவாக்கப்பட்டுள்ளது.//

  கணக்கு உதைக்குது!

  ReplyDelete
 40. மிகப் பெரிய விமான நிலையம் 500 ச.அடியில் இருக்கச் சாத்தியமா என்பதைத்தான் குழப்பம் என எழுதி இருந்தேன்
  மற்றபடி தங்கள் எழுத்தில் எப்போதும் எந்த குழப்பமும்
  இருப்பதில்லை.குழம்ப வேண்டாம்

  ReplyDelete
  Replies
  1. எதையும் சரிபார்த்த பின்னரே வெளியிட வேண்டும் என்பதை மனதில் கொண்டேன். நன்றி ஐயா!

   Delete
 41. //இந்தக் கருமத்துக்கு புதுசாவே டிரைவிங் லைசென்ஸ் வாங்கிடலாம். அததான் செஞ்சேன்!// ரொம்ப சரி!
  எல்லாமே சுவாரசியம். கவிதை நல்லா இருக்கு.

  எங்க அப்பாவோட ஊர் திருச்சி. எங்க தாத்தா பேர் மாத்ருபூதம். இவருக்கு குழந்தை பிறக்க தாமதம் ஆனதால் தாயுமானவர் சுவாமிக்கு வேண்டிண்ட அப்பறமாதான் எங்க அப்பா பிறந்ததால எங்க அப்பாவோட பேர் பிச்சை. சின்ன வயசுல எங்க அப்பாவோட பேரை சொன்னாலே எனக்கு கோவமா வரும். ஏன்பா தாத்தா உனக்கு இப்படி பேர் வெச்சான்னு கேட்டுண்டே இருப்பேன். எங்க அண்ணாக்கு எங்க தாத்தாவோட பேர்தான். சண்டை போடும்போது அவனை வெறுப்பேத்த நான் பூதம் பூதம்னுதான் சொல்லுவேன். அதுக்கும் அவன் அடங்கலைன்னா உன்னோட நண்பர்கள் கிட்ட உன் உண்மையான பேரை சொல்லிடுவேண்டா அப்படின்னு வேற பயமுறுத்துவேன். அவன் எதுக்கும் மசியாம போடின்னுட்டு போய்டுவான். :) வீட்டுக்கு வரவங்க யாரவது அவன் பேர் என்னன்னு கேட்டா அவன் சொல்றதுக்கு முன்னாடி முந்திண்டு 'மாத்ருபூதம்'னு சொல்லி அவன் வயத்தெரிச்சலை கொட்டிப்பேன். நல்ல வேளை எங்க பாட்டி பேரு அபித குசலாம்பாள் அப்படின்னு இல்லாம இருந்துதே. :)

  ReplyDelete
  Replies
  1. அட, என் உறவினர்களில் ஒருவருக்கு்க் கூட பிச்சை என்று பெயர் உண்டு. பிச்சை கிருஷ்ணன் என்பது முழுப் பெயர். அவர் பின் பாதியைச் சொல்வார். நாங்களெல்லாம் முன்பாதியைச் சொல்லிக் கூப்பிடுவோம். இந்த விஷயம் நீங்க சொன்னதைப் படிச்சதும்தான் ஞாபகம் வருது. ரசிச்சுப் படிச்சதோட, உங்க அனுபவத்தையும் ஷேர் பண்ணிக்கிட்டதுல சந்தோஷத்தோட என் இதயம் நிறை நன்றியை உங்களுக்கு உரித்தாக்குகிறேன்!

   Delete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
 • Youtube