Monday, July 23, 2012

நடைவண்டிகள் - 27

Posted by பால கணேஷ் Monday, July 23, 2012

கடுகு அவர்களும் நானும் - 5

நான் வாகனம் வாங்கிய பிறகு அவரை சென்று சந்தித்து பேசிக் கொண்டிருந்த சமயம் அவரும் கமலா அம்மாவும் நாலாயிர திவ்யப் பிரபந்தத்தை புத்தகமாக்குவதற்கான பணிகளைச் செய்து கொண்டிருந்தனர். கடுகு தம்பதிகளுக்கு நாலாயிரம் பாடல்களின் மேல் வெகுநாட்களாகக் காதல் உண்டு. நாலாயிரம் பாடல்களை பதம் பிரித்து படிப்பதற்கு எளிதாக, புரிந்து கொள்வதற்கு இலகுவாக இருக்கும் வகையில் டைப்செட் செய்து அவரே வடிவமைத்துக் கொண்டிருந்தார். அந்தப் புத்தகம் தொடர்பாக அவர் எடுத்திருந்த முடிவுகளைச் ‌சொன்னதுதான் வியப்படைய வைத்தது.

அவர் செய்திருந்த தீர்மானங்கள்: 1) எழுத்துக்கள் படிக்கும் வண்ணம் 13 பாயிண்டிற்கு குறையாமல் இருக்க வேண்டும். 2) பாசுரங்களை பதம் பிரித்துப் போட வேண்டும். 3) எவ்வளவு செலவானாலும் புத்தகத்தின் விலை ரூ.100க்கு மேல் வைக்கக் கூடாது ஆகியவைதான் அது. நாலாயிரத்தை 13 பாயிண்ட்களில் பிரிண்ட் செய்தால் இரண்டு புத்தகங்களும் சேர்த்து 800 பக்கங்களுக்கு மேல் வருமே, அதை எப்படி இந்த விலையில் தர முடியும் என்பதுதான் என் ஆச்சரியமாக இருந்தது. ஆனால் அதைச் செய்து காட்டினார் அவர். இதுபற்றி விரிவாக அறிய விரும்புபவர்கள் அவரே எழுதிய இந்தப் பதிவைப் படிக்கவும். நெகிழ்ச்சியான பல விஷயங்களைத் தெரிந்து கொள்ள முடியும்.

அந்தப் புத்தகம் வெளிவந்து விற்பனையாகிக் கொண்டிருந்த சமயத்தில் எழுத்தாளர்கள் சுபா நடத்தி வரும் ‘தங்கத்தாமரை’ பதிப்பகத்தில் நாலாயிரம் புத்தகத்தை கடுகு ஸாரிடம் கேட்டு வாங்கி வெளியிட்டார்கள். அந்த இரண்டு புத்தகங்களின் அட்டையையும் வடிவமைக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. (நந்தினி பதிப்பகம் சார்பில் வெளியிட்ட புத்தகத்திற்கு அட்டை டூ அட்டை டிசைனர் கடுகு ஸார்தான்). புத்தகத்தின் பக்கங்கள் அதிகம் என்பதாலும், கடின அட்டையில் அச்சிடுவதாலும் ஸிங்கிள் கலரில் அட்டை அச்சிடுவதாக தீர்மானம். ஆனால் அது குறையாகத் தெரியாத வண்ணம் வடிவமைக்க வேண்டியிருந்தது. பொறுமையாக டிசைன் செய்து, பிரிண்ட் ஆகி வந்தவுடன் பார்க்க நன்றாகவே இருந்தது.

‘தங்கத்தாமரை’ வெளியிட்ட இந்த ‘நாலாயிரம்’ புத்தகத்தை புத்தகக் கண்காட்சியில் வாங்கிப் படித்த மாஸ்டர் சுஜாதா, ‘குங்குமம்’ இதழில் தான் எழுதிவந்த கேள்வி-பதில் பகுதியில் ‘‘புத்தகக் கண்காட்சியில் நான் வாங்கிய ஒரே ரத்தினம் நாலாயிர திவ்யப் பிரபந்தம் புத்தகம்தான். ‘தங்கத் தாமரை பதிப்பகம்’ என்ற பெயரில் எழுத்தாளர்கள் சுபா இந்தப் புத்தகத்தை எழுத்தாளர் கடுகு உதவியுடன் அச்சிட்டு வெளியிட்டிருக்கிறார்கள்.’’ என்று எழுதியிருந்தார். வாத்தியார் இப்படி எழுதியவுடன் இதை விசாரித்து நிறைய போன்கால்கள் வந்ததாக சுபாவைச் சந்தித்தபோது சொன்னார்கள். சுஜாதா என்ற மகா எழுத்தாளரின் எழுத்து வீச்சை நான் உணர்ந்த சந்தர்ப்பங்களில் இதுவும் ஒன்று. இந்த இரண்டு புத்தகங்களையும் அவர் மேஜையி்ல் எப்போதும் வைத்திருப்பார் எனறு சுஜாதாவின் தீவிர விசிறியான திரு.சுஜாதா தேசிகன் கடுகு அவர்களிடம் சொன்னதாக நாலாயிரம் பற்றிய கட்டுரையில் கடுகு ஸார் குறிப்பிட்டிருக்கிறார்.

சமீபத்தில் கடுகு ஸாரின் 80வது கல்யாணம்... மன்னிக்கவும், 80ம் கல்யாணம் நடந்தபோது மீண்டும் நாலாயிர திவ்யப் பிரபந்தத்தை பிரசுரித்து விழாவுக்கு வந்த அனைவருக்கும் நினைவுப் பரிசாக வழங்கினார் கடுகு ஸார். அதைத் தவிர ‘கமலாவும் நானும்’ என்ற தலைப்பில் இணையத்தில் அவர் எழுதிய கட்டுரைகளையும், பல்வேறு இதழ்களில் எழுதிய கட்டுரைகளையும் தொகுத்து மற்றொரு புத்தகமும் இணைத்து இரட்டைப் பரிசாக அளித்தார்.

ஹிந்து நாளிதழிலும், ‘அடையார் டைம்ஸ்’ பத்திரிகையிலும் இந்த விழா நிகழ்வுகளை அழகாக வெளியிட்டிருந்தார்கள். அவற்றை கடுகு ஸார் அவரின் தளத்தில் வெளியிடவில்லை. ‘நம்மைப் பத்தி நாமே வெளியிடறதா?’ என்கிற தன்னடக்கம்தான காரணம். நல்லவேளையாக... அவர் என்னை அடக்கவி்ல்லையாதலால், ‘அடையார் டைம்ஸ்’ வெளியிட்ட செய்தியை இங்கே உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.
அதன்பின் கிடைக்கும் சந்தர்ப்பங்களில் கடுகு ஸாரின் வீட்டுக்குச் சென்று சந்திப்பேன். உரையாடுவேன்; கற்றுக் கொள்வேன். ‘ரொட்டி ஒலி’ என்ற புத்தகத்தின் அட்டைப்படத்தை அவருடன் சேர்ந்து வடிவமைத்து மகிழ்ந்தேன். இப்படியான ஒரு சந்திப்பின் போது அவர் நீலாங்கரையில் அபார்ட்மெண்ட் வேலைகள் பூர்த்தியடைந்து விட்டன என்றும், விரைவில் அங்கே குடி போய் விடுவார்கள் என்பதையும் தெரிவித்தார்.  நீலாங்கரை என்கிற பகுதி சற்றே அவுட்டரில் இருப்பதால் இப்போது போல நினைத்த போதெல்லாம் எளிதாகச் சென்று பார்த்துவிட முடியாதே என்று ஒரு கவலை எனக்குள்.
-தொடர்கிறேன்...

49 comments:

 1. உன்னதமான நட்பு வாழ்க.....

  தொடருங்கள் அங்கிள்....

  ReplyDelete
  Replies
  1. முதல் வருகையாய் வந்த எஸ்தருக்கு என் மனமார்ந்த நன்றி.

   Delete
 2. // 80வது கல்யாணம்... மன்னிக்கவும்,// உங்க மைன்ட் வாய்ஸ நான் கேட்ச் பண்ணிட்டேன்

  கொஞ்சம் அவுட்டர் ஆ ரொம்பவே அவுட்டர்..

  சிறந்த பணியை அவர் நினைத்த விலைகுள் செய்ய நினைத்த விஷயம் அருமை, அதனால் தானே அதில் வெற்றியும் பெற்றுள்ளார்... நாலாயிரம் திவ்யப் பிரபந்த புத்தகத்தில் தங்கள் பங்களிப்பை நினைக்கும் பொழுது மகிழ்வாய் உள்ளது வாத்தியாரே

  TM 2

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் சீனு... ரொம்பவே அவுட்டெர் தான். என்னை வாழ்திய உஙகளுக்கு என் இதய நன்றி.

   Delete
 3. Replies
  1. மிக சரி நண்பரே. என் மனமார்ந்த நன்றி.

   Delete
 4. எழுத்தாளர் கடுகு அவர்களோடு உங்களுக்கு உள்ள பந்தம் பற்றி எத்தனை முறை எழுதினாலும் அதனுடைய காரம்/சுவை குறைவதில்லை. ஏனெனில் அது கடுகு பற்றிய செய்தி அல்லவா? ‘நாலாயிர திவ்ய பிரபந்தமும் நானும்’ என்ற கடுகு அவர்களின் பதிவைப் படித்ததும் பிரமித்தேன்! வாழ்க அவர் நலமுடன்!

  ReplyDelete
  Replies
  1. அவரை வாழ்திய உஙகலுக்கு என் இதய நன்றி.

   Delete
 5. அருமையான பதிவூ அண்ணா. இவரை பற்றி கேள்வி பட்டுயருகிறேன். ஆனால், தற்போது தான் முழு தகவல்களும் தங்கள் வாயிலாக அறியிறேன்.
  நானும் ஒரு சிறு முயற்சியாக எனது எழுத்தையும் இங்கு பகிர்கிறேன். படித்து பார்க்கவும். http://eththanam.blogspot.in/2012/07/blog-post_19.html#more

  ReplyDelete
  Replies
  1. அவசியம் நாளை படிக்கிரென் சேகர். உஙளுக்கு என் இதய நன்றி.

   Delete
 6. Kadugu saarukku namaskaaram. Ungalukku nandri

  ReplyDelete
 7. Replies
  1. நல்ல பகிர்வை ரசிதத உஙகளுக்கு என் மனமார்ந்த நன்றி

   Delete
 8. நட்பின் வரிகள் அருமை.

  எப்படி எங்க வீட்டு வந்தீங்களே அந்த தொலைவா?

  ReplyDelete
  Replies
  1. உஙகள் வீட்டை விட தூரம் குரைவு தான் சசி. மிக்க நன்றி.

   Delete
 9. //நீலாங்கரை என்கிற பகுதி சற்றே அவுட்டரில் இருப்பதால் இப்போது போல நினைத்த போதெல்லாம் எளிதாகச் சென்று பார்த்துவிட முடியாதே என்று ஒரு கவலை எனக்குள்.//

  இது போன்ற நல்ல நிகழ்வுகளைப் படிக்க முடியாதே என்ற ஏக்கம் எங்களுக்கு...

  ReplyDelete
 10. Generally, book writers used to decide the price always on higher side - but the decision of Mr.Kadugu to keep the price tag very very affordable is quite surprising. Now I have the inclination to buy one copy when I come to chennai next or I will ask my brother to procure one for me whichever is earlier.

  ReplyDelete
  Replies
  1. Thankyou for your decision dear friend! When your visit to chennai, I'll arrange to meet kadugu sir and get the book alongwith his autograph. dont worry. My Heartful Thanks to you!

   Delete
 11. விரைவில் அங்கே குடி போய் விடுவார்கள் என்பதையும் தெரிவித்தார். நீலாங்கரை என்கிற பகுதி சற்றே அவுட்டரில் இருப்பதால் இப்போது போல நினைத்த போதெல்லாம் எளிதாகச் சென்று பார்த்துவிட முடியாதே என்று ஒரு கவலை எனக்குள்///ம்ம்ம்...எங்களுக்கும்தான்...பின்னே சுவாரஸ்யமான கடுகு சாருடனான செய்திகளை எப்படி தருவீர்கள்:(

  ReplyDelete
  Replies
  1. ஆமாம். உண்மையில் நீலாங்கரைக்கு அவர் சென்றபின் அதிகம் சந்திப்பது குறைந்துவிட்டதுதான். என்ன செய்ய... தொடர்ந்து வரும் உங்களுக்கு என் இதய நன்றி தங்கையே.

   Delete
 12. நண்பரே,
  உங்கள் எழுத்துக்கள் மூலம் நான் நிறைய கற்றுக்கொண்டிருக்கிறேன்..
  ஒவ்வொரு பாகமும் எனக்கு ஒரு பாடம் போல...
  நடைவண்டி தினமும் விதவிதமான நடையை
  கற்றுக்கொடுக்கிறது...

  ReplyDelete
  Replies
  1. நான் சரியாய் நடை பழக உதவிய நடைவண்டிகள் இந்த எழுத்தாளர்கள். இவர்களுடனான என் அனுபவம் உங்களுக்கும் உபயோகமாவதில் மிகமிக மகிழ்ச்சி எனக்கு. மிக்க நன்றி மகேன்.

   Delete
 13. வணக்கம் கணேஸ் அண்ணா! !
  கடுகு சாரின் அரிய தகவல்கள் உங்கள் மூலம் அவரின் பரந்த அளுமையை அறிய முடிகின்றது நீங்கள் ஒரு பாக்கிய்சாலி இப்படியானவர்களின் நட்பு பாராட்ட! தொடருங்கள் நடைவண்டியில் பின்னூட்டம் போடாவிட்டாலும் மூச்சுவாங்குகின்றேன் வாசிப்பில்!

  ReplyDelete
  Replies
  1. தொடர்ந்து என்னுடன் பயணிக்கும் உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி நேசன்.

   Delete
 14. நாங்கள் தூரத்தில் இருந்து பார்க்கும் பலரிடம் தங்களுக்கு இனிய நட்பு இருக்கின்றது உங்களிடம் நட்பாக இருப்பது எங்களுக்கு பெருமையே

  ReplyDelete
  Replies
  1. வலைத்தளத்தில் எழுதுவதன் பயனாக நான் பெற்றிருக்கும உங்கள் போன்ற பலரது நட்பு எனக்கு மிக மகிழ்வைத் தருகிறது ராஜ். அனைத்திற்கும் நன்றி சொல்லக் கடமைப்பட்டவன் நான். மிக்க நன்றி.

   Delete
 15. உங்களின் எளிமையான வரிகள் என்னையும் உங்கள் பிளாஷ் பேக்கொடு பயணிக்க செல்கிறது சார். பெரிய மனிதர்களோடு நட்புடன் இருந்த உங்களோடு தொடர்பில் இருப்பதே எனக்கு பெரிய கவுரவம்தான்

  ReplyDelete
  Replies
  1. என்னை மதிக்கும் உங்களுக்கு என் இதய நன்றி பாலா.

   Delete
 16. நாலாயிர திவ்யப் பிரபந்தம் என்னிடம் பி டி எஃப் வடிவில் உள்ளது. ப்ராஜெக்ட் மதுரை க்கு நன்றி. நீலாங்கரை சற்றே அதிக தூரம்தான்!

  ReplyDelete
  Replies
  1. நாலாயிரத்தை பக்தியுடன் படித்தால் பக்தி. இல்லாமல் படித்தால் அழகுத் தமிழ். ஆக எப்படியும் படித்தாக வேண்டியது. நீங்கள் பிடிஎப் ஆக படிப்பதில் மகிழ்வே. மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 17. கடுகு சார் அவர்கள் நினைத்த விலைக்குள் செய்ய நினைத்த விஷயம் அருமை, அப்படி செய்ததால் அதில் வெற்றியும் பெற்றுள்ளார். நமக்கு பிடித்தவர்களின் வீடு அதிக தூரத்தில் இருந்தாலும் அதிக தூரம் என்பது தூரமாக தெரியாது .ஆனால் மாமனாரின் வீடு அடுத்த வீடாக இருந்தாலும் அது வேறு நாட்டில் இருப்பது போலவே தோன்றும் ஹீ..ஹீ. என் மாமனாரின் வீடு உண்மையிலேயே ரொம்ப தூரங்க.....

  ReplyDelete
  Replies
  1. ம்ம்ம்... விளையாட்டாய் நிஜம் பேசுகிறீர்களா. இல்லை நிஜம் பேசுவது போல விளையாடறீங்களான்னு தெரியலை. ஆனாலும் நீங்க சொல்லியிருக்கறது ரொம்பவே சுவாரஸ்யம். மிக்க நன்றி நண்பா.

   Delete
 18. உங்க அனுபவங்கள் எங்க எல்லாராலுமெ தெரிந்து கொள்ள முடிகிரது நன்றி

  ReplyDelete
  Replies
  1. அனுபவங்களை ரசித்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

   Delete
 19. நல்ல அனுபவங்கள்....

  நடைவண்டிகள் பயணத்தினைத் தொடருங்கள் நண்பரே.

  ReplyDelete
  Replies
  1. அனுபவங்களை ரசித்து உடன் வரும் உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.

   Delete
 20. நடைவண்டி அனுபவங்கள் Nice n Sweet...தொடருங்கள்...

  ReplyDelete
  Replies
  1. தவறாமல் என்னைத் தட்டிக் கொடுக்கும் உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

   Delete
 21. வழக்கம்போல் அறிந்து கொள்ள்ள வேண்டிய
  அருமையான தகவல்களுடன் கூடிய
  அழகான பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. ரசித்துப் படித்து கருத்திட்டு ஊக்கம் தந்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.

   Delete
 22. ஃப்ரெண்ட் வந்திட்டேன்.நடைவண்டியோடு தொடர்வேன்....ஆனாலும் தொடரும் சிக்கல்....பார்க்கலாம் !

  ReplyDelete
  Replies
  1. தொடருங்கள். சிக்கல் ஏதுமின்றி நீஙகள் நலமாக இருக்க வேண்டுமென்பதே என் விருப்பம். பிரார்த்தனை எல்லாம். மிக்க நன்றி ஃப்ரெண்ட்!

   Delete
 23. அன்புள்ள கணேஷ், உங்கள் பதிவைப் பார்த்தேன். மிக்க நன்றி. எனக்கு பெரிய நட்பு வட்டாரத்தையே ஏற்படுத்தி, ஒரு குறு நில மன்னன் அளவுக்கு தூக்கி விட்டீர்கள்.இத்துடன் என்னைப் பற்றி போதும் என்று நினைக்கிறேன்.
  -கடுகு

  ReplyDelete
  Replies
  1. உங்கள் விருப்பத்துக்கு என்றும் என்னிடம் மறுப்பில்லை. அடுத்து வரும் பதிவில் பாருங்கள் ஸார். மிக்க நன்றி.

   Delete
 24. காலச்சக்கரமென்ற சுழற்சியில் நாம்
  உருண்டோடும் வண்டிகள்தானோ!
  கனவோடும் கற்பனை நினைவோடும்
  ஓட்டங்கள் அடுத்தவர்களிடம் சேதியை
  கொண்டு சேர்க்கும்..சொல்லுங்கள்
  சொல்லிக்கொண்டே இருங்கள்.
  விடியலுக்காய் உங்களோடு நானும்!

  ReplyDelete
  Replies
  1. முதல் வருகையாய் வந்து கவிதையாய் கருத்துச் சொன்ன உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

   Delete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
 • Youtube