Thursday, March 8, 2012

நடை வண்டிகள் - 7

Posted by பால கணேஷ் Thursday, March 08, 2012
சுபாவும் நானும் - 4

சுபாவுடன் பழகத் தொடங்கிய ஆரம்ப நாட்களிலேயே ஒரு வாசகனின் ஆர்வத்துடன் அந்தக் கேள்வியைக் கேட்டிருந்தேன் நான். ‘‘எப்படி ஸார் ரெண்டு பேர் சேர்ந்து ஒரு நாவலை எழுத முடியுது?’’ என்று. ‘‘ஒரு டேபிள்ல உக்காந்துககிட்டு அவர் ரெண்டு பக்கம் எழுதிட்டு என்கிட்ட தர, நான் ரெண்டு பக்கம் எழுதிட்டு அவர்கிட்ட தர இப்படியே நா‌வலை எழுதுவோம்னு உங்க மனசுல நினைப்பிருந்தா ரப்பர் போட்டு அழிச்சிடுங்க கணேஷ். நாவலோட தீமும் சம்பவங்களையும் முடிவு பண்ணினதும் எங்கள்ல ஒருத்தர் எழுதற பொறுப்பை எடுத்துப்போம். முழுசா முடிச்சுட்டு மற்றவர்கிட்ட தர, அவர் படிச்சுட்டு திருத்தங்கள் செய்தபின் வேறொரு காப்பி எழுதி பத்திரிகை அலுவலகத்துக்குப் போகும்...’’ என்பது சுபாவின் பதில்.

இங்கே நான் அன்றிலிருந்து இன்றுவரை வியக்கும் விஷயம் என்னவென்றால், இருவரில் யார் எழுதினாலும் வார்த்தைப் பிரயோகங்கள் ஒரே மாதிரிதான் இருக்கும். அது மட்டுமின்றி... உணவு விஷயத்தில், திரைப்பட ரசனையில், புத்தக வாசிப்பில் என எல்லாவற்றிலுமே இருவரின் ரசனைகள் ஒரே மாதிரிதான் இருக்கும். இப்படி 100% புரிதலுள்ள நட்பு அமைவது ஒரு வரம்தான்! அப்படி வரம் பெற்றவர்களுடன் பழகியதில் எனக்கு மிக அகமகிழ்வு!

சுரேஷ் ஸாரை நான் போய்ப் பார்த்தபோது அவர் சொன்னார்: ‘‘கணேஷ்! இப்ப கொஞ்சநாளா எழுதற கமிட்மெண்ட்ஸ் அதிகமாயிட்டதால, நான் நாவலை டிக்டேட் செய்து, கேஸட்ல பதிவு பண்ணிடுவேன். அதை ஜெயந்தி (சுரேஷ்) கேட்டுட்டு எழுதிடுவாங்க. நாங்க அதைப் படிச்சு கரெக்ஷன் செஞ்சு காப்பி எடுத்து பிரஸ்ஸுக்கு அனுப்பிடுவோம். இந்த முறை நாவலை ஜனவரி 1ம் தேதியன்னிக்கு சூப்பர்நாவல் எஸ்.பி.ராமு (ஸார்) கிட்ட குடுக்கலாம்னு நினைக்கிறோம். ஒரு வாரம்தான் இருக்கறதால, கேஸட்டை காதுல கேட்டு, அப்படியே டைப் பண்ணிட முடியுமான்னு பாருங்களேன்...’’ என்றார். இரண்டு கேஸட்டுகளில் அவர் பேசியிருந்ததை வாங்கிக் கொண்டு வந்தேன்.

தெளிவான உச்சரிப்பில், நிதானமான நடையில் அவர் சொல்லியிருந்ததைக் கேட்டு டைப்பிங் செய்தது சிரமமாகவே இல்லை. அருமையான ஒரு த்ரில்லர் அது. மிகவும் ரசனையுடன் அந்த வேலையைச் செய்தேன். ஆனால், டைப் செய்ததை சுபா பார்த்து ஒன்றிரண்டு திருத்தங்கள் சொல்லி ப்ரிண்ட் அவுட்டைத் தர, மீண்டும் ஃபைலை ஓபன் செய்தால் கடைசி சில பக்கங்கள் எப்படியோ Delete ஆகியிருந்தது. டிசம்பர் 31 மாலையில் அவசர அவசரமாக அதை ரீடைப் செய்து, நானே எழுத்துப்பிழை செக் செய்து, இரவு 10 மணிக்கு சுபாவிடம் கொடுத்தேன். மறுநாள் சூப்பர்நாவல் ஆபீஸ் செல்ல என்னையும் உடன்வரும்படி பணித்தார் பாலா. ஒரு நாவலை இருவரும் எப்படி வடிவமைக்கிறார்கள், அதில் ஓட்டைகள் எதுவும் தென்பட்டால் எப்படியெல்லாம் சரி செய்கிறார்கள் என்பதையெல்லாம் ஒவ்வொரு ப்ரூஃப் திருத்தும் போதும் பார்த்து ரசித்த மகிழ்வுடன் விடைபெற்றுச் சென்றேன்.

அடுத்த நாள் காலை புத்தாண்டு வாழ்த்துக்களை மகிழ்வுடன் சுபாவுக்குச் சொல்லி, நாங்கள் சூப்பர்நாவல் அலுவலகம் சென்று ‘குறி தவறாதே’ என்ற அந்த நாவலை குறி தவறாமல் ஒப்படைத்து விட்டு வந்தோம். டைப் செய்ததற்கான தொகையை செக் எழுதி எனக்குக் கொடுத்தார்கள் சுபா. அந்த ஆண்டில் எனக்கு சுபாவின் வேலைகள் மட்டுமின்றி, வெளி‌வேலைகளும் நிறைய வந்து பொருளாதார நிலைமை திருப்திகரமாக அமைந்தது. அதனால் ஒவ்வொரு புத்தாண்டு பிறக்கும் காலையிலும் சுபாவை ‘விஷ்’ செய்து ஆண்டின் முதல் வருமானத்தை சுபாவின் கையால் பெறும் வழக்கமும் தோன்றியது. இன்று வரை (சுபாவின் வேலையை செய்தாலும் இல்லாவிட்டாலும்) அந்த வழக்கம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

இடைச்செருகலாய் ‌(சொல்ல விட்டுப்போன) ஒரு விஷயம்: சுபாவின் சிறுகதைகளை டைப் செய்யும் ப்ராஜக்ட் நடந்து முடியும் தருவாயில் இருந்தபோது ஒருமுறை சுரேஷ் ஸாரைச் சந்தித்தபோது, ‘‘ஏன் ஸார்... உங்க ஆரம்பகாலச் சிறுகதைகள்ல ‘விசித்திர உறவுகள்’ சிறுகதை வரவே இல்லையே... கல்கி மர்மச் சிறுகதை போட்டில பரிசு வேற வாங்கின கதையாச்சே....’’ என்றேன். ‘‘அதான் நாங்க எழுதின முதல் கதை கணேஷ். அதுக்கப்புறம் சில வருஷங்கள் எழுதாமலே இருந்து பின்னர் எழுத ஆரம்பிச்சதால ‘அலைகள் ஓய்வதில்லை’ சிறுகதை எங்க முதல் சிறுகதை ஆயிடுச்சு. அந்த ‘விசித்திர உறவுகள்’ எங்ககிட்ட காப்பியே இல்லை. கல்கி ஆபீஸ்லகூட ஒருநாள் பூராவும் போய் தேடிப் பாத்துட்டோம். அங்கயும் இல்லன்னுட்டாங்க...’’ என்றார்.

நான் நெல்லையில் பழைய புத்தகக் கடையில் வாங்கிப் படித்த ஒரு தொகுப்பில் அந்தக கதையைப் பார்த்தேன் என்றும், அதன் பிரதி என்னிடம் இருக்கிறதென்றும் நான் சொல்ல, சுபா துள்ளிக் குதிக்காத குறை! நெல்லை சென்றதும் அனுப்பி வைப்பதாகக் கூறி அனுப்பி வைத்தேன். சுபா அதில் மகிழ்ந்து போய் என்ன வார்த்தைகளால் நன்றி சொல்லியிருக்கிறார்கள் பாருங்களேன்... (எங்களின் பர்ஸனல் மேட்டர்கள் நிறைய பரிமாறப்பட்டிருப்பதால் அந்தக கடிதத்தின் ஒரு பகுதி மட்டும் இங்கே உங்கள் பார்வைக்கு)

அதன்பின் மற்றும் சில நாவல்கள், தொலைக்காட்சித் தொடர்களுக்கான வசனங்கள் என்று சுபாவுடன் கரம்கோர்த்த பணிகள் தொடர்ந்து கொண்டிருந்தன. ஏராளமான கேஸட்டுகள் எங்களுக்குள் புழங்கிக் கொண்டிருந்தன. இப்படியாகச் சில காலம் கழிந்தபின் பாலா ஸார் ஒருநாள் என்னை அழைத்து சுபா துவங்கவிருக்கும் ஒரு புதிய முயற்சியைப் பற்றியும், அதற்கு நாங்கள் இணைந்து செய்யவிருக்கும் பணியைப் பற்றியும் பேசினார். எனக்கு மிகமிகப் பிடித்தமான பணி அது என்பதால் கேட்டதும் அளவில்லாத மகிழ்ச்சி அடைந்தேன் நான்.
அந்தப் பணியைப் பற்றி...
-தொடர்கிறேன்.

66 comments:

 1. நடை வண்டியில் நடை பழகும் சுகம் - உங்கள் எழுத்து நடையில்.... தொடருங்கள் நண்பரே....

  ReplyDelete
  Replies
  1. எழுத்து நடையைப் பாராட்டி ஊக்கமளித்த நண்பருக்கு என் மனமார்ந்த நன்றி.

   Delete
 2. ம்..நல்லதொரு அனுபவங்களைப் பெற்றிருக்கிறீர்கள்..அந்த கடிதத்தை பதிவிட்டது சிறப்பு.. (முழுவதும் பதிந்ததிருக்கலாமே).ஆர்வம் அடுத்த அத்தியாயத்தின் மீது.

  ReplyDelete
  Replies
  1. அதிகம் காக்க வைக்காமல் உடன் வந்துவிடும் அடுத்த பகுதி! உங்களுக்கு என் இதய நன்றி கவிஞரே!

   Delete
 3. சார் உங்ககிட்ட பேசுவது பிரபல எழுத்தாளர்களோடு பேசுவது போலிருக்கிறது. அப்புறம் எனக்கே அந்த சந்தேகம் உண்டு. சுரேஷ் பாலா இருவரில் நாவலில் எந்த்தெந்த பகுதிகளை யார் எழுதுவார்கள் என்று

  ReplyDelete
  Replies
  1. இப்போது சந்தேகம் தெளிவாகியிருக்கும்தானே... வருகைக்கும் கருத்துக்கும் என் மனமார்ந்த நன்றி பாலா!

   Delete
 4. சூப்பர் அனுபவம் நேர்த்தியான எழுத்து நடை நீங்களும் நாவல் எழுதலாம் என நினைக்கிறேன்.

  அருமைப் பதிவு வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. அப்படியா தனசேகரன் நினைக்கிறீர்கள் நீங்கள்? சரி, முயன்று எழுதிவிட்டால் போகிறது. உற்சாகமூட்டிய தங்களின் நற்கருத்துக்கு என் இதய நன்றி!

   Delete
 5. இயல்பினில் மனதளவில் ஒன்றுபட்டாலே
  இத்தகைய ஒற்றுமை வரும்...
  அது திரு.சுபா அவர்களுக்கு அமைந்ததில் நமக்கு மகிழ்ச்சியே..
  அதனால் தானே இவ்வளவு அருமையான நாவல்களை
  படிக்க முடிகிறது..

  நீங்க ஒரு பாக்கியசாலி நண்பரே..
  இத்தகைய எழுத்தாளர்களுடன் உறவாடும்
  வாய்ப்பு கிடைத்தமைக்காக...

  நடைவண்டியில் இன்று கல்யாணி ராகத்துடன்
  பயணம் ........

  ReplyDelete
  Replies
  1. வாவ்! தேர்ந்த ரசனை உங்களுடையது மகேன்! எனக்குப் பிடித்த கல்யாணி ராகத்துடன் ஒப்பிட்டு நீங்கள் பேசியதில் மிகமிக மனமகிழ்வுடன் தங்களுக்கு என் நன்றியை உரித்தாக்குகிறேன்!

   Delete
 6. சுவாரஸ்யமான நினைவலைகள்...தொடருங்கள்... பின் தொடர்கிறேன்..

  ReplyDelete
  Replies
  1. ஆரம்பம் முதலே என்னுடன் நீங்கள் தொடர்ந்து வருவதில் மிகுந்த மனநிறைவு எனக்கு. மிக்க நன்றி நண்பரே...!

   Delete
 7. தம்பீ!
  நடை வண்டித் தொடரே
  சுவை மிகு கதைபோல வருகிறது.
  ஏதேனும் மர்மக்கதை எழுதுங்கள் இது
  அன்பு வேண்டுகோள்!

  சா இராமாநுசம்

  ReplyDelete
  Replies
  1. நீங்கள் சொல்லி செய்யாமலா? இத்தொடர் முடிநத கையோடு தொடங்கி விடுகிறேன் ஐயா... தவறாமல் என்னை உற்சாகப்படுத்தும் உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!

   Delete
 8. தொடருங்கள் வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. தொடர்ந்து ஆதரவு தரும் உங்களின் வாழ்த்துக்களினால் மனமகிழ்வுடன் என் நன்றி!

   Delete
 9. அருமை..அருமை..சிறப்பான பகிர்வு..மிக்க நன்றி சார்.

  ReplyDelete
  Replies
  1. உங்களின் பாராட்டுக்கும், ஆதரவுக்கு என் மனமார்ந்த நன்றி குமரன்!

   Delete
 10. நானும் தொடர்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. இனிமையான எழுத்துக்களுக்குச் சொந்தக்காரரான தாங்கள் தொடர்வது எனக்குப் பெருமை. மிக்க நன்றி நண்பரே!

   Delete
 11. கணேஷ் நல்லவர்களுடன் பழகும் வாய்ப்பு உங்களுக்கு கிடசீருக்கு சந்தோஷமான விஷயம் அதிலும் நிறைய எழுத்தாளர்களுடன் ப்ழகும் வாய்ப்பு. அதை எங்களுடன் பகிர்ந்து கொள்வது மிகவும் சந்தோஷமா இருக்கு சந்தோஷத்தை பகிர்ந்து கொண்டால் ரெட்டிடிப்பு ஆகும்னு சொல்வாங்க இல்லே அது உண்மைதான்.

  ReplyDelete
  Replies
  1. உண்மை... நண்பர்களுடன் பகிர்வதில் நான் மிகவும் சந்தோஷம் அடைகிறேன்ம்மா. தங்களி்ன வருகையும் கருத்தும் தந்த மகிழ்வுடன் தங்களுக்கு என் நன்றி!

   Delete
 12. வணக்கம்! ஒரே நாவலை இரண்டு எழுத்தாளர்கள் “சுபா” என்ற பெயரில் எப்படி எழுதினார்கள் என்ற எனது சந்தேகம் தீர்ந்தது. நன்றி! தொடரட்டும் தங்கள் நடை வண்டிப் பயணம்.

  ReplyDelete
  Replies
  1. நீங்களெல்லாம் தொடர்வதில் மனமகிழ்வுடன் தங்களுக்கு என் இதய நன்றி நண்பா!

   Delete
 13. நடைவண்டியில் பயனிப்பதில் இனையில்லா நட்பின் உள்விடயங்கள் மற்றும் தங்களின் தனித்துவம் என்பனவற்றை ரசிக்கும் படியாக இருக்கின்றது தொடருங்கள் பின் வருகின்றேன் நண்பரே!

  ReplyDelete
  Replies
  1. தெம்பூட்டிய தங்களின் பாராட்டினால் மனமகிழ்ந்து என் மனம் நிறை நன்றியை தங்களுக்கு உரித்தாக்குகிறேன்!

   Delete
 14. இனிமையாப் போகுது நடைவண்டி.. கூடவே வர்றோம்..

  ReplyDelete
  Replies
  1. என் பயணத்தில் நீங்களும் உடன் வருவதில் எனக்கு மிகுந்த மனநிறைவு. தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!

   Delete
 15. நடை வண்டிகள் என்ற உங்கள் தொடர் அருமையாக வந்து கொண்டிருக்கிறது. இந்த தொடரை நீங்கள் விகடனுக்கு அனுப்பி மீதியை அதில் தொடரலாமே. முயற்சி செய்து பார்க்கலாம் என்பது எனது கருத்து. உங்கள் எழுத்துக்கும் பெரிய எழுத்தாளரின் எழுத்துக்கும் அதிக வித்தியாசம் இல்லை. கேவலம் அந்த சாரு நிவேதா எழுத்தையே வாரம் வாரம் போட்டவர்கள் நிச்சயம் உங்கள் தரமான எழுத்தை வெளியிடுவார்கள் என்பது எனது அபிப்பிராயம்.

  வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. நண்பா... பெரிய பத்திரிகைகளிடம் முயற்சிக்க வேண்டும் என்ற எண்ணம் இதுவரை எனக்கு வந்ததில்லை என்பதே உண்மை. நீங்கள் இப்படிச் சொன்னதும் முயற்சிக்கலாம் என்றே தோன்றுகிறது. நிச்சயம் முயற்சிக்கிறேன். என்மேல் நம்பிக்கையும், மதிப்பும் கொண்டுள்ள தங்களுக்கு என் இதயம் கனிந்த நன்றி!

   Delete
 16. எனக்கும் ரொம்ப நாளா இந்த சந்தேகம் இருந்தது. இன்றுதான் தீர்ந்தது. அதற்காக ஒரு ஸ்பெசல் தாங்க்ஸ் சார். அப்புறம் அருமையாக செல்கிறது இந்த நடைவண்டிகள் தொடர். ஆரம்பத்தில் என்னமோ நெனச்சேன். இப்போ பர...பர...பரப்பு....! சூடு கிளம்புகிறது. பட்டையைக் கிளப்புது தொடர். அடுத்த பகுதிக்காக வெயிட்டிங்...!

  ReplyDelete
  Replies
  1. தொடர் கதை ஒரு அத்தியாயம் வி்ட்டுட்டுப் படிச்சா இன்ட்ரஸ்ட் போயிடும் துரை. அனுபவங்களைச்‌ சொல்லும்போது யார் எப்ப வேணாலும் சேர்ந்துக்கலாம்கறது பெரிய வசதி. அதனால தொடர் உங்களுக்கு இன்ட்ரஸ்டிங்கா இருக்குது. தொடரும் உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி!

   Delete
 17. நீங்க வர வர உயரமான இடத்துக்குப் போகிறமாதிரி இருக்கு ஃப்ரெண்ட்.உங்கள் எழுத்துக்கள் அவர்கள் தந்த வரமோ !

  ReplyDelete
  Replies
  1. எழுத்தாளர்களின் பழக்கம் எழுத்தை எப்படி அமைச்சுக்கணும்கறதுக்கு உதவியா இருக்கும். ஆனா எழுத்துக்கள் மெருகேறுவதற்கு காரணம் உங்களைப் போன்ற எல்லா நண்பர்களும் தரும் ஊக்கம்தான். (ஐஸ் இல்ல... Honestly from my Heart) இந்த உற்சாகத்தை நீங்க தந்தா போதும் ஃப்ரெண்ட்! நன்றி!

   Delete
 18. சுபா எழுதற Army Based கதைகள் எனக்கு ரொம்பப் பிடிக்கும். உங்க Friends தான் அவங்கன்றது படிக்க த்ரில்லா இருக்கு. அடுத்த பகுதிக்கு ஆவலோட Waiting!

  ReplyDelete
  Replies
  1. தமிழில் ராணுவக் கதைகள் என்ற தளத்தை பிரபலப்படுத்தியது சுபாதானே... அது உங்களுக்குப் பிடித்ததில் மகிழ்ச்சி. வருகைக்கும் கருத்துக்கும் என் மனமார்ந்த நன்றி.

   Delete
 19. சுவாரஸ்யமோ சுவாரஸ்யம். உங்கள் கலெக்ஷன்கள் பற்றியும் பிரமிப்பு வருகிறது.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் என் மனமார்ந்த நன்றி.

   Delete
 20. தங்கள் எழுத்துலக பயணம் வெகு சுவாரஸ்யம்
  நிறைய கற்றுக் கொள்ள முடிகிறது
  மனம் கவர்ந்த பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. ரசித்துப் பாராட்டிய தங்களுக்கு என் இதய நன்றி.

   Delete
 21. நடை வண்டிப்பயணம் சுவாரஸ்யமும்,அடுத்து என்ன என்ற எதிர் பார்ப்பும் கொண்ட அருமையான பகிர்வு.

  ReplyDelete
  Replies
  1. எத்தனையோ பளுவான பணிக்கிடையிலும் என் அனுபவத் தொடரினைப் படித்துப் பாராட்டிய தங்கைக்கு என் இதயபூர்வமான நன்றி.

   Delete
 22. வெகு சுவாரஸ்யமான பயணம். அதை விவரிக்கும் விதம் இன்னும் சுவாரஸ்யம். ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் நீங்களும் கணேஷ்.

  ReplyDelete
  Replies
  1. உங்களனைவரின் அன்பும் கிடைக்க ஆசீர்வதிக்கப்பட்டவன் தானே... நன்றிம்மா...

   Delete
 23. இரட்டையர்கள் எப்படி எழுதுவார்கள் என்ற சந்தேகம் தீர்ந்தது. சுபாவின் கதைநாயகர்கள் வைஜெயந்தி- நரேனின் படைப்பு செமையாக இருக்கும்... நடைவண்டிதான் என்றாலும் விறுவிறுப்பாக செல்கிறது... தொடருங்கள்... காத்திருக்கிறோம்...

  ReplyDelete
  Replies
  1. உங்களின் ஆதரவுக்கு என் மனமார்‌ந்த நன்றி நண்பரே...

   Delete
 24. சூப்பர் ! தொடருங்கள் சார் !

  ReplyDelete
  Replies
  1. உடன் தொடர்கிறேன் நண்பரே... உங்களுக்கு என் இதய நன்றி!

   Delete
 25. ரொம்ப சுவாரசியமாக இருந்தது சார். நிறைய விஷயங்களை தெரிந்து கொள்ள முடிகிறது. சந்தேகம் தீர்ந்தது.

  அடுத்த பகுதிக்கான ஆவலுடன்....

  ReplyDelete
  Replies
  1. அடுத்த பகுதிக்கான ஆவலுடன் இருப்பதாகச் சொன்ன தோழிக்கு என் இதயம் நிறைந்த நன்றி!

   Delete
 26. மீண்டும் நடைவண்டி பயணம் போக காத்திருக்கிறோம் . ஒரு தொடர் நாவல் எழுதுங்க வசந்தமே .....

  ReplyDelete
  Replies
  1. என்னால முடியும் நம்பிக்கை வெச்சு சொல்றீங்க தென்றல்! அதனால முயற்சி பண்ணி நிச்சயம் ஒரு நல்ல நாவல் தந்துடறேன். சரியா? தொடரும் உங்களின் ஆதரவிற்கு என் இதயம் கனிந்த நன்றி!

   Delete
 27. நடைவண்டிப் பயணத்தில் சிறப்பான உங்கள் ‘நடை’யின் பாணிக்கு வாழ்த்துக்கள்.நானும் இரட்டைப்புலவர்கள் போல் இரட்டை எழுத்தாளர்கள் கதையை ஒருவர் பாதி எழுத, மற்றவர் முடிப்பாரோ என் நினைத்திருந்தேன், உங்கள் பதிவின் மூலம் ஐயம் தீர்ந்தது. நன்றி.‘சுபா’ வின் புதிய முயற்சியில் தங்கள் பணி பற்றி அறியக் காத்திருக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. தன் அனுபவங்களைச் சுவையாக எழுதுவதில் எனக்கு முன்னோடியான தாங்கள் இதை ரசித்துப் பாராட்டியிருப்பது கண்டு மிகுந்த மனமகிழ்வுடன் என் நன்றியை உரித்தாக்குகிறேன்.

   Delete
 28. நெல்லையில் பழைய புத்தகக் கடையில் வாங்கிப் படித்த ஒரு தொகுப்பில் அந்தக கதையைப் பார்த்தேன் என்றும், அதன் பிரதி என்னிடம் இருக்கிறதென்றும் நான் சொல்ல,

  அந்த மகிழ்ச்சியை என்னால் உணர முடிகிறது. என்னுடைய சில கதைகள் காணாமல் போய்விட்டன.. என் எழுத்தாள நண்பர்கள் கேட்கும்போது அவர்கள் கதைப் பகுதிகளை அனுப்பி இருக்கிறேன். அவர்கள் நெகிழும்போது எனக்கும் அப்படி ஒரு இன்ப அதிர்ச்சி கிட்டாதா என்றும் ஏங்கி இருக்கிறேன்.

  உங்கள் எழுத்துப் பிரவாகம் என்றே சொல்ல வேண்டும். தொடர்ந்து வாசிக்கிறேன்.. ஆனந்தமாய்.

  ReplyDelete
  Replies
  1. ஆம்... உங்களால் அந்த மகிழ்ச்சியின் சதவீதத்தை மற்றவர்களைவிட அதிகம் உணர முடியும் ஸார். ஆனந்தமாய் வாசிப்பதாய் சொல்லி என்னை ஆனந்தத்தில் ஆழ்த்திய தங்களுக்கு என் இதய நன்றி!

   Delete
 29. ஒரு எழுத்தாளருக்கு, அவர் எழுதிய ஆரம்ப கதைகள் வெளியான பத்திரிகைப் பிரதி கையில் இல்லாமல் இருந்து, ரொம்ப காலத்துக்குப் பிறகு கிடைக்கும்போது எத்தனை சந்தோஷமாக இருக்கும்! உங்கள் உதவி அந்த வகையில் மகத்தானது.

  ReplyDelete
  Replies
  1. படித்து, ரசித்து நற்கருத்திட்ட தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!

   Delete
 30. சுபாவின் வைஜெயந்தி, நரேன், ராமதாஸ், இன்ஸ்பெக்டர் பால்ராஜ் இந்த கேரக்டர்களை யாரும் மறக்கமுடியாது.....அவர்களின் நகைச்சுவை எழுத்து பிரமிப்பானது....சுவாரஸ்யமான தொடர்....

  ReplyDelete
  Replies
  1. நிஜம்தான்... சுபாவிற்கு நிறைய நகைச்சுவை உணர்வு உண்டு. அது அவர்கள் எழுதும் செல்வா-முருகேசன்-டெல்லி கதைகளில் வெளிப்படும். ரசித்துப் பாராட்டிய நண்பர் சுரேஷூக்கு என் இதய நன்றி.

   Delete
 31. உங்கள் அனுபவங்கள் சுவாரஸ்யம்... தொடருங்கள்...

  //இப்படி 100% புரிதலுள்ள நட்பு அமைவது ஒரு வரம்தான்!//

  ரொம்ப அபூர்வம் இது...இதைத் தான் soulmate என்பார்கள் போலும்.

  ReplyDelete
  Replies
  1. மிகச் சரியாகச் சொன்னீர்கள். அந்த நட்பும் சரி, எங்களுககுள் அமைந்த நட்பும் சரி... வரம்தான். தங்கள் வருகைக்கும் நற்கருத்துக்கும் என் மனமார்ந்த நன்றி.

   Delete
 32. ''...இப்படி 100% புரிதலுள்ள நட்பு அமைவது ஒரு வரம்தான்!..''நீங்கள் கொடுத்து வைத்தவர் சகோதரா...இறை அருள் கிட்டட்டும்.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
 33. // ‘எப்படி ஸார் ரெண்டு பேர் சேர்ந்து ஒரு நாவலை எழுத முடியுது?’ // என்னுடைய சந்தேகத்திற்கு உங்கள் மூலம் விடை கிடைத்தது.

  // இன்று வரை (சுபாவின் வேலையை செய்தாலும் இல்லாவிட்டாலும்) அந்த வழக்கம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. // அருமை.

  ReplyDelete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
 • Youtube