Saturday, June 23, 2012

நடை வண்டிகள் - 22

Posted by பால கணேஷ் Saturday, June 23, 2012

இந்திரா சௌந்தர்ராஜனும் நானும் - 5
அதன் பின்னர் நெல்லையில் இருந்து மதுரை வரும் போதெல்லாம் தவறாமல் அவரைச் சந்தித்து உரையாடுவது என்பது நிகழ்ச்சி நிரலில் வாடிக்கையான ஒன்றாகி விட்டது. சிறிது காலத்தில் நெல்லையிலிருந்து சென்னைக்கு இடம் பெயர வேண்டிய சூழ்நிலை எனக்கு ஏற்பட்டது. சென்னை வந்த பின் அவ்வப்போது போனில் பேசிக் கொள்வதோடு சரி. சென்னை வரும் சந்தர்ப்பங்களில் பெரும்பாலும் ‘ப்ளையிங் விசிட்’டாகத்தான் வருவார் என்பதால் சந்திக்கும் வாய்ப்புக் குறைந்து‌ போனது.

ஜி.அசோகன் அவர்களின் க்ரைம் நாவல் அலுவலகத்தில் நான் பணியில் இருந்த சமயம் ‘பாக்கெட் நாவல்’ இதழில் மாதந்தோறும் அவரது நாவல்தான் வெளிவந்து கொண்டிருந்தது. அதனால் ஒவ்வொரு மாதமும் நாவல் அனுப்பியது்ம் கருத்துக் கேட்பார். பாராட்டுதலோ, குறைகளோ மனதில் தோன்றியதை மறக்காமல் ‌சொல்வேன்.

அந்தப் பணியிலிருந்து விலகிய பின்னர் பணத்தேவை எனக்கு அதிகம் இருந்த ஒரு காலகட்டத்தில் அவரது நூல்களை மாதந்தோறும் வெளியிட்டு வந்த பதிப்பாளர் பொன்.சந்திரசேகர் என்பவரை அறிமுகம் செய்வித்தார் இந்திராஜி. (பொன்.சந்திரசேகர் இன்றளவும் என் நல்ல நண்பர்களில் ஒருவர்.) அவர் வெளியிட்டு வந்த இந்திராஜியின் நாவல்களை வடிவமைக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. ஏறத்தாழ ஓராண்டு காலம் அதை மகிழ்வுடன் செய்து கொண்டிருந்தேன். அதன்பின் வாழ்க்கையின் மிகப் பெரிய சிக்கலைச் சந்தித்து கோர்ட்டுக்கும் வீட்டுக்கும் அலைந்த காலகட்டத்தில் அந்தப் பணியைத தொடர இயலாமல் விட்டுவிட்டேன். சமீபத்தில் நண்பர் சந்திரசேகர் மீண்டும் தொடர்பு கொண்டு எனக்கு அந்த வாய்ப்பைத் தந்ததால் இப்போது தொடர்ந்து அதில் ஈடுபட்டிருக்கிறேன்.

தினம தவறாமல் கோயிலுக்குச் செல்லும் பழக்கம் கொண்ட ஆன்மீகவாதி அவர். ஜோதிடம், ஜாதகம் இவற்றில் எல்லாம் துளியும் நம்பிக்கையற்றிருந்த எனக்கு அவை முறைப்படி பயின்று செய்தால் அரிய‌ கலைகளே என்பதை விளக்கிப் புரிய வைத்தவர் அவர். இப்படி அவருடன் பழகி வருவதில் நான் கற்றதும் பெற்றதும் அதிகம். இன்றளவும் எங்களி்ன் நட்பு தொடர்ந்து கொண்டிருப்பதில் மிக்க மகிழ்ச்சி எனக்கு.

                                              -‘இந்திரா செளந்தர்ராஜனும்’ நானும் நிறைகிறது;
                                                             ‘கடுகு அவர்களும் நானும்’ துவங்குகிறது.

======================================================================

                         அரிய(க்குடியின்) நகைச்சுவை!

ந்த நாளில் அரியக்குடி ராமானுஜ ஐயங்கார் பற்றித் தெரியாதவர்கள் இருக்க முடியாது. இசை மேதை. நாங்கள இருந்த தெருவில்தான் அவரும் அப்போது இருந்தார். ஐயங்காருக்கு ‌சிலேடையும், கிண்டலும் ரொம்பத்தான் உண்டு. ஒரு சிஷ்யன் அவரெதிரில் பவ்யமாக வந்து நின்றான்.

‘‘எங்கேடா உன்னை ரொம்ப நாளாக் காணும்?’’

‘‘காசிக்குப் போயிருந்தேன்...’’

‘‘அப்படியா? உனக்கெதுக்குடா காசி?’’

‘‘ஏதோ போனேன். அங்கேயும் ஒரு நல்ல குரு ‌கிடைச்சர். நாலு கீர்த்தனை கத்துக் கொடுத்தார்.’’

‘‘பரவாயில்லையே... எங்கே... ஒண்ணு பாடு!’’

சிஷ்யன் அப்படியே .உட்கார்ந்து பாடத் தொடங்கினான். சங்கீதத்தில் அரைகுறையான எனக்கே கேட்கச் சகிக்கவில்லை. ஆனால் ஐயங்காரோ புன்னகை மாறாமல் உட்கார்ந்திருந்தார். இளைஞன் பாடி முடித்ததும், நக்கலாக ஒரு கேள்வி கேட்டார்:

‘‘ஏண்டா அம்பீ! காசிக்குப் போறவா, போயிட்டு வந்ததுக்கு அடையாளமா காயை விடுவா, கனியை விடுவா. நீ சுருதியையே விட்டுட்டியேடா...’’

அ...ப்....பா... அன்றைக்குச் சிரித்த சிரிப்பில் வயிற்று வலியே வந்து விட்டது.

                                                            -‘சிரிக்கப் பழகு’ நூலில் அனுராதா ரமணன்

மேய்ச்சல மைதானத்தில் - கேப்ஸ்யூல் நாவல்-1

47 comments:

  1. அதிஷ்டகாரர் சார் நீங்க. பல பெரியர்களுடன் பழகிருக்கீங்க

    ReplyDelete
    Replies
    1. இந்த அதிர்ஷ்டக்காரனின் பதிவைப் படித்து ரசித்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

      Delete
  2. கடுகு அவர்களோடு தங்களுக்கு உள்ள பழக்கம் அறிய ஆவலுடன் இருக்கிறேன்.அரிய(க்குடியின்) நகச்சுவையை அனைவரும் அறிய செய்தமைக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. நகைச்சுவையை ரசித்து அடுத்த பகுதிக்காய் காத்திருக்கும் உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  3. இ.சௌ வும் நானும் தொடர் நன்றாக இருந்தது... ரைட்டப்பும் நன்றாகவே இருந்தது கணேஷ்

    ReplyDelete
  4. அப்பப்பா ரெம்பப் பெரீய்யயயயய ஆளுளுளு நீங்ஙஙஙக நிறைய பேரைத் தெரிந்து பழகியிருக்கிறீர்கள். மிக சுவையாக உள்ளது. நன்றி. தொடருவேன்.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
    Replies
    1. என்னுடன் தொடர்ந்து வரும் உங்களுக்கு என இதயம் நிறை நன்றி.

      Delete
  5. உங்களுடன் தொடர்பு கொண்டதை
    நாங்கள் பாக்கியமாகக் கருதுகிறோம்
    அருமையான சிலேடை
    நீங்கள் சொல்லிச் செல்லும் விதம் கூடுதல் சுவை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. ரசித்துப் பாராட்டிய தங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.

      Delete
  6. நட்பின் அனுபவங்கள் சொல்லும் தொடர். அரியக்குடியின் நகைச்சுவை பிரம்...மாதம்!

    ReplyDelete
    Replies
    1. நகைச்சுவையை ரசித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  7. ...காயை விடுவா, கனியை விடுவா. நீ சுருதியையே விட்டுட்டியேடா...’’

    ஹா...ஹா. நமக்கும் சிரித்து முடியவில்லை.

    ReplyDelete
    Replies
    1. சிரித்து ரசித்து மகிழ்ந்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.

      Delete
  8. இதுபோல நகைச்சுவை அரியக்குடியிடம் நிறையவே படிச்சிருக்கேன். மறுபடியும் சிரிக்கவைத்தற்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. ரசித்துச் சிரித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  9. நடை வண்டி தொடர் வண்டி போலும் தொடர்ந்தாலும் எங்களுக்கு இனிமையே உங்கள் எழுத்து நடை அவ்வளவு சிறப்பு .

    ReplyDelete
    Replies
    1. நடை வண்டியின் பயணத்தில் தொடரும் தென்றலுக்கு என் மனமார்ந்த நன்றி.

      Delete
  10. தொடருங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கிறேன் :)

    ReplyDelete
    Replies
    1. தொடர்கிறேன் என்ற உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  11. ஜாதகம் முறைப்படி பயின்றால் உண்மை எனதை உங்கள் வார்த்தைகளால் படிப்பதற்கு நன்றாக உள்ளது... கடுகுடன் அடுத்த பயணம்...இதோ நாங்களும் தயாராக உள்ளோம்...


    படித்துப் பாருங்கள்

    வாசிக்க வாசிக்க வானம் வசப்படும்

    seenuguru.blogspot.com/2012/06/blog-post_23.html

    ReplyDelete
    Replies
    1. அடுத்த பகுதிக்கு ஆவலுடன் காத்திருக்கும் உங்களுக்கு என் இதய நன்றி.

      Delete
  12. அடடா..இந்திராஜி தொடர் முடிந்துவிட்டதா..கடுகுடன் நீங்கள் வாசிக்கத் தயாராகிறேன்..
    ஐயங்காரின் நகைச்சுவை சிரிக்க வைத்தது..

    ReplyDelete
    Replies
    1. கடுகுடன் என் அனுபவத்தை வரவேற்ற உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி கவிஞரே.

      Delete
  13. காட்டாறு போல வாழ்க்கையில் ஓடியிருக்கிறீர்கள்..

    ReplyDelete
    Replies
    1. ஓடியிருக்கிறேன் என்பது மட்டுமல்ல நண்பரே... ஓடிக் கொண்டே இருக்கிறேன் என்பதே உண்மை. தங்களுக்கு என் இதய நன்றி.

      Delete
  14. நல்ல மனிதர்களின் நட்பு கிடைப்பது அபூர்வம்... உங்களுக்கு அது வாய்க்கப் பெற்றிருக்கிறது...
    வாழ்த்துக்கள்... தொடருங்கள்... தொடர்கிறோம்...

    ReplyDelete
    Replies
    1. உண்மை தான் நீங்கள் சொல்வது. என் இதயம் நிறை நன்றி.

      Delete
  15. அரியக்குடி நகைச்சுவை சூப்பர்... நண்பர் கடுகுடன் உங்கள் அனுபவங்களைத் தெரிந்து கொள்ள ஆவலுடன் காத்திருக்கிறேன்.

    இந்திராஜியின் 'சுந்தர காண்டம்' வாசித்திருக்கிறீர்களா? (விகடன் பிரசுரம் - ம.செ-யின் அற்புதமான ஓவியங்களுடன்)

    ReplyDelete
    Replies
    1. சுந்தரகாண்டம் ம.செ. ஓவியங்களும் இந்திராஜியின் எழுத்தும் மனதை கொள்ளை கொள்ளுமே. பலமுறை படித்து மகிழ்ந்ததுண்டு நண்பரே. உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.

      Delete
  16. இந்திரா சௌந்திரராஜன் அவர்களுடனான உங்கள் நட்பினைப் பற்றித் தெரிந்து கொண்டதில் மகிழ்ச்சி.

    கடுகு அவர்களுடனான உங்கள் நட்பு பற்றி தெரிந்து கொள்ள ஆவலுடன் நானும்...

    அரியக்குடி - ரசித்துச் சிரித்தேன்....

    ReplyDelete
    Replies
    1. நடை வண்டிப் பயணத்தில் உடன் வந்து உற்சாகம் தரும் உங்களுக்கு என் இதய நன்றி வெங்கட்.

      Delete
  17. அடுத்து கடுகு சாரா பலே.ஆவலுடன்...

    ReplyDelete
    Replies
    1. என்னுடன் தொடர்ந்துவரும் தங்கைக்கு என் உளம் கனிந்த நன்றி.

      Delete
  18. கடுகுவுக்காகக் காத்திருக்கும் உளுத்தம்பருப்பாக ........ நான்!

    ReplyDelete
    Replies
    1. உளுத்தம் பருப்பாய் காத்திருக்கும் உங்களுக்கு என் இதய நன்றி.

      Delete
  19. கடுகு சிறுத்தாலும் காரம் போகாது என்பர்!

    கணேஷ் எழுத்திலும் சாரம் போகாது என்பேன்
    காத்திருக்குறோம்! படிக்க!

    சா இராமாநுசம்

    ReplyDelete
    Replies
    1. சாரம் போகாதது என் எழுத்து என்று உற்சாகம் தந்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.

      Delete
  20. பலருடன் பழகிய அனுபவத்தை அழகு தமிழில் தரும் நடைவண்டியில் நானும் பயணிக்கின்றேன்!

    ReplyDelete
    Replies
    1. என்னுடன் என்றும் பயணிக்கும் நேசனுக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  21. Replies
    1. தொடரும் உங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றி தனபாலன் சார்.

      Delete
  22. நடைவண்டிப் பயணம் மிக இனிமையாக தொடர்கிறது நானும் அதில் தொடர்ந்து பயணித்து கொண்டிருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. தொடர்ந்து வரும் உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  23. Geeting the friendship of great people is a great boon and continuing the same even today - YOU ARE VERY VERY LUCKY TO BE BLESSED WITH THE FRIENDSHIP OF SUCH GOOD PEOPLE. Nadai Vandigal - very interesting to read. I am now onwards eagerly waiting to read the upcoming serials which is going to be about Kadugu - Kadugil Karam irrukkumo irukkadho - theriyadhu - Aanal niraiya nagaichivai irrukkum enru en ul manathu solgirathu.

    ReplyDelete
    Replies
    1. நட்பு கிடைக்க நான் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறேன் என்பது உண்மைதான். கடுகு பற்றிய விஷயத்திலேயே நகைச்சுவையை எதிர்பார்ப்பது என் பொறுப்பை அதிகமாக்குகிறதுதான் நண்பரே. உங்களுக்கு என் இதய நன்றி.

      Delete
  24. புதிய தளம் தொடங்கியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் அங்கிள்.

    நகைச் சுவை ரசனையாக இருந்தது...

    ReplyDelete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube