Wednesday, March 7, 2012

சர்வதேச பெண்கள் தினம் - மார்ச் 8

Posted by பால கணேஷ் Wednesday, March 07, 2012

ர்வதேச பெண்கள் தினம் மார்ச் 8ல் கொண்டாடப்பட்டு வருகிறது. மேரிக்யூரி, அன்னை தெரசாவில் துவங்கி எத்தனை எத்தனையோ பெண்கள் பல துறைகளில் சாதித்து பெண் இனத்துக்குப் பெருமை சேர்த்துள்ளார்கள். என்றாலும் எனக்கு பெண்கள் தினம் என்றாலே...

“மாதர்தமை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்”

''எட்டும் அறிவினில் ஆணுக்கு இங்கே பெண் இளைப்பில்லை காண் என்று கும்மியடி''

-என்றெல்லாம் பாடி பெண்மையைக் கொண்டாடிய மீசைக்காரர் தான் நினைவுக்கு வருகிறார். சங்க காலம் தொட்டு இன்று வரை பெண்களின் அண்மை இல்லாமல் ஆண்கள் இல்லை. ஒரு மழலையை வளர்ப்பதில் தொடங்கி, அவனுக்கே ஒரு மழலையை பெற்றுத் தந்து அவனை சான்றோனாக்கும் வரை எல்லாவற்றுக்கும் பெண் துணையின்றி இயலாது. பெண் என்ற எண் இல்லையென்றால் ஆண் பூஜ்யம்தான்.

சங்க இலக்கியத்தில் போரில் முதுகில் வேலேற்று இறந்ததாக மகனைப் பற்றி கேள்விப்பட்ட தாய், “இது உண்மையானால் அவன் பால் குடித்த இந்த முலைகளை அறுத்தெறிவேன்” என்று வீர முழக்கமிட்டு போர்க்களம் செல்கிறாள். பிறிதொரு புலியை முறத்தால் அடித்து விரட்டியிருக்கிறாள். மன்னர்களிடையே தூது சென்று போர் நிகழாமல் தடுத்து சமுதாயப் பணி ஆற்றியிருக்கிறாள் தமிழ்ப் பாட்டி. இப்படி அந்நாளில் உயர்ந்த நிலையிலேயே பெண்கள் சித்தரிக்கப்பட்டிருப்பதைக் காண முடிகிறது. அப்படி இருந்த காலத்திலும் பெண்களை கணவன் இறந்தால் உடன்கட்டை ஏறச் செய்யும் வழக்கமும் கூடவே இருந்திருக்கிறது. பினனாளில் பலர் பெரிதும் போராடித்தான் அந்த வழக்கத்தை நிறுத்த வேண்டியிருந்தது. அதற்கு ராஜாராம் மோகன்ராய் என்ற பெருமகன் தேவைப்பட்டார்.

கல்வி கற்கின்ற விஷயத்தில்கூட பெண்ணுக்கான உரிமை மறுக்கப்பட்டே வந்திருக்கிறது. என் அம்மா சிறுமியாக இருந்த காலத்தில்கூட பெண் வயதுக்கு வந்தால் படிப்பை நிறுத்தி விடுகிற பழக்கம் இருந்திருக்கிறது. பள்ளிப் படிப்பைத் தாண்டவில்லை என் அம்மா. இந்நிலை மாறி இன்று பெண்கள் எல்லா விஷயத்திலும் முன்னிற்க இயலுகிறது. பெரிய நிறுவனங்களில் எல்லாம் முக்கிய (முக்காத) பணிகளில் இன்றிருப்பது பெண்கள்தாமே. வேலைக்குச் செல்லாத பெண்கள் இருக்கும் வீடுகளில் கூட நான் கவனித்த வரையில் கணவனின் வருமானம் மனைவியின் கையில் தரப்பட்டு, குடும்ப நிர்வாகத்தை மனைவிதான் செய்கிறாள்.  (இனிமேப்பட்டு ஆண்கள்தான் தங்கள் உரிமைக்காகத்தான் குரல் கொடுக்கணும் போலருக்கு- என்று எனக்குத் தோன்றுவதுண்டு).

முதல் முதலில் பெண்கள் உரிமைக்காக 1909 ஆம் ஆண்டு குரல் கொடுக்கப்பட்டது. கோபன்ஹேகனில் 1910 ஆம் ஆண்டு நடந்த சர்வதேச மாநாட்டில், பெண்கள் தினம் கொண்டாடுவது பற்றி விரிவாகப் பேசப்பட்டது. அப்போது சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடுமாறு பலநாடுகளுக்கும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இந்த வேண்டுகோளை ஏற்று 1911ல் மீண்டும் விவாதிக்கப்பட்டு, மார்ச் 19 ஆம் தேதி முதன்முறையாக பெண்கள் தினத்தை கொண்டாடினர். அதன்பின் மேற்கத்திய ஐரோப்பிய நாடுகள் 1913 ஆம் ஆண்டு ஓன்று கூடி, மார்ச் 8 ஆம் தேதியை பெண்கள் தினமாக கொண்டாட முடிவு செய்தன. இதுதொடர்பாக, ஐ.நா. சபையில் விவாதிக்கப்பட்டு, சர்வதேச பெண்கள் தினம் மார்ச் 8 ஆம் தேதி என இறுதி முடிவு எடுக்கப்பட்டது.

கருணை, பாசம், இரக்கம் ஆகிய குணங்களைக் கொண்டிருக்கும் ஆணிடம் பெண்மை இருக்கிறது, பல சமயங்களில் பெண்களிடமும் ஆண்மை வெளிப்படத்தான் செய்கிறது, பெண்களில் நல்ல பெண்கள், கெட்ட பெண்கள் என்று உண்டு. (மெகா சீரியல்கள் எல்லாம் ஓடுவதே இதை வைத்துத் தானே...) ஆனால் பெண்மை என்றுமே உயர்வானது, ஆகவே இந்த விஷயத்தில் பெண்களுக்கான தினம் என்று கொண்டாடுவதைவிட பெண்மைக்கான தினம் என்று கொண்டாடினால் சாலப் பொருத்தமாக இருக்கும் என்பது என் கருத்து. இவ்விஷயத்தில் உங்கள் நிலைப்பாடு என்ன? பகிருங்களேன்...

பெண்மை வாழ்கென்று கூத்திடுவோமடா..!

52 comments:

 1. தகவலுக்கு நன்றி. அனைத்து பெண்களுக்கும் வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் ஸார்... அனைவரும் மகிழ்வுடன் வாழ்த்தி மகிழ்வோம். தங்களுக்கு என் இதய நன்றி!

   Delete
 2. Nalla karuththukkal. NanRi pengal saarbaaga.

  ReplyDelete
  Replies
  1. என் மனதில் பட்டதைச் சொன்னேன். இதுக்கெதுக்குங்க நன்றில்லாம். நான்தான் என்னை மகிழ்வித்த உங்கள் வருகைககாக மனமார்ந்த நன்றியை தெரிவிச்சுக்கறேன்!

   Delete
 3. உலக மகளிர் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்..

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் நண்பரே... உங்களின் மற்றும் நம் அனைவரின் நல்வாழ்த்துக்களும் மகளிரைச் சேரட்டும். தங்களுக்கு மனமார்ந்த நன்றி!

   Delete
 4. என் அம்மா சிறுமியாக இருந்த காலத்தில்கூட பெண் வயதுக்கு வந்தால் படிப்பை நிறுத்தி விடுகிற பழக்கம் இருந்திருக்கிறது
  >>>
  இப்பவும் இந்த கொடுமை பல இடங்களில் நடக்குது.

  ReplyDelete
 5. கருணை, பாசம், இரக்கம் ஆகிய குணங்களைக் கொண்டிருக்கும் ஆணிடம் பெண்மை இருக்கிறது,
  >>>
  இது உண்மையான வரிகள் அண்ணா. பேருந்தில் பயணிக்கும்போது கர்ப்பினி பெண்ணுக்கோ அல்லது குழ்னதையை ஏந்தியுள்ள பெண்ணுக்கோ இடம் கொடுப்பது ஆண்களே.

  ReplyDelete
  Replies
  1. மனிதாபிமானம் மற்றும் இரக்க குணம் பெண்மைக்கே உரித்தான தனிக் குணங்கள். பெண்களிடம் சற்று ஆண்மையும், ஆண்களிடம் சற்று பெண்மையும் நிலவுவதுதானேம்மா அர்த்தநாரீஸ்வரர் தத்துவம்! நற்கருத்து சொன்ன தங்கைக்கு நன்றி!

   Delete
 6. அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துகள் ..


  இன்று

  துப்பாக்கி Vs பில்லா 2

  ReplyDelete
  Replies
  1. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் என் மனமார்ந்த நன்றி ராஜா!

   Delete
 7. மகளிர் தின வாழ்த்துகள்!
  உங்கள் கருத்தும் பொருத்தமானதே!

  சா இராமாநுசம்

  ReplyDelete
  Replies
  1. கருத்தை ஆமோதித்த தங்களின் மகிழ்வூட்டும் வருகைக்கு என் இதயம் கனிந்த நன்றி!

   Delete
 8. ////மேரிக்யூரி, அன்னை தெரசாவில் துவங்கி எத்தனை எத்தனையோ பெண்கள் பல துறைகளில் சாதித்து பெண் இனத்துக்குப் பெருமை சேர்த்துள்ளார்கள். என்றாலும் எனக்கு பெண்கள் தினம் என்றாலே...“மாதர்தமை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்”''எட்டும் அறிவினில் ஆணுக்கு இங்கே பெண் இளைப்பில்லை காண் என்று கும்மியடி''-என்றெல்லாம் பாடி பெண்மையைக் கொண்டாடிய மீசைக்காரர் தான் நினைவுக்கு வருகிறார்.////

  கணேஷ்சார் நல்ல பதிவு. ஆனால் மேரிக்யூரி, அன்னை தெரசா போன்றவர்களை நினைவு கூர்ந்த நீங்கள் மம்மி ஜெயலலிதா பெயரை சொல்ல மறந்துவிட்டிர்கள். இது மம்மிக்கு தெரிஞ்சுது உங்க விட்டுக்கு எக்ஸ்ட்ராவா பவர் கட் நேரம் அதிகரித்துவிடும்/ எழுதும் போது கவனித்து எழுதவும் சார்

  ReplyDelete
  Replies
  1. ஹய்யய்யோ... அவங்களுக்காகத் தனியா ஒரு பதிவு எழுதி சமாளிச்சுட்டாப் போச்சு... ஹி... ஹி... நன்றி ஸார்!

   Delete
 9. (இனிமேப்பட்டு ஆண்கள்தான் தங்கள் உரிமைக்காகத்தான் குரல் கொடுக்கணும் போலருக்கு- என்று எனக்குத் தோன்றுவதுண்டு).//


  இது என்ன வம்பா போச்சு.?

  //பெண்களுக்கான தினம் என்று கொண்டாடுவதைவிட பெண்மைக்கான தினம் என்று கொண்டாடினால் சாலப் பொருத்தமாக இருக்கும் என்பது என் கருத்து//

  எப்படி எல்லாம் யோசிக்கறீங்கப்பா!!!

  ReplyDelete
  Replies
  1. எனக்கு என்னமோ அப்படித் தோணிச்சும்மா. சில வீடுகள்ல கணவர்களைப் பார்த்ததுலதான் (நிசம்மா... என் வீட்ல இல்ல) ஆண்கள் உரிமை கேக்கணும்னு எழுதினேன். ஹி... ஹி... நன்றி சிஸ்!

   Delete
 10. பிறப்பின் பெயரால்
  முழு உடலை தருவிக்கும்
  பிரம்மாக்கள்

  வாழிய பெண் மக்கள்....

  ReplyDelete
  Replies
  1. ஹையா... இப்படி ஒரு கவிதையான பதில் கிடைக்கு்ம்னா எத்தனை பதிவுகள் வேணும்னாலும் கேர் எடுத்து எழுதலாம் மகேன். என் இதயம் நிறைந்த நன்றி உங்களுக்கு!

   Delete
 11. அனைவருக்கும் என் மகளிர் தின வாழ்த்துகள். உரிமைக்கு நீங்கள் குரல் கொடுக்கும் அளவுக்கு எதுவும் ஆகிவிடவில்லை என்றே எண்ணுகிறேன்:)! மகளிரைப் போற்றும் நல்ல பதிவு.

  ReplyDelete
  Replies
  1. அந்த அளவுக்கு இன்னும் வரலைங்கறது உண்மைதான்! மகளிரைப் போற்றாமல் நல்ல ஆண்கள் இருக்க இயலுமா என்ன? என்னை உற்சாகப்படுத்திய தங்கள் வருகைக்கு என் இதய நன்றி மேடம்!

   Delete
 12. அனைவருக்கும் மகளிர் தின நல்வாழ்த்துகள்....

  ReplyDelete
  Replies
  1. அதே... அதே... கொண்டாடி மகிழ்வோம்! மிக்க நன்றி நண்பரே!

   Delete
 13. பெண்களைக் கொண்டாடுவோம்.

  ReplyDelete
  Replies
  1. ஆமோதிக்கிறேன்! நன்றி ஸார்!

   Delete
 14. பெண்களை எங்களை வாழ்த்தவும் நல்ல மனமொன்று வேண்டும் வஞ்சனையாயில்லாமல்.பெயருக்கு வாழ்த்திவிட்டு பின்னுக்குப் பழிப்போரும் நிறைய.அதனால்தான்....சொல்லிட்டேன் மனதில் பட்டதை.நிச்சயமாய் பெண்களை மதிப்பவர்தான் நீங்கள்.நன்றி ஃப்ரெண்ட் !

  ReplyDelete
  Replies
  1. என்னைப் புரிந்து கொண்ட ஒரு தோழி கிடைத்ததில் எனக்கும் மகிழ்வுதான். நன்றி!

   Delete
 15. பெண்களுக்கு உரிமை தருகிறோம், சுதந்திரம் தருகிறோம் என்றெல்லாம் முழங்காமல், சக உயிராய் பெண்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளவும், அவற்றுக்கு மதிப்பளிக்கவும் முன்வந்தாலே போதுமானது. அதை உங்கள் பதிவு அழகாகவே எடுத்துரைக்கிறது. நன்றி கணேஷ்.

  ReplyDelete
  Replies
  1. மிகச் சரி. வீட்டிலும் வெளியிடங்களிலும் அவரவர் வாழ்க்கைத் துணையை சரிசமமாய் நடத்தினாலே பெண்ணுரிமைக்குத் தேவையிருக்காது. தங்களின் நற்கருத்துக்கு என் நன்றி!

   Delete
 16. "இளமை கொலுவிருக்கும் இனிமைச் சுவையிருக்கும்" பாடலை டெடிகேட் (!) செய்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. ‘‘அணைத்து வளர்ப்பவளும் தாயல்லவோ, அணைப்பில் அடங்குவதும் அளவல்லவா...’’ என்ற இரு வரிகளிலேயே எல்லாம் அடங்கிவிடும் இல்லையா ஸ்ரீராம் ஸார். நல்ல பாடல் தந்த உங்களுக்கு நன்றி!

   Delete
 17. அட, .....மாடரேஷன் எடுத்துட்டீங்களா...!

  ReplyDelete
  Replies
  1. ஆமா ஸ்ரீராம் ஸார். நாலு நாளா ஒரு ‘பல்’லவனோடு யுத்தம் பண்ணிட்டிருந்தேன். (பதிவு தயாராயிட்டிருக்கு) நெட் பக்கம் எப்ப வருவேன்னு தெரியாதுன்ற நிலைல எடுத்து விட்டுட்டேன்!

   Delete
 18. வாழ்த்துக்கள் கணேஷ் அண்ணே....!!!

  ReplyDelete
  Replies
  1. பாத்து நாளாச்சு மனோ... நானும் உங்க ஏரியாவுக்கு வரலை ஸாரி... நலம் தானே... நாமனைவருமே மகளிரை வாழ்த்துவோம். நன்றி.

   Delete
 19. நல்ல தகவல்களைத் தாங்கி வந்த பதிவு..நிச்சயம் பெண்மை வாழ்கவென்று கூத்திடுவோம்..சாரதா அம்மாவுக்கு எனது வாழ்த்துகளை சொல்லிவிடுங்கள்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் நற்கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே...

   Delete
 20. NALLA PAKIRVU.MATRA PATHIVUKALAI PIRAKU PADIKKIREN.

  ReplyDelete
  Replies
  1. எப்போது வேண்டுமானாலும் நீங்கள் இவ்விடம் வரலாம் நல்வரவு. நல்ல பகிர்வென்று பகர்ந்தமைக்கு மிக்க நன்றி.

   Delete
 21. மகளிர் தினத்துக்கான சிறந்த பதிவு.

  உங்க ’பல்’லவனை சீக்கிரமா நகர்த்திவிட்டு பல்லாண்டு வாழ வாழ்த்துகள் !இந்த மகளிர் தினத்தில் ஒரு ஆணை வாழ்த்தலைன்னா எப்படி?:)

  ReplyDelete
  Replies
  1. இப்போ ‘பல்’லவனை வெற்றிகொண்டு விட்டேனே... வாழ்த்துக்கு என் இதய நன்றிக்கா...

   Delete
 22. ஏன் ஆண்கள் தினம் என்று ஒன்று இல்லை?
  காரணம்..இது ஆணுக்கு ஆண் வேறுபடும்!
  திருமணம் ஆகாத ஆணிற்கு வருடம் 365 நாளும் ஆண்கள் தினம்தான்!
  திருமணமானபின் எந்த ஆணிற்கும் ஆண்கள் தினம் கிடையாது..
  ஒவ்வொரு ஆணின திருமண நாளிற்கு முந்தய தினம் அவரின் கடைசி ஆண்கள் தினமாகும்..
  ஹி ஹி ஹி

  ReplyDelete
  Replies
  1. பல ஆண்களின் மனக்குமுறல் இப்படித்தானிருக்கும் போலும். பெண்கள் தினத்தில் அவர்களை வாழ்த்துவோம். தங்களுக்கு என் நன்றி.

   Delete
 23. பெண்கள் கடந்து வந்த கடின பாதையை நினைவு கூர்ந்து உள்ளீர்கள் .
  அதற்கு உறுதுணையாக இருந்த வீர ஆண் மக்களையும் கூறியது
  இன்னும் சிறப்பு. அவர்களுக்குப் பெண் இனம் என்றென்றும் நன்றிக்கடன் பட்டுள்ளது .
  எங்களால் இயலாதது ஒன்று என்றால் அது பாலியல் கொடுமை தான் .
  ஆண் என்றும் பெண் என்றும் ஆண்டவன் படைப்பில் உள்ள வரை இது தொடருமோ
  என்பது கவலைக்குரிய விஷயம் & kelvi .

  ReplyDelete
  Replies
  1. ஆமாங்க... ஆண் பிள்ளைகள் என்கிற திமிர் அவர்களை விட்டுப் போகும் வரை இதை தீர்க்க இயலாது தோழி. உங்களுக்கு என் இதய நன்றி.

   Delete
 24. வணக்கம்! உலக மகளிர் தினத்தில், மகளிர் பற்றிய நல்ல பதிவு. கடைசி பத்தியில் சிறப்பு சிந்தனை!

  ReplyDelete
  Replies
  1. சிந்தனையை ஸ்லாகித்துப் பாராட்டிய தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

   Delete
 25. பெண்களின் சிறப்பை பாராட்டி நல்லதோர் பதிவை பதிந்ததற்கு
  மிக்க நன்றி... உங்களுக்கு எனது வாழ்த்துக்களும் நன்றிகளும்..

  ReplyDelete
  Replies
  1. பாராட்டிய எஸ்தருக்கு என் இதயம் கனிந்த நன்றி.

   Delete
 26. பெண்கள் தின சிறப்புக்கட்டுரை மிக அருமை.
  மகளிர்தின நல்வாழ்த்துகள்

  ReplyDelete
 27. மகளிர்தின நல்வாழ்த்துகள்

  ReplyDelete
 28. நல்லதொரு பகிர்வு.

  ReplyDelete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
 • Youtube