Thursday, June 14, 2012

நடை வண்டிகள் - 21

Posted by பால கணேஷ் Thursday, June 14, 2012

இந்திரா செளந்தர்ராஜனும், நானும் - 4

திருநெல்வேலி தினமலரில் எனக்குக் கொடுக்கப்பட்டிருந்த பொறுப்பு இணைப்பிதழ்களை வடிவமைப்பது. சிறுவர் மலர், திரை மலர், வார மலர், கதை மலர் போன்ற இணைப்பிதழ்களை தயாரித்து வடிவமைப்பது நான், ஒரு உதவி ஆசிரியர், ஒரு பிழை திருத்துபவர் கொண்ட குழுவின் பொறுப்பு. என்னுடன் உதவி ஆசிரியராகப் பணியாற்றியவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்புக் கிடைத்தது. அந்த நபர் (பெயர் வேண்டாமே...) இனிமையாகப் பேசினார். நன்கு பழகினார்.

ஒரு சமயம் கதை மலர் இதழில் பிரபல எழுத்தாளர்களிடம் எட்டு சிறுகதைகள் வாங்கி சிறுகதைத் தொடராக வெளியிடலாம் என்று முடிவு செய்தோம். நண்பர் ராஜேஷ்குமாரிடம் நான் போனில் தொடர்பு கொண்டு கேட்க, ‘‘நீங்களே என் சிறுகதைகள்ல எதை வேணும்னாலும செலக்ட் பண்ணிப் போட்டுக்கங்க கணேஷ். எதெது போடறீங்கன்னு ஒரு லிஸ்ட் மட்டும் அனுப்பிடுங்க’’ என்றார். ரா.கு.வுக்கு நன்றி சொல்லிவிட்டு அலுவலக பொறுப்பாளரிடம் போனை நான் தர, அவர் ரா.கு.விடம் சன்மானம் தொடர்பான விஷயங்களை பேசி முடிவு செய்து கொண்டார்.

இப்படி நான் செயல்பட்டதையும், மதுரை போய் வரும் போது இந்திராஜியை சந்தித்துப் பேசியதைப் பற்றியும், சுபாவிடம் எனக்குள்ள நட்பையும் கூடவே பணிபுரிவதால் நன்கறிந்த அந்த உதவி ஆசிரியர் என்னிடம் ஒரு யோசனை சொன்னார். ‘‘மாத நாவல்கள் முன்ன மாதிரி நிறைய வர்றதில்லன்னாலும் ஒருசில நாவல்கள் நல்லாத்தான் போயிட்டிருக்கு. உங்க நண்பர்கள்கிட்ட பேசி கதைகளை வாங்கினீங்கன்னா, கட்டுரைகள், ஜோக்ஸ் மாதிரி மத்த விஷயங்களை நான் தயார் பண்ணிடுவேன். நாமளே ஒரு மாத நாவல் நடத்தலாம்’’ என்றார். அதற்கான பண வசதி என்னிடம் இல்லையென்றும், பிரிண்டிங் வசதி திருநெல்வேலியில் இ‌ல்லையென்றும் கூறித் தயங்கினேன் நான். அதற்கு மாற்று யோசனைகளை முன் வைத்தார் அவர்.

பேசிப் பேசி திட்டம் இறுதி வடிவம் பெற்றது. பிரபல எழுத்தாளர்களின் ஏழு சிறுகதைகளும், ஒரு குறு நாவலும் மற்ற பல்சுவைப் பகுதிகளும் வெளியிடலாம் என்பது திட்டம். இதையும் ராஜேஷ்குமாரிடமிருந்‌தே துவங்கினேன். அவரின் ஏழு சிறுகதைகளை தேர்வு செய்து, அவரிடம் பேசி அனுமதி பெற்றபின் இதழ் தயாரித்தோம். ப்ரிண்டிங் செய்யும் போது சைஸ் சற்றே பெரிது, ரெட்யூஸ் பண்ண வேண்டும் என்று ப்ரஸ்ஸில் சொன்னதால், ஃபிலிமில் அளவைக் குறைக்கும் படி ஆனது. இதனால் எழுத்துக்கள் சின்னதாக, படிப்பவர் கண்ணை உறுத்தும் வண்ணம் ஆகிவிட்டது. அட்டைப்படம் வேறு லேமினேஷன் இல்லாமல் சுமாராக வந்திருந்தது. ஏதோ புத்தகம் தயாரித்தோம் என்று பெயரே தவிர, திருப்தி தரவில்லை அந்த முயற்சி.

ஆனாலும் ராஜேஷ்குமார் என்ற மந்திரப் பெயர் புத்தகத்தின் பிரதிகள் நிறைய விற்பதற்கு உதவியிருந்தது. இரண்டாவது இதழில் இந்திரா செளந்தர்ராஜனின் கதைகள் வெளியிடலாம் என்று முடிவு செய்தோம் நாங்கள். மதுரை சென்று இந்திராஜியைச் சந்தித்து, இதுபற்றிப் பேசினேன். அவருடைய ஏழு சிறுகதைகளைத் தேர்வு செய்து கொடுத்துவிட்டுச் சொன்னார்: ‘‘கணேஷ்! இந்தச் சிறுகதைகள் அனைத்தும் அந்தந்த இதழ்களில் வெளிவந்த போதே அதற்குரிய சன்மானத்தை எனக்கு வாங்கித் தந்து விட்டன. அதனால, நீங்க இதுக்கு எந்த சன்மானமும் தர வேண்டாம். இதழை நல்லபடியா வெளிக் கொண்டு வாங்க அது போதும்’’ என்றார். பெருந்தன்மையான அவரின் இந்த வார்த்தைகளில் பிரமித்துப் போனேன் நான்.

‘‘இந்தச் சிறுகதைகளை எந்த சந்தர்ப்பத்துல எழுதினீங்க, எப்படி இந்தக் கரு மனசுல தோணிச்சு? இப்படி ஏதாவது சுவாரஸ்யமான விஷயத்தை ‘கதையின் கதை’ன்னு சில வரிகள்ல எழுதிக் கொடுங்க ஸார்’’ என்று நான் கேட்க, அழகாய் அதையும் உடனே எழுதித் தந்தார். அவற்றைப் பெற்றுக் கொண்டு நெல்லை வந்ததும் இதழ் தயாரிக்கலாம் என்று எண்ணினேன். ஆனால் இதழ் வடிவமைப்பில் இருக்கும் சந்தர்ப்பத்திலேயே ஒரு விஷயம் தெரிந்தது. முதல் இதழ் தயாரித்ததில் என் உதவி ஆசிரிய நண்பர்(?) கணக்கு வழக்குகளில் தில்லுமுல்லு செய்து அவரின் பாக்கெட்டை நிரப்பிக் கொண்டதைக் கண்டுபிடித்தேன். ஜோக்குகள், மற்ற மேட்டர்கள் வெளியிடுவதிலும் அவர் பதவியை துஷ்பிரயோகம்‌ செய்ததும் எனக்குத் தெரிய வந்தது. உடனே அவரிடம் சுமுகமாக, உறுதியாக மாத இதழிலிருந்து நான் விலகுவதாகச் சொல்லிவிட்டு நகர்ந்து விட்டேன்.

இந்திராஜி எனக்‌காக உட்கார்ந்து ‘கதையின் கதை’ எழுதித் தந்தும், சன்மானமாக ஒரு பைசா வேண்டாமென்று சொல்லியும் அதைப் பயன்படுத்த முடியாமல் போனதில் மிகமிக வருத்தம் எனக்குள் இருந்தது. உடனே மீண்டும் மதுரை போய் அவரைச் சந்தித்து நிகழ்ந்தவற்றை விளக்கினேன்; அவரின் சிறுகதைகளை அவரிடம் திருப்பித் தந்தேன். பொறுமையாய் எல்லாவற்றையும் கேட்ட அவர், ‘‘ஆரம்ப கட்டத்துலயே நீங்க பாத்துட்டது நல்லதாப் போச்சு. பின்னால பெரிய ஆபத்துல மாட்டிக்காம இப்பவே விலகிட்டது நல்லதுன்னு பாஸிட்டிவா நினைச்சுக்கங்க. இப்ப இல்லாட்டி என்ன... இன்னொரு சந்தர்ப்பத்துல உங்களுக்கு ஏத்த வாய்ப்பு வரும்’’ என்றெல்லாம் பேசி எனக்கு உற்சாகமூட்டினார். புதிதாய் வெளிவந்திருந்த அவரின் நூல் ஒன்றை ஆட்டோகிராஃபித் தந்தார். மகிழ்வுடன் பெற்றுக் கொண்டு நெல்லை திரும்பினேன் நான்.

                                                                             -தொடர்கிறேன்...

கத்தரித்தவை-3 கண்டு புன்னகைக்க... மே.மை

56 comments:

 1. //அவரின் நூல் ஒன்றை ஆட்டோகிராஃபித் தந்தார். மகிழ்வுடன் பெற்றுக் கொண்டு நெல்லை திரும்பினேன் நான்.

  "-தொடர்கிறேன்..."
  //

  நானும்!

  ReplyDelete
  Replies
  1. தொடரும் உங்களுக்கு என் இதயம் நிறைந்த நன்றி!

   Delete
 2. Thodarungal ungal anupava payanag kalai

  ReplyDelete
  Replies
  1. தொடர்கிறேன் நண்பா. தொடர்ந்து வரும் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!

   Delete
 3. /பின்னால பெரிய ஆபத்துல மாட்டிக்காம இப்பவே விலகிட்டது நல்லதுன்னு பாஸிட்டிவா நினைச்சுக்கங்க./

  உண்மைதான். நீங்கள் எடுத்தது சரியான முடிவே.

  ReplyDelete
  Replies
  1. நற்கருத்திட்ட உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!

   Delete
 4. உங்க அனுபவங்கள் எல்லாம் சுவாரசியமாகவே இருக்கின்றன

  ReplyDelete
  Replies
  1. உற்சாகம் தந்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!

   Delete
  2. அவர் எழுதின கதைகள்/புத்தகங்கள் பற்றியும் எழுதுங்களேன். நான் கேள்விப்படாத எழுத்தாளர்.

   Delete
 5. அன்பரே! உங்களோடு பழகியதில் தங்களின்
  உயர்ந்த உள்ளம், தானே முன்னின்று பிறருக்கு
  உதவும் தன்மை கண்டு வியப்பதுண்டு! மிக உயர்ந்த
  நண்பர்களின் நட்பு மட்டுமல்ல காரணம்,பிறவியிலேயே பண்பட்டது தங்கள் உள்ளம்
  வாழ்க! வளர்க! உங்கள் பணபும் அன்பும்

  சா இராமாநுசம்

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வாழ்ததுக்கள் தந்த மகிழ்வுடன் தங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

   Delete
 6. வணக்கம் நண்பரே,
  அனுபவத்தில் நீங்கள் ஒரு களஞ்சியம்.
  ஒவ்வொரு அத்தியாயமும் பல அனுபவங்களைத் தருகிறது.
  கிடைப்பதை மகிழ்வோடு ஏற்றுக்கொள்வோம்
  என்பது எவ்வளவு பெரிய விஷயம்..
  உங்கள் நடைவண்டியில் பயணிப்பதை
  பெருமையாக நினைக்கிறேன்...

  மானுட பிறவியில்
  மாண்புகள் பலவுண்டு
  மந்தியாய் நானும்
  மரங்கள் தாவியிங்கே
  மனங்களை படித்திட்டேன்
  மந்திரம் ஏதுமில்லை
  மாயமும் ஏதுமில்லை
  மனித மனங்கள் எல்லாம்
  மகுடிக்கு மயங்கும்
  படமெடுக்கும் பாம்புதானே!!

  தெம்மாங்கு பாட்டுப்பாடி
  நடைவண்டியில் பயணிக்கிறேன்...

  ReplyDelete
  Replies
  1. கவிதையுடன் கூடிய தங்களின் கருத்து மிக்க மனமகிழ்வு தந்தது மகேன். உங்களுக்கு என் இதய நன்றி!

   Delete
 7. நல்லா இருக்கு ஸார் தொடர்.... பட் ஒவ்வொரு அத்தியாயத்தையும் நிறைய நிறைய எழுதலாமே...அது இன்னும் சுவாரஸ்யமா இருக்குமே? ஸ்ரீநிவாஸ் பிரபு

  ReplyDelete
  Replies
  1. பி.கே.பி. பற்றிய அனுபவங்களை அப்படித்தான் எழுதினேன். இனிவரும் அனுபவங்களில் சம்பவங்கள் குறைவு பிரபு. வெறுமே வார்த்தைகளால் இழுத்துச் சென்றால் நன்றாயிராது என்று எண்ணி்த்தான் இப்படி. உங்களின் விருப்பப்படி செயல்பட முயல்கிறேன்.

   Delete
 8. நட்பில் தான் எத்தனை வகை, குழி பறிக்கும் நட்பு ஒரு புரம், ஏணியை இருக்கும் நட்பு மறுபுறம், சிந்தித்து எது முக்கியம் என்று தேர்ந்தெடுக்கும் பக்குவம் மட்டுமே நம்மிடம், உங்களிடம் உள்ளத்தால் பிழைத்துக் கொண்டீர்கள், நடக்க ஆரம்பியுங்கள் கூடவே நடக்க காத்திருக்கிறோம்

  ReplyDelete
  Replies
  1. ஆம். இரண்டு முறை நண்பர்கள விஷயத்தில் நான் ஏமாந்திருக்கிறேன். அதன்பின் மிக விழிப்புடன்தான் இருக்கிறேன் சீனு. உங்களுக்கு என் இதய நன்றி!

   Delete
 9. "பின்னால பெரிய ஆபத்துல மாட்டிக்காம" தப்பித்தீர்கள்.

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான். பிரச்சனை பெரிதாகாமல் துவக்கத்திலேயே தப்பியது என் அதிர்ஷ்டமே. தங்களுக்கு என் உளம்கனிந்த நன்றி!

   Delete
 10. ஆரம்ப கட்டத்துலயே நீங்க பாத்துட்டது நல்லதாப் போச்சு. பின்னால பெரிய ஆபத்துல மாட்டிக்காம இப்பவே விலகிட்டது நல்லதுன்னு பாஸிட்டிவா நினைச்சுக்கங்க.//எந்த ஒரு காலகட்டத்திலையும் நல்ல முடிவ எடுத்து இருக்கீங்க தொடருங்க தொடர்கிறோம் ஆவலோடு .

  ReplyDelete
  Replies
  1. தொடரும் உங்களின் ஆதரவிற்கு என் இதயம் நிறை நன்றி தென்றல்!

   Delete
 11. // இனிமையாகப் பேசினார்.//

  என்று படித்தபோதே அழ அழச் சொல்வர் தமர், சிரிக்க சிரிக்க சொல்வர் பிறர்’ என்ற பழமொழி நினைவுக்கு வந்தது.கொள்ளைக்கு போனாலும் கூட்டு ஆகாதுன்னு சும்மாவா சொன்னார்கள் நம் முன்னோர்கள். நல்லவேளை திரு இந்திரா செளந்தர்ராஜன் அவர்கள் சொன்னதுபோல் பெரிய ஆபத்திலிருந்து தப்பிவிட்டீர்கள்.

  ReplyDelete
  Replies
  1. கரெக்ட். தவறான நபர்களின் கூட்டு தீமையே தரும். நான் தப்பியது என் நல்லூழ் அன்றி வேறென்ன? தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!

   Delete
 12. அனுபவங்கள் தொடரட்டும் தொடர்கிறேன்

  ReplyDelete
  Replies
  1. உடன் தொடரும் உங்களுக்கு என் உளம்கனிந்த நன்றி!

   Delete
 13. /பின்னால பெரிய ஆபத்துல மாட்டிக்காம இப்பவே விலகிட்டது நல்லதுன்னு பாஸிட்டிவா நினைச்சுக்கங்க./

  உண்மைதான். தப்பித்தீர்கள்..

  ReplyDelete
  Replies
  1. நாம் நல்லதையே நினைத்தாலும் நமக்கு தீயது செய்யும் குணம் சில ஜந்துக்களுக்கு உண்டு. அப்படி ஒன்றிடமிருந்து தப்பினேன் நான். தங்களின் மகிழ்வு தந்த வருகைக்கும் கருத்துக்கும் என் மனமார்ந்த நன்றி!

   Delete
 14. எந்த செயலை தொடங்கினாலும் நம் உடன் இருப்பவர்களின் மீது கவனத்தை வைக்க வேண்டும் என்பது மட்டும் நன்றாக புரிகிறது.

  தொடருங்கள் தொடர்கிறோம் :)

  ReplyDelete
  Replies
  1. ஆம். என் அனுபவத்திலிருந்து நீங்கள் இந்தக் கருத்தை எடுத்துக் கொண்டதில் மிக்க மகிழ்ச்சி. உங்களுக்கு என் இதய நன்றி!

   Delete
 15. What a bad experience you are having with your so called friends. There are very few people who become our great friends at the first meeting like love at first sight. But unfortunately, you have come across the people who do not have any quality of friendship. Very sad and bad experience.

  ReplyDelete
  Replies
  1. இந்த மோசமான அனுபவத்திற்கு இரண்டு முறை ஆட்பட்டேன் மோகன். சரியான நபர்களுடனேயே நட்புக் கொள்ள வேண்டும் என்பதற்கு இருவரும் எனக்கு பாடம். உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் என் இதயம் நிறை நன்றி1

   Delete
 16. இந்திரா சௌந்தர ராஜன் மீது மதிப்பு உயர்கிறது

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் மோகன்குமார். நிறைய நல்ல குணங்களும், தெய்வ பக்தியும், உதவும் மனப்பான்மையும் கொண்ட, மதிக்கப்பட வேண்டிய மனிதர்தான் அவர். உங்களுக்கு என் இதய நன்றி!

   Delete
 17. அருமை அங்கிள் தொடரட்டும்....

  ReplyDelete
  Replies
  1. நீ அருமை என்றதில் மகிழ்வு எனக்கு. என் மனமார்ந்த நன்றி உனக்கு.

   Delete
 18. பிரமிக்க வைக்கிறார் இந்திரா சௌந்திரராஜன்!

  ReplyDelete
  Replies
  1. இ.செள.ராஜனைப் பார்த்து பிரமித்த உங்களுக்கு என் உளம்கனிந்த நன்றி!

   Delete
 19. நடை வண்டியில் பயணிப்பது பிரம்பிப்பாக உள்ளது.

  ReplyDelete
  Replies
  1. பிரமிப்புடன் என்னுடன் தொடர்ந்து பயணிக்கும் தங்கைக்கு என் இதயம் நிறை நன்றி!

   Delete
 20. Replies
  1. என்னுடன் தொடர்ந்து வரும் உங்களின் ஆதரவிற்கு என் உளம்கனிந்த நன்றி!

   Delete
 21. நீங்கள் பட்டுத் தெளிந்ததை எல்லாம்
  நாங்கள் சுகமாக இருந்து தெரிந்து கொள்ளச்
  செய்வதற்கு எப்படி நன்றி சொல்வதெனத் தெரியவில்லை
  பயனுள்ள சுவாரஸ்யமான பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. பிறரின் நல்ல அனுபவங்கள் நமக்கு மகிழ்வையும், மோசமான அனுபவங்கள் நமக்கு பாடத்தையும் தரும், அல்லவா? என் அனுபவங்களும் யாருக்கேனும் பயன்படும் என்ற நம்பிக்கைதான் எழுதச் செய்கிறது. நற்கருத்திட்ட தங்களுக்கு மகிழ்வுடன் கூடிய என் நன்றி!

   Delete
 22. பட்டுத் தெளிந்தீர்கள் நீங்கள். நாங்கள் படித்துத் தெளிவடைய உதவும்....

  தொடரட்டும் நடைவண்டிப் பயணம்....

  ReplyDelete
  Replies
  1. ஆம். நமது அனுபவங்கள் எவ்வகையிலேனும் பிறருக்கு்ப் பயன்பட்டால் அதைவிட மகிழ்வு வேறென்ன? உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் என் இதய நன்றி!

   Delete
 23. உங்களின் அனுபவங்களின் மூலம் நீங்கள் மிகவும் பக்குவப்பட்ட ஒரு சிறந்த மனிதர் என்பது உங்களின் எழுத்துகளின் மூலம் தெரிகிறது......அனுபவங்கள் மூலம் நாம் பக்குவப்பட்டாலும் நாம் மேலும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டிய காலம் இது கணேஷ். காரணம் பல ஏமாற்றுவது எப்படி என்பதில் மிகவும் அனுபவத்துடன் செய்து ஏமாற்றிக் கொண்ண்டிருக்கிறார்கள்...
  கவனத்துடன் நீங்கள் மட்டும் அல்ல உங்களின் ரீடர்களும் இருக்க வேண்டுகிறேன்..வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. நான் இப்போதெல்லாம் ஏமாறுவதில்‌லை நண்பா. நட்பென்ற விஷயத்தைக் காட்டி இருவர் ஏமாற்றியபின் உஷார்தான். அக்கறையுடன் கூடிய உங்களின் மகிழ்வு தந்த கருத்துக்கு என் மனமார்ந்த நன்றி!

   Delete
 24. அனுபவங்கள் ஆசான் என்பதைச் சொல்லும் பயணத்தில் நானும் பல்தைப்படிக்கின்றேன் உங்கள் மூலம்!

  ReplyDelete
  Replies
  1. அனுபவ ஆசானை சந்திக்கும் பயணத்தில் என்னுடன் தொடர்ந்து வரும் நேசனுக்கு என் உளம் கனிந்த நன்றி!

   Delete
 25. இந்திரா சௌந்திரராஜன் அவர்களின் பெருந்தன்மையைக் கண்டு வியக்கிறேன். கூட இருந்தே குழிபறிக்கும் நட்பினை ஆரம்பத்திலேயே கண்டறிந்து வெட்டிவிட்ட தங்கள் செயலும் குறிப்பிடத்தக்கது. முகத்தாட்சண்யம் பார்த்தே பாழாய்ப்போன பலரைக் கண்டிருக்கிறேன். நல்ல அனுபவப்பாடம். பகிர்வுக்கு நன்றி கணேஷ்.

  ReplyDelete
  Replies
  1. [co="red"]நற்கருத்திட்ட உங்களுக்கு நன்றி கீதா![/co]

   Delete
 26. கெட்டதைக் கண்டு விலகிட்டீங்க .மீதி என்ன ? தொடருவேன். பாராட்டுகள்.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
 27. ஆமா கேக்க வேண்டும்னு நினைத்தேன்.... நீங்கள் வெளிக்கொணர்ந்த நாவலின் பெயர் என்ன? பிரபு

  ReplyDelete
 28. ஆமாம்... நான் கேட்க நினைத்ததையே ஸ்ரீனிவாச பிரபுவும் கேட்டுள்ளார்... சொல்லுங்களேன்... தெரிந்து கொள்கிறோம்...

  ReplyDelete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
 • Youtube