Saturday, March 3, 2012

வாழ்வியல் நகைச்சுவை!

Posted by பால கணேஷ் Saturday, March 03, 2012

ரு சில சமயத்துல நாம லைஃப்ல பாக்கற நிகழ்ச்சிகள்ல இருக்கற நகைச்சுவை கற்பனையையும் மிஞ்சிடும் கேட்டேளா? நான் பாத்த சில விஷயங்களை ‘‘இது கற்பனையில்லே, அக்மார்க் நிஜம்’’ன்னு நான் சொன்னாலும்கூட ‘‘போடா அசத்து! இப்டில்லாம் நடக்குமா?’’ம்பேள் நீங்கள்ளாம்.. ஆனா நிஜமா நடந்ததுங்கறதை நம்புங்கோ... இதுல சம்பந்தப்பட்டவங்க இன்னும் உயிரோட இருக்கறதால யார் பேரையும் சொல்லாம தவிர்த்திருக்கேன். (முதுகுல டின் கட்டிடப் படாது பாருங்கோ... ஹி.. ஹி....)
==============================================
பாட்டில்ல தண்ணிய அடைச்சு, ‘மினரல் வாட்டர்’ங்கற பேர்ல விக்கறதுக்கு அறிமுகப்படுத்திருந்த சமயம் அது. போன ஜெனரேஷன்காரங்க நிறையப் பேருக்கு இதை ஏத்துக்க கஷ்டமா இருந்தது. ‘‘குடிக்கற ஜலத்தைக் கூட காசு குடுத்து வாங்கணுமா? என்ன கிரகச்சாரம்டா அம்பி இது?’’ன்னு கமெண்ட் அடிச்சாங்க. ‘பிஸ்லெரி’ங்கற கம்பெனி மட்டும்தான் அப்ப மினரல் வாட்டர் சப்ளை பண்ணின்டிருந்தது.

நான் வேலை பாத்துட்டிருந்த ஒரு கம்பெனியோட முதலாளி ‌ஈரோடுலேருந்து மதுரைக்குப் போக ரயில்வே ஸ்டேஷனுக்குப் போறார். அவர் கூடவே வழியனுப்பறதுக்கு கம்பெனி மானேஜர் ஐயங்கார் கூடவே போனார்.

முதலாளி தன்னோட கம்பார்ட்மென்ட்ல, பெர்த்தைக் கண்டுபிடிச்சு ஏறி உக்காந்துண்டு, ‘‘டேய், அங்க ஸ்டால்ல மினரல் வாட்டர் பாட்டில் விககறான் பாரு, வாங்கிட்டு வா...’’ன்னு 20 ரூபாயை எடுத்து ஐயங்காரண்டை குடுத்தார். அவரானா, ‘‘எதுக்கு சாமி தண்ணியப் போய் வாங்கணும்? கூல்டிரிங்க் பாட்டில் வாங்கிண்டு வரட்டுமா?’’ன்னு கேட்ருக்கார். ‘‘அதெல்லாம் வாண்டாம்டா. தண்ணி போதும் நேக்கு. போய் வாங்கிட்டு வா’’ன்னு இவர் சொல்ல, அவர் வேகமாப் போயி, பாட்டிலை வாங்கிண்டு வந்தார்.

முதலாளியானா மூடியைத் திறந்து ஒரு வாய் தண்ணியைக் குடிச்சுட்டு முகத்தைச் சுளிச்சிருக்கார். ‘‘என்னடா இது... மினரல் வாட்டர் மாதிரியே இல்லையே... ஸ்டால்லதானே வாங்கின?’’ என்று ஐயங்காரைக் கேட்க, அவர், ‘‘ஸ்டால்லதான் வாங்கினேன் சாமி! அது என்னைக்குப் புடிச்ச தண்ணியோ... அதான் கீழ கொட்டிட்டு ரயில்வே குழாய்ல புதுசாப் பிடிச்சுட்டு வந்திருக்கேன்’’னுட்டு அப்பாவியாய்ச் சொல்றார்.

இப்ப தான் என்ன தப்பாச் சொல்லிட்டோம்னு முதலாளி தலையில இப்படி அடிச்சுக்கறார்? ”உன்னைல்லாம் வேலைக்கு வெச்சேன் பாரு... என் புத்தியத்தான் செருப்பால அடிச்சுக்கணும், போடா”ன்னு திட்டறார்ன்னு புரியாம பேய் முழி முழிச்சுட்டு, ஆஃபீஸ் வந்து இந்த விஷயத்தை அவர் சொல்ல, ஒடனே ஆபீஸ் பூரா பரவிடுத்து அது. எங்களுக்கெல்லாம் சிரிச்சு சிரிச்சு வயித்து வலியே வந்துடுத்து. இதப்பத்தி இப்ப நினைச்சாலும் என் மூஞ்சில சிரிப்பு வருமாக்கும்.
==============================================
யங்கார் மாமாட்ட ஒரு பழக்கம் உண்டு. ஆபீஸ்ல யார் ‘நமஸ்காரம்’, ‘குட்மார்னிங்’ன்னு எது சொன்னாலும் பதிலுக்கு ’வாங்கோ’ன்னுட்டு தன் வேலையப் பாப்பார், வேலூர்லருந்து டிரான்ஸபராகி வந்திருந்த ஒரு பிரகஸ்பதிக்கு இவரோட இந்தப் பழக்கம் தெரியாது.

அவன் ஆபீஸ் வந்ததும் எதிர்ப்பட்ட இவருக்கு ‘குட்மார்னிங் ஸார்’ன்னு சொல்ல, இவரும் வழக்கம் போல ‘வாங்கோ’ன்னுட்டு மெஷின் செக்ஷனுக்கு போயிருக்கார், இவனும் ஏசுவோட ஆடாட்டமா பின்னாடியே போயிருக்கான். அங்க பேசிட்டு மாடில எடிட்டோரியல் செக்ஷனுக்கு அவர் போக இவனும் பின்னாடியே. அப்பதான் இவர் கவனிச்சு, ”ஏண்டா அம்பி என் பின்னாடியே வர்ற? நோக்கென்ன வேணும்?”னு கேக்க, இவன் அப்பாவியா, ”நீங்கதான ஸார் வாங்கோன்னு கூப்ட்டிஙக. அதான் வர்றேன்”ன்னான். ஐயங்கார் தலையில அடிச்சுண்டு ”போய் வேலையப் பாருங்கோ”ன்னு கத்த செக்ஷனுக்கு ஓடியே வந்து நடந்ததைச் சொன்னான். ஐயங்கார் மாமாவைப் பத்தி அவன்ட்ட சொல்லிப் புரிய வெக்கறதுக்குளள போறும் போறும்னு ஆய்டுத்து எங்களுக்கு.
==============================================
வேலூர்ல என் ஃப்ரெண்டு ஒருத்தன், ‘‘புதுசா வீடு கட்டி கிரஹப்பிரவேசம் பண்றோம்டா. கண்டிப்பா வந்துடு’’ன்னுட்டு பத்திரிகை கொடுத்தான். ‘சரிடா’ன்னேன். ஆனா, அந்த நாள்ல கண்டிப்பா போக வேண்டிய வேற ஒரு ஃபங்ஷனும் வந்துடுத்து. அவன்கிட்ட ஸாரி சொல்லிட்டு, கிரஹப் பிரவேசம் முடிஞ்சதும் வந்து பாக்கறேன்னு சொல்லியிருந்தேன். ‌சொன்ன மாதிரியே ரெண்டு நாள் கழிச்சு அவன் புது வீட்டுக்குப் போனேன்.

நன்னா விஸ்தாரமா, காத்‌தோட்டமா இருந்துச்சு வீடு. அவன் அப்பா, அம்மால்லாம் என்கூட ரொம்ப சகஜமா நன்னாப் பேசுவா. அவாளைப் பாத்துப் பேசிட்டிருக்கறப்ப, ஃப்ரெண்டோட அண்ணன் வந்தான். தலையில பெரிசா கட்டுப் போட்டிருந்தான். ‘‘ஐயய்யோ.... ரெண்டு நாள் முன்னாடி கிரஹப்பிரவேசம். இப்ப இவ்வளவு பெரிய கட்டோட இருக்கீங்க. எங்கயானும் கீழ விழுந்துட்டீங்களா? இல்ல ஏதானும் ஆக்ஸிடண்ட் ஆச்சா?’’ன்னு கேட்டேன்.

அவ்வளவுதான்... அவங்கம்மா பொரிய ஆரம்பிச்சுட்டா. ‘‘எல்லாம் இந்த பாழாப்போற ரஜினிகாந்தால வந்தது. ரஜினி ரசிகர் மன்றத்துல சேர்றேன்னு இவன் சொன்னப்ப, செல்லப் பிள்ளையாச்சே, போய்த் தொலையட்டும் விட்டேன் பாரு... என்னைச் சொல்லணும்’’ ன்னு கத்தறா. எனக்கு இந்த விஷயத்துல சூப்பர் ஸ்டார் எங்க வர்றார்ன்னு சுத்தமாப் புரியல. ‘‘என்னதான் மாமி நடந்துச்சு?’’ ன்னு கேட்டப்புறம் விஸ்தாரமா சொல்றா மாமி, இல்ல... புலம்பறா மாமி! 

‘‘கிரஹப்பிரவேசத்தன்னிக்கு பூஜையெல்லாம் நல்லபடியா முடிஞ்சதுடா அம்பி. அதுக்கப்புறமா திருஷ்டிப் பூசணிக்காயை இவன் கைல கொடுத்து, வாசல்ல போய் உடைக்கச் சொல்லிட்டு இங்க பேசிண்டிருக்கோம். ‘அம்மா’ன்னு வாசல்ல கத்தற சத்தம் கேட்டுப் போய்ப் பாத்தா... தலையில ரத்தம் சொட்டக் கெடக்கறான் கடங்காரன். என்னடான்னா... தலைவர் ரஜினி பூசணிக்காயை மேல போட்டு தலையால உடைப்பாராம். தானும் அதை மாதிரி பண்றேன்னு மேல காயைத் தூக்கிப் போட்டுட்டு, தலையை நீட்டியிருக்கு இந்த பிரம்மஹத்தி! பூசணிக்காய் அப்படியே இருக்கு; தலைதான் உடைஞ்சிடுத்து. இப்பப் பாரு... எவ்வளவு பெரிய கட்டு!’’ன்னு மாமியானா நான்ஸ்டாப்பாக் கத்தறா.

நான் ஃப்ரெண்டோட அண்ணனைப் பார்க்க, எப்பவும் ரஜினி ஸ்டைல்ல லுக் விடற அவன் இப்ப... கே.பாக்யராஜ் மாதிரி ஒரு திருட்டு முழி முழிச்சான் பாருங்கோ.... சிரிப்பை அடக்க முடியாம, சிரிச்சுட்டே வயித்தைப் புடிச்சுக்கிட்டு வெளில ஓடி வந்துட்டேன். இப்ப அவனைப் பாத்தாலும் இது ஞாபகம் வந்து சிரிப்பை அடக்கப் படாதபாடு படுவேன்.
==============================================

ன்னிக்கு ஆபிஸ்லருந்து கிளம்ப நைட்டாயிடுச்சு. வண்டிய ஆன் பண்ணி ஓட்டினா, ஹெட்லைட் எரியலை. சரி, காலம்பற மெக்கானிக்கைப் பாத்துட வேண்டியதுதான்னு முடிவு பண்ணி, மெயின் ரோடுகள் பக்கம் போகாம ஷார்ட்கட்ல போயிண்டிருந்தேன். அப்ப ஒரு சந்துல முனை திரும்பறப்ப ஒரு காலேஜ் கேர்ள் குறுக்க வந்துட்டா... உடனே பிரேக்கைப் போட்டேன்.

அவ என்னைப் பாத்து கோபமா, “லைட் கூட இல்லாம இப்படித்தான் ராத்திரில வர்றதா?”ன்னு கேட்டா. நான் பவ்யமா. “நீங்க கூடத்தான் லைட் எதுவும் இல்லாம ராத்திரில வந்திருக்கேள். நான் ஏதாவது கேட்டனா?”ன்னேன். அவளானா, “நாட்டி அங்க்கிள்”ன்னுட்டு சிரிச்சுட்டு போயிட்டா. நான்தான் அழுதுட்டேன்... என்னது... நானா... அங்கிளா...? அவ்வ்வ்வ்வ்வ்!
==============================================

82 comments:

 1. “நாட்டி அங்க்கிள்”ன்னுட்டு சிரிச்சுட்டு போயிட்டா. நான்தான் அழுதுட்டேன்... என்னது... நானா... அங்கிளா...? அவ்வ்வ்வ்வ்வ்!

  ஹா ஹா

  ReplyDelete
  Replies
  1. முதல் வருகையாய் வந்து சிரித்து மகிழ்ந்த சரவணனுக்கு என் மனமார்ந்த நன்றி!

   Delete
 2. சில நாட்களாக பிஸி..அதான் இந்த பக்கம் வரவில்லை ஐயா மன்னிக்கவும்.

  @@ நான் ஃப்ரெண்டோட அண்ணனைப் பார்க்க, எப்பவும் ரஜினி ஸ்டைல்ல லுக் விடற அவன் இப்ப... கே.பாக்யராஜ் மாதிரி ஒரு திருட்டு முழி முழிச்சான் பாருங்கோ.... சிரிப்பை அடக்க முடியாம, சிரிச்சுட்டே வயித்தைப் புடிச்சுக்கிட்டு வெளில ஓடி வந்துட்டேன்.@@

  அசத்தல்...அழகான எழுத்துக்களின் ஊடே அருமையான பதிவு..விதவிதமாக பதிவுகள் இடுவதில் நீங்களும் எனக்கொரு இன்ஸ்பிரஷன்.நன்றி ஐயா..தொடருங்கள்..வாசகனாக மீண்டும் வருகிறேன்..

  ReplyDelete
  Replies
  1. நேரம் அனுமதிக்கும் போதுதானே குமரன் நானும் மற்றவர்களைப் படிக்க முடிகிறது. அதனாலென்ன... நீங்கள் இப்போது படித்து ரசித்து்ப் பாராட்டியதில் மிகுந்த மனமகிழ்வோடு நன்றி ‌நவில்கிறேன் உங்களுக்கு!

   Delete
 3. குறிப்பிட்டுள்ள அனைத்து சம்பவங்களுமே நகைச்சுவையாக உள்ளன.
  பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
  Replies
  1. என் மதிப்புக்குரிய நீங்கள் படித்து ரசித்ததில் மிக்க மனநிறைவு எனக்கு. தங்களுக்கு என் இதய நன்றி!

   Delete
 4. வணக்கம்! இவைகளில் இயல்பாக என்னைக் கவர்ந்தது “வாங்கோ”ன்னா தான்.

  ReplyDelete
  Replies
  1. ஐயங்கார் மாமா அப்பாவி, ரொம்ப நல்லவர். உங்களுக்கு இது பிடிச்சதுல மகிழ்வோட நன்றி சொல்லிக்கறேன் இளங்கோ.

   Delete
 5. உண்மையிலேயே புத்தியிலிருந்து யோசிக்க வருகிற
  நகைச்சுவை துணுக்குக்குகளை விட
  இதுபோன்று அன்றாட வாழ்வில் நடைபெறும்
  நகச்ச்சுவை நிகழ்வுகளே அருமையானவை
  அதிகச்க சுவையுள்ளவை
  சுவையான சம்பவங்களும்
  அதைச் சொல்லிச் சென்ற விதமும் மிக மிக அருமை
  பகிர்வுக்கு நன்றி
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. புத்தியிலிருந்து யோசிக்கும் நகைச்சுவைகள் படிக்கும் போது சிரிக்க வைக்கும். இதுபோன்றவைகளோ நினைக்கும் போதெல்லாம் சிரிக்க வைப்பவை. அதுதான் வித்தியாசம். இல்லையா ஸார்? ரசித்துப் பாராட்டி, வாழ்த்திய தங்களுக்கு என் இதய நன்றி!

   Delete
 6. நான்தான் அழுதுட்டேன்... என்னது... நானா... அங்கிளா...? அவ்வ்வ்வ்வ்வ்!
  >>>
  பல்ப் எரியாத வண்டில போய் பல்ப் வாங்கிட்டு வந்திங்களா அண்ணா. இருட்டுல உங்களை தாத்தான்ன்னு சொல்லாம போனாளே அது வரைக்கும் சந்தோசப்பட்டுக்கோங்க

  ReplyDelete
  Replies
  1. பல்ப் எரியாத வண்டில போய் பல்ப்! வார்த்தை நல்லா இருக்கேம்மா! நீ சொல்றதும் சரிதாம்மா... அப்படித்தான் ஆறுதல் பட்டுக்கணும் போல! வந்ததுக்கும் ரசிச்சதுக்கும் என் இதய நன்றி!

   Delete
 7. நகைச்சுவை அனுபவங்கள் புரை ஏறும் அள்விற்கு சிரிக்க வைத்து விட்டது.அதிலும் மினரல் வாட்டர் சமாச்சாரம் ஐய்யோ..சிரிப்பை அடக்க முடியலே.

  //(முதுகுல டின் கட்டிடப் படாது பாருங்கோ... ஹி.. ஹி....)//

  ஹா ஹா ஹா..உண்மையாக சொல்லுகின்றேன் கணேஷண்ணா.பதிவுலகம் உஙகளை நல்லாவே பட்டை தீட்டி விட்டது.கடுகு சார்,ஜே எஸ் ராகவன் சார் ரேஞ்சுக்கு எழுதித்தள்றேள்.உங்கள் எழுத்துக்களில் அத்தனை நகைச்சுவை.

  ReplyDelete
  Replies
  1. எவ்வளவு பெரிய பாராட்டு மகுடம் எனக்கு! ரசித்துக் கருத்திட்டுப் பாராட்டிய தங்கைக்கு இதயம் நிறைந்த அன்புடன் நன்றி!

   Delete
 8. //(முதுகுல டின் கட்டிடப் படாது பாருங்கோ... ஹி.. ஹி....)// காலேஜ் பொண்ணுதானே அங்கிள் என்றாள்.காலேஜ் பொண்ணுடைய அம்மா இல்லையே?பின்னே ஏன் அழுதீர்கள்?புரியலியே நெசமாலுமே?

  ReplyDelete
  Replies
  1. ஸாதிகாம்மா... அதுவரைக்கும் எனக்கு வயசாகிட்டிருக்கறது உரைக்கவே இல்ல. நாமளும் யூத்னுதான் திரிஞ்சுட்டிருந்தேன். அதான்... அந்தப் பொண்ணு அப்படிக் கூப்பிடவும் ‘நமக்கு அவ்வளவு வயசா ஆயிடுச்சு’ன்னு அழுதுட்டேன்.

   Delete
 9. மினரல் வாட்டர், வாங்கோ அய்யங்கார், கிரஹப்பிரவேசம், நாட்டி அங்கிள் எல்லாமே சூப்பர். அதிலும் இந்த நாட்டி அங்கிள் இருக்கே. அட...அட...என்ன ஜோக்யா! கலக்கல் சார்!

  ReplyDelete
  Replies
  1. ரசித்துச் சிரித்துப் பாராட்டிய நண்பருக்கு என் மனமார்ந்த நன்றி!

   Delete
 10. ‘மினரல் வாட்டர்‘ கலக்கல் சிரிப்பு.

  அனைத்துமே சிரிக்க வைக்கின்றன.

  ReplyDelete
  Replies
  1. பாத்து நாளாச்சு மாதேவி மேடம்! நலமா? நீங்கள் ரசித்துச் சிரித்துப் பாராட்டியதில் கொள்ளை மகிழ்வுடன் என் இதய நன்றி தங்களுக்கு!

   Delete
 11. Replies
  1. ரசித்துபு் பாராட்டிய தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!

   Delete
 12. உண்மை நண்பரே..
  சில வாழ்வியல் உண்மைகள் திரைப்பட நகைச்சுவைகளையெல்லாம் மிஞ்சிவிடும் என்பதற்கு நீங்கள் சொன்னது நல்ல சான்றுகள்..

  தண்ணீர் நகைச்சுவை எண்ணி எண்ணிச் சிரித்தேன்..

  நன்று

  ReplyDelete
  Replies
  1. ரசித்துச் சிரித்த முனைவரையாவிற்கு நன்றிகள் பல!

   Delete
 13. காலைல நல்ல சிரிப்போட காபி.

  ReplyDelete
  Replies
  1. சிரித்தீர்கள் என்பதில் மனமகிழ்வு எனக்கு. மிக்க நன்றி!

   Delete
 14. சுவையான பகிர்வு.... சொல்லிய ஒவ்வொரு நிகழ்வும் ரசித்தேன்....

  அங்கிள்... அவ்வ்வ்.... :) எனக்கும் இது போன்ற ஒரு அனுபவம் இருந்தது... :)

  தில்லி வந்து சில வருடங்களுக்குப் பின் ஒரு பெண் என்னிடம் வந்து “அங்கிள் இந்த இடத்துக்கு எப்படிப் போகணும்” ந்னு ஹிந்தியில் கேட்க, நான் “Aunty எனக்குத் தெரியாது” என்று பதில் சொல்ல, ஒரே களேபரம்.... :)))

  ReplyDelete
  Replies
  1. ஹா... ஹா... உங்கள் அனுபவத்தையும் பகிர்ந்து கொண்டது மிகச் சிறப்பானது. ரசித்ததற்கும், பகிர்ந்ததற்கும் என் மனமார்ந்த நன்றி!

   Delete
 15. எல்லாமே ஒண்ணையொண்ணு மிஞ்சுது, அதுவும் மினரல் வாட்டரும் பூசணிக்காயும் ரொம்பவே ரசிக்க வெச்சுது :-))

  ReplyDelete
  Replies
  1. அந்த மினரல் வாட்டர் மேட்டர்... இப்ப நினைச்சாலும் நான் சிரிக்கிற விஷயம். பூசணி மேட்டரை நினைக்கும் போது அந்த அண்ணன் பாவம்னு ஒரு எண்ணமும் கூடவே வந்துடும் எனக்கு. ரசிச்சுப் பாராட்டின தங்களுக்கு என் இதய நன்றி!

   Delete
 16. //இவனும் ஏசுவோட ஆடாட்டமா பின்னாடியே போயிருக்கான்///

  :)))))))

  ReplyDelete
 17. //எனக்கு இந்த விஷயத்துல சூப்பர் ஸ்டார் எங்க வர்றார்ன்னு சுத்தமாப் புரியல///

  :))))))))

  ReplyDelete
 18. ///எப்பவும் ரஜினி ஸ்டைல்ல லுக் விடற அவன் இப்ப... கே.பாக்யராஜ் மாதிரி ஒரு திருட்டு முழி முழிச்சான் பாருங்கோ....///////

  :))))))))))))

  ReplyDelete
 19. :D

  நல்ல நகைச்சுவை...
  அதை விவரிச்சதுல அதிக நகைச்சுவை....
  ரீடர்ஸ் டைஜெஸ்ட்ல வர "லைஃப் இஸ் லைக் தட்", "ஆஃபீஸ் ஹுமர்" மாதிரி இருந்தது.

  ReplyDelete
  Replies
  1. மிகவும் ரசிச்சுப் பாராட்டியிருக்கீங்க. ‘படிப்பவர் ஜுரணத்துக்கு’ புத்தகம் படிக்கற பழக்கம் இல்லாமப் போய்டுச்சேன்ன இப்ப வருத்தமாயிருக்கு எனக்கு. பட், உங்களோட பாராட்டில மனம் மகிழ்ந்து சந்தோஷமா நன்றி தெரிவிச்சுககறேன்!

   Delete
 20. நகைச்சுவையான தருணங்கள் ஒவ்வொண்ணுலயும் வாய்விட்டுச் சிரிச்சேன். சூப்பர்ஸ்டார் ரஜினியப் பாத்து... ‘வாங்கோ’ GOOD Humour Sense! நன்றி ஸார்!

  ReplyDelete
  Replies
  1. முதல் வருகைக்கு நல்வரவு! ரசிச்சுச் சிரிச்ச உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!

   Delete
 21. குறிப்பிட்ட எல்லா சம்பவங்களும் நகைச்சுவையாக இருந்தாலும் யதார்த்த உண்மைகளை கூறுகின்றன.

  ReplyDelete
  Replies
  1. சரியாச் சொன்னீங்க சிஸ்! ரசிச்சுப் பாராட்டின உங்களுக்கு என் இதய நன்றி!

   Delete
 22. உங்கள் பதிவு பிரமாதம்.
  கடந்த காலத்திலே நடந்த சில நிகழ்வுகளை நினைவு கூறும்பொழுது
  நம்மை அறியாமல் வாய் விட்டு சிரிக்க வேண்டிய தருணங்கள் பல
  இருந்திருக்கின்றன என்பது என்னைப்போன்ற எத்தனையோ கிழங்களின் அனுபவம் கூட.

  ஓரிரண்டு இங்கே .

  2008 ல் துவக்கத்தில் அமெரிக்கா சென்றிருந்தேன். நெவார்க் ஏர்போர்ட்டில் எங்களுக்கு உதவி
  செய்ய இமிக்ரேஷன் கௌன்டருக்கு வந்திருந்தவர் , எத்தனை முயன்று பார்த்தாலும்
  என் பெயரை சரிவர படிக்க முடியவில்லையே என அலுத்துக்கொண்டார். ஏன் தான்
  இந்தியர்கள் இப்படி நீட்ட நீட்ட பெயர்களா வைத்துக்கொள்கிறீர்களோ என்றார்.

  என் பெயர் சூரியநாராயணன் ஆங்கிலத்தில் sooriyanarayanan என்று பாஸ் போர்ட்டில் இருந்ததை
  அவர் கஷ்டப்பட்டு, சூரியனா அரையணா என்று வாசித்தார். பக்கத்தில் இருந்த என் மனைவி
  சரியாத்தான் வாசிக்கிறார் என்று முணுமுணுத்தார்.

  அடுத்தது. 1970ல் நடந்தது. என்னுடன் வேலை பார்த்துக்கொண்டிருந்தவர்களில்
  ஒருவர் ஜே.ஜயராமன். Given to subtle humour.

  ஒரு நாள் ஒரு நண்பர் அவருடைய உபாதையைச் சொன்னார். நானும் அந்தக் காலத்தில்
  நண்பர்களுக்கு எமர்ஜென்ஸி எய்டாக சில மருந்துகளைச் சொல்வது வழக்கம். அப்படி நான்
  ஏதோ ஒன்றைச் சொன்னேன். அதற்கு ஜே.ஜயராமன் , என்ன, சூரி டாக்டரா ? அவரிடம் போய்
  மருந்து கேட்கிறீர்கள் என்று வந்தவரிடம் வினவினார். வந்தவர், " யூ டோன்ட் நோ, சூர் இஸ் எ
  ஸெமி டாக்டர்," என்றார்.

  ஒரு கணம் கூட தாமதிக்காமல், ஜே.ஜயராமன் , " தட் ஃபர்ஸ்ட் பார்ட் ஆஃப் இட், ஐ நெவர்
  டௌடட். ( that first part of it I never doubted ) " என்று சொன்னது இன்னும் நினைவில் இருக்கிறது.

  இன்னும் எத்தனையோ !!

  வலிகளை மறக்க சிரியுங்கள்.

  சுப்பு ரத்தினம்.

  ReplyDelete
  Replies
  1. WoW! நீங்கள் பகிர்ந்த இரண்டு அனுபவங்களுமே குபீரென்று சிரிக்க வைத்தது என்னை. பிரமாதம்! என் பதிவை ரசித்ததுடன், நான் ரசித்துச் சிரிக்கவும் விஷயங்களைப் பகிர்ந்த தங்களுக்கு என் இதயம் கனிந்த நன்றி!

   Delete
 23. நீங்கள் குறிப்பிட்டுள்ள நிகழ்வுகள் அனைத்தும் சிரிக்க வைத்தாலும், இரண்டாவதாக குறிப்பிட்டுள்ள நிகழ்வில் ‘வாங்கோ’ என்றதும் இவனும் ஏசுவோட ஆடாட்டமா பின்னாடியே போயிருக்கான்’என்ற வரிகளைப் படித்தபோது என்னை அறியாமல் வாய்விட்டு சிரித்தேன். தொடரட்டும், நீங்கள் தரும் வாழ்வியல் நகைச்சுவை விருந்து

  ReplyDelete
  Replies
  1. நகைச்சுவையை ரசித்துப் பாராட்டிய தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!

   Delete
 24. நடைபாதை வழிகளில்
  காணக்கிடைக்கும் நகைச்சுவைகள்
  பொன்னேட்டில் பொறித்து வைக்கும்
  அளவுக்கு மிகச் சிறந்ததாய் இருக்கும்...

  நீங்கள் கூறிய அனைத்தையும் ரசித்தேன் நண்பரே...

  "" நாட்டி அங்கிள் ....
  விடுங்க விடுங்க...

  நம்மை அதோடு விட்டாங்களே....""""

  ReplyDelete
  Replies
  1. ஆமாங்க... நீங்க சொல்றதும் சரிதேங்! ரசித்துப் பாராட்டினதுக்கு மிக்க நன்றி நண்பரே!

   Delete
 25. ஹா..ஹா.. முதல்துக்கு சிரிச்சு சிரிச்சு,நிறுத்த முடியல, மீதியெல்லாம் படிக்கவே எனக்கு 1/2 மணி நேரமாச்சு.அருமையான பதிவு கணேஷ்.

  ReplyDelete
  Replies
  1. நீங்கள் சொல்லிய விதத்திலேயே எவ்வளவு ரசனையுடன் படித்திருக்கிறீர்கள் என்பதை உணர முடிகிறது. உங்களுக்கு என் இதயம் நிறைந்த நன்றி!

   Delete
 26. ஆஹா இவ்ளோ நகைச்சுவை உணர்வை வச்சிட்டு என்னவோ ஒண்ணும் தெரியாதமாதிரி பேசறீங்க! கலக்கல்ஸ் கணேஷ்!

  ReplyDelete
  Replies
  1. ‘பூவுடன் சேர்ந்த நாரும்’ என்பார்கள். நான் உங்களைப் போல பல ‘பூக்களுடன் சேர்ந்த’ நார் அல்லவா? அதான்க்கா... மிக்க நன்றி!

   Delete
 27. அங்கிள்....அங்கிள்...நானும் சொல்லிப் பார்த்தேன்.மற்றச் சிரிப்பையெல்லாம் தூக்கிக்கொண்டு போய்ட்டுதுப்பா.ஃப்ரெண்ட் நானும் இனி அங்கிள்ன்னு சொல்லவா...(முறைக்காதீங்க) !

  ReplyDelete
  Replies
  1. முறைக்கறதா... உதை! அங்கிள்னு அந்தச் சின்னப் பொண்ணு கூப்டதுக்கே அழுகை வந்துடுச்சாக்கும்... ரசிச்சீங்கன்றதுல ரொம்ப சந்தோஷத்தோட நன்றி சொல்றேன் ஃப்ரெண்ட்!

   Delete
 28. நிரையா எழுத்தாளர்கள் கூட பழகினதில் உங்களுக்கும் நல்லாவே எழுதவந்துட்டு போலைருக்கு நல்ல சுவார்சியமா சொல்லி இருக்கீங்க நல்லா இருக்கு

  ReplyDelete
  Replies
  1. ரசித்துப் பாராட்டிய உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிம்மா!

   Delete
 29. அருமையான பதிவு நண்பரே...
  வாழ்க வளமுடன்
  வேலன்.

  ReplyDelete
  Replies
  1. ரசித்து வாழ்த்திய தங்களுக்கு என் இதய நன்றி நண்பரே...

   Delete
 30. சம்பவங்கள் அனைத்தும் மிக நகைச்சுவையாக உள்ளன. அதை சொல்லியவிதமும் மிக அருமை. பாராட்டுக்கள்.

  //நானா... அங்கிளா...? அவ்வ்வ்வ்வ்வ்//

  இதுக்குதான் சகோதரி ராஜி கூறிய அறிவுரைப்படி ஜீன்ஸ் போட்டு டிசர்ட் போட்டு பைக் ஒட்ட வேண்டும் தங்கச்சி சொன்ன கேட்க வேண்டும்

  ReplyDelete
  Replies
  1. கரெக்ட்! ‘தங்கையுடையான் படைக்கஞ்சான்!’ இனி ஜீன்ஸ், டிஷர்ட்தான்ங்கோவ்... ரசித்துப் பாராட்டிய தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!

   Delete
 31. முதல் முறை உங்கள் வலைபூ பக்கம் வந்திருக்கிறேன்.. இவ்வளவு நாளும் வாராமல் விட்டோமே என்று வருத்தமாக இருக்கிறது.
  நல்ல நகைச்சுவை அனுபவங்கள்... "வாங்கோ" போலவே எனக்கும் ஒரு அனுபவம் உண்டு... :) அது என்னன்னா...........(என் வலையில் சொல்லுறேன் அங்க வந்து படிங்க :)நாங்களும் பதிவு தேத்தனுமே)

  ReplyDelete
  Replies
  1. முதல் வருகைக்கு நல்வரவு. அவசியம் அங்கு வருகிறேன். தங்களின் பாராட்டினால் மனமகிழ்ந்து என் நன்றியை தங்களுக்கு உரித்தாக்குகிறேன்.

   Delete
 32. அனுபவம், பகிர்வு செம காமெடி..

  ReplyDelete
  Replies
  1. ரசித்துப் பாராட்டிய நண்பருக்கு என் இதய நன்றி!

   Delete
 33. சிரிக்க வைத்த் அனுபவங்கள். முகமன் கூறுபவர்களுக்கு 'வாங்க' சொல்லும் பழக்கம் என்னிடம் கூட இருந்தது....

  ReplyDelete
  Replies
  1. அப்படியா? ஆனாலும் ஐயங்காரின் ‘வாங்கோ’ என்கிற வால்யூமே அலாதியானது. ‘அவரை மாடில நின்னு நீங்க பேசினா திருப்பூருக்கு கேட்ரும். எஸ்.டி.டி.யே தேவையில்ல’ என்று நாங்கள் கலாய்ப்போம். ரசித்துச் சிரித்த தங்களுக்கு என் நன்றி!

   Delete
 34. ஒவ்வொன்றும் சுவையான நகைச் சுவை!
  மூன்று நாட்களாக ஊரில் இல்லை

  சா இராமாநுசம்

  ReplyDelete
  Replies
  1. நீங்கள் எப்போது வேண்டுமானாலும் இங்கு வரலாமே... உங்களின் இடம்தானே! நகைச்சுவையை ரசித்த தங்களுக்கு என் இதயம் கனிந்த நன்றி ஐயா!

   Delete
 35. ஹா ஹா ! நல்லா இருக்குங்க !

  ReplyDelete
  Replies
  1. ரசித்துச் சிரித்த தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!

   Delete
 36. thaamatha varukaikku mannikkavum . sirappaana pagiru .

  ReplyDelete
  Replies
  1. தென்றல் எப்போது வேண்டுமானாலும் என் ப்ளாக்கில் வீசலாம். மனமகிழ்வே அடைவேன். ரசித்துப் பாராட்டியதற்கு என் இதய நன்றி!

   Delete
 37. எல்லாமே பிரமாதம் சார். மினரல் வாட்டரும், வாங்கோவும் எனக்கு மிகவும் பிடித்தது.

  ReplyDelete
  Replies
  1. அதை ஏன் கேக்கறீங்க மேடம்! மினரல் வாட்டர் மேட்டர் இப்ப மனசுல நினைச்சுப் பாத்தாலும் என்னைச் சிரிக்க வெக்கிற ஒண்ணு. உங்களுக்கும் பிடிச்சதுல ரொம்ப சந்தோஷத்தோட என் இதய நன்றி தங்களுக்கு!

   Delete
 38. சார் நீங்க அங்கிள் தானே அப்புறம் என்ன?சின்ன வயசுல எடுத்த போட்ட தான இங்க போட்டு இருக்கீங்க.ஹி ஹி

  அருமையான நகைச்சுவைப் பதிவு அதிலும் ரஜினி போல பூசணிக்காய் உடைத்த பற்றிய பதிவு அருமையோ அருமை வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. ரசித்துப் பாராட்டிய தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!

   Delete
 39. தினசரி வாழ்வில் பிணைந்த நகைச்சுவையை அருமையாக ரசிக்கும் விதமாக சொல்லியிருக்கீங்க.கடைசியில் சோகமோ சோகம்!!

  ReplyDelete
  Replies
  1. கடைசில உள்ள சோகம் உங்களுக்காவது புரிஞ்சிச்சே... நகைச்சுவை ரசித்த தங்களுக்கு என் இதய நன்றி!

   Delete
 40. ஓ! மை கோட்(கடவுள்) நான் 75வது கமென்ட் போடறேன். சிரி சிரின்னு சிரிச்சு வயிறு வலிக்குதோன்னா. அத்தனை...ஹாஸ்யமான்னோ இருந்துச்சு..ஷேமமாயிருங்கோ!.....
  வேதா.இலங்காதிலகம்.

  ReplyDelete
  Replies
  1. ஹாஸ்யத்தை ரசிச்சு, பிராமின் பாஷைலயே அழகா பதில் தந்திருக்கற சகோதரிக்கு என் மனமார்ந்த நன்றி!

   Delete
 41. ரொம்ப ரசிச்சேன். நல்ல நகைசுவை. எழுதி இருக்கும் விதமும் பிரமாதம்.
  //இவனும் ஏசுவோட ஆடாட்டமா பின்னாடியே போயிருக்கான். // சிரிச்சு மாளல! :)))

  ReplyDelete
  Replies
  1. நீங்க ரசிச்சுச் சிரிச்சீங்கன்றதுல கொள்ளை மகிழ்ச்சி எனக்கு. தங்களுக்கு என் இதய நன்றி!

   Delete
 42. நண்பா. உங்கள் பதிவுகளை திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.

  நன்றி
  யாழ் மஞ்சு

  ReplyDelete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
 • Youtube