‘எங்கெங்கு காணினும் சக்தியடா’ என்று பாடின பாரதிதாசன் இன்றைக்கிருந்திருந்தால் ‘எங்கெங்கு காணினும் சத்தமடா’ என்று மாற்றிப் பாடியிருப்பார் என்று எனக்குத் தோன்றுகிறது. மனிதர்கள் ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்வதற்கான சாதனங்களாக அமைந்தவை மொழியும், சப்தங்களும். இன்றைய காலச் சூழ்நிலை சப்தங்களுக்கே அதிக முக்கியத்துவம் கொடுப்பதாக உணர்கிறேன்.ஆடி மாதம் பிறந்து விட்டால் போதும்... அமைதி காணாமல் போய் சப்தங்களால் சூழப்பட்டு விடும் தமிழ்நாடு. இங்குதான் தெருவுக்குத் தெரு கோயில்கள் உண்டே. மைக்குகள் கட்டி, அதிகாலையில் துவங்கி பாட்டுக்களை அலற வைத்து அக்கம் பக்கத்தில்...